சியாமளா-9: "ஏன்?" புலம்பல் வாக்குமூலம்!

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10

கணேஷ்க்கு காற்றில் பறப்பது போல் இருந்தது. இந்த சந்தோஷத்தை உடனே கொண்டாட வேண்டும் போல இருந்தது. உடனே நினைவில் வந்தான் நண்பன் முத்துவேல்

"முத்து, என்ன பண்ணிக்கிட்டு இருக்க? ஈவ்னிங் ஃப்ரீயா?"

"கொஞ்சம் ஃப்ரீ தான்டா. என்ன மேட்டர்?"

"கெளம்பி எங்க ஏரியா வா. நைட் தண்ணி அடிக்கலாம்?"

"வேணான்டா.. கடைசில சியாமளா வந்து கதவை தட்டுவா, மொத்த சரக்கும் இறங்கிடும். உங்க போதைக்கு நான் ஊறுகாயா?"

"அத பத்தி வொர்ரீ பண்ணாத மச்சி. நாம இன்னைக்கு ஏசி பார் போயிடலாம்?"

"மாமா, SMS படம் பார்த்து இருக்கேல்ல.. அந்த ஹீரோயின் மாதிரி நேரா பாருக்கு வந்துடுவா அவ. அவ பொறுக்கிடா"

"அடி செருப்பால.. யாரை பார்த்து பொறுக்கிங்கிற. அவ என் ஆளு, நான் கட்டிக்கப் போறவ. மரியாதையா பேசு"

"வேணும்டா வேணும் எனக்கு இன்னும் வேணும். எப்ப நீ அவளை தான் கட்டிக்கப் போறேன்னு சொன்னீயோ அன்னைக்கே உன் ஃப்ரெண்ட்ஷிப்ப கட் பண்ணி இருக்கணும்"

"விடு ம‌ச்சி, இதுக்கெல்லாம் டென்ஷ‌ன் ஆனா எப்ப‌டி? நாம‌ என்ன‌ அப்ப‌டியா ப‌ழ‌கிருக்கோம். நீ மட்டும் இப்ப வ‌ந்தா ஏசி பார் ஃபுல் செல‌வை நான் ஏத்துக்கிறேன்"

"ம்ம்ம்.. இது ஒரு ந‌ல்ல ப்ரோப்பஸல். ஆனா..இந்த‌ மாதிரி எல்லாம் உன்ன‌ நான் பாருக்கு கூப்பிட்டு போனேன்னு தெரிஞ்ச‌துன்னா, சியாம‌ளா என்ன‌ அடிப்பா மாமா"

"நீ இப்ப‌ வ‌ர‌லைன்னாலும் அடிப்பா. நீ நைட் த‌ண்ணி அடிக்க‌ கூப்பிடுறேன்னு அவ‌கிட்ட‌ சொன்னேன்னு வ‌ச்சிக்கோ......."

"ரைட் மாமா.. நான் 8 ம‌ணிக்கு உன்ன‌‌ வீட்ல‌ வ‌ந்து பிக்க‌ப் ப‌ண்ணிக்குறேன். எப்ப‌டியெல்லாம் மிர‌ட்டுறீங்க‌, ந‌ட‌த்துங்க‌டா ந‌ட‌த்துங்க‌"

லைனை க‌ட் ப‌ண்ணிவிட்டான் முத்துவேல்

"இதெல்லாம் கூட‌ ந‌ல்லா தான் இருக்கு" என்று ம‌ன‌துக்குள்ளே ர‌சித்தான் க‌ணேஷ்

இர‌வு 8.45 ம‌ணி. அரைகுறையான‌ ம‌ங்க‌லான‌ வெளிச்ச‌த்தில் ஒரு ஆஃப் சிக்நேச்ச‌ர் பாட்டில் இர‌ண்டு பேர் உட‌லிலும் ச‌ரி பாதியாக‌ இற‌ங்கி இருந்த‌ நேர‌த்தில் ஆர‌ம்பித்தான் முத்துவேல்

"ஏன்டா, பிடிக்க‌ல‌ பிடிக்க‌ல‌ன்னு கீற‌ல் விழுந்த‌ டேப் ரிக்கார்ட‌ர் மாதிரி க‌த்திக்கிட்டு இருப்ப‌.. இப்ப‌ என்ன‌ ஆச்சி?"

