கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
“வெரி சிம்பிள் பாலிசி.. த்ரிஷா கிடைக்கலைன்னா ஒரு திவ்யா”
“வாட்?” திவ்யா, பிரகாசமான முகத்துடன்
“வாட்?” சியாமளா, கொஞ்சம் லேட்டாக
அவசரத்தில் வாயிலிருந்து விழுந்துவிட்ட வார்த்தைகளுக்காக நாக்கைக் கடித்துக் கொண்டான். அடுத்த செகண்டே..
“இல்ல.. த்ரிஷா இல்லைன்னா ஒரு திவ்யா or நித்யா may be வித்யா.. whoever.. வடிவேலு ஜோக் மாதிரி ட்ரை பண்ணேன். பட், இடம், பொருள், கொஞ்சம் மிஸ் ஆகிடுச்சி” என சப்பைக்கட்டு கட்ட முயன்று அசடு வழிந்தான்.
திவ்யா சிரித்துக் கொண்டே அதிக ஆர்வம் காட்டாததுபோல் சாப்பிடுவதைத் தொடர்ந்தாள். சியாமளா மட்டும் எரித்துவிடுவதை போல் பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென திவ்யாவிற்கு செல்ஃபோனில் கால் வந்தது. ஏதோ முக்கியமான கால் என நினைத்துக் கொண்டு வெளியே ஓடுவதற்கு அவசரமாக எழுந்தாள். பாதி தூரம் ஓடியவள் திரும்ப டேபிளுக்கு தண்ணீர் குடிக்க ஓடிவந்தாள். குடிப்பதற்கு பாட்டிலை எடுக்கும்போது, கணேஷ் காதருகில், “தேங்க்ஸ் கணேஷ்” என கிசுகிசுத்துவிட்டு திரும்ப வெளியே போய்விட்டாள். கணேஷ்க்கு உள்ளுக்குள் படபடவென அடித்தது. சியாமளா முகத்தை திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருந்தது கணேஷ்க்கு வசதியாய் இருந்தது. கவனித்தது போல் தெரியவில்லை. “இன்னும் இது மாதிரி எத்தனை தடவை செத்து செத்து பிழைக்கிறதோ, கடவுளே. சீக்கிரம் ஒரு மாசம் முடியட்டும் ஆடுவெட்டி பொங்கல் வைக்கிறேன்” என நொந்துகொண்டான் கணேஷ்.
சாப்பிட்டு முடிக்கும்வரை கணேஷும், சியாமளாவும் பேசிக் கொள்ளவில்லை. இடத்திற்கு போய்விட்டனர். மாலை 6 மணிக்கு கெளம்பும்வரை இருவரும் அமைதியாக இருந்தனர். கணேஷ்க்கு இருந்த மனநிலையில் இது நிம்மதியளித்தாலும், சியாமளாவை மிஸ் பண்ணுவதுபோல் உணர்ந்தான். ஆஃபிஸிலிருந்து கெளம்பும்போது கணேஷ் ஆரம்பித்தான்.
“ஹேய் என்ன ஆச்சி?”
“நத்திங்..”
“அப்படின்னா ஏதோ ஒண்ணு இருக்குன்னு அர்த்தம்?”
“ஓ.கே. த்ரிஷா இல்லைன்னா திவ்யாவா?” முகத்தை கடுப்பாக வைத்துக் கொண்டே கேட்டாள்
“இன்னுமா அத யோசிச்சிட்டு இருக்க?”
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”
“ஆல்ரைட்... நான் ச்சும்மா ஜெனரலா சொன்னேன். ரெண்டு பேரும் பசங்களை டீஸ் பண்ணிக்கிட்டு இருந்தீங்க.. அதான் நானும் என் பங்குக்கு கேர்ள்ஸை டீஸ் பண்ணேன். தட்ஸ் ஆல்”
“அதுல திவ்யா எங்க இருந்து வந்திச்சி?”
”அப்படி தான வடிவேலு படத்துல சொல்வாரு.. ஸீ.. நான் எதுவும் மீன் பண்ணல..” கொஞ்சம் டென்ஷன் ஆக ஆரம்பித்தான்.
“எனக்கு என்னமோ அப்படி தெரியல..” முகத்தை எங்கேயே வைத்துக் கொண்டு சொன்னாள்.
