உன் மூஞ்சிக்கு என் மேல ஆசையா?

கல்யாண மண்டபமே களை கட்டியிருந்தது. விடிந்தால் திருமணம். முதல் நாள் இரவில் நிச்சயதார்த்தம் முடிந்து நெருங்கிய சொந்தங்கள் எனப்படும் நாலு இலக்கத்தில் மொய் தீட்டுபவர்கள் ஏ.ஸி கெஸ்ட் ரூமில் தூங்குவதற்கு முன் பாதாம்பால் குடித்துக் கொண்டிருந்தார்கள். வெட்டப்பட்டு சில மணிநேரங்களே ஆன ஃப்ரெஷ் வாழைமரங்கள் குலையுடன் மண்டபத்தின் வாசலில் வந்து இறங்கியது.

அதிகாலை 6 மணிக்கே மண்டபத்திற்கு கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது. வினோத், மாப்பிள்ளையின் உயிர் நண்பன், நைட் முழுவதும் டெக்கரேஷன், அதிகாலையில் விருந்தினர்களுக்கு குளிக்க சுடுதண்ணீர், குடிக்க காஃபி என சகல வேலைகளையும் இழுத்து போட்டு செய்து கொண்டிருந்தான். வீட்டில் வெட்டியாக ஈஸி சேரில் உட்கார்ந்து ஹிண்டு பேப்பரை படித்துக் கொண்டிருக்கும் ரிட்டையர்டான காலனி தாத்தாக்கள் எல்லாரும் முதல் வரிசையில் உட்கார்ந்து கொண்டு சுகர் இல்லாத காஃபி கொண்டு வர சொன்னார்கள். வினோத், கிச்சனில் அவர்களுக்கு காஃபி கொடுக்க சொல்லி ஒரு பையனை அரேன்ஞ்ச் பண்ணி திரும்பும்போது தான் பார்த்தான்.

கோவப்படாமலே சிவக்கும் கன்னங்கள், ஸ்ட்ரெயிட்டனிங் பண்ண தேவையில்லாத சீரான முடி, ஸ்லீவ்லெஸ் சுடிதார், அளவான திருத்தமான முகம், ஒல்லியான தேகம் என தேவதை மாதிரி இருக்கும் அவளை முதன்முதலாக‌ பார்த்தான். பார்த்த அந்த நொடியில் அவன் மனதை பறிகொடுத்தான். நேரில் சென்று அவளுக்கும் அவளுடன் நின்று இருந்த இரண்டு தோழிகளுக்கும் காஃபி கொடுக்க வேலைக்கார பையனுடன் கொடுத்தான். பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

வினோத், கீர்த்தியின் தோழிகளைப் பார்த்தான். நிஷா, ரொம்ப கறுப்பாகவும், ஃபேர் & லவ்லி பயன்படுத்தி முகத்தை மட்டும் சிவப்பாக்க முயற்சி செய்தவளை அவளின் நீளமான கை ஒரிஜினல் கலரை காட்டிக் கொடுத்தது. ஆனால் மதுரை பெண்களுக்கே உரிய ஆளுமை அவளிடம் இருந்தது. வித்யா, இவளும் கறுப்பு தான், ஆனால் நிஷா அளவு இல்லை. கொஞசம் களையாகவும், சிரிக்கும்போதும் அழகாக‌ இருந்தாள்.

கல்யாணம் முடியும் வரை அவர்களை ஸ்பெஷலாக கவனித்துக் கொண்டான். மொபைல் நம்பர் பரிமாற்றங்கள் நடந்தன. மதிய உணவு சாப்பிடுவதற்காக மூவரும் வினோத்துக்காக வெயிட் பண்ணியது, அவனை பறக்க செய்தது. கீர்த்திக்கும், தன் மேல் சாஃப்ட் கார்னர் இருப்பதாக இமயமலை அளவு நம்பினான். கீர்த்தியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது மண்டபத்தில் இருப்பவர்கள் அனைவரும் இவனை பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருப்பதாக எண்ணி கர்வப்பட்டான்.

கல்யாணம், களேபரம் எல்லாம் முடிந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு வினோத், கீர்த்திக்கு கால் பண்ணி, "எங்கேயாவது மீட் பண்ணலாமா?" என்றான். அவள், "இப்போ முடியாது, வீக் எண்ட் பார்க்கலாம்" என்றாள்.

சரியாக சனிக்கிழமை காலை 9 மணிக்கு, திரும்ப கால் பண்ணி, அதே கேள்வியைக் கேட்டான் வினோத். அவள், "ஒகே. 11'o clock Spencer plaza வந்திடு" என்றாள். பலநாள் மனதில் தேக்கி வைத்து இருந்ததை எப்படியாவது இவளிடம் சொல்லிவிட வேண்டும் என்ற முடிவுடன் அங்கே போனான். அங்கே இருந்த ரெஸ்டாரென்டில் அவள் ஃப்ரெண்ட்ஸ் 5 பேருடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். இவனும் ஜாயின் பண்ணிக் கொண்டான். பஃபேயில் அவள் டிஷ் எடுக்க செல்லும்போது கடைசியாக அதை சொல்லியே விட்டான். அவள் இந்த மாதிரி ரியாக்ட் பண்ணுவாள் என்று அவன் நினைத்து பார்த்தது கூட இல்லை.

அவள் ஒரு பெரும் சிரிப்பு சத்தம்போட்டு சிரித்து, அவள் நண்பர்களுடன் சேர்ந்து வினோத்தை எள்ளி நகையாடினாள். "எதை வச்சி நீ இப்படி எல்லாம் பேசுற? என்ன நான் அழகா இருக்கேனா? உன்ன போனாபோகுதுன்னு லஞ்சுக்கு இன்வைட் பண்ணா இப்படி காமெடியெல்லாம் பண்ற?" என்று கீர்த்தி, பாய்ஃப்ரெண்டின் மடியில் உட்கார்ந்துகொண்டே சொன்னாள். கீர்த்தி காதலை ஏற்றுக் கொள்ளாததை விட அவள் இப்படி அசிங்கப்படுத்தியது அவனை மிகவும் வெட்கப்பட வைத்தது. அந்த இடத்தை விட்டு உடனே வெளியேறிவிட்டான்.

ஒரு பெண்ணால், ஒரு கூட்டத்தின்முன் ஏற்பட்ட இந்த அவமானத்தை அவனால் அவ்வளவு எளிதில் மறக்க முடியவில்லை. அது சம்பந்தமேயில்லாமல், அவன் காலேஜில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தியது. ஒரு ஜூனியர் பெண், இவனிடம் கேண்டீனில் வைத்து ப்ரோப்பஸ் பண்ணியபோது, வினோத் அவளை எல்லார் முன்னிலையிலும் வைத்து திட்டிய சம்பவம். அப்போது அவன் சொன்னது, "உன் மூஞ்சிக்கு என் மேல ஆசையா? உன்ன மாதிரி ஆளுங்க யார்கிட்டயும் ப்ரோப்பஸ் பண்ணாதீங்க.. எவனாவது தெரியாத்தனமா உன்கிட்ட "ஐ லவ் யூ" சொன்னா உடனே ஒத்துக்கோ. அவனை மாதிரி வேற எவனும் மாட்ட மாட்டான். இனிமே உன்ன எங்கேயாவது பார்த்தேன்... அப்படியே திரும்பி பாக்காம ஓடிப் போயிடு" என்றான் கடுப்பாக. அவள் இதனால் டிஸ்கன்டினியூ ஆனபோதும் நண்பர்களுடன் கூடி சிரித்தான்.

இப்போது அவனால் காதல் நிராகரிப்பின் வலியை புரிந்து கொள்ள முடிந்தது. மிகவும் வருந்தினான். யாராவது என்ன ஏது என்று கேட்டால் அழுதுவிடும் மனநிலையில் இருந்தான். இரவு 12 மணி வரை அவனுக்கு தூக்கம் வரவில்லை. ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்த‌ செல்ஃபோனை ஆன் பண்ணினான். வரிசையாய் 4 SMS. மூன்று மார்க்கெட்டிங் SMS Aircelலிடம் இருந்து. நாலாவது "I Love you, Vinoth. Can i call you?" வித்யாவிடம் இருந்து 10.45PMக்கு வந்து இருந்தது.

மலர்ச்சியுடன், வித்யாவுக்கு கால் பண்ணினான் வினோத்.

***********************

ஒபாமாவை வைத்து ஃபேர் & லவ்லி கொடுத்து இருக்கிற ad பார்த்து இருக்கீங்களா? அநியாயம். கீழே.

நச்சுனு நாலு ஃபோட்டோ!

முன்குறிப்பு: ஃபோட்டோ மேல க்ளிக் பண்ணா பெரிசா தெரியும்!

680 கி.மீ தொலைவில் வானத்தில் இருந்து எடுக்கப்பட்ட அமெரிக்க மாளிகை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களின் சாட்டிலைட் வியூ!

29-DECEMBER-2008


20-JANUARY-2009

அது என்ன இரண்டாவது படத்தில் தேன்கூட்டில் இருக்கும் தேனீக்கள் மாதிரி இருக்குன்னு பாக்குறீங்களா? அன்னைக்கு தான் அமெரிக்காவின் 44 ஆவது அதிபராக பாரக் ஒபாமா 10 லட்சம் மக்களுக்கு முன் பதவியேற்றார். நன்றி BBC

*********
படம் சொல்லும் கருத்து என்னான்னு, நான் சொன்னா தமிழ்மணம் என் பதிவ நீக்கிடும். அதனால பீட்டர் சொல்வான்: Wake up to the threat of AIDS: Stick to One Partner!
லாஸ்ட்ல இருக்குறது பாடை!********
கீழே இருக்கிற ஃபோட்டோல இருக்கிறது யாருன்னு தெரியுமா?

க்ளூ:

  1. தமிழ்சினிமாவோட சம்பந்தப்பட்ட ஆளு தான், பெரிய பிரபலம்!
  2. இவங்க ஹீரோயின் இல்லை. ஆனா சீக்கிரம் ஆயிடுவாங்க‌!
  3. இவங்க பாட்டு பாடுவாங்களான்னு கேட்டா, எனக்கு தெரியாது. ஒருவேளை இருக்கலாம்!


குறிப்பு: இவங்க பேர முதுகுல டாட்டூ குத்தியிருந்தாங்க. நான் தான் டச்சப்(பெயிண்ட்ல பாஸ்!) பண்ணி தெரியாம பண்ணிட்டேன்.

பதிவர் சந்திப்பு, SLUMDOG MILLIONAIRE பிடித்த காட்சிகள்


கடைசியில் நானும் SLUMDOG MILLIONAIRE பார்த்துவிட்டேன். கதையை அனைவரும் கொத்துபரோட்டா போட்டு விட்டதால், இப்பதிவில் எனக்கு பிடித்த காட்சிகள் மட்டும். ஏர்போர்ட் ரன்வேயில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்களை போலீஸ்காரர்கள் துரத்தும் அந்த காட்சியிலேயே படத்தின் எதிர்பார்ப்பைக் கூட்டிவிட்டார்கள். அப்போது வரும் பாடலின் பீட்ஸ் மற்றும் ஏ.ஆர். ரகுமான் வாய்ஸ், சத்யம் தியேட்டரின் சவுண்ட் சிஸ்டத்துடன் கேட்கும்போது அட்டகாசம். அமிதாப் பச்சனை பார்க்க அந்த சிறுவன் எடுக்கும் முயற்சிகளைப் பார்த்து பின் சீட்டில் இருந்த ஜீன்ஸ் போட்ட பாட்டி "உவ்வே" என்று வாமிட் எடுப்பதுபோல் செய்து கண்களை கையால் மூடிக் கொண்டார்.

ஹோட்டல் தண்ணீரை, வாட்டர்கேனில் ஊற்றி அதை கம் போட்டு ஒட்டி புது AQUAFINA பாட்டிலாக மாற்றுவது என போகிற போக்கில் பல உண்மைகளை பொளீர் என்று அறைகிறார்கள். அடுத்த தடவை AQUAFINA வாட்டர் பாட்டில் வாங்கும்போது கொஞ்சம் யோசிக்கணும். சேரியில் வாழும் சிறுவர்கள் கைக்கு துப்பாக்கி, ஒருவனை சுட்டுத் தள்ளும் சூழல் என அவர்கள் ரவுடிகளாக மாறும் transition ஐ துல்லியமாக பதிந்து இருக்கிறார்கள்.

தாஜ்மகாலில் கைடாக இருக்கும்போது, டூரிஸ்ட் கேட்கும் கேள்விக்கு அள்ளி விடுவதும், அதை அவர்கள் மறுத்து டவுட் கேட்கும்போது, "அது எல்லாம் பொய். பொழுதுபோகாமல் வீட்டில் இருக்கும் சோம்பேறிகள் எழுதியது" என்று சொல்லும்போது க்ரேட் அப்ளாஸ். ட்ரெயினில் சப்பாத்தி திருடுவது, சிறுவயது லதிகா முன்னால் பாடிக் கொண்டே டான்ஸ் ஆடுவது, சலீம் டவுசரில் மிளகாயை போட்டு ரசிக்கும் காட்சி, அந்த கும்பல் முன்னால், "நான் ஒரு புரோஃபஷனல், 50 ரூபா கொடு" என கேட்கும் இடம் என எனக்கு பிடித்த காட்சிகள் லிஸ்ட் கொஞ்சம் நீளம்.

இறுதியில் 2 கோடிக்கான, "What is the name of third Musketeer?" என்ற கேள்விக்கு, நிஜ வாழ்க்கையில் ஜமால் தேடிக் கொண்டிருக்கும் "third Musketeer"ஆன லதிகாவே போனில் பேசுவது கவிதையான காட்சி. கடைசியில் ரெயில்வே ஸ்டேஷனில் பாட்டுடன், எண்ட் கார்டு முடியும் வரையிலும் யாரும் எழுந்திருக்கவே இல்லை. ஏ.ஆர்.ரகுமான் பெயர் போடும்போது சரியான கைதட்டல்.

***********************

ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் 6 மணிக்கு ஒரு வழியாக கிழக்கு பதிப்பகத்தை தேடிக் கண்டுபிடித்து பதிவர் சந்திப்புக்கு சென்று விட்டேன். கீழேயே அதிஷா, கேபிள் சங்கர், விஜய் ஆனந்த் இருந்தனர். அதிஷா, ஒரு தம் கொடுத்து வரவேற்றார். அதிஷா, ரொம்ப ஃப்ரெண்ட்லியாக பழகினார். நடுநடுவில் என் பதிவை தொடர்ந்து படிப்பதாக சொல்லி காமெடி பண்ணிக் கொண்டு இருந்தார். சினிமாவில் நடித்தவர், டிஸ்டிரிப்யூட்டராக இருந்தவர் என பலமுகங்கள் இருந்தாலும் கேபிள் சங்கர் மிகவும் அடக்கமாக, என்னை மாதிரி புதிதாய் வந்தவனிடமும் நன்றாக பேசினார்.

மேலே போனால் எல்லாரும் ரொம்ப சீரியஸாக நாடகம், சுனாமி, சங்கமம், இசைக் கச்சேரி, புத்தகக் கண்காட்சி நோக்கியா‍-சைனா மொபைல் என பேசிக் கொண்டு இருந்தனர். எல்லாத்தையும், அமைதியாக‌ கேட்டுக் கொண்டு இருந்தேன். இஸ்ரேல் பாலஸ்தீனம் பற்றி பேசிக் கொண்டு இருக்கும்போது, பாதி பேர் வெளியே போய்விட்டனர். யாரோ வெளியில் வந்துவிட்டார்; அவரை வரவேற்க தான் எல்லாரும் சென்று இருக்கிறார்கள் என்ற‌ என் நினைப்புக்கு இடி விழுந்தது. அந்த இஸ்ரேல் பேச்சின் சூடு தாங்காமல் தான் எல்லாரும் சென்று விட்டார்கள் என்பது பின்னர் தான் தெரிய வந்தது. ஏம்ப்பா, இந்த மாதிரி ஏதாவது ஒண்ணுன்னா எனக்கு சிக்னல் கொடுக்க மாட்டீங்களா?? புதுசா வந்தவன இப்படி நடுவுல மாட்டிவிட்டு போயிட்டீங்களே? அப்படியே எஸ்ஸாகிவிடலாம் என்று நினைத்த என்னை டீக்கடைக்கு கூப்பிட்ட முரளிகண்ணன் அவர்களுக்கு நன்றி.