"சிம்பிளான‌ ஒரு லாஜிக் தான்டா. ஒரு பொண்ணு அசிங்க‌ப‌டுத்திட்டா, கன்னாபின்னான்னு க‌லாசுனா, ப‌ச‌ங்க‌ யாருக்கும் பிடிக்காது. நானும் 'என்ன‌ இவ‌ள‌ பைய‌ன் மாதிரி யாருக்கும் அட‌ங்காம‌ வ‌ள‌ர்த்து இருக்காங்க‌, என்ன‌ ஜென்ம‌ம்' அப்ப‌டியெல்லாம் யோசிச்சி இருக்கேன்"

"இப்ப‌ என்ன ஆச்சி? இப்ப மட்டும் எப்ப‌டி அவ‌ள‌ பொண்ணுன்னு ந‌ம்புன‌?"

"இன்னிக்கு வ‌ரைக்கும் அவ‌கிட்ட‌ நான் த‌னியா ப‌த்து நிமிஷ‌ம் கூட‌ பேசுன‌து இல்ல‌. அன்னைக்கு ஹோட்ட‌ல் கூப்பிட்டு போய் என்னை கிண்ட‌ல் ப‌ண்ண‌தோடு ச‌ரி"

"அப்புற‌ம் அன்னைக்கு ம‌ட்டும் ஏன் உன் வீட்டுக்கு வ‌ந்தா? ரெண்டு பேரும் பேசாம என்ன பண்ணீங்க? மாமா, இந்த‌ ட‌கால்டி வேலையெல்லாம் என்கிட்ட‌ காட்டாத‌"

"முத்து, இந்த‌ மாதிரி நீ பேசிக்கிட்டே இருந்தேன்னு வ‌ச்சிக்கோ, நான் சியாம‌ளாவுக்கு ஃபோன் ப‌ண்ணி உன்கிட்ட‌ கொடுத்திடுவேன். கொஞ்ச‌ம் நேர‌ம் மூடிட்டு, நான் சொல்ற‌த‌ கேளு"

"உன்கூட‌ த‌ண்ணி அடிக்க‌ வ‌ந்தேன் பாரு, என்ன‌ சொல்ல‌ணும்"

"கோச்சிக்காத‌ ம‌ச்சி.. எங்க‌ விட்டேன்.. ஆங்.. ஆனா என் மேல‌ அவ‌ளுக்கு அப்ப‌டி இரு இன்ட்ர‌ஸ்ட். நான் ச்சும்மா ஹ‌ரிணின்னு ஒரு பொண்ண‌ ல‌வ் ப‌ண்றேன்னு தான் சொன்னேன். அதே பேர்ல‌ என் ப‌ழைய‌ ஆஃபிஸ்ல‌ இருந்து ஒருத்தி வ‌ருவான்னு நான் கூட நென‌ச்சி பார்க்க‌ல‌. ஆனா பாரு ம‌ச்சி, சியாம‌ளா என்ன‌ டென்ஷ‌ன் ஆனா தெரியுமா?"

""

"எவ்ளோ டென்ஷ‌ன் ஆனான்னு கேளு ம‌ச்சி?"

"ஏன்டா கேட்டாலும் திட்டுற, கேக்க‌லைன்னாலும் திட்டுற‌. ஓசிக்குடி குடிக்க‌ வ‌ந்த‌து ஒரு குத்த‌மா?"

"ச‌ரி நானே சொல்றேன். ஹ‌ரிணியும் சும்மா இல்லாம‌, என்னோட பழைய ஆஃபிஸ் வீர‌ தீர‌ செயல்களை ப‌ற்றி பெருமையா பேசிட்டு இருந்தா. நானும் ஃப‌ர்ஸ்ட் ஆர்வ‌ம் இல்லாம‌ கேட்டுட்டு இருந்தாலும், ஒரு க‌ட்ட‌த்துல‌ நானும் அவ‌ கூட‌ பேச‌ ஆர‌ம்பிச்சேன்"

"ஒரு நிமிஷ‌ம், அது என்ன‌ செய‌ல்க‌ள்?"

