கவுதம்-சிம்பு ஷூட்டிங்கில் தகராறு - ‍ஜாலி கூத்து


"விண்ணைத் தாண்டி வருவாயா" பட ஷீட்டிங்கில் டைரக்டர் கவுதம் மேனனுக்கும், சிம்புவுக்கும் நடுவே பிரச்சினை ஆகி விடுகிறது. அதை தீர்க்க நடிகர் சங்கத்தில் சிம்பு புகார் செய்கிறார். இந்த பிரச்சினையை தீர்க்க நடுவராக சாலமன் பாப்பையா வந்துள்ளார்.

சாலமன் பாப்பையா: வணக்கம் அன்பு மக்களே! நல்லா இருக்கீங்களா? வீட்டுல எல்லாரும் சவுக்கியம் தானே!

(அசிஸ்டென்ட் ஓடோடி வந்து காதில் கிசுகிசுக்கிறார்.)

அசிஸ்டென்ட்: அய்யா, இது சன்டிவி பட்டிமன்றம் இல்ல.. உங்கள நீதிபதியா உக்கார வச்சிருக்காய்ங்க.. நியாபகம் இருக்கட்டும்..

சா.பா: (சரிப்பா சரிப்பா) என்னய்யா, ஆகாவளி பசங்க ரெண்டு பேரும் கூட்டு சேரும்போது அப்பையே நெனச்சேன்.. ஏதாவது முட்டிகிடுவீகன்னு.. என்னதான்ய்யா பிரச்சினை..

கவுதம்: ஆக்சுவலி, இது வந்து ரொம்பான்டிக் மெல்ட்டிங் லவ் ஸ்டோரி.. அப்படியே ஐஸ்கீரீமா உருகுற மாதிரி ஷேப் பண்ணி வச்சிருக்கேன்.. அப்புறம் அப்புறம் (மறந்து போச்சே).. யெஸ்... ஐ லவ் மை டாடி ஸார்..

சா.பா: ஆஹாஹா..இதுவும் உங்க அப்பாவ பத்தின படமா.. (பயந்துபோய், வழுக்கை தலையை கர்ச்சீப்பால் துடைத்துக் கொள்கிறார்) அதுல என்ன பிரச்சினை?

கவுதம்: ஸோ.. நாங்க ஒரு ப்ரோக்கன் போட்ல ஒரு லாங் ஷாட்ல, ஏரியல் வியூவ்ல ஷாங் ஷூட் பண்ணிக்கிட்டு இருந்தோம். அப்ப வந்து.....

(நடுவே சாலமன் பாப்பையா குறுக்கிடுகிறார்)

சா.பா: தம்பீ, நான் 30 வருசமா நான் தமிழ் பேராசிரியரா வேலை பாக்குறேன்ப்பா.. ஆனா நீ பேசுற தமிழ் எனக்கு புரிய மாட்டேங்குது.. கொஞ்சம் புரியிற மாதிரி பேசுப்பா... ஏரில்ல‌ என்ன‌ ஆச்சு? யாரும் விழுந்துட்டாங்க‌ளா???

க‌வுத‌ம்:(ஷிட் என்று முன‌கிக் கொண்டே)அதெல்லாம் ஒண்ணும் இல்ல‌ சார்... அத‌ விட்ர‌லாம்.. அப்ப‌ தான் நான் நோட்டீஸ் ச்சே.. க‌வ‌னிச்சேன்.. இவ‌ரு நான் கொடுத்த‌ காஸ்ட்யூம் போடாம இவ‌ர் இஷ்ட‌த்துக்கு போட்டு வ‌ந்திருக்கார்..

சா.பா: அப்ப‌டியா.. த‌ப்புதான‌ய்யா.. டைர‌க்ட‌ர் சொல்ற‌த‌ கேட்க‌ணுமில்லையா.. நான் கூட‌ இப்ப‌டித்தேன் 'சிவாஜி' ஷீட்டிங்க்ல‌.. ச‌ரி வேண‌ம்..பேச‌க்கூடாதுன்னு சொல்றாங்க‌.. ஏம்பா சிம்பு.. நீ ப‌ண்ணது த‌ப்பு தானேய்யா.. என்ன‌ சொல்ற நீ..

சிம்பு:(விட்ட‌த்தை வெறித்து பார்த்த‌ப‌டி) ரெண்ட‌ரை வ‌ருஷ‌மா த‌னியா தான் இருக்கேன் ஸார்... வேல‌ன்டைன்ஸ் டே கொண்டாட‌வே இல்ல‌.. நான் ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ன் ஸார்..

சா.பா: அட‌ கிறுக்குப்பைய‌ புள்ள‌.. எந்நேர‌மும் ம‌ந்திரிச்சி விட்ட‌ கோழி மாதிரியே திரியுறீயேய‌ப்பா.. என்ன‌ ஆச்சி.. யாரும் ப‌த்திரிக்கைக்கார‌ங்க‌ வ‌ர‌ல‌.. நீ ப‌ண்ண‌து த‌ப்பு தான‌...

சிம்பு: ஐயா, நீங்க‌ சொல்ற‌து உண்மைன்னு வ‌ச்சிக்கிட்டா கூட‌, பைய‌ன் முன்னால‌ அப்பாவ‌ கிறுக்க‌ன்ன்னு திட்டுற‌து க‌ஷ்ட‌மா இருக்கு... ப்ளீஸ் இனிமே சொல்லாதீங்க‌..

சா.பா: (அலறியடித்துக் கொண்டு) அட‌ ஏம்பா நீ வேற.. அவர கோர்த்து விடுற..உன்னைய‌வே ச‌மாளிக்க‌ முடிய‌ல‌.. இதுல‌ உங்க‌ப்பாவ‌ வேற‌ய‌.. தெரியாம‌ சொல்லிட்டேன்.. பிர‌ச்சினைக்கு வா.. நீ ப‌ண்ண‌து த‌ப்பு தான‌...

சிம்பு: ஐயா, ப்ளீஸ்.. ஷீட்டிங்க்கு வ‌ந்த‌ உட‌னேயே என் வாயில‌ பிளாஸ்திரி போட்டு ஒட்டிடுறாரு.. டையலாக் பேச மட்டும் ஓபன் பண்றாரு.. எந்த‌ டைர‌க்ட‌ரும் என்னை இப்ப‌டி ட்ரீட் ப‌ண்ண‌தில்லை.. ஓ.கேன்னு நான் பொறுத்துக்கிட்டாலும், நேத்து இவ‌ர் ப‌ண்ண‌து கொடுமையின் உச்ச‌க‌ட்ட‌ம் ஐயா.. ப்ளீஸ்.. அப்படி என்ன ட்ரெஸ் போட்டேன்னு அவரையே கேளுங்க.. நான் அழுதுக்குறேன்.. அழுகை அழுகையா வ‌ருது..(ம் ம் என்று தேம்பி தேம்பி அழுகிறார்)

சா.பா: என்ன‌ய்யா நீ குட்டி ஒண்ணாவ‌து கொழ‌ந்த‌ க‌ண‌க்கா அழுற‌.. ஏம்பா க‌வுத‌ம், சிம்பு அப்ப‌டி என்ன‌ தான் நீ சொன்ன‌ ட்ரெஸ் போடாம‌ வேற‌ போட்டு வ‌ந்தாரு..

க‌வுத‌ம்: வெல்ல்... நான் கிரீன் க‌ல‌ர்ல‌ இன்ன‌ர்ஸ் போட்டு வர‌ச்சொன்னேன்.. ஆனா இவ‌ர்..

சா.பா: பட்டாப்பெட்டி டவுசர தான சொல்ற.. யோவ்.. அதையெல்லாம நீ எப்ப பாத்த‌.. அது எங்கேயா கேம‌ராவுல‌ வ‌ர‌ப்போகுது?

சிம்பு: (தேம்பிக் கொண்டே) நான் அப்ப‌வே சொன்னேன்ல‌..

க‌வுத‌ம்: நோ ஸார்... ஆர்ட்டிஸ்ட் என்னை கேட்காம‌ எந்த‌ ட்ரெஸ்ஸூம் போட‌க்கூடாது. இப்ப‌டி தான் போன‌ ப‌ட‌த்துல‌ சூர்யா கூட‌ ஒரு சீன்ல‌..

சா.பா: போதும் போதும் நிறுத்துயா.. இந்த‌ சின்ன‌ப்புள்ளைங்க‌ விவ‌கார‌த்துல‌ த‌லையிடுறீங்க‌ளே, பாத்து சூதான‌மா போயிட்டு வாங்க‌ன்னு என் பொண்டாட்டி சொன்னா.. அப்ப‌வே நென‌ச்சேன்யா.. உங்க‌ளுக்கெல்லாம் நான் ஒண்ணும் சொல்ல‌ முடியாது.. (என்று அல‌றிய‌டித்துக் கொண்டு ஓடுகிறார்)

**********************

முத்தம்..முத்தம்..முத்தம்..


என்மேல் ஏன் கோபம்?
கடந்த முறை விட்டு சென்ற‌
காயங்கள் இன்னும் ஆறவில்லை
என் உதடுகளில்!

காதலின் வடு,
ஆறிவிட வேண்டாம்
என துடிக்கிறது என் இதயம்!
மீண்டும் முயற்சிக்கலாம்,
ஆறிவிட வேண்டும்
என துடிக்கிறது உன் இதயம்!

போன இரவு வரை
உன் வன்மம் தெரியவில்லை
ஈர உதடுகளில் தான்
முத்தமாக மொத்தமாக‌
தேங்கியுள்ளது என!

நெருப்பு கக்கும் உதடுகளை
நாவால் அடிக்கடி ஈரப்படுத்திக்
'கொள்'
நான் வ‌ரும் வரை
பின்னர் என்னைக்
'கொல்'!

மறந்துவிட்டோம்
மீண்டும் முத்தமிடலாம்
என் உதடுகளில் தேங்கிய‌
உன் உயிரையும்
உன் உதடுகளில் தேங்கியுள்ள‌
என் உயிரையும் மீட்க!

எமதர்மா, என் உயிரை
எடுக்க பாசக்கயிறு
தேவையில்லை
ஒரே ஒரு முறை
இவளை
முத்தமிடச் சொல்!
கவனம் தேவை தர்மா,
மீண்டும் இவளை
முத்தமிட அனுமதித்தால்
மீட்டு விடுவாள் என் உயிரை!

துடிப்பதை மறந்த இதயம்
முதலுதவி தேவை
அடக் கடவுளே,
அப்போதும்
அவள் இதழால் தானே
மூச்சு அளிப்பாள்!

முத்தத் தீவிரவாதி நீ,
காயமின்றி முத்தமிடலாம்
என்பது தானே
முத்த உடன்படிக்கை,
நீ மீறிவிட்டாய்
நான் முத்தம் இடுகிறேன்
நீ முத்தம் எடுக்கிறாய்!

கண்களின் கோளங்கள்
கன்னாபின்னாவென சுழல்வதும்
இதயத்தை சுத்தியலில்
யாரோ அடிப்பதும்
கை, கால்களின்
எலும்புகள் உதறுவதும்
நுரையீரல் காற்றுக்காக
துடிப்பது வெளியே
கேட்பதும் போதும்
நான் செத்துவிடுவேன்!
தயவுசெய்து
நீ முத்தமிடுவதை நிறுத்து.

சண்டையிட்டுக் கொள்ளலாம்
என்று இருந்தால்
மூன்றாம் உலகப் போரே
ஆரம்பித்து இருக்கும்,
உதடுகளின் மீது மற்ற பாகங்கள்!

****************
டிஸ்கி: மொத்த‌ம் எத்த‌னை முத்த‌ம் என்று சொல்ப‌வ‌ர்க‌ளுக்கு, இந்த‌ க‌விதையை(இது கவிதையா? என்று யாரும் கேட்காதீர்கள், ப்ளீஸ்) காப்பிரைட் எடுத்துக் கொண்டு காத‌லியிட‌ம் சீன் போடுவ‌த‌ற்கு அனும‌தி வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.

**************

சில‌ பிர‌ப‌ல‌ங்க‌ளின் வீட்டில் - க‌ற்ப‌னை

வீட்டு டைனிங் ஹாலில் ராதிகாவும், ச.ம.க தலைவர் சரத்குமாரும்

ராதிகா: என்னங்க.. இது லோக்சபா எலெக்சன்.. 40 தொகுதி தான். ரெண்டு தொகுதில நாம நின்னுடலாம். மிச்சம் 38 தொகுதிக்கும் எப்படியாவது ஆள பிடிச்சிடலாம்னு வச்சிக்கோங்க, இன்னும் ரெண்டு வருஷத்துல ஸ்டேட் எலெக்சனுக்கு 234 பேரப் பிடிக்கணுமே, என்ன பண்ண போறீங்க..

சரத்: அதை வேற நீ ஏன்மா நியாபகப்படுத்துற.. யாராவது மாட்டுவாங்க.. ஒண்ணு பண்ணலாம்.. வேணும்னா, நம்ம பொண்ணையும் ஏதாவது ஒரு தொகுதில நிப்பாட்டிடலாமா..

ராதிகா: அவளுக்கு இன்னும் ஓட்டு போடுற வயசே வரலைங்க..

சரத்: ஓ.. ஆமாம்ல.. ஒண்ணு பண்ணலாம்,.. உன்னோட 'முன்னாள்'களை கூப்பிட்டு வா.. நான், என்னோட 'முன்னாள்'களையும் கூப்பிட்டு வர்றேன். எப்படியாவது இந்த எலெக்சனை சமாளிச்சிடலாம்.

ராதிகா: நல்ல ஐடியாங்க.. டோட்டலா, எப்படியும் 40 தேறும்.

சரத்: ஆமா, ஆமா.. அப்படியே நக்மாவும் சீட்டுக்காக ரொம்ப ஆசைப்படுது.. காங்கிரஸ்காரங்க வேற அசிங்கபடுத்திட்டாங்க.. கொடுத்திடலாம்.

ராதிகா: (அப்படியே சீட்டுக்கு கீழே குனிந்து கால்களைப் பார்க்கிறார்.)

**************

(பிரஸ் மீட் வீடியோ, நெட்டில் உலாவுவதை நினைத்து குப்புறப் படுத்து குமுறிகொண்டிருந்தார், இளைய தளபதி)

ஃபோன் அடிக்கிறது. அவர் மனைவி சங்கீதா எடுக்கிறார்.

விஜய்: யார் பேசுறது?

சங்கீதா: விகடன்ல இருந்து கால் பண்ராங்க.. அந்த வீடியோ பத்தி பேட்டி எடுக்கணுமா? வர சொல்லட்டுமா?

