சியாமளா-8: பிரச்சினையில் பி.எம்?

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10

மறுபடியும் சீட்டில் உட்கார்ந்தான். கொஞ்சம் கூட யோசிக்காமல் பதில் சொன்னான், "அருண், சியாமளா வருவதாக இருந்தால், நான் ஆன்சைட் போவதற்கு ரெடி?"

"வாட்?" எனச் சொல்லிக் கொண்டே, அரை நிமிடம் உதடு பிரிக்காமல் சிரித்தார்.

சிரிப்பை தொடர்ந்து கொண்டே, "நீங்க கம்பெனிக்கு புதுசுன்னு நெனைக்கிறேன், அதுவும் இல்லாம யூத் வேற. ஒரு ஃப்ரண்டா சொல்றேன். நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு இல்ல சியாமளா"

"ம்ம்ம்ம்" இப்போ கணேஷ் டர்ன். அமைதியாக சிரித்துக் கொண்டே, அருணின் பிரசங்கத்தை ரசிக்க‌ ஆர‌ம்பித்தான்

"ரொம்ப ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு லேடி. போன பார்ட்டில, தண்ணியடிச்சிட்டு கலாட்டா பண்ண பையனை......"

"I know that history"

"ஓ.கே. ஃபைன்.. குட் கேர்ள். வொர்க் விஷ‌ய‌த்துல‌ ரொம்ப‌ க‌ரெக்ட்டா இருப்பாங்க‌. அவ‌ங்க‌ ஏற்கென‌வே ஆன்சைட் போயிருந்த‌ க்ளைய‌ண்ட் தான். அவ‌ங்க‌ தான் சியாம‌ளாவ‌ திரும்ப‌ வ‌ர‌ச்சொல்லி ரிக்வெஸ்ட் ப‌ண்ணியிருந்தாங்க‌"

"ஓ.. க்ரேட்"

"ஆனா வ‌ம்பு ப‌ண்ற‌ ப‌ச‌ங்க‌ள‌, அடிச்சி துவைச்சிடுவாங்க‌. என‌க்கு தெரிஞ்சு, நெறைய்ய‌ பேரு ஏதோ ஒரு வ‌கைல‌ சியாம‌ளாவால‌ பாதிக்க‌ப்ப‌ட்டு இருக்காங்க‌. ஸோ.. நான் என்ன‌ சொல்ல‌ வ‌ர்றேன்னா?"

"???"

"சியாம‌ளாவுக்காக தான் ஆன்சைட் போறதுக்கு ஒத்துக்கிட்டீங்க‌ன்னா, ம‌றுப‌டியும் ஒரு த‌ட‌வை யோசிச்சீக்கோங்க‌. ஏன்னா, சியாம‌ளா அவ‌ங்க‌ள‌ க‌ட்டிக்க‌ப் போற‌வ‌ன‌ த‌விர‌ யாருக்கும் ப‌ய‌ப்ப‌ட‌ மாட்டாங்க‌.. ஐ மீன்,ஃப்ரீயா கூட‌ பேச‌ மாட்டாங்க‌"

"அப்ப‌டியா சொல்றீங்க‌.. ஐ ஸீ" எக்க‌ச்ச‌க்க‌ புன்ன‌கையை வெளியில் கொட்டாம‌ல் உள்ளுக்குள் குதித்தான்

"ஸோ, உங்க‌ முடிவு என்ன‌?"

"நீங்க‌ சியாம‌ளாகிட்ட‌ இது ப‌த்தி பேசிட்டு சொல்லுங்க‌.. அவ‌ங்க‌ ரெடியா இருந்தா, நானும் ரெடி. இல்லைன்னா, ரெண்டு பேருக்கு ப‌திலா புதுசா ரெண்டு பேர் தேடிக்கோங்க‌"

க‌ணேஷை ஏற‌ இற‌ங்க‌ பார்த்தார் அருண். பின் மனதினுள், "இவன் என்ன லூஸா? சொந்த செலவுல சூனியம் வச்சிக்குறானே?" என நினைத்துக் கொண்டிருக்கும்போது,

"தேங்க்ஸ்" என்று ம‌றுப‌டியும் ஃபார்ம‌லாக‌ கை கொடுத்துவிட்டு கெள‌ம்பினான் க‌ணேஷ்.

