சியாமளா-21: கணேஷ் யாருக்கு?(க்ளைமேக்ஸ்)

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21

காரில் போய்க் கொண்டிருந்தனர். திவ்யா அருகில் கணேஷ் அமர்ந்திருந்தான். கணேஷ் இப்போது கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருந்தான். ஆனால் திவ்யா நிலநடுக்கம் வந்துபோன இடம் போல் இருந்தாள். ரோட்டை பார்த்துக் கொண்டே திவ்யா சீரியஸாகக் கேட்டாள்.

“நீ கட்டிக்கப் போற பொண்ணு என்னை விட அழகா இருப்பாளா கணேஷ்?”

அழுவதா சிரிப்பதா? கணேஷ்க்கு தெரியவில்லை.

ஒரு நிமிடம் முழுவதும் போனபின்பு, பொறுமையில்லாமல் கேட்டாள் திவ்யா, “உண்மைலயேவா?”

“நான் எதுவுமே சொல்லலீயே?” என பதறிபோய் பதில் அளித்தான்.

“அப்ப நான் தான் அழகுன்னு சொல்ற..” என சொல்லிக் கொண்டே “ஹா ஹா ஹா” வென கார் அதிர சிரித்தாள்.

“என்ன பொண்ணு இவ” என மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவளை வெறித்து பார்த்தான். ஒரு லுக்ல பார்த்தா வில்லன்(வில்லி) சிரிப்பது மாதிரியும் இருந்தது.

“ஆனா ஒண்ணு கணேஷ்.. இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லாமலேயே நீ இந்தியா போய் இருக்கலாம். நீ இப்ப இவ்வளோ சொன்னதுனால தான், என்னால் ஈஸியா எடுத்துக்க முடியல” என லைட்டாக கண்கலங்க ஆரம்பித்தாள். பெண்களால் மட்டும் தான் ஃப்ராக்சன் ஆஃப் செகண்டில் மூட் மாற்றி பேசமுடியும்.

“இல்ல.. அது வந்து..” அவளை சமாதானப்படுத்தலாம் என ஆரம்பத்தான், ரிஸ்க் எடுக்க விரும்பாததால் நிறுத்திக் கொண்டான்.

“இட்ஸ் ஓ.கே. ஆனா என்னை கல்யாணத்துக்கு கூப்பிடுவீயா கணேஷ்” என யோசித்துவிட்டு கேட்டாள்.

“ “

“சரி.. ஓ.கே. பட் ஒன் கண்டிஷன்? நீ அதுக்கு ஒத்துக்கிட்டா நான் கல்யாணத்துக்கு வரமாட்டேன்” தூண்டிலில் மண்புழுவை வைத்துக் கொண்டு வீசினாள்.

கணேஷுக்கு அந்த கண்டிஷன் என்ன என தெரியாமல் ஒத்துக்கொள்ளக் கூடாது என நினைத்துக் கொண்டிருந்தாலும், இவளை கல்யாணத்திற்காக இந்தியா வரை வரவைத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை.”ஒரு வேளை கிஸ் கேப்பாளோ? 7/ஜி ரெயின்போ ஸ்டைல்ல… அப்படி இருக்குமோ, ஒருவேளை இப்படி இருக்குமோ?” என ஏடாகூடாமாக மண்டையக் குடைந்தான். “இவ கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா, இல்ல வில்லியா என இந்த செகண்ட் வரை புரியாமல் நடிகர் பாண்டியராஜன் போல திருதிருவென முழித்தான்.

”ஹெல்லோ… வாட்ட்? டீலா நோ டீலா?” என கான்ஃபிடண்டாக கேட்டாள்.

30 செகண்டுகள் கழித்து, “டீல். என்ன கண்டிஷன்?” என கேட்டுவிட்டு 20-20 மேட்ச்சின் கடைசி 2 ஓவர் போல இதயம் குதிரையின் ஒட்டம் போல துடித்தது.

ஃப்ரீவேயில் ஓட்டிக் கொண்டிருந்த காரை எக்ஸிட்-டில் வளைத்து ஹோட்டல் செல்லும் பாதையில் வேகத்தைக் குறைத்து ஓட்டினாள். “ரைட்.. நீ கட்டிக்கப் போற பொண்ணை நான் பார்க்கணும்.” என்றாள் பொறுமையாக.

