சியாமளா-19: திவ்யா ஆரம்பித்த ஃப்ளாஷ்பேக்

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19

கணேஷ் நகத்தைக் கடித்துக் கொண்டே உச்சபட்ச டென்ஷனில் வீக் எண்டைக் கழித்தான். சியாமளா ரொம்ப சீரியஸாக எல்லா பர்ச்சேஸையும் ஓடியாடி பண்ணிக் கொண்டிருந்தாள். “அடுத்த ஐந்து நாட்களை மட்டும் தாண்டிவிட்டால், அடுத்த வீக் எண்ட் இந்தியாவில் தான். திவ்யாவிடம் இருந்து எஸ்கேப் ஆகவேண்டும்” என திவ்யாவை சமாளிப்பதற்கு வித்தியாசமாக ப்ளான் பண்ணிக் கொண்டிருந்தான்.

அடுத்த நாள் திங்கள்கிழமை. ஆஃபிஸ்க்கு வந்த நேரத்தில் இருந்து கணேஷ் ரெஸ்ட்லெஸ்ஸாக பரபரவென இருந்தான். “நீயும் ரெண்டு மூணு நாளா ஒரு ரேஞ்சா தான் இருக்க. ஸம்திங் ராங்” என கீபோர்டைத் தட்டிக் கொண்டு மானிட்டரைப் பார்த்துக் கொண்டே அசுவாரஸ்யமாக சியாமளா சொன்னாள். “நோ, ஐயாம் ஆல்ரைட்” என அந்தநேரத்தில் சமாளித்தான்.

“தேங்க் காட்” என கடவுளுக்கு நன்றி சொன்னான் கணேஷ். அன்று முழுவதும் திவ்யா வரவில்லை. 5 மணிக்கே ஆஃபிஸில் இருந்து கெளம்பி ரூம் வந்துவிட்டனர். “இன்னும் நாலே நாலு நாள். ஹவர்ஸ்படி பார்த்தா 32 ஹவர்ஸ். எப்படியாவது இந்த சைத்தானின் நகரம் லண்டனில் இருந்து கெளம்பிவிட்டால் சைத்தானிடம் இருந்தும் தப்பிவிடலாம்” என மல்லாக்கப் படுத்துக் கொண்டே மனக்கோட்டைக் கட்டி கொண்டிருந்தான் கணேஷ். ஆனால் அந்த கோட்டை ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்கவில்லை. மறுநாள் காலை பேண்ட்ரியில் இருவரும் காஃபி ப்ரிப்பேர் பண்ணிக் கொண்டிருந்த போது, “ஹலோ, என்ன நான் வர்ற வரைக்கும் வெயிட் பண்ண முடியாதா? அதுக்குள்ள கெளம்பறதுக்கு ரெடி ஆகிட்டீங்க?” என கணேஷை பார்த்து கேட்க வேண்டியதை சியாமளாவை நோக்கி அதிகார தோரணையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள் திவ்யா.

“நோ நோ.. நாங்க இத இனிஷியேட் பண்ணவே இல்ல.. மேனேஜ்மென்ட் ப்ரஸ்ஸர்” என சியாமளா இழுத்தாள்.

“ஓ.கே. எனிவே, இன்னும் ஒண்ணே ஒன்னு தான் பாக்கி இருக்கு. என்னோட ப்ரோப்பஸல், ப்ளஸ் அதோட ஸ்டேட்டஸ், ஸ்பான்ஸர்ஸ்கிட்ட டீலிங் ஓடிட்டு இருக்கு. இன்னும் டூ த்ரி டேய்ஸ்ல முடிஞ்சிடும்ன்னு நெனைக்கிறேன்” இந்த முறை கணேஷிடம் ஃபேஸ் டூ ஃபேஸ் பார்த்து டபுள்மீனிங்கில் பேசினாள் திவ்யா. அது கணேஷுக்கு தெளிவாக புரிந்தது. ஐ காண்டாக்ட்டை தவிர்த்தான்.

“இன்கேஸ், டீல் ஓகே ஆயிடுச்சின்னா, நெறைய்ய வேலை இருக்கும்.. அஃப்கோர்ஸ், நீங்க இன்னும் டூ வீக்ஸ் ஸ்டே எக்ஸ்டெண்ட் பண்ற மாதிரி இருக்கும்.” என்று சொல்லிவிட்டு அவசரமவசரமாக அவள் மேனேஜரை நோக்கி ஓடினாள் திவ்யா.

