கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
காலடியில் பூமி நழுவுவது போல், கணேஷ்க்கு இருந்தது. லண்டனுக்கு வந்து சேர்ந்த முதல் நிமிடத்திலேயே இப்படிப்பட்ட அதிர்ச்சி இருக்குமென அவன் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. இருவரும் கணேஷை நோக்கி நடந்து வந்தனர். சிறுமூளை அவசர அவசரமாக அலாரம் அடித்ததில், ட்ராலியில் இருந்து ஏதோ கீழே விழுந்தது போல் பாவ்லா பண்ணினான்.
"என்னாச்சி கணேஷ்" சியாமளா கேட்டாள்.
"இல்ல.. பேக் கீழே விழுற மாதிரி இருந்துச்சி.. அதான் சரி பண்ணேன்"
"ஓ.கே. பை தி வே, ஸீ இஸ் திவ்யா" என இன்ட்ரோ கொடுத்தாள்.
திவ்யா உதட்டில் சிரிப்புடன் கை கொடுத்து விஷ் பண்ண, கைகளை நீட்டினாள். கணேஷ்க்கு உள்ளங்கையில் சூழ்நிலையின் சூடு பரவியது. அவனும் கைகளை நீட்டினான்.
"ஓ.. ஐ ஸீ. ஐ'யாம் கணேஷ்" என்று தெரியாத ஆள் போல் பதில் இன்ட்ரோ கொடுத்தான்.
அரை நிமிடம் கணேஷின் கண்களை உற்று நோக்கிய திவ்யா, "சம்திங் ராங்" என மனதுக்குள் நினைத்துக் கொண்டு, "ஓ.கே. லெட்ஸ் கோ" என கார் பார்க்கிங் ஏரியா நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். இந்த நான்கு வருடத்தில் எவ்வளவு நடந்து விட்டன? ஆஸ்திரேலியாவில் படித்தவள் லண்டனில் வேலை பார்க்கிறாள். லண்டன் குளிரின் மினுமினுப்பும் தோலின் நிறத்திலும், வாயிலிருந்து வரும் வார்த்தைகளில் வலுக்கட்டாயமாக சேர்ந்துவிட்ட வெள்ளைக்கார இங்க்லீஷ் ஆக்சென்ட் என முழுதாக மாறியிருந்தாள் திவ்யா.
ஏர்போர்ட் வெளியே, ஃப்ரீ வே பிடித்தவுடன் கார் 100 மைல் வேகத்தில் சீறிக் கொண்டிருந்தது. லண்டன் நகரம் இன்னும் விழிக்கவில்லை. கார் பின் சீட்டில் கணேஷும், சியாமளாவும் அமர்ந்திருந்தனர்.
திவ்யா கார் ஓட்டிக் கொண்டே பேச்சை ஆரம்பித்தாள், "என்ன சியாமளா, ரொம்ப டையர்டா இருக்கீங்களா? ஜெட் லாக் ஃபீல் பண்றீங்களா?"
"நோ நோ. ஃப்ளைட்லயே சரியான தூக்கம். ஃப்ரெஷ்ஷா தான் இருக்கோம். மே பி, ஈவ்னிங் தான் ஜெட் லாக் வரும்ன்னு நினைக்கிறேன்"
"ஓ.. ஓகே.. லாஸ்ட் டைம் வரும்போது கணேஷ் வரலீயே?"
"யெஸ். அவர் இப்ப தான் ஜாயின் பண்ணாரு"
"ஓ.. ஐ ஸீ.."
"ம்ம்.. இப்பவும் நாம WestMinster ஆஃபிஸ் தானே?"
"நோ.. நீங்க இப்ப போக போறது RichMond ஆஃபிஸ்"
"அப்ப அங்க நீங்க இருக்க மாட்டீங்களா?"
"யெஸ். இப்போதைக்கு அந்த ப்ளான் இல்ல. ஆனா என் பாஸ்கிட்ட நான் பேசிட்டு எப்படியும் ஒன் வீக்ல உங்க ப்ளேஸ்க்கு வந்திடுவேன். உங்கள பார்த்த உடனே, நீங்க இங்க இருக்க போற ஒன் மன்த்ல உங்க கூட கொஞ்சம் டைம் இருக்கணும்னு தோணுது" என கணேஷை ஓரக் கண்ணால் பார்த்தபடி சொன்னாள் திவ்யா.
"ஓ.. ஸோ நைஸ்" விபரீதம் புரியாமல் சந்தோஷத்தை வார்த்தைகளில் கொட்டினாள்.
கணேஷ் இதில் கலந்து கொள்ளவே இல்லை. அவர்கள் பேசியதையும் காது கொடுத்துக் கேட்கவில்லை. விடியக் காத்திருக்கும் லண்டன் நகரத்தின் வெளிச்சத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்றரை நேர பயணத்தின் முடிவில் ரிச்மண்டில் உள்ள RiverSide ஹோட்டல் வந்து சேர்ந்தனர். Suite 109,110 புக் செய்யப்பட்டு இருந்தது. விடிந்து விட்டது.
