சியாமளா-20: திவ்யாவின் கிஃப்ட்

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

நைட் படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டு நெளிந்தான். திடீரென அவனுக்கு திவ்யா சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்தன. “உனக்கு நியாபகம் இருக்கா கணேஷ்… கல்ச்சுரல்ஸ்டே அன்னிக்கு….” தலைக்குள் நெறைய்ய்ய கொசுவர்த்திகள் சுழல ஆரம்பித்தது. கல்ச்சுரல்ஸ்டே அன்னைக்கு நடந்தை யோசிக்க ஆரம்பித்தான்.

தேர்டு இயர், ஐந்தாவது செமஸ்டர். கல்ச்சுரல்ஸ் டேக்கு முதல் நாள் இரவு ஹாஸ்டல் ரூமில், ’எதையோ பறிகொடுத்தவன்’ போல் சோகமாக படுத்திருந்தான் கணேஷ். அவன் நண்பன், ரூம்மேட் ஷங்கர், கணேஷ் தோளை தட்டி எழுப்பி, “டேய், நாங்க பர்கூர் போறோம். நாளைக்கு போடுறதுக்கு ஷெர்வானி, குர்தா, ப்ளேசர்ன்னு ஏதாவது பார்த்து நல்லதா வாடகைக்கு எடுத்திட்டு வரப்போறோம். நீ வரல?”

“ம்ம்ஹூம். இல்லடா.. நான் கல்ச்சுரல்டே ஃபங்ஷனுக்கே வரல.. மூட் அவுட்டா இருக்கேன்?”

“ஏண்டா? நாளைக்கு உன் ஆளுகூட கூட ஏதோ டான்ஸ் ஆடப்போறதா பேசிக்கிட்டாங்க? அவள்கிட்ட சண்டையா?”

“இனிமே அவளை என் ஆளுன்னு சொன்ன கொன்னே போட்ருவேன்? அவளே என்னை நாய் மாதிரி ட்ரீட் பண்றா.. இதுல அவ டான்ஸ் ஆடுனா என்ன? ஆடலைன்னா எனக்கென்ன?”

“ஓகே கூல்.. பை..”

கட்டிலில் படுத்துக் கொண்டு விட்டத்தை வெறித்து பார்த்தான். ”அவகிட்ட எத்தனை தடவ தான் ப்ரோப்பஸ் பண்றது. பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லணும் அப்புறம் பேசக்கூடாது? ஆனா இவ ஃப்ரெண்ட்ன்னு சொல்லி குழப்புறா? சிலசமயம் கேவலமா திட்டுறா. இனிமே அவளை பார்க்கக்கூடாது, பேசக்கூடாது” என தீர்மானம் பண்ணினான். ஷங்கர் பர்கூர் போய்விட்டு திரும்ப வந்துவிட்டான். கல்யாண மாப்பிள்ளைக்கு போடும் புத்தம் புதிய பட்டு வேஷ்டி, பட்டு சட்டை, அங்கவஸ்திரம் எல்லாம் எடுத்து காட்டிக் கொண்டிருந்தான். அப்போது கணேஷ்க்கு ஹாஸ்டல் ஃபோனில் கால் வந்தது.

“ஹேய் கணேஷ். நான் திவ்யா. நாளைக்கு என்ன ஸ்பெஷல்? எந்த ட்ரெஸ்ல வரப்போற?”

”இன்னும் டிசைட் பண்ணல” இன்னும் அதே கடுப்பில் பேசினான்

“ஓகே. நாளைக்கு நான் “அழகுமலர் ஆட..அபிநயங்கள் கூட” பாட்டுக்கு பரதநாட்டியம் ஆடப் போறேன்? நீ பட்டு வேஷ்டி, ஷர்ட்ல வாயேன்? ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் கணேஷ். நல்லா இருக்கும்”

“ஷ்யூர் கண்டிப்பாக” என்று அவள் சொன்ன ப்ளீஸ்ஸில் கரைந்தான் கணேஷ். இந்த பசங்களே இப்படித் தான். வீராப்பு பெண்களிடம் செல்லாது. அதுவும் அவள் அழகாக இருந்தால், கேட்கவே வேணாம்.

