சாட் வித் கடவுள்!

நேற்று இரவு ஆன்லைனில் இருந்தேன். அப்போது புதிதாக ஒருவர் ஆன்லைனில் வந்து ping பண்ணினார்.

சாமி: கணேஷ், உங்கள் சியாமளா தொடர் கதை நன்றாக இருக்கிறது.

கணேஷ்: தேங்க்ஸ் :) நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?

சாமி: நான் கடவுள்

கணேஷ்: அது பாலா படம். ஹலோ, காமெடி பண்ணாதீங்க. உங்க பேர் என்ன?

சாமி: இல்லை மகனே! என் பெயர் சிவபெருமான் ஃப்ரம் கைலாயம்.

(மெயில் ID செக் பண்ணீனேன். siva.kailayam2009@gmail.com என இருந்தது. லைட்டாக மெர்சல் ஆனேன்.)

கணேஷ்: ஸாரி மிஸ்டர் சிவா. என்னால நீங்க கடவுள்ன்னு சொல்றத நம்ப முடியல. நான் நம்புற மாதிரி ஒண்ணு சொல்லுங்க பார்ப்போம்

சாமி: அப்படியா. நீ கறுப்புக்கலர் ஷார்ட்ஸூம், வொயிட் கலர் டீ ஷர்ட்டும் போட்டிருக்கிறாய். உள்ளே கூட..

கணேஷ்: போதும் போதும் நிறுத்துங்கள். நான் நம்புறேன். கொஞ்சம் விவகாரம் பிடித்த ஆளா இருப்பீங்க போல இருக்க‌. (சுற்றும்முற்றும் பார்த்தேன். ரூமிலும் யார் இல்ல. நான் வேற இப்ப தான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணேன். யாரும் கேமரால வாட்ச் பண்றாங்களோ?)

சாமி: விவகாரம் பிடித்த ஆள் இல்ல மகனே.. முக்காலமும் அறிந்த யோகி!

கணேஷ்: என்ன நீங்க வரிசையா படம் பேரா சொல்லிக்கிட்டு இருக்கீங்க. சாமி, நீங்க‌ வ‌ந்த‌ மேட்ட‌ர் என்ன‌?

சாமி: சரி..நான் வ‌ந்த‌து உங்க‌ளை பாராட்ட‌த் தான். க‌ணேஷ்‍ சியாம‌ளா க‌தை ந‌ன்றாக‌ உள்ள‌து. சொந்த‌க் க‌தையையும் ப‌ப்ளிக்காக‌ எழுதும் தைரிய‌த்தை நான் பாராட்டுகிறேன்

கணேஷ்: சாமி, நீங்க‌ளுமா.. நிஜ‌மாவே இது க‌ற்ப‌னைக் க‌தை தான் சாமி

சாமி: என்னை ஏமாற்ற‌ முடியாது ம‌க‌னே. ஆனாலும் என‌க்கு உன்மேல் பொறாமையாக‌ இருக்கிற‌து

கணேஷ்: ஏன்?

சாமி: இந்த‌ தொட‌ர் மூல‌ம், ஏக‌ப்ப‌ட்ட‌ பெண் ந‌ண்ப‌ர்க‌ள் உன‌க்கு கிடைத்துவிட்டார்க‌ள் போல. என்ஜாய் பண்ணுகிறாய். வாழ்க வளமுடன்.

கணேஷ்: அதெல்லாம் இல்லை சாமி. க‌மெண்ட்ஸ் ப‌டிச்சிட்டு நீங்க‌ளும் இப்ப‌டி சொல்லாதீங்க.

சாமி: நான் கமெண்ட்ஸ் வச்சி சொல்லவில்லை. இப்ப‌க் கூட‌ உங்க‌ள் தொட‌ரை ப‌டிக்க‌ சொல்லி, ர‌ம்பை தான் லிங்க் கொடுத்தாள். அதான் பொறாமை :(

கணேஷ்: நீங்க‌ள் ர‌ம்பை என்று சொன்ன‌து தொடைய‌ழ‌கி ர‌ம்பாவா?

சாமி: முட்டாள், அவ‌ள் இல்லை. இங்கே நாட்டியமாடும் அழ‌கிக‌ளில் முத‌ன்மை பெற்ற‌ பேர‌ழ‌கி!

கணேஷ்: ஹூம்ம். எல்லாம் கைக்கு எட்டாத‌ தொலைவில் தான் உள்ள‌து. ஒரு ஃபிக‌ர் கூட‌ கிடைக்காத‌ மொக்கை பையன் சாமி நான். என‌க்கு எப்ப‌ க‌ல்யாண‌ம் ஆகும்?

சாமி: ம‌க‌னே, ஒரு த‌த்துவ‌ம் சொல்கிறேன் கேள். மொக்கை பைய‌னுக்கு சூப்ப‌ர் ஃபிக‌ரும், சூப்ப‌ர் பைய‌னுக்கு மொக்கை ஃபிக‌ரும் வாழ்வில் அமையும். அத‌னால் க‌வ‌லைப்ப‌டாதே

கணேஷ்: சியாம‌ளா மாதிரி அமையுமா?

சாமி: க‌ண்டிப்பாக.. சியாமளாவே அமைவாள்

கணேஷ்: அவ‌ள் எப்ப‌டி இருப்பாள்?

சாமி: மேலே சொன்ன‌ த‌த்துவ‌த்தை ப‌டிக்க‌வும். சாமி வாயில இருந்து சூப்பர் ஃபிகர் என்று சொல்ல‌ வைக்காதே ம‌க‌னே

கணேஷ்: என் நேர‌ம். ச‌ரி சாமி. சாமியெல்லாம் சுத்த‌ த‌மிழ்ல‌ தானே பேசும். நிறைய தமிழ் படத்துல பார்த்து இருக்கேன். நீங்க‌ ம‌ட்டும் எப்ப‌டி லோக்க‌ல் இங்க்லீஷ்ல‌ க‌ல‌ந்து க‌ட்டி பேசுறீங்க‌

சாமி: மேலோக‌த்திற்கு வரும் மானிட‌ ஜ‌ந்துக‌ளிட‌ம் பேசி பேசி, நாக்கில் ஆங்கில‌ம் ஒட்டிக் கொண்ட‌து. நான் சுத்த‌ த‌மிழில் பேசினால் உன‌க்கு புரியாது.

கணேஷ்: ஓ.கே. சாமி. நீங்க‌ளும் ஹைடெக்கா மாறிட்டீங்க‌. லேப்டாப், சாட்டிங் என்று க‌ல‌க்குகிறீர்க‌ள். எப்ப‌டி இதெல்லாம்?

சாமி: போன‌ வார‌ம் பெங்க‌ளூரில் ஒரு சாஃப்ட்வேர் இளைஞ‌ன், ஓவ‌ராக‌ த‌ண்ணிய‌டித்து வ‌ண்டி ஓட்டிய‌தில் ஆக்சிடென்ட் ஆகி இற‌ந்து இங்கே வ‌ந்துவிட்டான். வ‌ரும்போது லேப்டாப்போடு மேலோக‌ம் வ‌ந்தான். அவ‌ன் தான் இந்த‌ வார‌ம் முழுவ‌து லேப்டாப் ப‌ய‌ன்பாடு ப‌ற்றி K.T கொடுத்தான்.

கணேஷ்: ம்ம். லேப்டாப், K.Tன்னு பின்றீங்க‌

சாமி: ம‌க‌னே, உன்னுடைய‌ ஃபோட்டோக்க‌ளை அனுப்பு.

கணேஷ்: இதோ.. அனுப்புகிறேன்

கணேஷ்: சாமி ஃபோட்டோ வ‌ந்திருச்சா? ஏன் கேட்டீர்க‌ள்?

சாமி: இல்லை. உன் Blog இளமை விளையாட்டெல்லாம், ரொம்ப‌ நாளாக‌ பொண்ணு தேடிக் கொண்டிருக்கும் என் ம‌க‌ன் விநாய‌க‌னின் திருவிளையாட‌லில் ஒன்றாக இருக்குமோ என‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்த‌து. உன் பேர் வேற கணேஷ். அதான் ஃபோட்டோ கேட்டேன். ஆனால் இப்போது நான் ந‌ம்புகிறேன், நீ விநாய‌க‌ர் இல்லை.

கணேஷ்: இப்போது ம‌ட்டும் நான் இல்லை என்று எப்ப‌டி உறுதியாக‌ ந‌ம்புகிறீர்க‌ள்?

சாமி: விநாய‌க‌ன் க‌றுப்பா ப‌ய‌ங்க‌ரமா இருப்பான். நீ ப‌ய‌ங்க‌ர‌ க‌றுப்பாய் இருக்கிறாய்.

கணேஷ்: :(( சாமி, இருந்தாலும் உங்களுக்கு ந‌க்க‌ல்,குசும்பு எல்லாம் ஜாஸ்தி.

சாமி: ச‌ரி விடு, உன்னோடு பேசிய‌தில் ச‌ந்தோஷ‌ம். உன‌க்கு ஏதாவ‌து வேண்டுமா?

கணேஷ்: ஆம்

சாமி: என்ன‌ ம‌க‌னே?

கணேஷ்: ர‌ம்பையின் இ-மெயில் ID. அவ‌ளுட‌ன் சாட் ப‌ண்ண‌ வேண்டும். அவ‌ளுட‌ன் சேர்ந்து ஊர் சுற்ற‌ வேண்டும்

சாமி: எனக்கு அந்தப்புர‌த்தில் இருந்து கால். அப்புற‌மாக‌ பேச‌லாம். பை

siva.kailayam2009@gmail.com is offline and can't receive messages right now because chat is off the record.

************************************

சியாமளா-8: பிரச்சினையில் பி.எம்?

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10

மறுபடியும் சீட்டில் உட்கார்ந்தான். கொஞ்சம் கூட யோசிக்காமல் பதில் சொன்னான், "அருண், சியாமளா வருவதாக இருந்தால், நான் ஆன்சைட் போவதற்கு ரெடி?"

"வாட்?" எனச் சொல்லிக் கொண்டே, அரை நிமிடம் உதடு பிரிக்காமல் சிரித்தார்.

சிரிப்பை தொடர்ந்து கொண்டே, "நீங்க கம்பெனிக்கு புதுசுன்னு நெனைக்கிறேன், அதுவும் இல்லாம யூத் வேற. ஒரு ஃப்ரண்டா சொல்றேன். நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு இல்ல சியாமளா"

"ம்ம்ம்ம்" இப்போ கணேஷ் டர்ன். அமைதியாக சிரித்துக் கொண்டே, அருணின் பிரசங்கத்தை ரசிக்க‌ ஆர‌ம்பித்தான்

"ரொம்ப ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு லேடி. போன பார்ட்டில, தண்ணியடிச்சிட்டு கலாட்டா பண்ண பையனை......"

"I know that history"

"ஓ.கே. ஃபைன்.. குட் கேர்ள். வொர்க் விஷ‌ய‌த்துல‌ ரொம்ப‌ க‌ரெக்ட்டா இருப்பாங்க‌. அவ‌ங்க‌ ஏற்கென‌வே ஆன்சைட் போயிருந்த‌ க்ளைய‌ண்ட் தான். அவ‌ங்க‌ தான் சியாம‌ளாவ‌ திரும்ப‌ வ‌ர‌ச்சொல்லி ரிக்வெஸ்ட் ப‌ண்ணியிருந்தாங்க‌"

"ஓ.. க்ரேட்"

"ஆனா வ‌ம்பு ப‌ண்ற‌ ப‌ச‌ங்க‌ள‌, அடிச்சி துவைச்சிடுவாங்க‌. என‌க்கு தெரிஞ்சு, நெறைய்ய‌ பேரு ஏதோ ஒரு வ‌கைல‌ சியாம‌ளாவால‌ பாதிக்க‌ப்ப‌ட்டு இருக்காங்க‌. ஸோ.. நான் என்ன‌ சொல்ல‌ வ‌ர்றேன்னா?"

