சியாமளா-3: பியர்+புலம்பல் வித் முத்துவேல்

"ஹேய் முத்து, ஃப்ரீயா இருக்கியா? மதியம் வீட்டுக்கு வரமுடியுமா?"

"ஏன்டா, எனக்கு வேலை இருக்கு கணேஷ். நான் ஆஃபிஸ் போறேன்"

"ஃப்ரிட்ஜ்ல 6 பியர் பாட்டில் வச்சி இருக்கேன். அது ரொம்ப ச்சில்லுன்னு இருக்கு"

"மச்சி, நான் வேணும்னா 11 மணிக்கே வந்துடட்டுமா? சீக்கிரம் முடிச்சிட்டு சீக்கிரம் லஞ்ச் சாப்பிடலாம்"

"#@#@!@# ##*#@ சீக்கிரம் வந்து சேரு"

முத்துவேல், கணேஷ் வீட்டுக்கு வந்து சேர்வத‌ற்குள் ஒரு ஃப்ளாஷ்பேக். இவர்கள் ஆஃபிஸில் வேலை செய்யும் சியாமளாவைப் பற்றி பேசப் போகிறார்கள். சியாமளாவிற்கு கணேஷ் தான் மாப்பிள்ளை என்று தெரிந்ததும், தனியே கூப்பிட்டுபோய் கன்னாபின்னாவென கலாட்டா பண்ணிவிட்டாள். ஷாக்காகி போன கணேஷ், அவன் அம்மா அப்பாவிடம் குய்யோ முறையோ என‌ பேசி பார்த்தும், அவனால் கல்யாண பேச்சு வார்த்தைகளை நிறுத்த முடியவில்லை. அத‌னால் இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ அச‌ம்பாவித‌ங்களை பற்றியும், சியாமளா அட்டூழியங்களைப் பற்றியும் த‌ன் பள்ளிகாலம் முதல் சிநேகமாக இருக்கும் உயிர் ந‌ண்ப‌ன் முத்துவேலிட‌ம் புல‌ம்புவ‌தற்கு அவ‌னை அழைத்துள்ளான் க‌ணேஷ்.

ஓவர் டூ கணேஷ் வீடு. டைம் 11 A.M

"டேய் உள்ள‌ வா. நீ வ‌ர்ற‌த‌ மேல்வீட்டு மாமி பாத்துட்டாங்க‌ளா?"

"இல்ல‌டா, ஏன்?"

"அவ‌ங்க‌ளுக்கு நீ ரூமுக்கு வ‌ந்தாலே ச‌ர‌க்கு அடிக்க‌த் தான் வ‌ர்றீயோன்னு ச‌ந்தேக‌ம் வ‌ந்திருச்சி, அதான்"

"ச‌ரி ச‌ரி என்ன‌ மேட்ட‌ர்? சியாம‌ளா ஓவர் டார்ச்ச‌ர் ப‌ண்றாளா?"

"ஆஹா, நாம மனசுல நெனச்சத இவன் கரெக்ட்டா பேரோட சொல்றானே? எப்படி?" என்று ஆச்சர்யத்தில் புருவத்தை உயர்த்தியவன், "மச்சி, உனக்கு சியாமளாவை தெரியுமா?" கேட்டான்.

ரெண்டு பியர் ஃப்ரிட்ஜில் இருந்து எடுக்கப்பட்டது.

"தெரியுமாவா.. உன்னை மாதிரி புதுசா வந்தவங்க தவிர, சியாமளாவை தெரியாதவன் இந்த ஆஃபிஸ்ல ஒருத்தன் கூட இருக்க மாட்டான். செக்யூரிட்டிக்கு கூட தெரியும்னா பாத்துக்கோயேன்"

"ஏன் மச்சி, அவ்வளவு பெரிய ஆளா அவ?"

"போன NewYear Bash ஆஃபிஸ் பார்ட்டில, அவ டீம்ல ஒரு ஜூனியர் ஒருத்தன் தண்ணியடிச்சிட்டு ஓவரா சவுண்டு விட்டப்ப, ஓங்கி அவன் கன்னத்துல ஒரு அறை விட்டா பாரு. எல்லார் காதுலயும் 'ஒய்ங்ங்ங்ங்'ன்னு சவுண்ட் வந்துச்சி"

முத‌ல் பிய‌ரின் முத‌ல் சிப்பை உறிஞ்சிக் கொண்டிருந்த‌வ‌ன் ட‌ப்பென‌ த‌ரையில் பயத்துடன் வைத்துவிட்டு, க‌ன்ன‌த்தைத் தடவிப்பார்த்துக் கொண்டான்.

"என்ன‌டா சொல்ற‌.. த‌ண்ணிய‌டிக்குற‌து ஒரு குத்த‌மா?"

