வினா 100 கனாவும் 100, விடை சொல்லடி - II

கீர்த்தியின் அம்மா இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அவள் அம்மாவின் இறப்பு வினோத்துக்கும் பெரிய இழப்பு தான் என்றாலும், அவனால் எப்படி கீர்த்தியை சமாதானப் படுத்துவது என்று தெரியவில்லை.

கடிகாரம் மாலை 5 மணியை எந்நேரமும் தொட்டுவிடும் தூரத்தில் இருந்தது. சீக்கிரம் அரக்க பரக்க எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஆபிஸை விட்டுக் கிளம்பினான் வினோத். இந்நேரம் கீர்த்திக்கு கிளாஸ் முடிந்து இருக்கும். எனக்காக வெயிட் பண்ணிக் கொண்டு இருப்பாள் என்று நினைத்துக் கொண்டு வண்டியை 60கி.மீ ஸ்பீடில் விரட்டினான். வினோத் நினைத்தது போலவே அவள் 10 நிமிடம் காத்திருந்தாள்.

அவளை பிக்கப் பண்ணிக் கொண்டு மெதுவாக வண்டியை செலுத்தினான். அவள் இன்னும் அந்த சோகத்தில் இருந்து விடுபடவில்லை. அவன் முதுகை நன்றாகக் கட்டிப்பிடித்து கொண்டாள். அவன் நேராக சரவணபவனுக்கு வண்டியைச் செலுத்தினான். இருவரும் காஃபி சாப்பிட்டபின் வினோத் மெதுவாகக் கேட்டான், "உனக்கு தான் சூர்யா படம் என்றால் ரொம்ப பிடிக்கும்ல, நாம ரெண்டு பேரும் வாரணம் ஆயிரம் படத்துக்கு போகலாமா??" என்றான், அவள் இறுக்கமான மூடை மாற்றுவதற்காக‌. அவள் "ம்ம்" என்றாள்.

காஃபி குடித்து விட்டு தியேட்டர்க்கு செல்லும்போது டைம் சரியாக இருந்தது. இன்டெர்வெல்லில் அவளுக்கு பிடித்த சாக்லேட் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தான். படம் பார்க்கும் போது வழக்கமான உற்சாகம் அவளிடம் இல்லை. படத்தை முடித்த பிறகு டிபன் சாப்பிடும்போது வினோத் ஆரம்பித்தான், "படம் பிடிச்சிருந்ததா?? சூர்யா நல்லா நடிச்சிருக்கான்ல??" என்றான். கீர்த்தி, "ஆமாம், படம் ஓ.கே" என்றாள். வினோத், "முடிச்சிட்டு அப்படியே பீச்சில் வாக் போகலாமா???" என்றான். கீர்த்தி, "சரி" என்றாள்.

பெசன்ட் நகர் பீச் வெளியே வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் பீச் மணலில் கால் புதைத்து நடந்து சென்றனர். மெர்க்குரி விளக்கின் உபயத்தால் கொஞ்ச தூரம் மஞ்சள் வெளிச்சம் இருட்டுடன் கலந்து ஏகாந்தமாய் கடற்காற்றும் வீசிக் கொண்டிருந்தது. கீர்த்தி வினோத்தின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். ஒரு இடத்தில் இருவரும் அமர்ந்து கொண்டனர்.

வினோத், "கீர்த்தி, வாழ்க்கையில் என்ன நடக்கும், எப்போது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. நல்லது நடந்தால் நாம் சந்தோஷப்படுவதைப் போல சோகத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்று மெதுவாக ஆரம்பித்தான். கீர்த்தி, "அதெல்லாம் சரி, இத்தனை நாள் கூட இருந்த அம்மா, இப்போது இல்லை என்று நினைக்கும்போது எனக்கு அழுகையாக வருகிறது. இந்த உலகத்தில் எல்லோரையும் விட ஏன் உங்களை விடவும் எனக்கு அம்மாவைத் தான் ரொம்ப பிடிக்கும்" என்று உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் உடைந்து அழத் தொடங்கினாள். சில நிமிட நேரம் ஆழ்ந்த அமைதி. கடல் இப்போது ரொம்ப ஆக்ரோஷமாக இருப்பது போல் இருந்தது. வினோத், "இப்படியே அழுது கொண்டு இருந்தால் உன்னால் எதிலும் concentrate பண்ண முடியாது. இந்த அழுமூஞ்சியை உங்க அம்மாவுக்கும் பிடிக்காது" என்று சூழலின் மௌனத்தை உடைத்தான். கீர்த்தி ஒரு முடிவுக்கு வந்தவளாக, "ஆமாம் நான் அழுதால் என் அம்மாவுக்கு பிடிக்காது. இனிமேல் நான் அழமாட்டேன்!!!" என்றாள் உறுதியான குரலில்.