”வாட்ட்ட்ட்ட்ட்… ஆர் யூ க்ரேஸி?”

“யெஸ்.. ஐ’யாம்.. நீ ஒண்ணும் டென்ஷன் ஆக வேணாம். அவகிட்ட நான் பேச மாட்டேன். நீ இண்ட்ரோ கூட கொடுக்கத் தேவை இல்ல.. தூரத்துல இருந்து பார்த்துட்டு, அப்படியே போயிடுறேன். ஒருவேளை நீ இதுக்கு ஒத்துக்கலைன்னா, நான் கல்யாணத்து அன்னைக்கு முன்னாடி வந்து……”

”வெயிட் வெயிட்.. நான் எதுவும் சொல்றதுக்கு முன்னாடியே ஏன் அடுத்த ஆப்ஷனை பத்தி யோசிக்கிற?”

“சரி சொல்லு.. உன்னோட முடிவு என்ன?” திவ்யா பரபரத்தாள். கார் ஹோட்டல் பார்க்கிங் ஏரியாவில் உள்ளே நுழைந்தது. வண்டியை நிறுத்திவிட்டு, லிஃப்ட் அருகில் காத்திருந்தனர். இன்னும் திவ்யா கணேஷ் முகத்தையே ஒரு சிறுகுழந்தை போல பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஓ.கே. நீ பேசலாம், பட், நம்ம விஷயத்தை பத்தி பேசக்கூடாது. ப்ராமிஸ்” என ஜெர்கினில் இருந்து கையை உருவி அவள் முன் நீட்டினான். உடனே குதூகலமாக அவளும் கையை க்ளோவ்ஸில் இருந்து கழற்றி செங்காந்தள் மலர் போல அடர் சிவப்பு ரத்தம் உள்ளங்கையில் ஓட கணேஷ் உள்ளங்கையில் வைத்து பற்றிக் கொள்ள… நான்கு வருடத்திற்கு பின் அதே டச். அதே குச்சி குச்சியான விரல்கள். கணேஷ் அவள் விரல்களுக்குள் தன் விரல்களை அழுத்தும் நேரத்தில், லிஃப்ட் திறக்க வெளியே வந்தாள் சியாமளா. உடனே கைகள் உதறப்பட்டன. பெண்ணுக்கு எதிரி பெண்.. ஆணுக்கும் எதிரி பெண்.

அங்கே இருந்த அசாதாரண சூழ்நிலையை சியாமளா சமாளித்துக் கொண்டு, திவ்யாவை ரூமுக்கு அழைத்து சென்றாள். இரண்டடி தூரத்தில் கணேஷ். உடனே உள்ளே ஒரு ஸ்பார்க் வெடித்தது. “இந்த நிமிடம் வரை திவ்யா எதற்கு ஹோட்டல் வந்திருக்கிறாள்?” என தெரியாததால், அதைப் பற்றி யோசிக்காமல் இருந்ததால் டென்ஷன் ஆனான். அவசரம் அவசரமாக அவர்களை ஃபாலோ பண்ணினான்.

சியாமளா ரூமில் அவர்கள் உள்ளே செல்ல, இவனும் உள்ளே நுழைந்தான். இவன் உள்ளே காலடி வைத்த நொடியில், அவன் கண்கள் குருடானது. உள்ளே இருந்த அணைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. கேண்டிலின் மெல்லிய வெளிச்சம் ஹாலின் நடுவே எரிய ஆரம்பிக்க, சுற்றியும் 8 பேர் சீராக கைதட்டிக் கொண்டிருக்க, லேப்டாப் ஸ்பீக்கரில், “ஹேப்பி பர்த்டே டூ யூ.. ஹேப்பி பர்த்டே டூ யூ.. “ என சின்னக் குழந்தை பாட அடுத்த வரியை, எல்லாரும் சேர்ந்து மொத்தமாக, “ஹேப்ப்பி பர்த்டே டூ கணேஷ்ஷ்ஷ்ஷ்ஷ்” என முடிக்க, கணேஷ் பர்த்டே கேக் அருகில் வர ஃபோம் ஸ்ப்ரே டப் என ரெண்டு பக்கம் இருந்து அடிக்கப்பட்டது, மேலே இருந்து ஜிகினா பேப்பர் கட்ஸ் கொட்டப்பட அனைத்து விளக்குகளும் எரிந்தன. காலேஜ் ஃபைனல் இயர் பர்த்டே செலிப்ரேஷனுக்கு அப்புறம், கணேஷ் இப்படி க்ராண்ட்டா கொண்டாடும் பர்த்டே இது. கணேஷ், எல்லாருக்கும் தேங்க்ஸ் சொல்லிவிட்டு கேக் கட் பண்ணினான். கட் பண்ணிய முதல் பீஸை சியாமளா முன்னே வந்து கணேஷுக்கு ஊட்ட, திரும்ப கணேஷ் சியாமளாவுக்கு ஊட்ட, திவ்யா காதுகளில் இருந்து புகை வர ஆரம்பித்தது.