பிரபல பதிவர்களான முரளிகண்ணன், நர்சிம், வெண்பூ, கேபிள் சங்கர், டோண்டு சார், பத்ரி சார், லக்கிலுக், அதிஷா, கோவி கண்ணன் என பலரை சந்தித்தில் மிகுந்த சந்தோஷம். நர்சிம், பாதியிலே போய்விட்டதால் அவரிடம் பேச முடியாதது வருத்தமே. லக்கிலுக்கிடம் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேச வாய்ப்பு கிடைத்ததது மகிழ்ச்சி. வெண்பூ ரொம்ப ஃப்ரெண்ட்லியாக பழகினார்.

கடைசியில் அந்த தேநீர் சந்திப்பு மட்டும் இல்லையென்றால் நான் பதிவர் சந்திப்பு என்றால் டெர்ரர் என்று ஃபீல் பண்ண வேண்டி இருந்திருக்கும். மொத்தத்தில் இந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டது, நல்ல அனுபவம்.

*******************

ஏ.ஆர்.ரகுமான், ச.ந.கண்ணன், சத்யம்‍ - ஒரு கரடி


ஏ.ஆர்.ரகுமானுக்கு கோல்டன் குளோப் விருது கிடைக்க வேண்டும் என்று அவர் பர்த்டே அன்று ஒரு பதிவு போட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தேன். அதே போல் இன்னும் சரியாக ஒரே ஒரு மாதம். பிப்ரவரி 22 ஆம் தேதி தெரிந்துவிடும். தமிழ்நாட்டில் இருந்து, இல்லை இந்தியாவில் இருந்து, இதுவும் இல்லை ஆசியாவில் இருந்து முதன்முதலில் ஆஸ்கார் விருது வாங்கிய மனிதர் ஏ.ஆர்.ரகுமான் என்று உலகமே அதிரப் போகிறது. இது கண்டிப்பாக நடக்கும். He is fully deserved for OSCAR. ஒரு தமிழனாக நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.

நம் தமிழ் சினிமாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு தகுதியானவர்கள் இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒருவர் இசை ஞானி இளையராஜா, மற்றவர் கமலஹாசன். இளையராஜாவுக்கு 1986 ஆம் வருடமே மௌனராகம் படத்தின் BGM மற்றும் பாடல்களுக்கு கிடைத்து இருக்கவேண்டும். ம்ம்ம். பெருமூச்சு மட்டும் இப்போது. மகாநதி, அன்பேசிவம் படங்களுக்கு கமலஹாசனுக்கு கிடைத்து இருக்க வேண்டும். கமலஹாசனின் "மருதநாயகம்" முயற்சிக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இந்தியாவில் இன்று தான் ரிலீஸ் ஆகிறது SLUMDOG MILLIONAIRE படம். ஆனால் தமிழ் இணையத்தில் மூன்று வாரத்திற்கு முன்பாக இருந்து இந்த படத்தின் விமர்சனங்கள் பட்டையைக் கெளப்பின. தமிழ் பதிவுலகை ரெகுலராக வாசிக்கும் யாருக்கும் இந்த படத்தின் கதை தெரியாமல் இருக்காது. இருந்தாலும் ஏ.ஆர்.ரகுமானுக்கு பெருமை சேர்த்த படம் என்ற ஒரே காரணத்திற்காக இரண்டு நாட்களுக்கு முன்பே இன்று இரவு சத்யம் தியேட்டரில் 7.15 மணி காட்சிக்கு டிக்கெட் புக் பண்ணி விட்டேன். காலையில் பேப்பரைப் பார்த்தால் ஆஸ்கார் நாமினேஷன்ஸ். கலக்குறாங்க SLUMDOG MILLIONAIRE TEAM.

***************

டாக்டர் சானியா மிர்சா ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸில் இரண்டாவது சுற்றிலும், இரட்டையர் பிரிவில் முதல் சுற்றிலும் தோற்றுவிட்டு இந்தியாவுக்கு திரும்புகிறார். இதைப் பார்க்கும்போது ச.ந.கண்ணனின் இந்த பதிவு தான் நினைவுக்கு வருகிறது. அவர் சொன்ன பஞ்ச், "சானியா இன்னொரு மோசமான உதாரணம். அவர் இன்றுவரை அவர் திறமைக்காக அதிகம் தடவை பேசப்படவில்லை. விளைவு, கடந்த இரண்டு வருடங்களாக சிறு முன்னேற்றமும் அடையாமல் மீண்டும் மீண்டும் சர்ச்சைகளுக்காகப் பேசப்படும் வீராங்கனையாக மாறிவிட்டார். "

அதே பதிவில் அவர் சூப்பர் சிங்கரில் இருந்து ராகினிஸ்ரீயை துரத்திவிட்டதைப் பற்றி சுவையாக அலசியிருப்பார். நான் ரெகுலராக வாசிக்கும் பதிவர்களில் அவரும் ஒருவர்.

****************

சத்யம், புரியாத பூதம். நாளுக்கு நாள் ஒரு கரடி சி.பி.ஐ விசாரணையில் இருந்து வெளிவருகிறது. இல்லாத ப்ராஃபிட்டை இருக்கிறதாக காட்டி ஷேர் மார்க்கெட்டை ஒரு வழி பண்ணினார். இப்போது இல்லாத 13,000 ஊழியர்களுக்கு மாதம் மாதம் சம்பளமாக 10 கோடியை ஏப்பம் விட்ட மோசடி உண்மையில் அதிர்ச்சி அளிக்கிறது. மொத்தமாகவே 40,000 பேர் தான் சத்யமில் வேலை பார்க்கிறார்களாம். எதற்கும் ஒரு முறை L&T சத்யமை வாங்குவதற்கு முன் நன்றாக யோசிப்பது நல்லது.

இந்த காமெடிகளுக்கு நடுவே வந்த ஒரு ஃபார்வர்ட் இமெயில், கொடுமையின் உச்சகட்டம். அதன் சுருக்கம், "நம் நாட்டின் பிரதமர், தன் பதவியை ராஜிநாமா பண்ணிவிட்டால், இந்திய மக்கள் அனைவரும் அநாதையாகிவிடுவார்களா? யாருக்கும் வேலை இருக்காதா? நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விடுமா?" இதே மாதிரி பேசிக்கொண்டே போய் கடைசியில், "அதே போல், தற்போது சத்யமில் நடப்பது மேனேஜ்மென்ட் ப்ராபளம். அப்படியே அது பெரிய பிரச்சினை என்றாலும் ஒருவரால் 53,000 ஊழியர்களுடன் கூடிய சத்யமை உருவாக்க முடிந்தால், ஏன் 53,00 ஊழியர்களால் அதே டேமாஜான சத்யமை திரும்ப உருவாக்க முடியாது?". பாஸ், அந்த 53,000 கவுண்ட்டே இன்னிக்கு தப்பு, 40,000 மட்டுமே என்று தெரிந்தவர்கள் யாராவது அவருக்கு சொல்ல வேண்டும்.

***************

நான் கடவுள் - சென்சார்போர்டு, இளையராஜா விமர்சனம்


சென்சார்போர்டு

படத்தை பார்த்து பிரமித்து போயிருக்கும் சென்சார் போர்டு உறுப்பினர் ஒருவரிடம் பேசினோம். "எங்க ஆர் ஓ வுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்" என்ற அச்சத்தோடு பேச ஆரம்பித்தார் அவர். "நாங்க எல்லாருமே இந்த படத்தை பார்க்க ரொம்ப ஆர்வமாக இருந்தோம். இத்தனை நாட்கள் ஆன பிறகும், படம் பார்த்த பிரமிப்பு எங்களை விட்டு போகவே இல்லை. சண்டைக்காட்சிகள் மிகவும் அச்சமூட்டும் படியாக இருந்ததால் யு/ஏ சர்டிபிகேட் கொடுத்தோம். மற்றபடி எந்த காட்சிகளையும் வெட்டும்படி நிர்பந்திக்கவில்லை" என்றவர், படத்தின் கதையையும் சுருக்கமாக சொல்லி முடித்தார்.

"காஞ்சிபுரம் அருகில் குடியிருக்கும் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. இந்த குழந்தை உங்களிடம் வளர்ந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று ஜோதிடர் சொல்ல, குழந்தையை காசியில் விட்டு விட்டு வருகிறார்கள். அவன் அங்குள்ள சாமியார்களிடம் வளர ஆரம்பிக்கிறான். பாஷையிலிருந்து அனைத்து பழக்க வழக்கங்களையும் சாமியார்களிடம் கற்றுக் கொள்கிறான் சிறுவன். அவனை வாலிப வயதில் மீண்டும் சந்திக்கிறார் அவனது அப்பா. பிள்ளை இப்படி இருக்கிறானே என்ற அதிர்ச்சியில் மறுபடியும் சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். இங்கு வருபவன், குழந்தைகளை கடத்தி முடமாக்கி பிச்சையெடுக்க வைக்கிற வில்லன்களுக்கு தானே கடவுளாகி தண்டனை கொடுக்கிறான். இதில் பூஜாவும் குழந்தை பருவத்தில் கடத்தி வரப்பட்டு வில்லன்களால் கண்கள் குருடாக்கப்பட்ட பெண். அவளையும் அந்த கூட்டத்திலிருந்து மீட்கிறான் என்று முடிகிறது கதை. இதில் வருகிற க்ளைமாக்சை நான் சொல்வது தர்மமில்லை" என்று முடித்துக் கொண்டார் அந்த சென்சார் போர்டு உறுப்பினர்.

இளையராஜா

இளையராஜாவின் இசைக்கூடம். திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது நான் கடவுள். படத்தை ராஜா பார்க்க, ராஜாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார் பாலா. டென்ஷன்...டென்ஷன்... ஒவ்வொரு விரல் நகமாக கடித்துத் துப்பிக் கொண்டிருக்கிறார் பாலா! படம் முடிந்ததும் விருட்டென்று எழுந்து தனது அறைக்குள் போய்விடுகிறார் இசைஞானி. அவ்வளவுதான், பல மணி நேரங்கள் யாரையுமே அவர் சந்திக்கவில்லை பாலா உட்பட!

மீண்டும் இசைஞானியை சந்திக்கிற வரை ஒரு பதற்றம் இருந்ததே பாலாவிடம், அதே பதற்றத்தை ரிலீஸ் நேரத்திலும் இவருக்கு கொடுக்க திட்டமிட்டிருக்கின்றன சில இந்துத்வா அமைப்புகள்.

இளையராஜா பாலாவிடம் என்னதான் சொன்னார்? ஒரு முழு நாள் அமைதிக்கு பிறகு அவர் சொன்னது இதுதான். "என்னாலே பேசவே முடியலே. இந்த படத்தை உலகமே கொண்டாட போவுது பாரு...!"

இந்துத்வா அமைப்புகள் நான் கடவுள் படத்துக்கு கொடுக்கும் தலைவலியையும், முழுக்கட்டுரையும் படிக்க கிறுக்குப்பையன்நான் தளத்திற்கு செல்லவும்.

**********

சர்வர் டூ மைனர், ஒபாமா, டெண்டுல்கர்

ஊரில் இருந்த பத்து நாட்களில், என்னுடன் புளூ டவுசர், வெள்ளை சட்டையுடன் 10ஆவது வரை பள்ளியில் படித்த மூன்று நண்பர்களை சந்தித்தேன். ஒவ்வொன்றும் வித்தியாசமான அனுபவம். முதல் அனுபவம் மட்டும் இங்கே.

திருமங்கலத்தில் ஒரு ஹோட்டலில் என்னுடன் படித்தவன் சர்வராக வேலை பார்க்கிறான். அவனை எப்போதாவது பார்ப்பேன். பெரும்பாலும் என்னை பார்ப்பதை அவன் தவிர்த்து விடுவான். அவனிடம் கடைசியாக பேசிய போது "பன்னிரெண்டாவது பப்ளிக் எக்ஸாமில் ஃபெயிலாகி விட்டேன். அதனால் வீட்டில் ரொம்ப திட்டி, மேலும் படிக்க விடாமல் வேலைக்கு அனுப்பி விட்டார்கள்" என்று சொன்னான். அவனை பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டது. என்னதான் ஹோட்டலில் வேலை பார்த்தாலும் ஆள் குச்சியாக கொஞ்சமும் சதை போடாமல் இருப்பான்.

அந்த சமயத்தில் தான் திருமங்கலத்தில் இடைத்தேர்தல் நடந்து முடிந்து இருந்தது. இந்த சமயம் ஊருக்கு போன போது அவன் டி.வி.எஸ் 50யில் வலம் வந்து கொண்டிருந்தான். வெள்ளை வேட்டி, சட்டை, கழுத்தில் செயின் என ஒரு கெட்டப்பில் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தான். நான் மதுரைக்கு செல்ல பஸ் ஸ்டாண்ட் வந்து வெயிட் பண்ணிக் கொண்டிருந்தேன். நானே அவனைக் கவனிக்கவில்லை. அவன் என்னைக் கவனித்து நேராக வந்து, "டே, கணேஷ், எப்படி இருக்க? எப்ப வந்த? பொங்கலுக்கு வந்தீயா? எத்தன நாள் இருப்ப?" என என்னைப் பேச விடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.

அவன் கெட்டப்பைப் பார்த்து ஒரு நிமிஷம் ஆடிப்போய், "நான் நல்லா இருக்கேன். நீ கலக்குறீயே? என்ன மேட்டர்? வீட்டுல எதுவும் கல்யாணம் பண்ணி வச்சீட்டாங்களா?" என்று கேட்டேன். அதற்கு அவன், "அதெல்லாம் ஒண்ணும் இல்லடா. இன்னும் பெர்மனென்ட்டா ஒரு வேலையும் செட்டாகல. அப்புறம் என்னத்த கல்யாணம் பண்றது?" என்று மறுபடியும் ஃபீல் பண்ணி பேச ஆரம்பித்தான்.

"சரி, சரி. அப்புறம் எப்படி மைனர் மாதிரி ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருக்க?" என்று கேட்டேன். அவன், "ஓ! இதுவா, நான் பாட்டுக்க சிவனேன்னு வேலை பாத்துக்கிட்டு இருந்தேன். ஒருநாள் சாயங்காலம் கட்சிக்காரங்க வந்து, "எங்க கூட வந்து தேர்தல் வேலை பாக்குறியா, ஒரு நாளைக்கி 5 ஆயிரம் ரூபா தர்றோம்" அப்படின்னாங்க. நான் இது வேலைக்கு ஆகாது. எனக்கு ஒண்ணும் பேசத் தெரியாதுன்னு சொல்லியும் பாத்தேன். அவங்க விடல. அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை. பூத் ஸ்லிப் எழுதணும், அத ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுக்கணும். அப்புறம் ஓட்டு கேட்க போகும் போது கூட வந்து நோட்டீஸ் கொடுக்கணும்ன்னு சொன்னாங்க. நானும் சரின்னு சொல்லிட்டேன். அப்ப இருந்து இப்படி தான் இந்த ட்ரெஸ்ல தான் சுத்தணும்னு சொல்லி அதையும் வாங்கிக் கொடுத்துட்டாங்க" என்று சர்வர் டூ மைனர் கதையை சொன்னான்.

