இவள மாதிரி பொண்ணு பாரும்மா?

கொஞ்சும் அழகியின்
கொடி விடும்
மெல்லிய இடை அதனுடன்
ஆண்பிள்ளை திமிரும் உயரமும்
அசரடிக்கும் அழகுடன்
தினமும் சொப்பனத்தில்
வந்து போகிறாள்
அவள் முகரேகைகள் மனதில்
பதியும்முன் கலைகின்றன
அம்மா உடன் திரைப்படம்
சென்றபோது சடாரென
மின்னல்கீற்றின் ஒளியில்
முக, உடல் ரேகைகளில்
முழுதாக அழகாக தெரிந்தாள்
உடனே அம்மாவிடம்
இவள மாதிரி பொண்ணு பாரும்மா?
“டேய் இவ நவி’டா
வால் வேற இருக்கு”

*****************

ஸோ, நானும் ’அவதார்’ பார்த்துவிட்டேன். அதன் பாதிப்பு தான் மேலே.

*****************

9 comments:

Anonymous said...

3D ல தானே பாத்தீங்க. இல்லாட்டி வேஸ்ட்.

பின்னோக்கி said...

சாருக்கு ஒரு ராக்கெட் டிக்கெட் பார்சல்

♠புதுவை சிவா♠ said...

so, நானும் ’அவதார்’ பார்த்துவிட்டேன்.

cheena (சீனா) said...

அன்பின் சிவா

நான் இன்னும் பாக்கலே

இருந்தாலும் இவ மாதிரியே பொண்ணு வேணும்னா கேட்டீங்க அம்மா கிட்டே - ம்ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள்

கணேஷ் said...

நன்றி சின்ன அம்மிணி!

3D ல தானே பாத்தீங்க. இல்லாட்டி வேஸ்ட்.//

ஆமாங்க 3டி தான். அதுக்கு தான் இத்தனை நாள் வெயிட் பண்ணேன். நீங்க பாத்துட்டீங்களா?

***************

நன்றி பின்னோக்கி

சாருக்கு ஒரு ராக்கெட் டிக்கெட் பார்சல்/

ஹா ஹா ஹா :) சூப்பர்.

******************

நன்றி ♠புதுவை சிவா♠

so, நானும் ’அவதார்’ பார்த்துவிட்டேன்.//

கூல்.. எப்படி இருந்துச்சி?

*******************

நன்றி cheena (சீனா)

அன்பின் சிவா//

அய்யா. அடியேன் பேர் கணேஷ் :)

நான் இன்னும் பாக்கலே
இருந்தாலும் இவ மாதிரியே பொண்ணு வேணும்னா கேட்டீங்க அம்மா கிட்டே - ம்ம்ம்ம்ம்//

ஆமாம்.. கேவலமா திட்டிட்டாங்க. :)

நல்வாழ்த்துகள்//

:)

***************

Anonymous said...

Ganesh, Cable sankar has left you a positive note on 28.12.2009

கணேஷ் said...

நன்றி Anonymous!

Ganesh, Cable sankar has left you a positive note on 28.12.2009//

எனக்கு தெரியும் அனானி. அவருக்கு நான் தேங்க்ஸ் கமெண்ட்லயும், ஃபோன்லயும் சொல்லிட்டேன். என்ன ஒரு கடமை உணர்வு உங்களுக்கு! :)

☀நான் ஆதவன்☀ said...

:))

கணேஷ் said...

நன்றி நான் ஆதவன்!

எப்பூடி? :)

Related Posts with Thumbnails