சியாமளா-16: த்ரிஷா இல்லைன்னா திவ்யா!

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

“அப்படியா?” ஷாக்கில் இருந்து வெளிவராமல் சியாமளாவை நோக்கினான்

கண் அடித்தாள் சியாமளா. திவ்யா சியாமளா நோக்கி திரும்பும் இரண்டு செகண்ட் இடைவெளியில் நார்மல் ஆனாள்.

”அவன் அவன் வயித்துல புளியை கரைச்சிட்டு இருக்கு. இதுல இவ வேற, நேரம் காலம் தெரியாம லவ் பண்றா..வெட்கப்படுறா.” என அலுத்துக் கொண்டான்

“என்கிட்ட சொன்னத சொல்லுங்க சியாமளா.. கம் ஆன்” திவ்யா அவசரப்படுத்தினாள்.

“அதான் வீட்ல அலையன்ஸ் பார்த்திட்டு இருக்காங்க.. ஐ கெஸ் ஒருஃபேமிலி என் பேரண்ட்ஸ்க்கு ரொம்ப பிடிச்சி இருந்தது. அல்மோஸ்ட், கன்பார்ம் ஆன மாதிரி தான். அத தான் சொன்னேன்” என சொல்லிவிட்டு, “மவனே, நீயா ஏதாவது உளறுனே, கொன்னே போட்ருவேன்” என்பது போல் கணேஷை சைகையில் மிரட்டினாள்.

“பார்த்தீயா கணேஷ். லாஸ்ட் டைம் வரும்போது கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தவங்க, இப்ப என்னடான்னா ஃபிக்ஸ் ஆச்சின்னு சொல்றாங்க. க்ரேட் இம்ப்ரூவ்மெண்ட்” என ஆச்சர்யத்தில் பொங்கினாள் திவ்யா

ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தாலும், திவ்யா தன்னை ஒருமையில் விளித்தது கணேஷ்க்கு மறுபடியும் டென்ஷனைக் கெளப்பியது. இருந்தாலும் சியாமளா நோட் பண்ணாமல் விட்டதால் சகஜமாக சியாமளாவை நோக்கி, “ஓ.. அப்படியா.. க்ரேட். ஆனா நீங்க ஏன் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்னீங்க..” என போலியாக கேட்டான்.

”அவங்களுக்கு அட்ராக்சன், லவ் மேலேயே நம்பிக்கை இல்லையாம். அதுக்கும் மேல ஆண்கள் மேல சுத்தமா நம்பிக்கை இல்லையாம். ஆண்கள் யாரும் லவ் பண்ற பொண்ணை கட்டிக்க மாட்டாங்க. சீரியஸ்னெஸ் இல்லாதவங்க. விளையாட்டுத்தனமா இருப்பாங்க. கடைசில அல்டிமேட் லாஸ், பெண்களுக்கு தான்.. அப்பிடி இப்பிடின்னு ஏகப்பட்ட கம்ப்ளையிண்ட்ஸ். ஐ திங், இவங்கள கட்டிக்கப் போறவன் ரொம்ப லக்கி. வெரி குட் கேர்ள்.” என திவ்யா பில்டப் கொடுத்தாள்.

சியாமளா வெட்கத்தில் சிவந்தாள். சிவந்து கொண்டே கணேஷை நோக்கினாள். கணேஷ்
“இஸ் இட் ஸோ? க்ரேட்” ஒரு பக்கம் லக்கி என சந்தோஷப்பட்டாலும் நெருப்பில் நிற்பது போல தவித்தான்.

“என்ன கணேஷ்? உங்க பசங்களை பத்தி அபாண்டமா குத்தம் சொல்றாங்க. நீங்க எதுவும் சொல்ல மாட்டீங்களா?” திவ்யா விடவில்லை.

கையில் ஏதாவது கிடைத்தால், இவள் தலையில் நச்சென்று போட வேண்டும் போல கணேஷின் கை பரபரத்தது. பல்லைக் கடித்துக் கொண்டே, “நான் சொல்ல என்ன இருக்கு? அது அவங்களோட பெர்சனல் ஒப்பீனியன். அவங்க இஷ்டம்” என ஏதோ உளறினான்.

