சியாமளா-7: ஆன்சைட் போகும் கணேஷ்!

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10

சியாமளா அப்படி சொல்லி முடித்ததும், மொத்த கூட்டமும் ஷாக்காகி கணேஷை பார்த்தது. கணேஷால் எந்த ரியாக்சனும் முகத்தில் காட்ட முடியவில்லை. சரியாக ஒரு நிமிடம் கழித்து,

ஹரிணி, "ஐயாம் ஸாரி" என்று சொல்லிவிட்டு சாப்பாட்டு தட்டை எடுத்துக் கொண்டு கெளம்பிவிட்டாள்.

சாப்பிட்டு முடியும் வரை யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. கைகழுவும் இடத்தில் சிறுவாணி, "கணேஷ், உன்ன பார்த்தா எனக்கு பாவமா இருக்கு. i'm sorry for you" என சாபம் கொடுப்பது போல் சொல்லிவிட்டு கெளம்பினாள். பாப்கட் தலை, "ம்ம். ம்ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்" என்றாள். எல்லாரும் அவரவர் இடத்துக்கு போய்விட்டனர்.

கணேஷ்க்கு இருப்பு கொள்ளவில்லை, "என்னடா, இது அவன் அவனுக்கு எத்தனையோ பிரச்சினை இருக்கு. எனக்கு மட்டும் ஏன் யார்ன்னு தெரியாத பொண்ணுங்க எல்லாம் பிரச்சினையா இருக்கு.. ச்சே" என தோன்றியது. சியாமளாவுடன் கொஞ்ச நேரம் பேச வேண்டும் போல் இருந்தது. எழுந்து பார்த்தால் அவளும் இடத்தில் இல்லை.

ஹரிணி உடல்நிலை சரியில்லை என சொல்லிவிட்டு ஆஃபிஸ்க்கு லீவ் போட்டு சென்றுவிட்டதாக இ-மெயில் வந்து இருந்தது. அந்த இ-மெயிலை ஷிஃப்ட் டெலீட் செய்தான்.

வெளியே தம் அடிக்கலாமா என யோசித்தான். பின் "வேண்டாம், சியாமளாவுக்கு தெரிந்தால், இன்னுமொரு பிரச்சினையை சமாளிக்க வேண்டியிருக்கும்" என தெளிந்தான். அரைமணிநேரம் அப்படி இப்படி என்று ஓடியது. சியாமளாவுக்கு கால் பண்ணினான். அவள் கட் பண்ணிவிட்டாள். திரும்பவும் 5,6 முறை ட்ரை பண்ணினான். அவள் கட் பண்ணிக் கொண்டே இருந்தாள். வேறு வழியில்லாமல் SMS அனுப்பலாம் என முடிவு செய்தான்.

"I'm really sorry. Whatever she told, thats true. But i swear, i will never touch liquor henceforth. I didn't influence her to talk like. SORRY again :("

அனுப்பி ஒரு மணிநேரம் ஆகியும் அவளிடம் இருந்து ரிப்ளை வரவில்லை. அதுவே க‌ணேஷை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணியது. "நேரில் அழைத்து தனியாக பேசலாமா?" என ஒரு கட்டத்தில் முடிவு செய்தான். இன்னைக்கு ஹெல்மெட் கொண்டு வராததால் முடிவை அவசரம் அவசரமாக மாற்றிக் கொண்டான்.

வேறு ஒரு ப்ராஜெக்ட்டின் பி.எம், அவசரமாக மீட் பண்ணவேண்டும் என்று இ-மெயில் அனுப்பி இருந்தார்.

அவருடைய கான்ஃபரன்ஸ் ரூம் போய் பார்த்தான் கணேஷ்.

"ஹாய் கணேஷ், ஐயாம் அருண்" புது ப்ராஜெக்ட்டின் பி.எம் கை கொடுத்தார்.