“இவ பேசுறது எனக்கு மட்டும் டபுள்மீனிங்கா இருக்கா.. இல்ல அவ வேணும்னே அப்படி பேசுனாளா?” கணேஷ்க்க்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. சியாமளாவிடம், “சீக்கிரமா கெளம்புனா நல்லா இருக்கும்” என அங்கலாய்த்தான் கணேஷ். “நாம என்ன பண்ண?எல்லாம் அந்த ஸ்பான்ஸர் கையில தான் இருக்கு.” என்றாள் சியாமளா. “ஆஹா.. சியாமளா, யூ டூ?” என மனதுக்குள் அவளைத் திட்டிக் கொண்டான் கணேஷ்.

அன்று முழுவதும் திவ்யாவிடம் இருந்து அப்டேட்ஸ் வரவில்லை. ”இன்னும் த்ரீ டேய்ஸ். 24 வொர்க்கிங் ஹவர்ஸ்” என்ற கவுண்ட்டவுனை மனதுக்குள் செட் பண்ணிவிட்டு ரொம்ப நேரம் கழித்து தூங்கினான் கணேஷ்.

மறுநாள் லஞ்ச் ஹவர் தாண்டி 3 மணிக்கு, திவ்யா இடத்திற்கு வந்தாள். “உங்களுக்கு குட்நியூஸ். Guess what?” என்றாள்

”ஓ.. க்ரேட்.. நாங்க நாளைக்கு ஊருக்கு போறோம்? கரெக்ட்டா?” சியாமளா துள்ளினாள்.

“நோ” தலையை வேகமாக ஆட்டினாள்.

”அய்யோ” என அலறினான் கணேஷ்.

“இல்ல.. Friday தான் போறீங்க.. நியூ ப்ராஜெக்ட் கேன்சல்ட்” என சோகமாக சொன்னாள் திவ்யா.

இருவர் முகத்திலும் உற்சாக கரைபுரண்டு துள்ளிக் குதித்து ஓடியது. லேப்டாப்பை பேக் பண்ணிவிட்டு, ஆஃபிஸில் இருந்து கெளம்ப தயாரானார்கள். சியாமளா ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டாள். கணேஷ் அவளுடைய லேப்டாப் பேகையும் எடுத்துக் கொண்டு லிஃப்ட் அருகே வெயிட் பண்ணிக் கொண்டிருந்தான். அப்போது புயலாக அந்த இடத்திற்கு வந்தாள் திவ்யா.

“ஹாய் கணேஷ்” என்றாள் திவ்யா. லைட்டாக வெட்கம் கலந்த டோனில் அவள் அழைத்தபோது கல்லூரி நாட்களின் ஃபீல் இருந்தது.

“ஹாய்ய்ய்” என இழுத்தான். “போச்சு.. I’m cornerd. I am helpless” என சிவாஜி ரஜினி கணக்காக ரெஸ்ட்ரூம் நோக்கி பார்வையை வீசினான்.

“எப்படி இருக்க கணேஷ்? சரியாவே பேச மாட்டேங்குற, மறந்துட்டீயா?” என கணேஷின் கண்களை ஆழமாக பார்த்துக் கொண்டே கேட்டாள்.

”நோ.. நாட் லைக் தேட்.. டூ பி ஃப்ராங்க், உன்னை இந்த ஆஃபிஸ்ல நான் எதிர்பார்க்கவே இல்ல” என சமாளித்தான்.

“ம்ம்ம்.. யெஸ்.. நான்கூட உன்னை இங்க எதிர்பார்க்கல.. ப்ளசண்ட் ஷர்ப்ரைஸ். நான் உனக்கு இந்தியா வந்து ஷாக் கொடுக்கலாம்ன்னு நெனச்சி இருந்தேன்” என்றாள் மனதில் கட்டியிருந்த நான்கு வருட காதல்மாளிகையின் முதல் வாசலைத் திறந்தாள்.

“ஷாக்கா? எப்ப வரலாம்ன்னு இருந்த?” என சொல்லிக் கொண்டே ரெஸ்ட்ரூம் நோக்கி மறுபடியும் பார்த்தான். “இவ என்ன உள்ளே போய் ஒண்டே கிரிக்கெட் மேட்ச்சா பார்த்துட்டு இருக்கா? இன்னும் வரமாட்டேங்குறாளே?” என டென்ஷனில் நறநறத்தான்.

“உனக்கு நியாபகம் இருக்கா கணேஷ்… கல்ச்சுரல்ஸ்டே அன்னிக்கு…. “ என அவள் ஃப்ளாஷ்பேக்கை நீட்டி முழக்க ஆரம்பித்த நொடியில், சூப்பர்ஸ்டார் போல் வேகவேகமாக நடந்துவந்தாள் சியாமளா.