இப்போது அருண் அறையில் சியாம‌ளா.

"சியாம‌ளா, நேரா நான் விஷ‌ய‌த்துக்கு வ‌ர்றேன். நீங்க‌ திரும்ப‌வும் UK க்ளைய‌ண்ட் ப்ளேஸ்க்கு போக‌ணும். நீங்க‌ ரெடியா?"

முழுதாக‌ அரைநிமிட‌ம் யோசித்தாள். "ஸாரி, அருண். என்னால‌ இப்ப‌ போக‌ முடியாது"

"என்ன‌ கார‌ண‌ம்ன்னு தெரிஞ்சிக்க‌லாமா?"

"கொஞ்ச‌ம் பெர்ச‌ன‌லா வேலைக‌ள், ஃபேமிலி க‌மிட்மெண்ட்ஸ்"

"ம்ம்.. ஓ.கே. ஸோ, அப்ப‌டின்னா, உங்க‌ளுக்கு ப‌திலா நான் புதுசா ரெண்டு பேரை தேட‌ணும். ஃபைன், ஐ வில் டேக் கேர்"

"ரெண்டு பேரா? வாட் டூ யூ மீன்?"

"யூ நோ க‌ணேஷ் ரைட். அவ‌ர்கிட்ட‌ தான் நான் ஃப‌ர்ஸ்ட் ப்ரோப்ப‌ஸ் ப‌ண்ணேன். ஃப‌ர்ஸ்ட், பெர்ச‌ன‌ல் வேலை, பிர‌ச்சினைன்னு சொல்லிக்கிட்டு இருந்தார். அப்புற‌ம் உங்க‌ பேரைச் சொன்ன‌தும் ஓ.கே சொல்லிட்டாரு"

" " மெல்லிதாக உதட்டின் ஓரத்தில் புன்னகை பரவ ஆரம்பித்தது.

"இதுல‌ Funny thing என்ன‌ன்னா, நீங்க‌ வ‌ர‌லைன்னு சொன்னா அவ‌ரும் வ‌ர‌மாட்டேன்னு சொல்லிட்டாரு. He is Crazy!!! உங்க‌ள‌ ப‌த்தி அவ‌ருக்கு தெரியாதுன்னு நெனைக்கிறேன்"

" " அந்த மெல்லிய புன்னகை காது வழி கடந்து நெற்றியின் நடுவில் வந்து இணையும் போது, முழுவதும் வெட்கத்தில் சிவந்து இருந்தாள்.

"ஓ.கே. சியாம‌ளா. நாட் அ ப்ராப்ள‌ம். ஐ வில் டேக் கேர்"

"அருண், ஒன் செகண்ட். நாங்க என்னைக்கு ஆன்சைட் கெளம்பணும்?"

"வாட்?" தேவையில்லாமல் அதிர்ச்சியான‌தில் டென்ஷ‌ன் ஆனான்

" "

"ச‌த்திய‌மா புரிய‌ல‌? ஏன் ரெண்டு பேரும் ஒரே மாதிரி சொல்றீங்க‌?" வ‌ழுக்கைத் த‌லையில் ஒட்டியிருந்த‌ வேர்வையை க‌ர்ச்சீப்பில் ஒற்றி எடுத்த‌ப‌டி கேட்டார் அருண்.

"க‌ணேஷ் சொன்ன பெர்ஸனல் பிர‌ச்சினை, நான் தான். நான் சொன்ன‌ பெர்ஸ‌ன‌ல் க‌மிட்மென்ட்ஸ், க‌ணேஷ் தான்"

"Why?"