கோபம் உச்சி மண்டையில் ஏறியது, “நீ கூடத் தான் ஆண்கள் மேலேயே நம்பிக்கை இல்லைன்னு சொன்ன, அதுக்காக நீ என்னையுமா சொல்றன்னு கேட்டேன்னா? நான் புரிஞ்சிகிட்ட மாதிரி நீயும் புரிஞ்சிக்க வேண்டியது தான?”
சியாமளா இந்த அளவு விவாதம் சண்டையாக மாறும் அளவுக்கு போகும் என எதிர்பார்க்கவில்லை. அதை ஆரம்பிப்பததற்கும், கணேஷை முதன்முறையாக எரிச்சல்படும்படி செய்ததற்கும் ரொம்பவே வருத்தப்பட்டாள். கணேஷ் ஹோட்டல் வரும்வரை பேசவே இல்லை. அது சியாமளாவை ரொம்ப கஷ்டப்படுத்தியது. ஆனால் கணேஷ் மனதில் ஓடியது வேற “திவ்யா காதல் விஷயம் தெரியாமலேயே, அவளால சியாமளா கூட இந்த எக்ஸ்ட்ரீம் சண்டை வருது. ஒரு வேளை தெரிஞ்சா?” இதே போல் ஏகப்பட்ட விஷயங்கள். ரொம்ப குழம்பிப் போய் இருந்தான்.
இரவு 7 மணி இருக்கும். சியாமளா கணேஷ் ரூம்க்கு அவசரம் அவசரமாக ஓடி வந்தாள். அவளிடம் இருந்த கீயை வைத்து திறந்து உள்ளே வந்தாள். கணேஷ் உள்ளே இல்லை. “கணேஷ் கணேஷ்” என கத்தினாள்.
“பாத்ரூம்ல இருக்கேன். 5 மினிட்ஸ்” என்றான் உள்ளேயிருந்து.
7 நிமிடம் கழித்து வெளியே வந்தான் இடுப்பில் டவலுடன். சோப் வாசனையுடன் மார்பில் படர்ந்த முடிகளுடன், கழுத்தில் அவன் போட்டிருந்த கோல்டு செயின் சகிதம் பேர் பாடியுடன் வெளியே எக்ஸ்ட்ரா ஃப்ரெஷ்னஸ்ஸுடன் வந்தான். முதல் முறை சியாமளாவை சென்னை ரூமில் பார்த்த போது இருந்த சங்கோஜம் இப்போது இல்லை. சியாமளா முகத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.
“கெஸ் வாட்?” சியாமளா கண்ணடித்துக் கொண்டே ஆரம்பித்தாள்.
“வாட்?” எனி குட் நியூஸ்?”
“யெஸ்.. யூ ஆர் கரெக்ட்..வெரி குட் நியூஸ்”
“அப்படி என்ன?”
“திவ்யா அவசரமா நெதர்லேண்ட்ஸ் போயிட்டா.. வர்றதுக்கு டூ வீக்ஸ் ஆகுமாம்.. ஹேய்ய்ய்ய்” குதித்தாள்
“ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ஹேய்ய்ய்ய்” என அவளை விட பல மடங்கு சத்தத்தில் சந்தோஷக் கூச்சல் போட்டான். திடீரென அதை pause பண்ணி, “அவ போனதுக்கு நான் சந்தோஷப்படுறேன். ஓ.கே.. சியாமளா ஏன் குதிக்கிறா?” என யோசித்து கலவரமானான். அவளிடமே கேட்டான்.
”ஆமா அவ போனதுக்கு நீ ஏன் சந்தோஷப்படுற?”
”ஆமா.. பொண்ணா அவ.. அன்னைக்கு லஞ்ச்ல நீ வெளில போனப்ப என்ன சொன்னா தெரியுமா?”
“என்ன சொன்னா?” கலவர ரேகைகள் அதிகமாகியது.