ஷங்கர் காலில் விழுந்து அவன் வாங்கினதை கணேஷ் போட்டுக் கொண்டு கல்ச்சுரல்ஸ்டே ஃபங்ஷனுக்கு முதல் ஆளாக போனான். அங்கே இங்கே என சுற்றியதில் டான்ஸ் ஆடும் பெண்கள் மேக்கப் அறைக்கு அருகில் நின்று கொண்டிருந்தான். ஏதோ ஒரு வீணாப் போன கமிட்டியில் இருந்ததால், அந்த சைட் சுற்றும் ஜூனியர் பசங்களை விரட்டிக் கொண்டிருந்தான். ஒரு ரூமில் இருந்து இன்னொரு ரூமிற்கு மேக்கப் ஜூவல்ஸ் போடுவதற்காக திவ்யா போய்க் கொண்டிருந்த போது, கணேஷ் கவனித்தான். இத்தனை நாள் சல்வார் கமீஸ், சுரிதாரில் பார்த்து கொண்டிருந்தவளை முதன்முறையாக அம்சமான பட்டுசேலையில் அழகாக பார்த்த போது கணேஷ் ”வாவ்வ்வ்வ்” என வாயைப் பிளந்து ரசிக்க ஆரம்பித்தான். ஆனால் திவ்யா கணேஷ் காதலை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தபோது “அய்யோ” எனவும் இருந்தது. கொஞ்ச நேரம் பேசினாள். அப்போது எல்லாரும் கணேஷை பொறாமையாக பார்ப்பதுபோல் இருந்தது அவனுக்கு பெருமையாக இருந்தது. திவ்யா நன்றாக ஆடினாள். அவள் ஆடியதற்கு கணேஷ் ஃப்ரண்ட்ஸ் அவனை விஷ் பண்ணினர்.

இதற்கு மேல் கணேஷ் எவ்வளவு யோசித்தும் ஃப்ளாஷ்பேக்கில் நடந்த விஷயங்கள் நினைவில் இல்லை. ”பின் அவ என்ன கல்ச்சுரல்ஸ்டே அன்னிக்கு நடந்ததை பத்தி சொல்ல வந்தா?” இந்த குழப்பத்தில் கணேஷ் தூங்கிப் போனான்.

அதிகாலை.. வியாழக்கிழமை. ஒரே ஒரு நாள். இதைத் தாண்டி விட்டால் வெள்ளிக்கிழமை காலை 11.30க்கு சென்னை ஃப்ளைட். (க்ளைமேக்ஸ்??)

சியாமளா மனதில் வேற ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. க்ளையண்ட் ஆஃபிஸில் இருந்த எல்லாரையும் பர்ஸனலாக ஈவ்னிங் பார்ட்டிக்கு அவள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு இன்வைட் செய்தாள் சியாமளா. திவ்யாவையும் இன்வைட் பண்ணினாள். திவ்யா என்ன என கேட்டதற்கு, சியாமளா “சஸ்பென்ஸ்” என்றாள். ஆனால் இவ்வளவு தூரம் சியாமளா பண்ணிக் கொண்டிருக்கும் அரேஞ்ச்மெண்ட்ஸ் கணேஷ்க்கு தெரியாது.

கணேஷின் தற்போதைய லட்சியம் எல்லாம் திவ்யாவிடம் இன்றைய பொழுதைக் கழிப்பது தான். அதனால் சியாமளாவின் சைலண்ட் மூவ்மென்ட்ஸை வாட்ச் பண்ணவில்லை. லஞ்ச் முடிச்சதும் சியாமளா ஹோட்டலில் மீதமிருக்கும் வேலைகளை செய்யக் கெளம்பிவிட்டாள். கணேஷ் கேட்டதற்கு, “எல்லார்கிட்டயும் இன்ஃபார்ம் பண்ணிட்டேன். நாட் ஃபீலிங் வெல். வரும்போது ஏர் டிக்கெட்ஸ் ப்ரிண்ட் அவுட் எடுத்திட்டு வந்திரு” என சப்பையான காரணங்களுடன் சமாளித்து கெளம்பிவிட்டாள்.

கணேஷ் 3 மணியை நெருங்கிக் கொண்டிருந்தபோது, கெளம்பத் தயாரானான். அப்போது திவ்யா அங்கு வந்தாள். “என்ன கணேஷ், நேத்து நான் பேசலாம்ன்னு சொன்னேன்.. அது என்னன்னு கேட்கவே மாட்டியா?”

கணேஷின் நாக்கு வறண்டது, “இல்ல. கொஞ்சம் வேலை இருந்தது, இப்ப சொல்லு. என்ன?”