"ஹெல்லோ" என்றான் கணேஷ், சேரில் உட்கார்ந்தபடி

"ஓ.கே. ஆக்சுவலி நான் உங்கள வரச் சொன்னதுக்கு காரணம், எங்க ப்ராஜெக்ட்ல‌ ஆன்சைட்க்கு ஆட்கள் தேவைப்ப‌டுது. எக்ஸ்பீரிய‌ன்ஸ் ம‌க்க‌ள் எங்க‌ டீம்ல‌ இல்லை. அத‌ ப‌த்தி பேச தான் உங்க‌ள‌ கூப்பிட்டேன்"

"ம்ம்ம்" பெரிதாக‌ எந்த‌ ரியாக்ச‌னும் காட்ட‌வில்லை

"ஸோ, நீங்க‌ இன்ட்ரெஸ்ட்டா இருந்தா நெக்ஸ்ட் வீக் U.K கெள‌ம்புற‌ மாதிரி இருக்கும். So, Are you interested?"

ஒரு நொடி கூட‌ யோசிக்காம‌ல் உட‌னே க‌ணேஷ், "ஸாரி அருண். I'm not intested" என்றான்

"ஓ.. ஓகே. நான் ஏற்கெனவே, உங்க‌ ப்ராஜெக்ட் மேனேஜ‌ர்கிட்ட‌ பேசிட்டேன். அவ‌ரும் ஓ.கே சொல்லிட்டாரு"

க‌ணேஷ் த‌லையைக் கீழே குனிந்து யோசித்துக் கொண்டிருந்தான்.

அருண் தொட‌ர்ந்தார், "டைம் தான் பிரச்சினைன்னா, ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல. நீங்க‌ இப்ப‌ போக‌ப் போற‌து 3 மாச‌ம் தான். ஒருவேளை, நீங்க‌ ரொம்ப‌ நாள் இருக்க‌ணும்ன்னு ஆசைப்ப‌ட்டா, அதுவும் Possible. என்ன‌ சொல்றீங்க‌"

"நோ அருண், என‌க்கு ப‌ர்ச‌ன‌லா கொஞ்ச‌ம் வேலைக‌ள், பிர‌ச்சினைக‌ள் இருக்கு. இப்போதைக்கு என்னால‌ ஆன்சைட் போக‌ முடியாது." என்றான் க‌ணேஷ்

"ம்ம்ம்.. ஓ.கே.." என்று சொல்லிவிட்டு அருண் 2 நிமிட‌ம் யோசித்தார்.

க‌ணேஷ் சீட்டில் இருந்து எழுந்திருக்கும்போது, அருண் சொன்னார், "ஓ.கே. இப்போதைக்கு சியாம‌ளாவை ம‌ட்டும் இப்ப‌ அனுப்ப‌ வேண்டிய‌து தான்"

"வாட்?"

"யெஸ், உங்க‌ ரெண்டு பேரையும் தான் ப்ரோப்ப‌ஸ் ப‌ண்ணி இருந்தேன். இப்ப‌ உங்க‌ளுக்கு ப‌திலா இன்னொரு ஆள் தேட‌ணும்."


"???!!!!!!???????"

**************************************

18 comments:

Unknown said...

எனக்கு மட்டும் ஏன் யார்ன்னு தெரியாத பொண்ணுங்க எல்லாம் பிரச்சினையா இருக்கு.. ச்சே

//எனக்கே அழுகை வருது. ரொம்ப பீல் பண்ணாதீங்க கணேஷ்! நான் எப்பவும் உங்க கூடவே இருக்கேன்!!

Anonymous said...

கதையோடவே ஷாலினி கமெண்டும் நல்லா இருக்கு :)

ச ம ர ன் said...

ரொம்ப நல்லா எழுதுறீங்க... சுவாரசியமா இருக்கு. :)

Shankar said...

Good da! But seems something missing. Konjam paraparapu kammia iruku.

Anyway finishing is fine.

☀நான் ஆதவன்☀ said...

//Shalini said...

எனக்கு மட்டும் ஏன் யார்ன்னு தெரியாத பொண்ணுங்க எல்லாம் பிரச்சினையா இருக்கு.. ச்சே

//எனக்கே அழுகை வருது. ரொம்ப பீல் பண்ணாதீங்க கணேஷ்! நான் எப்பவும் உங்க கூடவே இருக்கேன்!!
//

அவ்வ்வ்வ்வ் சர்தான் போய்யா... நீயும் உன் கதையும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

☀நான் ஆதவன்☀ said...

//"யெஸ், உங்க‌ ரெண்டு பேரையும் தான் ப்ரோப்ப‌ஸ் ப‌ண்ணி இருந்தேன். இப்ப‌ உங்க‌ளுக்கு ப‌திலா இன்னொரு ஆள் தேட‌ணும்."//

அவுட்டோர் ஷூட்டிங்கா... சூப்பர் :)

Anonymous said...