"வீர‌ தீர செயல்கள் ம‌ச்சி. அதான்டா கிரிக்கெட் மேட்ச், ஸாங் பாடினது, த‌ண்ணி அடிச்ச‌து"

"த்தூ, இதெல்லாம் சொல்ற‌துக்கு உன‌க்கே வெட்க‌மா இல்ல‌, ச‌ரி மேல‌ சொல்லு. சியாமளா ஹ‌ரிணிக்கு ரெண்டு அறை விட்டாளா இல்ல‌ உன‌க்கா?"

"ஹெய்ஹேய், நான் யாரு? என்ன‌ போய் அடிப்பாளா? இப்ப‌டி நாங்க‌ பேசிக்கிட்டு இருக்கும்போது அவ‌ ரியாக்ச‌னை பார்க்க‌ணுமே, அப்ப‌டியே டென்ஷ‌ன்ல‌ செமத்தியா க‌டுப்பாயிட்டா. அதுக்கெல்லாம் என்ன‌ கார‌ண‌ம்? ல‌வ் ம‌ச்சி ல‌வ். அப்ப‌ க‌த்துனா பாரு ஒரு க‌த்து, "எக்ஸ்கியூஸ் மீ" அப்ப‌டின்னு?"

"'க‌ணேஷ் நான் க‌ட்டிக்க‌ போற‌வன்'னு கத்தி சொன்னா. அப்ப‌ எல்லாரோட‌ ரியாக்ச‌ன் பார்க்க‌ணுமே. ச்சான்ஸே இல்ல. அந்த‌ ல‌வ், பொஸ‌ஸிவ்னெஸ் தான் என்னை என்ன‌மோ ப‌ண்ணிருச்சி ம‌ச்சி. இனிமே அவ‌ ர‌வுடி என்ன‌? பேய் பிசாசா இருந்தாக் கூட‌ நான் அவ‌ளைக் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிப்பேன்"

"என்ன‌க் கொடுமை மாமா இதெல்லாம்? சியாம‌ளாவா இப்ப‌டி ப‌ண்ணா? ஆச்ச‌ர்ய‌மா இருக்கு? ப‌ளார் ப‌ளார்ன்னு உன‌க்கு ரெண்டு அறை விட்டுருப்பான்னு நென‌ச்சேன், ஜ‌ஸ்ட் மிஸ்"

"இதென்ன‌ ஆச்ச‌ர்ய‌ம். இதுக்கு மேல‌ இன்னொன்னு சொன்னேன்னு வ‌ச்சிக்கோ, நீ அப்ப‌டியே ஷா...க் ஆகிடுவே. அடிச்ச‌தெல்லாம் இற‌ங்கிடும்"

"இப்ப‌வே பாதி இற‌ங்கிடுச்சி. சொல்லு. வேணாம்ன்னு சொன்னா விட‌வா போற‌?"

"நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா, ஒரே இட‌த்துக்கு நெக்ஸ்ட் வீக் ஆன்சைட் போறோம்?"

த‌ம்மை ப‌ற்ற‌ வாயில் எடுத்து வைத்த‌வ‌ன், நான் சொன்ன‌தைக் கேட்டு அதிர்ச்சியில் கீழே போட்டுவிட்டான்

"என்ன‌ மாமா சொல்ற‌? க‌ல்யாண‌த்துக்கு முன்னாடியேவா?"

ஆமாம் என்ப‌து போல் க‌ண்ண‌டித்தான் க‌ணேஷ்

"ச‌ரி, கம்பெனி பாலிஸில ரெண்டு பேரா போயிட்டு, திரும்ப‌ " வரை சத்தமாக சொல்லிவிட்டு, "மூணு பேரா வ‌ர்ற‌த்துக்கு இடம் இருக்குமா?" என கடைசியில் முனகினான்

"வாட்?"

"ஆமா நீங்க‌ ஒண்ணும் தெரியாத‌ பாப்பா நீ, வாயில‌ விர‌ல‌ வச்சாக் கூட‌ க‌டிக்க‌ தெரியாது. இப்ப‌டியா க‌ல்யாண‌ம் ஆகாத‌ ஒருத்த‌ன‌ க‌ன்னாபின்னான்னு டென்ஷ‌ன் ஆக்குற‌து?"

"விடு ம‌ச்சி க‌வ‌லைப்ப‌டாத‌. நாம‌ நாளைக்கும் த‌ண்ணி அடிக்க‌லாம்?"