"கலக்குற போ, அப்போ அந்த ஹோட்டல் வேலை என்ன ஆச்சி" என்று கேட்டேன். "இந்த எலெக்சன் முடிஞ்சு எல்லாம் ஓய்ஞ்ச‌ பிறகு, கடைக்காரன் கால்ல விழுந்து சேத்துக்க சொல்லணும்" என்றான். "ஓ.கே.டா. அப்புறம் வேற என்ன கவனிச்சாங்க" என்று நானும் விடாமல் தூண்டில் போட்டேன். "தெனமும் பிரியாணியும், நைட்டு சரக்கும் வாங்கித் தர்றாங்க. வீட்டுக்கு பணம் கொடுக்க போகும்போது, ஒரு கட்டு எடுத்து நான் சுருட்டுனாலும் ஒருத்தன் கூட கண்டுக்க மாட்டேங்குறான். எலெக்சன் முடியுற வரைக்கும் நல்லா வாழ்ந்துக்க வேண்டியது தான்" என்று கண்கள் விரிய அவன் சாகசக் கதையை சொன்னான்.

அந்த நேரத்தில் நான் செல்ல வேண்டிய பஸ் வந்ததால், நான் கெளம்பி விட்டேன். பஸ்ஸில் போகும்போது யோசித்துக் கொண்டே சென்றேன், "இவ்வளவு இன்வெஸ்ட் பண்ணி ஜெயிக்கணும்னு நெனைக்கிறவன், நாளைக்கி ஜெயிச்ச பிறகு, மக்களுக்கு நலத்திட்ட உதவி செய்வானா? இல்லை இன்வெஸ்ட் பண்ண காச வட்டியும் முதலுமாக சுருட்டுவானா?".

எந்த தேர்தலிலும் ஓட்டு போடாமல் சைலண்ட்டாக நடப்பதை மட்டும் பார்க்கும் மேல்தட்டு கூட்டம் கூட, "வாங்குன காசுக்கு இதை பண்ணிடுவோம்" என்று மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் ஓட்டு போட வந்தது ஆச்சர்யமாகத் தான் இருந்தது. எது எப்படியோ திருமங்கலத்து மக்களுக்கு மட்டும் இந்த பொங்கல் அட்டகாசமான பொங்கல்.

************

நேற்று இரவு 12 மணி வரை CNN தொலைக்காட்சியில் ஒபாமா பதவியேற்கும் நிகழ்ச்சியை லைவ்வாக பார்த்தேன். அட்டகாசமாக இருந்தது. பதவியேற்கும் போது சீஃப் ஜஸ்டிஸ் சொன்னதை திரும்ப சொல்ல முடியாமல் ஆரம்பத்தில் தடுமாற்றம், முடித்தவுடன் அந்த சீஃப், "Thank you President" என்று சொன்னபோது வெள்ளை மாளிகையே கரவொலியில் குலுங்கியது. புஷ் ஹெலிகாப்டரில் கெளம்பிபோகும் போது அவரை பார்க்க பாவமாக இருந்தது.

இதெல்லாம் முடிந்த பிறகு அவர் பேச்சில் பட்டாசு பறந்தது. அவர் பேச்சின் ஒரு பகுதி, "To those who cling to power through corruption and deceit and the silencing of dissent, know that you are on the wrong side of history" இது நம்மூர் அரசியல்வாதிகளுக்கு பொருந்தும். இதற்கும் மேலே உள்ள‌ திருமங்கலம் மேட்டருக்கும் சம்பந்தம் இல்லை.

"We will begin to responsibly leave Iraq to its people, and forge a hard-earned peace in Afghanistan" இந்த பேச்சில் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறார்.

"for those who seek to advance their aims by inducing terror and slaughtering innocents, we say to you now that our spirit is stronger and cannot be broken; you cannot outlast us, and we will defeat you." இதை சொல்லி முடிக்கும்போது 20 லட்சம் மக்களும் ஆக்ரோஷமாக கைதட்டினார்கள்.

இந்த பேச்சையெல்லாம் வைத்து பார்க்கும்போது அவர் புஷ்ஷில் இருந்து மிகவும் வேறுபட்டு தெரிகிறார். அவருடைய ஆட்சியை பொறுத்திருந்து பார்க்கலாம். அவர் மற்ற அமெரிக்க அதிபர்களை விட தோல் நிறத்தில் மட்டும் வித்தியாசமனவரா இல்லை செயலிலுமா என்று.

***********

டெண்டுல்கரைப் பற்றி உயர்வாக ஷேவாக் மிகவும் அடக்கமாக சொல்லியிருப்பது பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டுக்காக வாழ்வில் 20 வருடங்களை ஒதுக்கி, இன்னும் தொடர்ந்தும் ஆடிக் கொண்டிருப்பவரை ஐ.சி.சி எப்படி லிஸ்டில் விட்டது என்று புரியவே இல்லை.

டெண்டுல்கரைப் பற்றி கிரவுண்டில் அக்தரிடம் சொன்னது பற்றி ஷேவாக் சொன்னது, simply awesome!

(டெண்டுல்கர் Non-Striker endல் இருக்கிறார்.ஷேவாக்கிடம் பேட்டிங் பண்ணும்போது)
அக்தர்: உனக்கு தைரியம் இருந்தால் இந்த பௌன்ஸரை அடித்துப் பாரு! உன்னால் ‍THIRD MAN சைடில் மட்டும் தான் அடிக்க முடியும்

ஷேவாக்: உன்னால் முடிந்தால் இதை Non-striker endல் இருக்கும் ஆளிடம் சொல்லி பார்!

என்றாராம். ஹாஹா!! ஹாஹா!! தொடர்புடைய லிங்க்.

**************

பழனிமலை முருகனுக்கு அரோகரா!


4 நண்பர்களுடன் சேர்ந்து பழனி முருகனை சனிக்கிழமை தரிசிக்க சென்றோம். நான் செல்வது இப்போது தான் முதல் முறை. கோவில் போகும் ரோட்டில் ஏராளமான குதிரை வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. சினிமாவிலும், நான் நேரிலும் பார்த்த‌ குதிரைகளை விட வித்தியாசமாக இருந்தன அந்த வண்டியில் ஓடும் குதிரைகள். இன்னொரு நண்பன், "இதெல்லாம் குதிரை இல்லடா, கோவேறு கழுதை" என்று எக்ஸ்ட்ரா பிட் போட்டான். "ஏய்" என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் சரத்குமார் போலீஸிடம் அடி வாங்கிய இடத்தை பார்த்துவிட்டு சென்றோம்.

கோவிலுக்கு அருகே சன்னதி வீதியில் பக்தர்கள் கூட்டத்திற்கு சம்மாக மஞ்சள் பை, சூடம், டாலர், கயிறு விற்கும் வியாபாரிகள். நல்லவேளை, மெரினா பீச்சில் மிரட்டுவது போல வாங்கிட்டு தான் போகணும் என்று அவர்கள் மிரட்டவில்லை. "டே, வாங்கடா.. ரோப் காரில் போகலாம்" என்று நண்பர்களை நச்சரித்தேன். அதற்கு என்னுடன் மாலை போட்டு வந்த நண்பன் கோபமாக, "நோகாம சாமி கும்பிடுடுறதுக்கா வந்துருக்கோம். ஒழுங்கா படியில ஏறி போவோம். அப்பத் தான் முருகன்கிட்ட வேண்டுறது நடக்கும்" என்று பொருமினான்.

நடந்து மலை உச்சியை அடைவதற்குள் நான் மயக்கம் அடையாத குறை தான். கண்ணைக் கட்டிக் கொண்டு, இதயம் நிமிஷத்துக்கு 150 முறை டபடபவென்று அடித்தது. கொஞ்ச நேரம் உட்கார்ந்து தண்ணீர் குடித்தபின் தான் ரிலாக்ஸ் ஆனேன். அந்த மாலை வேளையில் மலை உச்சியில் இருந்து பழனியையும், சரவணப்பொய்கையும் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.

ஸ்பெஷல் தரிசன வழிக்கான கட்டணம் 100 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக மாற்றிவிட்டார்கள் என்று மாலை போட்ட சாமி நண்பன் புலம்பிக் கொண்டு இருந்தான். விலைவாசி ஏற்றத்தின் சூடு பழனி மலை முருகனையும் விடவில்லை போல என நினைத்துக் கொண்டோம். பொது தரிசனம், அதாவது ஸ்பெஷல் கட்டணம் எதுவும் இல்லாத வழியில் 1500 பேர் நீ...ளமான கியூவில் நின்று கொண்டிருந்தனர். அது பாதாள வழியெல்லாம் செல்லும். அதைத் தாண்டி போனால் தான் முருகனை பார்க்க வேண்டும். அங்கே எவ்வளவு பேர் இருப்பார்களோ என்று தெரியாததால் வேறு வழியில்லாமல் 25 ரூபாய்க்கான ஸ்பெஷல் வரிசையில் 250ஆவது நாளாக நின்று கொண்டோம். இரண்டு மணி நேர காத்திருப்புக்குப் பின் முருகனை தரிசித்தோம்.

கிளம்பும்போதே வீட்டில் "ஆண்டி வேஷத்துல இருந்தார்னா வெயிட் பண்ணி இருந்து ராஜா வேஷத்துல தரிசனம் பாத்துட்டு வா. ஏற்கெனவே உங்க கம்பெனியிலே ஆட்குறைப்பு நடந்துக்கிட்டு இருக்குனு சொல்லிக்கிட்டு இருக்க. இதுல வேற எதுவும் ஏடாகூடாமா நடந்துடப் போகுது" என்று என் அம்மா அநியாயத்துக்கு பயமுறுத்தி இருந்ததால் "முருகா, இப்பவே நைட் மணி 7 ஆயிடுச்சி. ராஜா வேஷத்துல இருங்கன்னு" என் அப்ளிகேஷனில் இதையும் சேத்துக்கிட்டேன்.

பொற்கோபுரம் புதிதாக தங்கத்தகட்டில் பதித்து இருந்தார்கள். நல்லபடியா முருகனை ராஜா வேஷத்தில் 5 செகண்ட்(அதற்கு மேல் கழுத்தில் கை வைத்து தள்ளி விட்டனர்) தரிசித்துவிட்டு, தங்கத்தேர் உலாவையும் பார்த்துவிட்டு கீழே இறங்க மணி 8 ஆனது. மலையில் இருந்து இறங்கினால் ஒரு கி.மீ தூரத்துக்கு பெரிய கியூ. எதுக்குடா என்று பார்த்தால் அது சித்தன‌நாதன் கடையில் பஞ்சாமிர்தம் வாங்க தான் அவ்வளவு பெரிய லைன். இது வேலைக்கு ஆகாது என்று காற்று வாங்கிக் கொண்டு இருந்த கந்தவிலாஸில் பஞ்சாமிர்தம் வாங்கிக் கொண்டு நைட் சாப்பிட கடையைத் தேடிக் கொண்டு இருந்தோம்.

சாதாரண டீக்கடை போர்டு கூட தமிழ், இங்கிலீஷ், மலையாளம் என‌ மூன்று மொழிகளில் கடையின் பேர் சொல்லிக் கொண்டு இருந்தது. இது என்னடா புதுக் கொடுமை என்று சாமி நண்பனிடம் விசாரித்தால், "இங்க தமிழ்நாட்டு பக்தர்கள் கூட்டத்துக்கு ஈக்வெலா சேட்டன்களும் சேச்சிகளும் வருவாங்கடா, அவங்களுக்கெல்லாம் பிடிச்ச சாமி முருகன், அதுவும் பழனி மலை முருகன் தான்" என்றான். "பழனிமலை முருகன் மட்டும் அப்படி என்னடா ஸ்பெஷல்?" என்று மறுபடியும் விடாமல் கேட்டேன்.

"இவனுக்கு எதுவுமே தெரியாது போல" என்று என்னை கேவலமாக பார்த்துக் கொண்டே ஆரம்பித்தான், "டேய் அவங்க ஊர்ல இருக்குற ஐயப்பன், கேரள மக்கள பார்த்து அருள்பாலிக்காம தமிழ்நாட்டைப் பார்த்து இருக்குறதுனால தான் சபரிமலைக்கு நம்ம கூட்டம் அதிகம் போகுது. அதேமாதிரி பழனிமலை முருகன், தமிழ்நாட்டை பார்த்து நிக்காம கேரளாவ பாத்து நிக்குறதுனால, அவங்களுக்கு இந்த சாமி ரொம்ப பிடிக்கும்டா" என்று மினிலெக்சர் கொடுத்த டயர்டில், அடுத்து நான் எதுவும் கேள்வி கேக்ககூடாது என்று என்னிடம் இருந்து விலகி முன்னால் போகும் க்ரூப்புடன் சேர்ந்து கொண்டான். இது உண்மையா? இதற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல், சென்னை சரவணபவன் ஹோட்டலும், அக்கடை அதிபரும் திடீரென என் நினைவுக்கு வந்தனர். ஏன் என்று தெரியவில்லை.

அப்பாவுடன் சபரிமலைக்கு நான் ஃபைனல் இயர் படிக்கும்போதே போய்விட்டேன். இப்போது பழனி மலைக்கும். ஆனால் இதுவரை மாலை போட்டதில்லை. அதற்கு எல்லாம் ஒழுக்கமாக, மனதிலும் உடலிலும் சுத்தமாக இருக்க வேண்டும். அது எனக்கு செட்டாகாததால் இதுவரை மாலை போட்டதில்லை. நல்ல ஹோட்டலில் சப்பாத்தியும், பூரியும் சாப்பிட்டுவிட்டு பத்து மணிக்கு பஸ் ஏறி வீட்டுக்கு நடையைக் கட்டினோம்.

உண்ணாவிரதமும், பஸ் எரிப்பும்

பொங்கல் விடுமுறைக்காக, பத்து நாட்கள் எனது சொந்த ஊரில் சொந்த வீட்டில் கெட்ட ஆட்டம். எழுதுவதற்கு எக்கசக்கமான விஷயங்கள். அதையெல்லாம் எந்த ஆர்டரில் எழுதுவது என்பதில் பெரிய குழப்பம் இருந்தாலும், இந்த அனுபவத்தை கண்டிப்பாக முதலில் எழுதி விட வேண்டும் என் மனம் கிடந்து சலம்புகிறது.

என் நண்பன் ஒருவன் பழனி மலை முருகனுக்கு மாலை போட்டு இருந்தான். அதனால் அவனுடன் சேர்ந்து நானும் மற்ற் நண்பர்களும் வெள்ளிக்கிழமை இரவு அதாவது சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படுவதாக ப்ளான் பண்ணினோம். திடீரென்று ஹோட்டலில் வேலை பார்க்கும் நண்பர்களில் ஒருவர் ஃபோன் பண்ணி, மதுரையில் இப்போது நிலைமை சரியில்லை. டவுன் பஸ் எதுவும் இயக்கப்படவில்லை. அழகர்கோவில் அருகே ஒரு பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது என்று சொன்னார். நாங்கள் எல்லாம் அதிர்ச்சியாகி "ஏன்? என்ன பிரச்சினை" என்று கேட்டோம். அதற்கு அவர், "திருமாவளவனை அரெஸ்ட் பண்ணிட்டாங்க(புரளி தான்). அதனால் தான்" என்று குண்டை தூக்கிப் போட்டார்.