விஜய்: (டென்ஷனாகி) நான் அமெரிக்கா போயிட்டேன்னு சொல்லிடு.

மறுபடியும் ஃபோன்.

சங்கீதா: டைரக்டர் தரணி கால் பண்ணியிருக்கார். நெக்ஸ்ட் மூவி பத்தி நல்ல ஸ்டோரி வச்சிருக்காராம். டைட்டில் கூட சிட்டுக்குருவியாம்.

விஜய்: (மெர்சலாகி, ஒரு குருவியே தாங்கலை, இப்ப இன்னொண்ணா?) நான் அடுத்த படம் பண்ண இன்னும் நாள் ஆகும். இப்ப வரவேணாம்னு சொல்லிடு.

சிறிதுநேரம் கழித்து மறுபடியும் ஃபோன்.

சங்கீதா: வில்லு படத்தோட 100வது நாள் விழாவுக்கு நீங்க வரணுமாம். ஐங்கரன்ல இருந்து கால்.

விஜய்: ஓ.. படம் வந்து 100 நாள் ஆச்சா... சரி.. லைன்லயே இருக்க சொல்லு.. நான் வர்றேன்.

சங்கீதா: என்னங்க.. அதுக்கு முன்னால, நீங்களும் டைரக்டர் பிரபுதேவாவும் சேர்ந்து ஒரு பிரஸ்மீட் அரேஞ்ச் பண்ணனுமாம்.

விஜய்: என்னது? பிரஸ் மீட்டிங்கா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... நான் ஊர்லயே இல்லைனு சொல்லு..

விஜய் அழுதுவடிந்து கொண்டு, இமயமலை போகலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் டாடி எஸ்.ஏ.சி கால் பண்ணுகிறார்.

விஜய்: டாடி, யாருமே சரியில்லை. எனக்கு இன்டஸ்ட்ரிய பாத்தாலே பயமா இருக்கு.

எஸ்.ஏ.சி: இதுக்கெல்லாம் கவலைப்படக்கூடாது விஜய். பேசாம என் டைரக்சன்ல ஒரு படத்துக்கு கால்ஷீட் கொடேன். நல்லா இருக்கும்..

டொக்.

விஜய், இமயமலைக்கு போக கிழிந்துபோன வேட்டி, சட்டையுடன், கூலிங்கிளாஸை பேக் பண்ணிக் கொண்டு இருந்தார்.

***********

பா.ம.க தலைவர் ராமதாஸ் வீட்டில், இரண்டு வேலையாட்கள். ஒருவன் புதிய ஆள். மற்றொருவன், பழைய ஆள்

பு.ஆள்: அண்ணே, ஏன்னே வெளில பச்சைக் கலர் குவாலிஸும், மஞ்சள் கலர் அம்பாசிடரும் நிக்குது..

ப.ஆள்: டே.. வேலையப் பாருடா..

சிறிது நேரம் கழித்து,

பு.ஆள்: அண்ணே, ஏன்னே, அய்யா ஷோபால மஞ்சள் கலர் பொன்னாடையும், பச்சைக் கலர் சால்வையும் பார்சல் பண்ணி இருக்கு?

ப.ஆள்: டே.. நீ அடி வாங்கித் தான் போக போற..

பு.ஆள்: எதுக்கு அண்ணே, பழுத்த மாம்பழம் ஒரு கூடையும், மாஸா ஒரு லிட்டர் பாட்டில் அஞ்சும் தனிதனி பார்சலா இருக்கு?

ப.ஆள்: (தனியா கூப்பிட்டுபோய்) டே.. கோமுட்டி தலையா..இன்னைக்குதான் அய்யா, கூட்டணி பத்தி முடிவெடுக்க‌ போறாரு.. இன்னும் குழ‌ப்ப‌மா இருக்குறார்னு நெனைக்கிறேன். நீ வேற‌ என்கிட்ட‌ கேட்ட‌ மாதிரி வேற‌ யார்கிட்ட‌யும் கேட்டுடாத‌... அடிய‌ போட்டுருவாய்ங்க‌..

ராம‌தாஸ்: த‌ம்பி, இங்க‌ வா.. ரெண்டு விர‌ல்ல‌ ஒண்ண‌ தொடு..

பு.ஆள்: அய்யா.. எதுக்க்.. எதுக்குங்குய்யா..

ராம‌தாஸ்: ஒண்ணும் இல்ல‌ப்பா.. ப‌ரவாயில்ல‌.. ச்சும்மா தொடு..

பு.ஆள்: (ஆட்காட்டி விர‌லைத் தொட‌)

ராம‌தாஸ்: டேய்.. யாருடா அங்க‌.. ப‌ச்சைக்க‌ல‌ர் குவாலிஸ‌ ரெடி ப‌ண்ணு..

பு.ஆள்: (அட‌க் கொடுமையே.. இதுக்கு தான் தொட‌ சொன்னாரா.. என்ன‌ கொடுமை சார் இது!!????)

****************

பார்.ரசி. யாவரும் நலம், அருந்ததீ, கிங்க்ஸ், சானியா


யாவரும் நலம். சத்யம் தியேட்டரின் குளிரிலும் கொஞ்சம் வேர்த்தது உண்மை. தியேட்டர்க்கு உள்ளே செல்லும் போதே நம் ஆறாவது அறிவை டோர்ஸ்டெப்ஸில் வாங்கிக் கொண்டு தான் உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள். ஆனால் யாரையும் ஏமாற்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பார்க்கும் நம் கண்கள் தான் நம்மை ஏமாற்றிவிட்டது. டாக்டரை காட்டும் எல்லா சீனிலும், அவருடைய செத்துப் போன தம்பியுடைய ஃபோட்டோ பேக்டிராப்பிலும், ஆஸ்பிட்டலில் பெரிய சைஸ் சிலையும் வைத்து இருந்த போதிலும், அந்தந்த சமயங்களில் வேறெதிலும் நம் கான்சென்ட்ரேஷன் போகவிடாமல் கொண்டு போனது தான் படத்தின் மெகாசைஸ் ப்ளஸ்.

போதாக்குறைக்கு, நம்முடைய வீக்கான ஹார்ட்டை இன்னும் வீக்காக்கிறது பி.சி.ஸ்ரீராமின் கேமரா. நாய் வீட்டுக்குள் வராமல் அடம்பிடிக்கும் காட்சியில், நம்முடைய டென்ஷனையும் மீறி, கேமராவை பென்டுலம் மாதிரி ஆட்டுவதிலேயே பாதி கிலி பிடிக்கிறது. சவுண்ட் சில இடங்களில் ஓவர் நாய்ஸ் என்று தான் சொல்ல வேண்டும். டி.வி சீரியலின் க்ளைமேக்ஸில் மாதவனைக் காட்டும்போது, ஆன்ஸ்க்ரீன் மாதவனை விட நமக்கு தான் ஷாக் அதிகம். போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, சீரியல் கேரக்டர் என்ன ஆச்சி என வரும் டென்ஷன் ரசிக்க முடிகிறது.

ஆனால் படத்தின் க்ளைமேக்சில், டி.வி லைவ்வாக டாக்டருடன் பேசிக் கொள்ளும்போது டென்ஷனையும் மீறி வாய்விட்டு சிரிக்க முடிகிறது. ஸாரி, அந்த இடத்தில் அவர்கள் பயமுறுத்த தவறிவிட்டார்கள்.

சிக்கன் தந்தூரி, சிக்கன் 69 என்று காமசூத்ராவின் கோட் வேர்ட்ஸ் யாருக்கும் புரியவில்லை என்றால் டாக்டர் மாத்ரூபூதத்தின் தம்பி டாக்டர் நாராயணரெட்டியிடம் சென்று செக் பண்ணிக் கொள்ளவும்.
சில கொஸ்டின்ஸ்:

1. டி.வி.சீரியலில் வருபவர்கள் அனைவரும் செத்துப் போனவர்கள் தான் என்றால், அதில் உயிருள்ள மாதவன் வருவது எப்படி?

2. அந்த மனநிலை பாதிக்கப்பட்டவன், தெளிவாக டாக்டரைக் குறிப்பதற்கு ஹாஸ்பிட்டல் மார்க்கை + சுவரெங்கும் பூசும் அளவிற்கு அறிவாளி என்றால் அதை யாரிடமாவது அட்லீஸ்ட் சைகையிலாவது தெரிவித்து இருக்கலாமே?

3. ஹிண்டு பேப்பரில் தமிழில் நிகழ்ச்சி நிரல், வீட்டில் யாரும் டி.வி. சீரியலின் காட்சிகள் வீட்டோடு ஒத்துப்போவதை கண்டுகொள்ளாதது, மாதவனைத் தவிர என்பதை அனைவரும் சொல்லிவிட்டார்கள்.

()

ரெண்டு நாளாக சென்னையில் பெரும்பாலான இடங்களில், கிங்க்ஸ் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சிகரெட் 4 ரூபாய் 50 பைசா. அடுத்த வாரத்தில் இருந்து விலையை கூட்டப் போவதால், இப்போது இருந்தே செயற்கை பற்றாக்குறையை சேட்டுக்கள் ஏற்படுத்துவதாக ஒரு கடைக்காரர் ரொம்ப ஃபீல் பண்ணினார்.

()

இந்த வீக் எண்டில் உருப்படியான படம் பார்த்தாச்சு. அப்படியே "அருந்ததீ"யும் பார்த்துவிடலாம் என்று நேற்று போனோம். நான் பார்த்தது மட்டும் என்னுடைய சொந்த தியேட்டராக இருந்தால், தியேட்டர் ஸ்கிரீனைக் கிழித்து இருப்பேன். ஆனால் பார்த்தது ஆராதனா தியேட்டரில். எப்படி தான் இந்த படத்தை ஆந்திரா மக்கள் 100 நாளுக்கு மேல் ஓட்டினார்களோ. சத்தியாமாக புரியவில்லை.

ரத்தம், ரத்தம், ரத்தம். படம் முழுவதும் ரத்த ஆறு ஓடுகிறது. ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும், வில்லன் ஆவி அடித் தொண்டையில் இருந்து "அடியே அருந்ததீதீதீதீதீ...." என்று கத்தித் தொலைக்கிறது. ஒரே ஆறுதல், அனுஷ்கா. முதல் பாடலில் கேமரா, அப்படியே இடுப்பில் இருந்து கழுத்துவரை ஊர்ந்து செல்கிறது. இடையிடையே கேமராவை ஃபிரீஸ் பண்ணினார்கள்.

லாஜிக் அப்படின்னா என்ன என்று கேட்பார்கள் போல? ஸ்டாப். இந்த படத்தை பற்றி இவ்வள‌வு எழுதியதே, ஓவர். இந்த படத்தை நினைத்தாலே, எனக்கு பி.பீ எகிறுகிறது. இதில் படம் ஆரம்பிக்கும் முன் இராமநாராயணின் டிஸ்கி வேறு, "மூடநம்பிக்கை உண்டு என்ற கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை".

அடப்போங்கப்பா..

()

இன்டியன்வெல்ஸ் ATP டென்னிஸில் ஃபெடரர், அன்டி முர்ரேவிடம் செமிஃபைனலில் தோற்றுவிட்டார். நடால் வழக்கம்போல் ஃபைனலுக்கு முன்னேறிவிட்டார். நடால் தான் நெக்ஸ்ட் சாம்பியன், யாராலும் தோற்கடிக்கமுடியதவர். எப்படியாவது இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் வாங்கி பீட் சாம்ப்ராஸ் சாதனையை பீட் பண்ணலாம் என்று இருந்த ஃபெடரருக்கு மறுபடியும் ஆப்பு. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

()

சானியா மிர்சா வரும் போர்ன்விட்டா விளம்பரம் பார்த்து இருக்கிறீர்களா? என்ன கொடுமை சார் இது? சானியா மிர்சாவை ஸ்கூல் யூனிஃபார்மில் பார்க்க இரண்டு கண்கள் போதாது. பேசாமல், அவருடன் நானும் ஸ்கூல் யூனிஃபார்மில் ஸ்கூலுக்கு போகவேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. நல்ல ஆசை.

()

ஒரே ஒரு வாட்டிமா, ப்ளீஸ். என் செல்லம்ல.


"ஜானு, ம்க்கும்.. ம்ஹூம்.. ஜானு.. ப்ளீஸ்மா.. ஒரே ஒரு வாட்டிமா.. என் செல்லம்ல.."

"சான்ஸே இல்ல."

"ப்ளீஸ்மா... மை ஸ்வீட் ஹார்ட் இல்ல... ஒரே ஒரு வாட்டி ஓ.கே. சொல்லேன். சீக்கிரமா முடிச்சிட்டு சமர்த்தா தூங்கிடுவேன். ப்ளீஸ்டா"

"டே.. லூசா நீ.. ஒரு வாரத்துல எத்தன வாட்டி.. உடம்பு என்னத்துக்கு ஆகும். உனக்கு அறிவே இல்லியா.."

"இன்னிக்கு மட்டும் அல்லவ் பண்ணேன். என்னால கன்ட்ரோல் பண்ண முடியல"

"ஸாரி மை டிய‌ர். என்னால‌ முடியாது.. நோ வே.."

"போன‌ மாச‌ம் கூட‌, உங்க‌ அம்மா இங்க‌ வ‌ந்த‌ப்ப‌ கூட‌ , பெட்ரூம்ல‌ எல்லாரும் தூங்குன‌ப்புற‌ம்..."

"ஸ்டாப் இட். லூஸாப்பா நீ."

"நான் உண்மைய‌த் தான‌ சொன்னேன். ஏன் இப்ப‌ டென்ஷ‌ன் ஆகுற‌."

"...."

"ஓ,கே. ஒண்ணும் வேணாம். நான் போய் தூங்குறேன்."

"டேய்.. டேய்.. சிவா.."

"என்ன‌?"

"உன‌க்கு தான் உட‌ம்பு ச‌ரியில்ல‌ன்னு சொல்லிக்கிட்டு இருந்தேல்ல‌.. அதான் நான் வேணாம்னு சொன்னேன். என்னைக்காவாது நான் நோ சொல்லி இருக்கேனா?"

"......"(இதுக்கு ஒண்ணும் கொற‌ச்ச‌ல் இல்ல‌)

"கோவிச்சுக்காத‌டா.. ப்ளீஸ்."

"என‌க்கு ஒண்ணும் இல்ல‌. ஐயாம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட். இன்னிக்கு மார்னிங் கூட‌ நான் ஜாகிங் போனேன்."

"ம்ம்ம்ம்... என‌க்கு உன்னை அல்ல‌வ் ப‌ண்ற‌துக்கும் ப‌ய‌மா இருக்கு... அதேநேர‌ம் உன்ன‌ disappoint ப‌ண்ண‌வும் இஷ்ட‌ம் இல்ல‌.."