"அட‌ப் போங்கடா.. நீங்க‌ளும் உங்க‌ ல‌வ்வும். உன்கூட‌ த‌ண்ணி அடிக்கிற‌துக்கு நான் குப்புற‌ ப‌டுத்து சிவனேன்னு தூங்குவேன்" என‌ த‌லை தெறிக்க‌ ஓடினான்.

"வெண்ணில‌வே வெண்ணில‌வே
விண்ணைத் தாண்டி வ‌ருவாயா?
விளையாட‌ ஜோடி தேவை"

என‌ ஹ‌ரிஹ‌ர‌ண் டைமிங்காக‌ எஃப்.எம்மில் பாடிக் கொண்டிருக்க‌ க‌ணேஷ் வீடு வ‌ந்து சேர்ந்தான்.

************************************

27 comments:

Shankar said...

Dei Ganesh, Romba yemathita...

இள‌மை துள்ள‌லுட‌ன் அடுத்த‌ ப‌குதியை ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்க‌வும்

-Last time epadi sonnathala, nan yethotho expect pannen. Ellam waste a poidichi.

பேய் பிசாசா இருந்தாக் கூட‌ நான் அவ‌ளைக் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிப்பேன்

-All the best da :)

லெமூரியன்... said...

\\"ஏன்டா கேட்டாலும் திட்டுற, கேக்க‌லைன்னாலும் திட்டுற‌. ஓசிக்குடி குடிக்க‌ வ‌ந்த‌து ஒரு குத்த‌மா?"...//

ஹா ஹா ஹா....................பாவப் பட்ட ஜென்மம்பா அந்த முத்து.....

Cable சங்கர் said...

டயலாக் பின்னிறீங்க கணேஷ்.. கீப் கோயிங்.. ஐயம்வெயிட்டிங்

Raghav said...

போதையோடயே கதையை எழுதினீகளா.. சியாமாளான்னு எழுதிருக்கீங்க.

காதல் ஆரம்பிச்சுருக்கு போல.. அதான் புலம்பல்களும் அதிகமாயிருச்சு..

Unknown said...

கெளம்பி எங்க ஏரியா வா. நைட் தண்ணி அடிக்கலாம்?
-நானும் வரேன்! எனக்கும் கொஞ்சம் ஊத்துங்க கணேஷ்!

க‌ணேஷ் நான் க‌ட்டிக்க‌ போற‌வன்னு கத்தி சொன்னா.
-கணேஷ், திரும்பவும் சொல்றேன். ஏமாந்துடாதிங்க and ஏமாத்திடாதிங்க!

மணி said...

குவார்ட்டர் அடிச்ச கணேஷ் என்ன ஆனான்

Anonymous said...

முத்துவேல்னு ஒரு கைப்புள்ள கணேஷ்-சியாமளாவுக்கு மாட்டிருக்காங்க. :)

பாலாஜி சங்கர் said...

கதை நன்றாக போகிறது எங்கோ படங்களில் பார்த்த மாதிரி இருந்தது

ஆனால் நன்றாக இருந்தது

☀நான் ஆதவன்☀ said...

ரைட்டு... இன்னைக்கி ஷாலினி கமெண்ட்ஸ் கொஞ்சம் கம்மியா இருக்கே.

ஹாலினி உங்ககிட்ட இருந்து இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கிறோம் :)

Unknown said...

ஹாலினி உங்ககிட்ட இருந்து இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கிறோம்
//
Hello Mr.ஆதவன்!
என்னோட கணேஷ் எனக்கு கிடைக்கலைன்னு என் குமுறல்களை கொட்டிக்கிட்டிருக்கேன்! உங்களுக்கு கிண்டலா இருக்கா???

Anonymous said...

//Hello Mr.ஆதவன்!
என்னோட கணேஷ் எனக்கு கிடைக்கலைன்னு என் குமுறல்களை கொட்டிக்கிட்டிருக்கேன்! உங்களுக்கு கிண்டலா இருக்கா???//

ஷாலினி, எங்க தரப்பிலிருந்து உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமா ?

:)

☀நான் ஆதவன்☀ said...

//Shalini said...