"ம‌ச்சி, ஸ்ட்ரெய்ட் ஃபார்வ‌ர்டு பொண்ணுங்க சிலர் பத்தி கேள்விப்ப‌ட்டு இருப்ப‌ல்ல.. அந்த‌ க்யூல‌ இவ‌தான் முத‌ ஆளு. அந்த அறை வாங்குன‌வ‌ன் ஒரு வார‌ம் ஆஃபிஸ் ப‌க்க‌மே வ‌ர‌ல‌. பேப்ப‌ர் போட்டு போயிட்டான்"

கேட்டுக் கொண்டே, க‌டுமையான‌ டென்ஷ‌னில் முக்கால் பிய‌ரைக் காலி ப‌ண்ணிவிட்டான்.

"வேற என்ன அவளைப் பத்தி ஹாட் நியூஸ்"

வாயில் தலைகீழாக கவிழ்த்தி குடித்துக் கொண்டிருந்தவன், பாதியிலே நிப்பாட்டி, "அவளை பத்தி வர்ற நியூஸ் எல்லாமே ஹாட் நியூஸ் தான். போன வருஷம் UK ஆன்சைட்ல இருந்தப்ப, பார்ட்டில மறுபடியும் ரகளை"

"ஏன் அங்கே யாரையும் அடிச்சிட்டாளா?" மொத்த பயத்தையும் கண்களில் தேக்கி கேட்டான்.

"யாரையும் அவ‌ அடிக்கல..அவ தான் ரெண்டு ரவுண்டு ஒயின் அடிச்சிட்டா. ஒரே ஆட்டம்"

"டேய், என்னடா சொல்ற"

"பின்ன என்ன? அவ போட்ட ஆட்டத்துல, ஈஃபிள் டவரே ஆட்டம் போட்டுச்சின்னா, பாத்துக்கோயேன்" பியர் வேலையைக் காட்ட ஆரம்பித்தது.

"அவ தண்ணி எல்லாம் அடிப்பாளா? என்னால நம்பவே முடியல"

"நம்பித் தான் ஆகணும். சரி இதையெல்லாம் நீ ஏன் இவ்வளவு சீரியஸா கேட்குற?"

"அந்த நல்ல பொண்ண கட்டிக்கப் போறவன் நான் தான்"

முழுதாக ஒரு நிமிடம் முத்துவேல், கணேஷை வெறித்து பார்த்தான். பலவித உணர்ச்சிகள் அந்த பார்வையில் கொட்டியது, கூடவே அவன் திறந்த அடுத்த‌ பியரும்.

"உனக்கு ஆறுதல் சொல்றதுக்கு கூட எனக்கு வார்த்தைகள் இல்லடா. இந்த 25 வருஷத்துல இப்ப தான் எனக்கு உன்ன பாத்தா பாவமா இருக்கு. "

"நீ வேற ஏன்டா, கூட கொஞ்சம் பீதியக் கெளப்புற‌? இத நிப்பாட்டுறதுக்கு வீட்டுல கத்துனேன், கதறுனேன். யாருமே சீண்டல. உன்கிட்ட புலம்பலாம்ன்னு வந்தா, அதுக்கு அவிங்களே பரவாயில்ல" நிறுத்தி நிதானமாக விட்டத்தை வெறித்தபடி பேசினான்.

"ஃப்ரீயா விடுடா. ஆனா ஒண்ணு, அடுத்த வாரம் சனிப்பெயர்ச்சி இந்த உலகத்துல உனக்கு மட்டும் தான் நடக்க போகுதுன்னு நெனைக்கிறேன். கணேஷ் Weds சியாமளா, குட் காம்பினேஷன்"

"மூஞ்சியிலே குத்துனேன்னு வச்சிக்கோ, மவனே..." டென்ஷனாகி பின் பொறுமையாக "கடுப்பை கெளப்பாத, முத்து. ஏதாவது ஐடியா கொடுத்து அந்த கண்டத்துல இருந்து காப்பாத்துடா" ரெண்டாவது பியர் ஆரம்பம்.

"ஒண்ணும் இல்ல. நேரா போய் அவகிட்ட பேசிடு. முடிஞ்சா கால்ல விழுந்துடு"

"அதெல்லாம் பேசி பாத்துட்டேன். பேசுனா,I Love You சொல்றா"

"ஹா ஹா ஹா" விழுந்து விழுந்து சிரித்தான். "மச்சி, உன்னையெல்லாம் ஒரு பொண்ணு திரும்பி பாக்குறதே பெரிய விஷயம். ஒருத்தி உன்கிட்ட வந்து I Love you சொன்னா, அதுவே எட்டாவது உலக அதிசயம்"

"த்தூ.. சனியனே, உன்கிட்ட போய் கேட்டேன் பாரு..என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு"

"என்ன?"