கணேஷ் எல்லாருக்கும் கேக் கொடுத்துவிட்டு திவ்யா அருகில் வந்து நின்றான். “நீ கூட மறந்துட்ட. பாரு, சியாமளா எப்படி அரேஞ்ச் பண்ணி இருக்கான்னு?” என பெருமையாக சொன்னான். “இப்ப எதுக்கு தேவையில்லாம என்ன அவ கூட கம்பேர் பண்ற?” என கடித்தாள். அப்போது தான் ஆர்வமிகுதியில் கணேஷ் செய்த முட்டாள்தனம் உறைத்தது. நாக்கைக் கடித்துக் கொண்டான்.

“ஓ.கே ஃப்ரண்ட்ஸ். உங்க எல்லாரையும் நான் இன்வைட் பண்றதுக்கு கணேஷ் பர்த்டே மட்டும் காரணம் இல்ல” வேண்டுமென்றே கொஞ்சம் இடைவெளி விட்டாள். எல்லாரும் ஆச்சர்யமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கணேஷ்க்கு தலைக்குள் லைட்டாக மணி அடித்தது.

“ஆல்ரைட். என்னோட மேரேஜ் இன்விடேஷன் கொடுக்கறதுக்கும் தான்” என அவள் சொல்லி முடிக்க அங்கே இருந்த அனைவரும் திவ்யா உள்பட கைதட்டி “கங்கிராட்ஸ்” என கத்தினர். ”என்னோட வுட் பி-க்காக நான் ஒரு ரிங் கூட வாங்கி இருக்கேன்” என எடுத்துக் காட்டினாள். கூட்டம் ‘வாவ்’ என வாயை பிளந்தது.

“ஓ.கே. அவர் யாருன்னு உங்களுக்கு தெரியுமா?” கைதட்டல் அமைதியானது. இரண்டு ஸ்டெப்ஸ் முன்னால் நடந்து வந்தாள்.

திவ்யாவிற்கு அருகில் நின்றிருந்த கணேஷ் முன் மண்டியிட்டு, ”ஐ லவ் யூ பேபி” என கையை விரித்து சொல்லிவிட்டு, மோதிரத்திற்காக கணேஷின் வலதுகையைக் கேட்டாள். கணேஷ்க்கு உற்சாகம் பியர் பாட்டில் போல் பொத்துக் கொண்டு வந்தது. ஆனாலும் பொறுமையாக அவள் செய்வதை ரசித்துக் கொண்டே அவளுக்காக வலதுகையைக் கொடுக்க, அவள் மோதிரம் போட, கூட்டத்தினர் கைதட்டி கூச்சல் போட்டனர். அவள் முடித்ததும், கணேஷ் அவள் தோள்களைப் பற்றி தூக்கி சியாமளாவைக் கட்டி பிடித்து சுற்றினான். இன்னும் கூட்டம் ரசித்தது. “தேங்க்ஸ் ஹனீ” என சியாமளா முகத்தருகில் சொல்லிவிட்டு நிமிர்ந்தான். நிமிர்ந்தால் திவ்யாவின் கண்களில் கண்ணீர் தேங்கி இருந்தது. கணேஷ், “ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்” என கெஞ்சினான். எதுவும் தப்பாக நடந்துவிடக் கூடாது என வேண்டிக் கொண்டான்.