ஹாலினி உங்ககிட்ட இருந்து இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கிறோம்
//
Hello Mr.ஆதவன்!
என்னோட கணேஷ் எனக்கு கிடைக்கலைன்னு என் குமுறல்களை கொட்டிக்கிட்டிருக்கேன்! உங்களுக்கு கிண்டலா இருக்கா???
//

ஏன் கவலை படுறீங்க? உங்களை விட்டுட்டு பயபுள்ளை வேற பொண்ணை கல்யாணம் பண்ண விட்டுருவோமா? இதுக்கெல்லாம் மனச தளரவிடாம கலகலப்பா பின்னூட்டம் போடுங்க :)

//ஷாலினி, எங்க தரப்பிலிருந்து உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமா ? //

ரிப்பீட்டே :)

Unknown said...

உங்கள் ஆதரவுக்கு ரொம்ப நன்றி சின்ன அம்மிணி and ஆதவன்! பார்க்கலாம் என்னோட கணேஷ் என்ன சொல்றார்னு!!

Vetri said...

கணேஷ் ரொம்ப நல்ல இருக்கு... கீப் இட் up

puduvaisiva said...

முத்தின் மானசாட்சி அவனிடமே பேசியது

டேய் கணேசு உன் உள்ளுர் காதலை சொல்லி காதுல இரத்தம் வர வச்சுட்டான்.

இதல வெளிநாட்டுக்கு அவ கூட போய்ட்டு வந்துட்டான இவன் கொடுக்கப்போர உதாருக்கு நம்ப உடம்பு தாங்காது

பேசாம செல்போன் நம்பரை உடனே மாத்தனும் இல்லை ஐயப்ப கோயிலுக்கு மாலை போட்டாலும் இந்த நாதரிடம் தப்ப முடியும் !

போரபோக்க பாத்த ஷாலினி சாபம் வேற நம்பளை தாக்குமா?

இனிமேல் இவன் கொடுக்கர ஓசு குடி நமக்கு வேணாம் கொஞ்ச நாளுக்கு ஏரியா தாண்டி தான் குடிக்க போவனும்

Anbarasu S said...

பாவம் முத்து. அடுத்த முறை அவர் வரமாட்டார். நன்றாக உள்ளது

கணேஷ் said...

நன்றி லெமூரியன்!

ஹா ஹா ஹா..பாவப் பட்ட ஜென்மம்பா அந்த முத்து..... //

:) :) :)

*******************

நன்றி Cable Sankar!

டயலாக் பின்னிறீங்க கணேஷ்.. கீப் கோயிங்.. ஐயம்வெயிட்டிங்//

உங்க‌ளின் ஆத‌ர‌வு, பெரும் ம‌கிழ்ச்சியையும், உத்வேக‌த்தையும் த‌ருகிற‌து.

*******************

நன்றி மணி!

குவார்ட்டர் அடிச்ச கணேஷ் என்ன ஆனான்//

குவாட்ட‌ர் அடிச்ச‌ க‌ணேஷ், வீட்டுக்கு வ‌ந்து ப‌டுத்து தூங்கிட்டான் :) :)

********************

நன்றி Shankar!

Dei Ganesh, Romba yemathita... // :( :( :(

-Last time epadi sonnathala, nan yethotho expect pannen. Ellam waste a poidichi.//

பொறுத்தார் பூமி ஆள்வார். அப்படி சொன்னாலும் உண்மை என்ன‌ன்னா, என‌க்கே எப்ப‌டி கொண்டு போற‌துன்னு தெரில‌.. ஏதோ போய்கிட்டு இருக்கு. இதுல‌ நீ வேற‌?

-All the best da :)//

இத‌ என்கிட்ட‌ போய் ஏன்டா சொல்ற‌? யூ டூ?

************************
நன்றி Raghav!

போதையோடயே கதையை எழுதினீகளா.. சியாமாளான்னு எழுதிருக்கீங்க.//

உங்க‌ளுக்கு எப்ப‌டி தெரியும்? பாரில் எங்க‌ளுக்கு பின்னால் உட்கார்ந்திருந்தீர்க‌ளா? :) :) :)

காதல் ஆரம்பிச்சுருக்கு போல.. அதான் புலம்பல்களும் அதிகமாயிருச்சு..//

:) :) :) Well said!

*******************

கணேஷ் said...

ந‌ன்றீ Shalini!

-நானும் வரேன்! எனக்கும் கொஞ்சம் ஊத்துங்க கணேஷ்!//

நெக்ஸ்ட் வீக் ப்ளான் ப‌ண்ணிக்க‌லாம்? ஆர் யூ ரெடி?