“நைஸ். நீங்க சொல்றதும் கரெக்ட்” என தலையை ஆட்டிக் கொண்டே ஒரு வழியாக அமைதியானாள் திவ்யா. அடுத்த செகண்டே, சியாமளா ஆரம்பித்தாள், “கணேஷ், உனக்கு இவங்க ஸ்டோரி தெரியாதே? ரொம்ப பெரிய்ய்ய்ய.. ரொமாண்டிக் லவ் ஸ்டோரி”

கணேஷ்க்கு ஏழரை நாட்டு சனி இரண்டு பெண் ரூபத்தில் முன்னே நின்று கொண்டு, ‘ஜிங்குச்சா ஜிங்குச்சா’ என ஆடுவது போல் இருந்தது. நெற்றியில் வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு அமைதியாக நின்றான்.

“என்னன்னு கேட்க மாட்டியா கணேஷ்” எப்படியாவது திவ்யாவை பழிக்கு பழி வாங்கவேண்டும் என துடியாய் துடித்தாள் சியாமளா. திவ்யா கணேஷின் ரியாக்சனை ரொம்ப ஆழமாக நோட் பண்ணிக் கொண்டிருந்தாள்.

”கேட்காம இருந்தா விடவா போற. அதுவுமில்லாம அதுலயும் நான் தான்டி ஹீரோ” என மனதுக்குள் நினைத்துக் கொண்டு, “என்ன ஸ்டோரி?” என திவ்யாவின் பார்வையை அவாய்ட் பண்ணிக் கொண்டே சியாமளாவிடம் கேட்டான்.

“காலேஜ்ல ஒருத்தன் கூட நாலுவருஷமா நல்லஃப்ரெண்டா இருந்தாங்களாம். ஆனாலும் ஃபேர்வெல் டே அன்னிக்கு தான் அவன்மேல ஃப்ரெண்ட்ஷிப் தாண்டி லவ் இருந்திச்சின்னு ஃபீல் பண்ணாங்களாம்.”

“ஓ ஐ ஸீ..”

“அன்னைக்கு இவங்களால அந்த பையன்கிட்ட நார்மலாவே பேச முடியலையாம்… எப்படியோ மனசுல இருந்ததை அவன் A.G நோட்ல கவிதை மாதிரி கிறுக்கிட்டு வந்துட்டாங்களாம். இதுல ஒரு sad பார்ட் என்னன்னா, அதுக்கு அப்புறம் இன்னிக்கு வரைக்கும் அவன்கிட்ட பேசவே இல்லையாம்”

“ம்ம்ம்” என தலையசைத்தான். அங்கே திவ்யா தலையைக் கீழே குனிந்து கொண்டு ஃபீல் பண்ணிக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்துக் கொண்டிருந்தது.

“அவன் என்ன டியூப்லைட்டா? ஒரு பொண்ணா வெட்கத்தை விட்டு திரும்ப போய் ப்ரோப்பஸ் பண்ணிட்டு இருப்பா. This is the reason I hate guys.”

“ஹேய் சியாமளா, கூல் டவுன் கூல் டவுன்” என அவளை அமைதி படுத்தினாள் திவ்யா.

”ஆனா இவங்க மேலயும் தப்பு இருக்குன்னு சொன்னாங்க. காலேஜ் முடிஞ்ச உடனே ஹையர் ஸடடீஸ் படிக்க அப்ராட் போயிட்டதா சொன்னாங்க. அவன மீட் பண்ண, இன்னும் டூ மன்த்ஸ்ல சென்னை வரப் போறாங்களாம்”

“ம்ம்ம்” என சொல்லிவிட்டு அங்கிருக்கும் சூடான சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் “எக்ஸ்கியூஸ் மீ” என சொல்லிவிட்டு ரெஸ்ட் ரூம் சென்றான். ”நான் என்ன தப்பு பண்ணேன்” என வாய் விட்டு கத்த வேண்டும் போல் இருந்தது. ஃபேஸ் வாஷ் பண்ணிவிட்டு திரும்ப வந்தான்.

“நாங்க எங்க கதைய சொல்லி போர் அடிக்கிறோம். உனக்கு எப்ப கல்யாணம் கணேஷ்?” என நேஷனல் அவார்டுக்கான நடிப்புடன், ரொம்ப கேஷுவலாகக் கேட்டாள் சியாமளா.

“தெரியல. லேட் ஆகும்ன்னு நெனைக்கிறேன்” என அவனும் நார்மலாக சொன்னான்.

“ஆனா பசங்களால எப்படி ஈசியா எடுத்துக்க முடியுது. இன்னிக்கு ஒரு பொண்ணை லவ் பண்றாங்க.. நாளைக்கே இன்னொரு பொண்ண லவ் பண்றாங்க” சியாமளாவே தொடர்ந்தாள்.