சியாமளா அவனை விட்டு விலகி, ஊரில் இருந்து வந்த இன்விடேஷனை எல்லாருக்கும் கொடுக்க ஆரம்பித்தாள். திவ்யாவிற்கு கொடுக்க அருகில் வந்த போது, திவ்யா சியாமளாவை கட்டிப்பிடித்தாள். “கங்கிராட்ஸ். க்ரேட் ச்சாய்ஸ்” என உடைந்த குரலில், உற்சாகம் போர்த்தி விஷ் பண்ணினாள். “கங்கிராட்ஸ் கணேஷ்” என கணேஷுக்கும் ஃபார்மலாக விஷ் பண்ணிவிட்டு பார்ட்டியை விட்டு விலகி ஓடினாள். யாரும் அதை கவனிக்கவில்லை, கணேஷைத் தவிர.

வெள்ளிக்கிழமை. 10.45AM. லண்டன் ஏர்போர்ட்.

எல்லா ஃபார்மலிட்டிகளையும் முடித்துவிட்டு, ஃப்ளைட்டில் உள்ளே சென்றனர். சீட்டில் உட்கார்ந்து கொண்டனர். “எப்பவும் நான் கெளம்பும்போது க்ளையண்ட் ஆஃபிஸிலிருந்து வருவாங்க. இந்தவாட்டி யாரையும் காணோம்?” என ப்ச் கொட்டினாள் சியாமளா.

“ஓ.. அப்படியா.. யாரு யூஷுவலா வருவா?” கணேஷ்

“திவ்யா. நேத்து பார்ட்டில கூட ரொம்ப மூட் ஆஃப்பா இருந்தா. ரைட், அவளைப் பத்தி பேசி என்ன ப்ரயோஜனம்?” கல்யாணம் ச்சும்மா அதிரணும் கணேஷ். என்னோட ரொம்ப நாள் கனவு. நல்லா க்ராண்ட்டா பண்ணனும்ன்னு” என ஆசைகளை விரித்தாள் சியாமளா.

“ம்ம்ம்.. பர்த்டே பார்ட்டிலயே இப்படி க்ராண்ட்டா announce பண்ணுவேன்னும் நான் எதிர்பார்க்கல.” என்றான்.

“ம்ம். ஆமா அது தான் என் ஸ்பெஷல். ஹேய்.. அங்க உனக்கு ஒரு கிஃப்ட் வந்திச்சி.. இந்தா” என ஒரு பார்ஸலை நீட்டினாள் சியாமளா.

என்ன என யோசித்துக் கொண்டே பிரித்தான். உள்ளே திவ்யா ப்ரசண்ட் பண்ண கணேஷ்-திவ்யா காலேஜ் ஃபோட்டோ. ஒரே செகண்டில் மொத்த சந்தோஷமும் ஃபில்டர் ஆகி சியாமளா முகத்தைப் பார்த்தான்.

“எல்லாம் தெரியும்….” கொஞ்சம் இடைவெளி விட்டு, “இதுவும் என் ஸ்பெஷல்” என 0.0001% கூட குறையாத அதே காதலின் கிறக்கத்துடன் கண்ணடித்தாள் சியாமளா. கணேஷ் அவள் தோள்களை பிடித்து வாஞ்சையாக அணைத்துக் கொள்ள

காதல் ஃப்ளைட் சேஃபாக டேக் ஆஃப் ஆனது.

(முற்றும்)

*************************************

36 comments:

priyamudan said...

Me the First...

priyamudan said...

வாழ்த்துக்கள்.. அருமையான திருப்பங்களுடன் சூப்பரா கதயை முடித்துவிட்டீர்கள்... வாழ்த்துக்கள்..

Anonymous said...

expected finishing........

Elam said...

Good Story...

☀நான் ஆதவன்☀ said...

அடப்பாவி மக்கா இவ்ளோ சாதாரணமா எடுத்துப்பான்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா இந்த கதை பாரின் வரைக்கும் வந்திருக்காதே :))

எனிவே அருமையா எடுத்துட்டு போய் அழகா முடிச்சுட்டீங்க கணேஷ். வாழ்த்துகள்.

