அவளுடன் காணும் பொங்கல்

செங்கரும்பின் சாறு
செவ்விதழ்களை தாண்டி
வழிந்தோட நீ அடிக்கரும்பை
சுவைக்க ஆரம்பிக்கும்போது
அதை நான் ரசிக்க
ஆரம்பிக்கும்போது
என்ன என என்னைப் பார்க்க
பொங்கல் வாழ்த்துக்கள்
என்றேன் சத்தமாக
துள்ளிக் குதித்து புள்ளிமான்
போல் நீ ஓட
எனக்கான புன்னைகைகள்
வாழ்த்துக்களாக கிடைக்காமல்
திரும்பிக் கொண்டிருக்கின்றேன்

ஆச்சர்யாமாக அடுத்தநாள்
இன்று தானே உனக்கு ஸ்பெஷல்
என நீ எனக்கான புன்னகையில்
எதிர்பார்த்த வாழ்த்துக்கள் கூற
பூம்பூம் மாட்டின் தலையாட்டல்
புதிதாக ஆரம்பிக்கின்றன என்னுள்
காணும் பொங்கலுக்காக
காத்திருக்கிறேன்
கொண்டாட வழிகள் என்ன
நீ சொல்வாய் என?

*****************************

6 comments:

viccy said...

மீ த பர்ஸ்ட்... கவிதை ஜூப்பர்... சரி Onsite போன மக்கள எங்கபா காணோம்...

தாராபுரத்தான் said...

காணும் பொங்கலுக்காக

Anonymous said...

where is syamala.......
better u post!!!

Sasikumar said...

எங்கே சியாமளா ?

கணேஷ் said...

நன்றி viccy

மீ த பர்ஸ்ட்... கவிதை ஜூப்பர்... சரி Onsite போன மக்கள எங்கபா காணோம்...//

சீக்கிரமாவே வருவாங்க :)

நன்றி தாராபுரத்தான்!

நன்றி Anonymous!

where is syamala.......
better u post!!!//

சீக்கிரமாவே வருவாங்க :)

நன்றி Sasikumar!

எங்கே சியாமளா ?//

சீக்கிரமாவே வருவாங்க :)
இன்னும் எத்தனை பேர் கேட்பாங்களோ?

Anonymous said...

Helo Pongal,
Matu pongal ellam pochu..
kani pongal kooda pochu...

epothan adutha episode varum..
vita neenga t.v Serial Episodes vida adikama Suspense Kamipenga pola..

Ethalam venam..
Choliputen..

Nadadkatum..Nan rumba kovama eruken..apprum varen.

Related Posts with Thumbnails