“அதுக்காக விட்டுட்டு போன பொண்ணுக்காக தாடி வச்சிட்டு அழவா முடியும்” என சாப்பிட்டுக் கொண்டே சொன்னான். திவ்யா மட்டும் கணேஷை முறைத்துக் கொண்டிருந்தாள். இதை கணேஷ் கவனிக்கவில்லை.

“இல்ல.. ஒரு கர்டசி வேணாமா? அவனே ப்ரோப்பஸ் பண்ணிட்டு, அதை ஏத்துக்காத பொண்ணுக்காக கொஞ்ச நாள் கூட வெயிட் பண்ண மாட்டாங்களா? என்ன பாய்ஸ்?” சியாமளா ஏன் இப்படி பேசுகிறாள் என்று அவளுக்கே தெரியாமல் அனத்திக் கொண்டிருந்தாள்.

“ஏத்துக்கிட்டா மட்டும் வந்திடவா போறாங்க? பொண்ணுங்களுக்கு பிடிச்சிருந்தா, ப்ரோப்பஸ் பண்ண அன்னைக்கே ஒத்துக்குவாங்க.. இல்லைன்னா லைஃப்லாங் வெயிட் பண்ணாலும் மதிக்க மாட்டாங்க” கணேஷும் பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தான்.

“அப்படின்னா?” திவ்யா கேட்டாள் காட்டமாக.

“வெரி சிம்பிள் பாலிசி.. த்ரிஷா கிடைக்கலைன்னா ஒரு திவ்யா”

“வாட்?” திவ்யா, பிரகாசமான முகத்துடன்

“வாட்?” சியாமளா, கொஞ்சம் லேட்டாக

****************************************

22 comments:

Cable Sankar said...

வாட் நெக்ஸ்ட்.. வாழ்த்துக்கள் ஒரு லட்சத்திற்கும், 101க்கும்

Anonymous said...

ஒரு லட்சம் ஹிட்ஸுக்கு வாழ்த்துக்கள். அதுல பாதி பேர் அடுத்த கணேஷ்-சியாமளா தொடர் போட்டாச்சானு பாத்தவங்க.

இரும்புத்திரை said...

//ஹேய் சியாமளா, கூல் டவுன் கூல் டவுன்” என அவளை அமைதி படுத்தினாள் சியாமளா.
//

சியாமளாவே சியாமளாவை சமாதானம் செய்கிறாளா ????

Anbarasu Selvarasu said...

நாங்களும் பதிலடி கொடுப்போம். ரொம்ப அருமை கணேஷ்..

அன்பரசு செல்வராசு

பாலாஜி said...

திரைபடத்தின் வசனத்தை வைத்து

தலைப்பும் கதையும் நன்றாக எழுதி உள்ளீர்கள்

Guru said...

வாழ்த்துக்கள் கணேஷ் ! அருமையா கதைய நகர்த்தி கொண்டு போறீங்க! அப்படியே நேர்ல அந்த கதாபாத்திரங்களை காட்டும் உரையாடல்களில் நல்ல உயிரோட்டம்.

தொடருங்கள் கணேஷ்! வெற்றி பெற மீண்டும் வாழ்த்துக்கள்!

அது போக நான் தான் உங்களோட 100 ஆவது பாலோயர்..

Guru said...

/// “வெரி சிம்பிள் பாலிசி.. த்ரிஷா கிடைக்கலைன்னா ஒரு திவ்யா”

“வாட்?” திவ்யா, பிரகாசமான முகத்துடன்

“வாட்?” சியாமளா, கொஞ்சம் லேட்டாக ///

ஆஹா ! மாட்டிக்கிட்டியே டா கணேஷு ! அலர்ட்.

Divya said...

ஷாலினி, ஹரிணிக்கெல்லாம் கல்தா குடுத்தமாதிரி எனக்கு கல்தா குடுக்க மாட்டீங்கன்னு நம்பறேன் கணேஷ்.

Sangkavi said...

வாழ்த்துக்கள் ஒரு லட்சத்திற்கும், 101க்கும்....

♠புதுவை சிவா♠ said...

வாழ்த்துகள் கணேஷ்

“காலேஜ்ல ஒருத்தன் கூட நாலுவருஷமா நல்லஃப்ரெண்டா இருந்தாங்களாம். ஆனாலும் ஃபேர்வெல் டே அன்னிக்கு தான் அவன்மேல ஃப்ரெண்ட்ஷிப் தாண்டி லவ் இருந்திச்சின்னு ஃபீல் பண்ணாங்களாம்.

“ஓ ஐ ஸீ..”


"உள்ளம் கேக்குதே" மோர் ... மோர் ....