"ஹை ஜாலி.. நான் க‌ன்டினியூ ப‌ண்ண‌வா", இறுக்க‌ அவ‌ளைக் க‌ட்டி அணைத்த‌ப‌டி

"ம்ம்ம்ம்.. ஓ...... கே.......... ப‌ட் ஒன் க‌ன்டிஷ‌ன்"

"ரியலி..... ச்சோ ஸ்வீவீவீட்.... என்ன‌ க‌ன்டிஷ‌ன்"

"உன‌க்கு 15 மினிட்ஸ் தான் டைம். சீக்கிர‌ம் முடிச்சிட்டு சீக்கிர‌ம் தூங்கிட‌ணும். உன்னை விட்டா நைட் ஃபுல்லா க‌ன்டினியூ ப‌ண்ணுவ‌.. நாளைக்கு ஆஃபிஸ் போக‌ணும்."

"நீ சொல்லிட்ட‌ல்ல‌.. இதுக்கு மேல‌ நோ அப்ஜெக்ச‌ன்.. ஸ்டார்ட் ப‌ண்ண‌ட்டுமா "

"ஒவ்வொருவாட்டியும் இப்படி பேசி பேசியே கால்ல விழுந்தடறீயே. இந்த அல்ப விஷயத்துக்கு எல்லாம் கெஞ்சுறீயே வெக்கமா இல்ல.."

"ஹே, ஹே.. இதெல்லாம் பார்த்தா லைஃப் என் ஜாய் பண்ண முடியுமா. என் செல்லத்துக்கிட்ட தான கெஞ்சுறேன்.. கொஞ்சுறேன்."

"ம்ம்ம்ம்ம்..போதும்

10 நிமிட‌ம் க‌ழித்து,

"ஜானு, ஐ ல‌வ் யூ.."

"ல‌வ் யூ டூ டா"

"என‌க்கு ஒரே ஒரு ஆஃப் பாயில் போட்டு தாயேன்.. ஊறுகாயும், சிப்ஸும் போர் அடிக்குது.. ப்ளீஸ்."

"நென‌ச்சேன், நீ ரொமான்டிக்கா ஐ ல‌வ் யூ சொல்லும்போதே.. உனக்கு ஒண்ணும் கெடையாது.. எதாவ‌து பேசிக்கிட்டு இருந்த, அப்புற‌ம் நீ லைவ் ஃபுல்லா த‌ண்ணி அடிக்க‌ முடியாது.. "

அதற்கப்புறம் அவன் மூச்சு கூட சத்தமாக விடவில்லை. ப‌ட‌க் ப‌ட‌க் என்று குடித்து முடித்துவிட்டு சைல‌ன்ட்டாக‌ போதையுட‌ன் தூங்கினான் சிவா.

டிஸ்கி: எஸ்.ஜே.சூர்யா மாதிரி, யாராவ‌து ஏடாகூடாமா திங்க் ப‌ண்ணியிருந்தா, ஐயாம் ஸாரி. என‌க்கு அப்ப‌டியெல்லாம் எழுத‌த் தெரியாது. யூ நோ... நான் ரொம்ப‌ ச்சின்ன‌ப்பைய‌ன்.

உன்னை ரசிப்பதால் வாழ்கிறேன்!


வீணையும் பிடிக்கும்
கிதாரும் பிடிக்கும்
பார்க்கும், கேட்கும் ஒவ்வொரு
முறையும் அது உன்னை தெரிவிக்கும்
அதை இர‌ண்டும் மீட்ட‌த் தெரியாம‌ல்
விழிக்கிறேன், உன்னையும் சேர்த்து
ஒருவேளை அத‌னால் தான் பிடிக்குதோ!

திறந்த கதவின்வழி தென்றல் வருவதில்லை
வரும் தென்றலை ரசிக்க முடிவதில்லை
சில‌ விநாடிகளுக்கு மேல்
சாளரத்தின் இடுக்குகளில் கசியும்
சுகந்தம் உயிரை உருக்கும்
என்னை உன்னில் மீட்டும்!

பின்னிரவு ப‌னியும் பிடிக்கும்
அடைம‌ழையும் பிடிக்கும்
இர‌ண்டையும் ர‌சிக்க‌ முடியும்
தூர‌த்தில் இருந்து மட்டும்
இதன் ஏகாந்தத்தை முழுமையாக
அனுபவிக்க எப்போதும் வேண்டும்
உன் நினைவுகள்
உன்னை ரசிப்பதால் வாழ்கிறேன்
ஒவ்வொரு நொடியும்
உன்னை ர‌சிக்கும் மனதின்
ப‌ண்ப‌ட்ட‌ தொட‌ர்புகள் இவை
இவை ம‌ட்டும‌ல்ல
தொட‌ர்புகள் நீளும், அவை
முற்றுபெறாத‌ க‌விதையின்
முதல் பக்கமாக‌ ம‌ட்டுமே
எப்போதும்!

உன்னைப் பற்றி தோன்றும்
கிறுக்குத்தனங்களும் எழுதும்போது
கவிதையாக கை கால் முளைத்து
உயிர்பெறும் ஆச்சரியம்
புரியவில்லை,
ஆனால்
ஒன்று மட்டும் தெரியும்
கவிதைகளை கிறுக்கும்
எவருக்கும் விடைதெரியாது
இந்த ஆச்சரியத்திற்கு!

பார்க்கும் ஒவ்வொன்றிலும்
உன் நினைவுகள்
என் பார்வையே உன்னுள் ஊடாக
தான் வெளியே செல்கிறது
விழியில் உன்னை இருத்திவிட்டாயோ
என குழப்பம், ஆனந்த குழப்பம்
ஒருவேளை அதனால் தான்
உன் நினைவுகளோ
பார்க்கும் ஒவ்வொன்றிலும்
உன் நினைவு தொடர்புகளின்
சிறகுகள் என்னை விட்டு
உதிர்ந்த நாட்களில்
என் பெயர் பிணம்!

******************

பார்த்ததும் ர‌சித்த‌தும் - 16/03/2009

என்னுடன் கல்லூரியில் படித்த நண்பனின் அண்ணன் திருமணம் விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் கோவிலில் நேற்று நடைபெற்றது. 3 வருட இடைவெளிக்கு பிறகு நண்பர்களை சந்திப்பது மிகுந்த சந்தோஷம் அளித்தது. தலையில் வழுக்கை விழுந்த நண்பன், நன்றாக சதை போட்ட இன்னொருவன், கொஞ்சமும் மாறாமல் நேற்று பார்த்தது போல இருக்கும் சிலர். மிகுந்த ஆச்சரியமான, ஆரவாரமான சந்திப்பு. நான் அப்படியே தான் இருப்பதாக ஒருவன் சொன்னான். இதற்கு நான் சந்தோஷப்படுவதா, வருத்தப்படுவதா?

கொளஞ்சியப்பர் என்பது முருகப்பெருமானின் ஒரு பெயராம். அங்கே இளங்கன்றை பாதி பிரசவித்த நிலையில், அப்படியே வயிற்றில் தங்கிவிட்ட ஒரு பசு மாட்டை, கோவிலில் கட்டிப்போட்டு வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். பார்த்தது, மனதை பிசைந்தது. உருக்கமாக இருந்தது.

****

விருத்தாச்சல மைந்தன் விஜயகாந்துக்கு, தமிழக அரசியலில் அடிபிடி சண்டை போல. நேற்று இவ்வார நக்கீரனின் வால்போஸ்டரில் ஒரு வாசகம். 100 கோடி ரூபாய். இரண்டு திராவிட கட்சிகளும் வலைவீச்சு. 'குடிகாரன்' என்று சொன்ன அம்மையாரும், 'அரைவேக்காடு' என்று சொன்ன கலைஞரும் இப்படி, அடித்து பிடித்துக் கொண்டு அவரை இழுக்க முயற்சி செய்வதை பார்க்கும்போது, 'வாக்காளன் எவனுக்கும் ஞாபக சக்தி எதுவும் இருக்கக் கூடாது' என்று தான் தோன்றியது.

இருந்தாலும் 100கோடி. எவ்வளவு பெரிய தொகை? விஜயகாந்தின் மனம் சஞ்சலப்படுவதில் ஆச்சரியம் இல்லை. பின்னே, அரசியலுக்கு வந்த‌து மக்களுக்கு சேவை செய்வதற்காகவா?
****

தற்போது ஒரு ஃபார்வர்டு இமெயில் ரொம்ப ஃபேமஸ். விஜயும், பிரபுதேவாவும் ஒரு பிரஸ் மீட்டிங்கில் பேசிக் கொண்டிருப்பது போல. திடீரென்று செம கடுப்பாகி, விஜய் கத்தி "சைலன்ஸ்" என்கிறார். இது உண்மையா? பொய்யா? என்று தெரியவில்லை. ஆனால் ரசிக்க முடிகிறது. வீடியோ கீழே. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்?



****

நேற்று செக‌ண்ட் ஷோ, காசி தியேட்ட‌ரில், "FLASHBACKS OF A FOOL" ஜேம்ஸ்பாண்ட் ந‌டித்த‌ ப‌ட‌ம் பார்த்தோம்(இந்த முறை ஆக்சிடென்ட் எதுவும் நடக்கவில்லை). முத‌ல் சீனிலேயே, டேனிய‌ல் கிரெய்க், ட்ர‌ஸ் எதுவும் இல்லாம‌ல் (முதல் நாள் நைட் ரெண்டு பேருடன் கில்மா) ந‌ட‌ந்து போய் குளிக்கிறார். அவருடைய ஃப்ரண்ட் இறந்துபோய் விட்டார் என்று அம்மா கால் பண்ணி சொல்லும்போது, ரொம்ப ஃபீல் பண்ணி அவர் டீன் ஏஜ் வயதை யோசிக்கிறார், நடுக்கடலில் மிதந்து கொண்டே. அவர் டீன் ஏஜ் ஃபுல்லா ஒரே கில்மா தான். பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு அஜால் குஜால் ஆன்ட்டி, 'அதுக்காக' ரொம்ப டார்ச்சர் பண்ணுகிறார். நடுவில் ஒரு ஃபிகருடன் காதல். அந்த காதலுக்காக, தன் ஃப்ரெண்டையே கிளப்பில் வைத்து அடிக்கிறார். இந்த மாதிரி ஒரே கில்மா தான் படம் முழுவதும்.
ஜேம்ஸ்பாண்ட் படம், ஒரே ஃபைட்டா இருக்கும் என்று நினைத்து போன என் நினைவில் மண் விழுந்தது. மொக்கை, அசுரத்தனமான மொக்கை. நடுவில் அந்த ஆன்ட்டி மேட்டர் மட்டும் இல்லை என்றால், நான் பாதி படத்திலேயே எழுந்து வந்திருப்பேன்.

ப‌ர‌ங்கிம‌லை ஜோதியில் ரிலீஸ் ப‌ண்ண‌வேண்டிய‌ ப‌ட‌த்திற்கெல்லாம், ஜேம்ஸ்பாண்ட் ஹீரோவை ந‌டிக்க‌ வைத்து, என்னை மாதிரி ப‌ட‌ம் பார்க்க‌ வ‌ரும் டீன் ஏஜ் ப‌ச‌ங்க‌ளோட‌ ஃபீலிங்ஸையெல்லாம் பாடாய்ப‌டுத்துகிறார்க‌ள். இதன் த‌மிழ் ட‌ப்பிங் பெய‌ர்: ம‌ன்ம‌த‌ன் நினைவுக‌ள். ச‌ரியாத் தான் வ‌ச்சிருக்காய்ங்க‌ளோ? (ஆனா நான் பார்த்த‌து இங்கிலீஷ் வெர்ஷ‌ன்)

****

கேட்ககூடாதவர்களிடம் கேட்க விரும்பும் ஏடாகூடாமான கேள்வி!


கலைஞரிடம் ஜெ : எதுக்கெடுத்தாலும் உண்ணாவிரதம் உண்ணாவிரதம்ன்னு அறிவிச்சுடுறீங்களே? எப்படி உங்களால மட்டும் முடியுது? ஒரு நாள் இருந்ததுக்கே நான் 5 கிலோ கொறஞ்சிட்டேன்?

ராமதாசிடம், வேலையாள்: அய்யா, தோட்டத்தில இருந்து போயஸ் கார்டனுக்கு ஒரு கூடை மாம்பழம் பார்சல் அனுப்பிடலாம்ங்களா?

வைகோவிடம் ம‌.தி.மு.க தொண்டன் : தலிவரே, நமக்கு ஓட்டு போடுறதுக்கு தான் ஆள் இல்லைன்னு நெனச்சிகிட்டு இருந்தேன். இப்ப வர்ற எலெக்சன்ல வேட்பாளரை நிக்க வைக்கறத்துக்கு கூட கட்சியில ஆள் இல்லைன்னு சொல்லிக்கிறாங்களே, நெஜமா?

விஜயகாந்திடம், ஒருவர்: சார், கூட்டணி வைக்க போறீங்களா? உங்க மரியாதை என்னாச்சு? ஸாரி.. ஐ மீன் உங்க மரியாதை சூட்டிங் என்னாச்சு?

கலாநிதியிடம், தினகரன் வாசகன் : சார், எலெக்சன் வேற வரப் போகுது? தி.மு.க பத்தி சும்மா ஒரு சர்வே எடுத்து போடுங்களேன்? கொஞ்சம் சூடா இருக்கும்?

மன்மோகன்சிங்கிடம், ஒரு இந்தியன்: "வேணாம், வலிக்குது அழுதுடுவேன்"ன்னு இத்தனை நாளா புலம்பிக்கிட்டு இருந்த நீங்க, "அப்பாடா, எலெக்சன் வந்துடுச்சி"ன்னு பெருமூச்சு விடுறது தமிழ்நாடு வரைக்கும் கேட்குதாமே, உண்மையா?

டீ.ஆரிடம், கொலைவெறி டீ.ஆர் ஃபேன் கிளப் மெம்பர் : சார், உங்க‌ க‌ட்சியோட‌ பேர் என்ன‌? அது இந்த‌ எலெக்ச‌ன்ல‌ போட்டியிடுதா?

பீட்ட‌ர்ச‌ன் ம‌ற்றும் ஜெய‌வ‌ர்த்த‌னேவிடம் வெட்டோரி: எப்ப‌டி போட்டாலும் அடிக்கிறானுங்க‌? என்னாலயும் முடிய‌ல‌? ஷேவாக், யுவ‌ராஜ் எல்லாம் பார்த்தா என‌க்கு அழுகை, அழுகையா வ‌ருது. நானும் ரிசைன் ப‌ண்ண‌ப் போறேன்.