Who will miss company paid honeymoon... :)

Nisha said...

onsite enga ganesh?

oru nalla kuththu song onnu vaikka poreenga pola? :)

song pallavi enna?

but puthu mukangal jaasthiya irkku..
ippo thaane episode start panirukkeenga... puthu mugangal vanththu thaan aaganum :)

aama, ivlo nalla kathai eluthureengale, ungalukku kolai mirattal apdi ipdinu innum ethuvum varaliyaa? :)



ச்ச்ச்சும்மா.................:)

Nisha said...

onsite eppo poreenga ganesh?

un kathaiyila nachchunu oru kuththup paattu onnu varuthu pola? :)

epdi, unga kathaiyilayum heroino oda dress budget kammi thaana? :)

paththu seiyunga boss, U.K la ippa kulir jaasthiyaam, penninam kastappada poguthu.

song pallavi enna? :)

aamaa, ivlo nalla kathai eluthureengale, ungalukku innum kolai mirattal, apdi ipdinu yethuvum varaliyaa? :O


ச்ச்ச்ச்ச்ச்சும்மா................................ :) :)

Nisha said...

haiyaiyo... comment repeat pannitena..

sorriiieee

ஊர்சுற்றி said...

சூப்பர், ஜெட் வேகத்தில் அருமையாக.
தொடர்ந்து இதே வேகத்தை எதிர்பார்க்கிறேன். :)

மணிகண்டன் said...

கணேஷ், உங்க கதை அதுக்கு வரும் கமெண்ட் எல்லாம் ரொம்பவே ரசிக்கற மாதிரி இருக்கு. கலக்குங்க.

Anonymous said...

HI Ganesh, Everyone knows you are leaving comments using another id called shalini..... :)

Cable சங்கர் said...

rightu..

Unknown said...

Mr./Ms. Anonymous/Cable Sankar

சத்தியமா அது கணேஷ் இல்ல. I'm not sure why you ppl are not believing me.

Anyway, கணேஷ் உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்க என்ன நம்புவீங்கன்னு எனக்கு தெரியும். அதுவே எனக்கு போதும். :)

கணேஷ் said...

நன்றி Shalini!

//எனக்கே அழுகை வருது. ரொம்ப பீல் பண்ணாதீங்க கணேஷ்! நான் எப்பவும் உங்க கூடவே இருக்கேன்!!//

ஏன் ஷாலினி ஏன்? என்ன‌ பார்த்தா பாவ‌மா தெரிய‌ல‌யா உங்க‌ளுக்கு :(

****************************

நன்றி சின்ன அம்மிணி!

கதையோடவே ஷாலினி கமெண்டும் நல்லா இருக்கு :)//

மேட‌ம், யூ டூ. ப்ளீஸ் என்ன‌ பார்த்தா பாவ‌மா இல்ல‌ :(

****************************

ச ம ர ன் said...
ரொம்ப நல்லா எழுதுறீங்க... சுவாரசியமா இருக்கு. :)//

உங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. தொடர்ந்து வாங்க :)

****************************

நன்றி Shankar!

Good da! But seems something missing. Konjam paraparapu kammia iruku.
Anyway finishing is fine.//

என‌க்கும் அது தான் தோணுச்சி, அப்ப‌டியே போட்டுட்டேன். எனிவே, உன்னோட‌ நேர்மை என‌க்கு பிடிச்சிருக்குடா :)

****************************

நன்றி ☀நான் ஆதவன்☀ said...

அவ்வ்வ்வ்வ் சர்தான் போய்யா... நீயும் உன் கதையும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

ச‌த்திய‌மா என‌க்கு ஷாலினி யாருன்னே தெரியாது பாஸ். ப்ளீஸ் என்ன‌ ந‌ம்புங்க‌. வேணும்ன்னா, ஹீரோ பேரை ஆத‌வ‌ன்னு மாத்திட‌ட்டுமா?:)

அவுட்டோர் ஷூட்டிங்கா... சூப்பர் :)//

ஙே! நீங்க‌ என்ன‌ சொல்ல‌ வ‌ர்றீங்க‌ன்னு ச‌ரியா புரிய‌ல‌ :)

****************************

கணேஷ் said...

நன்றி Anonymous!