இருவரும் வீட்டுக்கு கெளம்பினார்கள். வீட்டில் அவள் படுத்துத் தூங்க எல்லாவற்றையும் அரேஞ்ச் பண்ணிக் கொடுத்து அவளை தூங்க சொன்னான். கீர்த்தி சிறிது நேரம் கண்மூடிப் படுத்தாள். அவளுக்கு தூக்கம் வரவில்லை. கீர்த்தி வினோத் அருகில் வந்து "என் பக்கத்தில் படுத்துக்கோ, எனக்கு பயமாக இருக்கிறது" என்றாள். வினோத்தும் அவன் அருகில் படுத்துக் கொண்டான். கீர்த்தி, வினோத்தை நன்றாக கட்டிபிடித்துக் கொண்டு அவன் நெற்றியில் முத்தமிட்டு சொன்னாள் "I LOVE YOU, DADDY!!!!"

வினா 100 கனாவும் 100, விடை சொல்லடி-I கதைக்கு இங்கே க்ளிக்கவும்

குறிப்பு: முதல் கதைக்கும் இந்த கதைக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. நான் எழுதும் சிறுகதைகளின் பெயரும், கேரக்டர்களின் பெயரும் ஒன்றாக வைக்க வேண்டும் என்பது என் ஆசை.

9 comments:

SUREஷ் said...

இல்லை நான் எதிர்பார்க்கவில்லை.

SUREஷ் said...

என்ன கோடூர மனதைய்யா...

SUREஷ் said...

ஜீரணிக்க மிடியவில்லை

SUREஷ் said...

பொதுவாக சிவாஜி படம் பார்த்தால் புலம்புவது போல் புலம்ப வைத்து விட்டீரய்யா

ராம்சுரேஷ் said...

SUREஷ்,
//இல்லை நான் எதிர்பார்க்கவில்லை.

என்ன கோடூர மனதைய்யா..

ஜீரணிக்க மிடியவில்லை

பொதுவாக சிவாஜி படம் பார்த்தால் புலம்புவது போல் புலம்ப வைத்து விட்டீரய்யா//

உங்களுக்கு என்ன ஆச்சு.. ஒரே புலம்பலா இருக்கு????

natraj said...

என்ன கொடுமை சரவணன் இது!?

ஆளவந்தான் said...

அய்யா, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனுங்க..

எல்லாரும் பொறக்குற குழந்தைக்கு தான் பழைய காதலன்/காதலி பேரை வப்பாஙக..

இப்ப கதையிலேயெ வைக்க ஆரம்பிச்சிட்டீங்க போல... நல்ல வேலை ஒரே பேர் தான் வருது உங்க கதையில :)

ஆளவந்தான் said...

// மெர்க்குரி விளக்கின் உபயத்தால் கொஞ்ச தூரம் மஞ்சள் வெளிச்சம் இருட்டுடன் கலந்து ஏகாந்தமாய் கடற்காற்றும் வீசிக் கொண்டிருந்தது. //
I like this part

ராம்சுரேஷ் said...

@natraj,

//என்ன கொடுமை சரவணன் இது!?//
ரொம்ப கோவப்படாதீங்க natraj.. எதையோ எதிர்பார்த்து இருந்தீங்கனா, i'm sorry..

@ஆளவந்தான்,

//எல்லாரும் பொறக்குற குழந்தைக்கு தான் பழைய காதலன்/காதலி பேரை வப்பாஙக..//

அப்படியா! உங்க குழந்தை பேர் என்னங்க?? (எப்படி போட்டு வாங்குறோம்னு பாத்தீங்களா!!)

//I like this part//

Thank you ஆள‌வந்தான்

Related Posts with Thumbnails