சியாமளா-15: திவ்யாவுடன்!

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15

மறுநாள் காலையில் க்ளையண்ட் ஆஃபிஸ்க்கு வந்தனர். கணேஷிடம் ஒரு படபடப்பு தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. சியாமளா கண்டுபிடித்துவிட்டால், இப்போது இருப்பதைக் காட்டிலும் பெரிய பிரச்சினையில் சிக்கிக் கொள்வோம் என தெரிந்ததால், படபடப்பை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் வியர்வை அருவி மாதிரி பொழிந்து காட்டிக் கொடுத்தது. அடிக்கடி கர்ச்சீஃபால் எடுத்து துடைத்துக் கொண்டான். க்ளையண்டின் பெரியதலைகளுக்கு இன்ட்ரோ கொடுப்பதற்காக இருவரையும் க்ளையண்ட் சர்வீஸ் மேனேஜர் கிருஷ்ணன் ஒவ்வொரு இடத்திற்கும் கூப்பிட்டு போய்க் கொண்டிருந்தார். .

வழியில் எங்கும் திவ்யாவை சந்தித்துவிடக்கூடாது என 360 டிகிரியிலும் சுற்றுமுற்றும் பார்த்து அவள் இல்லை என உறுதிப்படுத்திக் கொண்டு போனான்.

“யாரைத் தேடிக்கிட்டு இருக்க?” மீட்டிங் முடிந்து திரும்பும்போது சியாமளா ஹஸ்கி வாய்ஸில் நடந்துகொண்டே கணேஷிடம் கேட்டாள்.

”இல்லை.. யாரையும் தேடலை?” அவசரம் அவசரமாக மறுத்தான்.

“இல்லை.. நீ யாரை தேடுறன்னு எனக்கு தெரியும்?”

“யாரை?”

“திவ்யா? அவளைத் தான தேடுற?”

வியர்வை மீண்டும் அருவியாய் கொட்ட ஆரம்பித்தது. “அய்யோ, இவளுக்கு எல்லாம் தெரிஞ்சி போச்சா?” சியாமளா, காலேஜ் மேட்டரைப் பத்தி ஆரம்பித்தால் காலில் விழுந்து உண்மையை மொத்தம் கொட்டிவிடலாம் என்ற முடிவுடன், டென்ஷனை ஒருவழியாய் சமாளித்துக் கொண்டு,

“ஆமா.. உனக்கு எப்படி தெரியும்?” அவன் கேட்பதற்கும், காஃபி எடுக்க பேன்ட்ரியினுள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.

“அன்னைக்கு காலங்கார்த்தாலேயே ஜொள்ளு விட்டத நானும் நோட் பண்ணேன். கெத்து மெயிண்டெயின் பண்றதுக்காகத் தான் அவகூட பேசாம விறைப்பா திரிஞ்சன்னும் எனக்கு தெரியும். எப்படி உன்னை மாதிரி பசங்களால மட்டும் இப்படி இருக்க முடியுது?” என நேருக்கு நேராக கணேஷிடம் சண்டை போடுவது போல் கேட்டாள்.

உள்ளே டென்ஷனில் இழுத்து இருந்த மூச்சை, வாய் வழியே ஊதி வெளியே விட்டு விட்டு “அடச்சே.. இதத்தான் கேட்க வந்தியா?“ என மனதுக்குள் நினைத்துக் கொண்டு, “இல்ல.. இல்ல.. இன்னிக்கு வர்றதா சொல்லிட்டு இருந்தாங்கல்ல, அதான் எங்கன்னு பார்த்தேன். மற்றபடி அவங்கள நான் சைட் எல்லாம் அடிக்கல?”

“ம்ம் சரி சரி.. ஒரு வாரம் கழிச்சி தான் வர்றதா சொன்னா.. இன்னொரு விஷயம் திவ்யா நம்ம ஏஜ் க்ரூப் தான். வாங்க போங்கன்னு சொல்ல வேணாம். அது திவ்யாவுக்கே பிடிக்காது?”

