வேற்றுகிரகவாசியாக மனைவி!

வீட்டு வேலை
*******************

சகோதரிகள் இல்லா வீட்டில்
அம்மாவின் சத்தம்
விரட்டும் முன்னர்
பரபரவென‌ செய்யும்
தேங்காய்நார் சபீனா
வேளைகளில் விழிக்காமல்
மனைவியின் கொஞ்சல் கெஞ்சல்
அதட்டல்களில் சட்டென‌
வீராப்புடன் கைகோர்த்து
விழிக்கிறது ஆண்மையின் கோபம்
கையில் 'விம்' கொடுக்கும்போது!
இளம் மனைவி
*******************

உள்ளுக்குள் புதைத்த
காதலையும் காதலியையும்
தாங்கி அந்நியமாகத்
திரியும்போதெல்லாம்
வேற்றுகிரகவாசியாக தெரிகிறாள்
இளம் மனைவி
காதல் தாங்கிய
வெட்கப் புன்னகையில்
என்னை பார்க்கும்போது!

*************************************************

3 comments:

Sangkavi said...

நல்ல கவிதை....

♠புதுவை சிவா♠ said...

"மனைவியின் கொஞ்சல் கெஞ்சல்
அதட்டல்களில் சட்டென‌
வீராப்புடன் கைகோர்த்து
விழிக்கிறது ஆண்மையின் கோபம்
கையில் 'விம்' கொடுக்கும்போது!"

அவள் படித்த பெண்
'விம்' கொடுத்தாள்
கணவன் கை மீது உள்ள கருனைக்காக
அவன் வேலை முடித்தவுடன்
சில்லரை தருவாள் "தம்"க்கு


ஆனால் - இங்கே
இன்னும் சாம்பலும்
புலிமார்க் சீக்காயுடன்
கையில் ரேகை இல்லாத
ஏலியனாக எத்தனை பேர் . . .

:-))))))))

கணேஷ் said...

நன்றி Sangkavi!

நன்றீ ♠புதுவை சிவா♠

பாஸ் பின்றீங்க.. எப்படி இப்படியெல்லாம்?

Related Posts with Thumbnails