திவ்யா நிறுத்திவிட்டாள். “ஹப்பாடா” என மொத்தமாக சேமித்துவைத்திருந்த மூச்சை பெருமூச்சாக வெளியே விட்டான். கேஷுவலாக வந்து இருவரின் அருகே சியாமளா மையமாக நின்றுகொண்டாள். லிஃப்டினுள் நுழைந்து கொண்ட மூவரும் க்ரவுண்ட் ஃப்ளோர் வரும்வரை பேசிக் கொள்ளவில்லை.

“தென்.. பை சியாமளா.. நாம நாளைக்கி பேசலாம் கணேஷ். பை” என திவ்யா சொல்லிக் கொண்டே பார்க்கிங் நோக்கி நகர்ந்தாள். ரெஸ்பான்ஸ் வராமல் போகவே நின்றவள் திரும்பிபார்த்தபோது

“ஷ்யூர்” என தலையை அசைத்துக் கொண்டான் கணேஷ்.

“What is happening?” சியாமளா நார்மலாகக் கேட்டது கணேஷுக்கு மூளையில் தந்தி அடித்தது. “உண்மையை சொல்லிவிடலாமா இல்லை ரெண்டு நாள் தானே சமாளித்துவிடலாம்?” என யோசித்ததில் சமாளித்துவிடலாம் என முடிவெடுத்து ஏதோ சொல்லி சமாளித்தான்.

ஆனால் அதுதான் கணேஷ் பண்ணிய தவறு!

***************************************

8 comments:

Rajalakshmi Pakkirisamy said...

கணேஷ்க்கு என்ன தாங்க பிரச்சனை?

Shankar said...

Nice da. Keep going on!

☀நான் ஆதவன்☀ said...

//ஆனால் அதுதான் கணேஷ் பண்ணிய தவறு!//

அவ்வ்வ்வ்... இன்னும் வேற தப்பு பண்ணனுமா என்ன? :)

Anonymous said...

இப்படி வாரம் ஒரு பார்ட் போட்டா எப்ப முடியறது?
சித்தி, கோலங்கள் எல்லாம் கூட முடிஞ்சு போச்சாம்.

Anonymous said...

one yearku 52 weeks apdina

entha episode epothan 19 just cross aitu eruku..

then this year already 5weeks left...

balance 52-5pochna evolov??

oneminerybga calculate panitu cholren..mmm inum pakki 47 episodesthan varuma??ganesh..

but nice...

so thirillinga...

ellam namalifela nadakirapolavey erukakthuppaa..

mudialla...

eni entha pula divya ennalam panapoguthoo..

ganesh
entha siyamala ella pavam..

apprum oru visiam entha siamalavuku kulantha piranthu peru vaikrathu.
apprum divyauku marriage agai divya payan siyamala pona love panravarikum...

neenga kondipa varum episodesla ethirparkiren..

ok all the best.
supera eluthirenga..
egapata thirupangal..

(and am sorry am not able to type in tamil)...

Thank you.
Valga valamudan.

Nizar Ahamed said...

சூப்பரா போய்கிட்டு இருக்கு...
ஆனா போஸ்ட் பொட ரொம்ப லேட் ஆகுது சீக்கிரம் முடிங்க பாஸ்..

கணேஷ் said...

நன்றி Rajalakshmi Pakkirisamy!

கணேஷ்க்கு என்ன தாங்க பிரச்சனை?//

பொண்ணுங்க... அழகான பொண்ணுங்க தான் பிரச்சினை :)

****************************

நன்றி Shankar!

நன்றி ☀நான் ஆதவன்☀

அவ்வ்வ்வ்... இன்னும் வேற தப்பு பண்ணனுமா என்ன? :)//

இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்ளோ இருக்கு? :)

****************************

நன்றி சின்ன அம்மிணி!

இப்படி வாரம் ஒரு பார்ட் போட்டா எப்ப முடியறது?
சித்தி, கோலங்கள் எல்லாம் கூட முடிஞ்சு போச்சாம்.//

இந்த வாரத்தோட இந்த தொடரே முடிந்து விடும். போதுமா?

அதுக்காக சித்தி, கோலங்கள் கூடபோய் கம்பேர் பண்ணி....ச்சே..?

****************************

நன்றி Complan Surya!

ரமணா விஜய்காந்த் உங்களுடைய ஃப்ரண்டா?

நீங்கள் எதிர்பார்த்தபடி கதை நன்றாக மூவ் ஆகும் :)

****************************

நன்றி Nizar Ahamed!

சூப்பரா போய்கிட்டு இருக்கு...
ஆனா போஸ்ட் பொட ரொம்ப லேட் ஆகுது சீக்கிரம் முடிங்க பாஸ்..//

கோச்சிக்காதீங்க பாஸ். முடியப் போகுது கதை!

****************************

Porkodi (பொற்கொடி) said...

oooho.... hmmmm..

Related Posts with Thumbnails