"அவள‌ நேர்ல போய் பார்த்து, 'அசிங்க அசிங்கமா திட்டுவேன்.. இல்லன்னா நான் தம், தண்ணி எல்லாம் அடிப்பேன், ஏற்கெனவே ஒரு பொண்ண லவ் பண்றேன், நாங்க அடுத்த வாரம் ஓடிப் போக போறோம்' இப்படி ஏதாவது சொல்லி அவளை டென்ஷன் ஆக்கி ஒரு பயம் உண்டாக்குவேன், எப்படி நம்ம ஐடியா?" பெருமிதமாக அவனை பார்த்தான். ரெண்டாவது பியர் முடிகின்ற தருவாயில் உள்ளது.

"குட் ஐடியா" ஏளனமாக சொன்னான்.

"ச்சே, இப்ப நான் இருக்கற டென்ஷன்ல, அவ மட்டும் என் கையில சிக்குனா, அவளை ஆஃப்பாயில் போட்ருவேன்"

"மச்சி, வாமிட் வந்தா பாத்ரூம் போயிடு"

"அவளுக்கு உடம்பெல்லாம் கொழுப்புடா. அதான் அன்னைக்கு என்னை லஞ்ச்க்கு கூப்பிட்டு போய் கலாசிட்டா.. அவளுக்கு ஒரு நாள் இருக்கு?" பியர் உச்சி மண்டையில் டான்ஸ் ஆடியது.

"?!?!"

"இல்ல. ஐ மீன், அவ ஓவர் திமிர் பிடிச்சவன்னு சொல்ல வந்தேன்"

காலிங் பெல் அடித்தது.

"டேய், எல்லாத்தையும் எடுத்து உள்ள வை. மாமி வந்துட்டாங்கன்னு நெனைக்கிறேன். அமாவாசை, கிருத்திகைன்னா பாயாசம், வடைன்னு ஏதாவது இம்சை பண்றதே இவங்களுக்கு வேலையா போச்சி"

30 செகண்டில் இடத்தை க்ளீன் பண்ணிவிட்டார்கள். கணேஷ் கதவை பாதி திறந்தான்.

யாரையும் காணவில்லை. முழுதாகத் திறந்தான். முழுதாக நின்றிருந்தாள்.

"சியாமளா"

*************************
கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10

*************************

16 comments:

லெமூரியன் said...

ஹ ஹ ஹ ஹ......பாவம் கணேஷ்..! எப்டி சமாளிக்கப்போறானோ??! :-) semmayaana oru twist vechirukkeenga pola teriyuthe!

Rajalakshmi Pakkirisamy said...

//semmayaana oru twist vechirukkeenga pola teriyuthe!
//

ippidi thaan ellorum emanthu poranga

Rajalakshmi Pakkirisamy said...

//"அவளுக்கு உடம்பெல்லாம் கொழுப்புடா. அதான் அன்னைக்கு என்னை லஞ்ச்க்கு கூப்பிட்டு போய் கலாசிட்டா.. அவளுக்கு ஒரு நாள் இருக்கு?" பியர் உச்சி மண்டையில் டான்ஸ் ஆடியது.

"?!?!"

"இல்ல. ஐ மீன், அவ ஓவர் திமிர் பிடிச்சவன்னு சொல்ல வந்தேன்"//

ippidi pesurathu kaathila vilunthathu innoru kannatha thadavikkanum

☀நான் ஆதவன்☀ said...

கலக்கல்...வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் பார்ட் :-)

கலையரசன் said...

சியாமளாதான் மாடிவீட்டு ஆன்ட்டியோ?

புலவன் புலிகேசி said...

நல்லா இருக்குதுங்கோ.....அடுத்தப் பகுதி எப்போ???

கணேஷ் said...

நன்றி லெமூரியன்!

ஹ ஹ ஹ ஹ......பாவம் கணேஷ்..! எப்டி சமாளிக்கப்போறானோ??!//

அவ‌ன் ரொம்ப‌ பாவ‌ங்க‌ :( :(

:-) semmayaana oru twist vechirukkeenga pola teriyuthe!//

இது வேற‌யா?

******

நன்றி Rajalakshmi Pakkirisamy

//semmayaana oru twist vechirukkeenga pola teriyuthe!
//

ippidi thaan ellorum emanthu poranga //

நீங்க‌ளாவ‌து க‌ரெக்டா சொன்னீங்க‌ளே :)

//ippidi pesurathu kaathila vilunthathu innoru kannatha thadavikkanum

இன்னொரு கன்னத்தையும் காட்ட தயாரா இருப்பான் கணேஷ் :)

******

நன்றி ☀நான் ஆதவன்☀

கலக்கல்...வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் பார்ட் :-) //

இப்ப‌டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே மூணாவ‌து பார்ட் வ‌ரைக்கும் வ‌ந்தாச்சு. இன்னும் எவ்வ‌ள‌வு இருக்கோ? :(

******

நன்றி கலையரசன்!