நாங்களும் எல்லா நியூஸ் சேனலையும் எதுவும் ஃப்ளாஷ் நியூஸ் போடுறாங்களா என்று பார்த்தோம். அப்படி ஒன்றும் அறிகுறி எதுவும் காணப்படவில்லை. அதற்குள் எங்கள் வீட்டிலும் நியூஸ் பரவி, யாரும் அர்த்த ராத்திரி கெளம்ப வேணாம். காலையில் சாவ்காசமாக கெளம்புங்கள் என்று அவர்கள் தரப்பில் இருந்தும் பயமுறுத்தினார்கள். சரி, ஆரம்பமே சரியில்லை என்று அந்த ப்ளானை ட்ராப் பண்ணிவிட்டு படுத்து தூங்கிவிட்டோம்.

காலையில் மெதுவாக 11 மணிக்கு கெளம்பினோம். நைட் கெளப்பிவிட்ட செய்திக்கும் துளியும் சம்பந்தம் இல்லாமல் மதுரை வழக்கம்போல இயங்கிக் கொண்டிருந்தது. கோவிலுக்கு போய்விட்டு அங்கிருந்து கிளம்ப இரவு மணி 10 ஆகிவிட்டது. மதுரை ஆரப்பாளையம் வர 1.30 ஆகிவிட்டது. அங்கிருந்து பெரியார் பஸ்நிலையம் வர ஒரு டவுன்பஸ்ஸும் இல்லை. பயணிகள் கூட்டத்தைத் தவிர துப்பாக்கி ஏந்திய போலீஸார் கூட்டம் தான் அதிகமாக இருந்தது. ப்ரைவேட் பஸ் மட்டும் ஒன்றிரண்டு ஓடியது. அதிலும் ரெண்டு போலீஸார் வந்து பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருந்தனர்.

இங்கு நான் சொல்ல விரும்புவது, உண்ணாவிரதம் என்பது உண்மைக்கான‌ அஹிம்சையின் சக்திவாய்ந்த ஆயுதம். அதை திருமாவளவன் மேற்கொண்டது ஒரு உன்னதமான காரணம். இவர் மட்டுமில்லை தமிழர்கள் அனைவரும் கடைப்பிடித்து நம் எதிர்ப்பை வலுவாகக் காட்டவேண்டும். இதற்கு நடுவில் எங்கிருந்து வந்தது இந்த வன்முறையும், கல்வீச்சும், பஸ் எரிப்பும். அதற்கு என் நண்பன் சொன்ன காரணம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதாவது, "அவர் மேற்கொண்ட விரதத்தை இரண்டு நாட்களாகியும் தமிழர்கள், அரசியல்வாதிகள், மீடியா என எதுவும் துளி கூட சீண்டவில்லை. அதனால் தேவையில்லாத ஒரு பரபரப்பை ஏற்படுத்தி கவனத்தை பெற வேண்டும்" என்பதே. இதை உண்மை என்று ஏற்றுக்கொள்ள என் மனம் இடம் கொடுக்கவில்லை. ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த செயல் அரசியல்வாதிகள் வெட்கி தலை குனியவேண்டிய செயல்.

ஒருமுறை என் நண்பர்கள் இந்த பஸ் எரிப்பு கலாசாரம் எப்போது ஆரம்பித்தது என்பது பற்றி விவாதித்திக் கொண்டிருந்தனர். ஒருவன் அ.தி.மு.க இன்னொருவன் தி.மு.க. அப்போது அவர்கள், அ.தி.மு.க தலைவியை 2002ல் அரெஸ்ட் பண்ணிய போது பஸ் எரிக்கப்பட்ட சம்பவமே இதற்கு ஆரம்பம் என்றான். அதை எதிர்த்து, அப்படியென்றால் மதுரையில் தினகரன் ஆஃபிஸை எரித்து மூன்று பேரைக் கொன்ற சம்பத்தை செய்வர்கள் மட்டும் யார் என்று கேட்டான். இது இரண்டுக்கும் பொதுவாக ஒருவன், "அவர்கள் அப்போது மூன்று கல்லூரி பெண்களை பஸ்ஸோடு எரித்தான். இப்போது இவர்கள் மூன்று பத்திரிக்கைக்காரர்களை எரித்தார்கள். மூணுக்கு மூணு சரியாப் போச்சு. எந்த அரசியல் கட்சியும் யோக்கியம் இல்லை" என்று சாலமன் பாப்பையா பட்டி மன்ற தீர்ப்பு மாதிரி சொல்லி முடித்தான்.

அதற்கு நான் மனதுக்குள், "அட, அறிவுகெட்டவ‌ங்களே.. இதென்ன அங்க மூணு இங்க மூணு என சொல்லுறதுக்கு என்ன சின்னபசங்க விளையாட்டா? மொத்தமாக 6 உயிர்கள். அவர்களை பெற்றவர்களுக்கு எவ்வளவு ஆசையுடன், கனவுகளுடன் குழந்தைகளை வளர்த்து இருப்பார்கள். அவர்களை விடுங்கள் அதில் இறந்தவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றி எவ்வளவு லட்சியங்கள் இருந்து இருக்கும்? பஸ்ஸில் சுற்றுலா போனதும், பத்திரிக்கை ஆஃபிஸில் வேலை பார்த்ததும் தான் அவர்கள் செய்த குற்றமா? தங்கள் சுயலாபத்திற்காக எதற்கு இந்த உயிரை பணயம் வைத்து விளையாடும் ஆட்டம்? இதை செய்பவர்கள் அந்த இடத்தில் தன் குடும்பத்தில் ஒருவர் அங்கே இருக்கிறார் என்று தெரிந்தால் செய்து இருப்பார்களா? தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும். தமிழ்நாட்டில் நேற்று பிறந்த குழந்தைக்கும் தெரியும், இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் பின்னணியில் யார் காரணம் என்று! ஆனால் ஒருவருக்கு கூட இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை. " என்று என்னால் அங்கலாய்க்க மட்டும்தான் முடிகிறது. இது என்னால் வேறு எதுவும் செய்ய முடியாத கையாலகத்தனத்தின் எதிரொலி தான்.

சரி ஓ.கே. நான் சொல்ல வந்தது வேறு எங்கோ செல்கிறது. ஒரு வழியாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்து தூங்கினோம். மறுநாள் அதாவது நேற்று இரவு மீண்டும் சென்னைக்கு திரும்ப வேண்டும். வேலையை விட்டு வந்து 10 நாள்களுக்கு மேல் ஆகிவிட்டது. சாயங்காலம் நியூஸ் பார்த்தால் திண்டிவனம் அருகே பஸ்கள் மீது கல்வீச்சு, குண்டுவீச்சு என்ற செய்திகள் என்னையும், குடும்பத்தாரையும் அலற வைத்தது. இருந்தாலும் ஒருவித அசட்டு தைரியத்துடனும் நம்பிக்கையுடன் மாட்டுத்தாவணி(மதுரை ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்) வந்து சேர்ந்தோம் நானும் என் தம்பியும்.

மீண்டும் அதே மாதிரி மாட்டுத்தாவணியில் பயணிகள் கூட்டத்திற்கு சமமாக போசீஸார். பஸ் பிடித்து ஏறி வந்தால் திருச்சி, உளுந்தூர்பேட்டை என வழிநெடுகிலும் ஆயுதம் ஏந்திய போலீஸார். பஸ்ஸை திருப்பி பண்ருட்டி வழியாக திருப்பி விட்டிருந்தனர். அதிகாலை 5 மணி வரை ஒரு அசம்பாவிதமும் இல்லை. திண்டிவனம் தாண்டி சென்னை அவுட்ஸ்கெர்ட்டில் 5 கிலோமீட்டர் நீளத்துக்கு வாகனங்கள் லைன் கட்டி நின்றிருந்தது. விசாரித்ததில் சிங்கப்பெருமாள்கோவில் அருகே மீண்டும் கலவரம். மிகவும் நொந்து கொண்டோம். திங்கள்கிழமை காலை பொதுமக்களை துன்புறுத்தி பார்ப்பதில் அவர்களுக்கு அப்படி என்ன சந்தோஷம் என்று தெரியவில்லை.

வழியில் என் செல்போன் பிரச்சினை பண்ணி ஆன் ஆகவே இல்லை. நான் கால் பண்ணவில்லையென்றால் வீட்டில் பயந்து விடுவார்கள் என்று வேற பயம். இடையில் இறங்கி கால் பண்ணி சொல்லவும் முடியவில்லை. எதுவும் அசம்பாவிதம் நடக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டு காத்துக்கிடந்தேன். ஒரு வழியாக 8 மணியளவில் எல்லாம் சரியாகி நிலைமை சீரடைந்து சென்னைக்கு வர 10 மணியானது. அடித்து பிடித்து கெளம்பி ஆஃபிஸ் வர 11 ஆகிவிட்டது

படிக்காதவன் - விமர்சனம்வில்லுக்கு போக்கிரி டெம்ப்ளேட் மாதிரி, படிக்காதவனுக்கு பொல்லாதவன் டெம்ப்ளேட். வத வதவென்று இருக்கும் வில்லன்களை சுள்ளான் மாதிரி பார்ப்பவர்களை சுளுக்கெடுக்காமல், அவர்களுக்குள் அடிக்கவிட்டுக் கொண்டு, கடைசியில் ஒரே ஒருத்தனை மட்டும் க்ளைமேக்ஸில் நையப்புடைக்கும் கதை தான் படிக்காதவன்.

தனுஷின் பாடி லாங்குவேஜ் சான்ஸே இல்லை. அருமை. எச்சூஸ்மீ என்று ஹீரோயினுடன் காதல் செய்யும்போதும், அருக்காணி மகள் திருக்காணியை பொண்ணு பார்க்கப் போகும்போதும், கனவில் ஃபைட் பண்ணும்போதும் எக்ஸ்ப்ரஷனில் பின்னுகிறார். தமன்னா, பௌர்ணமி நிலவின் கலரில் அவருடைய ஸ்கின் மினுமினுக்கிறது. இவர் ஒல்லியா, தனுஷ் ஒல்லியா என பட்டிமன்றமே நடத்தலாம். மற்றபடி இவருக்கு படத்தில் உப்புக்கு சப்பாணி கதாபாத்திரம். அவர்களின் காதல் எபிசோடை அல்ரெடி நாம் சிங்காரவேலனில் பார்த்து விட்டோம். :(

த‌னுஷின் அப்பாவாக‌ பிர‌தாப் போத்த‌ன். நம்மூர் நார்த் இண்டியன் கலெக்டர் மாதிரி திக்கி திக்கி பேசுகிறார். இவ‌ரைத் த‌விர‌ அவ‌ருடைய‌ பெரிய‌ குடும்ப‌ம், ச‌ன் டி.வி சீரிய‌ல் ஆர்ட்டிஸ்ட்க‌ளால் நிர‌ம்பி வ‌ழிகிற‌து. விவேக்கின் காமெடி அட்டகாசம். ஆனால் இது வடிவேலு நடித்திருந்தால் இன்னொரு வின்னர் மாதிரி இருந்து இருக்கும். அந்த எபிசோடின் மேனரிசங்கள் வடிவேலுவுக்கு அட்சரம் பிசகாமல் பொருந்தி இருக்கும். என்ன அரசியலோ??

நரிக்குறவர்கள் குருவி சுடுவதற்கு பயன்படுத்தும் துப்பாக்கி போல ரெண்டு வில்லன் க்ரூப், சர்வசாதாரணமாக பீச்சில் பலூன் சுடுவது போல சிட்டி சென்டரில் சுட்டுக் கொல்வது கெட்ட காமெடி. அதிலும் வில்லன் சுமன் ஹெலிகாப்டரில் வந்து ஷாயாஜியின் க்ரூப் வண்டிகளை வெடித்து பறக்க விடுவது வீடியோ கேம் பார்ப்பது போல் உள்ளது.

படத்தின் அட்டு பாடல்களையும், சன் டி.வியின் அட்வர்டைசிங் மூலம் ஹிட்டாக்கி விடுவார்கள். கொடுமை. அடியாட்களை காற்றில் பறக்கவிடும்போது, போச்சுடா சுள்ளான் திரும்ப வந்துட்டான் என்று நினைக்கும்போது அது கனவு என்று பில்டப் பண்ணுவது ஹியூமர் போனஸ்.

தனுஷை தான் ஃபாலோ பண்ணுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, அந்த க்ரூப் தமன்னாவை போட்டு தள்ள வந்திருக்கிறார்கள் என்று தெரியும்போது உள்ள ட்விஸ்ட், டைரக்டர் டச். அதேபோல் ரயில்வே ஸ்டேஷனில் அடிக்க வரும் க்ரூப், சுமனுடையது அல்ல அதுல் குல்கர்னியோட க்ரூப் என்று தெரியும்போது, திரைக்கதை ரெக்கைகட்டி பறக்கிறது. பட், க்ளைமேக்ஸ் பொல்லாதவன், ரன், சண்டக்கோழி ஜெராக்ஸ்.

முதல் பாதியில் இருந்த வேகத்தை, இரண்டாவது பாதியில் மெயின்டெயின் கூட‌ பண்ணாமல் விவேக்கையும், பாடல்களையும் வைத்து ஓட்டி, கடைசி 20 நிமிடங்களை மட்டும் நம்பி இருப்பது திரைக்கதையின் பெரிய ஓட்டை.

படிக்காதவன் - கொங்குரா சட்னி தடவப்பட்ட‌ பொல்லாதவன்.

********

வில்லு - விமர்சனம்


நேர்மையான ராணுவ அதிகாரியான தந்தையை தந்திரமாக கொலை செய்த வில்லன் க்ரூப்பை அதிரடியான மகன் பழிவாங்கும் எம்.ஜி.ஆர் காலத்து கதையை வைத்து மீண்டும் விஜய் பிரபுதேவா காம்பினேஷன் பட்டையைக் கெளப்பியுள்ளனர்.

கதை தூத்துக்குடியில் ஆரம்பித்து முனீச், ஜெர்மனிக்கு தாவி மீண்டும் சென்னையில் முடிகிறது. முதல் பாதியில் வரும் நீர்வீழ்ச்சியுடன் கூடிய கிராமம் எது என்று தெரியவில்லை. அருமையான லொகேஷன்.

தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் விஜய். ரொம்ப மெனக்கெடாமல் டபுள் கெட்டப். பிரபுதேவா, விஜய் கூட்டணியின் பழைய போக்கிரி டெம்ப்ளேட்டை தூசி தட்டி, புதிதாக எடுத்து இருக்கிறார்கள். காஸ்ட்யூம் மட்டும் வித்தியாசமாக ஸ்டைலிஷாக உள்ளது. பல்லி மாதிரி இருந்த நயன்தாரா இந்த படத்தில் பழைய ஃபார்ம். லைட்டாக சதை போட்டு இருக்கும் அவர் முதல் பாதியில் விஜயுடன் பண்ணும் காமெடி காட்சிகள் சிரிப்பை வரவழைப்பதற்கு பதில் கவர்ச்சியில் தாரா.....ளம். முடியல...

வடிவேலு இப்போது அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கிறார். வாயை உவ்வென்று குவித்து ஃபீல் பண்ணுவது போல் இன்னும் எத்தனை படத்தில் நடிப்பார் என்று தெரியவில்லை. செகண்ட் ஆஃபில் இவரை ஜெர்மனிக்கு கொண்டுவந்து காமெடி பண்ணியிருப்பது திரைக்கதை வறட்சியைக் கொட்டுகிறது. அதிலும் நீளமான அந்த மாடு காமெடி டூ மச்.

பிரகாஷ்ராஜ், விஜயுடன் பழகின பாவத்திற்கு எப்படிப்பட்ட கேரக்டரில் எல்லாம் நடிக்க வேண்டியிருக்கிறது. அற்புதமான நடிகனை வீணடித்து இருக்கிறார்கள். மற்றபடி தேவராஜ், ஆனந்தராஜ், ஸ்ரீமன் எல்லாம் சும்மா டம்மி வில்லன்கள். ரஞ்சிதாவும், மனோஜ் கே.ஜெயனும் தயிர்சாதத்துக்கு ஊறுகாய் மாதிரி.

