சியாமளா-18: இந்தியா திரும்பும் முன்?

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

கணேஷ் சியாமளாவிடம் இந்த மாதிரியான ரெஸ்பான்ஸை எதிர்பார்க்கவில்லை. அதே சமயம் கல்யாணத்திற்கு முன் ரொம்ப ஓவராக அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் முடிவு செய்துகொண்டான். சியாமளா அன்று நடந்த சம்பவத்திற்கு பின் கணேஷிடம் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவன் ரூமிற்கும் வருவதில்லை. ரொம்ப நார்மலாக, “வாட் இஸ் வாட்?” என்ற அளவில் மட்டும் பழக ஆரம்பித்தாள். சியாமளாவின் இந்த திடீர் மாற்றம் கணேஷை ரொம்ப கஷ்டப்படுத்தியது. ரெண்டு நாட்களுக்கு மேல் அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஆஃபிஸ் விட்டு கெளம்பும்போது, நேராக அவளிடம் கேட்டுவிட்டான். ”ஹேய், ஐயாம் ஸாரி”

“தட்ஸ் ஓ.கே” என்றாள் பட்டும்படாமல்.

”நீ ஏன் இப்படி இருக்க? முன்ன மாதிரி ஃப்ரீயா பேச மாட்டேங்குற..கோவமா இருந்தா திட்டிடு. இப்படியெல்லாம் பண்ணாத”

“” அமைதியாக வந்தாள்.

“இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?”

“வேணாம்.. கொஞ்ச நாள் நாம இப்படியே இருந்திடலாம். அதான் நாம ரெண்டு பேருக்கும் நல்லது. இன்னும் 3 வீக்ஸ் தான?”

“அதான் ஏன்?”

“ஏன்னா, நம்ம ரெண்டு பேருக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை”

“ம்ம். ஸோ??”

“இதுக்கப்புறம் நான் எதையும் என்கரேஜ் பண்ண விரும்பலை”

“ம்ம்ம்”

“உன்ன ஹர்ட் பண்றதுக்காக நான் இதை சொல்லலை?”

“யா.. நாட் அ ப்ராப்ளம். I understand.” கணேஷ் மனதில் கோபம் துளிகூட இல்லாமல், அவள் பாய்ண்ட் ஆஃப் வியூவில் இருந்து சொல்லப்படும் காரணங்களை புரிந்து கொண்டான்.

“தேங்க்ஸ். You are TOO good” என்றாள் மீண்டும் பழக்கமான உற்சாகம் நிறைந்த குரலில்.

இப்படி நல்ல புரிதலுடன் இருவரின் வாழ்க்கையும் ஒன்றாக சென்று கொண்டிருந்த போது, அந்த அதிர்ச்சி இமெயில் வந்தது.

“உங்களின் வந்த வேலை முடிந்துவிட்டதால், நீங்கள் சீக்கிரம் இந்தியா வர வேண்டி இருக்கும். அடுத்த வாரம் கூட இருக்கலாம்” என்பது தான் அந்த இமெயில் செய்தி.

லைட்டாக ஷாக் ஆகி, “நம்ம பி.எம் இந்த இமெயில்ல என்ன சொல்ல வர்றாரு? டவுட்டா இருக்கே?” என கிண்டலாகக் கேட்டான்.

”ஓ.. அதுவா.. லாஸ்ட் வீக் ப்ரிப்பேர் பண்ண ப்ரோப்பஸல்ல டேவிட் நேத்து சைன் பண்ணிட்டான். அதை சொல்றாரு” என்றாள் சியாமளா நறநறவென, கண்ணடித்துக் கொண்டே.

“ஓ.. ஐ ஸீ.. ரொம்ப நல்லதா போச்சி. ஷாப்பிங் ஆரம்பிச்சிடலாம். இங்க சம்பாதிச்ச ஒரு பைசாவக் கூட நாம எடுத்திட்டு போகக் கூடாது. ஓ.கேவா?” என்றான்.