என்னது இந்த கதைய ’வார்னர் பிரதர்ஸ்’ வாங்கிட்டாங்களா? end cardல WB இருக்குதே? :))

ஷாலினி & ஹரிணி எல்லாரும் வீட்டுக்கு போங்க. கதை முடிஞ்சிருச்சு :)

Anonymous said...

சியாமளா இன்னும் சண்டை போட்டிருக்கலாம். ஆமாம் போட்டோ எப்படி சியாமளா கிட்ட போச்சு?

நல்லா இருந்துது இந்த தொடர்.

Anbarasu S said...

மிக்க நன்று. பல திருப்பங்களுடன் அருமையாக இருந்தது. அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து...

அன்பரசு செல்வராசு.

Shankar said...

Hey, Starting 2 ending வரை பரபரப்பாக இருந்தது பக்கா da.
Light - ஆ ஆனந்த தாண்டவம் touch இருந்த மாதிரி ஒரு feel. Anyhow, its really superb...
சீக்ரமாக ஷ்யாமளா மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க வாழ்த்துக்கள்!
Incase, Already கிடைச்சிருந்தாலும் வாழ்த்துக்கள்! :)

கணேஷ் said...

Venkat N (வெண்பூ) to mokkaimails
show details 12:23 PM (4 hours ago)


தமிழ் வலைப்பதிவுலகில் தொடர் கதை எழுதுவது எவ்வளவு கஷ்டம்னு எல்லாருக்கும் தெரியும். ஒரு நாலு வாரம் தொடர்ந்து படிச்சிட்டு அதுக்கப்புறம் எல்லாரும் டீல்ல விட்டுடுவாங்க.

ஆனா கணேஷ் எழுதுன கணேஷ் - சியாமளா தொடர் என்னைப் பொறுத்தவரை ஒரு வெற்றிகரமான தொடர். ரொம்ப அழகா யூத்ஃபுல்லா சின்ன சின்ன சஸ்பென்ஸோட நல்லா போனது.

அடுத்த பாகம் எப்ப வரும்னு தவிப்போட காத்திட்டு இருந்தேன்னு பொய் சொல்ல மாட்டேன், ஆனா ரீடர் ஓபன் பண்ணின உடனே 10 பதிவு இருந்தா அதில முதல்ல படிக்கிறது இந்த கதைதான். அதே மாதிரி எல்லா பாகமும் ரீடர்லயே படிச்சிட்டு வந்தேன்.

ரொம்பவும் இழுக்காமல் சரியான நேரத்துல ஜாலியான முடிவும் கூட. எனக்கு இந்த தொடர் ரொம்ப பிடிச்சிருந்தது.
ஹாட்ஸ் ஆஃப் கணேஷ்.. பாராட்டுகள்...

ஹி ஹி.. ஒரு விளம்பரம்ம்ம்ம் :)

Prem said...

ஆட... சட்டுனு முடிஞ்சுடிச்சே...
எனக்கு இதுலே புடிச்சது, ஒவ்வொரு பகுதியிலேயும் இருக்கும் அந்த எதிர்பார்ப்பு தான்...
மிகவும் அசத்தலானது...
மற்றபடி முடிவு ரொம்ப சறக்குன்னு இருக்கு...
ஆனா வேற எப்படியும் முடிக்க முடியும்?

அட எனக்கு தோன்றிய மாதிரியே வேறு சிலருக்கும் அந்த ஆனந்த தாண்டவம் நினைவுக்கு வந்திருப்பது ஆச்சரியம்!

Athisha said...

நண்பா உங்கள் முயற்சிக்கே முதலில் பாரட்ட வேண்டும். கதையை பிடிஎப் ஆக்கி எங்காவது அப்லோட் பண்ணினா மொத்தமா படிக்க வசதியா இருக்கும். நான் இன்னும் ஒரு அத்தியாயமும் படிககல

சிவகுமார் said...

Super ---------- End _____________
Pa

Menaga Sathia said...

வாழ்த்துக்கள் கணேஷ்!!தொடரை அருமையா முடித்துவிட்டீர்கள்.ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து படித்து வந்தேன்...