"???"

"சியாம‌ளாவுக்காக தான் ஆன்சைட் போறதுக்கு ஒத்துக்கிட்டீங்க‌ன்னா, ம‌றுப‌டியும் ஒரு த‌ட‌வை யோசிச்சீக்கோங்க‌. ஏன்னா, சியாம‌ளா அவ‌ங்க‌ள‌ க‌ட்டிக்க‌ப் போற‌வ‌ன‌ த‌விர‌ யாருக்கும் ப‌ய‌ப்ப‌ட‌ மாட்டாங்க‌.. ஐ மீன்,ஃப்ரீயா கூட‌ பேச‌ மாட்டாங்க‌"

"அப்ப‌டியா சொல்றீங்க‌.. ஐ ஸீ" எக்க‌ச்ச‌க்க‌ புன்ன‌கையை வெளியில் கொட்டாம‌ல் உள்ளுக்குள் குதித்தான்

"ஸோ, உங்க‌ முடிவு என்ன‌?"

"நீங்க‌ சியாம‌ளாகிட்ட‌ இது ப‌த்தி பேசிட்டு சொல்லுங்க‌.. அவ‌ங்க‌ ரெடியா இருந்தா, நானும் ரெடி. இல்லைன்னா, ரெண்டு பேருக்கு ப‌திலா புதுசா ரெண்டு பேர் தேடிக்கோங்க‌"

க‌ணேஷை ஏற‌ இற‌ங்க‌ பார்த்தார் அருண். பின் மனதினுள், "இவன் என்ன லூஸா? சொந்த செலவுல சூனியம் வச்சிக்குறானே?" என நினைத்துக் கொண்டிருக்கும்போது,

"தேங்க்ஸ்" என்று ம‌றுப‌டியும் ஃபார்ம‌லாக‌ கை கொடுத்துவிட்டு கெள‌ம்பினான் க‌ணேஷ்.

இப்போது அருண் அறையில் சியாம‌ளா.

"சியாம‌ளா, நேரா நான் விஷ‌ய‌த்துக்கு வ‌ர்றேன். நீங்க‌ திரும்ப‌வும் UK க்ளைய‌ண்ட் ப்ளேஸ்க்கு போக‌ணும். நீங்க‌ ரெடியா?"

முழுதாக‌ அரைநிமிட‌ம் யோசித்தாள். "ஸாரி, அருண். என்னால‌ இப்ப‌ போக‌ முடியாது"

"என்ன‌ கார‌ண‌ம்ன்னு தெரிஞ்சிக்க‌லாமா?"

"கொஞ்ச‌ம் பெர்ச‌ன‌லா வேலைக‌ள், ஃபேமிலி க‌மிட்மெண்ட்ஸ்"

"ம்ம்.. ஓ.கே. ஸோ, அப்ப‌டின்னா, உங்க‌ளுக்கு ப‌திலா நான் புதுசா ரெண்டு பேரை தேட‌ணும். ஃபைன், ஐ வில் டேக் கேர்"

"ரெண்டு பேரா? வாட் டூ யூ மீன்?"

"யூ நோ க‌ணேஷ் ரைட். அவ‌ர்கிட்ட‌ தான் நான் ஃப‌ர்ஸ்ட் ப்ரோப்ப‌ஸ் ப‌ண்ணேன். ஃப‌ர்ஸ்ட், பெர்ச‌ன‌ல் வேலை, பிர‌ச்சினைன்னு சொல்லிக்கிட்டு இருந்தார். அப்புற‌ம் உங்க‌ பேரைச் சொன்ன‌தும் ஓ.கே சொல்லிட்டாரு"

" " மெல்லிதாக உதட்டின் ஓரத்தில் புன்னகை பரவ ஆரம்பித்தது.

"இதுல‌ Funny thing என்ன‌ன்னா, நீங்க‌ வ‌ர‌லைன்னு சொன்னா அவ‌ரும் வ‌ர‌மாட்டேன்னு சொல்லிட்டாரு. He is Crazy!!! உங்க‌ள‌ ப‌த்தி அவ‌ருக்கு தெரியாதுன்னு நெனைக்கிறேன்"

" " அந்த மெல்லிய புன்னகை காது வழி கடந்து நெற்றியின் நடுவில் வந்து இணையும் போது, முழுவதும் வெட்கத்தில் சிவந்து இருந்தாள்.

"ஓ.கே. சியாம‌ளா. நாட் அ ப்ராப்ள‌ம். ஐ வில் டேக் கேர்"

"அருண், ஒன் செகண்ட். நாங்க என்னைக்கு ஆன்சைட் கெளம்பணும்?"

"வாட்?" தேவையில்லாமல் அதிர்ச்சியான‌தில் டென்ஷ‌ன் ஆனான்

" "

"ச‌த்திய‌மா புரிய‌ல‌? ஏன் ரெண்டு பேரும் ஒரே மாதிரி சொல்றீங்க‌?" வ‌ழுக்கைத் த‌லையில் ஒட்டியிருந்த‌ வேர்வையை க‌ர்ச்சீப்பில் ஒற்றி எடுத்த‌ப‌டி கேட்டார் அருண்.

"க‌ணேஷ் சொன்ன பெர்ஸனல் பிர‌ச்சினை, நான் தான். நான் சொன்ன‌ பெர்ஸ‌ன‌ல் க‌மிட்மென்ட்ஸ், க‌ணேஷ் தான்"

"Why?"

"அய்யோ க‌ட‌வுளே, இன்னிக்கி காலைல‌ இருந்து எத்த‌னை பேர்கிட்ட‌ தான் இத‌ சொல்ல‌ வேண்டி இருக்குமோ? அவ‌ன் கூலா எஸ்கேப் ஆகிட்டான்? இடிய‌ட்" என்று ம‌ன‌துக்குள் கடவுளையும், கணேஷையும் திட்டிக் கொண்டிருந்தாள்.

"ஹ‌லோ சியாம‌ளா.. I asked WHY?"

"He is my Fiancee!!! We are getting married SOOOOON!"

"வாட்?" இது தான் அருணுக்கு நிஜ‌ ஷாக்.

"நீங்க‌ ஏன் அருண் ஷாக் ஆகிறீங்க‌?"

"இந்த‌ மேட்ட‌ர் எல்லாம் தெரியாம‌ கணேஷ்கிட்ட‌ உங்க‌ள‌ ப‌த்தி ஏதேதோ சொல்லிட்டேன்?" சோக‌த்தில் மூழ்கினார் அருண்

"ஹா ஹா ஹா" அந்த அறையே அதிர‌ அதிர‌ சிரித்தாள், க‌தாநாய‌கி சியாம‌ளா.

(இள‌மை துள்ள‌லுட‌ன் அடுத்த‌ ப‌குதியை ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்க‌வும்)

**********************************

மனைவியின் சிநேகிதன்(?)

பதிவர் ப்ரியா அவர்கள் ஒரு கவிதை, அதாவது கணவனின் சிநேகிதி(?) என்ற பெயரில் பதிவிட்டார். உடனே, பதிவரும், நண்பருமான ராஜி என்கிற ராஜலட்சுமி உடனே பதில் எதிர் கவிதை எழுத வேண்டும் என்று கொலைவெறியுடன் யோசித்தார். ஆனால், அவரின் கவிப்புலமையுடன் கம்பேர் பண்ணினால் இது ஜூஜூபி அதாவது தூசி போல. அதனால் அந்த வேலையை என்னிடம் கொடுத்தார்.

ஏதோ என்னால் முடிந்த அளவு யோசித்ததில், இதோ கவிதை தயார். கூடவே, இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், இது நான் குத்துமதிப்பாக எழுதியது. இன்னும் கல்யாணமே ஆகாத எலிஜிபிள் பேச்சிலர் நான்(எப்படியெல்லாம் மார்கெட்டிங் பண்ண வேண்டி இருக்கு. ச்சே). ஏதாவது தவறு இருந்தால், மன்னித்தருள்க. மேலும் மேலதிக தகவலுக்கு பதிவர் ப்ரியா அவர்களின் பதிவுக்கு செல்லவும்.

ஓவர் டூ கவிதை OR கவிதை மாதிரி ஒரு கிறுக்கல்!

புதிதாக‌ வந்தவனின் ப்ளேசர்
திடீரென நினைவுபடுத்தியது
பரணில் போட்ட‌
வாழ்வின் முதல் நிச்சயதார்த்த ப்ளேசர்

ட்ரிம் மிலிட்டரி உடல்
தனியாக ட்ரெயினர் வைத்து
ஜிம்மில் எக்சர்ஸைஸ் செய்வானோ?
ஜாகிங் ஓடவேண்டும் ஹூம்ம்
வேற வழியில்லை

X Men Wolverine பற்றி
அவர்கள் பேசிக் கொண்டபோது
"போப்பா, Undertaker தெரியாதா?"
என மகன் கேட்டது
அவசரமாக நினைவில்

சானியா மிர்சா தாண்டி தெரியாத
டென்னிஸில் ஃபெட‌ர‌ரா, ந‌டாலா என‌
ப‌ந்த‌ய‌ம் க‌ட்டிக் கொண்டு அவ‌ர்க‌ள்
பார்த்த போது ப‌ஞ்ச‌ர் ஆன‌து
எனது 20-20 மேட்ச் லைவ்

"இன்னிக்கி சன்டே டீம் லஞ்ச் வெளில‌"
அவன் காலையில்
கால் பண்ணி நினைவுபடுத்தும்போது
என் உப்புமாவுடன் நானும்
ஹாட்பாக்ஸில் சூடாக!

***********************************

கண்ணசைவில் மட்டும்!


சில நேரங்களின்
சிநேகமற்ற உஷ்ண பார்வைகளிலும்
பல நேரங்களின்
சிநேக புன்னகைகளிலும்
சில நேரங்களின்
ஓயாத பேச்சுகளிலும்
பல நேரங்களின்
அடம்பிடிக்கும் கண்ணீர்களிலும்
சில நேரங்களின்
அதிகார திமிர்களிலும்
இன்னும் ப‌ல‌ சில‌ நேர‌ங்க‌ளின்
பல பல அர்த்தங்கள்
புரியாமல் புரியாம‌லே இருந்தாலும்
உன் சிறு க‌ண்ண‌சைவு
பார்வையின் ப‌ரிணாம‌ங்க‌ளை உட‌னே
ப‌ற்றிக் கொள்கிறேன்
க‌ட்டிலில் மட்டும்!

*******************************

சியாமளா-7: ஆன்சைட் போகும் கணேஷ்!

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10

சியாமளா அப்படி சொல்லி முடித்ததும், மொத்த கூட்டமும் ஷாக்காகி கணேஷை பார்த்தது. கணேஷால் எந்த ரியாக்சனும் முகத்தில் காட்ட முடியவில்லை. சரியாக ஒரு நிமிடம் கழித்து,

ஹரிணி, "ஐயாம் ஸாரி" என்று சொல்லிவிட்டு சாப்பாட்டு தட்டை எடுத்துக் கொண்டு கெளம்பிவிட்டாள்.