சியாமளாதான் மாடிவீட்டு ஆன்ட்டியோ? //

மாடிவீட்டு ஆன்ட்டி சியாம‌ளா மாதிரி அழ‌கா இருக்க‌ மாட்டாங்க‌? :‍)

*******

நன்றி புலவன் புலிகேசி!

நல்லா இருக்குதுங்கோ.....அடுத்தப் பகுதி எப்போ??? //

மேலே சொன்ன‌ ப‌தில் தான் உங்க‌ளுக்கும். இப்ப‌டி உசுப்பேத்தி...

*******

Rajalakshmi Pakkirisamy said...

//
மாடிவீட்டு ஆன்ட்டி சியாம‌ளா மாதிரி அழ‌கா இருக்க‌ மாட்டாங்க‌? :‍)//

story la yavathu Ganesh ku azhagana ponnunga kidaikatum..

//நல்லா இருக்குதுங்கோ.....அடுத்தப் பகுதி எப்போ???//

Ganesh, innuma oor ulagam unna nambuthu..

கணேஷ் said...

story la yavathu Ganesh ku azhagana ponnunga kidaikatum..//

ஏன் இந்த கொலைவெறி?

Ganesh, innuma oor ulagam unna nambuthu..//

அவ்வ்வ்..அதே சந்தேகம் தான் எனக்கும்

Anonymous said...

Boss... UK la enge Eiffel Tower... Boss... But it does not stop any way in enjoying this story... :)...

ஷாலினி said...

கணேஷ் Weds சியாமளா, குட் காம்பினேஷன்

-உங்க கதைல இது நடக்குமா???
நீங்க சொன்ன மாதிரி என்னோட TERROR name-அ மாத்திட்டேன்! :)

கணேஷ் said...

நன்றி Anonymous
Boss... UK la enge Eiffel Tower... Boss... But it does not stop any way in enjoying this story... :)... //

ஹி ஹி.. நீங்க‌ ரொம்ப‌ என்ன‌ பாராட்டுறீங்க‌!

******

நன்றி ஷாலினி!

கணேஷ் Weds சியாமளா, குட் காம்பினேஷன்

-உங்க கதைல இது நடக்குமா???
நீங்க சொன்ன மாதிரி என்னோட TERROR name-அ மாத்திட்டேன்! :) //

உங்க‌ உண்மையான‌ பேர் தான் என்ன‌? பொண்ணுங்க‌ பேர்ல‌ க‌மெண்ட் போட்டு என்னை பெரிய‌ ஆள் ஆக்குறீங்க‌ :)

*******

ஷாலினி said...

//உங்க‌ உண்மையான‌ பேர் தான் என்ன‌? பொண்ணுங்க‌ பேர்ல‌ க‌மெண்ட் போட்டு என்னை பெரிய‌ ஆள் ஆக்குறீங்க‌ :) //

கணேஷ், To be frank நீங்க நம்பினாலும் நம்பலனாலும் என்னோட உண்மையான பெயரே ஷாலினி தான். Anyway, உங்களோட blogs எல்லாமே சூப்பர்!!! வாழ்த்துக்கள்.

கணேஷ் said...

நன்றி ஷாலினி!

கணேஷ், To be frank நீங்க நம்பினாலும் நம்பலனாலும் என்னோட உண்மையான பெயரே ஷாலினி தான். Anyway, உங்களோட blogs எல்லாமே சூப்பர்!!! வாழ்த்துக்கள்.//

அப்ப‌டியா? உங்க‌ இ‍‍ மெயில் ஐடி என்ன‌? அப்ப‌ தான் நான் ந‌ம்புவேன் :)

ஊர்சுற்றி said...

படிச்சிட்டே இருக்கேன். இடையில ஒரு சின்ன பக்.
இந்த போஸ்ட் Pagination 4th page link உடைஞ்சிருக்கு. :)

http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_12.html
http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post-12.html

சரிபண்ணுங்க. :)

கணேஷ் said...

ஊர்சுற்றி said...
படிச்சிட்டே இருக்கேன். இடையில ஒரு சின்ன பக்.
இந்த போஸ்ட் Pagination 4th page link உடைஞ்சிருக்கு. :)//

மாத்திட்டேன். தேங்க்ஸ் தலைவா :)

Related Posts with Thumbnails