ர‌ஜினியிட‌ம், சில‌ இய‌க்குந‌ர்க‌ள்: சார், க‌லெக்ச‌ன் ரொம்ப‌ க‌ம்மியாயிடுச்சு. சும்மா எங்க‌ளோட‌ சேர்ந்து ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்க முடியுமா? ப‌ப்ளிசிட்டி ப‌ண்ண‌ வ‌ச‌தியாய் இருக்கும்.

இயக்குநர் பாலாவிட‌ம், ர‌சிக‌ன்: சார், அடுத்த‌ ப‌ட‌ம் 2015 ல‌யா ரிலீஸ்?

சுப்ரமணியசாமியிட‌ம், ஒரு ஆள்: சார், நாளைக்கு ந‌ம்ம‌ கேஸ் கோர்ட்டுக்கு வ‌ருது. சும்மா ஒரு ர‌வுண்ட் போயிட்டு வ‌ந்துட‌லாமா?

'சோ'விடம், ஒரு ஆள் : சார், அ.தி.மு.க சார்பா இந்த எலெக்சன்ல போட்டியிடுறதுக்கு உங்கள நாமினேட் பண்ணி இருக்காங்களாமே?

அஜீத்திடம் விஜய் : வரிசையா மூணு படம் ஃப்ளாப் கொடுத்ததுக்கே, என்னைய போட்டு இப்படி கும்முறாய்ங்களே? நீங்க மட்டும் எப்படிண்ணா வரிசையா 7 படம் ஃப்ளாப் கொடுத்துட்டு அசராம மறுபடியும் ஃபார்முக்கு வந்தீங்க?

பிரியாம‌ணியிட‌ம், ஒரு ஜொள்ளு ர‌சிகன்(டிஸ்கி: நான் இல்லை): மேட‌ம், உங்க‌ளுக்கு த‌மிழ்சினிமா மேல‌ ஏன் இவ்வ‌ள‌வு கோப‌ம்? அதே ட்ர‌ஸ்ஸோட‌ இந்த‌ ப‌க்க‌ம் வ‌ந்துட்டு போக‌க் கூடாதா?

*******************

வாழ‌வைக்கும் காதலுக்கு ஜே! வாலிப‌த்தின் ஊட‌லுக்கும் ஜே!


"ஆஃபிஸ்ல இருந்து ஏன் லேட்டு?"

"அதான் சொன்னேன்ல‌.. க்ளைய‌ண்ட் கால் 11 ம‌ணிவ‌ரைக்கும் இழுத்துட்டாங்க‌.. இன்னைக்கு ஒரு மாட்யூல் லைவ் போகுது.. அதான் டென்ஷ‌ன்."

"த‌ண்ணி அடிச்சிட்டு வ‌ந்திருக்கியா?"

"இல்லைமா. அதான் கொஞ்ச நாள் முன்னாடியே ப்ராமிஸ் ப‌ண்ணேன்ல‌.
இனிமே ரெண்டு மாச‌த்துக்கு ஒரு த‌ட‌வை தான் அடிப்பேன். அதுவும் வீட்ல‌ உட்கார்ந்து. ப்ளீஸ் பிளீவ் மீ"

"என‌க்கு ந‌ம்பிக்கை இல்ல‌. கிங்க்ஃபிஷ‌ர் பீர் ஸ்மெல் அடிக்குது"

"உன்னோட‌ ஒரே தொந்த‌ர‌வா போச்சே. த‌ண்ணி அடிக்கிற‌தா இருந்தா, நைட் ஷிஃப்ட்ன்னு சொல்லிட்டு ஃப்ரெண்டு வீட்டுல‌ அடிச்சிட்டு காலைல‌ வ‌ர‌ மாட்டனா?" என்று சொல்லி கண்ணடித்துவிட்டு அவ‌ளைக் க‌ட்டிபிடிக்க‌ ட்ரை ப‌ண்ணினான்.

"இதுக்கு ஒண்ணும் கொற‌ச்ச‌ல் இல்ல.." என்று சிணுங்கிக் கொண்டே அனுமதித்துவிட்டு திடீரென்று கோபம் வந்தவளாக, அவனை தள்ளிவிட்டு "நான் இப்படி பண்றது தொந்தரவு இல்ல.. டே, உன‌க்கு லைஃப்ல‌ எதுவுமே சீரிய‌ஸ் இல்லியா? உருகி உருகி லவ் பண்ணி தான நாம கல்யாணம் பண்ணிகிட்டோம். நான் சொல்றத எதையுமே சீரியஸா எடுத்துக்க மாட்டியா?" என்றாள் ஹைடெசிபலில்.

"உன்ன‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிகிட்டேனே.. அதுவே லைஃப்ல‌ நான் ப‌ண்ண‌ ரொம்ப‌ சீரிய‌ஸான‌ விஷ‌ய‌ம்.." என்று டையை கடுப்புடன் க‌ழ‌ற்றினான்.

"ல‌வ் ப‌ண்ற‌ பொண்ணை க‌ல்யாண‌ம் ப‌ண்ற‌து சீரிய‌ஸான‌ விஷ‌யமா?"

"ஹ‌லோ மேட‌ம். எந்த‌ செஞ்சுரில‌ இருக்க‌ நீ.. இன்விடேஷ‌ன் கொடுக்கும்போது ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எப்படி கலாய்ச்சாங்க தெரியுமா.. ல‌வ் ப‌ண்ற‌ பொண்ணையே க‌ல்யாண‌ம் ப‌ண்ற‌ மொத‌ ஆள் நீதான்டான்னு சொல்லி எல்லாரும் அசிங்க‌ப்ப‌டுத்திட்டாங்க‌.."

"அப்புற‌ம் எதுக்குதான்டா ல‌வ் ப‌ண்றீங்க?"

(டியூப் லைட் டியூப் லைட் என்று மனதுக்குள் முனங்கிக் கொண்டே)"உன‌க்குத் தான் சுத்த‌மா தெரிய‌ல‌.. ஊரு உல‌க‌த்த‌ பாரு.. பொண்ணுங்க‌ளே, க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிறேன்னு சொன்னா க‌ட் ப‌ண்ணிவிட்றாங்க‌.. ஒண்ணா சேர்ந்து ஊர் சுத்த‌ற‌துக்கும்,....... ச‌ரி விடு.. இதெல்லாம் உன‌க்கு தெரியாது. க‌ல்யாண‌த்துக்கு முன்னால‌ உன் கைய‌ பீச்ல‌ பிடிச்சு ந‌ட‌ந்து வ‌ந்த‌துக்கே, ஒரு வார‌ம் பேசாத ஆளுக்கெல்லாம் சுட்டாலும் புரியாது" சொல்லிக் கொண்டே ஷார்ட்ஸ்க்கு மாறியிருந்தான்.

"அப்புற‌ம் எதுக்குதான்டா என்ன‌ ல‌வ் ப‌ண்ணே?"

சிரித்துக்கொண்டே "டூ லேட். லைஃப் சென்ட‌ன்ஸ். இனிமே நோ யூஸ்? என்ன‌ டின்னர்?"

ரொம்ப‌ க‌டுப்பாகி, "அப்ப‌வே சொல்லி இருக்க‌லாம்ல‌.. டின்னரும் கிடையாது. ஒண்ணும் கிடையாது. என‌க்கு தெரிஞ்சாக‌ணும்?.. இப்ப‌வே.."

"உன் க‌ல‌ரை பாத்தும், மீட்டிங்க்ல ரொம்ப‌ க‌ரேஜா த‌ஸ் புஸ்ஸுனு பேசுற‌த‌ பாத்தும் தான், இப்ப‌ அது எதுக்கு.. பசிக்குதுடி..ப்ளீஸ்டி.. என் செல்ல‌ம்ல?" என்று கொஞ்சினான்.

"ஓ, இவ‌ளே க‌ருப்பா இருந்தா திரும்பி பாத்து இருக்க‌ மாட்டேளே? அப்ப‌டி என்ன‌டா இருக்கு இந்த‌ க‌ல‌ர் தோல்ல.. அது ஏன் ஒருத்தனுக்கும் க‌றுப்பா இருக்கிற‌ எவ‌ளையும் பிடிக்க‌ மாட்டீங்குதுன்னு தெரிய‌ல‌?"

"இப்ப‌ உன‌க்கு என்ன‌ பிர‌ச்சினை? நான் லேட்டா வ‌ந்த‌தா? த‌ண்ணி அடிச்சேன்ங்கிற‌ ச‌ந்தேக‌மா? உன்ன‌ லவ் & கல்யாணம் ப‌ண்ண‌தா? இல்ல‌ ஊர்ல‌ இருக்கிற‌வன் எவனும் க‌றுப்பா இருக்கிற‌ பொண்ண‌ ல‌வ் ப‌ண்ணாத‌தா?"

"என்ன‌ பாத்தா ப்ராப்ள‌ம் மேக்க‌ர் மாதிரி தெரியுதா யூ பெக்கர்? ஓ.கே. லீவ் இட்.. க‌ல்யாண‌த்துக்கு முன்னால‌ வ‌ரைக்கும் நிலா, இத‌ழ், முத்த‌ம்ன்னு க‌விதையா கொட்டுனீயே. இப்ப‌ ஏன் எல்லாம் DRY ஆயிடுச்சா?"

"கூல் ஹனீ.. பை தி வே.. குட் கொஸ்டின்" அப்ப‌டியே அவ‌ளை தோளை பிடித்து டைனிங் ஹாலில் உட்கார‌ வைத்துவிட்டு, "அப்பா காசுல டாஸ்மாக் பார்ல‌ போய் ச‌ண்டை போட்டு பிடிச்ச‌ பிராண்ட் பீர் ச்சில்ன்னு கூலிங்கா வாங்கி அடிக்கிற‌துக்கும், 20 பீர் பாட்டில்ல‌ வீட்டு ஃப்ரிட்ஜ்ல‌ வ‌ச்சி தோணும்போதெல்லாம் அடிக்கிற‌துக்கும் வித்தியாச‌ம் இல்லீயா?" என்றான் ஹாட்பாக்ஸில் எடுத்த சப்பாத்தியை மென்று கொண்டே..

"நான் என்ன கேட்டேன்? நீ என்ன‌ சொல்ற...." சில விநாடிக‌ளுக்கு பிற‌கு.. மாரிய‌ம்மான் கோவில் பூஜையில் சாமி வ‌ந்த‌வ‌ளாக‌, "அப்ப அதுக்கு தான் லவ் பண்ணீயா? செக்ஸ் தான் லைஃபா? இப்ப‌ எல்லாம் முடிஞ்சிடுச்சா?" என்று க‌த்திக் கொண்டு மேஜையில் இருந்த‌ எல்லாத்தையும் த‌ட்டி விட்டாள்.

அவ‌ன் செல்லில் SMS 'பீப் பீப்' என‌ அடித்த‌து.

அவ‌ள் எடுத்து பார்த்தாள். "Have you safely reached home? No hangover right?" அவ‌ன் உயிர்த்தோழ‌னிட‌ம் இருந்து.

"பொய், பொய், வாயை தொற‌ந்தாலே பொய். த‌ண்ணி அடிக்க‌லைன்னு பொய். இப்ப‌ நானும் தேவையில்லை. இனிமே நான் உன்கூட‌ ஒண்ணா வாழ்ந்தா, அது அசிங்க‌ம். " என்று அழுதுகொண்டே மொபைலை அவன் மூஞ்சியில் தூக்கி எறிந்தாள். பெட்ரூம் போய், மூட்டையைக் க‌ட்டிக் கொண்டிருந்தாள்.

அவ‌னுக்கு ஒண்ணும் புரிய‌வில்லை. செல்போனைப் பார்த்தான். உயிர்ந‌ண்ப‌ன், எட்ட‌ப்பன் ஆனான். அடித்த‌து எல்லாம் இற‌ங்கிவிட்ட‌து. அவ‌ளை க‌ன்வின்ஸ் ப‌ண்ணி தோற்றுப் போய்விட்டான். கோய‌ம்புத்தூர் போய்விட்டாள்.

()

அவ‌ள் வீட்டிற்கு கால் ப‌ண்ணினான். காலில் விழாத‌ குறையாக‌ கெஞ்சினான். ச‌னிக்கிழ‌மைக்குள் வ‌ர‌வில்லையென்றால், மார்னிங் அங்கே இருப்பேன் என்று காலில் விழுந்து விட்டான்.

()

வெள்ளிக்கிழ‌மை ஈவினிங் ஆஃபிஸ் முடிந்து வீட்டுக்கு வ‌ந்து சேர்ந்தான். ஹால் க்ளீனாக‌ இருந்த‌து.

அட்டகாச‌மான‌ சேலையில், த‌லை நிறைய‌ ம‌ல்லிகைப்பூவுட‌ன் அவ‌ள் நேரே வ‌ந்தாள்.

"ஹேய் டார்லிங்.." என்று ஓடிப்போய் க‌ட்டிபிடித்து மேலே தூக்கினான்.

"என்ன‌ திடீர் ச‌ர்ப்ரைஸ்? உங்க‌ப்பா தொர‌த்தி விட்டுட்டாரா?"

லேசாக‌ முறைத்துக் கொண்டு, "எல்லாமே காமெடி தான் உன‌க்கு. ஐ ஹேவ் டூ குட் நியூஸ்!"

"ந‌ம்ம‌ க‌ல்யாண‌ நாளா? இல்லையே அதுக்கு இன்னும் மூணு மாச‌ம் இருக்கு. என் ப‌ர்த்டே இல்ல‌.. உன் ப‌ர்த்டே, நான் ம‌ற‌ந்து இருந்தா செருப்பால‌ அடிப்ப‌?.. பின்ன‌. ம்ம்ம்... யா.. நான் உன்கிட்ட‌ ல‌வ் ப்ரோப்ப‌ஸ் ப‌ண்ன‌ டேட் தான‌?"

"நோ. இன்னிக்கு‌ நான் கொடுத்த‌ ப்ராமிஸ்ப‌டி, நீ த‌ண்ணி அடிக்க‌வேண்டிய‌ டியூ டேட்"

"ஹேய் கமான். ஸாரி டியர். நான் இன்னிக்கு அடிக்க‌ல‌.. நான்தான் பொய் சொல்லி அன்னைக்கே அடிச்சிட்டேன்ல‌. ப்ளீஸ்."

"ப‌ர‌வாயில்ல‌. இன்னிக்கி நீ அடிக்க‌லாம். எங்க‌ப்பாகிட்ட‌ ச‌ண்டை போட்டு கேன்டீன்ல இருந்து ஹை குவாலிட்டி மிலிட்ட‌ரி ச‌ர‌க்கு வாங்கிட்டு வந்திருக்கேன்."