“கணேஷ் ரொம்ப ஹேண்ட்ஸம்மா இருக்கான்ல அப்படின்னு என்கிட்டயே கேட்குறா? எனக்கு கடுப்பாயிடுச்சி.. அப்ப இருந்து அவளைக் கண்டாலே பிடிக்கல”
அழுவதா சிரிப்பதா தெரியவில்லை கணேஷ்க்கு. “வேற என்ன சொன்னா?” இன்னும் பீதியுடன்
“அவ்ளோதான்.. இதுல நீ வேற திவ்யா திவ்யான்னு ஜொள்ளு ஊத்திக்கிட்டு இருந்தியா.. பயமா இருந்திச்சி.. இப்ப ஓ.கே. அப்படியே அவ திரும்பி வந்தாலும், ஒரு வாரம் தான். சமாளிச்சிக்கலாம்”
”அப்படியே என் மனசுல இருக்குறத டையலாக் மாறாம சொல்றால்லே” என சந்தோஷப்பட்டான் கணேஷ். “சூப்பர்” என சொல்லிக் கொண்டு சியாமளா முன்னால் தலையை சிலுப்பிக் கொண்டு தண்ணீர்த்துளிகளை அவள் மேல் தெளித்தான்.
அவள், “டேய்” என கத்திக் கொண்டு கையால் தடுத்துக் கொண்டு கணேஷை அடிக்க வந்தாள். கணேஷ் இன்னும் வேகமாக அவள் முன் வந்து சிலுப்பிக் கொண்டிருக்க, சியாமளா கையில் காற்றை படபடவென அடித்துக் கொண்டு தடுத்தாள். கணேஷ் அவள் கைகளை பற்றிக் கொண்டு முகத்தின் அருகே வந்து பண்ணினான். அவள் திமிறிக் கொண்டு இருந்தாள். இருவரின் ஸ்பரிசமும் மிக…. மிக மிக அருகில். கணேஷ் திடீரென நிறுத்திக் கொள்ள, அவளும் திமிறிக் கொண்டிருந்ததை உடனே நிறுத்திக் கொள்ள இருவரின் கண்களும் நேர்கோட்டில் காதல் பாஷைகளை பரிமாறிக் கொண்டிருந்தன.
“நோ கணேஷ்.. ப்ளீஸ்ஸ்ஸ்” என ஹஸ்கி வாய்ஸில் கிசுகிசுக்க..
“யூ மீன், யெஸ்..”
”நோ..” என திறந்த இதழ்களை அவள் மூடவில்லை. கணேஷ் செய்தான். முழுதாக ரெண்டு நிமிடம் தாண்டிக் கொண்டிருந்தது. காது வழியே மூச்சு அனல் காற்றாக துடிதுடித்து வெளியே போய்க் கொண்டிருக்க, உச்சந்தலையின் மையப்புள்ளியில் ஏதோ ஒன்று திரண்டு இருந்தது. மூன்று நிமிடம் தாண்டி முத்தத்தை முடித்துக் கொள்ள, மூக்கு மீண்டும் நார்மலாக மூச்சு விட முயற்சி செய்து கொண்டிருந்தது. இருவரின் உதடுகளும் இன்னும் துடித்துக் கொண்டிருந்தன. இன்னும் சியாமளா கணேஷ் பிடியில் இருந்தாள்.
“இன்னும் ஒரு குட் நியூஸ் இருக்கு” சியாமளா நடுநடுங்கும் உதடுகளை பிரித்து காற்றில் சொன்னாள்.
“வாட்?” ஆர்வமே இல்லாமல் அதை உற்று நோக்கிக் கொண்டே சொன்னான்.
“மேரேஜ் டேட் ஃபிக்ஸ் ஆயிடுச்சி. நெக்ஸ்ட் மன்த் 25”
“இப்ப இதுக்கு இத சொல்ற.. யூ மீன்ன்ன்ன்ன்..?” என இழுத்துக் கொண்டே அவளை இன்னும் இறுக்கினான்.
“மீனும் இல்ல.. சிக்கனும் இல்ல.. “ என கத்திக் கொண்டே அவனை கட்டிலில் மொத்தமாக தள்ளிவிட்டு கதவைத் திறந்து ஒரே பாய்ச்சலில் அவள் ரூமிற்க்கு ஓடிவிட்டாள்.
சியாமளா-17: காதல் சடுகுடு
Labels:
கணேஷ்-சியாமளா
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
athu sari...
செம ரொமாண்டிக் இந்தப் பகுதி..
திவ்யாகிட்ட இருந்து நான் ஆதவன் ரொம்ப எதிர்பார்த்தார். பாவம் நெதர்லாந்து அனுப்பீட்டீங்க.
