வெற்றி வேட்கையில் இந்தியா!!! சச்சின், யுவராஜ் அதிரடி.

சனிக்கிழமை, நான் வீட்டில் வசதியாக படுத்துக் கொண்டு மேட்ச் பார்க்கும் போது மட்டும் வரிசையாக எல்லாரும் அவுட் ஆகி வெறுப்பேற்றிக் கொண்டிருந்தனர். போங்கடா, நீங்களும் உங்க மேட்சும் என்று தான் தோன்றியது நேற்று ஸ்ட்ராஸ்ஸூம், கோலிங்வுட்டும் மொக்கையாக விளையாடி இருவரும் சதம் அடித்தபோது. கரெக்ட்டா, நான் டி.வி. ஆஃப் பண்ணி மதியம் குட்டித் தூக்கம் தூங்கிய போது எங்கிருந்து தான் வீரம் வந்தது என்று தெரியவில்லை ஷேவாக் அடி அடியென்று இங்கிலாந்தை துவைத்துக் கொண்டிருந்தார். எனக்கும் கிரிக்கெட்டுக்கும் அப்படி ஒரு ராசி. இது ஒரு உதாரணம் மட்டுமே. எப்போது எல்லாம் நான் எல்லா வேலையையும் விட்டு விட்டு மேட்ச் பார்க்க உட்கார்கிறேனோ அப்போது எல்லாம் இந்தியா கேவலமாக விளையாடி தோற்று விடும். தோனி கேப்டன் ஆன பிறது அந்த துரஅதிர்ஷ்டம் கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு போய் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் மேட்ச், இங்கிலாந்த்வுடனான ஒன்‍ டே சீரியஸ் உண்மையிலான அருமையான ஆட்டங்கள் இந்தியாவிடமிருந்து வெளிப்பட்டது.

இன்று காலையில் ஆஃபிஸ் கிளம்பும்போது 5 ஓவர் மேட்ச் பார்த்துவிட்டு தான் வந்தேன். அப்படி ஒரு கோபம், ஆற்றாமை, டிராவிட் மேல். எவ்வளவு நம்பிக்கை, எல்லாத்தையும் கேவலமான பேட்டிங்கில் வீணடித்துவிட்டார். அதனால் கோபத்துடன் தான் இந்த பதிவை எழுதினேன்.

அதற்கு பின் வந்தார். என்னுடைய ஹீரோ, ஆல் டைம் ஃபேவரைட் சச்சின். Match winning effort. எப்போதுமே சச்சின் மேல் ஒரு பழி, இரண்டாவது இன்னிங்ஸ், செகண்ட் பேட்டிங்கில் ஒழுங்காக விளையாடாமல் சொதப்பி விடுவார் என்று. அந்த கரும்புள்ளியை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு ஒன் டே மேட்சிலும் செஞ்சுரி போட்டு நீக்கினார். இப்பொது இங்கிலாந்த்துக்கு எதிரான அருமையான செகண்ட் இன்னிங்ஸ் செஞ்சுரி. வாழ்க சச்சின். அதற்கு உறுதுணையாக யுவராஜின் பொறுப்பான ஆட்டம். கங்குலிக்கு சரியான replacement.

பீட்டர்சன் என்ன பாவம் செய்தாரோ தெரியவில்லை. அடி மேல் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் அவர் மீதும், டீம் பெர்ஃபார்மன்ஸ் மீதும் தவறு ஏதும் இல்லை. 20 நாள் பசியோடு திரியும் சிங்கம் போல் வெற்றி வேட்கையோடு இருக்கும் இந்தியாவின் முன் அவர்கள் திட்டம் ஏதும் பயனளிக்கவில்லை. Very sorry Pieterson!!!

இந்த மேட்சில் இங்கிலாந்தின் ஸ்ட்ராஸ் க்கு ஆட்டநாயகன் விருது வழங்கினாலும் நான் வருத்தப்பட மாட்டேன். இரண்டு இன்னிங்ஸிலும் செஞ்சுரி என்பது சாதாரமான விஷயம் இல்லை. ஆனால் இவை எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல் ஆனதில் தான் எனக்கு வருத்தம். அவருடைய வருத்ததைப் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால் அதற்கும் அவர் கொடுத்து வைக்கவில்லை என்று தெரிகிறது. ஆட்டநாயகனாக ஷேவாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். Again very sorry Strauss!!

Kudos to Shewag, Sachin and Yuvraj.

9 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//மேட்ச் பார்க்க உட்கார்கிறேனோ அப்போது எல்லாம்//


அப்போதெல்லாம் ஒரே ரிசல்ட் தான். நீங்கலா வேற ஒன்ன எதிர்பார்த்து உட்கார்ந்தா அதுக்கு டீம் என்ன பண்ணும்

Sabapathy Anbuganesan said...

//எனக்கும் அப்படி ஒரு ராசி. . எப்போது எல்லாம் நான் மேட்ச் பார்க்க உட்கார்கிறேனோ அப்போது எல்லாம் இந்தியா தோற்று விடும். //
I am also having the same feeling.

ராஜ நடராஜன் said...

ஹி!ஹி! நாம உட்கார்ந்தாத்தான் பசங்க சொதப்புறங்கன்னு இத்தனை நாளும் நினைச்சுகிட்டிருந்தேன்:)

Anonymous said...

ungalku ena periya thale kanamo inida win paninathe nenichu?
H A HA HA
ethe veda periya comedy ethuvum ella
becoz nenga australiavuko southaficavuko or srilanakvuku aidcha than ahtu vetri
ethu suma jupibi matr
nanga(srilanak)englan ground elaye 5-0 enu win pani peruma padama amtihiya eurnthom
ungalku ena evlavu buildup?
so kocnham adanunga
grrrrrrrrrrr
lol

கணேஷ் said...

@ Anonymous,

//nenga australiavuko southaficavuko or srilanakvuku aidcha than ahtu vetri
ethu suma jupibi matr//

Don't you know India blowed Australia and clinched the series 2-0. It doesnt mean "build-up and aatam". We want to cherish the victory which we didnt at all think about in first three days. Match has totally turned on end of Fourth day & Fifth day. So wants to enjoy this thrilled victory.. Never mind :)

கணேஷ் said...

வருகைக்கு நன்றி SUREஷ், anbu, ராஜ நடராஜன்.

ARV Loshan said...

நல்லா எழுதிறீங்க ராம்.. உண்மையை உணர்ந்தபடி எழுதும் போது ஒரு தனி சுவை தான்..

நான் இந்திய ரசிகனும் இல்லை.. சச்சின்.சேவாக்,யுவராஜ் ரசிகனும் இல்லை..
ஆனால் இன்று இந்தியா வென்ற விதம்.. ஒரே சொல்லில் - அபாரம்..

ஒரே குறிக்கோளில் இந்தியா விளையாடியது..

டிராவிட் கதை முடிந்தது..

கணேஷ் said...

//நல்லா எழுதிறீங்க ராம்..//

என்னை பார்த்து நல்லா எழுதுறீங்கன்னு சொன்ன முதல் ஆள் நீங்க தான் LOSHAN..

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி LOSHAN...

கார்க்கிபவா said...

கங்குலியை விட்டு திராவிட்டை இரானி கோப்பைக்கு தேர்ந்தெடுத்த தேர்வாளர்கள் முகத்தில் கரியை பூசிவிட்டார்.. அவர் எப்போதோ ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என சொல்லியிருந்தேன்.. இனியும் பாருங்கள்.. கழுத்தை பிடித்து தள்ளினால்தான் போவார் டிராவிட்.. அவர்தான் Wall ஆச்சே

Related Posts with Thumbnails