"என்ன‌ ஹ‌ர்ட் ப‌ண்றே. நோ. ஐ கான்ட்." என்றான் வீராப்புடன்

"இல்ல‌. நீ அடிச்சா தான், அடுத்த‌ குட் நியூஸ‌ சொல்வேன்.."

இதுல ஏதோ உள்குத்து மாதிரி தெரியுதே என‌ தாடையை த‌ட‌விக் கொண்டே, "அடிக்கும்போது, இது தான் லாஸ்ட் டைம்னு சொல்ல‌ மாட்டியே"

"குடிகார‌ன் புத்தி உன்னைவிட்டு போகுதான்னு, பாரு" என்று சொல்லிக் கொண்டே முத‌ல் லார்ஜை ஊற்றிக் கொடுத்தாள்.

த‌லைவ‌ர் ஒரே கல்ப்பில் அடித்துவிட்டு, "இப்ப‌ சொல்லுமா, செல்ல‌ம்?"

அநியாய‌த்துக்கு வெட்க‌ப்ப‌ட்டாள். த‌லையைக் குனிந்து கொண்டாள். "ந‌வ், ஐயாம் டூ"

"வாட்?"

"மை டியர், டியூப்லைட் புருஷா! நீ அப்பா ஆயிட்டே" என்று காதைக் க‌டித்தாள்.

"ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. ரிய‌லிலிலிலிலி....." என்று ச‌ந்தோஷ‌த்தில் க‌த்திக் கொண்டு, அவ‌ளை அலேக்காக‌ தூக்கிக் கொண்டு பெட்ரூமுக்கு ஓடினான்.

(இன்னும் அவ‌ங்க‌ என்ன‌ ப‌ண்றாங்க‌ன்னு சொல்ல‌லாம். டிஸ்கரைப் பண்றது கொஞ்சம் கஷ்டமான டாஸ்க் தான். ப‌ட் அடுத்த‌வ‌ங்க‌ பெட்ரூமை எட்டி பார்க்கிற‌து, இன்டீச‌ன்ட்.. ஸோ, கெட் லாஸ்ட்)

*********************

பார்த்ததும், ர‌சித்ததும் - 09/03/2009

நியூசிலாந்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய அணியைப் பார்த்தால் கொஞ்சம் மெர்சலாகத் தான் இருக்கிறது. 391 ரன் அடித்தும், கடைசி நேரத்தில் வழக்கமான எக்குதப்பான ப்ரஸ்ஸரில் மேட்சைக் கொண்டு போன போது தோன்றியது, "இவனுங்க எவ்வளவு நல்ல ஃபார்முல இருந்தாலும், டென்ஷல் இல்லாம விளையாட மாட்டானுங்க". கடைசியில் முனாஃப் படேல் வீசிய பீமர் எல்லாம், கோமாளித்தனம், போங்கு ஆட்டம். அம்பயர் கொயர்ட்ஷன்னின் துல்லியமான அம்பயரிங் ரசிக்க முடிந்தது. ச‌ச்சினுக்கு ம‌ட்டும் வ‌யிற்று த‌சைப்பிடிப்பு வ‌ராம‌ல் இருந்து இருந்தால்.....? 50வ‌து ச‌த‌ம் ப‌க்க‌த்தில் தான் இருக்கு மாஸ்ட‌ர்!

காஸ்ட்யூமை மாத்துங்கப்பா. பழைய ஸ்ரீலங்கன் கிரிக்கெட் டீம் மாதிரி, யார் முகத்தையும் ஒழுங்காக பார்க்க முடியாமல் கறுப்பாக, டல் லுக்கில் இருக்கிறது. சச்சினுக்கும் மட்டும் கச்சிதமாக பொருந்தி உள்ளது.

()


நேற்று சன் டி.வியில் ஒளிபரப்பிய ஏ.ஆர்.ரகுமானுக்கு இசை உலகத்தின் பாராட்டு விழாவை, கிரிக்கெட் மேட்ச்சுடன் ரொம்ப சரியாக பேலன்ஸ் பண்ணி இரண்டையும் பார்த்தோம். இளையராஜா பேசிய பாராட்டு உரையை கேட்கும்போது, ஒரு நிமிடம் இவர் பாராட்டுறாரா, இல்லை திட்டுறாரா என்றே புரியவில்லை. இதுவரை ஏன் இவர் ஏ.ஆர்.ரகுமானை சந்த்திக்கவில்லை மற்றும் சந்திக்க மறுத்தார் என்பதற்கு குட்டிக் கதை வேறு. இவர் பாலமுரளிகிருஷ்ணாவை தான் வார்த்தைக்கு வார்த்தைக்கு பாராட்டினார். கடைசியில் கொஞ்சம் மோனோ ஆக்டிங் கலந்து மேடையில், ரஹூமானை பாராட்டி பேசியது, சூப்பர்.

வழக்கம்போல் ஏ.ஆர்.ரகுமான் முகத்தில் சாந்தம், சாந்தம், சாந்தம். அடிக்கடி எம்.எஸ்.வி வாஞ்சையுடன் கன்னத்தை தடவிக் கொடுக்கும்போது மட்டும் நெளிந்தார். இதற்கெல்லாம் உச்சகட்டம், கன்னத்தில் கொடுத்த முத்தம். பாடகி ஜானகி அவர் அப்பா சேகரை பற்றிய அனுபவங்களை சொல்லிக் கொண்டிருக்கும்போது ஏ.ஆர்.ஆர் கண்களோரம் துளிர்த்த கண்ணீரை அவர் துடைத்துவிட்டுக் கொண்ட போது நான் நெகிழ்வாக உணர்நதேன்.

("நானும் கோடீஸ்வரன்" என்ற தமிழ் டப்பிங்கிற்காக, போலீஸ்காரர் இர்ஃபானுக்கு ராதாரவியை தேர்ந்தெடுத்தவர்களை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும். வேறு யாருமே கிடைக்கவில்லையா?)

()

என் நண்பன் "யாவரும் நலம்" படம் பார்த்துவிட்டு, "ஆஹோ ஓஹோ" என்று "தமிழில் இதுவரை த்ரில்லர் படங்களிலே இது தான் பெஸ்ட்" என்றும் சர்டிபிகேட் கொடுக்கிறான். இனிமேல் தான் பார்க்கவேண்டும். நான் சினிமா எதுவும் பார்க்காமல் வீக் எண்ட் போனது, ஆச்சரியம் ஆனால் உண்மை.

()

குமுதமும், சுஜாதாவின் புகழ்பெற்ற மெக்ஸிகோவின் சலவைக்காரி ஜோக்கை "அரசு கேள்வி பதில்" பகுதியில் வெளியிட்டு புண்ணியம் தேடிக் கொண்டது. (இந்த வார புக். டோண்ட் மிஸ் இட்)

()

பெச‌ன்ட் ந‌க‌ர் பீச்சில் ஞாயிற்றுக்கிழ‌மை ஈவினிங் செல்லுவ‌து, ரொம்ப சுவாரசியமாக இருக்கும். பீச் ப‌க்க‌த்தில் கொஞ்ச‌ நேரம் கூட‌ உட்கார‌ முடியாம‌ல் வ‌ரிசை க‌ட்டிக் கொண்டு க‌டையை திற‌ந்து வைத்திருப்ப‌து, க‌டுப்பான‌ விஷ‌ய‌ம். அதிலும் க‌டையை தாண்டி உட்கார‌லாம் என்று போனால் ம‌க்காசோள‌ம் சுட‌ வைத்திருக்கும் அடுப்பில் இருந்த்து, சும்மா த‌க‌ த‌க‌வென்று தீக்க‌ணுக்க‌ள் ப‌ற‌ந்து வ‌ந்து மேலே விழுகிற‌து. இதையெல்லாம் கூட‌ ஏதோ ஒரு வித‌த்தில் ச‌கித்துக் கொள்ள‌லாம்.

ஆனால் பிச்சைக்காரர்கள், குட்டிகுர‌ங்குக்கு டிர‌ஸ் எல்லாம் போட்டு, கையோடு கூட்டிக் கொண்டு வ‌ருகிறார்க‌ள். பிச்சையெடுக்கும்போது, அந்த‌ குர‌ங்கை ந‌ம் மேல் ஏற‌விட்டு ஒருவித‌மான‌ அசௌக‌ரிய‌த்தை(பயம்?) ஏற்ப‌டுத்தி எல்லாரையும் அந்த‌ விட்டு கெள‌ப்பி விடுகிறார்க‌ள். க்ரூப்பாக உட்கார்ந்த்திருந்த பொண்ணுங்க, பக்கத்தில் வந்ததும் கூச்சலுடன் தலைதெறிக்க ஓடிவிட்டார்கள். நாங்க‌ள் தூர‌த்தில் அவ‌ர்க‌ள் வ‌ருவ‌தை பார்த்த‌விட‌ன் எஸ்ஸாகி விட்டோம். இதையெல்லாம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் க‌வ‌னிக்க‌ மாட்டார்க‌ளா?

()

டிஸ்கி: லைட்டாக சுஜாதாவின் "கற்றதும் பெற்றதும்" டெம்ப்ளேட்டில் எழுதலாம் என்று டிரை பண்ணி இருக்கிறேன். கொஞ்சம் பொறுத்தருளவும். வாரம் வாரம் வர்ரும். டைட்டில் காப்பிரைட் ரிஜிஸ்டர்டு. (இதெல்லாம் ஓவர் மவனே!, அடங்குடா)

....

நாளொரு PizzaHut-டும் பொழுதொரு MaryBrown-னுமாக!

காதலிக்கும் பெண்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்ற நம்ம டாபிக்கில், இன்னைக்கு இரண்டாவது மேட்டர்.

1. ஸ்நாக்ஸ் சாப்பிடுறீயா/என்ன சாப்பிடுற?:

2. "ஹாய், ஹலோ" என அறிமுகபடலத்தில், உஷார்:

இதை உங்கள் காதல் வாழ்க்கையின், தினசரி நடக்கும் ஒரு துயர சம்பவம். உங்க ஆள் கூட எங்கேயாவது வெளியில சுத்திக்கிட்டு இருக்கும்போது, திடீர்ன்னு அவங்க கூட காலேஜ்ல படிச்சவங்களோ இல்லை ஆஃபிஸ்ல வொர்க் பண்றவங்களோ பாத்துட்டாங்கன்னா, நாம தான் டென்ஷன் ஆவோம். ஆனா அவங்க கூலா இருப்பாங்க. நல்லா பழகினவங்கன்னா, நேரா அவங்ககிட்ட போய், "ஹாய், திஸ் இஸ் மை ஃபிரண்ட் *****" (ஃப்ரண்டா, என்ன கொடுமை சார் இது? இருடி உனக்கு "HotDog" கெடையாது.) அப்படின்னு அறிமுகப்படுத்துவாங்க. ஓரளவுக்கு பழக்கம் இல்லைன்னா, அவங்க அதை கண்டுக்க மாட்டாங்க‌. நீங்களும் தான். என்னடா ஒழுங்கா தான போய்கிட்டு இருக்கு? இங்க என்ன பிரச்சினைன்னு கேட்குறீங்களா?
இங்க தான் பிரச்சினையே பாஸ். கொஞ்சம் நல்லா பழகினவங்கன்னா, உங்க ஆளு அவங்கள பத்தி இன்ட்ரோ கொடுப்பாங்க.. லைக்.. என்கூட ஃபைனல் இயர் ப்ராஜெக்ட் ஒண்ணா பண்ணோம் இல்லை ஒரே ப்ராஜெக்ட்ல வொர்க் பண்றோம் மாதிரி. அவங்க ஒரு நிமிஷம் என்ன பேசுறதுன்னு தெரியாம முழிச்சிட்டு, கெளம்பலாம்ன்னு இருக்கும்போது, நம்ம பசங்க வேலையக் காட்ட ஆரம்பிச்சிடுவோம். அவங்க ஒரு பொண்ணா இருந்து, பார்க்க கொஞ்சம்(உங்க ஆள விட)லட்சணமா இருந்துட்டா, நம்ம வழக்கம்போல "ஓ அப்படியா, உங்கள பத்தி அடிக்கடி சொல்லுவா.. BTW நீங்க அங்க தான் வொர்க் பண்றீங்க?" ஹி ஹின்னு ஜொள்ளுவிட ஆரம்பிப்போம். அதுக்குள்ள அங்க இருந்து ஒரு கோபமான, கேவலமான, வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவுக்கு லுக் விடுவாங்க. ஆற்காட்டார் மட்டும் அவங்கள மாதிரியான ஆளுங்கள பார்த்து, அவங்க காதுல இருந்து வர்ற கோபப்புகையை பயன்படுத்தி மின்சாரம் எடுத்தார்னா, தமிழ்நாட்டுக்கு காதலர்கள் இருக்கிறவரை மின்சார தட்டுப்பாடே வராது.

ஒருவேளை நம்ம கெட்டநேரம், ஃப்ரண்ட் ரொம்ப நச் ஃபிகரா இருந்தா, நாம ஆள் இருக்கிறதையே மறந்துட்டு, அப்படியே கடலை போட்டுகிட்டு வானத்தில பறந்துகிட்டு இருப்போம். தப்பி தவறி, இந்த மாதிரி சூழ்நிலையில மட்டும் மாட்டிகிட்டீங்கன்னா, அவ்வளவு தான் உங்கள ரெண்டு பேர சமாளிக்கிற முருகன்(கடவுள்ங்க) வந்தா கூட காப்பாத்த முடியாது. அதுக்கப்புறம் ஒரு வயசான பாட்டிக்கிட்ட கூட பேசாம, பெண்கள் காற்று உங்க பக்கம் கொஞ்சம் கூட‌ அடிக்காம, ஒரு சாமியார் மாதிரி(போலி சாமியார்னா, சங்கு தான்டி.. ஸ்ட்ரெய்ட் டிக்கெட் டூ நரகம்) இருந்தீங்கன்னா, ரெண்டு வாரம் கழிச்சி அவங்க உங்க பக்கம் ஆறுதல் பார்வை திரும்ப வாய்ப்பு இருக்கு. நாளொரு PizzaHut டும் பொழுதொரு MaryBrown னுமாக காதலை மீண்டும் வளர்க்கவேண்டும்.