//முன்னால் தலையை சிலுப்பிக் கொண்டு தண்ணீர்த்துளிகளை அவள் மேல் தெளித்தான்.//
இந்த சீனை மணிரத்னம் ஏற்கெனவே எங்களுக்கு ரோஜா படத்துல காட்டிட்டார். :)
\\“கணேஷ் ரொம்ப ஹேண்ட்ஸம்மா இருக்கான்ல அப்படின்னு என்கிட்டயே கேட்குறா?........//
ஏனுங்கோ ஆபிசர்...! ஹன்ட்சம்னா என்ன அர்த்தம்ங்க ஆபிசர்?? :-) :-)
பாவங்க திவ்யா.. சும்மா அவ கனவுகளை வளர்த்து விடுகிறீர்களே....
சிருங்கார ரசம் ரொம்பவே நிரம்பி வழிகிறது....
நன்று நன்று....
அடுத்த பாகத்தையும் இருநாட்களுக்குள் எதிர்பாரக்கிறேன்...
etho parunga ganesh..
ethlam konjam overu..
but its ok...apdiey divya nedalarthula erunthu call panuvanga...apprum avanga choluvanga enku thirum ganesh shiamala una love panra..un santhosathukga na vidukuduthuen apdi epdi ethachum next episodela elunthenga..avlothan choliputen..
enta siyamala matuma....epdii??
....
aduthu yepdi sir ungalku romanti mood elam varuthu..nesitha ponu oru pakam...kadika pora ponu oru pakam..nesitha ponu epo nesikranga..divaya..epo epdi ganesh ungalala siamala koda romance..nijama enaku pidikala..am very sorry to say this..
but unga commedy pidichu eruku..kida vetti pongal vaikrthu..
mmmmmmmmmmm..sari pothum appuram varen..enta edupata payapula manager vantan..
“கணேஷ் ரொம்ப ஹேண்ட்ஸம்மா இருக்கான்ல அப்படின்னு என்கிட்டயே கேட்குறா? எனக்கு கடுப்பாயிடுச்சி.. அப்ப இருந்து அவளைக் கண்டாலே பிடிக்கல”
boss etha padichutu sirictien..sila visiangal cinimathanam erunthlum but oru sila visiangal etharthama eruku..
kalakkitenga ponga..
nadakthum nanum pakren enta siamama ponu ennathan panuthunu..neengaley cholunga diviya pavam ella...
apprum Handsomna orutharu ketarula apdiney nama peru elam choli epdithan erukanum handsome apdinu padil podunga boss..(PInkuriupu)Ganeshi seka vendam..
கணேஷ் ரோம்ப பேஷா நடிக்குது (நமீதா ஸ்டைல்).ஆவலுடன் எதிர்பார்த்து..... அடுத்த பகுதியை....
அன்பரசு செல்வராசு
Super. This is what I have expected from Part-9.
Part -8 la sonnatha(
(இளமை துள்ளலுடன் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கவும்)) epo than light a touch panna mathiri iruku!! Ennum konjam kootalame. :)))
\\ முழுதாக ரெண்டு நிமிடம் தாண்டிக் கொண்டிருந்தது. காது வழியே மூச்சு அனல் காற்றாக துடிதுடித்து வெளியே போய்க் கொண்டிருக்க, உச்சந்தலையின் மையப்புள்ளியில் ஏதோ ஒன்று திரண்டு இருந்தது. மூன்று நிமிடம் தாண்டி முத்தத்தை முடித்துக் கொள்ள, மூக்கு மீண்டும் நார்மலாக மூச்சு விட முயற்சி செய்து கொண்டிருந்தது. இருவரின் உதடுகளும் இன்னும் துடித்துக் கொண்டிருந்தன
Solli irukaratha style ah patha sontha experience pola ... Kalakunga boss..
ம்ம்ம்
நன்றி Rajalakshmi Pakkirisamy!
athu sari...//
எது சரி?
**************
நன்றி Raghav!
நன்றி சின்ன அம்மிணி!
திவ்யாகிட்ட இருந்து நான் ஆதவன் ரொம்ப எதிர்பார்த்தார். பாவம் நெதர்லாந்து அனுப்பீட்டீங்க.//
:) போன திவ்யா திரும்ப வருவான்னு நம்பிக்கை வைத்திருப்பார் ஆதவன்
இந்த சீனை மணிரத்னம் ஏற்கெனவே எங்களுக்கு ரோஜா படத்துல காட்டிட்டார். :)//
:) ஆனா அதுக்கப்புறம் நான் சொன்ன மாதிரி காட்டி இருக்கமாட்டார்ல்ல :)
**************
நன்றி லெமூரியன்!