”என்கிட்டேயேவா?” என லைட்டாக சிரித்துவிட்டு புன்முறுவலுடன், “ஓ.கே. மேடம்” என்றான்.

“கொஞ்ச நேரத்துல நானே வாயைக் கொடுத்து மாட்டிக்க பார்த்தேனே? உஷார்டா கணேஷ்” என உள்ளுக்குள் அலாரம் செட் பண்ணிக் கொண்டான் கணேஷ்.

காஃபி எடுத்துக் கொண்டு இருவரும் அவரவர் இடத்துக்கு போய் கொஞ்சம் கொஞ்சமாக வேலையில் மூழ்க ஆரம்பித்து இருந்தார்கள்.

லஞ்ச் டைம் நெருங்க ஆரம்பித்தது. இருவரும் லஞ்ச் பாக்ஸ் எடுத்துக் கொண்டு Cafetaria போய் சாப்பிட ஆரம்பித்தனர். வெளியில் இருந்து பார்த்தால், கணேஷ் மட்டும் சாப்பிடுவது தெரியும்.

“கணேஷ், யார்கூடவும் ட்ரீட், பார்ட்டின்னு சொல்லி போயிடாதே. அதுவும் டேவிட், ஸ்மித் உடன்” சியாமளா ஆரம்பித்தாள்.

“”ஏன்? எல்லாரும் நல்லாத் தான் பேசுறாங்க?”

“அதுக்கு இல்ல.. எல்லாரும் ஒரு மாதிரி?”

“ஒரு மாதிரின்னா?”

“ஒரு மாதிரின்னா ஒரு மாதிரி” 30 செகண்ட் இடைவெளி விட்டு, “எல்லாரும் நல்லாத் தான் பேசுவாங்க.. ஆனா ஒரு மாதிரி டைப்.. அதாவது Gay டைப். உஷாரா இரு.. எக்குதப்பா போய் யார்கிட்டயும் மாட்டிக்காத..” மறுபடியும் 30 செகண்ட் இடைவெளி விட்டு, “ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல. அதான் நான் இருக்கேன்ல”

”வாட்?”

“ஐ மீன், நான் தான் கூட இருக்கேன்ல.. உன்னை எங்கேயும் தனியா அனுப்ப மாட்டேன்னு சொல்லவந்தேன்” மூச்சு வாங்கிக் கொண்டு அர்த்தத்தை சரியாக மொழிபெயர்த்து சொன்னாள்.

“ஓ… ஓ.கே”

திரும்பவும் கணேஷ் தொடர்ந்தான், “டூ மினிட்ஸ் வெயிட் பண்ணு. நான் ஹோட்டல்ல இருந்து சிப்ஸ் எடுத்திட்டு வந்தேன். போய் எடுத்திட்டு வர்றேன்?” என்று சொல்லிவிட்டு கெளம்பினான்.

இரண்டு நிமிடத்திற்கு முன்னதாகவே திரும்ப வந்துவிட்டான். பேண்ட்ரியினுள் இருந்து இரண்டு பெண்கள் சிரிக்கும் சத்தம் அதிர அதிர கேட்டது. நச் ஃபிகர் ஜெனிஃபராக இருக்குமோ என திடீரெனஃபார்ம் ஆன ஜொள்ளுடன், உள்ளே வந்தவனுக்கு பெரும் ஷாக்.

உள்ளே சியாமளாவுடன் திவ்யா பேசிக் கொண்டிருந்தாள். திவ்யா சாதாரணமாக வரவில்லை. வொயிட் அண்ட் வொயிட் டைட்டான சுரிதாரில், ROTFL என சிரித்துக் கொண்டிருந்தாள்.