இதில் விஜய் ரசிகர்களுக்கான காட்சிகள் ஏராளம். இண்ட்ரோ சாங், கல்யாண வீட்டில் டான்ஸ் ஆடிக் கொண்டே சண்டை, சுற்றி நிற்கும் கார்கள் வெடித்து சிதறுவது, பிரகாஷ்ராஜை மடக்கும் போது பஞ்ச் டயலாக் காட்சிகளில் ரசிகர்கள் சாமி வந்தது போல் ஆடுகிறார்கள். அறிமுகப் பாட்டில் குஷ்பூ ஸ்கிரீனில் பாதியை நிறைத்துக் கொள்கிறார். நல்லவேளை பாடல் முழுவதும் அவரை ஆட விட‌வில்லை. பாடியிருப்பது அட.. கோவை சரளா!!!

பழிவாங்கும் திட்டத்தில் தான் அவர் நயனை லவ் பண்ணுகிறார் என்று தெரியும் போது திரைக்கதையில் ஷாக். அதே போல் தேவராஜின் பையன் தான் விஜய் என்று தெரியும்போதும் அதே ஷாக். அந்த டெம்போவை மெயின்டெயின் பண்ணாமல் தொடர்ந்து மூன்று பாடல்கள் போட்டு இரண்டாம் பாதியில் எல்லாரையும் கேண்டீன் பக்கம் ஓட விடுகிறார்கள்.

இன்டெர்நேஷனல் டான் என்பதற்கு ஹாலிடே ரிசார்ட் மாதிரி முனீச்சில் போய் ஷுட் பண்ணியிருப்பது, வில்லன்கள் ஹெலிகாப்டரில் வருவது எல்லாம் புரொடியூசர் பணத்தின் தாராளம். ஹெலிகாப்டரில் ஜஸ்ட் லைக் தேட் என‌ சண்டை போடுவது, க்ளைமேக்ஸில் புழுதி மணலில் கண்ணைத் திறந்து மட்டும் ஹீரோயிஸ பில்டப் பண்ணியிருப்பது கொஞ்சம் ஓவர்.

படிக்காதவன், பொல்லாதவன் ஜெராக்ஸ் மாதிரி இருப்பதால் இந்த படம் ஓடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

வில்லு ‍- விஜய் இஸ் பேக் வித் ப்ளோ(போக்கிரி பார்ட் 2).

*************

நியூஸ் ட்ராஃபிக் ஜாம்

பத்தே பத்து பந்துகள். என்ன ஒரு விறுவிறுப்பு, பரபரப்பு. தென் ஆப்ரிக்காவின் ஸ்மித் பத்து பந்துகளை மட்டும் ஃபேஸ் பண்ணியிருந்தால், எவ்வளவு அழகாக இருந்திருக்கும்? கடுமையான சுளுக்கு ஏற்பட்டு கையை தூக்க கூட முடியாமல் இருந்த ஸ்மித், அணிக்கு பிரச்சினை என்ற போது போராட்ட குணத்துடன், தளராமல் அவர் களத்தில் இறங்கிய போது ஒட்டு மொத்த சிட்னி மைதான ரசிகர்கள் எழுந்து நின்று கேப்டனுக்கு மரியாதை செலுத்தினார்கள். இவருக்கு மட்டும் காயம் ஏற்படாமல் இருந்து இருந்தால், ரிக்கி பாண்டிங் டிக்ளேர் செய்து இருப்பாரா என்பது சந்தேகமே. முதல் டெஸ்ட் மேட்ச்சில், மோசமான அடி வாங்கிய போதும் அதே அளவு டார்கெட்டுடன் துணிச்சலுடன் டிக்ளேர் செய்ததற்காக பாண்டிங்கை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். ஒருவேளை ஸ்மித் முதல் இன்னிங்ஸில் காயம் காரணமாக பாதியிலேயே ரிட்டையர்டு ஆகி வெளியேறியது கூட காரணமாக இருக்கலாம். பவுச்சருக்கு வழங்கிய எல்.பி.டபிள்யூ அவுட் பச்சை அயோக்கியத்தனம்.

20-20 என்ன, 10-10 மேட்ச் வந்தாலும் டெஸ்ட் போட்டி அதன் அழகை இழக்காது என்பதற்கு தற்போது நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா, இந்தியா-இங்கிலாந்து, ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டிகளே சாட்சி.

***************************

நேற்று விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, அருமையான பொழுதுபோக்கு கொண்டாட்டம். பாடகர் மனோவின் குசும்புத்தனங்கள் பார்வையாளர்களை நன்றாக சிரிக்க வைத்தது என்றால் மிகையில்லை. என்.டி.ராமாராவ் மாதிரி மோனோ ஆக்டிங் பண்ணியது, ரஜினியின் தெலுங்கு படையப்பா வசனத்தை ரஜினியின் டெம்போவிலேயே பேசிக் காட்டியது (ரஜினியின் எல்லா தெலுங்கு படத்திற்கும், இவர்தான் ரஜினிக்கு டப்பிங்காமே!!), எம்.எஸ்.வி போல ஆயிரத்தில் நான் ஒருவன் பாடலை பாடியது என மனிதன் பட்டையைக் கெளப்பினார்.

நல்ல வேளை, ராகினிஸ்ரீயை ஓரங்கட்டி சூப்பர் சிங்கரில் இருந்து துரத்தி விட்டார்கள். அவர் பண்ணிய அலிச்சாட்டியம் இருக்கிறதே, கொடுமையிலும் கொடுமை. இவர் இத்தனை ரவுண்ட் தாண்டி வந்ததே பெரிய விஷயம். இதை எல்லாவற்றையும் விட சின்மயி அழகாக புடவை கட்டிக் கொண்டு நிகழ்ச்சியை ஹோஸ்ட் பண்ணினார். ஹிஹி.. ஹிஹி.. (This is wishing you very all the Best, Godspeed, Shaba khair இதை முழுவதும் சின்மயி குரலில் ஃபாஸ்டாக படித்து பாருங்கள். She is wonderful!)

***********************

செவ்வாய்க்கிழமை 180 ரூபாயில் இருந்த சத்யம் கம்யூட்டர்ஸின் பங்கு விலை நேற்று 11.30 மணிக்கு 38 ரூபாய்க்கு குறைந்து அதல பாதாளத்தில் விழுந்தது. கிராமத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்று சொல்வார்கள். ஆனால் இவர் சுனாமியை போர்வையைக் கொண்டு மறைத்து இருக்கிறார். ஒருவர் இவ்வளவு ஃப்ராடு வேலைகளை (1800 கோடியாம், சிவாஜி படத்தில் வரும் ரஜினியை விட அதிகம்) செய்வது மேனேஜ்மென்ட் கமிட்டி, செபி க்ரூப்ஸ், இன்கம்டாக்ஸ் புண்ணியவான்கள் என யாருக்குமேவா தெரியாது. சரி விடுங்கள், அங்கு வேலை பார்க்கும் 53000 ஊழியர்களின் கதி? இந்தியாவின் வேலைவாய்ப்பு மத்திய மந்திரி கமல்நாத், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி என எல்லாரும் கை விரித்து விட்டனர்.

ஏற்கெனவே சிட்டி க்ரூப், ஜெட் ஏர்வேய்ஸ் என 2008 ல் தள்ளாடி தத்தளித்து வந்துள்ள இந்தியாவுக்கு 2009 ன் ஆரம்பமே பெரிய இடியாக விழுந்துள்ளது.
நல்ல வேளை, போன வாரம் முழுவதும் சத்யமில் இன்வெஸ்ட் பண்ணியிருந்த என் பங்குகளை இந்த திங்கள்கிழமை தான் மாற்றி Suzlon ல் போட்டேன். தலை தப்புனது தம்புரான் புண்ணியம் என்று நினைத்துக் கொண்டேன்.

************************

மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் பாகிஸ்தானை சேர்ந்தவர் தான் என்று சொன்ன பாகிஸ்தான் பாதுகாப்பு துறை ஆலோசகரை, அந்நாட்டு அரசு டிஸ்மிஸ் செய்துள்ளது. பாகிஸ்தானின் இரட்டைவேடம் இன்னும் கொஞ்ச நாளில் உலகத்துக்கே தெரியப் போகிறது. தன் மனைவியையே கொன்ற தீவிரவாததிற்கு பிரதமர் சர்தாரி எண்ணெய் ஊற்றி வளர வைப்பது, கிளையின் நுனியில் உட்கார்ந்து மரத்தை வெட்டுவதற்கு சமம் என்று கூடிய விரைவில் உணர்வார்.


************************

வில்லு பட ட்ரையிலர் எண்டில், விஜய் பாரதியார் கெட்டப்பில் தோன்றுவார். பார்த்தீர்களா? க்ரேட் காமெடி ஆஃப் தி இயர் 2009. அஜீத்தை வைத்து மற்றவர்கள் காமெடி பண்ணுவது போல விஜயை மற்றவர்கள் காமெடி பண்ண அவசியம் இல்லை. அவரே பண்ணிக் கொள்வார். யானை தன் தலையில் தானே மண்ணைக் கொட்டிக் கொள்வது போல. மீண்டும் பப்ளி நயந்தாரா இஸ் பேக். பதிவின் இரண்டாவது ஹிஹி.. ஹிஹி..

வினா 100 கனாவும் 100 விடை சொல்லடி IV

காட்சி 1 
பெரியவருக்கு 54 வயது. முதன் முறையாக மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்து மதுரை பெரிய‌ ஹாஸ்பிட்டலில் நேற்றிரவு அட்மிட் செய்யப்பட்டார். பெரியவரின் மனைவி சென்னையில் இருக்கும் தனது மகளுக்கு ஃபோன் போட்டு உடனே வரச்சொல்லியிருந்தார்.  

மறுநாள் காலை தாயும் மகளும், சீஃப் டாக்டரைப் பார்த்தார்கள். மகள், "சார், அப்பாவுக்கு இப்ப எப்படி இருக்கு?" என்றாள். அதற்கு டாக்டர், "ஏற்கெனவே அவருக்கு B.P, சுகர் எல்லாம் இருக்கு. இப்ப அட்டாக் வேற. மைனர் தான். இனிமே அவருக்கு அதிர்ச்சி தர்ற மாதிரி எந்த விஷயத்தையும் சொல்லாதீங்க. அவர ஒரு குழந்தை மாதிரி ட்ரீட் பண்ண வேண்டிய டைம் இது." என்றார்.  

இருவரும் ரொம்ப அமைதியாக கேட்டுக் கொண்டு பெரியவரின் வார்டுக்கு வந்து அவரை பார்த்தனர். பெரியவர், "சீக்கிரம் குட்டிக்கு கல்யாணம் பண்ணி முடிச்சிட்டேனா, எனக்கு எந்த கவலையும் இல்ல. நானும் நாலு அஞ்சு இடம் பாத்திருக்கேன். ஒண்ணு முடியுற மாதிரி இருக்கு. குட்டி, உனக்கு எதுவும் ஆட்சேபணை இல்லையே? அப்பா உனக்கு என்ன பண்ணாலும் நல்லது தான் பண்ணுவேன். சரியா?" என்றார். அதற்கு மகள், "எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லப்பா. நீங்க பாத்து முடிவு பண்ணிட்டா போதும்" என்றாள் கண்களில் முட்டும் நீர்த்துளியை மறைத்துக் கொண்டு.

*********************************

காட்சி 2 
சாயந்திரம் 6 மணி. வீட்டிற்கு வெளியே சாய்வு நாற்காலியில் பெரியவர் கம்பராமாயணம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது 25 வயதுள்ள இளைஞன் கேட்டைத் திறந்து உள்ளே வந்தான். நேராக பெரியவரிடம் போய், "சார், நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான் விஷயம் பேசுறதுக்காக வந்துருக்கேன்" என்றான். பெரியவர் ஆழமாக ஒரு பார்வை பார்த்து, "சரி, சொல்லுங்க. எதைப் பத்தி பேசணும்" என்றார். அவன், "சார், நான் ஸ்ட்ரெய்ட்டாவே மேட்டருக்கு வர்றேன். நான் உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஆசைப்படுறேன். நான் சென்னையில் ஒரு கார்ப்பரேட் ல மாசம் 25,000 ருபாய் சம்பளத்துல வேல பாக்குறேன். இன்னும் உங்க பொண்ணுகிட்ட கூட இதப்பத்தி பேசவே இல்ல. நேரா உங்ககிட்ட பேசலாம்னு வந்திருக்கேன்" என்று தேங்காயை உடைச்சதுபோல நச்சுனு சொல்லிவிட்டான்.  

பெரியவர் சில நிமிட யோசனைக்குப் பிறகு, "தம்பி, உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சுருக்கு. நானும் என் பொண்ணுக்கு வரன் தேடிக்கிட்டு இருக்கேன். என் பொண்ண அமெரிக்காவுல வேல பாக்குற பையனுக்கு கட்டிக் கொடுக்கணும் எனக்கு ஆசை. அதே மாதிரி ஒரு வரனும் வந்திருக்கு. எனக்கு நீங்க சொன்ன விஷயம் சரியாப்படும்னு தோணல. சாரி. நீங்க போகலாம்" என்று இவரும் சுற்றி வளைக்காமல் தெளிவாக சொல்லிவிட்டார். அவனுக்கு மேற்கொண்டு என்ன பேசணும் என்று தெரியவில்லை. மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டான்.

**********************************

காட்சி 3 
இரவு 10.30 மணி இருக்கும். நியூயார்க் DownTown ல் உள்ள ஃபேமஸான பாரில் வினோத், மூணு ரவுண்ட் ப்யூர் டகீலாவும், ரெண்டு ரவுண்ட் மார்கரீட்டாவும் அடித்துவிட்டு காட்டமான போதையுடன் கண்கள் சொருக‌ புலம்ப ஆரம்பித்தான். "என் வாழ்க்கைய நான் நெனச்ச மாதிரி அமைக்க முடியாம இவ்வளவு சம்பாரிச்சு, அமெரிக்காவுல மூணு வருஷம் இருந்து என்ன புண்ணியம். அவ என்கூட இல்லயே. அவ எப்படியும் எனக்கு கெடைப்பான்னு நான் நெனச்சதெல்லாம் என்னோட பைத்தியக்காரத்தனம். அவ அப்பன் மட்டும் கையில கெடச்சான். மவனே, தொலஞ்சான். இன்னிக்கோட எல்லாம் முடிஞ்சது. நாளைக்கு இந்தியாவுக்கு ஃப்ளைட். அடுத்த வாரம் கல்யாணம். எல்லாம் முடிஞ்சி போச்சி. காதலால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் எல்லாம் கடவுளின் செல்லக் குழந்தைகள். காதல் கைகூடாதவர்கள் எல்லாம் தேவதாஸின் கொ.ப.செக்கள்." என்று காட்டுத்தன‌மாக புலம்ப ஆரம்பித்து முன்னால் இருக்கும் பெஞ்சில் தலை கவிழ்ந்து கிடந்தான்.  

15 நிமிடத்திற்கு பிறகு அவனுக்கு செல்போனில் கால் வந்தவுடன் தலையை நிமிர்த்தி, பேரரிடம், "One more pomegranate Margarita please " என்று சொல்லிவிட்டு செல்போனை எடுத்து "ஹலோ" என்றான்.