கெளம்புவதற்கு முன் திவ்யா "ஓகே.. நல்லா ரெஸ்ட் எடுங்க.. நாளைக்கு காலைல நானே வந்து பிக்கப் பண்ணிக்குறேன். முடியலேன்னா, கார் அனுப்புறேன்"
"ஓ.கே. தேங்க்ஸ்" என்றாள் சியாமளா, அவளுடன் கைகுலுக்கிக் கொண்டே
"என்ன கணேஷ், நீங்க எதுவும் பேசவே மாட்டேங்குறீங்க?" குறும்பு புன்னகையுடன் கேட்டாள் திவ்யா.
"நோ.. நத்திங்.. தேங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப்" என சம்பிரதாயமாக சொல்லி கை கொடுத்தான்."Something wrong again. ஒரு வாரம் வேணாம். ரெண்டே நாள்ல இங்க வந்திடணும். கணேஷ்க்கிட்ட நாலுவருஷ கதைய பேசணும்" என மனதிற்குள் நினைத்துக் கொண்டு கெளம்பினாள்.
கீ வாங்கிக் கொண்டனர்.
"என்னப்பா, ஆர் யூ ஆல்ரைட்?" என தோள்பிடித்து கேட்டாள் சியாமளா.
"யா.. ஓ.கே. நோ ப்ராப்ளம். லைட்டா டையர்டா இருக்கு?"
"ஓ.கே. நீ போய் ரெஸ்ட் எடு. நான் ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி பண்ணிட்டு உன்ன கூப்பிடுறேன்"
"ஓ.கே" என ரூமுக்குள் சென்று கொண்டு பூட்டிக் கொண்டான்.
'தொப்'பென மெத்தையில் சரிந்து விழுந்தவனின் தலை சுக்குநூறாக வெடிக்கக் காத்திருந்தது. "திவ்யாவை எப்படி சமாளிப்பது?, அவள் மனதில் இன்னும் கல்லூரி நினைவுகள் ஓடிக் கொன்டிருக்கிறதா?, இருந்தால் அவளை எப்படி சமாளிப்பது?, சியாமளாவிடம் சொல்லிவிடலாமா?, சொல்லாமல் இருந்தால் கண்டுபிடித்துவிடுவாளா?, திவ்யா சியாமளாவிடம் உடைத்து விடுவாளா?, அதற்கு சியாமளா எப்படி ரியாக்ட் பண்ணுவாள்?, சியாமளா சொன்னது போல் கொன்று விடுவாளோ? கல்யாணம் நடக்குமா?" என ஒரே செகண்டில் ஓராயிரம் குழப்பங்கள் கண் முன்னே ஓடிக் கொண்டிருந்தது.
"கல்யாணம் ஆன காதலியின் சகவாசம் நரகம்" சுஜாதா எப்பவோ சொன்னது கணேஷ் விஷயத்தில், வேறு மாதிரி வொர்க் அவுட் ஆக ஆரம்பித்தது. "கல்யாணப் பெண் பக்கத்தில் இருக்க காதலியின் சகவாசம் நரகம்"
****************************
சியாமளா-14: காதலியின் சகவாசம் நரகம்
Labels:
கணேஷ்-சியாமளா
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
நன்றாக உள்ளது
சுஜாதா எழுத்தை எடுத்து கொண்டது இன்னும் அருமை
ரைட்டு அடுத்தது..???:))
சீக்கிரம் நாளைக்கே அடுத்த பதிவையும் போடுங்க
//கல்யாணப் பெண் பக்கத்தில் இருக்க காதலியின் சகவாசம் நரகம்" //
:)
சுவாரஸ்யமா தான் போகுது நடக்கட்டும்.
காதல் கதை கலவரமா போய்க்கிட்டு இருக்கே....
இத வைச்சு தமிழ் சினிமாவுல படம் எடுத்தாலும் சொல்லுறதுக்கில்ல...
அடுத்த பகுதிய பெரிய இடைவெளி எடுக்காம போடுங்க பாஸ்.... We are WAITING....
அவங்களுக்கு ஜெட் லாக் வருதோ இல்லையோ எங்களுக்கு டெட் லாக் வந்திருச்சு அடுத்த அத்தியாத்திற்காக காத்திருக்கிறோம்......
ம்ம்.. அப்புறம்?
பாஸ்.. ப்ளீஸ் அடுத்த எபிஸோட்லயே கணேஷ் திவ்யாவை பத்தி சியாமளா கிட்ட சொல்லிட்டு ரெண்டு பேரும் அந்த இடத்தை காலி பண்ணுற மாதிரி வெச்சிடுங்க.. வழக்கமான ரூட்ல போயிடாதீங்க பாஸு.. :(
நன்றி பாலாஜி!