:-))))))

hayyram said...

gud. continue

regards
www.hayyram.blogspot.com

Porkodi (பொற்கொடி) said...

what?? :)

கணேஷ் said...

நன்றி Cable Sankar!

வாட் நெக்ஸ்ட்.. வாழ்த்துக்கள் ஒரு லட்சத்திற்கும், 101க்கும்//

சீக்கிரம் வரும் பாஸ்.

*******************

நன்றி சின்ன அம்மிணி!

ஒரு லட்சம் ஹிட்ஸுக்கு வாழ்த்துக்கள். அதுல பாதி பேர் அடுத்த கணேஷ்-சியாமளா தொடர் போட்டாச்சானு பாத்தவங்க.//

அப்படியா இதுகூட நல்ல டெக்னிக்கா இருக்கே! :)

*******************

நன்றி இரும்புத்திரை!

சியாமளாவே சியாமளாவை சமாதானம் செய்கிறாளா ????//

மாற்றிவிட்டேன். ரொம்ப ஷார்ப் நீங்க :)

*******************

நன்றி Anbarasu Selvarasu!

நாங்களும் பதிலடி கொடுப்போம். ரொம்ப அருமை கணேஷ்.. //

:)

*******************

நன்றி பாலாஜி!

திரைபடத்தின் வசனத்தை வைத்து
தலைப்பும் கதையும் நன்றாக எழுதி உள்ளீர்கள்//

அப்படியா சொல்றீங்க :)

*******************

நன்றி Guru!

வாழ்த்துக்கள் கணேஷ் ! அருமையா கதைய நகர்த்தி கொண்டு போறீங்க! அப்படியே நேர்ல அந்த கதாபாத்திரங்களை காட்டும் உரையாடல்களில் நல்ல உயிரோட்டம்.//

ரியல்லீ... சூப்பர்.. க்ரேட்.. எனக்கு நானே சொல்லிக்கிட்டேன் :)

வெற்றி பெற மீண்டும் வாழ்த்துக்கள்!//

வாட்? ஃப்ரம் வேர்?

அது போக நான் தான் உங்களோட 100 ஆவது பாலோயர்..//

உங்களைத் தான் தேடிட்டு இருக்கேன். கையக் கொடுங்க பாஸ். தேங்க்ஸ்.

ஆஹா ! மாட்டிக்கிட்டியே டா கணேஷு ! அலர்ட்.//

இதுக்கு பேர் வாயைக் கொடுத்து மாட்டிக்குறது :)

*******************

கணேஷ் said...

நன்றி Divya!

ஷாலினி, ஹரிணிக்கெல்லாம் கல்தா குடுத்தமாதிரி எனக்கு கல்தா குடுக்க மாட்டீங்கன்னு நம்பறேன் கணேஷ்.//

ஆஹா திரும்ப முதல்ல இருந்தா.. தாங்காது சாமீமீ...

**************

நன்றி Sangkavi!

நன்றி hayyram!
*************

நன்றி Porkodi (பொற்கொடி)!

what?? :)//

Well timing :)

அது சரி. சியாமளா கதைக்கு மட்டும் தான் கமெண்ட் போடுவீங்களா?

**************

Anonymous said...

rasa...

supera eruku rasa..

annal kadiya mudikra pola idea vey ella rasa...

anyhow have a how nice journey...

ஜிகர்தண்டா Karthik said...

கணேஷ்..
மைல்கற்களுக்கு வாழ்த்துக்கள்.... அப்படியே ஆபிஸ்க்கு ஒரு பத்து நாள் லீவு போட்டு கதைய முடிங்க பாஸ்... :D

☀நான் ஆதவன்☀ said...

ஆஹா..... அவனை மாட்டி விடுறதுல பயபுள்ளைகளுக்கு என்னா சந்தோஷம்.

அப்புறம் திவ்யா உங்ககிட்ட இருந்து இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கிறேன் :))

Anonymous said...

sorry boss ethila vara ganesh polavey namalifelakoda nadnthathu..mmm ennatha chola..
again padiknum thonuthu ganesh.
neriya eluthunga..but cinimathanm venamey...but its ok..apo apo mindvoice touch nala eruku...

valthukal...

பாலாஜி said...

I like your way of writing keep posting. I am waiting for your next issue

Shankar said...

”கேட்காம இருந்தா விடவா போற. அதுவுமில்லாம அதுலயும் நான் தான்டி ஹீரோ”

// Kalakkal!