"அய்யோ க‌ட‌வுளே, இன்னிக்கி காலைல‌ இருந்து எத்த‌னை பேர்கிட்ட‌ தான் இத‌ சொல்ல‌ வேண்டி இருக்குமோ? அவ‌ன் கூலா எஸ்கேப் ஆகிட்டான்? இடிய‌ட்" என்று ம‌ன‌துக்குள் கடவுளையும், கணேஷையும் திட்டிக் கொண்டிருந்தாள்.

"ஹ‌லோ சியாம‌ளா.. I asked WHY?"

"He is my Fiancee!!! We are getting married SOOOOON!"

"வாட்?" இது தான் அருணுக்கு நிஜ‌ ஷாக்.

"நீங்க‌ ஏன் அருண் ஷாக் ஆகிறீங்க‌?"

"இந்த‌ மேட்ட‌ர் எல்லாம் தெரியாம‌ கணேஷ்கிட்ட‌ உங்க‌ள‌ ப‌த்தி ஏதேதோ சொல்லிட்டேன்?" சோக‌த்தில் மூழ்கினார் அருண்

"ஹா ஹா ஹா" அந்த அறையே அதிர‌ அதிர‌ சிரித்தாள், க‌தாநாய‌கி சியாம‌ளா.

(இள‌மை துள்ள‌லுட‌ன் அடுத்த‌ ப‌குதியை ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்க‌வும்)

**********************************

18 comments:

மணி said...

அடுத்த பகுதில முடிக்க போறீங்களா நண்பா. நல்லா சுவாரஸ்யமாக போகுது.

லெமூரியன்... said...

நல்ல இருக்கு கணேசு....வெட்டிக்கிட்டது ரெண்டும் ஒட்டிக்கப்பாக்குது..........அப்போ அடுத்த பதிவு காதல் நுரை பொங்கி வழியுமா.! :-) :-)

Cable Sankar said...

இந்த சீன் கொஞ்சம் சினிமாவா இருந்தாலும்.. ரைட் அடுத்து என்ன சொல்றீங்கன்னு பார்ப்ப்போம்... கணேஷ்.. உங்க போன் நம்பர் அனுப்புங்க.. 9840332666

Shalini said...

"அருண், சியாமளா வருவதாக இருந்தால், நான் ஆன்சைட் போவதற்கு ரெடி?"
//கணேஷ் என்ன மறந்துடீங்க இல்ல... அந்த திமிர் பிடிச்சவ எப்படி உங்கள இந்தளவுக்கு மாத்தினா?? நல்ல decent-ஆன பொண்ணுங்களே உங்கள மாதிரி பசங்களுக்கு பிடிக்காது இல்ல!!

Refer old blogs //ஹை.. அதான் இப்ப‌ சொல்லிட்டேன்ல‌.. நீங்க‌ ரெடின்ன்னு சொல்லுங்க‌, சியாம‌ளாவ‌ விட்டுட்டு உங்க‌கூட‌ ஓடிவ‌ந்துர்றேன் :)
//
இப்படி எல்லாம் சொல்லிடு என்ன அம்போன்னு தவிக்க விட்டுடீங்களே!!

Raghav said...

//அந்த மெல்லிய புன்னகை காது வழி கடந்து நெற்றியின் நடுவில் வந்து இணையும் போது, முழுவதும் வெட்கத்தில் சிவந்து இருந்தாள்.//

அட சியாமளாவுக்கு வெக்கமும் வருமோ.. கதை ரொம்ப ஜாலியா இருக்கு கணேஷ்.. எதிர்பார்த்து ரசித்துப் படிக்கிறேன்.. கதைப்போக்கிற்கு தகுந்தாற்போல் சில படங்களையும் இணைத்தால் தூள் கிளப்பும்.

Anonymous said...