“வேலை முடிஞ்சதுல்ல. வா நாம டெர்ரஸ் போகலாம்” என திவ்யா சொல்லிக் கொண்டு லிஃப்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். கணேஷ் பின்னாலேயே.

2 நிமிடங்கள் கழித்து.. “என்ன பேசுவது?” என தெரியாமல் கணேஷ் வானத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த போது, திவ்யா ஆரம்பித்தாள்..

“உனக்கு ஒரு கிஃப்ட். கணேஷ். ஓபன் பண்ணு” என கணேஷ் கையினில் திணித்துக் கொண்டே சொன்னாள் திவ்யா.

ஓபன் பண்ணினான். கல்ச்சுரல்ஸ்டே அன்று பட்டுவேஷ்டியில் கணேஷ் நிற்க, பட்டுச்சேலையில் திவ்யா உடன் இருவர் மட்டும் நிற்கும் அழகான ஃபோட்டோ லேமினேட் செய்யப்பட்டு இருந்தது. அதைப் பார்த்த கணேஷ்க்கு என்ன சொல்வதென தெரியாமல் பரவச நிலையில் கலங்கினான்.

“நாட்கள் தான் எவ்வளோ ஃபாஸ்ட்டா போகுதுல்ல கணேஷ்.. நேத்து தான் காலேஜ் ஃபேர்வெல் டே முடிஞ்சி போனது மாதிரி இருந்துச்சி?”

”ம்ம்ம்” என ஆர்வமில்லாமல் ம்ம் கொட்டினான்.

“ஆனா அந்த நாட்கள் எல்லாம் மறக்கவே முடியாது கணேஷ். அப்ப நான் தான் உன்னை ரொம்பவே ஹர்ட் பண்ணேன். அதான் இப்ப மொத்தமா ஸாரி சொல்லிட்டு…?”

“ஸாரி சொல்லிட்டு.. தென்?” அதுவாக இருக்கக்கூடாது என பரபரத்தான்.

“ஸாரி சொல்லிட்டு என்ன நீ ஆசைப்பட்ட மாதிரியே கல்யாணம் பண்ணிக்கலாம்” என வெட்கத்துடன் சொன்னாள்.

“Bull Shit“ என மனதிற்குள் கத்தினான்.

“என்ன கணேஷ்.. நான் சொன்னதை கேட்டு என்னை ஓடி வந்து கட்டிபிடிச்சுக்குவேன்னு நெனைச்சேன்?” என முகத்திற்கு நேராக வந்து கேட்டாள்.

“That’s IMPOSSIBLE” என முகத்தை திருப்பிக் கொண்டு சொன்னான்.

“WHY????” என கலவரமான முகத்துடன் கத்தினாள்.

“நாலுவருஷமா நாய் மாதிரி உன் பின்னாடியே சுத்திட்டு இருந்தேன்ல, அப்பவே இத சொல்லி இருக்கலாம்ல?” என பதிலுக்கு கத்த ஆரம்பித்தான்.

“காலேஜ் நாலு வருஷத்துல ஒரு நாள் கூட நான் உன்னை லவ் பண்றேன்னு உனக்கு புரியவே இல்லையா???? அதான் ஆட்டோகிராப் நோட்ல கூட அப்படி எழுதி கொடுத்தேன்ல?” கண்களில் நீர் தேங்க ஆரம்பித்தது.

“எனக்கு புரியலைன்னே வச்சிக்கோ.. ஒரே ஒரு வாட்டி நீயும் என்ன லவ் பண்றேன்னு சொல்லி இருந்தேன்னா, நாலு வருஷம் இல்ல நாப்பது வருஷம் ஆனாலும் உனக்காக நான் காத்திட்டு இருந்திருப்பேன். ஆனா நீ பண்ணது எல்லாமே கண்ணாமூச்சி விளையாட்டு. நீ எழுதிக் கொடுத்ததை ஒவ்வொருவாட்டி படிக்கும்போதும் ஒவ்வொரு மீனிங். அவ்வளோ எழுதுன நீ “ஐ லவ் யூ டூ டா”ன்னு முடிச்சி இருந்தேன்னா, இந்நேரம் எப்படி இருந்திருக்கும்?” கணேஷும் ரொம்ப எமோஷனல் ஆகிவிட்டான்

“இப்ப மட்டும் என்ன கணேஷ்.. காலேஜ் முடிஞ்ச இந்த நாலு வருஷத்துல என்னை மறந்துட்டீயா?”