“காலேஜ்ல ஒருத்தன் கூட நாலுவருஷமா நல்லஃப்ரெண்டா இருந்தாங்களாம். ஆனாலும் ஃபேர்வெல் டே அன்னிக்கு தான் அவன்மேல ஃப்ரெண்ட்ஷிப் தாண்டி லவ் இருந்திச்சின்னு ஃபீல் பண்ணாங்களாம்.”
“அன்னைக்கு இவங்களால அந்த பையன்கிட்ட நார்மலாவே பேச முடியலையாம்… எப்படியோ மனசுல இருந்ததை அவன் A.G நோட்ல கவிதை மாதிரி கிறுக்கிட்டு வந்துட்டாங்களாம். இதுல ஒரு sad பார்ட் என்னன்னா, அதுக்கு அப்புறம் இன்னிக்கு வரைக்கும் அவன்கிட்ட பேசவே இல்லையாம்”
//
Note panniten da. Nan solrathu antha ganesh kita :)

Porkodi (பொற்கொடி) said...

ama.. matha post padicha indha kadhaiyoda feel kurainjurum boss.. thodarndhu idha ezhudhi mudichitu thaan matha post podanum nu ungala naan solla mudiyadhu, ana ennala idha mattum padikka mudiyume? :P seekirama ezudhi mudichinganna unga 'kavuja' ellamum padikka vaasagar kootam koodum.. calculate panikkonga ;)

கணேஷ் said...

நன்றி புதுவை சிவா♠

"உள்ளம் கேக்குதே" மோர் ... மோர் .... //

அட ஆமால்ல.. ச்சே இனிமே ட்ரெயின்ல போகும்போது கதைய பேப்பர்ல எழுதி கீழ போடக் கூடாது :)

*****************

நன்றி Complan Surya!

annal kadiya mudikra pola idea vey ella rasa...//

முடிக்க சொல்ற அளவுக்கு அவ்ளோ மொக்கையாவா இருக்கு?

**********************

நன்றி ஜிகர்தண்டா Karthik!

கணேஷ்..
மைல்கற்களுக்கு வாழ்த்துக்கள்.... அப்படியே ஆபிஸ்க்கு ஒரு பத்து நாள் லீவு போட்டு கதைய முடிங்க பாஸ்... :D//

அவ்வளவு இண்ட்ரஸ்டிங்காவா போயிக்கிட்டு இருக்கு? ஏன்யா தொடர்ந்து ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சொல்றீங்க?
**********************

நன்றி ☀நான் ஆதவன்☀

ஆஹா..... அவனை மாட்டி விடுறதுல பயபுள்ளைகளுக்கு என்னா சந்தோஷம். //

ஆமாங்க ரொம்ப கொடுமையான டீஸர்ஸ் :)

அப்புறம் திவ்யா உங்ககிட்ட இருந்து இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கிறேன் :))//

நீங்க வேற ஏன் இப்படி கெளப்பி விடுறீங்க?

**********************

நன்றி Complan Surya!

sorry boss ethila vara ganesh polavey namalifelakoda nadnthathu..mmm ennatha chola..//

ப்ளீஸ் நோ ஃபீலீங்க்ஸ் :)

again padiknum thonuthu ganesh.
neriya eluthunga..//

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே...

but cinimathanm venamey...but its ok..//

தேங்க்ஸ் தல.. எப்படி யோசிச்சாலும் எங்கேயாவது சினிமாத்தனம் ஒட்டிக்கிது..

apo apo mindvoice touch nala eruku...valthukal...//

மைண்ட் வாய்ஸை கண்டினியூ பண்ணலாம் :)

**********************

நன்றி பாலாஜி!

I like your way of writing keep posting. I am waiting for your next issue.//

சீக்கிரமே வரும் :)

**********************

நன்றி Shankar!

Note panniten da. Nan solrathu antha ganesh kita :)//

டேய்.. நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல.. நத்திங் டூ பெர்சனல் :)

**********************

நன்றி Porkodi (பொற்கொடி)!

ama.. matha post padicha indha kadhaiyoda feel kurainjurum boss.. //

ஓ.. ரியல்ல்லீ..

thodarndhu idha ezhudhi mudichitu thaan matha post podanum nu ungala naan solla mudiyadhu, ana ennala idha mattum padikka mudiyume? :P //

இதுக்கு நீங்க ஸ்ட்ரெய்ட்டாவே சொல்லி இருக்கலாம் :)

seekirama ezudhi mudichinganna unga 'kavuja' ellamum padikka vaasagar kootam koodum.. calculate panikkonga ;)//

தெளிவாக புரிந்தது. ஒரு கேள்வி கேட்டது குத்தமாயா? :)

**********************

Related Posts with Thumbnails