சாப்பிட்டு முடியும் வரை யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. கைகழுவும் இடத்தில் சிறுவாணி, "கணேஷ், உன்ன பார்த்தா எனக்கு பாவமா இருக்கு. i'm sorry for you" என சாபம் கொடுப்பது போல் சொல்லிவிட்டு கெளம்பினாள். பாப்கட் தலை, "ம்ம். ம்ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்" என்றாள். எல்லாரும் அவரவர் இடத்துக்கு போய்விட்டனர்.

கணேஷ்க்கு இருப்பு கொள்ளவில்லை, "என்னடா, இது அவன் அவனுக்கு எத்தனையோ பிரச்சினை இருக்கு. எனக்கு மட்டும் ஏன் யார்ன்னு தெரியாத பொண்ணுங்க எல்லாம் பிரச்சினையா இருக்கு.. ச்சே" என தோன்றியது. சியாமளாவுடன் கொஞ்ச நேரம் பேச வேண்டும் போல் இருந்தது. எழுந்து பார்த்தால் அவளும் இடத்தில் இல்லை.

ஹரிணி உடல்நிலை சரியில்லை என சொல்லிவிட்டு ஆஃபிஸ்க்கு லீவ் போட்டு சென்றுவிட்டதாக இ-மெயில் வந்து இருந்தது. அந்த இ-மெயிலை ஷிஃப்ட் டெலீட் செய்தான்.

வெளியே தம் அடிக்கலாமா என யோசித்தான். பின் "வேண்டாம், சியாமளாவுக்கு தெரிந்தால், இன்னுமொரு பிரச்சினையை சமாளிக்க வேண்டியிருக்கும்" என தெளிந்தான். அரைமணிநேரம் அப்படி இப்படி என்று ஓடியது. சியாமளாவுக்கு கால் பண்ணினான். அவள் கட் பண்ணிவிட்டாள். திரும்பவும் 5,6 முறை ட்ரை பண்ணினான். அவள் கட் பண்ணிக் கொண்டே இருந்தாள். வேறு வழியில்லாமல் SMS அனுப்பலாம் என முடிவு செய்தான்.

"I'm really sorry. Whatever she told, thats true. But i swear, i will never touch liquor henceforth. I didn't influence her to talk like. SORRY again :("

அனுப்பி ஒரு மணிநேரம் ஆகியும் அவளிடம் இருந்து ரிப்ளை வரவில்லை. அதுவே க‌ணேஷை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணியது. "நேரில் அழைத்து தனியாக பேசலாமா?" என ஒரு கட்டத்தில் முடிவு செய்தான். இன்னைக்கு ஹெல்மெட் கொண்டு வராததால் முடிவை அவசரம் அவசரமாக மாற்றிக் கொண்டான்.

வேறு ஒரு ப்ராஜெக்ட்டின் பி.எம், அவசரமாக மீட் பண்ணவேண்டும் என்று இ-மெயில் அனுப்பி இருந்தார்.

அவருடைய கான்ஃபரன்ஸ் ரூம் போய் பார்த்தான் கணேஷ்.

"ஹாய் கணேஷ், ஐயாம் அருண்" புது ப்ராஜெக்ட்டின் பி.எம் கை கொடுத்தார்.

"ஹெல்லோ" என்றான் கணேஷ், சேரில் உட்கார்ந்தபடி

"ஓ.கே. ஆக்சுவலி நான் உங்கள வரச் சொன்னதுக்கு காரணம், எங்க ப்ராஜெக்ட்ல‌ ஆன்சைட்க்கு ஆட்கள் தேவைப்ப‌டுது. எக்ஸ்பீரிய‌ன்ஸ் ம‌க்க‌ள் எங்க‌ டீம்ல‌ இல்லை. அத‌ ப‌த்தி பேச தான் உங்க‌ள‌ கூப்பிட்டேன்"

"ம்ம்ம்" பெரிதாக‌ எந்த‌ ரியாக்ச‌னும் காட்ட‌வில்லை

"ஸோ, நீங்க‌ இன்ட்ரெஸ்ட்டா இருந்தா நெக்ஸ்ட் வீக் U.K கெள‌ம்புற‌ மாதிரி இருக்கும். So, Are you interested?"

ஒரு நொடி கூட‌ யோசிக்காம‌ல் உட‌னே க‌ணேஷ், "ஸாரி அருண். I'm not intested" என்றான்

"ஓ.. ஓகே. நான் ஏற்கெனவே, உங்க‌ ப்ராஜெக்ட் மேனேஜ‌ர்கிட்ட‌ பேசிட்டேன். அவ‌ரும் ஓ.கே சொல்லிட்டாரு"

க‌ணேஷ் த‌லையைக் கீழே குனிந்து யோசித்துக் கொண்டிருந்தான்.

அருண் தொட‌ர்ந்தார், "டைம் தான் பிரச்சினைன்னா, ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல. நீங்க‌ இப்ப‌ போக‌ப் போற‌து 3 மாச‌ம் தான். ஒருவேளை, நீங்க‌ ரொம்ப‌ நாள் இருக்க‌ணும்ன்னு ஆசைப்ப‌ட்டா, அதுவும் Possible. என்ன‌ சொல்றீங்க‌"

"நோ அருண், என‌க்கு ப‌ர்ச‌ன‌லா கொஞ்ச‌ம் வேலைக‌ள், பிர‌ச்சினைக‌ள் இருக்கு. இப்போதைக்கு என்னால‌ ஆன்சைட் போக‌ முடியாது." என்றான் க‌ணேஷ்

"ம்ம்ம்.. ஓ.கே.." என்று சொல்லிவிட்டு அருண் 2 நிமிட‌ம் யோசித்தார்.

க‌ணேஷ் சீட்டில் இருந்து எழுந்திருக்கும்போது, அருண் சொன்னார், "ஓ.கே. இப்போதைக்கு சியாம‌ளாவை ம‌ட்டும் இப்ப‌ அனுப்ப‌ வேண்டிய‌து தான்"

"வாட்?"

"யெஸ், உங்க‌ ரெண்டு பேரையும் தான் ப்ரோப்ப‌ஸ் ப‌ண்ணி இருந்தேன். இப்ப‌ உங்க‌ளுக்கு ப‌திலா இன்னொரு ஆள் தேட‌ணும்."


"???!!!!!!???????"

**************************************

சியாமளா-6: இரண்டு பெண்களும், பிசாசுகளும்!

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10

மீட்டிங் முடிந்து எல்லாரும் அவரவர் இடத்திற்கு போனார்கள். கணேஷ், சியாமளாவை எட்டிப் பார்த்தான். அவள் மானிட்டர் முன் தலையை குனிந்து உட்கார்ந்திருந்தாள். இந்த நேரத்தில் அவளை போய் பார்த்து பேசுவது, சாத்தானுடன் நள்ளிரவில் தோளில் கைபோட்டு பேசுவதற்கு சமம் என முடிவெடுத்ததால், இடத்தில் உட்கார்ந்தான்.

"என்ன‌ ப‌ண்ண‌லாம்? இவ‌ளைக் க‌ன்வின்ஸ் ப‌ண்ண‌லாமா இல்லை இது தான் கேப்புன்னு இவ‌கிட்ட‌ இருந்து எஸ்கேப் ஆகிட‌லாமா? ஆனாலும் நான் சொன்ன‌ மாதிரியே ஒரு ஃபிக‌ர் அதே பேர்ல‌ வ‌ருவான்னு க‌ன‌வுல‌ கூட‌ திங்க் ப‌ண்ண‌து இல்ல‌. இவ‌ சியாம‌ளாவ‌ விட சூப்பரா, செமத்தியா வேற‌ இருக்கா" இதே போல் ஏக‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ள் ம‌ண்டையில் ஓடினாலும், க‌டைசியில் 'ஜீன்ஸ் போட்ட மஹாலெட்சுமி' தான் ஜெயித்தாள். (இன்னைக்கு ஜீன்ஸ் இல்ல‌. சுரிதார்)

ஆஃபிஸ் க‌ம்யூனிகேட்ட‌ரில் சியாம‌ளாவிற்கு ping ப‌ண்ணினான்

"Hi Shyamala"

முழுதாக‌ ரெண்டு நிமிட‌ம் க‌ரைந்த‌ பின், அவ‌ளிட‌மிருந்து

"Go to HELL"

"உன்கூட‌ பேசுற‌ப்ப‌ல்லாம் நான் அங்க‌ இருந்து தான் பேசுற‌ மாதிரி இருக்கு" ம‌றுப‌டியும் மைண்ட் வாய்ஸ். இருந்தாலும் அவ‌ள் டென்ஷ‌னில் இருப்ப‌தால், கூல் ப‌ண்ண‌ ட்ரை ப‌ண்ணினான்.

"Shall v go for Lunch?"

"Go to HELL"

"அங்க‌ போய் என்ன‌த்த‌ சாப்பிடுற‌து?" என‌ நினைத்துக் கொண்டு, அவ‌ளை கூல்ட‌வுன் ப‌ண்ணும் முய‌ற்சியை ச‌ந்தோஷ‌மாக‌ விட்டுவிட்டான்.

ம‌ணி வேற மதியம் 1:30 தாண்டி ஓடிக் கொண்டிருந்த‌து. ப‌சி வ‌யிற்றைக் கிள்ளிய‌து.

"க‌ணேஷ், சாப்பிட‌ போக‌லாமா?" என‌ ஸ்வீட் வாய்ஸ் அவ‌னைக் கூப்பிட்ட‌து

"ஓ.. ஷ்யூர்" என‌ மின்ன‌ல்வேக‌த்தில் ப‌தில் சொல்லிவிட்டு யோசித்தான் "இது சியாம‌ளா குர‌ல் இல்லையே?" என்று சொல்லிக் கொண்டே எழுந்து பார்த்தால் "ஹ...ரி....ணி"

அப்ப‌டியே ஷாக்காகி நின்றிருந்தான். ந‌ல்ல‌வேளை, சியாம‌ளா இட‌த்தில் இல்லை. அப்ப‌டியே சைல‌ண்டாக‌ இட‌த்தில் உட்கார்ந்தான். "இவ வந்த முதல் நாளே, பேர் சொல்லி கூப்பிடுற அளவுக்கு வந்துட்டா?" என மனதிற்குள் நினைத்துக் கொண்டான். அப்போது தான் பின்னால் ஒரு உருவ‌த்தின் நிழ‌லைக் க‌வ‌னித்தான். சேரில் உட்கார்ந்து கொண்டே திரும்பி பார்த்தால், சியாம‌ளா முறைத்து நின்று கொண்டிருந்தாள்.
"ஆஹா, ஒரு பிசாசுகிட்ட‌ இருந்தா த‌ப்பிச்சு, கொள்ளிவாய் பிசாசுகிட்ட‌ மாட்டிக்கிட்டோமே?"

க‌ணேஷுக்கு என்ன‌ ரியாக்ட் ப‌ண்ணுவ‌தென்றே தெரிய‌வில்லை. திருடிவிட்டு அப்பாவிட‌ம் மாட்டிய‌ குழ‌ந்தை மாதிரி க‌ன்னாபின்னாவென்று முழித்தான். சிரிக்க‌ ட்ரை ப‌ண்ணான். அடுத்த‌ செக‌ண்டே மாறி உம்மென்று வைத்துக் கொண்டான். விட்ட‌த்தை வெறித்து பார்த்தான். அப்ப‌வும் சியாம‌ளா வெறித்த‌ க‌ண்க‌ளுட‌ன், நேராக க‌ணேஷை பார்த்துக் கொண்டிருந்தாள்.