-கணேஷ், திரும்பவும் சொல்றேன். ஏமாந்துடாதிங்க and ஏமாத்திடாதிங்க!//

ஏமாந்துடாதீங்க கணேஷ்க்கு தானே? கணேஷ் சியாம‌ளாவிட‌ம் ஏமாந்துட‌க்கூடாதுன்னு உங்க‌ அக்கறை, சிலிர்க்க‌ வைக்குது?

ஏமாத்திடாதிங்க‌ இது யாருக்கு? அவ்வ்..

********************

நன்றீ சின்ன அம்மிணி!

முத்துவேல்னு ஒரு கைப்புள்ள கணேஷ்-சியாமளாவுக்கு மாட்டிருக்காங்க. :)// :))

********************

நன்றி பாலாஜி!

கதை நன்றாக போகிறது எங்கோ படங்களில் பார்த்த மாதிரி இருந்தது // :( :( :(

ஆனால் நன்றாக இருந்தது// :) :) :)

********************

நன்றீ ☀நான் ஆதவன்☀

ரைட்டு... இன்னைக்கி ஷாலினி கமெண்ட்ஸ் கொஞ்சம் கம்மியா இருக்கே. //

ஏன்.. ஏன்?

ஹாலினி உங்ககிட்ட இருந்து இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கிறோம் :)//

என்ன‌ உசுப்பேத்துன‌து ப‌த்தாதுன்னு இப்ப‌ அவ‌ங்க‌ளே வேற‌யா? ந‌ட‌த்துங்க‌ பாஸ் ந‌ட‌த்துங்க‌ :(

***************************

நன்றீ Shalini!

Hello Mr.ஆதவன்!
என்னோட கணேஷ் எனக்கு கிடைக்கலைன்னு என் குமுறல்களை கொட்டிக்கிட்டிருக்கேன்! உங்களுக்கு கிண்டலா இருக்கா???//

இந்த‌ மாதிரியெல்லாம் நீங்க ஏன் ப‌ண்ணுறீங்க‌? உங்க‌ விளையாட்டுக்கும் ஒரு லிமிட் இருக்கு.

****************************

நன்றி சின்ன அம்மிணி!


ஷாலினி, எங்க தரப்பிலிருந்து உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமா ?
:) //

:) :) :)

****************************

கணேஷ் said...

நன்றி ☀நான் ஆதவன்☀ said...

ஏன் கவலை படுறீங்க? உங்களை விட்டுட்டு பயபுள்ளை வேற பொண்ணை கல்யாணம் பண்ண விட்டுருவோமா? இதுக்கெல்லாம் மனச தளரவிடாம கலகலப்பா பின்னூட்டம் போடுங்க :) //

ப‌ப்ளிக்கா கொலை மிர‌ட்ட‌ல்! என்னை காப்பாத்துங்க‌ :)

ரிப்பீட்டே :) //

:) :) :)

***************************

நன்றி Shalini!

உங்கள் ஆதரவுக்கு ரொம்ப நன்றி சின்ன அம்மிணி and ஆதவன்! பார்க்கலாம் என்னோட கணேஷ் என்ன சொல்றார்னு!!//

"என்னோட‌ க‌ணேஷ்" - என்ன‌மோ போங்க‌.. உங்க‌ விளையாட்டெல்லாம் ஒண்ணும் சொல்ற‌துக்கில்ல‌

***************************

நன்றி Vetri!

கணேஷ் ரொம்ப நல்ல இருக்கு... கீப் இட் up//

:) :) :)

***************************

நன்றீ ♠புதுவை சிவா♠

மொத்த‌துல‌ என்ன‌ நீங்க‌, நாதாரின்னு சொன்ன‌த‌ நான் நோட் ப‌ண்ணிட்டேன் :)

***************************

நன்றி Anbarasu Selvarasu!

பாவம் முத்து. அடுத்த முறை அவர் வரமாட்டார். நன்றாக உள்ளது//

:) :) :)

*****************************

Nisha said...

Ganesh, intha episode a neenga thaan eluthuneengala?

i doubt that.. eppavum unga kathai padikkumpothu ulla feeling intha episode la varala... yaen, ennaachu?

sorry..

but enakku apdi thonuthu..

Harini said...

Hi.

Story is very nice.. waiting for the next part.

Thanks
Harini

ஊர்சுற்றி said...