*******************************

காட்சி 4  
சாயங்காலம் 5.30 மணி. கீர்த்தியும் அவள் நெடு நாள் தோழனும் பேசுவதற்கு எதுவும் இல்லாமல் பீச்சை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கீர்த்தி, தான் பேச்சை ஆரம்பித்தாள் "நீ இப்படி பண்ணுவே என்று எதிர்பார்க்கவில்லை. நான் உன்கூட நல்ல ஃப்ரெண்ட் என்கிற முறையில் தான் பழகினேன். நீ ப்ரோப்பஸ் பண்ணவுடன் உன்னை பிடிக்கவில்லையென்று உன் முகத்தைப் பார்த்து சொல்லி உன்னை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. உனக்கே தெரியும் எங்க ஃபேமில் பேக்ரவுண்ட் பத்தி. அப்பா, ரிட்டையர்டு ஹெச்.எம். சுகர், B.P வேற‌. எங்க அப்பாவை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது. எனக்காக அவர் அமெரிக்காவில் இருந்தெல்லாம் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார். நாம எப்பவுமே நல்ல ஃப்ரெண்ட்ஸாவே இருப்போம். சரியா" என்றாள்.  

அதற்கு அவன், "சரி, ஓ.கே. நானும் இன்னும் ரெண்டு வருஷத்துக்குள்ள‌ அமெரிக்கா போயிடுவேன். இத வச்சு உங்க அப்பாகிட்ட பேசுனா என்ன?" என்றான். "அதெல்லாம் முடியாதுடா. எங்க அப்பாகிட்ட கல்யாண விஷயத்துக்காக நான் argue பண்றத நான் விரும்பல." என்று சோகத்துடன் சொல்லி முடிக்க, அவள் வீட்டில் இருந்து அம்மா கால் பண்ணி பேசினார்.  

ஃபோனை வைத்து விட்டு இடிந்து போனாள். "அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். நான் உடனே மதுரை போகணும்." என்று சொல்லி முடித்துவிட்டு ஓடினாள்.

*********************************

காட்சி 5  
காலை 9 மணி. வீட்டிலிருந்து எல்லாரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நிச்சயதார்த்ததிற்கு வந்துவிட்டார்கள். இரு வீட்டாரும் தாம்பூலம் மாற்றிக் கொண்டார்கள். கூட்டத்தில் ஒருவர், "என்னப்பா, அமெரிக்காவுல இருக்குற தம்பி எப்போ வரும்? நிச்சயதார்த்தமும் முடிஞ்சிருச்சி" என்றார். அதற்கு கல்யாண வீட்டாரிடம் இருந்து, "தம்பிக்கு இன்னைக்கு நைட் ஃப்ளைட். நாளைக்கு சாயந்தரம் வந்துருவாப்ப்புல" என்று பதில் வந்தது. 

மனைவியை அருகில் அழைத்து, "வினோத்துக்கு கால் பண்ணு. அவன் எப்போ கெளம்புறான். எல்லாம் பேக் பண்ணிட்டானா? இங்க இவிங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியல" என்றார். "வினோத்து, நான் அப்பா பேசுறேண்டா. எப்படி இருக்கா. என்ன ஆச்சு? கொரலு ஒரு மாதிரி இருக்கு? ரொம்ப பனியா?" என்றார் அப்பா. "அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா. ரூம்ல சிக்னல் இல்ல. எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சா" என்றான் வினோத்.  

"அதெல்லாம் நல்லா முடிஞ்சிருச்சுப்பா. அப்படியே வரும்போது கல்யாண பொண்ணுக்கு எதுனாச்சும் தங்கத்துல நல்ல பொருளா பாத்து வாங்கிட்டு வாப்பா" என்றார் அப்பா. "சரிப்பா. கண்டிப்பா வாங்கிட்டு வரேன். நாளைக்கு ஃப்ளைட்ல ஏறுறதுக்கு முன்னாடி நான் கால் பண்றேன். வச்சிடுறேன்" என்று சொல்லி போனை வைத்தான் வினோத்.

*****************************************

காட்சி 6 (க்ளைமேக்ஸ்)

திருமண மண்டபம். "கெட்டி மேளம், கெட்டி மேளம்" என்று ஐயர் முழங்க "டும் டும் டும்" என்று மேள சப்தத்துடன் மாப்பிள்ளை தாலி கட்டினான். "மெட்டி போடணும், பொண்ணோட அண்ணன் இல்ல தம்பிய வர சொல்லுங்கோ" என்றார் ஐயர். அம்மாவிடம் மெட்டியை வாங்கி கீர்த்தியின் காதல் கணவனின் காலில் மெட்டி அணிவித்தான் வினோத்.  

சொந்த பந்தங்களிடம் பூரிப்புடன் "பாப்பாவுக்கு முடிச்சாச்சு. அடுத்த முகூர்த்ததுலயே பையனுக்கும் கல்யாணம். எல்லாரும் கண்டிப்பா வந்துடனும்" என்று அன்பு கட்டளை போட்டுக் கொண்டிருந்தார் பெரியவர்.

*****************************************

ஹேப்பி பர்த்டே, ஏ.ஆர்.ரகுமான்


  1. 66 வது கோல்டன் குளோப் விருதுக்கு ஏ.ஆர்.ஆர் பெயர் SLUMDOG MILLIONAIRE படத்திற்காக‌ நாமினேட் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு இந்த விருது கிடைக்க வாழ்த்துக்கள்.
  2. அவர் தனது 11-ஆவது வயதில் இருந்து இளையராஜா ட்ரூப்பில் சேர்ந்து பணியாற்றினார். அந்த சமயத்தில் அவர் "புன்னகை மன்னன்" தீம் மியூசிக் கம்போசிங்கில் பெரும்பங்கு ஆற்றினார்.
  3. இவர் இந்துவிலிருந்து முஸ்லீமாக மாறியவர். ஆரம்பகாலத்துப் பெயர் திலீப் குமார். இந்து மதத்தில் இருந்த வரை நான் தாழ்வு மனப்பான்மையுடன் வளர்ந்தேன். இஸ்லாம் மதத்தில் கலந்தவுடன், புதிதாய் பிறந்த மனப்பக்குவம் கிடைத்துள்ளது என்று அவரே சொல்லியிருக்கிறார்.
  4. நான்கு முறை சிறந்த இசைக்காக இந்தியாவின் தேசிய விருது வாங்கியிருக்கிறார். [ ரோஜா(1993),மின்சாரக்கனவு (1997),லகான் (2002),கன்னத்தில் முத்தமிட்டால்(2003)]
  5. இந்திய அரசிடம் 2000-மாவது ஆண்டில் பத்மஸ்ரீ விருது வாங்கியவர்.
  6. மனைவி பெயர் ஷைரா பானு. இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகளும்(கதீஜா, ரஹீமா) ஒரு ஆண் குழந்தையும்(முகமது ரஹுமான்) உள்ளனர்.
  7. இவரின் ஃபேவரிட் பாடகி பி.சுசீலா. சுசீலாவுடன் ஒரே ஒரு முறை புதிய முகம் படத்திற்காக வொர்க் பண்ணியுள்ளார்.
BTW, அவருக்கு இன்று 44-ஆவது பிறந்தநாள்(January 6, 1966)!

LONG LIVE A.R.RAHMAN!!!

பேச்சிலர் லைஃபும், சென்னை ஹோட்டல்களும்!

காலையில் எழுந்து பெட்காஃபியும் தூங்குவதற்கு முன் இளஞ்சூடான பாலும் சாப்பிட எல்லாருக்கும் ஆசை இருக்கும். இதெல்லாம் சொந்த/வாடகை வீட்டில் அம்மா அப்பாவுடனோ இல்லை மனைவியுடன் இருக்கும்போதோ மட்டும் தான் அமையும். ஆனால் சமீபத்தில் படித்து முடித்து விட்டு வேலை பார்க்கும், கல்யாணத்திற்கு இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகள் வரை இருக்கும் பேச்சிலர்ஸ்க்கு எல்லாம் அந்த வாழ்க்கை வாய்க்காது.

காலையில் எழுந்து டீ சாப்பிடுவதற்கே மூன்றாவது ஃப்ளோரில் இருந்து இறங்கி பிஸியான ரோட்டை க்ராஸ் பண்ணி சாப்பிட்டு திரும்ப ரூம்க்கு வந்து ஆஃபிஸ் கிளம்புவதற்குள் அந்த ஆசையே விட்டுவிடும். வீக் எண்டில் முற்பகல் 11 மணி வரை தூங்கி எழுந்திருக்கும் நாட்களில், ஏதாவது சாப்பிடலாம் என்று ஹோட்டலுக்கு போனால், கடைக்காரர்கள் கார்கில் போரில் பாகிஸ்தான் தீவிரவாதியை பார்ப்பது போல் பார்ப்பான். காலை டிபனும் இருக்காது, மதியம் லஞ்ச் அப்போது தான் தயாராகிக் கொண்டிருக்கும். அடிவயிறு பசியால் பற்றி எரியும்போது மட்டும் வெளியே போய் டீயும் வடையும் சாப்பிட ஆசை வரும். அது அடுத்த ஒரு மணி நேரத்திற்கு தாங்கும்.

சரியாக மணி 12.45 ஆகும்போது வெளியே கெளம்பி தலப்பாக்கட்டு பிரியாணியில் லெக் பீஸுடன் பிரியாணி வாங்கிட்டு வந்து வீட்டில் சாப்பிடுவேன். சென்னையில் ஒவ்வொரு ஏரியாவிலும் அட்லீஸ்ட் ஒரு தலப்பாக்கட்டு பிரியாணி கடையாவது இருக்கும். எல்லாக் கடையிலும் சொல்லி வைத்தது போல் பெரிய‌ செவ்வக வடிவத்தில் மஞ்சள் கலர் வினைல் போர்டில் குண்டு குண்டு எழுத்தில் எழுதி வைத்து இருப்பார்கள்.ஒரு சின்ன சட்டியில் பிரியாணி ரைஸுடன் ஒரு சிக்கன் லெக்பீஸ் இருக்கும் ஃபோட்டோவை அந்த போர்டில் பெரிதாக போட்டிருப்பார்கள். நான் பார்த்த வரை வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், திருவான்மியூரில் இப்படி தான் இருக்கும். அவர்கள் எல்லாம் ஒரே க்ரூப்பின் பல்வேறு கிளைகளா என்று தெரியவில்லை.

இரண்டு வாரம் முன்பு 11.45 ஷோ சில‌ம்பாட்டம் சத்யம் தியேட்டரில் பார்த்தேன். முடித்து விட்டு பக்கத்திலேயே இருக்கும் சரவண பவனில் ஒரு ஸ்பெஷல் மீல்ஸ் சாப்பிடலாம் என்று போனோம். அது சரவண பவனின் ஸ்பெஷல் கேட்டகிரி ஹோட்டல் என்று தெரியாது. அங்கு பரிமாறப்படும் ப்ளேட், டம்ளர் என்று சகலமும் வெள்ளியில் மின்னியது. இதெல்லாம் உங்ககிட்ட யார்றா கேட்டா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு ரெண்டு ஸ்பெஷல் மீல்ஸ் கொண்டு வாங்க என்றேன். அதற்கு சர்வர், "அதெல்லாம் இங்கே கிடைக்காது சார். பிசினஸ் எக்ஸிகியூட்டிவ் மீல்ஸ், ஸ்பெஷல் பஞ்சாபி தாலி மட்டும் தான் கிடைக்கும்" என்றார். "அடப்பாவிங்களா?!!, நானே படம் பாத்துட்டு தலைவலியோடு வந்துருக்கேன். இதுல இவிங்க வேற‌" என்று நானே என்னை நொந்து கொண்டு ரெண்டு எக்ஸிகியூட்டிவ் மீல்ஸ் கொண்டு வாங்க என்றேன். ஒரு மீல்ஸ் 140 ரூபாய். பாத்திரங்களை வெள்ளியில் போட்டு, பில்லில் கொள்ளையடிக்கிறார்கள். ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை என்று மட்டும் தான் சரவண பவனில் சாப்பிடுவேன். அவர்கள் போடும் பில்லைப் பார்த்தால் அவ்வளவு நேரம் இருந்த பசியும் பறந்து விடும்.
இருந்தாலும் இரவில் சரவணபவனில் கிடைக்கும் மசாலா பாலுக்கு என் நாக்கு அடிமை.

இது தவிர நான் ரெகுலராக செல்லும் இடம் திருவான்மியூர் R.T.O அருகில் இருக்கும் காரைக்குடி செட்டிநாடு ரெஸ்டாரெண்ட். நான் வெஜ் உணவுகள் சாப்பிடுவதற்கு சிறந்த இடம். இரண்டு பேர் சாப்பிட போனால் 500 ரூபாய்க்கு குறையாமல் செலவாகும். லோக்கல் காரைக்குடி கிராமத்து எஃபெக்ட் கொடுக்கிறேன் பேர்வழிகள் என்று சொல்லிக் கொண்டு மேலிருந்து தொங்கும் விளக்குகள், அங்கங்கே சுவற்றில் தொங்கும் முறம், கும்பலாக உட்கார்ந்து காய்க்றி நறுக்கும் கிராமத்து ஆட்களின் ஃபுல் ஸ்க்ரீன் போட்டோ, டிபிக்கல் காரைக்குடி ஸ்டைல் வேட்டிக் கட்டு என்று கெட்ட காமெடி பண்ணுவார்கள். அந்த ஹோட்டலில் எப்போதும் எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்களை மட்டும் ப்ளேயரில் ஓடவிடுவார்கள். வாரத்துக்கு ஒரு முறை போனால் மட்டுமே பட்ஜெட்டைக் காப்பாற்ற முடியும்.

நான் வேலை செய்யும் ஆஃபிஸில் இதுவரை மதியம் லஞ்ச் ஒரு பெரிய மெஸ்ஸில் அரேஞ்ச் பண்ணினார்கள். கடந்த மூன்று மாதமாக எல்லாருக்கும் SudexHo கூப்பன் கொடுத்து வெளியே சாப்பிட சொல்லிவிட்டார்கள். Height of Cost cutting!!! சொந்தங்களுடன் இருப்பவன் லஞ்ச் பாக்ஸ் கட்டிக் கொண்டு வந்து எங்கள் வயிற்றெரிச்சலையும் சேர்த்து மதிய உணவைக் கொட்டிக் கொள்வான். பாவப்பட்ட பேச்சிலர்ஸ்க்கெல்லாம் வாழ்வு கொடுக்க‌ சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட ஹோட்டல் தான் "ஆந்திரா மெஸ்". அள்ள அள்ள சாதத்தை இலையில் கொட்டுவார்கள். தினமும் நான் வருவதற்கு முன் ஆரம்பிக்கும் ஒரு கொல்ட்டி ஆள், நான் சாப்பிட்டு முடித்து எழுந்திருக்கும் போது தான் சாம்பார் முடித்து ரசம் வருவான். வாழ்க கொல்ட்டிஸ். பப்பு (பருப்பாம்), சாம்பார், ரசம், மோர்க்குழம்பு, பெருகு (தயிர் என்று தெலுங்கில் அர்த்தம்) எல்லாம் ஒரு ரவுண்ட் முடித்து வரும்போது வயிறு நான்கு மாத கர்ப்பிணி பெண் போல இருக்கும். எல்லாம் சேர்த்து 30 ரூபாய் தான். So cheap. ஆனால் அவர்கள் போடும் காரம் அவ்வளவு சீக்கிரம் தமிழர்களுக்கு ஒத்துக்காது. என்னுடன் சாப்பிட்ட ஒருவனுக்கு காரத்தால் அப்பெண்டிஸ் வந்து ஆபரேஷனுக்காக ஊருக்கு போய் இருக்கிறான்.