ஏனுங்கோ ஆபிசர்...! ஹன்ட்சம்னா என்ன அர்த்தம்ங்க ஆபிசர்?? :-) :-)//
உங்க இமெயில் ஐடிக்கு என் ஃபோட்டோவ அனுப்பி இருக்கேன்.. பார்த்து தெரிஞ்சிக்கோங்க ஆபிசர் :)
**************
நன்றி Thinks Why Not - Wonders How!
பாவங்க திவ்யா.. சும்மா அவ கனவுகளை வளர்த்து விடுகிறீர்களே....//
திவ்யாவுக்காக ரொம்ப பாவப்படாதீங்க.. அவங்கதான் ஹீரோயின்னா, வில்லியா, கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டான்னு போக போகத் தான் தெரியும் :)
சிருங்கார ரசம் ரொம்பவே நிரம்பி வழிகிறது.... நன்று நன்று....//
ரியல்லீ :)
அடுத்த பாகத்தையும் இருநாட்களுக்குள் எதிர்பாரக்கிறேன்...//
அடபோங்கைய்யா.. உங்களுக்கு இதே வேலையா போச்சி.. அடுத்த போஸ்ட் ஆஃப்டர் பொங்கல் :)
**************
நன்றி Complan Surya!
etho parunga ganesh..
ethlam konjam overu..//
அதான் பாதியோட முடிச்சிட்டேனே... அப்புறம் என்ன?
but its ok...apdiey divya nedalarthula erunthu call panuvanga...apprum avanga choluvanga enku thirum ganesh shiamala una love panra..un santhosathukga na vidukuduthuen apdi epdi ethachum next episodela elunthenga..avlothan choliputen..//
பாஸ்.. உங்களுக்குள்ள ஒரு ஸ்டோரி டெல்லர் ஒளிஞ்சி இருக்கார். வெளில கொண்டு வாங்க :)
enta siyamala matuma....epdii??//
என்ன சொல்றீங்க புரியல?
aduthu yepdi sir ungalku romanti mood elam varuthu..nesitha ponu oru pakam...kadika pora ponu oru pakam..nesitha ponu epo nesikranga..divaya..epo epdi ganesh ungalala siamala koda romance..nijama enaku pidikala..am very sorry to say this..//
படிக்கிற நீங்க இவ்ளோ டென்ஷன் ஆகுறது எனக்கு பிடிச்சிருக்கு.. ஆனா பாருங்க, யார் யாருக்கு யாரைப் பிடிச்சிருக்கு போக போகத் தான் தெரியும்.
but unga commedy pidichu eruku..kida vetti pongal vaikrthu..
mmmmmmmmmmm..sari pothum appuram varen..enta edupata payapula manager vantan..//
மேனேஜர் எல்லாம் பாவம். நோ பேட் வேர்ட்ஸ் :)
boss etha padichutu sirictien..//
அதுக்காகத் தான் எழுதுனேன். எங்கே இருந்து தான் சிரிப்பு வருதோ :)
sila visiangal cinimathanam erunthlum but oru sila visiangal etharthama eruku..
kalakkitenga ponga..//
தேங்க்ஸ்ங்க..
nadakthum nanum pakren enta siamama ponu ennathan panuthunu..neengaley cholunga diviya pavam ella...//
இல்ல.. :)
apprum Handsomna orutharu ketarula apdiney nama peru elam choli epdithan erukanum handsome apdinu padil podunga boss..(PInkuriupu)Ganeshi seka vendam..//
அதத் தான் பண்ணப் போறேன் பாஸ்.. ஆனா நீங்க பின்குறிப்புல என்ன போட்ருக்கீங்க, புரியல :)
எங்ககிட்டயேவா டக்கால்ட்டி வேலை :)
**************
நன்றி Anbarasu Selvarasu said...
கணேஷ் ரோம்ப பேஷா நடிக்குது (நமீதா ஸ்டைல்).ஆவலுடன் எதிர்பார்த்து..... அடுத்த பகுதியை....//
இண்ட அன்புரசு நல்லா கமெண்ட் குடுக்குது(ஸேம் நமீதா ஸ்டைல்) :)
**************
நன்றி Shankar!