“ஓ.கே டீல்”

கணேஷ்க்கு திவ்யாவிடம் இருந்து எஸ்கேப் ஆகியாகிடலாம் என்ற சந்தோஷம் அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் ஆயிரக்கணக்கில் பறக்க வைத்தது. நாட்களை மிகக் கொடுமையாக ஆஃபிஸில் தள்ளிக் கொண்டிருந்தனர். ரெண்டு நாள் ஆனபிறகும். மேனேஜரிடம் இருந்து கெளம்புவது சம்மந்தமாக எதுவும் வரவில்லை. மீண்டும் இமெயில் அனுப்பினான்.

“நீ ஏன் அவசரப்படுறே? க்ளையண்ட்க்கு இன்ஃபார்ம் பண்ணனும். லாஜிஸ்டிக்ஸ் டிக்கெட் அரேஞ்ச் பண்ண வேணாமா? நாம வேற ஷாப்பிங் முடிக்கல?” என சியாமளா கணேஷின் அவசரம் புரியாமல் எகிறினாள்.

“இல்ல.. அவர் மறந்திருப்பார்ல.. ஜஸ்ட் ரிமைண்டர் இமெயில் அனுப்புறதுல என்ன தப்பு?” என சமாளித்தான்.

“ஓ.கே. அதுவும் கரெக்ட் தான்” என லேப்டாப்பில் மூழ்கினாள்.

அந்த நாள் மேனேஜரிடம் இருந்து எதுவும் ரிப்ளை வரவில்லை. கணேஷும் மறந்துவிட்டான். ஈவ்னிங் ஷாப்பிங் போய் பேர்ல்ஸ், எல்லாருக்கும் வாட்ச், நிறைய ட்ரெஸ் எல்லாம் வாங்கினார்கள். இரவு வர லேட்டாகிவிட, சப்வேயில் ஸாண்ட்விச் முடித்துவிட்டு, பட்டர்ஸ்காட்ச் மில்க் ஷேக்குடன் ஹோட்டல் ரூம் வந்தனர். மறுநாள் காலையில், மேனேஜரிடம் இருந்து இமெயில்.

“உங்களை ரிலீஸ் பண்ணுவதற்கு க்ளையண்ட் மேனேஜரின் அப்ரூவல் தேவை. அவர் இன்றுக்குள் அனுப்பிவிடுவார். அதன்பின் உங்களுக்கு தெரியவரும்” இது தான் அதன் செய்தி.

சியாமளா கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருந்தாள். இமெயிலை பார்த்தவுடன், அவள் பார்த்த பார்வையில், “அதான் அப்பவே சொன்னேன்ல” என்பது போல் இருந்தது கணேஷ்க்கு.
பாஸிட்டிவ்வாக வர வேண்டும் வேண்டிக் கொண்டான் கணேஷ். இருந்தாலும் உள்ளூர பயம் கவ்விக் கொண்டிருந்து இருந்தது.

ஆஃபிஸில் ரெண்டு மணிநேரம் தாண்டி பசிக்கும் நேரம் வந்தது. மீட்டிங் போன சியாமளாவுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தான் கணேஷ். துள்ளிக் குதித்துக் கொண்டு வந்தாள் சியாமளா.

”கணேஷ், டேட் கன்ஃபார்ம் ஆயிடுச்சி”

“ஓ.. ரியல்லீ… எப்போ?”

“நெக்ஸ்ட் வீக் எண்ட் தான் இந்தியா போறோம்.. இன்னும் ஒரு ப்ரோப்பஸல் பாக்கி இருக்காம்?”

“ஓ மை காட்? அப்படி என்ன ப்ரோப்பஸல்? அதான் எல்லாம் முடிச்சிட்டோமே? யார் சொன்னா?”

“டேவிட். நம்ம நேரம். அந்த ப்ரோப்பஸல் யார்கிட்ட இருந்து தெரியுமா?”

“யாரு?”

“திவ்யா. நாளைக்கே வர்றாளாம்”

”மை குட்னெஸ்.. Why the HELL……..” என கணேஷ் frustration ல் கத்திக் கொண்டிருந்தான்

*****************************************

12 comments:

MUNI said...

Aiyoooo, TWIST AA?

Anonymous said...

//வாட் இஸ் வாட்?//

என்னன்ன என்ன? சூப்பர் ட்ரான்ஸ்லேஷன்.

Anonymous said...