இது தவிர நம்மூரில் சாதிக்கட்சிகள் மாதிரி நான் தங்கியிருக்கும் ஏரியா முழுவதும் எக்கச்சக்கமான‌ ஹோட்டல்கள். நாலு சேர், டேபிள், முன்னாலே புரோட்டோ போடும் கல் இருந்தால் அதுவும் ஒரு ஹோட்டல் என்று கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். சொல்லி வைத்தது போல எல்லா கடைகளும் ஒரே விலை, ஒரே பரிமாறும் ஸ்டைல். குட்டி ப்ளேட் அதன் மேல் பாலிதீன் கவர் போட்டு நம் முன்னே ஒரு 7 வயது பையன் வைத்து விடுவான். அந்த ப்ளேட்டை ஒருவர் சாப்பிட்டு முடித்தவுடன் கழுவி முடித்தவுடன் அதன் மேல் அந்த பேப்பரை போடுவார்களா என்றெல்லாம் நீங்கள் யோசிக்க கூடாது. அதுவே உங்கள் மனசை உறுத்தி கடைக்காரரை பார்த்து கேள்வி கேட்டால், உடனே நீங்கள் சென்னை பாஷையில் திட்டப்பட்டு, "அப்படி நீ ஆசைப்பட்டால் சரவணபவன் போய் சாப்பிடு" என்று விரட்டிப்படுவீர்கள். அப்புறம் நீங்கள் நம்ம கோவத்தால ஒரு வடை போச்சே என்று வடிவேலு மாதிரி ஃபீல் பண்ண வேண்டி இருக்கும்.

நானும் கொஞ்ச நாளா என்னோட ரூம் மேட்ஸ்கிட்ட குக் வச்சிக்கலாம்டா இல்லை ஒரு கேஸ் ஸ்டவ், குக்கர் வாங்கிக்கலாம்டா என்று எவனைக் கேட்டாலும் "அதெல்லாம் அப்புறம் யோசிக்கலாம்டா... அவன் அவனுக்கு எப்போ வேலை போகும்னே தெரியாது. இதுல நீ வேற அத வாங்கலாம் இத வாங்கலாம்னுட்டு??" என்று திட்டுகிறான். இப்போதைக்கு எங்க ரூம்ல சுடு தண்ணீர் வைக்க ஒரு எலக்ட்ரிக் ஸ்டவ் இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு பால் காய்ச்சி அதில் கெல்லாக்ஸ்(Kellogs)மிக்ஸ் பண்ணி காலையில் ப்ரேக் ஃபாஸ்டாகவும், மதியம் ஆந்திரா மெஸ்ஸிலும், நைட் ஃபாஸ்ட் ஃபுட் கடையிலும் சாப்பிட்டு பேச்சிலர் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறேன்.

நான் கடவுள் - பாலாவின் விகடன் பேட்டி

பாலாவின் நான் கடவுள் பற்றி ஸ்பெஷல் பேட்டி, சென்ற வருடம் ஆனந்த விகடன் மே 16 ஆம் தேதி இதழில் வெளிவந்துள்ளது. அதன் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஷட்சித் ப்ரமாணம் ஓம் ஓம்
மூலப் ப்ரமேயம் ஓம் ஓம்
அயம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
அஹம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்!''

உயிரை முடுக்கும் இசையில், உச்ச ஸ்தாயியில் மந்திர உச்சாடனைகள் முழங்க, ''ஹரஹரஹர மஹாதேவ்!'' என கங்கை நதிக் கரை கண் முன்னே விரிகிறது. ஆயிரமாயிரம் சாமியார்களுக்கு நடுவே 'ருத்ரன்' ஆர்யா, ருத்ர தாண்டவமாடும் காட்சி, உலக சினிமாவுக்கே புதுசு!

''காசியில, கங்கை நதிக் கரையில ஒரு வாரம் திரிஞ்சா, வாழ்க்கை பற்றிய புரிதலே புதுசாகிடும் கிறது உண்மைதான்!'' 'நான் கடவுள்' படப்பிடிப்பை முழுமையாக முடித்து சென்னை திரும்பி இருக்கிற இயக்குநர் பாலா சின்னதாகப் புன்னகைக்கிறார். ''பிரசவ வேதனையை விடப் பெரிய அவஸ்தை, தன் படைப் பைப் பற்றித் தானே பெருமை பேசுவது'' என்று பேட்டிக்கு மறுத்தவரிடம், பிடிவாதம் பிடித்துப் பேசியதில் கொஞ்சம்...

''யார் கடவுள்?''
இது கடவுள் இருக்காரா, இல்லையாங்கிற ஆத்திகநாத்திக விளையாட்டு இல்லை. பக்திப் படம் எடுப்பது என் வேலை இல்லை. எவருடைய நம்பிக்கை களையும் காயப்படுத்தக் கூடாது என்பது என் இயல்பு. அந்த அடிப்படை நாகரிகத்தில் நான் எப்போதும் தெளிவா இருக்கேன். இது விளிம்பு நிலை மனிதர்களின் உலகம். ஒரு எளிய கேள்வியை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். படம் பார்த்தால் பதில் கிடைக்கும். என்னை, உங்களை, நம்மை, நம் உலகத்தை அது இன்னும் தெளிவாக்கும்!

ரெண்டரை அடி உயரமே இருக் கிற என் பரமசிவனுக்கு 54 வயசு. அதுக்கும் கம்மியா இருக் கிற என் 30 வயசு பார் வதி, இதயக் கோளாறு உள்ள குழந்தை. உடம்பு போலவே, மனசும் இன்னும் குழந்தையாவே இருக்கு. இப்படி இன்னும் ரெண்டு டஜன் மனிதர்களை இதில் நடிக்க வெச்சிருக்கேன். பொறந்ததில் இருந்து இன்னும் வீட்டு வாசலைத் தாண்ட முடியாத கடவுளின் குழந்தைகளை, ஊர் உலகம் எல்லாம் பார்க்கட்டும்னு கூட்டிட்டு வந்திருக்கேன். மேனி அழகைச் சிவப்பாக்க சிவப்பு க்ரீம் பூசுகிற உலகமே, வந்து பாருங்கடா இவங்களையும்னு காட்ட வந்திருக்கேன்.

ஊனத்தோடு பொறக்கிறது சாபம் இல்லை; சத்துக் குறைச்சல். சரி, நல்ல சாப்பாடு நாலு வேளை சாப்பிட்டிருந்தா, ஊட்டச் சத் தோடு இருக்கலாம். ஒருவேளைச் சாப்பாட்டுக்கே வழி இல்லாத ஆத்தாளுக்குப் பொறந்தா, ஓரமாக் குழி தோண்டிப் பொதைச்சிரலாமா? உடம்பு, மனசு, மூளைன்னு எல்லாமே சிதைஞ்சிருக்கிற அந்த உயிர்களின் சிரிப்பே, இந்தப் பிரபஞ்சத்துக் கான ஆன்மிகம்!''

'ஒருமுறையா இருமுறையா பலமுறை
பல பிறப்பெடுக்கவைத்தாய்
புதுவினையா பழவினையா
கணம்கணம் தினம் எனைத்
துடிக்கவைத்தாய்
பிண்டம் என்னும் எலும்பொடு சதை
நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
ஐயனே... எம் ஐயனே!' ராஜாவின் பாடல் மனசை அறுக்கிறது.

''ஊர்ல உலகத்தில் எவ்வளவோ பிச்சைக்காரங்க இருக்காங்க. எதிர்ப்படுற எல்லா பிச்சைக்காரங்களுக்கும் நாம் உதவுவதில்லை. பாவப்பட்டோ, இரக்கப்பட்டோ, புண்ணியத் துக்கோ, நாம போடுற சில சில்லறைக் காசுகளோட, அவங் களை ஒதுக்கிடுறோம். 'அய்யா தர்மதொர, அம்மா மகராசி!'ன்னு ஒரு வாய் சோத்துக்காக நம்மிடம் கையேந்தி நிக்கிற பாவப்பட்ட மனிதர்களைப் பத்தி யோசிச்சி ருக்கோமா? பிச்சை எடுக்கிறது என்ன குலத் தொழிலா? அவங்க எப்படிப் பிச்சையெடுக்கிற நிலைமைக்கு வந்தாங்க?

பெத்த பிள்ளைங்களால விரட்டி அடிக்கப்பட்டு, வீதிக்கு வந்த துக்கம் தாங்க முடியாம, காவி வேட்டிக் கட்டி கௌரவமா பிச்சையெடுக்கிறது எவனோன்னு போறோம்... அவன், நம்ம அப்பனா இருந்தா? மானத்தைக் காப்பாத்திக்க வழி தெரியாம, பிச்சையெடுக்கிற அவமானத்தோட அலையுற பொம்பளை, நம்ம அம்மாவா, அக்காவா இருந்தா? அப்பனோ, ஆத்தாவோ உடம்புத் திமிர்ல யாரோடவாவது ஓடிப் போக, ஆதரவுக்கு யாருமில்லாம, எச்சி இலையை நக்கித் திங்கிறது நம்ம புள்ளையா இருந்தா? அப்பத் தெரியும்ல அந்த வலி!

நரகலைத் திங்கிற நாய் மாதிரி ஒரு ஈனப் பொழப்பு. ஆனா, அந்த எளிய மனிதர்களிடம் இருக்கிற பண்பு, படிச்ச பல பெரிய மனுஷங் களிடம்கூட இல்லை என்பது நான் உணர்ந்த உண்மை!''

''ஆர்யாவின் தோற்றமும்.....''
''ஆர்யாவின் தோற்றமும் பூஜாவின் மாற்றமும் பற்றிப் பேசலாமா?''


ஆங்... ருத்ரனா வர்றான் ஆர்யா. அவனை ஒரு ஜாலியான பையனா தான் பார்த்திருக்கு தமிழ் சினிமா. இதுல ஆர்யா, அவன் சினிமா வாழ்க்கையில அடுத்த கட்டத் துக்கு வந்துட்டான். உன்னதம், உன்மத்தம்னெல்லாம் சொல்வாங்கல்ல... அப்படி ஒரு உழைப்பு. ரெண்டு வருஷத்தில் வேற ஒரு ஆளா உருமாத்திட்டேன். க்ளைமாக்ஸ் ஃபைட் ஒண்ணை ஒரு முழு மாசமும் எடுத்தேன். ரெண்டே பேரு... காத்துல கை வீசுறதெல்லாம் கிடையாது. அடி ஒவ்வொண்ணும் நிஜமாவே விழும். மூஞ்சி முகரைஎல்லாம் பொளந்து, முட்டி பேந்துன்னு இதுவரைக்கும் சினிமா பார்த்திராத ஆக்ஷன்!

அம்சவல்லியா வருது பூஜா. சின்சியரான பொண்ணு! சிரிச்ச முகமாவே மொத்தப் படமும் முடிச்சுக் கொடுத்துச்சு. கடைசி வரைக்கும் தன் கஷ் டங்கள் எதையுமே காட்டிக்கலை. வலியும் ஜீவனுமான ஒரு கேரக்டரை, அப்படி ஒரு எனர்ஜியோடு செய்திருக்கு. தான் சினிமாவில் இருந்தேன்னு பெருமிதமா சொல்லிக்கிறதுக்கு, அதோட ஆயுசுக்கும் இந்த ஒரு படம் போதும்!

ஆர்யா, பூஜா போல என் கனவு மொத்தத்தையும் தன் கண்களில் சுமந்தவர் கேமராமேன் ஆர்தர் வில்சன். காசியில், ராஜாவின் பாடல் நாகராவில் ஓடியபோது, வந்து உட்கார்ந்த ஒரு வடநாட்டுச் சாமியார்... அந்த ஏழரை நிமிஷங்களும் வானம் வெறித்து, அருவி போலக் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார். பாடல் முடிந்ததும், என் தலை தொட்டு, 'இதோட அர்த்தம் எனக்குப் புரியும்' என்று சொல்லிட்டுப் போனார். மொழி தெரியாத உலகத்தையும் விழி கசியவிடுகிற ராஜா என்னோடு இருக்கார். அது போதும் எனக்கு!

'15 வருடங்கள்..."
''15 வருடங்கள்... மூன்றே படங்கள். நாலாவது படமான 'நான் கடவுள்' உருவாக்கத்திலும் இவ்வளவு காலம் எடுத்துக்கறீங்களே, உங்க ஃபிலிம் மேக்கிங் ஸ்டைலே இதுதானா?
''

''தீபாவளி, பொங்கல்னு படம் ரிலீஸ் பண்ண நான் பட்டாசோ, கரும்போ இல்லை. எந்த விஷயத்தை எடுத்துக்கணும், அதை எப்படிச் செய்து முடிக் கணும்னு எனக்குத் தெளிவு கிடைக்காம, அதை நான் செய்ய மாட்டேன். இருநூறு லாரி, முன்னூறு கார்களைவெச்சு சேஸிங் படம் எடுக்கிற பரவ சத்தை, படபடப்பைவிட, ரெண்டு மனிதர்களைத் திண்ணை யில உட்காந்து பேசவெச்சே பிரமாதப்படுத்திட முடியும்னு நினைக்கிறேன். அது நான் நினைச்சவிதத்தில் கிடைக்கும் வரை, அந்த ரெண்டு பேரையும் திண்ணையைவிட்டு எழுந்திருக்க விட மாட்டேன். அவ்வளவுதான் விஷயம்!

இதோ, 'நான் கடவுள்' படத்தில், ஆர்யா, பூஜாவைத் தவிர, அத்தனை பேரும் புதுமுகங்கள். உடல் வளர்ச்சி இல்லாத, மன வளர்ச்சி இல்லாத மனிதர்கள். அவங்க கையில வசனப் பேப் பரைக் கொடுத்து, 'பேசுப்பா!'னு படம்பிடிக்க முடியாது. அவங்க ளோட பழகி, அவங்க நம்மோட பழகின்னு ஒவ்வொருத்தரையும் ஒரு குழந்தை போலப் பார்த்துக்கணும். ஆறு மாச ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, இப்போ அவங்க அத்தனை பேரும் என் குடும் பம்.

இன்னொரு பக்கம் காசி சாமி யார்கள். அகோரின்னு சொல்லப் படுகிற, நர மாமிசம் சாப்பிடுற சாமியார்களையும் நடிக்க வெச்சிருக்கேன். இப்படி ஒரு படத்தை உருவாக்குற வலியை, வார்த்தைகளில் புரியவைக்க முடியாது. ஏன்னா, இது வித்தி யாசமான படம்னு சொல்றதே பழைய வார்த்தையாகிப்போச்சு. இது நாம் கருணை காட்டாத, நம்மால் புரிந்துகொள்ளப்படாத, கடைசி மனிதர்களின் உலகம்!''

''சரி, கடவுளை எப்போ கண்ணுல காட்டுவீங்க?''
''கூடிய விரைவில்னு பொது வான வார்த்தைகளில் பொய் சொல்ல விரும்பலை. விஷயம் என்னன்னா, வித்தை பழகின அளவுக்கு நான் வியாபாரம் பழகலை. ஒரு வியாபாரி போலப் பேரம் பேசவும் எனக்குத் தெரியாது. இந்தப் படத்துக்கான செலவு, நினைச்சதைவிட, அதிகமாகிப் போச்சு! அத்தனையும் தவிர்க்க முடியாத செலவு. என் தரப்பில் இருந்து சில கோடிகளை வாங்கிப் போட்டு, படத்தை முடிச்சிருக்கேன்.

'ஹே ஜென்ம மாத்ரம் நா
ஹிதா அபி ஜென்ம நபவிஷ்யதி'னு சொல்வான் என் ருத்ரன். அப்படி ஒரு விடுதலையை வேண்டிக்கிற அளவுக்கு, இந்தப் படத்தை உருவாக்குவதில் உழைச் சிருக்கோம். இயல்பின் ஆழத்தையும் அதன் அர்த்தத்தையும் பிடித்துவிட்டேன் என்பதுதான் என் பெருமிதம்!''