2009kr said...

அருமையான விறுவிறுப்பான கதை. முடிவு சுபமாக இருந்தாலும் சட்டென முடிந்தது சற்று வருத்தமாக இருந்தது. அடுத்த கதை எப்போ?

Premnath Thirumalaisamy said...

Valthukkal .. Adutha kathai poojai eppo ??

கனிமொழி said...

Superbbb....
Waiting for the next one Ganesh...

Saran-DBA said...

excellent.

G.R said...

அருமை...ஆனா முடிந்தது சற்று வருத்தமாக இருக்கு..வாழ்த்துக்கள்:)

பாலாஜி சங்கர் said...

வாழ்த்துக்கள்..

Porkodi (பொற்கொடி) said...

vanten vanten.. ennanu mudichinga???

Porkodi (பொற்கொடி) said...

//அடப்பாவி மக்கா இவ்ளோ சாதாரணமா எடுத்துப்பான்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா இந்த கதை பாரின் வரைக்கும் வந்திருக்காதே :))

எனிவே அருமையா எடுத்துட்டு போய் அழகா முடிச்சுட்டீங்க கணேஷ். வாழ்த்துகள்.

என்னது இந்த கதைய ’வார்னர் பிரதர்ஸ்’ வாங்கிட்டாங்களா? end cardல WB இருக்குதே? :))

ஷாலினி & ஹரிணி எல்லாரும் வீட்டுக்கு போங்க. கதை முடிஞ்சிருச்சு :)

//

varikku vari, "repeatttttay" :D

nalla kadhai, thanks ganesh. ana neenga ovvovuru episodelayum romba nalla ezhudhitinga, so i kind of knew climax can obviously not match the rest of the story. adhe thaan nadandhurku :D indha matum happy climax vechingle adhuku oru nandri hai! adutha padam poojai epo nu sollunga, vandhudaren..

happy married life to ganesh and shyamala. chinna ammini ketta kostinsku me also wanting anwers.

Anonymous said...

UNGALUKU எப்ப கல்யாணம் கணேஷ்?”
kondipa invite pananum..

SupamANA MUDIU...

so thirilinga kondu poi..

Kadisila samtha mudichitenga...v.GOOD BOY.

enna neenga seikrama thodra mudictienga...athan oru CHINNA varutham...

atleast feb 14 varikum kondu poi erukalam...

Sari Next thodar eppoo varum.....

Enga Varutha padtha Valibar Sangam Sarba Ungaluku oru Vila Edukkalamnu erukom...
"Kadal Mannan Ganesh"apdinu patam kooda undoo"(Yarupa athu valaga valaganu cholrathu....)ada nama .v.v.s grupthan...

Nandri
Valgavalamudan.
Eppadiku.
V.V.S.GROUPS...

natraj said...

Waiting for next story!

கணேஷ் said...

நன்றி priyamudan
Me the First...//

இப்படியெல்லாம் கமெண்ட் போடுற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லீங்க :)

****************
நன்றி Anonymous!

expected finishing........//

இத சொல்றதுக்கு எதுக்கு அனானி என்னும் முகமூடி?

****************

நன்றி Elam!

நன்றி ☀நான் ஆதவன்☀

அடப்பாவி மக்கா இவ்ளோ சாதாரணமா எடுத்துப்பான்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா இந்த கதை பாரின் வரைக்கும் வந்திருக்காதே :))//

அதுவும் சரி தான்.. :)

என்னது இந்த கதைய ’வார்னர் பிரதர்ஸ்’ வாங்கிட்டாங்களா? end cardல WB இருக்குதே? :))//

:) அவங்களுக்கும் நம்ம ஊர் ஐங்கரனுக்கும் பெரிய போட்டியே நடந்துச்சி தெரியுமா? :)

ஷாலினி & ஹரிணி எல்லாரும் வீட்டுக்கு போங்க. கதை முடிஞ்சிருச்சு :)//

ஆமா ஆமா.. போங்க :)

****************

நன்றி சின்ன அம்மிணி!