கணேஷ்-சியாமளா தொடர் முடியும்வரை கணேஷின் மற்ற இடுகைகள் புறக்கணிக்கப்படுகின்றது. :)

இங்கனம்

கணேஷ்-சியாமளா தொடர் ரசிகர் மன்றம்
ஆஸ்திரேலியக்கிளை

(எல்லாரும் அவங்கவங்க ஊர்ல மன்றம் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படுகிறது)
:)

Anonymous said...

anneygama entha thodar

entha varum thandi adutha varudamum thodarum endru ethirparkiren..

avanga shoping ponathau ellam
detaila eluthunga....(rumba mukiam)

but nama divya pakkanum ethirpatha,ganesh emathitar(avangala pathi cholrathuku inum oru episode)...konjam too much...

Namala ellam Kaka vaikrathu ella avalo santhosam Ganseshuku(ethalam sari ella ama..)

but nice to read it.

Continue your blog.

(enga V.V.S GROUP SARPA ORU KILAI THIRAKKA PADUKIRATHU)...

(vARutha padatha Valipar Sangam)

Thodar Sariya varavlillai enral
Veerivil Ella episodeskalum purakkanika padum)

Valga Valamudan..

குட்டி said...

கணேஷ் என்ன தாங்க முடியலை ,
இதயம் வெடிக்கும் போல் இருக்கிறது.

எதாவது பார்த்து செய்....

Anonymous said...

Hi,,,

Since I don't know How to use Tamil Keyboard, I am writing my comments in English....sorry for that..

Recently I came to Singapore and i started to read Tamil blogs..

Today i read ur Ganesh-Shymala 18...It s really nice, but i want to know who s divya and wat abt ganesh story....so I have started to read from part 1 to part 18...
Really it was so nice and funny....and i started to laugh in my office....every one looked me :(
...

Keep writing ....

Karuppu

Suresh.D said...

கணேஷ் இது ரொம்ப ஓவர்... இவளோ நாளா காக்க வைக்கிறது ஒரு episode போட. கதை விறுவிறுப்பா போகுது

Porkodi (பொற்கொடி) said...

Chinna Ammini,

//கணேஷ்-சியாமளா தொடர் முடியும்வரை கணேஷின் மற்ற இடுகைகள் புறக்கணிக்கப்படுகின்றது. :)

இங்கனம்

கணேஷ்-சியாமளா தொடர் ரசிகர் மன்றம்
ஆஸ்திரேலியக்கிளை
//

already adhane panittu irukken? :-)

//
(எல்லாரும் அவங்கவங்க ஊர்ல மன்றம் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படுகிறது)
:)
//

america kilai indru thirakka padugiradhu!

Premnath said...

செல்லாது செல்லாது ... உங்களுக்குள்ள தூங்கிட்டு இருக்கற மிருகத்த தட்டி எழுப்புங்க.... இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்...

~Prem.

கணேஷ் said...

நன்றி MUNI!

Aiyoooo, TWIST AA?//

அய்யய்யோ ட்விஸ்ட் இல்லைங்க.. சாதா ட்விஸ்ட் தான்.

***************

நன்றி சின்ன அம்மிணி!

என்னன்ன என்ன? சூப்பர் ட்ரான்ஸ்லேஷன்.//

தேங்க்ஸ்ங்க.. இதுவும் ஏதோ ஒரு படத்துல வந்த மாதிரி இல்ல? :)

கணேஷ்-சியாமளா தொடர் முடியும்வரை கணேஷின் மற்ற இடுகைகள் புறக்கணிக்கப்படுகின்றது. :)//

இப்பவே எல்லாரும் அப்படி தான் பண்ணுறாங்க.. இதுல நீங்க வேறயா? ஏன் இப்பிடி எல்லாம்? :)

(எல்லாரும் அவங்கவங்க ஊர்ல மன்றம் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படுகிறது) :)//

நல்லா இருக்குங்க உங்க ப்ளான் :)

***************

நன்றி Complan Surya

anneygama entha thodar entha varum thandi adutha varudamum thodarum endru ethirparkiren..//

யெஸ் அதுல எந்த டவுட்டும் இல்ல :)

avanga shoping ponathau ellam
detaila eluthunga....(rumba mukiam)//

:( ஏன் இந்த கொலை வெறி.. அவ்ளோ மொக்கையாவா இருக்கு?