//(இள‌மை துள்ள‌லுட‌ன் அடுத்த‌ ப‌குதியை ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்க‌வும்)//

எதிர்பார்க்கிறோம்.
(வழக்கம் போல் ஷாலினியின் கமெண்ட்ஸும் சேத்து :))

guru said...

Nice Ganesh.. Keep Going !!!

viccy said...

கதை சூப்பரா போயிகிட்டு இருக்கு கணேஷ்...

//(இள‌மை துள்ள‌லுட‌ன் அடுத்த‌ ப‌குதியை ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்க‌வும்)//

கண்டிப்பா எதிர்பார்க்கிறேன்....

viccy said...

கதை சூப்பரா போயிகிட்டு இருக்கு கணேஷ்...

//(இள‌மை துள்ள‌லுட‌ன் அடுத்த‌ ப‌குதியை ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்க‌வும்)//

கண்டிப்பா எதிர்பார்க்கிறேன்....

Shankar said...

Nice!!

அந்த மெல்லிய புன்னகை காது வழி கடந்து நெற்றியின் நடுவில் வந்து இணையும் போது, முழுவதும் வெட்கத்தில் சிவந்து இருந்தாள்

- Nalla varnippu da.

(இள‌மை துள்ள‌லுட‌ன் அடுத்த‌ ப‌குதியை ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்க‌வும்)

Hope I can expect more romance :) in the next part!

Nisha said...

valakkam pol kathai super..
so ini super super nu naa repeat commet adikkap porathu illai.. sorry.. :)


ilamai thullalaaa?

aahaa,! ganesh ulkuththu onnum illaiyee? :O, :)


and enga kitta ethir paarppu niraiye irukku..

But ganesh, unga kathai start pandrathukku munnadiye mudinjidura maathiri irukke...

tym illiya enna?
innum konjam length kootalaam.. (I feel)

aprm Rasigar mandram start panniyaacha ganesh?
enakku magalir ani thalaivi pathavi kodunga.. :)

கணேஷ் said...

நன்றி மணி!

அடுத்த பகுதில முடிக்க போறீங்களா நண்பா. நல்லா சுவாரஸ்யமாக போகுது.//

அடுத்த‌ பகுதில‌யா? ச்சான்ஸே இல்ல‌. ம‌ற்ற‌ப‌டி உங்க‌ள் பாராட்டுக்கு ந‌ன்றி :)

**************

ந‌ன்றி லெமூரியன்!

நல்ல இருக்கு கணேசு....வெட்டிக்கிட்டது ரெண்டும் ஒட்டிக்கப்பாக்குது..........அப்போ அடுத்த பதிவு காதல் நுரை பொங்கி வழியுமா.! :-) :-)//

:) காத‌ல் நுரை பொங்கி வ‌ழியுதான்னு வெயிட் அண்ட் ஸீ..

**************** ந‌ன்றி Cable Sankar!

இந்த சீன் கொஞ்சம் சினிமாவா இருந்தாலும்.. ரைட் அடுத்து என்ன சொல்றீங்கன்னு பார்ப்ப்போம்... கணேஷ்.. உங்க போன் நம்பர் அனுப்புங்க.. 9840332666//

இந்த‌ க‌தையை நான் யோசித்த‌தை விட‌ நீங்க‌ள் தான் அதிக‌ம் யோசித்துள்ளீர்க‌ள். இதை சினிமா ரேஞ்சுக்கு எடுத்து செல்வதை பற்றி கனவிலும் யோசித்தது கிடையாது. உங்க‌ளுட‌ன் ஃபோனில் பேசிய‌ விவாத‌ம் மிக்க‌ ம‌கிழ்ச்சியைக் கொடுக்கிற‌து. தேங்க் யூ ஸார் :)

*****************

கணேஷ் said...

ந‌ன்றி Shalini!