“இந்த நாலுவருஷம் அட்லீஸ்ட் ஒரு இமெயில், ஒரு ஃபோன் கால். நீ ஹையர் ஸடடீஸ் பண்ணப் போயிருக்கன்னு எவனோ ஒருத்தன் சொல்ற அளவுக்கு நான் யாரோ ஒருத்தன் ஆயிட்டேன். நீ இதெல்லாம் ஏதோ ஒண்ணு பண்ணியிருந்தாக் கூட உன்மேல இருந்த லவ் அப்படியே இருந்திருக்கும்”

“இப்ப அந்த லவ் அப்படியே இல்லையா கணேஷ். நான் ஏன் அப்படி பண்ணேன், என்னோட ஃபேமிலி ப்ராப்ளம்ஸ் இதெல்லாம் உனக்கு தெரியுமா?”

“என்ன உண்மையிலேயே நீயும் லவ் பண்ணியிருந்தேன்னா, என்னையும் உன் ஃபேமிலில ஒருத்தனா நெனச்சி எல்லாம் சொல்லி இருந்திருப்ப? எவனோ ஒருத்தனுக்கு இமெயில் அனுப்புற நீ, எனக்கு அனுப்பியிருக்கலாம்ல..”

“ஓ.கே. லீவ் இட்.. நெக்ஸ்ட் மன்த், நேர்ல வந்து உன்கிட்ட இது பத்தி பேசலாம்ன்னு இருந்தேன். லக்கிலி…”

“டூ லேட்?”

“வாட் டூ யூ மீன்?”

“எனக்கு மேரேஜ் ஆயிடுச்சி” கணேஷ் பெரிய பொய்யை சொன்னான்.

“சியாமளா உனக்கு இன்னும் ஆகலைன்னு சொன்னா” அதிர்ச்சியின் உச்சியில் பொறுமையிழந்தாள்.

“ஆமா.. மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சி.. இன்னும் டூ வீக்ஸ்ல கல்யாணம். உன்னால ஒரு பொண்ணு வாழ்க்கையைக் கெடுக்க விரும்பல?”

”நீ ஆசைப்பட்ட பொண்ணு நான்.. வேணாமா கணேஷ்?” கண்களில் காதலை தேக்கிவைத்து கேட்டாள் திவ்யா.
“நான் ஆசைப்பட்ட பொண்ணை விட, என்னை ஆசைப்பட்ட பொண்ணு தான் எனக்கு முக்கியம்” அவள் முகத்தை பார்க்க திராணியில்லாமல் வானத்தைப் பார்த்து சொன்னான்.

”ஆல்ரைட்.. இதுக்கு மேல உன்னை ஃபோர்ஸ் பண்ண விரும்பலை கணேஷ். பை” என சொல்லிவிட்டு விருவிருவென போய்விட்டாள்.

கணேஷ் திரும்ப அவன் இடத்திற்கு வந்து எல்லாவற்றையும் பேக் பண்ணிவிட்டு கெளம்பினான். லிஃப்டிற்கு அருகில் சென்றபோது திவ்யாவும் நின்றிருந்தாள். “ஹோட்டல் தானே போற. நான் ட்ராப் பண்றேன்.. வா கணேஷ்” என்றாள் திவ்யா.

காரில் போய்க் கொண்டிருந்தனர். திவ்யா அருகில் கணேஷ் அமர்ந்திருந்தான். கணேஷ் இப்போது கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருந்தான். ஆனால் திவ்யா நிலநடுக்கம் வந்துபோன இடம் போல் இருந்தாள். ரோட்டை பார்த்துக் கொண்டே திவ்யா சீரியஸாகக் கேட்டாள்.

“நீ கட்டிக்கப் போற பொண்ணு என்னை விட அழகா இருப்பாளா கணேஷ்?”

அழுவதா சிரிப்பதா? கணேஷ்க்கு தெரியவில்லை.

********************************************

19 comments:

Anonymous said...

Going more interesting...

☀நான் ஆதவன்☀ said...

//
“நீ கட்டிக்கப் போற பொண்ணு என்னை விட அழகா இருப்பாளா கணேஷ்?”//

என்ன கேள்வி இது சின்னபுள்ளத்தனமா :)))

ஆத்தாடி.... மேற்படி மேட்டர் சியாமளாவுக்கு தெரிஞ்சுதுனா பத்ரகாளி மாதிரி ஆடிருவாளே!!! இந்த பயபுள்ளைய அந்த மகமாயி தான் காப்பாத்தனும். :)

Anonymous said...

