குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்!

போன வாரம் இந்த படம் பார்த்ததுக்கு இன்னிக்கு வரைக்கும் நான் ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கேன். காரணம், என் பெண் தோழியை (கேர்ள் ஃப்ரெண்ட்னா கெட்ட வார்த்தையாமே?) அழைத்துக் கொண்டு சத்யம் தியேட்டர்க்கு போனேன். போகும் போது ஒண்ணா போனோம். வரும்போது தனித்தனியா வந்துவிட்டோம். என்னை செருப்பால் அடிக்காத குறை. ஏழாவது ப்ரோப்பஸல் அட்டெம்ப்ட் ஃபெயில்ட்.

சரண், ஏமாற்றிவிட்டார். யுவன் மியூசிக்கை வீணடித்துவிட்டார்கள். படம் பார்த்த எஃபெக்ட்டை உயிர்த்தோழனுடன் சேர்ந்து மேன்ஷன் ஹவுஸில் செலிபிரேட் பண்ணினேன். "நண்பன் தான் எப்பவுமே.. நண்பன் தான் உயிர், மத்ததெல்லாம்......" இத நான் சொல்லலீங்க.. படத்துல வர்ற டையலாக்.
என்னமோ தெரியலை. நான் வரிசையா பாத்துட்டு வர்ற படம் எல்லாமே அசுரத்தனமான மொக்கையா இருக்கு. இதற்கு முன் பார்த்த படம், கார்த்திக் அனிதா.

எக்ஸ்ட்ரா பிட்ஸ்: ஆஃபிஸில் நான் உட்கார்ந்து வேலை பார்க்கும் சீட்டுக்கு கீழே தீ எரிந்து கொண்டிருப்பதால், பிளாக் பக்கம் தலை காட்ட முடிவதில்லை. எதுவுமே நிரந்தரமில்லை. மீண்டு(ம்) வருவேன்.

***************

இனிமேல் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தான்!

தோற்கும் காதல் கதைகள் காவியமாம்
எனக்கு பேராசையில்லை
உன்னுடன் வாழும் வாழ்க்கையே
எனக்கு காவியம் தான்!
ஆதலால் காவியம் படைப்போம்,
சீக்கிரம் வாடி!

உனக்கும் எனக்குமான இடைவெளிகள்
ஏன், உன் மேலுதடுக்கும்
கீழ் உதடுக்கும் இடையேயான
தூரமாக இருக்கக் கூடாது?
அன்பே, அடிக்காமல் கடிக்காமதில் சொல்லவே முடியாதா
இந்த கேள்விக்கு உன்னால்?

இந்த சுரிதார் அழகா என்று கேட்கிறாய்
மீன் விழிகளின் மூச்சுத் திணறலில்
அலுங்காமால் குலுங்காமல்
அழகாக இப்போது தான் தெரிகிறது,
உன்னால் இன்று சுரிதார் அழகானது.
நான் எப்போது?

இரவு முழுவதும் வேர்க்கிறது
பயமாக இருக்கிறது
மூச்சு திணறலும் வந்து போகிறது.
எழுந்திருக்கவும் மனதில்லை
நில்.
பிசாசே,ஒன்று கனவில் வா, இல்லை வராதே
வந்து வந்து போய் கொல்லாதே!

வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு, அது இடைஞ்சல்
சொன்னவன் முட்டாள் கவிஞன்
என்னால் சிவக்க சிவக்க வெட்கம்
உன்னிடம் பிறக்கும் தருணங்கள்
நான் செத்து செத்து மீண்டும்
பிறக்கும் அபூர்வ தருணங்கள்

கஷ்டமாக இருக்கிறது, ஏதோ ஒன்று குறைகிறது
தயவுசெய்து புலம்பாதே!
ஒன்றும் குழப்பிக்க வேண்டாம்
ஒரே ஒரு முறை முத்தமிடலாம்
எல்லாம் சரியாகிவிடும்!
சரிபார்த்து விடலாமா?
பொறுக்கி, என அடிக்க ஓடி வருகிறாய்
இப்போதும் குறைகிறதா?
அட ஆமா, எதுவும் குறையவில்லை
அதனால்,
அதனால்?
முத்தமிட ஆரம்பிக்கலாமா?
ம்ம் என்றாய், தலையைக் குனிந்து கொண்டு
தலையை நிமிர்த்தினேன்
இனிமேல் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தான்!

************

Related Posts with Thumbnails