//கணேஷ் என்ன மறந்துடீங்க இல்ல... அந்த திமிர் பிடிச்சவ எப்படி உங்கள இந்தளவுக்கு மாத்தினா?? நல்ல decent-ஆன பொண்ணுங்களே உங்கள மாதிரி பசங்களுக்கு பிடிக்காது இல்ல!!//

சியாம‌ளா டீஸ‌ண்டான‌ பொண்ணு இல்லைன்னு யாரு உங்க‌கிட்ட‌ சொன்ன‌து. அழ‌கான‌, திமிர் பிடிச்ச‌, டீஸ‌ண்டான‌ பொண்ணு தான் சியாம‌ளா. ஆனா என்ன‌, கொஞ்ச‌ம் குண்டு. அத‌னால் என்ன‌? :)

Refer old blogs //ஹை.. அதான் இப்ப‌ சொல்லிட்டேன்ல‌.. நீங்க‌ ரெடின்ன்னு சொல்லுங்க‌, சியாம‌ளாவ‌ விட்டுட்டு உங்க‌கூட‌ ஓடிவ‌ந்துர்றேன் :)
//
இப்படி எல்லாம் சொல்லிடு என்ன அம்போன்னு தவிக்க விட்டுடீங்களே!!//

அது போன‌ வார‌ம். இது இந்த‌ வார‌ம். :) ஒரு பைய‌னுக்கு பொண்ண‌ பிடிக்காம‌ போற‌துக்கு ஆயிர‌ம் கார‌ண‌ம் இருக்க‌லாம். மே பி, திமிர் பிடிச்சவ, பசங்கள மதிக்காதது. ஆனா பிடிக்கிற‌துக்கு ஒரே கார‌ண‌ம், சியாம‌ளா க‌ணேஷ் மேல‌ வ‌ச்சிருக்க‌ பொஸ‌ஸிவ்னெஸ் ம‌ற்றும் க‌ணேஷை மிஸ் ப‌ண்ண‌க் கூடாது என‌ த‌விக்கும் த‌விப்பு :)

**********************

ந‌ன்றி சின்ன அம்மிணி!

எதிர்பார்க்கிறோம்.
(வழக்கம் போல் ஷாலினியின் கமெண்ட்ஸும் சேத்து :))//

எதிர்பார்க்கிறோம் கமெண்ட்க்கு :) :) :). ம‌ற்ற‌வைக்கு :( :( :( நீங்க‌ கூட‌வா?

**********************

ந‌ன்றி guru!

நன்றி viccy!

ரெண்டு க‌மெண்ட்க்கு தேங்க்ஸ் :) :)

**********************

கணேஷ் said...

நன்றி Shankar!

Nice!!
அந்த மெல்லிய புன்னகை காது வழி கடந்து நெற்றியின் நடுவில் வந்து இணையும் போது, முழுவதும் வெட்கத்தில் சிவந்து இருந்தாள்
- Nalla varnippu da.//

நீயாவ‌து ர‌சிச்சீயே. ச‌ந்தோஷ‌ம். ஏக‌ப்ப‌ட்ட‌ பொண்ணுங்க‌ வ‌ந்து போயிட்டு இருந்தாலும் யாரும் க‌ண்டுக்க‌வே இல்ல‌ :) நான் அழ‌குன்னு சொன்னா ம‌ட்டும் ச‌ண்டைக்கு வ‌ருவாங்க‌ :(

Hope I can expect more romance :) in the next part!//

யெஸ். அஃப்கோர்ஸ் :)

****************************

ந‌ன்றி Nisha!

valakkam pol kathai super..
so ini super super nu naa repeat commet adikkap porathu illai.. sorry.. :)//

உங்க‌ள் ம‌ன்னிப்பு ஏற்றுக் கொள்ள‌ப்ப‌ட்ட‌து. ஸ்ஸ்ஸ் அப்பாடா :)

ilamai thullalaaa?
aahaa,! ganesh ulkuththu onnum illaiyee? :O, :) //

நீங்க‌ தான் உள்குத்தோடு பேசுற‌ மாதிரி இருக்கு :(

and enga kitta ethir paarppu niraiye irukku..//

ஓ.. அப்ப‌டியா :) சொல்ல‌வே இல்ல‌ :)