“இந்த சுரிதார் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே….” என யோசித்துக் கொண்டிருக்கும்போது, “ஓ.. மை காட்.. இது காலேஜ்ல நான் வாங்கிக் கொடுத்தது மாதிரி இருக்கே.. அளவு தெரியாம ரொம்ப லூஸா வாங்கிக் கொடுத்தத, இப்பவும் வச்சிருக்காள்லா?” என யோசித்துக் கொண்டே பேண்ட்ரி வாசலிலே நின்று கொண்டிருந்தான் கணேஷ்..

“ஹேய் கணேஷ்.. கெட் இன்..” என திவ்யா 1000 வாட்ஸ் பல்ப் போல் சிரித்துக் கொண்டே உள்ளே வரச் சொல்லி சைகை கொடுத்தாள். நேராக இடத்திற்கு வந்தான்.

” என்னடா, ஒரு வாரம் கழிச்சி வர்றேன்னு சொன்னவ.. இப்பவே வந்துட்டான்னு பாக்குறீயா கணேஷ்?”

“ம்ம்ம்..” என எதையோ மென்று கொண்டு, தலையை மேலும் கீழுமாக அசைத்துக் கேட்டான்.

“எல்லாம் கல்யாண மேட்டர் தான்?”

“வாட்??”

“நீ தான் வாயைவே திறக்க மாட்டேங்குற.. ஆனா சியாமளா ரொம்ப ஃபாஸ்ட்?”

“என்ன சொன்னா….ங்க?” என “ங்க” வை போலியாக சேர்த்துக் கொண்டு வறண்ட தொண்டையில் வார்த்தைகளை சேகரித்துக் கொண்டு கேட்டான்.

“அவங்க கல்யாண மேட்டர் பத்தி.. உனக்கு தெரியாதா கணேஷ்?” என கன்னாபின்னாவென துள்ளலுடன் கேட்டாள் திவ்யா.

பசி சுத்தமாக அடங்கி பயம் அடிவயிற்றுடன் மொத்த வயிறையும் கவ்விக் கொள்ள முகத்தில் கொஸ்டின் மார்க் வரைந்து திவ்யாவையும், சியாமளாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான் கணேஷ், வெளிறிப் போன கண்களுடன்…..

***************************************

13 comments:

Porkodi (பொற்கொடி) said...

hmmmm.. appuram?

Porkodi (பொற்கொடி) said...

enaku ganeshai pidikkalai..! shyamala kitta unmaiyai mudhallaye solla enna?

☀நான் ஆதவன்☀ said...

//வொயிட் அண்ட் வொயிட் டைட்டான சுரிதாரில், ROTFL என சிரித்துக் கொண்டிருந்தாள். //

அய்யய்யோ... வெள்ளை சுடிதார் அழுக்காகிறாது?

☀நான் ஆதவன்☀ said...

பாவம் அந்த கணேஷை என்ன பாடு படுத்துறீங்க கணேஷ் :))

Anonymous said...

//அவங்க கல்யாண மேட்டர் பத்தி.. உனக்கு தெரியாதா கணேஷ்?”//

அதான் அவங்கன்னு சொல்லியாச்சே. அப்ப சியாமளா தனக்கும் கணேஷுக்கும் கல்யாணம்னு சொல்லியிருக்க மாட்டாங்க.

காலேஜ்ல சுரிதாரெல்லாம் திவ்யாக்கு கணேஷ் வாங்கிக்குடுத்திருக்காரா. அப்ப சியாமளா எடுத்துட்டு போன பூரிக்கட்டைக்கு வேலை இருக்கும்னு நினைக்கிறேன். :)

க‌ரிச‌ல்கார‌ன் said...

அய்யோ பாவ‌ம் க‌ணேஷ் நான் அந்த‌ க‌ணேஷ‌ சொன்னேன்

Thinks Why Not - Wonders How said...

ஆகா சீரியல் மாதிரி முக்கியமான இடத்தில தொடரும் போட்டீங்களே பாஸ்....

அடுத்ததையும் இன்னைக்கே போட்டா நல்லா இருக்கும்... :D

Premnath said...