Super. This is what I have expected from Part-9.//
தெரியும்டா உன்னப் பத்தி.. அதான் உனக்கு நியாபகப்படுத்தினேன் :)
epo than light a touch panna mathiri iruku!! Ennum konjam kootalame. :)))//
இப்பத் தான் மக்கள்(பொண்ணுங்க கூட) கூட்டமா கூட்டமா கமெண்ட் போடுறாங்க. அது பொறுக்கலியா உனக்கு :)
**************
நன்றி Premnath!
Solli irukaratha style ah patha sontha experience pola ... Kalakunga boss..//
நல்ல வேளை.. இதத் தாண்டி நான் எதுவும் எழுதல.. இல்லைன்னா அந்த அபாண்டமான கேள்விய என்னப் பாத்து கேட்டுருப்பீங்க :)
**************
நன்றி சரவணகுமரன்!
ம்ம்ம்// ஸ்டோரி ஃப்ளோ ஓகே வா?
**************
அது யாருங்க அந்த காப்ம்ளான் சூர்யா? ஒன்னு இங்கிலீஷ்ல எழுத சொல்லுங்க. இல்ல தமிழ்ல எழுத சொல்லுங்க. கொடுமையா இருக்கு படிக்கறதுக்குள்ள :)
தவறுக்கு மனிக்கவும் பெரிய அம்மணி (சின்ன அம்மணி).
உங்கள் கருத்து பரிசிலிக்க படுகிறது...
வாழ்க வளமுடன்..
மிஸ்டர் கணேஷ் சார் -
எபோது உங்க அடுத்த எபிசொட் வரும்,மிகுந்த ஆவலுடன் காத்து இருக்கோம்...
திவ்யா எங்க ஊருக்கு வந்திருக்காங்க. அட்ரஸ் ப்ளீஸ்.
அது யாருங்க அந்த காப்ம்ளான் சூர்யா? ஒன்னு இங்கிலீஷ்ல எழுத சொல்லுங்க. இல்ல தமிழ்ல எழுத சொல்லுங்க. கொடுமையா இருக்கு படிக்கறதுக்குள்ள ---sema commedy ganesh.etha padicitu..sirichiten...just you have to decide i have to continue with tamil/english/thangalish...because i am week in english..Tamil type type suthama varathu..tamiltype panrthukula i forget what i like to say konjam memory power commee....so i do it my way with your permision..(am sorry if any1 take it as mistakes)
Thank you.
(ganesh neenga kondipa before pongal 2episode tharenga ellati..avalothan..)mirataana anbu vendukol...advance happy pongal to all bloggers..
அன்புத்தம்பி காம்ப்ளான் சூர்யாவுக்கு நன்ற் :):0
பிளீஸ் டெல் மீ வாட் ஹேப்பண்டு டூ மீஸ்டர். முத்துவேல் .....அவர் பிக்சர்லயே இல்லயே
Boss,
Please make it romantic not sexy.
Regards
Nagappan
A movie nu ennai theatrekulla vida matengranga uncle!! :P
awesome post!
நன்றி சின்ன அம்மிணி
அது யாருங்க அந்த காப்ம்ளான் சூர்யா? ஒன்னு இங்கிலீஷ்ல எழுத சொல்லுங்க. இல்ல தமிழ்ல எழுத சொல்லுங்க. கொடுமையா இருக்கு படிக்கறதுக்குள்ள :)//
விடுங்க விடுங்க மேடம்.. இப்படியாவது ஒண்ணு ரெண்டு கமெண்ட் வருது. அதுக்கும் ஆப்பு வச்சிடாதீங்க.. :)
*************
நன்றி Complan Surya
தவறுக்கு மனிக்கவும் பெரிய அம்மணி (சின்ன அம்மணி).
உங்கள் கருத்து பரிசிலிக்க படுகிறது...//
ரைட் சூப்பர் :)
வாழ்க வளமுடன்..