//இதற்கு மேல் கணேஷ் எவ்வளவு யோசித்தும் ஃப்ளாஷ்பேக்கில் நடந்த விஷயங்கள் நினைவில் இல்லை. //

கணேஷுக்கு செலக்டிவ் அம்னீஷியாவா?

அந்த கிப்ஃடை கணேஷ் பத்திரமா பெட்டிக்குள்ள எடுத்து வைச்சுக்கிட்டாரா.

விமல் said...

Really good twist Ganesh :-)

You have got a unique talent in writing..keep it up..

I feel like reading some real story ;-)))

Rajalakshmi Pakkirisamy said...

//பட்டுவேஷ்டியில் கணேஷ் நிற்க, பட்டுச்சேலையில் திவ்யா உடன் இருவர் மட்டும் நிற்கும் அழகான ஃபோட்டோ லேமினேட் செய்யப்பட்டு இருந்தது//

Mudiyala...

Rajalakshmi Pakkirisamy said...

//“நான் ஆசைப்பட்ட பொண்ணை விட, என்னை ஆசைப்பட்ட பொண்ணு தான் எனக்கு முக்கியம்”//

:) :) :)

Porkodi (பொற்கொடி) said...

ivalai vida azhaga irundha ennavam ippo? edhuku indha thevai illadha lift kudukradhu, kelvi kekradhu ellam.. naan sense.. airport ku epoya povanga?

Anonymous said...

so cute ganesh sir,

ennala entha padivuku matum comments panamudiala..

so nice..great...
no words to comments.
wish you all the best.

Shankar said...

Pakka da. Really interesting... பெருசா எதுவும் twist கொடுக்காமல் complete-a சொல்லி முடித்தது super!

சிவகுமார் said...

Ganesh Weds Divya !
Ganesh Weds S.mala ?

puduvaisiva said...

"அந்த கிப்ஃடை கணேஷ் பத்திரமா பெட்டிக்குள்ள எடுத்து வைச்சுக்கிட்டாரா."

சின்ன அம்மிணி இங்க தான் ஒரு அதிரடி டுவிஸ் இருக்கு!

அவர்கள் இருவரும் பழைய நினைவுகளிலும் அதன் பின் ஏற்பட்ட அதிர்ச்சியுலும் கணேஷ் தன்கையில் இருந்த அந்த போட்டவை அந்த இடத்திலேயே வைத்து விட்டார்.

இடம் : மாலை ஈவ்னிங் பார்ட்டி

சியாமளா அனைவரைவும் வரவேற்க காத்திருந்தாள்.

அப்பொழுது மேடம் உங்களுடன் வந்த மிஸ்டர் கணேஷ் இந்த கிஃப்ட்டை (கணேஷ் நிற்க, பட்டுச்சேலையில் திவ்யா உடன் இருவர் மட்டும் நிற்கும் அழகான ஃபோட்டோ லேமினேட்)

ஆஃபிஸில் மறந்து வைத்துவிட்டார் என்று சக வெள்ளைகார ஊழியர் சியாமளாவிடம் கொடுத்தார்.

:-)))))))

கணேஷ் said...

நன்றி Anonymous!

நன்றி ☀நான் ஆதவன்☀

என்ன கேள்வி இது சின்னபுள்ளத்தனமா :)))//

ஆமா பாஸ்... சின்னப்புள்ளைத்தனமா இருக்கு :)

ஆத்தாடி.... மேற்படி மேட்டர் சியாமளாவுக்கு தெரிஞ்சுதுனா பத்ரகாளி மாதிரி ஆடிருவாளே!!! இந்த பயபுள்ளைய அந்த மகமாயி தான் காப்பாத்தனும். :)//

மகமாயி காப்பாத்துவான்னு நெனைக்கிறீங்க :)
***********************

நன்றி சின்ன அம்மிணி!

கணேஷுக்கு செலக்டிவ் அம்னீஷியாவா?//

ஒருவேளை இருக்கலாம் :)

அந்த கிப்ஃடை கணேஷ் பத்திரமா பெட்டிக்குள்ள எடுத்து வைச்சுக்கிட்டாரா.//

அது தெரியலையே :)

சீக்கிரம் போஸ்ட் போடுறப்ப எல்லாம் அப்ரிஷியேட் பண்ணாதீங்க.. ம்ஹீம்ம்ம் :(

***********************

நன்றி விமல்!