Who will miss company paid honeymoon... :)//

அட‌ இது கூட‌ ந‌ல்லா இருக்கே.. மைண்ட்ல‌ வ‌ச்சிக்குறேன் :)

நன்றி Nisha!

onsite eppo poreenga ganesh?//

சீக்கிர‌மாவே... எப்ப‌டி எல்லாம் கேக்குறாய்ங்க‌ டீட்டெயிலு :)

un kathaiyila nachchunu oru kuththup paattu onnu varuthu pola? :)//

இது வேற‌யா? மு டி ய‌ ல‌

epdi, unga kathaiyilayum heroino oda dress budget kammi thaana? :)//

அவ்வ்வ்வ்.. எப்ப‌டி இதெல்லாம் சொல்ல‌ முடியும் :(

paththu seiyunga boss, U.K la ippa kulir jaasthiyaam, penninam kastappada poguthu.//

பெண்ணீய‌ காவ‌ல‌ர் நிஷா வாழ்க‌! உக்கார்ந்து யோசிப்பீங்க‌ள்லோ?

song pallavi enna? :)//

ப‌ல்ல‌வி யாருன்னு என‌க்கு தெரியாதுங்க‌.. ஏற்கென‌வே இருக்கிற‌ பொண்ணுங்க‌ள்ல‌ சமாளிக்க‌ முடிய‌ல‌.. இதுல‌ அவ‌ வேற‌யா..முடியாது :(

aamaa, ivlo nalla kathai eluthureengale, ungalukku innum kolai mirattal, apdi ipdinu yethuvum varaliyaa? :O//

இது வ‌ரைக்கும் இல்ல‌.. அதான் நீங்க‌ வ‌ந்துட்டீங்க‌ள்ல‌.. இனிமே யாரு வ‌ர‌ணும் :(

ச்ச்ச்ச்ச்ச்சும்மா................................ :) :)//

வேணாம்.. வ‌லிக்குது..

sorriiieee//

ப்ளீஸ்.. போங்க‌ உங்க‌ள‌ ம‌ன்னிச்சிட்டேன் :(

****************************

கணேஷ் said...

நன்றி ஊர்சுற்றி!

சூப்பர், ஜெட் வேகத்தில் அருமையாக.
தொடர்ந்து இதே வேகத்தை எதிர்பார்க்கிறேன். :)//

உங்க‌ளின் தொட‌ர்ச்சியான‌ ஆத‌ர‌வுக்கும், க‌மெண்ட்க்கும் ந‌ன்றி பாஸ் :)

****************************

நன்றி மணிகண்டன்!

கணேஷ், உங்க கதை அதுக்கு வரும் கமெண்ட் எல்லாம் ரொம்பவே ரசிக்கற மாதிரி இருக்கு. கலக்குங்க.//

என‌க்கு அவ‌ங்க‌ எல்லாம் யாருன்னே தெரியாது, ப்ளீஸ் என்ன‌ ந‌ம்புங்க‌ :)

****************************

நன்றி Anonymous!

HI Ganesh, Everyone knows you are leaving comments using another id called shalini..... :)//

என்ன‌டா, இதுவ‌ரைக்கும் யாரும் கேட்க‌லியேன்னு நினைச்சேன். முண்ட‌க்க‌ண்ணி அம்ம‌ன் கோவில் முன்னால‌ ச‌த்திய‌ம் ப‌ண்ண‌ நான் ரெடி. நீங்க‌ ரெடியா? நான் அப்ப‌டி எல்லாம் ப‌ண்ண‌னும்ன்னு அவ‌சிய‌ம் இல்ல‌ :(

****************************

நன்றி Cable Sankar!

rightu..//

பாஸ், நீங்க‌ளுமா? :(

****************************

ந‌ன்றி Shalini!

Mr./Ms. Anonymous/Cable Sankar
சத்தியமா அது கணேஷ் இல்ல. I'm not sure why you ppl are not believing me.
Anyway, கணேஷ் உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்க என்ன நம்புவீங்கன்னு எனக்கு தெரியும். அதுவே எனக்கு போதும். :)//

ஹூம்ம்ம்.. நீங்க‌ க‌மெண்ட் போடாம‌ இருந்தாலாவ‌து நம்பி இருப்பாங்க‌.. இப்ப‌ வாய்ப்பே இல்ல‌..:(
****************************

Related Posts with Thumbnails