இருவ‌ரும் பேசிக் கொள்ள‌வில்லை. அப்போது ஹ‌ரிணி, க‌ணேஷ் இட‌த்திற்கு வ‌ந்தாள். பிசாசும், கொள்ளிவாய் பிசாசும் ஒரே இட‌த்தில்.

"இன்னும் என்ன‌ ப‌ண்ணிக்கிட்டு இருக்கீங்க‌. வாங்க‌ க‌ணேஷ், சாப்பிட‌ போக‌லாம்" என்றாள் ஹ‌ரிணி.

நெளிந்தான். "ஓ.கே. சியாம‌ளா, வா சாப்பிட‌ போக‌லாம்" என்று சொல்லிவிட்டு அவ‌ன் முன்னால் ந‌க‌ர்ந்தான். பின்னாலே சியாம‌ளா. அவ‌ள் பின் ஹ‌ரிணி.

6 பேர் உட்கார‌க்கூடிய‌ பெரிய‌ டேபிள். க‌ணேஷ் ப‌க்க‌த்தில் பி.எம். க‌ணேஷ்க்கு எதிரில் சியாம‌ளா. அவ‌ள் ப‌க்க‌த்தில் ஹ‌ரிணி. மத்த சீட்களில் சிறுவாணி, மதுரை, பாப்கட் உட்கார்ந்தனர்.

"கணேஷ், என்ன‌ நியாப‌க‌ம் இருக்கா? உங்க‌ ப‌ழைய‌ ஆஃபிஸ் தான்" ஹ‌ரிணி முத‌ல் அணுகுண்டை வீசினாள்.

திரும்ப‌வும் நெளிந்தான். "ஒழுங்கா சாப்பாடு கூட‌ சாப்பிட‌ விட‌ மாட்டேங்குறாய்ங்க‌. அழ‌கா இருந்தாலே இது ஒரு பிர‌ச்சினை" என்று க‌ருவிக் கொண்டே, "இல்ல‌ங்க‌. நியாப‌க‌ம் இல்ல‌" இந்த‌ ப‌தில் சொல்லும் வ‌ரை சியாம‌ளா, க‌ணேஷையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஓ.கே. நான் அப்ப‌ உங்க‌ டீம் இல்ல‌. என் ஃப்ர‌ண்ட் ஷாலினி தான் உங்க‌ள‌ ப‌த்தி அடிக்க‌டி சொல்லுவா. அந்த‌ கிரிக்கெட் டோர்ன‌மென்ட்ல‌, உங்க‌ பேட்டிங்க‌ பார்க்குற‌துக்காக‌, நானும் ஷாலினியும் வ‌ந்திருந்தோம். அந்த‌ மேட்ச்ல‌ கூட நீங்க‌ தான‌ ஓப்ப‌னிங் பேட்ஸ்மேன்" ஹரிணி பிசாசு வேலையை இனிதே ஆர‌ம்பித்த‌து.

"அய்யோ என்ன‌டி சொல்ற‌.. ஷாலினின்னு ஒருத்தி வேற‌ இருக்காளா? டோர்னமென்ட்.. ரைட். க‌ல்யாண‌த்துக்கு முன்னாடியே, பொண்டாட்டி கையால‌ அடி வாங்குன‌து நானாக‌ தான் இருக்கும்" என்று ம‌ன‌திற்குள் நினைத்துக் கொண்டு, சியாம‌ளாவைக் க‌வ‌னித்தான். அவ‌ள் ஆர்வ‌ம் காட்டாம‌ல் மெதுவாக தட்டில் ஸ்பூனால் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

"ஓ.. அப்ப‌டியா.. அது சூப்ப‌ர் மேட்ச்" ப‌ட்டும்ப‌டாம‌லும் பேசினான்.

"ஆமா. அந்த‌ மேட்ச்ல ஜெயிச்ச‌துக்கு உங்க டீம் க்ரீன்பார்க்ல கொடுத்த பார்ட்டிக்கு, நானும் வ‌ந்திருந்தேன். யப்பா.. என்ன ஒரு ஆட்டம்.. ஏழு ர‌வுண்ட் த‌ண்ணி அடிச்சிருப்பீங்க‌ளா?..'பொல்லாத‌வ‌ன்' எங்கேயும் எப்போதும் பாட்டுக்கு நீங்க போட்ட ஆட்டம்..ச்சான்ஸே இல்ல‌"

க‌ணேஷுக்கு தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்ட‌து. "ச‌திகாரி, என்ன‌ சாவ‌டிக்காம‌ இங்கே இருந்து போக‌ மாட்டா போல‌ இருக்கே. ரெண்டு கன்னத்துலயும் சூடு கண்டிப்பாக விழும்" பின் ச‌த்த‌மாக‌, "ஓ.. இதெல்லாம் நோட் ப‌ண்ணீங்க‌ளா? க்ரேட். சூப்பர்ப் பார்ட்டி அது?" ம‌றுப‌டியும் ப‌ட்டும்ப‌டாம‌லும் சொன்னான்.

"பின்ன‌.. அந்த‌ நியூஇய‌ர் பார்ட்டில‌ கூட ஒரு பாட்டு ஸ்டேஜ்ல‌ பாடுனீங்க‌ளே? அது கூட.. ப்ர‌ச‌ன்னா ப‌ட‌ம்.. ம்ம்ம்"

"'அழ‌கிய‌ தீயே' விழிகளின் அருகினில் வானம்.. அது தான.. என்னோட‌ ஃபேவ‌ரிட் ஸாங்" அவ‌னையும் அறியாம‌லேயே உற்சாக‌த்துட‌ன் பேசினான்.

"யெஸ்.. அது தான். அப்ப‌ இருந்து எப்ப‌ ப்ர‌சன்னாவ‌ பார்த்தாலும் என‌க்கு உங்க‌ நியாப‌க‌ம் தான். நீங்க‌ளும் ப்ர‌ச‌ன்னா மாதிரி ஸ்மார்ட்டா இருக்கீங்க‌. I'm a crazy FAN of you" சொல்லிவிட்டு வெட்கத்தில் த‌லையைக் குனிந்தாள் ஹரிணி.

கணேஷுக்கு அவன் இதயம் வெடிப்பது போல இருந்தது. கொஞ்ச‌ம் கூட‌ கேப் இல்லாம‌ல், சியாம‌ளா க‌த்தினாள், "எக்ஸ்கியூஸ் மீ!"

"யெஸ்"

"He is my Fiancee!"

"வாட்?" ஹ‌ரிணியிட‌ம் இருந்து

"வாட்??" எல்லாரிட‌மும் இருந்து கோர‌ஸாக‌.

*****************************

சியாமளா-5: ஆஃபிஸிற்கு புதிதாக வந்த நச் ஃபிகர்!

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10

நடப்பது எதுவுமே கணேஷுக்கு புரியவில்லை.எல்லாவற்றையும் கடவுள் மேலே போட்டுவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக நார்மல் லைஃபுக்கு மாறினான். திங்கள்கிழமை காலையில் வழக்கம்போல ஆஃபிஸ் வந்திருந்தான்.

கணேஷ், அவன் க்யூபிக்கிளை சுற்றி ஒரு நோட்டம் விட்டான். சியாமளா கேபினில் அவள் இல்லை. ஓரளவுக்கு நிம்மதியாக இருந்தது. மெஷின் ஆன் பண்ணி, இமெயில் செக் பண்ணிக் கொண்டு ரிலாக்ஸ் மூடில் இருந்தான்.

திடீரென்று நாலைந்து பெண்கள், கணேஷை சுற்றி வந்து கொண்டனர்.

"ஹேய் கணேஷ், கங்கிராட்ஸ்! சொல்லவே இல்ல" என்று சொல்லிக் கொண்டே அவன் கையை வலுக்கட்டாயமாக பிடித்து வாழ்த்து சொன்னாள் ஒரு பாப் கட் தலை.

"???"

"புதுமாப்பிள்ளை முறுக்கு இப்பவே வந்திருச்சி?" சிறுவாணி தண்ணியில வளர்த்த லாங் ஹேர் கேர்ள்

"க‌ல்யாண‌ம் எப்போ?" இன்னொரு சைஸ் ஸீரோ சுரிதார் பெண்.

இப்ப‌டி மாறி மாறி கேள்வி கேட்ட‌தும், க‌ணேஷ் துடுக்குற்றான், "ஆஹா, அந்த‌ ச‌னிய‌ன் ஊர் ஃபுல்லா சொல்லிருச்சா? புது ஆஃபிஸ்ல‌ வ‌ந்த‌ ச‌குன‌மே ச‌ரியில்லை" என‌ த‌ன‌க்குத் தானே பேசிக் கொண்டான். "எப்ப அந்த பேரழகிய பார்த்தேனோ அன்னைல‌ர்ந்து என் மைண்ட் வாய்ஸ் ம‌ட்டும் தான் பேசுது. வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வ‌ர‌மாட்டேங்குது. எப்ப‌டி இருந்த நான், இப்ப‌டி ஆ...கிட்டேன்" என்று விட்ட‌த்தை வெறித்தான்.

"என்ன‌ பாஸ், இப்ப‌வே ட்ரீம்க்கு போயிட்டீங்க‌ளா? சொல்லு எங்க‌ போக‌லாம் மேரேஜ் ட்ரீட்?"

கணேஷ் "என‌க்கு சென்னைல‌ நிறைய‌ பார், ப‌ப் எல்லாம் தெரியாது? நீங்க‌ளே சொல்லுங்க‌"

பாப்க‌ட், "ஹ‌லோ, திஸ் இஸ் டூ ம‌ச். ட்ரீட் அங்க‌ல்லாம் வேணாம். க‌ல்யாண‌த்துக்கு வ‌ரும்போது ஹோட்டல்ல அரேஞ்ச் ப‌ண்ணா ம‌ட்டும் போதும்?"

"அடிப்பா.....வி" மென்மையாக‌ புல‌ம்பினான்

"தி.ந‌க‌ர் Barbeque Nation, இல்லைன்னா GRT Kebab Factory போக‌லாம் OR Residency Towers???" சைஸ் ஸீரோ கேட்ட‌து

"எது ஓ.கே க‌ணேஷ்?" சிறுவாணி கேட்ட‌து.

ஆற‌டியில் வ‌ள‌ர்ந்த‌ ம‌துரைக்காரி க‌ர‌க‌ர‌ப்பான‌ குர‌லில் கேட்டாள், "அதெல்லாம் அப்புற‌ம் டிசைட் ப‌ண்ண‌லாம். க‌ல்யாண‌ பொண்ணு யாரு க‌ணேஷ்? ல‌வ் மேரேஜா, அரேஞ்ச்டு மேரேஜா??

"அடிப்பாவி சியாம‌ளா, எல்லா மேட்ட‌ரையும் சொன்ன.. உன் பேரையும் சேர்த்து சொல்லி இருக்க‌ வேண்டிய‌து தானே? இப்ப‌டி கோர்த்து விட்டாளே? என்று அவ‌ளைத் தேடும்போது ஒரு பாட‌ல் அவ‌ள் கேபின் சைடில் இருந்து வ‌ந்த‌து.

"க‌ங்கைக்க‌ரை தோட்ட‌ம்
க‌ன்னிப்பெண்க‌ள் கூட்ட‌ம்ம்ம்
க‌ண்ண‌ன் ந‌டுவினிலே.. ஓ..ஓ..ஓ"

டைமிங்காக‌ கேட்ட‌து. எட்டிப்பார்த்தான், சியாம‌ளா எழுந்தாள். "ம‌வ‌னே, பேர‌ச்சொன்ன, தொலைச்சிடுவேன்" என்ப‌து போல் மிர‌ட்டிக் கொண்டே க‌ணேஷை நோக்கி வ‌ந்தாள். ம‌ற்ற‌ பெண்க‌ள் க‌வ‌னிக்க‌வே இல்லை.