Sooper ah poitu irukku .. awaiting the next episode ..

♠புதுவை சிவா♠ said...

“ஐ மீன், நான் தான் கூட இருக்கேன்ல.. உன்னை எங்கேயும் தனியா அனுப்ப மாட்டேன்னு சொல்லவந்தேன்” மூச்சு வாங்கிக் கொண்டு அர்த்தத்தை சரியாக மொழிபெயர்த்து சொன்னாள்"

It's too much Ganesh ....

:-)))))))))))

Saran-DBA said...

nalla pogudhu

Nisha said...

embuttu naalachchu ganesh, romba naalaiku a[prm inniku than unga blogkukku varraen..

aduththa post eppo?

airposrt ponathula irunthu flight kelamburathu, turn aanathu, irangunathunu pinnirukkeenga ponga..

kaalaththukkum bus trainnunu maari maari pona namakku eppadai ganesh flight la pona kaththippaara theriyumnu therinjathu? :P :P

aprm divya, puthu heart attack, ganeshku mattum illa, engalukkum thaan.. viewersa aduththu enna nadakkumnu yoohikka mudiyaatha padai kathai soldrathukku oru thanith thiramai vaenum,,

neenaga antha thiramaiyoda koodavae epdi rasikkura maathiri sollanumnum therinju vachchurukeenga..

itha pola innum rendu kathai eluthunga, aprm, mugame theriyaatha naalau puthu mugamkalai vachchu chinna budgetla oru padam pannunga.. (athula ennakku oru main character vaenum)

aprm surya, vikrama vachchu rendu padangal eduththu desiya viruthu, athukku aprama than sankar pola mega budget padam pandratha paththi yosikkanum..

konjam overa thaan poromo? povaom..:)

NOTE: Kathi nandratka irunthaal paaraattum vaasagarkal, kathai sothappalaaga irunthal asingamaakavum, aal vaiththum thittuvaarkal.. JAAKRATHAI.

கணேஷ் said...

நன்றி Porkodi (பொற்கொடி)

hmmmm.. appuram?//

ஹலோ. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. யோசிக்க வேணாமா?

enaku ganeshai pidikkalai..! //

சால சந்தோஷம் :)

shyamala kitta unmaiyai mudhallaye solla enna?//

முதல்லயே சொல்லிட்டா, அப்புறம் இண்ட்ரஸ்ட்டா இருக்காதுல்ல.. அதான் :)

***************

நன்றி ☀நான் ஆதவன்☀

அய்யய்யோ... வெள்ளை சுடிதார் அழுக்காகிறாது?//

பாஸ்.. டோண்ட் வொர்ரி. அவங்க ஸர்ஃப் எக்ஸெல் வச்சிருக்காங்களாம். கறை நல்லது :)

பாவம் அந்த கணேஷை என்ன பாடு படுத்துறீங்க கணேஷ் :))//

ஹி ஹி ஹி.. ப்ளேபாய் வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணம்.

**********

நன்றி சின்ன அம்மிணி!

அதான் அவங்கன்னு சொல்லியாச்சே. அப்ப சியாமளா தனக்கும் கணேஷுக்கும் கல்யாணம்னு சொல்லியிருக்க மாட்டாங்க.//

குட் கேட்ச். :)

காலேஜ்ல சுரிதாரெல்லாம் திவ்யாக்கு கணேஷ் வாங்கிக்குடுத்திருக்காரா. அப்ப சியாமளா எடுத்துட்டு போன பூரிக்கட்டைக்கு வேலை இருக்கும்னு நினைக்கிறேன். :)//

ஆனா சியாமளா தான் பூரிக்கட்டை எடுத்திட்டு போகலையே? :)

*********************

நன்றி க‌ரிச‌ல்கார‌ன்!