சியாமளா இன்னும் சண்டை போட்டிருக்கலாம். ஆமாம் போட்டோ எப்படி சியாமளா கிட்ட போச்சு?//

காக்கா தூக்கிட்டு போச்சி.. கோடி கோடியா பணம் போட்டு சினிமா எடுக்குறவங்ககிட்ட மட்டும் லாஜிக் பாருங்க.. ச்சும்மா ப்ளாக்ல தொடர் எழுதுறவன்கிட்ட எல்லாம் பார்க்காதீங்க..

க்ளீஷேவான க்ளைமேக்ஸ்க்கு ஃப்ளைட்ல சியாமளா கைல தூக்கி கொடுத்துட்டேன் என்பதே காரணம் :)

****************

நன்றி Anbarasu Selvarasu!

அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து...//

ஏன்? ஏன்? ஏன்?

****************

நன்றி Shankar!

Hey, Starting 2 ending வரை பரபரப்பாக இருந்தது பக்கா da.
Light - ஆ ஆனந்த தாண்டவம் touch இருந்த மாதிரி ஒரு feel. //

அப்படியா சொல்ற.. ச்சே இதுக்கு தான் ட்ரெயின் உட்கார்ந்து கதை எழுதிட்டு பேப்பரை கீழ போடக்கூடாதுன்னு பெரியவங்க சொல்றாங்க :)

Incase, Already கிடைச்சிருந்தாலும் வாழ்த்துக்கள்! :)//

ஹூம்க்கும்.. இது வேறயா.. அதெல்லாம் இருந்தா நான் ஏன் வெட்டியா உட்கார்ந்து கதை எழுதிட்டு இருக்கேன் :)

****************

நன்றி Venkat N (வெண்பூ)

உங்களின் பாராட்டுக்கள் உண்மையில் எனக்கு மனநிறைவை கொடுத்தது.

****************

நன்றி Prem!

நன்றி அதிஷா!

நண்பா உங்கள் முயற்சிக்கே முதலில் பாரட்ட வேண்டும். கதையை பிடிஎப் ஆக்கி எங்காவது அப்லோட் பண்ணினா மொத்தமா படிக்க வசதியா இருக்கும்//

முயற்சி செய்கிறேன் நண்பா..

முதலில் ஒரு எபிசோடாவது படிக்கவும் :)

****************

நன்றி சிவகுமார்!

நன்றி Mrs.Menagasathia!

ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து படித்து வந்தேன்...//

ஆனா கடைசில மட்டும் கமெண்ட் போட்ருகீங்க :)

****************

நன்றி 2009kr!

அடுத்த கதை எப்போ?//

ஏன்? ஏன்? ஏன்?

****************

நன்றி Premnath!

Adutha kathai poojai eppo ??//

ஏன்? ஏன்? ஏன்?

****************

நன்றி கனிமொழி!

Waiting for the next one Ganesh...//

ஏன்? ஏன்? ஏன்?

****************

நன்றி Saran-DBA!

நன்றி G.R!

நன்றி பாலாஜி

நன்றி Porkodi (பொற்கொடி)

varikku vari, "repeatttttay" :D//

:(

nalla kadhai, thanks ganesh. ana neenga ovvovuru episodelayum romba nalla ezhudhitinga, so i kind of knew climax can obviously not match the rest of the story. adhe thaan nadandhurku :D//

ம்ம்ம்ம் :(

indha matum happy climax vechingle adhuku oru nandri hai! //

ம்ம்ம்ம் :)

adutha padam poojai epo nu sollunga, vandhudaren..//

ஏன்? ஏன்? ஏன்? அப்ப மத்த போஸ்ட்க்கெல்லாம் கமெண்ட்?

chinna ammini ketta kostinsku me also wanting anwers.//

சொல்லியாச்சி... மேலே போய் பாருங்க :)

****************

நன்றீ Complan Surya!

UNGALUKU எப்ப கல்யாணம் கணேஷ்?”
kondipa invite pananum..//

ஷுயூர்.. எனக்கும் ஆசை தான்... பொண்ணு தான் கெடைக்க மாட்டேங்குது :(

atleast feb 14 varikum kondu poi erukalam...//

அடச்சே... இது நல்ல ஐடியாவே இருக்கே.. மிஸ் பண்ணிட்டேன் :(

Sari Next thodar eppoo varum//

ஏன்? ஏன்? ஏன்?