இந்த டைம்ல பொண்ணுங்க நோட் பண்றதுக்கு ஒரு மேட்டர் இருக்கு. ஒருவேளை நீங்க இன்ட்ரோ கொடுக்கிற ஆள் மட்டும் பையனா இருந்தா, அவன் உங்க நல்ல ஃப்ரண்டா இருந்தா, தலைவர் "ஒரு ஹாய்" மட்டும் சொல்லிட்டு அங்கே இருந்து எஸ்ஸாகி விடுவார். மனசுக்குள் அவன அசிங்கம் அசிங்கமா திட்டுவார். ரெண்டு நிமிஷம் பார்ப்பார். அப்படியும் நீங்க வரலைன்னா, டீசன்டா உள்ளே புகுந்து "அப்புறம் போன வாரம் உங்களை அடையார் டிப்போ பக்கத்துல் இருக்க பார் பக்கம் பார்த்தேன்" அப்படின்னு உங்க ஃப்ரண்ட ஓட ஓட துரத்துற மாதிரி நோஸ்கட் பண்ணி அனுப்பி வச்சிடுவார். இது தாங்க பசங்க திறமை. மைண்ட்ல வச்சிக்கோங்க.

பேக் டூ பாய்ஸ்: உங்க காதலிக்கு தங்கச்சி இல்லாமல் இருந்தால், உங்கள் காதல் லைஃப், ஃப்ளைட்ல‌ போற மாதிரி ஸ்மூத்தா, ட்ராவல் பண்றதே தெரியாத மாதிரி போய்கிட்டே இருக்கும். ஒரு வேளை இருந்தால், கொஞ்சம் அழகாகவும் இருந்தால், உங்க ஆளை விட ரெண்டு வயசு கம்மியாக இருந்தால், இத்தனை 'இருந்தால்' இருந்த்தும் "நீங்க நல்லவர், ராமன்(இவரும் கடவுள்ங்க) மாதிரி நல்ல பழமாக இருந்தால்" மட்டும் தொடருங்கள். உங்க காதல் லைஃப் கெட்டி. இல்லையென்றால், மனசாட்சியை கொஞ்ச நாள் கழற்றி டாஸ்மாக்கில் தொங்கவிட்டு விட்டு, இந்த காதலை கட் பண்ணிவிடுங்கள். ஏன் தெரியுமா? "தெரியும்டா, கொஞ்சம் சின்னபொண்ணா, என்னவிட அழகா இருக்கிறதுனால‌, ஜொள்ளு விட்டு அவளுக்கு தெனமும் SMS பண்ண ஆரம்பிச்சிட்ட. ஒருநாளாவது எனக்கு நீ குட் மார்னிங் SMS அனுப்பி இருக்கியா?" இந்த மாதிரி எதுக்கெடுத்தாலும் சண்டை போட்டு, ஒரு நாளும் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள். நீங்க மறந்தாலும், அவங்களே நியாபகப்படுத்தி சண்டை போடுவார்கள். நாளடைவில் உங்க ஆளுக்கு, இதுவே ஒருவித காம்ப்ளக்ஸாக மாறி விடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. உஷார்.
முழிச்சிக்கோ, ஃபிகர கரெக்டா மெயின்டெயின் பண்ணி பொழச்சிக்கோ!

(டிப்ஸ் இன்னும் வரும்)

**********************

சத்தியமாக புரிய‌வில்லை!


சத்தியமாக புரிய‌வில்லை
கல்லூரி இறுதிநாள் விழாவில்
எனக்கு காதல் கல்யாணம் தான்
என்று நீ சொன்ன போது,

சத்தியமாக புரிய‌வில்லை
உனக்கு வேலை கிடைத்ததை
நீ என்னிடம் தான் முதலில்
சொன்னாய் என்று
அந்தி மங்கிய மாலையில்
என்னிட‌ம் நீ சொன்ன‌ போதும்,

சத்தியமாக புரிய‌வில்லை
வேலை மும்பைக்கு மாற்றம்
என கண்ணை கசக்கி
வருந்தி சொன்ன போதும்,

சத்தியமாக புரிய‌வில்லை
உன் தோழியுடன் டூவீல‌ரில்
சென்ற‌ நாட்க‌ளில்
என்னிட‌ம் சிடுசிடுத்த‌போதும்,

ச‌த்திய‌மாக‌ புரிய‌வில்லை
வ‌ழிய‌னுப்ப‌ பின்னிர‌வில்
ஏர்போர்ட்டுக்கு நீ த‌னியொரு
பெண்ணாக‌ வ‌ந்த‌ போதும்,

ச‌த்திய‌மாக‌ புரியவில்லை
என்னுடைய பிற‌ந்த‌நாளுக்கு
புட‌வையை சும‌ந்து
சிவ‌க்க‌ சிவ‌க்க‌ வெட்க‌த்தை
உடுத்தி வ‌ந்த‌ போதும்,

சத்தியமாக புரிய‌வில்லை
ஏதோ ஒரு விவாதத்தில்
த‌லையில் குட்டி
"இது கூடவா பொண்ணுங்க
வெட்கத்தை விட்டு சொல்லுவாங்க"
என சொல்லி வெட்கச்சிரிப்பு
உதிர்த்த‌ போதும்,

வாக‌ன‌ங்க‌ளின் இரைச்சலின் ஊடே,
பாஸ்ப‌ர‌ஸ் விள‌க்கின்
வெளிர் மஞ்சள் வெளிச்சத்தில்,
"உன்னை ல‌வ் ப‌ண்றேன்டா, இடிய‌ட்"
என்று ஒற்றை ரோஜாவுட‌ன்,
விரும்புகிறேன்
என்று நீ சொல்லும்வ‌ரை!

ஒரு ஹைக்கூ

நீ கடித்து கொடுத்த‌ க‌ட்லெட்
நீ: "எப்ப‌டியிருக்கு"
நான்: "சாக்லெட் சூப்ப‌ர்"

...

VALKYRIE - திரை விமர்சனம்

ஒரு நாட்டின் தலைவரை, அந்நாட்டு ராணுவமும், மக்களும் 42 தடவை கொலை செயவதற்கு முயற்சி செய்துள்ள்ளார்கள். ஆனாலும் அவர் சாகவில்லை. ஒரு கட்டத்தில் அவரே தற்கொலை செய்துகொண்டார். இந்த மோசமான புள்ளியியல் தகவலுக்கு சொந்தக்காரர் இரண்டாம் உலகப்போரில் கெட்ட அடி வாங்கிய ஜெர்மனியின் சர்வாதிகாரி, அடால்ஃப் ஹிட்லர். இந்த 42 முயற்சிகளிலும், ஹிட்லர் மோசமாக அடிபட்டு, கிட்டத்தட்ட சாவை பக்கத்தில் பார்த்துவிட்டு திரும்பிய ஆபரேஷன் தான் "VALKYRIE". (பைக் ஆக்சிடென்ட் ஆகிறதுக்கு முன்னால, படம் பார்த்தேன்னு சொன்னேன்ல, அது இந்த படம் தான்). இது முழுக்க முழுக்க, ஹிட்லரின் நாசிப்படை தளபதிகளால் திட்டமிடப்பட்டு, நடத்தப்பட்ட அட்டாக்.

டாம் க்ரூஸ், இந்த திட்டத்தின் போர்ப்படை தளபதி. மற்றபடி வேறு யார் யார் நடித்தார்கள் என்று தெரியவில்லை. ஹிட்லராக நடித்தவரின், பாடி லாங்குவேஜ் அசத்தலாக இருந்தது. அந்த குறுமீசையும், "இந்தியன்" தாத்தா மாதிரி ஹேர் ஸ்டைலும், கொஞ்சம் தளர்வாக நடக்கும் நடையும் அற்புதம்.

நாசி படைகள், ஆஃப்ரிக்காவில் நடக்கும் போரில் இருந்த போது, அங்கு இருந்த டாம் க்ரூஸ் எதிரி நாட்டு படைகளால், மிகவும் கொடுமையான முறையில் தாக்கப்பட்ட சம்பவத்தில் இருந்து படம் ஆரம்பிக்கிறது. அந்த சண்டையில் அவரது வலது கையின் முன்பகுதி முழுவதும் சிதைந்து விடுகிறது, இடது கண்ணிலும் முழுமையாக பார்வை போய் கண்ணையே எடுத்து விடும் அளவுக்கு அடி. அந்த நேரத்தில், சிறுபிள்ளைத்தனமான தலைவரால், நாசி படை வீரர்கள் தினமும் இப்படி இறக்க வேண்டி இருக்கிறதே என்று ஃபீல் பண்ணி "VALKYRIE" என்னும் திட்டத்தை தீட்டுகிறார்.

அதாகப்பட்ட திட்டம் என்னவென்றால், ஜெர்மனிக்கு எமர்ஜென்சி சூழ்நிலை ஏதாவது வந்துவிட்டால், நம்மிடம் இருக்கும் ரிசர்வ் ராணுவப்படையை பயன்படுத்தி முக்கிய நகரங்களான பெர்லின், முனீச் இடங்களில் உள்ள ராணுவ தலைமை இடங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். எமர்ஜென்சி சூழ்நிலை என்றால், ரஷியப்படைகள் ஜெர்மனியை சுற்றிவளைத்துவிட்டாலோ அல்லது வேறு நாட்டு படைகள் உள்ளே புகுந்துவிட்டாலோ, இதுவும் இல்லை ஒருவேளை ஹிட்லரே இறந்துவிட்டாலோ, இந்த அவசர திட்டம் அமல்படுத்தப்படும். இது தான் VALKRYIE ஆபரேஷனின் சாராம்ஷம். அப்படி இப்படி என்று ஏதேதோ பேசி ஹிட்லரையே கன்வின்ஸ் பண்ணி, அவரை இந்த ஆபரேஷன் பேப்பர்ஸில் கையெழுத்து போட வைத்து விடுவார்கள்.

இந்த திட்டத்தில், டாம் க்ரூஸ் உள்ளிட்டோர் டார்கெட் பண்ணிய பாயிண்ட், ஹிட்லர் இறந்தாலும், VALKRYIE ஐ நடைமுறைப்படுத்தலாம் என்பதே. அதற்காக கிழக்கு ஜெர்மனியின், ரஷ்ய எல்லைப்பகுதியில் நடக்கும் ரகசிய மீட்டிங்கில், அவரை தீர்த்துக்கட்ட பிளான். அதற்காக டெட்டனேட்டரில் டைமர் செட் பண்ணி வெடிக்க வைப்பதாக திட்டம். முதல் முயற்சியில், இத்தாலியின் முசோலினி எதிர்பாராதவிதமாக வந்து விடுவதால், அத்திட்டம் தோல்வியில் முடிகிறது. அதற்கடுத்த வாரமே (ஜூலை 20, 1944), நடக்கும் மீட்டிங்கில் அவர்களின் திட்டம் வெற்றியில் முடிகிறது. நாடு முழுவதும் எமர்ஜென்சி அமல்படுத்தப்படுகிறது. ஹிட்லர் ஆதரவாளர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆனால் அதிர்ஷடவசமாக(துரதிருஷ்டவசமாக) ஹிட்லர் பெரும் காயங்களுடன் தப்பித்துவிடுகிறார். இந்த உண்மையெல்லாம்(அதாவது ராணுவ தளபதிகளின் ரகசிய திட்டம்) ஜெர்மனி மக்களுக்கு தெரிய வரும்போது, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு நடுரோட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

(இந்த படத்தின் கதையை சொல்வதற்குள், தாவு தீர்ந்துவிட்டது. இதற்கப்புறம் விமர்சனம் வேற. அடப்போங்கப்பா..என்னடா பெரிய‌ ஹாலிவுட் படம்.. இனிமே தமிழ் சினிமா மக்களை பார்த்தாவது கதையே இல்லாமல் மூணு மணிநேரம் எப்படி ஓட்டுவது என்று தெரிஞ்சிக்கோங்க..)

படம் முழுவதும் டாம் க்ரூஸ், ஒரு கண்ணை மூடியபடி வருகிறார். ஹிட்லரை பார்த்து பேசும்போது மட்டும், செயற்கை கண்ணை எடுத்து கண்ணின் குழிக்குள் பொருத்தி நார்மல் மனிதன் போல் இருக்கிறார். தலையே திருப்பும்போது அந்த கண்ணின் கருவிழிகள் நகராமல், அது செயற்கை கண் என்று உணர்த்தும்படி சிறப்பாக செய்துளார்கள். ஹிட்லரின், ப்ரைவேட் பங்களா இருக்கும் இடம் அட்டகாசம். இது ஒரு பீரியட் ஃபிலிம் என்பதை ஆங்காங்கே நியாபகப்படுத்துகிறார்கள். டிரங்க் கால்ஸ், மெகாஃபோனில் பாட்டு கேட்பது, மை பேனாவில் கையெழுத்து போடுவது, தந்தி அடித்து ராணுவ ரகசியங்கள் அனுப்புவது என்று ஓரளவு நம்மை அந்த காலத்துக்கு இழுத்து செல்கிறார்கள்.

ஹிட்லரை கொலை செய்யும் அந்த இடம், நல்ல பரபரப்பான க்ரைம் நாவலுக்கான உண்டான விறுவிறுப்பு. டெட்டனேட்டரை ஆன் செய்த ஹேண்ட் பேக்கை மீட்டிங் ஹாலில் ஹிட்லர் கால் அருகில் விட்டு விட்டு, டாம் க்ரூஸ் அந்த இடத்தை விட்டு எஸ் ஆவதும், பின்னர் மீட்டிங்கில் ஒரு கட்டத்தில் ஹிட்லர் கோபமாக மேஜையைக் குத்த அவர் காலடியில் இருந்த பேக், கீழே விழுவதும், அதை அருகில் அமர்ந்து இருப்பவர், தூரத்தில் தூக்கி வைப்பதும் தான், ஹிட்லர் உயிர்பிழைத்ததற்கு காரணம்.(என்பதை படம் முடிந்தவுடன் தான் உணர்வீர்கள்). அங்கிருந்து காரில் செக்போஸ்டை டாம் க்ரூஸ் கடந்து வரும் வரையில் அந்த பரபரப்பு பின்னி எடுக்கிறது.

வழக்கமான இங்க்லீஷ் படத்தில் வரும் சண்டை, கிஸ், பெட்ரூம் சீன், blah, blah எதுவும் இந்த படத்தில் இல்லை. ஸோ, அப்பீட் ஆயிருங்க.(ஏமாந்தவன் சொல்றேன், கேட்டுக்கோங்க) பீட்டர் பீட்டர் மற்றும் பீட்டர் ஒன்லி. மக்கா, பேசிகிட்டே இருக்காய்ங்க.. சப் டைட்டில், இல்லாமல் படம் பார்த்தால் ஒன்றும் புரியாமல், பக்கத்து வீட்டு எல்.கே.ஜி படிக்கும் பாப்பாவிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டி இருக்கும். மேலும் ஹிஸ்டரி கொஞ்சம் தெரிஞ்சி இருக்கணும். உஷார். (சத்யம் தியேட்டரில், சப்டைட்டில் போட மாட்டாங்களா??????????)