வ‌ந்த‌வ‌ள், "என்ன‌ங்க‌ ஸார், முக‌மெல்லாம் வீங்கி இருக்கு. நைட் என்ன‌ ஓவ‌ர் ம‌ப்பா? ஃப்ரெண்ட்ஸ்க்கு பேச்சில‌ர் பார்ட்டி கொடுத்தீங்க‌ளா?" ச‌ம்ப‌ந்த‌மில்லாம‌ல் கேட்டு சிரித்துக் கொண்டாள். சுற்றியுள்ளவர்களும் சிரித்த பெரும் சிரிப்பில் அந்த ஏரியாவே அதிர்ந்தது.

"க்ர்ர்ர்க் க்ர்ர்ர்ர்ர்க்" ஆத்திர‌த்தில் க‌ணேஷ் ப‌ல்லைக் க‌டித்துக் கொண்டிருந்தான்.

"ஓ.கே கேர்ள்ஸ். நாம‌ இத‌ப்ப‌த்தி ல‌ஞ்ச் ப்ரேக்கில‌ க‌ணேஷ்கிட்ட‌ கேட்டுக்க‌லாம்" என்று சொல்லி சியாம‌ளாவே ச‌பையைக் க‌லைத்தாள்.

க‌ணேஷ் இன்னும் அவ‌ளை முறைத்துக் கொண்டிருந்தான். ச‌டாரென‌ சியாம‌ளா திரும்பி க‌ணேஷிட‌ம் வ‌ந்தாள்.

"என்ன‌டா, என் பேர‌ சொல்ல‌லியேன்னு பாக்குறீயா? அதான் நீ தான் ஹ‌ரிணியோ, ஷாலினியோ.. ஏதோ ஒரு பொண்ணுகூட‌ ஓடிப்போக‌ போறேன்னு சொன்னேல‌. அதான் சொல்ல‌ல‌.." என்று சொல்லிக் கொண்டே க‌ண்ண‌டித்தாள். கெளம்பி இடத்துக்கு போய்விட்டாள்.

ம‌றுப‌டியும் ப‌ல்லைக் க‌டித்தான் க‌ணேஷ். "அடிக்க‌டி க‌ண்ண‌டிக்கிறாளே, இவ‌ளுக்கு எதுவும் ஒண்ணரைக் க‌ண் வியாதி இருக்குமோ" என்று அடுத்த‌ செக‌ண்டே கொலைவெறியுட‌ன் யோசித்தான்.

ல‌ஞ்ச் செல்வ‌த‌ற்கு கெள‌ம்பும்முன், ப்ராஜெக்ட் மேன‌ஜ‌ரிட‌ம் இருந்து இமெயில். உட‌னே டீம் மீட்டிங்கிற்கு கான்ஃப்ர‌ன்ஸ் ரூமுக்கு வ‌ர‌ச்சொல்லி எல்லாருக்கும் வ‌ந்திருந்த‌து.

லைட்டாக‌ க‌னைத்துக் கொண்டு பி.எம் ஆர‌ம்பித்தார், "உங்க‌ எல்லாரையும் இங்க‌ வ‌ர‌ச் சொன்ன‌துக்கு கார‌ண‌ம், புதுசா ஒருத்த‌ர் ந‌ம்ம‌ டீமுக்கு வ‌ந்திருக்காங்க‌. ஸோ, introduce ப‌ண்ற‌துக்காக‌ வ‌ர‌ சொன்னேன்"

ஒருத்தி ஓர‌மாக‌ நின்றிருந்தாள். அருமையான ஸ்ட்ரக்சருடன், ரொம்ப‌ அழ‌காக‌ இருந்தாள். அவ‌ள் போட்டிருந்த‌ ட்ரெஸ் நல்ல‌ கலர் காம்பினேஷ‌னில் நிறைய‌ சிந்தெடிக் வொர்க்ஸ் ப‌ண்ண‌ப்பட்டு நீட்டாக‌ இருந்த‌து.

"ந‌ச் ஃபிக‌ர் ந‌ம்ம டீம்ல. இவ வர்ற நேர‌ம் பார்த்து என‌க்கு பொண்ணு பார்த்து என் கைய‌ க‌ட்டிப் போட்டுட்டாங்க‌ளே க‌ணேஷ்" என்று ஃபீல் ப‌ண்ணினான்.

புதிதாக‌ வ‌ந்த‌வ‌ள் வாயைத் திற‌க்காம‌ல், இத‌ழ்க‌ள் ம‌ட்டும் அசைந்து இன்ட்ரோ கொடுத்தாள், "நான் ABC க‌ம்பெனில இதுக்கு முன்னால‌ வொர்க் ப‌ண்ணேன்..."

"அட‌ ந‌ம்ம‌ ப‌ழைய‌ ஆஃபிஸ், எப்ப‌டி மிஸ் ப‌ண்ணோம்?" என்று வ‌டிவேல் ரேஞ்சில் திங்க் ப‌ண்ணினான் க‌ணேஷ்.

"ஐ'யாம் ஹ‌ரிணி" என்று சிரித்துக் கொண்டே தொட‌ர்ந்தாள்.

க‌ணேஷ் ஜொள்ளுட‌ன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, ஏதோ ஒரு ஜோடிக் க‌ண்க‌ள் தன்னை பார்ப்ப‌து போல் தோன்ற‌வே, சுற்றியும் பார்த்தான். "ஆ.. சியாம‌ளா"

சியாம‌ளா பார்வையில் உக்கிர‌ம் தெறித்தது. கோபத்தில், ஆத்திரத்தில், முகம் சிவந்தது. க‌ணேஷுக்கும் அவ‌ள் பார்வையின் முதலில் புரியாமல் பின்னர் அர்த்த‌ம் புரிந்தது. ("கணேஷ் ஓடிப்போக‌ போவ‌தாக சியாமளாவிடம் பொய் சொன்ன‌ ப‌ழைய‌ ஆஃபிஸ் பெண் பெய‌ர் ஹ‌ரிணி")

சியாம‌ளா, "எக்ஸ்க்யூஸ் மீ" என்று சொல்லிக் கொண்டே கான்ஃப‌ர‌ன்ஸ் ரூமை விட்டு வெளியேறினாள்.

"What the HELL is happening?" அநியாய‌ டென்ஷ‌னில் க‌ணேஷ்.

***********************

வாளிப்பான காதல்!

வாரி க‌ட்டிக் கொள்ளும்
குழ‌ந்தையைப் போல்
கதவைத் திறந்ததும்
ஒவ்வொரு முறையும் என்னை
வாரிக் கட்டிக் கொள்ளும்
வாளிப்பான காதல்!

சிவ‌ப்பு ப‌ட்டாசு வெடியின்
சிவ‌ப்பு ம‌ருந்து காத்திருக்கும்
சின்ன‌ நெருப்பு போல்
என்னுள் புதைந்து இருப்ப‌து வெடிக்க‌க்
‍‍காத்துக்கொண்டிருக்கும் உன்
கண்ணசைவின் ச‌ம்ம‌த‌ம்!

கோடை கால தண்ணீர் தீர்க்கும்
தாகம் மீண்டும்
தாகம் தூண்டும் போல்
தாப‌ம் மீண்டும்
தாகம் தூண்டும்
தீ நீ!

தனிமையின் துணையில்
தலையணை அணைக்கும் மனம்போல‌
அணைக்க தவிக்கும் மனம்
ஏங்கும் த‌லைய‌ணை
உன் மெத்தை!

இவை யாவும்
உள்ளமும் உள்ளம்
சார்ந்த காதல் அன்று
உடல் ம் டல் சார்ந்த
கா ம்!

***********************

சியாமளா-4: ஜீன்ஸ் போட்ட மஹாலெட்சுமி!

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10

(ஃப்ளாஷ்பேக் முடித்துவிட்டு வரும்போது)

கதவைத் திறந்தால் சியாமளா நின்று கொண்டிருந்தாள். ப்ளாக் கலர் டஃப் ஜீன்ஸ், காலர் வைத்த லாங்க் ஆரஞ்ச் டாப். போன தடவை மாதிரி எந்த வஸ்துவும் கழுத்தை சுற்றி போட்டு இருக்கவில்லை.

"முத்துவேல், நீ எப்படி இங்க?" சியாமளாவின் முதல் கேள்வி முத்துவேலை நோக்கி

அதிர்ந்தான். "இல்ல, ச்சும்மா தான். கணேஷ், நான் கெளம்புறேன்டா" என்று வாசலை நோக்கி நடந்தான், ரெண்டு கன்னங்களையும் தடவிக் கொண்டே

"ஓ.. முத்துவேல் ஸார், நீங்க கணேஷோட ஃப்ரெண்டா?. ஐ ஸீ.. மைண்ட்ல வச்சிக்கிறேன்" என்றாள் எகத்தாளமாக‌

"இல்ல.. ஆமா.. இல்ல.. எனக்கு ஆஃபிஸ்ல வேல இருக்கு.. பை" வீட்டை விட்டு ஓடாத குறையாக எஸ்கேப் ஆனான் முத்துவேல்

"ம்ம்.. அப்புறம் கணேஷ்?" அவனிடம் திரும்பியபடியே

பியரில் இருந்த தண்ணீர் எல்லாம் வியர்வை அருவியாக கொட்டியது. இவளை கொஞ்சம் கூட எதிர்பார்க்காததால் வெலவெலத்து போனான் என்பது உண்மை.

திக்கித் திண‌றி, "உன்னை யாரு இங்க‌ எல்லாம் வ‌ர‌ச் சொன்ன‌து? இது பேச்சில‌ர்ஸ் ரூம்" என்று அவ‌ன் சொல்லிக் கொண்டிருக்கும்போது வீட்டை சியாம‌ளா நோட்ட‌ம் விட்டுக் கொண்டிருந்தாள்.

க‌ட்டிலின் அடியில் காலி பிய‌ர் பாட்டில்க‌ள் ஒளிந்து இருப்ப‌தை பார்த்துவிட்டு, அவ‌ள் க‌ணேஷை பார்த்த‌ பார்வையில் உஷ்ண‌ம் அதிக‌மாக‌ கொதித்த‌து.

நேரே போய், ஃபிரிட்ஜை திற‌ந்து பார்த்தாள்.

"ஓ.. இன்னும் ரெண்டு கிங்க்ஃபிஷர் பீர் இருக்கா? ஸோ, நான்தான் த‌ண்ணிபூஜையில‌ க‌ர‌டியா?"

"இல்ல‌.. ஆமா.. இல்ல"

"ஸேம் ரியாக்ச‌ன், வெரி பேட்.. ச‌ரி வா நாம‌ ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பியர் அடிக்க‌லாம்"

"வாட்? உன்னை யாரு இங்க‌ எல்லாம் வ‌ர‌ச் சொன்னா? மேல் வீட்டு மாமிக்கு ம‌ட்டும் தெரிஞ்ச‌து, அகோரி ஆட்ட‌ம் தான்?" என்று க‌ணேஷ் சொல்லி முடிப்ப‌த‌ற்குள் காலிங் பெல், "டிங் டாங் டிங் டாங்" என விடாமல் அடித்த‌து.