நன்றி Cable Sankar!
ரைட்டு அடுத்தது..???:))//
தெரியலீங்க பாஸ்! :(
****************
நன்றி சின்ன அம்மிணி!
சீக்கிரம் நாளைக்கே அடுத்த பதிவையும் போடுங்க//
ரொம்ப கஷ்டம்ங்க :(
****************
நன்றி மணி!
சுவாரஸ்யமா தான் //
அப்படீன்னா? மொக்கையா இருக்கும்ன்னு நெனச்சீட்டீங்களா?
****************
நன்றி Thinks Why Not - Wonders How
காதல் கதை கலவரமா போய்க்கிட்டு இருக்கே....//
கலவரமில்லா காதல் ஏது?
இத வைச்சு தமிழ் சினிமாவுல படம் எடுத்தாலும் சொல்லுறதுக்கில்ல...//
மிஸ்டர், என்ன வச்சி காமெடி கீமடி ஒண்ணும் பண்ணலீயே?
அடுத்த பகுதிய பெரிய இடைவெளி எடுக்காம போடுங்க பாஸ்.... We are WAITING.... //
கண்டிப்பா.. :)
****************
நன்றீ கரிசல்காரன்!
அவங்களுக்கு ஜெட் லாக் வருதோ இல்லையோ எங்களுக்கு டெட் லாக் வந்திருச்சு அடுத்த அத்தியாத்திற்காக காத்திருக்கிறோம்......//
சீக்கிரமே பாஸ்.. நீங்க எல்லாம் சொல்றத பார்த்தா எனக்கே பயமா இருக்கு
****************
நன்றி Porkodi (பொற்கொடி)
ம்ம்.. அப்புறம்?//
வெயிட் அண்ட் ஸீ
பாஸ்.. ப்ளீஸ் அடுத்த எபிஸோட்லயே கணேஷ் திவ்யாவை பத்தி சியாமளா கிட்ட சொல்லிட்டு ரெண்டு பேரும் அந்த இடத்தை காலி பண்ணுற மாதிரி வெச்சிடுங்க.. வழக்கமான ரூட்ல போயிடாதீங்க பாஸு.. :( //
வழக்கமான ரூட்ன்னு நீங்க எதை சொல்றீங்க மேடம்?
****************
என்னது மேடமா?? எ.கொ.ச.இ? எனக்கும் 24 தாங்க.. கொஞ்சம் விட்டா மேடம் அக்கா அண்ணினு ஆக்கிடுவீங்களே?
வழக்கமான ரூட்னா அதான் கணேஷ் சொல்லமலே மறைச்சு.. அப்புறம் சியாமளாவுக்கு தெரிஞ்சு பிரிஞ்சு சேர்ந்து.. இல்லேனா சியாமளா எனக்கு முன்னாடியே தெரியும் ஆனா உன் மெல அவ்ளோ காதல்னு பீலிங்கு விட்டு.. எல்லாமே வழக்கம் தான். இது வரை தமிழ் சினிமாவுலே சொல்லாத மாதிரி சொல்லுங்க பார்ப்போம்.. :D
நன்றி Porkodi (பொற்கொடி)
என்னது மேடமா?? எ.கொ.ச.இ? எனக்கும் 24 தாங்க.. கொஞ்சம் விட்டா மேடம் அக்கா அண்ணினு ஆக்கிடுவீங்களே?//
அய்யோ.. ஸாரிங்க.. அதுக்காக அக்கா அண்ணின்னு லெவலுக்கு ஏத்துனது கொஞ்சம் ஓவர் :)
வழக்கமான ரூட்னா அதான் கணேஷ் சொல்லமலே மறைச்சு.. அப்புறம் சியாமளாவுக்கு தெரிஞ்சு பிரிஞ்சு சேர்ந்து.. இல்லேனா சியாமளா எனக்கு முன்னாடியே தெரியும் ஆனா உன் மெல அவ்ளோ காதல்னு பீலிங்கு விட்டு.. எல்லாமே வழக்கம் தான்.//
நீங்க சொல்ற இந்த வழக்கமான ரூட்ல இந்த கதை போகாது. ஆனாலும் எப்படி எல்லாம் யோசிக்குறீங்க?
இது வரை தமிழ் சினிமாவுலே சொல்லாத மாதிரி சொல்லுங்க பார்ப்போம்.. //
எப்படி முடிச்சாலும், எங்கேயே கேட்ட மாதிரி தான் இருக்கும். ரொம்ப எதிர்பார்க்காதீங்க.. தமிழ்சினிமாவில் காதலை துவைத்து தொங்கபோட்டு விட்டனர்.
:))
Post a Comment