ப்ளாஸ்பேக்கிலேயே இந்த எபிசோடை ஒட்டியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். :)

கிளைமாக்ஸ்க்கு உதவுமோ?!!!

கணேஷ் said...

நன்றி Nisha!

Ganesh, intha episode a neenga thaan eluthuneengala?//

:( :( :(

i doubt that.. eppavum unga kathai padikkumpothu ulla feeling intha episode la varala... yaen, ennaachu?//

:( :( :(

sorry..// இட்ஸ் ஓ.கே

but enakku apdi thonuthu..// நெக்ஸ்ட் டைம், என்னோட‌ ட‌ச் கொண்டு வ‌ரேன். ஆனா ஒரு மேட்டர். நீங்க‌ எதிர்பார்க்கிற‌ அள‌வுக்கு நான் வொர்த் இல்லீங்க‌ :)

***********************

நன்றி Harini!

Hi.
Story is very nice.. waiting for the next part.
Thanks
Harini//

Welcome back :) :) :)

************************

நன்றி ஊர்சுற்றி!

ப்ளாஸ்பேக்கிலேயே இந்த எபிசோடை ஒட்டியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். :)//

ஃப்ளாஷ்பேக்கா? பாஸ், போய் 5,6 எபிசோட் ப‌டிங்க‌? இதை நான் வ‌ன்மையாக‌க் க‌ண்டிக்கிறேன்

கிளைமாக்ஸ்க்கு உதவுமோ?!!!//

இதெல்லாம் ஓவ‌ர் ஆமா. அவ்வ‌ள‌வு இன்டெலிஜன்ட்டா திங்க் பண்ற அளவுக்கு பெரிய‌ ஆள் நான் இல்லீங்க‌

*************************

Saran-DBA said...

enaku pidikala,

Araicha mavaiyae friend kooda thanni adikaren pervazhinu once again solliteenga.

Yarachum repeat ketteengala pa?

Think pannu mamu. Innum adhigama edhir pakkaromm.

Thanks,
Saravanan

Karthick said...

நண்பரே -

உங்கள் ப்ளாக் நல்ல இருக்கு. நான் வலைப்பூ உலகிற்கு புதியவன். ஒரு தொடர் கதை என் ப்ளோகில் எழுதுகிறேன்.
உங்கள் கருத்தை படித்துவிட்டு சொல்லவும்.
என் வலைபூ முகவரி:
http://eluthuvathukarthick.wordpress.com/

anujanya said...

கணேஷ், Excuse me. இங்க என்ன நடக்குது? அன்னிக்கு காந்தி சிலையருகில் பார்த்த போது ரொம்ப நல்ல பையனா தெரிஞ்சீங்க :)

அனுஜன்யா

கணேஷ் said...

ந‌ன்றி Saran-DBA!

enaku pidikala,// :(

Araicha mavaiyae friend kooda thanni adikaren pervazhinu once again solliteenga.// :( :(

Yarachum repeat ketteengala pa?// :( :( :(

Think pannu mamu. Innum adhigama edhir pakkaromm.//

உங்க‌ளின் நேர்மையான‌ பின்னூட்ட‌த்திற்கு ந‌ன்றி. எப்ப‌டியெல்லாம் மிர‌ட்டுறாய்ங்க‌ப்பா :(

*************************

ந‌ன்றீ Karthick

உங்கள் ப்ளாக் நல்ல இருக்கு. நான் வலைப்பூ உலகிற்கு புதியவன். ஒரு தொடர் கதை என் ப்ளோகில் எழுதுகிறேன்.//

தொட‌ர்ந்து வாசிக்கிறேன் :)

***************************

நன்றி அனுஜன்யா!

கணேஷ், Excuse me. இங்க என்ன நடக்குது? அன்னிக்கு காந்தி சிலையருகில் பார்த்த போது ரொம்ப நல்ல பையனா தெரிஞ்சீங்க :)//

நான் ந‌ல்ல‌ பைய‌ன்னு என்னிக்குமே சொன்ன‌தில்ல‌. அதெல்லாம் ச‌ரி, இப்ப‌ எதை வ‌ச்சி திடீர்ன்னு அந்த‌ கேள்விய‌க் கேட்டீங்க‌? ஒரு தொட‌ர்க‌தை எழுதுற‌து த‌ப்பா?

*************************

Related Posts with Thumbnails