"நான் சொன்னேன்ல‌" என்று சியாம‌ளாவிட‌ம் புல‌ம்பிக் கொண்டே திற‌ந்தான். திற‌ந்தால்,

மா....மீமீமீமீ

விய‌ர்வை அருவியாக‌க் கொட்டிய‌து க‌ணேஷுக்கு.

முன்னால் நின்றிருந்த அவ‌னை இடித்து த‌ள்ளிவிட்டு, சியாம‌ளாவிட‌ம் போனாள் மாமி. அப்ப‌டியே க‌ன்ன‌த்தை மொத்த‌மாக‌ வாஞ்சையாக‌ த‌ட‌வி நெட்டி முறித்து சொன்னாள்.

"க‌ணேஷ், நீ நொம்ப‌ கொடுத்து வ‌ச்ச‌வ‌ன்டா.. அப்ப‌டியே ம‌ஹாலெட்சுமி மாதிரி இருக்கா? என் க‌ண்ணே ப‌ட்டுடும் போல‌ இருக்கு"

"ம‌ஹாலெட்சுமி எந்த‌ ஊர்ல‌ ஜீன்ஸ் போட்டு வ‌ந்துச்சி. மாமி, நீங்க‌ என்ன‌ லூஸா?" க‌ணேஷின் மைண்ட் வாய்ஸ் ம‌ட்டும் எக்கோவுட‌ன் பேசிய‌து.

"என்ன‌டா நீ எதுவும் பேச‌ மாட்டேங்குற‌? நான் சொல்ற‌து க‌ரெக்ட் தான‌. ம‌ஹாலெட்சுமியே வீட்டுக்கு வ‌ர‌ப்போறா?" ம‌றுப‌டியும் மாமி சிரிக்காம‌ல் புளுகினாள்.

"இவ‌ ம‌ஹாலெட்சுமி இல்ல‌, பீர்லெட்சுமி. அடிக்கிற‌ பீர்ல‌ பாதி கேட்குறா, இவளா மஹாலெட்சுமி? ப‌டுபாத‌கி.. இவ‌ள‌ எங்கிருந்து தான் பிடிச்சாய்ங்க‌ளோ?" ம‌றுப‌டியும் மெதுவாக‌ புல‌ம்பினான் அவ‌ன் காதுக்குள்ளேயே

"ச‌ரி சின்ன‌ஞ்சிறுசுக‌ பேசிக்கிட்டு இருங்க‌. நான் போய் ஃபில்ட‌ர் காஃபி போட்டிண்டு எடுத்திட்டு வ‌ர்றேன்" மாமி எஸ் ஆனாள்.

க‌ணேஷிட‌ம் திரும்பி, "ரைட், மாமி ப்ராப்ள‌ம் ஸால்வ்டு. இப்ப‌ சொல்லு, ஆளுக்கு ஒரு பியர். ஓ.கேவா?"

நிஜ‌மாக‌வே டென்ஷ‌ன் ஆனான் க‌ணேஷ், "ஹேய், நீ என்ன‌ பொண்ணா, இல்ல‌ பொண்ணு மாதிரியா? இப்ப‌டி ப‌ச‌ங்க‌ளுக்கு ஈக்வெலா போட்டி போடுறீயே? வெட்க‌மா இல்ல‌?" க‌த்தியே விட்டான்.

"நான் எதுக்கு வெட்க‌ப்ப‌ட‌ணும். எந்த‌ பிய‌ர்ல‌ இது ப‌ச‌ங்க‌ ம‌ட்டும்தான் சாப்பிட‌ணும்னு போட்டு இருக்கு? இல்ல‌ விஜ‌ய் ம‌ல்லையா உன்கிட்ட‌ ம‌ட்டும் சொன்னாரா?"

"இல்ல‌..அது வ‌ந்து.. ரைட்.. அப்ப‌டியா?" தைரியத்துடன், "ப‌ல்ஸ‌ர் பைக் விள‌ம்ப‌ர‌த்துல‌ கூட‌ தான், இது ப‌ச‌ங்க‌ளுக்கு ம‌ட்டும் தான்ன்னு சொல்லல.. ஆனா பசங்க மட்டும் தான ஓட்டுறாங்க‌.. எல்லா விஷ‌ய‌த்துல‌யும் போட்டி போடுற‌ நீ ப‌ல்ஸ‌ர் ஓட்ட‌ ரெடியா?" மடக்கி விட்ட திருப்தியுடன் சியாமளாவைப் பார்த்தான்.

அவ‌ள் முக‌த்தில் ச‌ல‌ன‌மே இல்லாம‌ல், கையை நீட்டி சொன்னாள், "வெளியே போய் பாரு, நான் எதுல‌ வ‌ந்தேன்னு"

பார்த்தான். தூக்கி வாரி போட்ட‌து. Bajaj Pulsar DTS 135i ல் வ‌ந்திருந்தாள்.

"ச‌த்திய‌மாக‌ இவ‌ பொண்ணே இல்ல‌" ஹார்ட் பீட் 150ல் அ(து)டித்த‌து. "சரி ச‌ரி, ஏன் நீ ஏன் வ‌ள‌வ‌ள‌ன்னு பேசிட்டு இருக்க‌? இப்ப‌ எதுக்கு நீ இங்க‌ வ‌ந்த‌?" அவனுக்கு மீசையில் ம‌ண் ஒட்டவில்லை.

"ஏன் நான் உன்ன‌ பாக்க‌ வ‌ர‌க்கூடாதா?" புருவ‌த்தை ஆட்டி ஆட்டி அவ‌ள் கேட்ட போது "இவ‌ பொண்ணுதான் போல‌யே" என்று கணேஷுக்கு ச‌ந்தேக‌ம் வ‌ந்த‌து.

இருந்தாலும் ஆண்பிள்ளை முறுக்கு என்னாவ‌து? "இங்க‌ பாரு? உன‌க்கு நான் ச‌ரியான‌ ஆள் கெடையாது. என‌க்கும் என் பழைய‌ ஆஃபிஸ் ஹ‌ரிணிக்கும் நெக்ஸ்ட் ம‌ன்த் மேரேஜ். வீ ஆர் ட்ரூ ல‌வ்வ‌ர்ஸ். ஓடிப் போக போறோம். ஸோ, இனிமே இப்ப‌டியெல்லாம் ப‌ண்ணாத‌. போ, நான் எங்க‌ அப்பாகிட்ட‌ பேசி க‌ல்யாண‌த்த‌ நிறுத்திடுறேன்" அரைம‌ணி நேர‌ம் முன்னால் ப்ளான் ப‌ண்ணிய‌த்தை ஒப்பித்தான் க‌ணேஷ்.

"ச‌ரி முடிச்சிட்டியா?"

"ம்" என்றான். ஆனால் "எதையோ சுத்தி வளைச்சி மடக்க போறது போல கேக்குறாளே? என்று அவ‌ன் மைண்ட் வாய்ஸ் சொல்லி முடிக்க‌ வில்லை,

சியாம‌ளா ஆர‌ம்பித்தாள், "ஓடிப் போக‌ப் போறீங்க‌.. ஆனா இத‌ உங்க‌ அப்பாக்கிட்ட‌ பேசி ந‌ம்ம‌ க‌ல்யாண‌த்த‌ நிறுத்த‌ப் போறீங்க‌?"

"இல்ல‌.. ஆமா.. இல்ல.. " தெளிவாக குழம்பிவிட்டு பின்" ச‌ரி விடு, என‌க்கு தான் உன்னை பிடிக்க‌லைன்னு தெரியுதுல்ல‌? அப்புற‌ம் ஏன் இப்ப‌டி டார்ச்ச‌ர் ப‌ண்ற‌?"

"ஓ.கே இது டார்ச்ச‌ராவே இருக்க‌ட்டும். இப்ப‌ நான் இங்க‌ வ‌ந்தேன்னா.......?" முடிப்ப‌த‌ற்குள்

க‌ணேஷ், "அத‌ தான் நான் வ‌ந்த‌த‌துல‌ இருந்து கேக்குறேன். சொல்லு ஏன் வ‌ந்த‌?"

அவ‌ன் கையில் எதையோ திணித்தாள். அவ‌ன் பிரித்து என்ன‌வென்று பார்த்துக் கொண்டிருக்கும்போது சொன்னாள்.

"ந‌ம்ம‌ மேரேஜ் இன்விடேஷ‌ன் ஃப‌ர்ஸ்ட் காப்பி. ப்ரூஃப் பார்த்துட்டு என்னென்ன‌ சேஞ்ச் ப‌ண்ண‌னும்ன்னு சொல்லு. மாத்திட‌லாம்?" சொல்லிவிட்டு கெளம்பிவிட்டாள். பல்ஸரை ஓர் உதை விட்டு ஸ்டார்ட் பண்ணிக்கொண்டே திரும்பி, கணேஷை பார்த்து வெட்கத்துடன் கண்ணடித்தாள் சியாமளா.

"??????????????????????????????????"

*************************************

குடிகார காதலன், கோபக்கார காதலி!

"ஆஃபிஸ்ல இருந்து ஏன் லேட்டு?"

"அதான் சொன்னேன்ல‌.. க்ளைய‌ண்ட் கால் 11 ம‌ணிவ‌ரைக்கும் இழுத்துட்டாங்க‌.. இன்னைக்கு ஒரு மாட்யூல் லைவ் போகுது.. அதான் டென்ஷ‌ன்."

"த‌ண்ணி அடிச்சிட்டு வ‌ந்திருக்கியா?"

"இல்லைமா. அதான் கொஞ்ச நாள் முன்னாடியே ப்ராமிஸ் ப‌ண்ணேன்ல‌.
இனிமே ரெண்டு மாச‌த்துக்கு ஒரு த‌ட‌வை தான் அடிப்பேன். அதுவும் வீட்ல‌ உட்கார்ந்து. ப்ளீஸ் பிளீவ் மீ"

"என‌க்கு ந‌ம்பிக்கை இல்ல‌. கிங்க்ஃபிஷ‌ர் பீர் ஸ்மெல் அடிக்குது"

"உன்னோட‌ ஒரே தொந்த‌ர‌வா போச்சே. த‌ண்ணி அடிக்கிற‌தா இருந்தா, நைட் ஷிஃப்ட்ன்னு சொல்லிட்டு ஃப்ரெண்டு வீட்டுல‌ அடிச்சிட்டு காலைல‌ வ‌ர‌ மாட்டனா?" என்று சொல்லி கண்ணடித்துவிட்டு அவ‌ளைக் க‌ட்டிபிடிக்க‌ ட்ரை ப‌ண்ணினான்.

"இதுக்கு ஒண்ணும் கொற‌ச்ச‌ல் இல்ல.." என்று சிணுங்கிக் கொண்டே அனுமதித்துவிட்டு திடீரென்று கோபம் வந்தவளாக, அவனை தள்ளிவிட்டு "நான் இப்படி பண்றது தொந்தரவு இல்ல.. டே, உன‌க்கு லைஃப்ல‌ எதுவுமே சீரிய‌ஸ் இல்லியா? உருகி உருகி லவ் பண்ணி தான நாம கல்யாணம் பண்ணிகிட்டோம். நான் சொல்றத எதையுமே சீரியஸா எடுத்துக்க மாட்டியா?" என்றாள் ஹைடெசிபலில்.

"உன்ன‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிகிட்டேனே.. அதுவே லைஃப்ல‌ நான் ப‌ண்ண‌ ரொம்ப‌ சீரிய‌ஸான‌ விஷ‌ய‌ம்.." என்று டையை கடுப்புடன் க‌ழ‌ற்றினான்.

