அபியும் நானும் - விமர்சனம்

ஒரே ஒரு செல்ல மகளுக்கு பாசத்தை ஒவர் டோஸாக கொடுத்து பழக்கப்பட்ட அப்பா, மகளின் ஒவ்வொரு காலகட்டத்தின் பிரிவையும் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் இரத்தின சுருக்கமான கதை. அதிலும் பிரகாஷ்ராஜ் மாதிரியான நான்‍-ப்ராக்டிகல் அப்பாக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை எடுத்து சொல்லியிருக்கிறார்கள்.

படத்தில் முதல் 45 நிமிடம் அழகான கவிதை. சின்ன வயது த்ரிஷாவுடன் அவர்கள் பெற்றோர்கள் அடிக்கும் லூட்டியில் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது. அதன் பின் தான் த்ரிஷா என்ட்ரி, அத்துடன் மொத்த படத்தின் சுவாரஸ்யம் அப்படியே அமுங்கி விடுகிறது. த்ரிஷாவுக்கு அப்படி ஒன்றும் அழுத்தமான கேரக்டர் இல்லை. த்ரிஷாவை விட அவர் அம்மாவாக நடிக்கும் ஐஸ்வர்யாக்கு நடிப்பதற்கு நிறைய ஸ்கோப். ஆனால் அவரின் வில்லத்தனமான் வாய்ஸ் அநியாயத்திற்கு பயமுறுத்துகிறது. அவருக்கு யாராவது டப்பிங் பேசியிருக்கலாம்.
ஆசை மகளை ஸ்கூலில் சேர்க்கும் போது அழுவது, சைக்கிள் வாங்கித் தருவதற்கு அடம்பிடிப்பது, படிப்பதற்கு டெல்லி அனுப்பும்போது பிரச்சினை பண்ணுவது என பிரகாஷ்ராஜ் மொத்த படத்தின் வெயிட்டையும் தனி ஆளாக‌ தன் தோளில் சுமக்கிறார். த்ரிஷா முதல்முறை "I know what i'm doing" என்று சொல்லும்போது ஏற்படும் அதிர்ச்சியை தெளிவாக வெளிக்காட்டுகிறார். ஒரு சீனில் ஒருத்தன் லவ் லெட்டர் கொடுத்துட்டான் என த்ரிஷா சொல்லும்போது ரொம்ப மெச்சூர்டா அட்வைஸ் பண்ணும் அவர், அதே பொண்ணு நான் லவ் பண்றேன் என்று சொல்லும்போது சின்ன்ப்புள்ள மாதிரி ரியாக்ட் பண்ணுவது ஏன் என்று தெரியவில்லை.

த்ரிஷா முக சாயலில் சிறுவயது குழந்தைகளை தேர்ந்தெடுத்து நன்றாக நடிக்க வைத்து இருக்கிறார்கள். த்ரிஷாவின் கேரக்டர்க்கு இமேஜ் பூஸ்ட் அப் பண்ண விவரம் தெரியாத வயதில் பிச்சைக்காரனை வீட்டுக்கு கூட்டி வருவது ஓ.கே, ஆனால் நடு ரோட்டில் அப்பா சட்டையைக் கழற்றி ரோட்டில் திரியும் பெண்ணுக்கு போர்த்துவது என்று ரொம்ப யோசித்து இருக்கிறார்கள். யாருடனும் டிஸ்கஸ் பண்ணாமல், ரொம்ப கூலாக கல்யாண தேதியை சாப்பிடும்போது த்ரிஷா பிரகாஷ்ராஜிடம் சொல்வது, ரொம்ப வேடிக்கையாக உள்ளது. அந்த பிச்சைக்கார ரவி சாஸ்திரி நடிப்பில் அசத்துகிறார், அநாயசமாக கமெண்ட் அடிக்கிறார். ஆனால் ஃபீல் பண்ணி பேச ஆரம்பிக்கும்போது பயமுறுத்துகிறார்.

படத்தில் சொல்லிக் கொள்ளும்படியான ஒரு சிறப்பம்சம், ரொம்ப ஷார்ப்பான வசனங்கள். பாலுக்கு பால் சிக்ஸர் அடித்து இருக்கிறார்கள். பாடல்கள், சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றாலும் "வா வா அன்பே" என்ற முதல் பாடல் அருமை. ரெண்டாம் பாதி முழுவதும் வறட்சி. சிங் மாப்பிள்ளை மேல் நல்ல ஒப்பீனியன் வர வேண்டும் என்பதற்காக ஜோடிக்கபட்ட காட்சிகளில் எல்லாம் கொஞ்சம் கூட லாஜிக் இல்லை. அந்த குண்டு சொந்தக்கார சிங் கத்துவதில் காது தான் வலிக்கிறது. சோகம், சென்டிமெண்ட் என‌ எதிலும் கான்சென்ட்ரேட் பண்ணாமல் அங்கேயும் காமெடியை அள்ளி தெளித்து இருக்கிறார்கள், படத்துடன் ஒட்ட மறுக்கிறது.

அழகிய தீயே, மொழி போன்ற படங்களில் இருந்த யதார்த்தம் இந்த படத்தில் மொத்தமாக மிஸ்ஸிங்.

அபியும் நானும் ‍- அப்பாவுக்கும் பொண்ணுக்கும் மட்டும் பிடித்த படம்.

6 comments:

சரவணகுமரன் said...

ராம் சுரேஷ், நன்றாக உள்ளது உங்கள் விமர்சனம்.

கணேஷ் said...

//ராம் சுரேஷ், நன்றாக உள்ளது உங்கள் விமர்சனம்//

வருகைக்கு மிக்க நன்றி சரவணகுமரன்.

A N A N T H E N said...

:) நல்லாருக்கு

கணேஷ் said...

//:) நல்லாருக்கு//

வருகைக்கு நன்றி A N A N T H E N

உண்மைத்தமிழன் said...

நன்றி ராம்சுரேஷ்..

நானும் இதைத்தான் எழுதியிருக்கிறேன்.

பாசத்தின் ஓவர்டோஸை காட்ட வந்து திரைக்கதையே ஓவர்டோஸாகிவிட்டதோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது..

கணேஷ் said...

//நீங்கள் சொல்வது சரி தான் உண்மைத்தமிழன். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.//

நீங்கள் சொல்வது சரி தான் உண்மைத்தமிழன். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Related Posts with Thumbnails