**********************
கொசுறு: இந்த சம்பவம் உண்மையிலே நடந்தபோது, தப்பித்த ஹிட்லரின் கிழிந்துபோன பேண்ட். மனுஷன், எவ்வளவு அடிவாங்கியிருக்கார்னு பாருங்க.

Thanks: WIKIPEDIA

..

(காதலிக்கும்)பெண்கள் பேசும் வார்த்தைகளின் அர்த்த‌மே வேற‌!

கணவன் மனைவியை அடக்கி ஆள்வதும், மனைவி கணவனை மிரட்டி வாழ்வதும், கட்டுபெட்டித்தனமான வாழ்க்கையின் ரெண்டு எக்ஸ்ட்ரீம் கேட்டகிரிஸ். ஆனால் ரெண்டுக்கும் இடைப்பட்டு எதற்கெடுத்தாலும் முறைக்கும், சிணுங்கும் மனைவி, தொட்டதற்கெல்லாம் மனைவிக்கு பயந்து நடுங்கும் அல்லது பயந்தது மாதிரி நடிக்கும், செல்லமாக கோபப்படும், சண்டைபோடும் கணவன். இவர்கள் இருவர் என்றுமே இளமையாக இருக்கும் திருமண பந்தத்தின் உயிர்நாடி.

அதேபோல் தான் காதலும், காதலர்களும். சண்டைக்கோழிகளாக எந்நேரம் அடித்துக் கொண்டு திரியும் ஈகோ மோதல்கள், நைட் தூங்கபோறதுக்கு முன்னால "ஐ லவ் யூ"ன்னு காதல் SMSல முடியும். 'உன்னாலே உன்னாலே' படத்தில் வரும் ஃபேமஸ் டையலாக். பொண்ணுங்க, "Thanks"னு சொன்னா, "நீ பண்ண இந்த மொக்கை வேலைக்கு இது ஒண்ணு தான் கொறச்சல்"ன்னு அர்த்தம். இது மாதிரி போகும். பொண்ணுங்களோட ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். அது புரியாம பேக்கு மாதிரி இருந்தா பையனோட மூக்கு உடைஞ்சிடும். இந்த பதிவு, அந்த மாதிரி பசங்களுக்கு ஹெல்ப் பண்ணும் நோக்கத்துடன் பதிவு செய்யப்படுகிறது. மே பி, ஃப்யூச்சர்ல எனக்கு கூட யூஸ் ஆகலாம். Girls, please excuse me.
1) ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வ‌ர‌ட்டுமா/என்ன‌ சாப்பிடுற‌?

பாஸ், நீங்க‌ ரெகுல‌ரா சினிமாவுக்கு ஜோடியா போகின்ற ஆளா? அப்ப‌டின்னா, க‌ண்டிப்பா இந்த‌ கேள்வியை உங்க‌ ஆளிட‌ம் இர‌ண்டு மூன்று த‌ட‌வையாவ‌து கேட்டு நோஸ்க‌ட் வாங்கி இருப்பீர்க‌ள். ந‌ல்ல‌ ப‌ட‌மோ, மொக்கை ப‌ட‌மோ இன்டெர்வெல்லில் ம‌ட்டும் சீட்டில் ஒரு நிமிஷ‌ம் கூட‌ ந‌ம்ம‌ ப‌ச‌ங்க‌ளால் உட்கார‌ முடியாது. ஃபிகரோட போயிருப்பதால் தம்மும் அடிக்க முடியாது. ஆனால் பொண்ணுங்க‌, பிடித்து வைத்த‌ பிள்ளையார் மாதிரி உட்கார்ந்து செல்போனை எடுத்து நோண்டிக் கொண்டிருப்பார்கள்(ஏழாம் உலகம்?). ஓ.கே அது வேற‌ டாபிக். ந‌ம்ம‌ மேட்ட‌ருக்கு வ‌ருவோம்.

ரொம்ப‌ ஜென்டிலாக‌, நீங்க‌ வெளியே போகும்போது "நீ ஏதாவ‌து சாப்பிடுறீயாம்மா?" என்று கேட்பீர்க‌ள். உட‌னே அவ‌ங்க‌ உங்க‌ள ஒரு முறை முறைச்சிட்டு, "ஒண்ணும் வேணாம்" என்று சொல்வார். நீங்க‌ளும், ஒண்ணும் வேணாம்ன்னுட்டாளே, ந‌ம்ம‌ளும் எதுவும் ஸ்நாக்ஸ் வாங்க‌ வேணாம்ன்னு ச்சும்மா வெளில‌ போயி ம‌த்த‌ ஃபிக‌ர்ஸ‌ சைட் அடிச்சிட்டு, ப‌ட‌ம் போட்ட‌வுட‌னே உள்ளே வ‌ந்துடுவீங்க‌. அதுக்கு அப்புற‌ம் மேட‌ம், ப‌ட‌ம் முடிஞ்சி வெளியே வ‌ந்த‌தில் இருந்து, அன்னைக்கு நைட் தூங்குற‌து வ‌ரைக்கும் உங்க‌கூட சரியாவே பேச‌வே மாட்டாங்க‌.

அவ‌ங்க‌ ச‌ரியா பேச‌லைன்னு, உங்க‌ளுக்கு அடுத்த‌ நாள் ஆஃபிஸ்ல‌ உட்கார்ந்து இருக்கும்போது தான் புரியும். உட‌னே ஃபோன் ப‌ண்ணி, என்ன‌ ஏது என்று விசாரித்தால், "நான் கோபமாக இருக்கேன்"ன்னு கண்டுபிடிக்க உனக்கு இவ்வளவு நேரம் ஆச்சான்னு 15 நிமிஷம் கன்னாபின்னான்னு திட்டிட்டு, மறுபடியும் பழைய பிரச்சினைக்கு வந்து அர்ச்சனையை ஆரம்பிப்பாங்க.

"இங்க‌ பாரு, ந‌ம்ம எங்கே ப‌ட‌த்துக்கு போயிருக்கோம்? க‌ம‌லா தியேட்ட‌ருக்கு. அங்க‌ எத்த‌னை த‌ட‌வ‌ நாம‌ போயிருக்கோம். அங்க‌ கெடைக்கும் ஜிகீர்த‌ண்டா என‌க்கு ரொம்ப‌ பிடிக்கும்ன்னு தெரியாதா? இல்லை தெரிஞ்சிட்டே தான் என்ன சாப்பிடுறேன்னு ந‌க்க‌லா கேட்டீயா? நீ கேட்டு இருப்ப‌டா?" என்று 15 நிமிட‌ம் மூச்சி விடாமல் உங்க‌ளை தாளித்து எடுத்து விடுவார்க‌ள். உங்க‌ளை, "என்ன‌ கொடுமைடா இது? கேட்காம‌ இருந்தா தான் த‌ப்பு? நான் கேட்டேன். கேட்டும் திட்டும் வாங்குறேனே?" அப்ப‌டின்னு ஃபீல் ப‌ண்ணுவீர்க‌ள். ம‌ற‌ந்தும் வாயை திற‌ந்து ஆர்கியூ ப‌ண்ணாதீர்க‌ள். அது உங்க‌ள் உட‌ல்ந‌ல‌த்துக்கும், ப‌ர்ஸ்ந‌ல‌த்துக்கும் ந‌ல்ல‌து. இல்லையென்றால் ச‌ண்டை பெரிதாகி மோக்காவில் 75 ரூபாய்க்கு ஐஸ் காஃபி வாங்கி கொடுத்து க‌ன்வின்ஸ் ப‌ண்ண‌ வேண்டி இருக்கும்.

பாஸ், உங்க‌ளுக்கு ஒரு அட்வைஸ். உங்க‌ ஆளுட‌ன் ரெகுல‌ரா ப‌ட‌த்துக்கு போறீங்க‌ன்னா, ஒவ்வொரு தியேட்ட‌ர்ல‌யும் என்ன‌ ஸ்பெஷ‌ல், அது உங்க‌ ஆளுக்கு பிடிக்குதா, அப்ப‌டி இப்ப‌டின்னு மொக்க‌யான‌ டேட்டாவை எல்லாம் க‌லெக்ட் ப‌ண்ணி டேட்டாபேஸ்ல‌ ஸ்டோர் ப‌ண்ணி வ‌ச்சிக்கோங்க‌. ஆனா "த‌னியாவோ, ப‌ச‌ங்க‌ளோடோ போனால் 4 ரூபாய்க்கு கிங்க்ஸோடு முடிஞ்சிருக்கும்" டேட்டாபேஸ் கிரியேட் பண்ணும்போது இந்த‌ மாதிரியான‌ தாட்ஸ் வ‌ராம‌ல் பார்த்துக் கொள்ளுங்க‌ள்.

முழிச்சிக்கோ, ஃபிக‌ர‌ க‌ரெக்டா மெயின்டெயின் ப‌ண்ணி பொழ‌ச்சிக்கோ!

எச்சரிக்கை: ஒரு கேள்வியே பெரிய பதிவாக‌ போன‌தால், இதே போல் ப‌திவுக‌ள் எதிர்கால‌த்தில் தொட‌ர்ந்து வ‌ரும் என்று அனைவ‌ருக்கும் அறிவுறுத்த‌ப்ப‌டுகிற‌து.

**********************

ஒவ்வொரு ம‌னுஷ‌னுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!

தினேஷும், கீர்த்தனாவும் சிறந்த(means டீசன்டான) காதலர்கள், 2007 டிசம்பரில் இருந்து. அதற்கு முன்னால் இருந்தே ஒரு வித நேசம், பாசம் இருவரிடமும். பையன் ரொம்ப ரொம்ப ஜாலி டைப். அவள், கொஞ்சம் எமோஷனல் அண்ட் சீரியஸ். அதை காதல் என்று அப்போது தான்(எப்போது தான், அதான் 2007 டிசம்பரில் இருந்து) இருவரும் உணர்ந்த்து, தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். தினேஷ் ஒரு ஐ.டி கம்பெனியிலும் கீர்த்தனா வேறொரு ஐ.டி. கம்பெனியிலும் தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எந்தவித மனகசப்பும், சண்டையும் இல்லாமல் பெர்ஃபெக்ட் அன்டர்ஸ்டேன்டிங்கில் கபாலீஸ்வரர் கோவில், பெசன்ட் நகர் பீச், சத்யம் சினிமாஸ், லேட் நைட் சாட்டிங்க்ஸ் என்று ஸ்மூத்தாக ஓடிக் கொண்டிருந்த காதல் வாழ்க்கையில், தினேஷுக்கு கொஞ்ச நாளாக ஃபீலிங். ஒவ்வொரு ம‌னுஷ‌னுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்.

கீர்த்தனா, ஒழுங்காக கால் பண்ணுவதில்லை; ஈவினிங் பார்க்க வரவிடாமல் ஆஃபிஸில் ஓவர் பிஸி; எப்போது பார்த்தாலும் டார்கெட், டெலிவரி, அப்ரைசல் என்று புலம்பல்கள். இதெல்லாம் அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. 2000 ரூபாய் தண்டம் ஆனாலும் பராவயில்லை என்று,அவளுக்கு பிடித்த ஷாப்பிங்க்கிற்கு அழைத்தாலும் வராமல்,வீக் எண்டிலும் ஆஃபிஸ் போய்க் கொண்டிருக்கிறாள். ரொம்ப ஃபார்மலாக லஞ்ச் பிரேக்கிலும், டீ டைமிலும் கால் பண்ணி, கொஞ்ச நேரம் பேசி கட் பண்ணிவிட்டாள். இவனுக்கு எரிச்சலாக இருக்கும். கடைசியாக, "நான் கடவுள்" பார்த்தது. ஒரு மாதம் ஓடிவிட்டது. சத்யமில் "VALKRIE" படத்துக்கு கூப்பிட்டாலும், "Project in RED" என்று பசி, தூக்கம், காதல் இல்லாமல் ஆஃபிஸே கதி என்று ஆகிவிட்டாள்.

இவள் தேற மாட்டாள் என்றும் ஒன்றுக்கும் உதவாத ரூம் மேட்ஸுடன் சேர்ந்து சத்யம், செகண்ட் ஷோவுக்கு டிக்கெட் புக் பண்ணிவிட்டான். படமும் பார்த்துவிட்டான்.படம் முடிந்து 12.30க்கு வெளியே வந்து டூவீலரில் அப்பிராணி நண்பனை பில்லியனில் ஏற்றிக் கொண்டு விர்ரென்று கெளம்பி போய்க் கொண்டிருந்தான்.

யாருமே இல்லாத மவுண்ட் ரோடில், ஜில்லென்று முகத்தில் அடிக்கும் குளிர் காற்றை ரசித்துக் கொண்டே ஓட்டினான். ஹெல்மெட்டை கழட்டிக் கொண்டு ஓட்டலாமா? என்று ஒரு செகண்ட் யோசித்தான். இல்லை, வேணாம் என்று முடிவு பண்ணிவிட்டு, மூன்றிலிருந்து நான்காவது கியருக்கு மாற்றி 75Km ல் விரட்டி கொண்டிருந்தான்.பின்னால் உட்கார்ந்தவன்,எதையும் கண்டுகொள்ளாமல் அவன் கேர்ள் ஃப்ரெண்டுக்கு குட் நைட் SMS அனுப்பிக் கொண்டு, மொபைல் ஃபோன் பார்த்து சிரித்துக் கொண்டு வந்தான்.