"ல‌வ் ப‌ண்ற‌ பொண்ணை க‌ல்யாண‌ம் ப‌ண்ற‌து சீரிய‌ஸான‌ விஷ‌யமா?"

"ஹ‌லோ மேட‌ம். எந்த‌ செஞ்சுரில‌ இருக்க‌ நீ.. இன்விடேஷ‌ன் கொடுக்கும்போது ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எப்படி கலாய்ச்சாங்க தெரியுமா.. ல‌வ் ப‌ண்ற‌ பொண்ணையே க‌ல்யாண‌ம் ப‌ண்ற‌ மொத‌ ஆள் நீதான்டான்னு சொல்லி எல்லாரும் அசிங்க‌ப்ப‌டுத்திட்டாங்க‌.."

"அப்புற‌ம் எதுக்குதான்டா ல‌வ் ப‌ண்றீங்க?"

(டியூப் லைட் டியூப் லைட் என்று மனதுக்குள் முனங்கிக் கொண்டே)"உன‌க்குத் தான் சுத்த‌மா தெரிய‌ல‌.. ஊரு உல‌க‌த்த‌ பாரு.. பொண்ணுங்க‌ளே, க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிறேன்னு சொன்னா க‌ட் ப‌ண்ணிவிட்றாங்க‌.. ஒண்ணா சேர்ந்து ஊர் சுத்த‌ற‌துக்கும்,....... ச‌ரி விடு.. இதெல்லாம் உன‌க்கு தெரியாது. க‌ல்யாண‌த்துக்கு முன்னால‌ உன் கைய‌ பீச்ல‌ பிடிச்சு ந‌ட‌ந்து வ‌ந்த‌துக்கே, ஒரு வார‌ம் பேசாத ஆளுக்கெல்லாம் சுட்டாலும் புரியாது" சொல்லிக் கொண்டே ஷார்ட்ஸ்க்கு மாறியிருந்தான்.

"அப்புற‌ம் எதுக்குதான்டா என்ன‌ ல‌வ் ப‌ண்ணே?"

சிரித்துக்கொண்டே "டூ லேட். லைஃப் சென்ட‌ன்ஸ். இனிமே நோ யூஸ்? என்ன‌ டின்னர்?"

ரொம்ப‌ க‌டுப்பாகி, "அப்ப‌வே சொல்லி இருக்க‌லாம்ல‌.. டின்னரும் கிடையாது. ஒண்ணும் கிடையாது. என‌க்கு தெரிஞ்சாக‌ணும்?.. இப்ப‌வே.."

"உன் க‌ல‌ரை பாத்தும், மீட்டிங்க்ல ரொம்ப‌ க‌ரேஜா த‌ஸ் புஸ்ஸுனு பேசுற‌த‌ பாத்தும் தான், இப்ப‌ அது எதுக்கு.. பசிக்குதுடி..ப்ளீஸ்டி.. என் செல்ல‌ம்ல?" என்று கொஞ்சினான்.

"ஓ, இவ‌ளே க‌ருப்பா இருந்தா திரும்பி பாத்து இருக்க‌ மாட்டேளே? அப்ப‌டி என்ன‌டா இருக்கு இந்த‌ க‌ல‌ர் தோல்ல.. அது ஏன் ஒருத்தனுக்கும் க‌றுப்பா இருக்கிற‌ எவ‌ளையும் பிடிக்க‌ மாட்டீங்குதுன்னு தெரிய‌ல‌?"

"இப்ப‌ உன‌க்கு என்ன‌ பிர‌ச்சினை? நான் லேட்டா வ‌ந்த‌தா? த‌ண்ணி அடிச்சேன்ங்கிற‌ ச‌ந்தேக‌மா? உன்ன‌ லவ் & கல்யாணம் ப‌ண்ண‌தா? இல்ல‌ ஊர்ல‌ இருக்கிற‌வன் எவனும் க‌றுப்பா இருக்கிற‌ பொண்ண‌ ல‌வ் ப‌ண்ணாத‌தா?"

"என்ன‌ பாத்தா ப்ராப்ள‌ம் மேக்க‌ர் மாதிரி தெரியுதா யூ பெக்கர்? ஓ.கே. லீவ் இட்.. க‌ல்யாண‌த்துக்கு முன்னால‌ வ‌ரைக்கும் நிலா, இத‌ழ், முத்த‌ம்ன்னு க‌விதையா கொட்டுனீயே. இப்ப‌ ஏன் எல்லாம் DRY ஆயிடுச்சா?"

"கூல் ஹனீ.. பை தி வே.. குட் கொஸ்டின்" அப்ப‌டியே அவ‌ளை தோளை பிடித்து டைனிங் ஹாலில் உட்கார‌ வைத்துவிட்டு, "அப்பா காசுல டாஸ்மாக் பார்ல‌ போய் ச‌ண்டை போட்டு பிடிச்ச‌ பிராண்ட் பீர் ச்சில்ன்னு கூலிங்கா வாங்கி அடிக்கிற‌துக்கும், 20 பீர் பாட்டில்ல‌ வீட்டு ஃப்ரிட்ஜ்ல‌ வ‌ச்சி தோணும்போதெல்லாம் அடிக்கிற‌துக்கும் வித்தியாச‌ம் இல்லீயா?" என்றான் ஹாட்பாக்ஸில் எடுத்த சப்பாத்தியை மென்று கொண்டே..

"நான் என்ன கேட்டேன்? நீ என்ன‌ சொல்ற...." சில விநாடிக‌ளுக்கு பிற‌கு.. மாரிய‌ம்மான் கோவில் பூஜையில் சாமி வ‌ந்த‌வ‌ளாக‌, "அப்ப அதுக்கு தான் லவ் பண்ணீயா? செக்ஸ் தான் லைஃபா? இப்ப‌ எல்லாம் முடிஞ்சிடுச்சா?" என்று க‌த்திக் கொண்டு மேஜையில் இருந்த‌ எல்லாத்தையும் த‌ட்டி விட்டாள்.

அவ‌ன் செல்லில் SMS 'பீப் பீப்' என‌ அடித்த‌து.

அவ‌ள் எடுத்து பார்த்தாள். "Have you safely reached home? No hangover right?" அவ‌ன் உயிர்த்தோழ‌னிட‌ம் இருந்து.

"பொய், பொய், வாயை தொற‌ந்தாலே பொய். த‌ண்ணி அடிக்க‌லைன்னு பொய். இப்ப‌ நானும் தேவையில்லை. இனிமே நான் உன்கூட‌ ஒண்ணா வாழ்ந்தா, அது அசிங்க‌ம். " என்று அழுதுகொண்டே மொபைலை அவன் மூஞ்சியில் தூக்கி எறிந்தாள். பெட்ரூம் போய், மூட்டையைக் க‌ட்டிக் கொண்டிருந்தாள்.

அவ‌னுக்கு ஒண்ணும் புரிய‌வில்லை. செல்போனைப் பார்த்தான். உயிர்ந‌ண்ப‌ன், எட்ட‌ப்பன் ஆனான். அடித்த‌து எல்லாம் இற‌ங்கிவிட்ட‌து. அவ‌ளை க‌ன்வின்ஸ் ப‌ண்ணி தோற்றுப் போய்விட்டான். கோய‌ம்புத்தூர் போய்விட்டாள்.

()

அவ‌ள் வீட்டிற்கு கால் ப‌ண்ணினான். காலில் விழாத‌ குறையாக‌ கெஞ்சினான். ச‌னிக்கிழ‌மைக்குள் வ‌ர‌வில்லையென்றால், மார்னிங் அங்கே இருப்பேன் என்று காலில் விழுந்து விட்டான்.

()

வெள்ளிக்கிழ‌மை ஈவினிங் ஆஃபிஸ் முடிந்து வீட்டுக்கு வ‌ந்து சேர்ந்தான். ஹால் க்ளீனாக‌ இருந்த‌து.

அட்டகாச‌மான‌ சேலையில், த‌லை நிறைய‌ ம‌ல்லிகைப்பூவுட‌ன் அவ‌ள் நேரே வ‌ந்தாள்.

"ஹேய் டார்லிங்.." என்று ஓடிப்போய் க‌ட்டிபிடித்து மேலே தூக்கினான்.

"என்ன‌ திடீர் ச‌ர்ப்ரைஸ்? உங்க‌ப்பா தொர‌த்தி விட்டுட்டாரா?"

லேசாக‌ முறைத்துக் கொண்டு, "எல்லாமே காமெடி தான் உன‌க்கு. ஐ ஹேவ் டூ குட் நியூஸ்!"

"ந‌ம்ம‌ க‌ல்யாண‌ நாளா? இல்லையே அதுக்கு இன்னும் மூணு மாச‌ம் இருக்கு. என் ப‌ர்த்டே இல்ல‌.. உன் ப‌ர்த்டே, நான் ம‌ற‌ந்து இருந்தா செருப்பால‌ அடிப்ப‌?.. பின்ன‌. ம்ம்ம்... யா.. நான் உன்கிட்ட‌ ல‌வ் ப்ரோப்ப‌ஸ் ப‌ண்ன‌ டேட் தான‌?"

"நோ. இன்னிக்கு‌ நான் கொடுத்த‌ ப்ராமிஸ்ப‌டி, நீ த‌ண்ணி அடிக்க‌வேண்டிய‌ டியூ டேட்"

"ஹேய் கமான். ஸாரி டியர். நான் இன்னிக்கு அடிக்க‌ல‌.. நான்தான் பொய் சொல்லி அன்னைக்கே அடிச்சிட்டேன்ல‌. ப்ளீஸ்."

"ப‌ர‌வாயில்ல‌. இன்னிக்கி நீ அடிக்க‌லாம். எங்க‌ப்பாகிட்ட‌ ச‌ண்டை போட்டு கேன்டீன்ல இருந்து ஹை குவாலிட்டி மிலிட்ட‌ரி ச‌ர‌க்கு வாங்கிட்டு வந்திருக்கேன்."

"என்ன‌ ஹ‌ர்ட் ப‌ண்றே. நோ. ஐ கான்ட்." என்றான் வீராப்புடன்

"இல்ல‌. நீ அடிச்சா தான், அடுத்த‌ குட் நியூஸ‌ சொல்வேன்.."

இதுல ஏதோ உள்குத்து மாதிரி தெரியுதே என‌ தாடையை த‌ட‌விக் கொண்டே, "அடிக்கும்போது, இது தான் லாஸ்ட் டைம்னு சொல்ல‌ மாட்டியே"

"குடிகார‌ன் புத்தி உன்னைவிட்டு போகுதான்னு, பாரு" என்று சொல்லிக் கொண்டே முத‌ல் லார்ஜை ஊற்றிக் கொடுத்தாள்.

த‌லைவ‌ர் ஒரே கல்ப்பில் அடித்துவிட்டு, "இப்ப‌ சொல்லுமா, செல்ல‌ம்?"

அநியாய‌த்துக்கு வெட்க‌ப்ப‌ட்டாள். த‌லையைக் குனிந்து கொண்டாள். "ந‌வ், ஐயாம் டூ"

"வாட்?"

"மை டியர், டியூப்லைட் புருஷா! நீ அப்பா ஆயிட்டே" என்று காதைக் க‌டித்தாள்.

"ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. ரிய‌லிலிலிலிலி....." என்று ச‌ந்தோஷ‌த்தில் க‌த்திக் கொண்டு, அவ‌ளை அலேக்காக‌ தூக்கிக் கொண்டு பெட்ரூமுக்கு ஓடினான்.