but nama divya pakkanum ethirpatha,ganesh emathitar(avangala pathi cholrathuku inum oru episode)...konjam too much...//

என் ப்ளானை புட்டுபுட்டு வைத்துவிட்டீர்கள் :)

Namala ellam Kaka vaikrathu ella avalo santhosam Ganseshuku(ethalam sari ella ama..)
but nice to read it.
Continue your blog.//

ஃபினிஷிங் எல்லாம் நல்லா தான் இருக்கு.. ஸ்டார்டிங் சரி இல்லையேயப்பா :)

(enga V.V.S GROUP SARPA ORU KILAI THIRAKKA PADUKIRATHU)...//

நீங்க வேறயா?

***************

நன்றி குட்டி

கணேஷ் என்ன தாங்க முடியலை ,
இதயம் வெடிக்கும் போல் இருக்கிறது.
எதாவது பார்த்து செய்....//

ஏதாவது பார்த்து செய்யலாம்ன்னா, பிரியாணி செய்யட்டுமா? அப்புறம் மொட்டையா இப்படி சொல்றீங்க?

***************

நன்றி Karuppu!

Hi,,,
Since I don't know How to use Tamil Keyboard, I am writing my comments in English....sorry for that..
Recently I came to Singapore and i started to read Tamil blogs..
Today i read ur Ganesh-Shymala 18...It s really nice, but i want to know who s divya and wat abt ganesh story....so I have started to read from part 1 to part 18...
Really it was so nice and funny....and i started to laugh in my office....every one looked me :(
...
Keep writing ....
Karuppu//

இந்த பாராட்டுக்கள் தான், நானும் ஓரளவுக்கு எழுதுகிறேன் என்று நினைக்க தோன்றுகிறது. தேங்க்ஸ் :) தொடர்ந்து படிங்க :)

***************

நன்றி Suresh.D!

கணேஷ் இது ரொம்ப ஓவர்... இவளோ நாளா காக்க வைக்கிறது ஒரு episode போட. கதை விறுவிறுப்பா போகுது//

வரவர எல்லாரும் நல்லா தான் மிரட்டுறீங்க.. நடக்கட்டும் நடக்கட்டும் :)

***************

நன்றீ Porkodi (பொற்கொடி)!

already adhane panittu irukken? :-) //

என்ன ஒரு சந்தோஷம்? எப்படியோ கூட்டத்தை சேர்த்துட்டீங்க :)

america kilai indru thirakka padugiradhu!//

Grrrrrrrrrrrrrrrr :(
(பல்லைக் கடிக்கிறேன்)

***************

நன்றி Premnath!

செல்லாது செல்லாது ... உங்களுக்குள்ள தூங்கிட்டு இருக்கற மிருகத்த தட்டி எழுப்புங்க.... இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்... //

எனக்குள்ள எப்ப மிருகம் தூங்க போச்சி.. அத ஏன் நான் தட்டி எழுப்பணும்? ஏன் இப்படி கொலைவெறியா யோசிக்கிறீங்க :)

***************

Shankar said...

Okay, But இவ்ளோ நாள் wait பண்ணதுக்கு இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டிருக்கலாம்!!!

குட்டி said...

நன்றி குட்டி

கணேஷ் என்ன தாங்க முடியலை ,
இதயம் வெடிக்கும் போல் இருக்கிறது.
எதாவது பார்த்து செய்....//


///ஏதாவது பார்த்து செய்யலாம்ன்னா, பிரியாணி செய்யட்டுமா? அப்புறம் மொட்டையா இப்படி சொல்றீங்க?///

பிரியாணி செய்யத்தான் திவ்யா இருக்குல்ல
அப்பெறேம் என்ன ?

நான் சொன்னது அந்த ரொமேன்டிக் டச் பற்றி....

செய்யத்தான் திவ்யா இருக்குல்ல
அப்பெறேம் என்ன ?

நான் சொன்னது அந்த ரொமேன்டிக் டச் பற்றி....

சில புரிதலுடன் சொல்வதுதான் சொல்லிற்கு அழகு.

Related Posts with Thumbnails