அய்யோ பாவ‌ம் க‌ணேஷ் நான் அந்த‌ க‌ணேஷ‌ சொன்னேன்//

நன்றி. நீங்க ஃபீல் பண்ணத நான் அந்த கணேஷ்கிட்ட சொல்லிடறேன் :)

*********************

நன்றி Thinks Why Not - Wonders How!

ஆகா சீரியல் மாதிரி முக்கியமான இடத்தில தொடரும் போட்டீங்களே பாஸ்....//

எல்லாம் ஒரு எதிர்பார்ப்பை கெளப்பி விடத்தான் :)

அடுத்ததையும் இன்னைக்கே போட்டா நல்லா இருக்கும்... :D//

ஹலோ.. யோசிக்க வேணாம்மா :)

*********************

நன்றி Premnath!

Sooper ah poitu irukku .. awaiting the next episode //

சூப்பர். வெயிட் பண்ணுங்க :)

*********************

நன்றி ♠புதுவை சிவா♠

It's too much Ganesh ....
:-)))))))))))//

ஹலோ.. Subtle லா சொன்னத இப்படி வெளிச்சம் போட்டு காட்டுறீங்க பாஸ் :)

******************************8
நன்றி Saran-DBA

நன்றி Nisha!

embuttu naalachchu ganesh, //

நான் எண்ணலியே?

romba naalaiku a[prm inniku than unga blogkukku varraen.. //

ஓ.. ஐ ஸீ..

aduththa post eppo? //

மே பி, திங்கள்கிழமை வரலாம் :)

airposrt ponathula irunthu flight kelamburathu, turn aanathu, irangunathunu pinnirukkeenga ponga.. //

அப்படியா சொல்றீங்க.. இல்ல ஓவரா ஜொள்ளுனத சொல்றீங்களா :)

kaalaththukkum bus trainnunu maari maari pona namakku eppadai ganesh flight la pona kaththippaara theriyumnu therinjathu? :P :P//

அப்படின்னா, கணேஷ் ஃப்ளைட்ல போயிருக்கான்னு அர்த்தம் :)

aprm divya, puthu heart attack, ganeshku mattum illa, engalukkum thaan.. viewersa aduththu enna nadakkumnu yoohikka mudiyaatha padai kathai soldrathukku oru thanith thiramai vaenum,, //

அப்படியா சொல்றீங்க.. எல்லாரும் எதிர்பார்த்த ட்விஸ்ட்ன்னு இல்ல நான் நெனைச்சேன் :)

neenaga antha thiramaiyoda koodavae epdi rasikkura maathiri sollanumnum therinju vachchurukeenga..//

இது வேறயா.. என்னயவே வெக்கப்பட வைக்குறீங்க :)

itha pola innum rendu kathai eluthunga, aprm, mugame theriyaatha naalau puthu mugamkalai vachchu chinna budgetla oru padam pannunga.. (athula ennakku oru main character vaenum)

aprm surya, vikrama vachchu rendu padangal eduththu desiya viruthu, athukku aprama than sankar pola mega budget padam pandratha paththi yosikkanum..//

டேய் நான் மாடு தானட, வாங்கப்போறேன்னு சொன்னேன்.. அதுக்குள்ள பஞ்சாயத்து தலைவர், எம்.எல்.ஏ., சி.எம் அளவுக்கு கெளப்பி விடுறீங்களே. உங்களுக்கே நியாயமா டா.. (பருத்தி வீரன் கஞ்சா கருப்பு ஸ்டைலில் படிக்கவும்)

konjam overa thaan poromo? povaom..:)//

தெரிஞ்சா சரி..

NOTE: Kathi nandratka irunthaal paaraattum vaasagarkal, kathai sothappalaaga irunthal asingamaakavum, aal vaiththum thittuvaarkal.. JAAKRATHAI.//

கமெண்ட்லயும் டிஸ்கி போட்டு எழுதுற முத ஆள் நீங்க தாங்க.. சூப்பர் :)

***************************

ஊர்சுற்றி said...

நல்லா போகுது! :)

Related Posts with Thumbnails