***********************

சியாமளா-3: பியர்+புலம்பல் வித் முத்துவேல்

"ஹேய் முத்து, ஃப்ரீயா இருக்கியா? மதியம் வீட்டுக்கு வரமுடியுமா?"

"ஏன்டா, எனக்கு வேலை இருக்கு கணேஷ். நான் ஆஃபிஸ் போறேன்"

"ஃப்ரிட்ஜ்ல 6 பியர் பாட்டில் வச்சி இருக்கேன். அது ரொம்ப ச்சில்லுன்னு இருக்கு"

"மச்சி, நான் வேணும்னா 11 மணிக்கே வந்துடட்டுமா? சீக்கிரம் முடிச்சிட்டு சீக்கிரம் லஞ்ச் சாப்பிடலாம்"

"#@#@!@# ##*#@ சீக்கிரம் வந்து சேரு"

முத்துவேல், கணேஷ் வீட்டுக்கு வந்து சேர்வத‌ற்குள் ஒரு ஃப்ளாஷ்பேக். இவர்கள் ஆஃபிஸில் வேலை செய்யும் சியாமளாவைப் பற்றி பேசப் போகிறார்கள். சியாமளாவிற்கு கணேஷ் தான் மாப்பிள்ளை என்று தெரிந்ததும், தனியே கூப்பிட்டுபோய் கன்னாபின்னாவென கலாட்டா பண்ணிவிட்டாள். ஷாக்காகி போன கணேஷ், அவன் அம்மா அப்பாவிடம் குய்யோ முறையோ என‌ பேசி பார்த்தும், அவனால் கல்யாண பேச்சு வார்த்தைகளை நிறுத்த முடியவில்லை. அத‌னால் இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ அச‌ம்பாவித‌ங்களை பற்றியும், சியாமளா அட்டூழியங்களைப் பற்றியும் த‌ன் பள்ளிகாலம் முதல் சிநேகமாக இருக்கும் உயிர் ந‌ண்ப‌ன் முத்துவேலிட‌ம் புல‌ம்புவ‌தற்கு அவ‌னை அழைத்துள்ளான் க‌ணேஷ்.

ஓவர் டூ கணேஷ் வீடு. டைம் 11 A.M

"டேய் உள்ள‌ வா. நீ வ‌ர்ற‌த‌ மேல்வீட்டு மாமி பாத்துட்டாங்க‌ளா?"

"இல்ல‌டா, ஏன்?"

"அவ‌ங்க‌ளுக்கு நீ ரூமுக்கு வ‌ந்தாலே ச‌ர‌க்கு அடிக்க‌த் தான் வ‌ர்றீயோன்னு ச‌ந்தேக‌ம் வ‌ந்திருச்சி, அதான்"

"ச‌ரி ச‌ரி என்ன‌ மேட்ட‌ர்? சியாம‌ளா ஓவர் டார்ச்ச‌ர் ப‌ண்றாளா?"

"ஆஹா, நாம மனசுல நெனச்சத இவன் கரெக்ட்டா பேரோட சொல்றானே? எப்படி?" என்று ஆச்சர்யத்தில் புருவத்தை உயர்த்தியவன், "மச்சி, உனக்கு சியாமளாவை தெரியுமா?" கேட்டான்.

ரெண்டு பியர் ஃப்ரிட்ஜில் இருந்து எடுக்கப்பட்டது.

"தெரியுமாவா.. உன்னை மாதிரி புதுசா வந்தவங்க தவிர, சியாமளாவை தெரியாதவன் இந்த ஆஃபிஸ்ல ஒருத்தன் கூட இருக்க மாட்டான். செக்யூரிட்டிக்கு கூட தெரியும்னா பாத்துக்கோயேன்"

"ஏன் மச்சி, அவ்வளவு பெரிய ஆளா அவ?"

"போன NewYear Bash ஆஃபிஸ் பார்ட்டில, அவ டீம்ல ஒரு ஜூனியர் ஒருத்தன் தண்ணியடிச்சிட்டு ஓவரா சவுண்டு விட்டப்ப, ஓங்கி அவன் கன்னத்துல ஒரு அறை விட்டா பாரு. எல்லார் காதுலயும் 'ஒய்ங்ங்ங்ங்'ன்னு சவுண்ட் வந்துச்சி"

முத‌ல் பிய‌ரின் முத‌ல் சிப்பை உறிஞ்சிக் கொண்டிருந்த‌வ‌ன் ட‌ப்பென‌ த‌ரையில் பயத்துடன் வைத்துவிட்டு, க‌ன்ன‌த்தைத் தடவிப்பார்த்துக் கொண்டான்.

"என்ன‌டா சொல்ற‌.. த‌ண்ணிய‌டிக்குற‌து ஒரு குத்த‌மா?"

"ம‌ச்சி, ஸ்ட்ரெய்ட் ஃபார்வ‌ர்டு பொண்ணுங்க சிலர் பத்தி கேள்விப்ப‌ட்டு இருப்ப‌ல்ல.. அந்த‌ க்யூல‌ இவ‌தான் முத‌ ஆளு. அந்த அறை வாங்குன‌வ‌ன் ஒரு வார‌ம் ஆஃபிஸ் ப‌க்க‌மே வ‌ர‌ல‌. பேப்ப‌ர் போட்டு போயிட்டான்"

கேட்டுக் கொண்டே, க‌டுமையான‌ டென்ஷ‌னில் முக்கால் பிய‌ரைக் காலி ப‌ண்ணிவிட்டான்.

"வேற என்ன அவளைப் பத்தி ஹாட் நியூஸ்"

வாயில் தலைகீழாக கவிழ்த்தி குடித்துக் கொண்டிருந்தவன், பாதியிலே நிப்பாட்டி, "அவளை பத்தி வர்ற நியூஸ் எல்லாமே ஹாட் நியூஸ் தான். போன வருஷம் UK ஆன்சைட்ல இருந்தப்ப, பார்ட்டில மறுபடியும் ரகளை"

"ஏன் அங்கே யாரையும் அடிச்சிட்டாளா?" மொத்த பயத்தையும் கண்களில் தேக்கி கேட்டான்.

"யாரையும் அவ‌ அடிக்கல..அவ தான் ரெண்டு ரவுண்டு ஒயின் அடிச்சிட்டா. ஒரே ஆட்டம்"

"டேய், என்னடா சொல்ற"

"பின்ன என்ன? அவ போட்ட ஆட்டத்துல, ஈஃபிள் டவரே ஆட்டம் போட்டுச்சின்னா, பாத்துக்கோயேன்" பியர் வேலையைக் காட்ட ஆரம்பித்தது.

"அவ தண்ணி எல்லாம் அடிப்பாளா? என்னால நம்பவே முடியல"

"நம்பித் தான் ஆகணும். சரி இதையெல்லாம் நீ ஏன் இவ்வளவு சீரியஸா கேட்குற?"

"அந்த நல்ல பொண்ண கட்டிக்கப் போறவன் நான் தான்"

முழுதாக ஒரு நிமிடம் முத்துவேல், கணேஷை வெறித்து பார்த்தான். பலவித உணர்ச்சிகள் அந்த பார்வையில் கொட்டியது, கூடவே அவன் திறந்த அடுத்த‌ பியரும்.

"உனக்கு ஆறுதல் சொல்றதுக்கு கூட எனக்கு வார்த்தைகள் இல்லடா. இந்த 25 வருஷத்துல இப்ப தான் எனக்கு உன்ன பாத்தா பாவமா இருக்கு. "

"நீ வேற ஏன்டா, கூட கொஞ்சம் பீதியக் கெளப்புற‌? இத நிப்பாட்டுறதுக்கு வீட்டுல கத்துனேன், கதறுனேன். யாருமே சீண்டல. உன்கிட்ட புலம்பலாம்ன்னு வந்தா, அதுக்கு அவிங்களே பரவாயில்ல" நிறுத்தி நிதானமாக விட்டத்தை வெறித்தபடி பேசினான்.

"ஃப்ரீயா விடுடா. ஆனா ஒண்ணு, அடுத்த வாரம் சனிப்பெயர்ச்சி இந்த உலகத்துல உனக்கு மட்டும் தான் நடக்க போகுதுன்னு நெனைக்கிறேன். கணேஷ் Weds சியாமளா, குட் காம்பினேஷன்"

"மூஞ்சியிலே குத்துனேன்னு வச்சிக்கோ, மவனே..." டென்ஷனாகி பின் பொறுமையாக "கடுப்பை கெளப்பாத, முத்து. ஏதாவது ஐடியா கொடுத்து அந்த கண்டத்துல இருந்து காப்பாத்துடா" ரெண்டாவது பியர் ஆரம்பம்.

"ஒண்ணும் இல்ல. நேரா போய் அவகிட்ட பேசிடு. முடிஞ்சா கால்ல விழுந்துடு"

"அதெல்லாம் பேசி பாத்துட்டேன். பேசுனா,I Love You சொல்றா"

"ஹா ஹா ஹா" விழுந்து விழுந்து சிரித்தான். "மச்சி, உன்னையெல்லாம் ஒரு பொண்ணு திரும்பி பாக்குறதே பெரிய விஷயம். ஒருத்தி உன்கிட்ட வந்து I Love you சொன்னா, அதுவே எட்டாவது உலக அதிசயம்"

"த்தூ.. சனியனே, உன்கிட்ட போய் கேட்டேன் பாரு..என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு"

"என்ன?"

"அவள‌ நேர்ல போய் பார்த்து, 'அசிங்க அசிங்கமா திட்டுவேன்.. இல்லன்னா நான் தம், தண்ணி எல்லாம் அடிப்பேன், ஏற்கெனவே ஒரு பொண்ண லவ் பண்றேன், நாங்க அடுத்த வாரம் ஓடிப் போக போறோம்' இப்படி ஏதாவது சொல்லி அவளை டென்ஷன் ஆக்கி ஒரு பயம் உண்டாக்குவேன், எப்படி நம்ம ஐடியா?" பெருமிதமாக அவனை பார்த்தான். ரெண்டாவது பியர் முடிகின்ற தருவாயில் உள்ளது.

"குட் ஐடியா" ஏளனமாக சொன்னான்.

"ச்சே, இப்ப நான் இருக்கற டென்ஷன்ல, அவ மட்டும் என் கையில சிக்குனா, அவளை ஆஃப்பாயில் போட்ருவேன்"

"மச்சி, வாமிட் வந்தா பாத்ரூம் போயிடு"

"அவளுக்கு உடம்பெல்லாம் கொழுப்புடா. அதான் அன்னைக்கு என்னை லஞ்ச்க்கு கூப்பிட்டு போய் கலாசிட்டா.. அவளுக்கு ஒரு நாள் இருக்கு?" பியர் உச்சி மண்டையில் டான்ஸ் ஆடியது.

"?!?!"

"இல்ல. ஐ மீன், அவ ஓவர் திமிர் பிடிச்சவன்னு சொல்ல வந்தேன்"

காலிங் பெல் அடித்தது.

"டேய், எல்லாத்தையும் எடுத்து உள்ள வை. மாமி வந்துட்டாங்கன்னு நெனைக்கிறேன். அமாவாசை, கிருத்திகைன்னா பாயாசம், வடைன்னு ஏதாவது இம்சை பண்றதே இவங்களுக்கு வேலையா போச்சி"

30 செகண்டில் இடத்தை க்ளீன் பண்ணிவிட்டார்கள். கணேஷ் கதவை பாதி திறந்தான்.

யாரையும் காணவில்லை. முழுதாகத் திறந்தான். முழுதாக நின்றிருந்தாள்.

"சியாமளா"

*************************
கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10

*************************

Related Posts with Thumbnails