சைதாப்பேட்டை ப‌ஸ் ஸ்டாண்ட் ஓர‌த்தில், போய்க் கொண்டிருந்த கால் டாக்ஸி நிறுத்தி விட்டான். அவ‌ன் பின்னால், அதாவ‌து தினேஷுக்கு 200 அடி முன்னால் போன‌ மாருதிகார‌ன் ரைட்டில் வ‌ளைத்து திருப்பி, அதே ஸ்பீடில் கெள‌ம்பி போய்விட்டான். தினேஷ் கொஞ்ச‌ம் முன்னால் போய் ரைட் ஒடிக்காம‌ல், 200 அடி முன்னாலேயே ரைட்டில் லைட்டாக‌ ஒடிக்க‌, பின்னாலே அதிவேக‌த்தில் வ‌ந்த‌ டாடா சுமோ லேசாக‌ த‌ட்டிவிட‌ இருவ‌ரும் பேலன்ஸ் தடுமாறி ந‌டுரோட்டில் த‌ரையை உர‌சி விழுந்தார்க‌ள். பின்னால் உட்கார்ந்த‌வ‌னின் காலை உர‌ச‌வில்லை, தினேஷ் காலையும் உர‌ச‌வில்லை. விதி யாரை விட்டது. ரைட் ஹேண்ட் பாரையும், ரிய‌ர் வியூ மிர்ர‌ரையும் ந‌ன்றாக இடித்து திருப்பிவிட்டான் சுமோகார‌ன். 200 அடி த‌ள்ளி நிறுத்தினான். இருவ‌ர் உயிருக்கும் எந்த‌ பிர‌ச்சினை என்று தெரிந்த‌தினால் தான் என்ன‌மோ, அவ‌ன் அடித்து தூள்கெள‌ப்பி கெள‌ம்பிவிட்டான். இருவ‌ருக்கும் வ‌ல‌து காலின் முட்டி ஏரியா முழுவ‌திலும், கால் க‌ட்டைவிர‌லின் முன்னாலும் ஏதோ குத்தி கிழிந்து ர‌த்த‌ம் கொட்டிய‌து. தினேஷுக்கு, கொஞ்ச‌ம் எக்ஸ்ட்ரா.. வ‌ல‌து கை பின்புற‌ம் முழுவ‌தும் உராய்ந்துவிட்ட‌து. வ‌ல‌து தோள்ப‌ட்டையில், ர‌த்த‌மே வ‌ராம‌ல் மினி இட்லி சைஸுக்கு வ‌ட்ட‌மாக‌ தோள் உராய்ந்து வெள்ளைத்த‌சை ப‌ல் இளித்த‌து. இவையெல்லாம் ஜீன், டீஷ‌ர்ட் கிழிந்து விழுந்த‌ அடிக‌ள்.

ஹெல்மேட் இருந்த‌தால் த‌லை த‌ப்பிய‌து தினேஷுக்கு. ஹெல்மேட் உர‌சியும் தாடை தோல் கிழிந்து இருந்த‌தை ம‌றுநாள் காலையில் தான் பார்த்தான். அவன் ந‌ண்ப‌ன், விழுந்த‌ அடியுட‌ன் அவ‌ன் கேர்ள் ஃபிரெண்டிட‌ம் அழுது புல‌ம்பிக் கொண்டிருந்தான். தினேஷ், அவன் காதலியை யோசித்து பார்த்தான். இப்போது தான் ஆஃபிஸில் இருந்து திரும்பி அய‌ர்ந்து தூங்கிக் கொண்டிருப்பாள்; டிஸ்ட‌ர்ப் ப‌ண்ண‌ தோன்ற‌வில்லை.

ஆஸ்பிட்ட‌ல் எதுவும் செல்லாம‌ல் நேராக‌ ரூம் வ‌ந்து விட்டன‌ர். தினேஷுக்கு வ‌லி தாங்க‌ முடியவில்லை. முட்டியில் தெறிக்கும் வ‌லி, உச்சி ம‌ண்டையில் சுத்திய‌ல் வைத்து அடித்த‌து போல் இருந்த‌து. த‌ம், த‌ண்ணி அடிக்க மாட்டேன் என்று கீர்த்துவுக்கு ப‌ண்ண ப்ராமிஸை முத‌ல் முறையாக‌ மீறி, த‌ம் அடிக்க‌ வேண்டும் என்று தோன்றிய‌து. த‌ம் அடிப்பவ‌ர்க‌ளை திருந்த‌விட‌க்கூடாது என்று க‌ங்க‌ண‌ம் கட்டிக் கொண்டு இருப்பார்க‌ள் போல பெட்டிக்கடைகாரர்கள், அவ‌ர்க‌ள் ம‌ன‌ம் ச‌ஞ்ச‌ல‌ப்ப‌டும் அந்த‌ க‌ண‌நேர‌த்தையும் வீண‌டிக்காமல் நைட் எந்நேரமும் 24Hrs கிங்ஸ் கிடைக்கும் கடையை திறந்து வைத்து இருக்கிறார்கள். அவ‌னுக்கு த‌ம் அடிக்கும் சென்சேஷ‌ன் வ‌ந்த‌ ரோட்டில் பார்வையை செலுத்தும்போது ஒரு க‌டை பாதி திற‌ந்து இருந்த‌து. ஹால்ஃப் பாக்கெட் கிங்ஸும், ஒரு ச்சில் வாட்ட‌ர் பாக்கெட்டும் வாங்கினான். ஹெல்மெட்டைக் க‌ழ‌ற்றி முக‌த்தைக் க‌ழுவினான்.

நைட் முழுவ‌தும் தூக்க‌ம் வ‌ர‌வில்லை. ஆனால் தூக்க‌மும், வ‌லியும் த‌லையையும், க‌ண்ணையும் மாறி மாறி அடித்த‌து. காலையில் முத‌ல்வேலையாக‌ ஹாஸ்பிட‌ல் போய் காய‌த்திற்கு டிர‌ஸ்ஸிங் ப‌ண்ணிவிட்டு, டி.டி இன்ஜெக்ச‌ன் போட்டுவிட்டு திரும்பினான், அவ‌ன் ந‌ண்ப‌னுட‌ன். ப‌த்து ம‌ணிவாக்கில், கீர்த்துவுக்கு ஃபோன் ப‌ண்ணி, நடந்த விஷயங்களை எடிட் பண்ணி "லேசான காயம்தான் டா.. Nothing to worry" என்று சொன்னான். அவ‌ள் ரொம்ப‌ டென்ஷ‌னாகி, "உன்னை யார் ப‌ட‌த்துக்கு போக‌ சொன்னா?" என்று கொஞ்ச‌ம் க‌த்திவிட்டு, "ரொம்ப‌ வ‌லிக்குதா.. நான் வேணா ஈவினிங் வ‌ந்து பாக்க‌ட்டுமா?" என்று ஃபீல் ப‌ண்ணி பேசினாள். எப்ப‌டியோ சொல்லி சமாளித்து, அவ‌ளை வ‌ர‌ வேண்டாம் என்று சொல்லிவிட்டான். ஆஃபிஸுக்கு வியாழ‌ன், வெள்ளி ம‌ட்ட‌ம்.

டாக்ட‌ர் கொடுத்த‌ டேப்ள‌ட்ஸ் எதுவும் வாங்க‌வில்லை. அதை எவ‌ன் சாப்பிடுவான் என்று வாங்க‌வில்லை. இருந்தாலும் வ‌லி பின்னியது. இத‌ற்கு ஒரே வ‌ழி, "Royal Challenge" தான் என்று முடிவு ப‌ண்ணி அந்த‌ காலுட‌ன் ம‌திய‌ம் மூன்றாவ‌து ஃப்ளோரில் இருந்து நொண்டி நொண்டி இற‌ங்கி, "அங்கே" போய் வாங்கிக் கொண்டு த‌ல‌ப்பாக்க‌ட்டு லெக்பீஸ் பிரியாணியும், இதர பொருட்களையும் வாங்கி மாடிப்ப‌டிக‌ள் ஏறினான். கீர்த்துவை காத‌லிப்ப‌த‌ற்கு முன், தினேஷுக்கு இது தான் ஃபேவ‌ரிட் பிராண்ட். அடித்து முடித்த‌வுட‌ன் தொண்டை முழுவ‌தும் இனிக்கும்.வாமிட் வ‌ராது என்ப‌து அவ‌ன் அசைக்க‌முடியாத‌ ந‌ம்பிக்கை.

இர‌ண்டு ர‌வுண்ட் முடிந்த‌வுட‌ன், ஹீரோவுக்கு ஒரே ஃபீலிங். "வ‌ர‌ வ‌ர‌ கீர்த்துவுக்கு என்மேல‌ கொஞ்ச‌ம் கூட‌ ல‌வ் இல்லை. என்னை க‌ண்டுக்கிற‌தே இல்லை. நான் அவள வேலைய விட்டு நிக்க சொல்ல போறேன் மச்சி. அவ இந்த வேலையால தான் என்ன இக்னோர் பண்றா.. உனக்கு தெரியுமா.. அவ‌ என‌க்கு டார்லிங், பேபின்னு SMS அனுப்பி ப‌ல‌ மாச‌ங்க‌ள் ஆச்சி மச்சி. இது தான் ம‌ச்சி அவ‌ என‌க்கு அப்படி அனுப்பின‌ க‌டைசியா SMS" என்று பாஸ்வேர்டு லாக் போட்ட‌ அவ‌ன் மொபைலை அவ‌ன் ஆக்சிடென்ட் ஃபிரெண்டிற்கு காட்டினான். அவ‌ன் அடுத்த‌ SMSஐ இன்பாக்ஸில் நோண்டிக் கொண்டிருக்கும்போது கீர்த்து கால் ப‌ண்ணினாள்.குப்பென்று விய‌ர்த்து,உஃப் உஃப்பென்று ஊதிவிட்டு, "சொல்லுடா" என்றான் தூங்க கலக்கக் குரலில். "ரொம்ப‌ க‌ஷ்ட‌மா இருக்குமா. நான் ஈவினிங் வ‌ர்றேனே..."என்று கெஞ்சி இழுத்தாள். "கிழிஞ்ச‌து கிருஷ்ண‌கிரி, இவ‌ வ‌ந்தா மொத்த‌மும் போச்சி, தண்ணி அடிச்சேன்னு மவனே தெரிஞ்சது, ஏற்கெனவே டொக்கு விழுந்த கால்ல ஹீல்ஸ் செருப்பால மிதிப்பா" என்று ம‌ன‌சாட்சி,சுடுகாட்டு முனி ரேஞ்சில் ப‌ய‌முறுத்த‌, ரொம்ப‌ தெளிவா "இல்லை ஹ‌னீ, ந‌த்திங். i'm just feeling tired and pain. If i have comfortable sleep, i will be alright then!" என்று பீட்ட‌ருட‌ன் தெளிவாக‌ பேச‌வும் "இவ‌ன் தூங்க‌ட்டும்" என்று பெரிய‌ ம‌ன‌து ப‌ண்ணி கீர்த்தி ஃபோனை வைத்துவிட்டாள்.

போதையெல்லாம் இற‌ங்க‌, ந‌ண்ப‌னை டெர்ர‌ராக‌ பார்த்து மிச்ச‌மிருந்த அவன் சரக்கையும் மொத்தமாக சேர்த்து ஒரே க‌ல்ப்பாக‌ அடித்து முடித்தான். இர‌ண்டு நாள் ஆர்.சியுட‌ன் கூத்தும் போதையுமாக‌ என்ஜாய் ப‌ண்ணினான். காய‌மும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ ஆறிய‌து. வ‌ண்டியை ச‌ரி ப‌ண்ணிவிட்டு, வெள்ளிக்கிழ‌மை நைட் அவ‌ளை பார்க்க‌ சென்றான். அவ‌ளுக்காக‌ வெயிட் ப‌ண்ணிக் கொண்டிருந்தான். கீர்த்தி வ‌ந்தாள். அவ‌ன் கையையும், காலில் இருந்த‌ க‌ட்டையும் பார்த்த‌வுட‌ன்,க‌ண்ணீர் விட்டு விசும்ப‌ ஆர‌ம்பித்துவிட்டாள். "என்னமா, இப்படி அடிபட்டிருக்கு.. ஒண்ணுமே இல்லைன்னு சொன்ன.. இதோட நீ எதுக்கு வண்டி ஓட்டி வந்த.. ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான.." என்று அழுதுகொண்டே சொன்னாள். தினேஷுக்கு ஒரு நிமிட‌ம் எப்ப‌டி ரியாக்ட் ப‌ண்ணுவ‌து என்றே தெரிய‌வில்லை. முத‌ல்முறையாக‌ கீர்த்து அழுகிறாள். என‌க்காக‌ அழுகிறாள்.

"த‌ம்மும், த‌ண்ணியுமாக‌ போன‌ ஆக்சிடென்ட், இவ‌ளுக்கு க‌ண்ணீர் விடும் அள‌வுக்கு சோக‌மான நிக‌ழ்வாக‌ உள்ளதே.. இது தான் true love" என்று ஆன‌ந்த அதிர்ச்சியில் கீர்த்தியை இழுத்து த‌லையை உச்சி முக‌ர்ந்தான். கீர்த்தி, அவ‌ன் ஆதரவாக தோளில் சாய்ந்தாள். "இனிமேல் நீ வ‌ண்டி ஓட்ட‌க்கூடாது" என்றாள் க‌ண்டிப்பான‌ குர‌லில். அவ‌ன் ஆன‌ந்த‌த்தில் த‌லையை சரியென்று அசைத்தான்.
ஒவ்வொரு ம‌னுஷ‌னுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்.

டிஸ்கி: பைக், ஆக்சிடென்ட், ஆர்.சி என‌ கீர்த்தி ச‌ம்ப‌ந்த‌ப்ப‌டாத‌ அனைத்தும், என‌க்கும் நேர்ந்த‌வையே. :( கீர்த்தி எபிசோட், சும்மா ஜாலிக்கு. என‌க்கு ஆக்சிடென்ட் ஆச்சுன்னு போஸ்ட் பண்ணா, யார் படிப்பீங்க‌??? அதுக்காக‌ ஏன்டா, காத‌லை வ‌ச்சி வெத்து சீன் கிரியேட் ப‌ண்ணி காதல் ப‌ட‌ம் போடுறே? அப்ப‌டீன்னு கேட்க‌ற‌வ‌ங்க‌ளுக்கு ஒரு கேள்வி.

ஹிந்துஸ்தான் பெட்ரோலிய‌ம்ல‌, ஹிந்துக்க‌ளுக்கு ம‌ட்டும்தான் பெட்ரோல் போடுறாங்க‌ளா? அக்ப‌ர் க‌சாப்பு க‌டைல‌, முஸ்லீம்க‌ளுக்கு ம‌ட்டும்தான் க‌றி கொடுக்குறாங்க‌ளா? இல்லைலே.. அதே மாதிரி.. காத‌ல‌ர்க‌ள் ம‌ட்டும்தான் காத‌ல் கதை, கவிதைன்னு போஸ்ட் போட‌ணுமா? நாங்க‌ போட‌க் கூடாதா?

டிஸ்கிக்கு டிஸ்கி: அந்த‌ "ஹிந்துஸ்தான்...." ப‌ஞ்ச் டைய‌லாக் த‌ற்போது வெற்றிந‌டைபோடும் ப‌ட‌த்தில் இருந்து சுட்ட‌து. அந்த‌ ப‌ட‌த்தின் பெய‌ரை ச‌ரியாக‌ சொல்ப‌வ‌ர்க‌ளுக்கு, ம‌திய‌ம் உச்சி வெயிலில் மேட்னி ஷோவுக்கான(பரங்கிமலை ஜோதி)டிக்கெட் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.. ***Conditions Apply

**********************

Related Posts with Thumbnails