But ganesh, unga kathai start pandrathukku munnadiye mudinjidura maathiri irukke...
tym illiya enna?
innum konjam length kootalaam.. (I feel)//

டைம் இல்லைன்னு சொன்னா ம‌ட்டும் என்ன‌ ப‌ண்ணுவீங்க‌ :) :) என‌க்கும் ஆஃபிஸ்ல‌ ஓவ‌ர் வேலைங்க‌. :) :)

aprm Rasigar mandram start panniyaacha ganesh?
enakku magalir ani thalaivi pathavi kodunga.. :)//

ம‌க‌ளிர் அணித் த‌லைவி போஸ்ட்க்கு எத‌ற்கும் ஒரு முறை ஷாலினியிட‌ம் பேசிவிட்டு வ‌ர‌வும் :)

***********************

ஊர்சுற்றி said...

இதை அடுத்த பகுதியில் முடித்தால் வூட்டுக்கு ஆட்டோ அனுப்பப்படும் என்று 'எ'ச்சரித்துக்கொள்கிறேன்.

நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு. சுவாரசியமாக படிப்பதற்கு இப்படி ஒண்ணு கட்டாயமா வேணும்.

:) கலக்கல் தொடர்.

கணேஷ் said...

நன்றி ஊர்சுற்றி!

இதை அடுத்த பகுதியில் முடித்தால் வூட்டுக்கு ஆட்டோ அனுப்பப்படும் //

ஒரு பக்கம் முடிக்க சொல்லி டார்ச்சர், இன்னொரு பக்கம் இப்படி ஒரு மிரட்டல்.. நான் பாவங்க..

என்று 'எ'ச்சரித்துக்கொள்கிறேன். //

உங்க‌ள் 'எ'ச்ச‌ரிக்கையை நோட் ப‌ண்ணிட்டேன் ந‌ண்பா.. நீங்க‌ நினைக்கிற‌ மாதிரி 'எ'ல்லா மேட்ட‌ரும் இருக்கும் :) :) :)

நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு. சுவாரசியமாக படிப்பதற்கு இப்படி ஒண்ணு கட்டாயமா வேணும். //

அப்ப‌டியா சொல்றீங்க‌.. ந‌ன்றி :)

:) கலக்கல் தொடர். //

ந‌ன்றி :)

************************

ந‌ன்றி Raghav!

அட சியாமளாவுக்கு வெக்கமும் வருமோ..//

பின்ன.. அவளும் பெண் தானே :) :)

கதை ரொம்ப ஜாலியா இருக்கு கணேஷ்.. எதிர்பார்த்து ரசித்துப் படிக்கிறேன்.. //

பாராட்டுக்கு நன்றி நண்பா :)

கதைப்போக்கிற்கு தகுந்தாற்போல் சில படங்களையும் இணைத்தால் தூள் கிளப்பும்.//

முய‌ற்சி செய்கிறேன் :)


**************************

Nisha said...

shalini shyamalavaye antha podu poduraanga?

ithula naan avanga kitta poi pesavaa?

naa valla pa..:)

கணேஷ் said...

நன்றி Nisha!

shalini shyamalavaye antha podu poduraanga?//

வெளில‌ இருந்து பாக்குற‌ ஆடிய‌ன்ஸூக்கே இப்ப‌டி இருந்துச்சின்னா, என‌க்கு எப்ப‌டி இருக்கும்?

ithula naan avanga kitta poi pesavaa?//

அந்த‌ ப‌ய‌ம் இருக்க‌ட்டும். நாங்க‌ளும் அடியாள் வ‌ச்சிருப்போம்ல‌ :)

naa valla pa..:)//

த‌ட்ஸ் குட் :)

***********************

Related Posts with Thumbnails