You have got a unique talent in writing..keep it up..
I feel like reading some real story ;-)))//

ஸ்டார்ட்டிங் நல்லா இருக்கு.. ஃபினிஷிங் சரி இல்லையேப்பா :)
***********************

நன்றி Rajalakshmi Pakkirisamy!

Mudiyala...//

வாட்? எனி ப்ராப்ளம்?

:) :) :)

***********************

நன்றி Porkodi (பொற்கொடி)!

ivalai vida azhaga irundha ennavam ippo? edhuku indha thevai illadha lift kudukradhu, kelvi kekradhu ellam.. naan sense.. airport ku epoya povanga?//

கூல்.. ரிலாக்ஸ்... விட்டா அடிச்சிருவீங்க போல இருக்கே :)

இந்த கதைய நான் முடிச்சிட்டா நீங்க கமெண்ட் போடுவீங்களா மத்த போஸ்ட்க்கெல்லாம் :)
***********************

நன்றி Complan Surya!

உங்க கமெண்ட் என்னை டச் பண்ணிருச்சி :)
***********************

நன்றி Shankar!

Pakka da. Really interesting... பெருசா எதுவும் twist கொடுக்காமல் complete-a சொல்லி முடித்தது super!//

உன் பேர் வந்துச்சி.. கண்டுக்காம விட்டுட்ட :)
***********************

நன்றி Sivakumar K!

Ganesh Weds Divya !
Ganesh Weds S.mala ?//

இன்னும் ஒரே எபிசோட் தான். அதுவரைக்கும் வெயிட் பண்ண மாட்டீங்களா? :)

***********************

நன்றி ♠புதுவை சிவா♠!

பாஸ் இப்படி க்ளைமேக்ஸை போட்டு உடைச்சிட்டீங்கன்னா, அப்புறம் நான் என்ன பண்ண?

ஜக்குபாய் மாதிரி க்ளைமேக்ஸை மாத்தணும் :)

***********************

Premnath Thirumalaisamy said...

Loved reading it ..Story ah Muduchidathenga .. Apparam engaluku ellam bore adikum ..

Shankar said...

உன் பேர் வந்துச்சி.. கண்டுக்காம விட்டுட்ட :) //

கண்டுக்காமல் இல்ல. Dhivya-வ யாருன்னு யோசிச்சிகிட்டிருக்கேன்!!! :)

Porkodi (பொற்கொடி) said...

adada.. ennanga kelvi idhu, kadhai mudinja thaane matha postuku comment poda mudiyum.. katchi kolugai apdi! ;) kadasila airportla ganesh kaasiku kilambama irundha sari!

கணேஷ் said...

நன்றி Premnath!

Loved reading it ..Story ah Muduchidathenga .. Apparam engaluku ellam bore adikum ..//

அங்க எல்லாரும் சித்தி, கோலங்கள் கூட முடி்ஞ்சிருச்சின்னு கலாய்க்கிறீங்க.. இதுல நீங்க இப்படி சொல்றீங்க :)

********************

நன்றி Shankar!

கண்டுக்காமல் இல்ல. Dhivya-வ யாருன்னு யோசிச்சிகிட்டிருக்கேன்!!! :)//

இன்னும் வேணும் இதுக்கும் மேலயும் வேணும். தேவையா? :) (எனக்கு சொல்லிக்கிட்டேன் )

********************

நன்றி Porkodi (பொற்கொடி)

adada.. ennanga kelvi idhu, kadhai mudinja thaane matha postuku comment poda mudiyum..//

பாக்கலாம் :)

katchi kolugai apdi! ;)//

அதத் தூக்கி குப்பைல போடுங்க :)

kadasila airportla ganesh kaasiku kilambama irundha sari!//

ரெண்டு பொண்ணுங்களுக்கு நடுவுல இருந்திட்டு, “என் எதிரே ரெண்டு பாப்பா”ன்னு ஆ.ஒ. பாட்டு பாடிட்டு இருக்கான். அவனைப் போய்? காசி? ஹவ் டேர் யூ? :)

********************

Porkodi (பொற்கொடி) said...

ama en posta padikamale englipis nu sonna enna artham? adhu englipis illa boss!

Anonymous said...

“நீ கட்டிக்கப் போற பொண்ணு என்னை விட அழகா இருப்பாளா கணேஷ்?”

Master Piece...

அழுவதா சிரிப்பதா? கணேஷ்க்கு தெரியவில்லை.

This is as usual... :)

Regards
Nagappan

Sasi said...

அருமை! அட்டகாசம்

Related Posts with Thumbnails