"Kadal Mannan Ganesh"apdinu patam kooda undoo//

அய்யோ.. இது “காதல் மன்னன்” படத்துல நடிச்ச அஜீத்துக்கு தெரியுமா? :)

****************

நன்றி natraj!

Waiting for next story!//

ஏன்? ஏன்? ஏன்?

****************

Unknown said...

Thalai super climax

நாடோடிப் பையன் said...

Very nice story.Great job!

Your blog is one of the first ones I try to read every week.

Anonymous said...

இந்த மாதிரி இன்னொரு தொடர் எழுதுங்க. ரொம்ப நல்லா இருந்தது.

puduvaisiva said...

இன்னங்க கணேஷ் கதையில திவ்யாவை இப்படி தனிய விட்டுடிங்க .
இங்க நம்ப கணேஷ் நண்பர் முத்து தனி மரமா இருக்கிறதை மறந்துட்டிங்களே.

எனி வே சின்ன அம்மிணி விருப்பம் போல அடுத்த தொடர் எழுதவும்.

கணேஷ் said...

நன்றி maharajanV!

நன்றி நாடோடிப் பையன்!

Your blog is one of the first ones I try to read every week.//

ரொம்ப சந்தோஷம்ங்க :)

**********************

நன்றி சின்ன அம்மிணி!

இந்த மாதிரி இன்னொரு தொடர் எழுதுங்க. ரொம்ப நல்லா இருந்தது.//

ஒரு தொடருக்கே நாக்கு தள்ளிடுச்சி.. இதுல இன்னொன்னா?

**********************

நன்றி ♠புதுவை சிவா♠

இன்னங்க கணேஷ் கதையில திவ்யாவை இப்படி தனிய விட்டுடிங்க .//

வேணுமின்னா கணேஷ்-திவ்யான்னு இன்னொரு தொடர் ஆரம்பிக்கட்டுமா? அடப்போங்க ஸார்..

இங்க நம்ப கணேஷ் நண்பர் முத்து தனி மரமா இருக்கிறதை மறந்துட்டிங்களே.//

அவன் கெஸ்ட் ரோல் ஸார் படத்துல..

எனி வே சின்ன அம்மிணி விருப்பம் போல அடுத்த தொடர் எழுதவும்.//

சின்ன அம்மிணிக்கு சொன்ன பதிலை படிக்கவும் :)

**********************

அமர பாரதி said...

கனேஷ்,

அருமையான, இளமைத் துள்ளலுடன் கூடிய தொடர். மேலும் எழுத வாழ்த்துக்கள்.

//திவ்யாவிற்கு அருகில் நின்றிருந்த கணேஷ் முன் மண்டியிட்டு,// ஆண் பெண்ணிடம் மண்டியிட்டு என்னை மணந்து கொள்கிறாயா என்று கேட்பதுதான் மரபு.

KATHIR = RAY said...

Naan Than Andha Divya.

Open Pannitene Ganesh

by
Urs
Divya

Rajan said...

வணக்கம் கணேஷ்,
எப்பவோ போட்டு வெச்ச புக்மார்க் இப்போதான் திறந்தேன்..
மொத்த தொடரையும் ஒரே மூச்சில முடிச்சிட்டேன்.
நல்ல வேகம்; ரொம்ப அருமையாக இருந்தது..
இதுபோல இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.

அமர பாரதி said...

தொடர் நன்றாக இருந்தது. பொதுவாக காதலி காதலனிடம் மண்டியிட்டு மோதிரத்தை கொடுக்க மாட்டாள். அது காதலன் செய்ய வேண்டிய வேலை.

Rajabaskar said...

I read a story without take a break..

Nice story........

Keep rocking...

Regards
Rajabaskar Thangaraj

Rajabaskar said...

I read a story without take a break.Nice story. Kepp rocking.

Regards
rajabaskar thangaraj

ஊர்சுற்றி said...

வாவ்... எத்தனை மாதங்கள் ஆகிவிட்டன, இங்கு வந்து!
நன்றாக முடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
இதுபோன்று இன்னும் சுவாரசியமான பல கதைகள் எழுத வாழ்த்துக்கள்!

Related Posts with Thumbnails