****************************

நன்றி: மையம்.காம். தொடர்புடைய சுட்டி

நான் க‌ட‌வுள் ப‌ட‌த்தின் பாட‌ல்க‌ள் விம‌ர்ச‌ன‌த்திற்கு இந்த‌ சுட்டியை க்ளிக்க‌வும்

நான் கடவுள்‍ - பாடல் விமர்சனம்

கண்ணில் பார்வை - ஷ்ரேயா கோஷல்

கண்ணில் பார்வை போனபின்பும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணிலாத பேதை கண்டால்
கனாக்கள் கூட ஒதுங்கும் ஒதுங்கும்

கண் தெரியாத ஒரு பெண்ணின் பார்வையில் பதியப்பட்டுள்ள பாடல். அழுதுகொண்டே பாடுவது போல் ஸ்ரேயாவின் குரல், வெண்ணெய் போல் அப்படியே உருகி பாடல் முழுவதும் வழிந்தோடுகிறது. கர்னாட்டிக் மியூசிக் சாயலிலும் உள்ளது.

அம்மா உன் பிள்ளை - சாதனா சர்கம்

ஒரு அற்புதமான மெலடி. தாயைப் பற்றி பாசத்துடன் உருகிப் பாடல். சாதனாவின் குரலில் இளையராஜா தாலாட்டியிருக்கிறார். இளையராஜா சரணங்களுக்கு நடுவே இசை ராஜாங்கமே நடத்தியிருக்கிறார். வாலியின் பாடல் வரிகள் பாசத்தின் வீரியத்தை ரொம்ப காட்டமாக எடுத்து உரைக்கிறது. எனக்கு பிடித்த வரிகள்

ஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே,
பந்தங்கள் என்று சொன்னால் துன்பங்களே!
பெண்களை சிலையிலே தொழுகின்ற உலகமே ஏன் சொல்??


மாதா உன் கோவிலில் - மதுமிதா

இது "அம்மா உன் பிள்ளை" பாடலின் அதே ராகத்தோடு மதுமிதாவின் குரல்களில் ஒரே ஒரு நிமிடம் மட்டும் ஒலிக்கும் பாடல்.

பிச்சைப்பாத்திரம் -  மதுபாலகிருஷ்ணன்

ஒரு அநாதை, நான் ஏன் பிறந்தேன், என்னை ஏன் பிச்சையெடுக்க வைக்கிறாய் என்று சிவபெருமானை நோக்கி ஆதங்கத்துடன் பதிவு செய்யப்பட்ட பாடல். தெளிவான நீரோடை போல சீராக மிருதங்கத்தின் சிறிய அடிகளில் மதுபாலகிருஷ்ணனின் குரல் பிச்சைக்காரர்களின் உண்மைகளை சாட்டையடி அடிக்கிறது.

பல்லவி,

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே... எம் ஐயனே!
பிண்டம் என்னும் எலும்பொடு சதை
நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே... எம் ஐயனே!

ஒரு காற்றில் - இளையராஜா

ஹீரோவுக்கு யாரோ ஆறுதல் சொல்வது போல் இளையராஜாவின் குரலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இளையராஜாவின் குரலைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது. தி எவர்கிரீன் வாய்ஸ்.

யாருக்கும் போல ஒரு அன்னை
தந்தை உனக்கும் இருந்தது உண்டு
யாருக்குபோல் ஒரு தேகம் தாகம்
உனக்கும் வளர்ந்தது இங்கு
யாருக்கும் போலே விழிகள்
இருந்தும் உலகமோ இருளில்

ஓம் சிவ ஓம் ‍- விஜய் ப்ரகாஷ்

அகோரிகளின்(நர மாமிசம் உண்ணும் துறவிகள். நரமாமிசம் உண்ணுவது தான் சிவபெருமானை அடைய துறவிகள் செய்யும் கடைசிகட்ட யாகம்.) ருத்ரதாண்டவம். உடுக்கை ஒலியின் ஆக்ரோஷ அதிர்வுகளோடு பதிவு செய்யப்பட்ட பாடல். பாடலைக் கேட்கும்போது நரம்புகள் அதிர்கின்றன். இதுவரை பேய் படங்களில் கொடுக்கப்பட்ட சவுண்ட் எஃபெக்ட் முழுவதும் இந்த ஒரு பாடலில் உள்ளது. இது தான் இந்த ஆல்பத்திலேயே டாப்.

பாடலின் சில வரிகள்.

ஷட்சித் ப்ரமாணம் ஓம் ஓம்
மூலப் ப்ரமேயம் ஓம் ஓம்
அயம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
அஹம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்!

படத்தின் டைட்டிலில் கேப்ஷனாக போட்டுள்ள‌ அஹம் ப்ரம்மாஸ்மி என்றால் நான் கடவுள் என்று அர்த்தம். பணம் ,வெற்றி, பதவி, அதிகாரம் என்பவை துச்சமாக மதிக்கப்பட்டு இவைகளை தேடுபவர்களை பைத்தியகாரர்களாக தான் அன்றைய உலகம் பார்த்தது. ஒவ்வொருவடைய முழு மூச்சும் இந்த பிரபஞ்சத்தின் இரகசியத்தை தேடுவதில் இருந்தது. அந்த இரகசியம் என்பது "அஹம் ப்ரம்மாஸ்மி" அதாவது "நான் கடவுள்" என்பதே. நன்றி கல்காரி சிவாவின் வலைப்பூ. சுட்டி இதோ.

ஒட்டு மொத்தமாக இந்த ஆல்பத்தில் மிகப்பெரிய சிறப்பம்சம் இளையராஜாவின் இசையும், வாலியின் பாடல் வரிகளும். நான் கடவுள் என்ற பாலாவின் மூன்று வருட தவத்தின் இசை ஆல்பத்தை இளையராஜா, வாலி என்ற இரு தூண்கள் தூக்கி நிறுத்துகின்றார்கள்.


DISCLAIMER: பாடல்களை குத்துப்பாட்டு, காதல் டூயட், ஹீரோ அறிமுகப்பாட்டு என்றெல்லாம் வகைப்படுத்த கன்ஃப்யூஸ் பண்ணத் தேவையில்லை. அந்த கடைசி பாடல் தவிர, அனைத்து பாடல்களும் சோகத்தில் கசக்கி பிழிந்து உயிரை உருக்கும் இசையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஸ்டைல் பிடிப்பவர்கள் மட்டும் கேட்கலாம். மற்றவர்கள் கேட்டால் அன்னைக்கு நாள் டோட்டலி அவுட், என்னை மாதிரி.

புத்தாண்டில் போலீஸ் ஸ்டேஷன்!

புத்தாண்டு இரவின் உற்சாகத்தை ரசிப்பதற்காக நான் திருவான்மியூரில் இருக்கும் என் நண்பனின் வீட்டுக்கு இரவு 9 மணி வாக்கில் கெளம்பினேன். புத்தாண்டு அன்று நல்ல டீசண்டான டிரஸ் போட்டு கோவிலுக்கு போக வேண்டும் என்பதால ஒரு செட் டிரஸ், சோப், ப்ரஷ் எல்லாம் எடுத்துக் கொண்டு சென்றேன். தமிழகத்தின் தலைநகரில் நான் கொண்டாடும் 3‍-வது நியூ இயர்.

திருவான்மியூரில் உள்ள ஒரு செட்டிநாடு ஹோட்டலில் 10.30 மணிக்குள் சிக்கன் பிரியாணியும் ட்ரை சிக்கன் ஃப்ரையும் சாப்பிட்டு விட்டு அருகில் உள்ள பீச்சுக்கு நடையைக் கட்டினோம். பீச் முழுவதும் இளைஞர்கள் கூட்டம். கையில் பீர் பாட்டிலுடன். திருவான்மியூர் R.T.O விலிருந்து பீச் போகும் அந்த ரோட்டில் அசுரத்தனமான வேகத்தில் பைக்கில் பறந்து கொண்டிருந்தனர். இவ்வளவு கூட்டம் பீச்சில் பீர் பாட்டிலோடு சுத்துவதை போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டது மட்டுமில்லாமல் அவர்களுக்கு பாதுகாப்பும் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு மருந்துக்கு கூட சுடிதார் பெண்களைக் காணவில்லை. சுடிதார் பெண் ஏன் சேலை கட்டிய பேரிளம்பெண்கள் கூட அந்த கூட்டத்தில் பார்க்க முடியவில்லை. மெரீனாவிலும், பெசன்ட் நகரிலும் குடும்பத்துடன் அவர்கள் போயிருக்கலாம்.

சரி, நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று எதிர்ப்படும் எல்லா 'குடி'மகன்களுக்கும் "ஹேப்பிபிபி நியூயூயூ இயர்" என்று கத்திவிட்டு 12.45 மணிக்கு வீட்டில் வந்து செட்டில் ஆகிவிட்டோம். கொஞ்சம் ரிலாக்ஸாகி டி.வியை ஆன் பண்ணி சன் டிவி பார்த்தால் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அனைவரும் திண்டுக்கல் சாரதி பாட்டுக்கு டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். மார்கெட்டிங்கின் உச்சகட்டம். படத்தில் சரக்கு இல்லையென்றால் என்ன தான் மார்கெட்டிங் பண்ணினாலும் ஒண்ணும் தேறாது, மக்கள் ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்று புண்ணியவான் யாராவது அவர்களுக்கு சொன்னால் நல்லது.

ஒரு வழியாக ஃப்ரெண்ட்ஸ்க்கெல்லாம் ஃபோனில் விஷ் பண்ணிவிட்டு தூங்குவதற்கு ரெடியானேன். அப்போது 1.15 மணிக்கு என்னுடைய நெருங்கிய தோழி கால் பண்ணியதால் 15 நிமிஷம் பேசினேன். அந்த பொண்ணும் திருவான்மியூரில் தான் இருக்கிறாள். நான் தூங்கும்போது 1.45 இருக்கலாம்.
புத்தாண்டின் அதிகாலை 7 மணி இருக்கலாம் என்று நினைக்கிறான். அதே தோழி, தனது தோழியின் மொபைல் ஃபோனில் இருந்து கால் பண்ணி, மிகவும் படபடப்புடன் "என் ரூமில் வைத்து இருந்த மொபைல் ஃபோன், ஹேண்ட் பேக் எல்லாம் திருடு போய் விட்டது" என்றாள்.

புத்தாண்டின் முதல் செய்தியே அதிர்ச்சியுடன். அந்த ஹேண்ட் பேகில் அவளுடைய 7000 ரூபாய் பணம், டிரைவிங் லைசன்ஸ், ஏ.டி.எம் கார்டு இருந்தது. கொஞ்ச நேரத்தில் நானும் அவர்கள் வீட்டுக்கு சென்று நன்றாக தேடிப் பார்த்தோம். எதுவும் அகப்படவில்லை. நைட் தூங்கும் போது பால்கனியை சரியாக மூடாததால் அது வழியாக யாராவது திருடன் வந்திருப்பான் என்று நினைத்தோம்.

சிறிது நேர முயற்சிக்கு பின், போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளையிண்ட் கொடுக்கலாம் என்று முடிவு பண்ணினோம். போலீஸிடம் கம்ப்ளையிண்ட் கொடுத்தால் மட்டும் உடனே கண்டுபிடித்து கொடுத்து விடுவார்கள் என்று நம்பிக்கை துளியும் இல்லை. இருந்தாலும் வேறு யாரும் லைசன்ஸ், ஏ.டி.எம். கார்டு எதையும் மிஸ் யூஸ் பண்ணக் கூடாது என்ற ஒரு காரணத்திற்காக ஸ்டேஷன் செல்ல முடிவு செய்தோம்.

என் வாழ்நாளில் இதுவரை போலீஸ் ஸ்டேஷன் சென்றது ஒரே ஒரு முறை மட்டும். ப்ளஸ் டூ மார்க் ஷீட் தொலைந்து போனதால் புதியது வாங்குவதற்கு போலீஸ் ரிப்போர்ட் வேண்டும் என்று சொன்னதால். வெகுஜன மக்களை கொஞ்சம் கூட மதிக்காத Attitude அரசுத் துறையில் வேலை பார்க்கும் எல்லாருக்கும் இருக்கும் என்றாலும் போலீஸ் ஸ்டேஷனில் ரொம்ப அதிகம் என்று நான் நினைக்கிறேன். டாஸ்மாக்கில் நுழைந்தது போன்று குப்பென்று மூச்சில் அடிக்கும் வாடை எப்போதும் எல்லா ஸ்டேஷனில் இருக்கும். இரண்டாவது, என்னுடைய பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன். நான் அப்போது காலேஜில் படித்துக் கொண்டிருந்தேன். இதுக்காக ஊருக்குக் கெளம்பலாம் என்று நான் இருக்கும் போது என் அப்பா போன் பண்ணி "200 ரூபாய் கொடுத்தால் போதும் நீ வரத் தேவையில்லை என்று சொல்லிவிட்டார்கள்" என்றார். வாழ்க போலீஸ் ஜனநாயகம்!! வாழ்க லஞ்சம்!! என்று நினைத்துக் கொண்டேன்.

இது மூன்றாவது முறை. மருந்தீஸ்வரர் கோவிலுக்கு பின்னால் இருக்கும் J-6 போலீஸ் ஸ்டேஷனுக்கு நாங்கள் இருவரும் சென்றோம். இந்த முறை எல்லாரும் கொஞ்சம் டீசன்டாகவே பேசினார்கள். "இதெல்லாம் கேர்லெஸ். கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம். எப்பவாவது இந்த ஏரியாவில் திருடன் எவனாவது மாட்டினால் விசாரிக்கிறோம்" என்று ஸ்ட்ரெய்ட்டாவே சொல்லிவிட்டார். சும்மா பேருக்கு கம்ப்ளெயிண்ட் மட்டும் எழுதிக் கொடுத்து வந்து விட்டோம்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், போலீஸ்காரர்களுக்கு அப்படி என்ன வேலை இருக்கிறது? அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது, முக்கியமான தினங்களில் பொது மக்கள் கூடும் இடங்களில் அசம்பாவிதம் ஏற்படாமல் பாதுகாப்பு அளிப்பது, கொலை, கற்பழிப்பு, கடத்தல் போன்ற ஹை டிகிரி க்ரைம்களை இன்வெஸ்டிகேட் பண்ணுவது, இரவு ரோந்து, சிட்டியில் ரொம்ப குப்பையால் நாற்றம் அடித்தால் குப்பை அள்ளுவது (எப்போவாவது)போன்ற வேலைகள் தான். அதே சமயம் சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருப்பவருடைய டூ வீலர் தொலைந்தால், வீட்டில் கொள்ளையடித்து போய்விட்டால் அதை போலீஸிடம் கம்ளையிண்ட் பண்ணினால் அவர்கள் அதை எவ்வள‌வு சீரியஸாக விசாரிப்பார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி!

தோழியை ஆறுதல்படுத்திக் கொண்டு, அன்று நாள் முழுவதும் புத்தாண்டிற்கான வழக்கமான உற்சாகம் எங்கள் இருவரிடமும் இழந்து இருந்தது. போலீஸ் ஸ்டேஷனுக்கு புத்தாண்டு அதுவுமாக போனது பற்றி செண்டிமென்டாக ஃபீல் பண்ணவில்லை என்றாலும், புதிய ஆண்டின் முதல் தினமே பணம் மற்றும் ஃபோனை இழந்து நின்றது கவலையை அளித்தது.

*****************************

என்ன கொடுமை சார் இது????

"நான் கடவுள்"க்கு டஃப் காம்படிஷன் கொடுக்க காத்திருக்கும் கேப்டனின் "எங்கள் ஆசான்"!


நாயகன், 10 நாள் ஓடினதே பெரிய விஷயம். இதில் கலக்கலான 146-வது நாள் போஸ்டர்


தமிழ்சினிமா வாழ்க!!!

Related Posts with Thumbnails