மிஸ்டர் கணேஷ் சார் -
எபோது உங்க அடுத்த எபிசொட் வரும்,மிகுந்த ஆவலுடன் காத்து இருக்கோம்...//
அதெல்லாம் சரி. எதுக்கு அந்த ‘வாழ்க வளமுடன்’? :) ஆள் வச்சி மிரட்ட்றீங்களான்னு கேக்குறா மாதிரி இருக்கு :)
*************
நன்றி மணிகண்டன்
திவ்யா எங்க ஊருக்கு வந்திருக்காங்க. அட்ரஸ் ப்ளீஸ்.//
நம்பர் 10, விவேகானந்தர் தெரு,
நெதர்லாண்டு குறுக்கு சந்து,
நெதர்லாண்டு மெயின் ரோடு,
நெதர்லாண்டு
அட்ரஸ் திருப்பி சொல்லட்டுமா? :)
*************
நன்றி Complan Surya!
sema commedy ganesh.etha padicitu..sirichiten...just you have to decide i have to continue with tamil/english/thangalish...because i am week in english..Tamil type type suthama varathu..tamiltype panrthukula i forget what i like to say konjam memory power commee....so i do it my way with your permision..(am sorry if any1 take it as mistakes)
Thank you.
(ganesh neenga kondipa before pongal 2episode tharenga ellati..avalothan..)mirataana anbu vendukol...advance happy pongal to all bloggers..//
ரைட் நீங்க எப்படி கமெண்ட் போட்டாலும் எனக்கு ஓ.கே. உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் :)
*************
நன்றி சின்ன அம்மிணி!
அன்புத்தம்பி காம்ப்ளான் சூர்யாவுக்கு நன்ற் :):0//
இதெல்லாம் வேறயா? நடத்துங்க :)
*************
நன்றி kk!
பிளீஸ் டெல் மீ வாட் ஹேப்பண்டு டூ மீஸ்டர். முத்துவேல் .....அவர் பிக்சர்லயே இல்லயே//
அவன் வருவான்.. க்ளைமேக்ஸ்ல :)
*************
நன்றி Anonymous
Boss,
Please make it romantic not sexy.
Regards
Nagappan//
என்னக் கொடுமை சார் இது? இதென்ன செக்ஸியாவா இருக்கு? :) ஓ.கே. ஐ வில் மேக் அ நோட் ஆஃப் இட் :)
*************
நன்றி Porkodi (பொற்கொடி)
A movie nu ennai theatrekulla vida matengranga uncle!! :P//
என்னை அங்கிள் என்று சொன்ன பொற்கொடி ஆண்ட்டியை வன்மையாகக் கண்டிக்கிறேன். A Movie???? இதெல்லாம் உங்களுக்கே டூ மச்சா இல்ல :)
awesome post!//
:)
*************
சரிங்க மாமா எதுக்கு எல்லாம் பீல் பண்ணலாமா,
பிடிக்காத வார்த்தை அண்ணா தம்பி சொல்றவங்களே
நாம அட்ஜஸ்ட் பண்ணிகிட்றோம்..
இதலாம் அரசியல சகஜம்na ...
அப்புறம் பொங்கல் வர எபிசொட் தர போல ஐடியாவே எல்லா போல.
இருக்கட்டும் இருக்கட்டும்
எந்த சியாமளா பத்தி கொஞ்சம் அதிகமா தகவல் போடுங்க..மறக்காம
பொண்ணுக வந்த நண்பர்கள விட்டுடுபோற தமிழ்நாட்டு கலாச்சாரத்தை காப்பாத்திட்டுவர நாம கணேஷ் பத்தி கொஞ்சம் கூடுதலா தகவல் சொல்லுங்க..
நன்றி
வாழ்க வளமுடன்
"எதுவா இருந்தாலும் பொங்கல் முன்னாடி ஒரு இபிசொடே வரணும்"
"எனது எழுத்து பிழைகளை பொருத்து அருள்க"
hello this is too much. we are waiting for next twist.
netherlandku anupittu inga jollya koothadikareenga. mavanae shyamalava kalatti vitta ama solliten.
ana project onum nadakara madhiri theriyala.
manager sir neengalavadhu sollunga ivanga enna project pannaranganu. uk varaikum varanga.
ஆஹா ரொமாண்டிக்கா இருக்கேப்பா கணேசா :)))
@சின்ன அம்மணி
வருத்தம் தான் எனக்கு. என்ன பண்றது... இந்த திவ்யா இல்லைன்னா இன்னொரு நித்யா வராமலா போகப்போறா? :)
Post a Comment