தலைக்கு மேல் தொங்கும் கத்தி


நேற்று வழக்கம் போல் ஆபிஸில் இருந்து சீக்கிரம் ரூம்க்கு வந்துவிட்டேன். என்னுடைய காலேஜ் தோழி ரொம்ப நாள் கழித்து கால் பண்ணியதால் ஃபோனில் சுமார் 20 நிமிடம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய சக ரூம்மேட் வந்து "மச்சான், விமல் இருக்கான்ல, அவன‌ lay off பண்ணிட்டாங்கடா, இப்ப அவன் எங்க இருக்கான்" என்று கேட்டான். நான் அநியாயத்துக்கு அதிர்ச்சியாகி "டே, என்னடா சொல்ரா????? அவன ஆளைக் காணோம்டா... நான் வரும்போது ரூம் காலியா தான் இருந்தது. உனக்கு யார் சொன்னா???" என்று நான் கேட்டேன். அதற்கு அவன் "விமல் தான்டா எனக்கே ஃபோன் பண்ணி சொன்னான்" என்றான். நேற்று இரவு முழுவதும் யாரும் யார்கூடவும் பேசிக் கொள்ளவில்லை. ஒரு வித நிசப்தம் வீடு முழுவதும். விமலை பார்க்க ரொம்ப பாவமாக இருந்தது.

நான் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் என்னுடைய team mates எல்லாருக்கும் ஃபோன் பண்ணி என்னால் முடிந்த அளவு அவர்களுக்கும் பீதியைக் கெளப்பினேன். அப்போது அவ‌ர்கள் சொன்ன விஷயம் மேலும் எனக்கு அதிர்ச்சியை கொடுத்த போதிலும் ஒரு வகையில் கொஞ்சம் தைரியத்தைக் கொடுத்தது. அது இது தான் "நான் ஊருக்கு சென்ற போன வாரம் என்னுடைய ப்ராஜெக்ட்டில் இருந்து ரெண்டு பேருக்கு கல்தா கொடுத்து விட்டனர்." கல்தா கொடுத்த விஷயமே நேற்று இரவு அவர்கள் சொன்ன பிறகு தான் எனக்கு தெரியும். இனிமேல் எங்க ப்ராஜெக்டில் கொஞ்ச நாள் எதுவும் கல்தா இருக்காது என்று நம்ப‌த்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்ட எங்களின் தீவிர விசாரணையில் தெரிய வந்த விஷயம். "நடந்து முடிந்த அப்ரைஸலில் ஆவரேஜ் ரேட்டிங் வாங்கிய அனைவரையும் முதுகில் குத்தி வீட்டிற்கு அனுப்பி உள்ளனர்." நான் ஓரளவுக்கு நல்ல ரேட்டிங் + இன்னும் எனக்கு இரண்டு வருடம் அமெரிக்கா சென்று வர L1B விசா இருக்கின்றது. இது போன்ற காரணங்களினால் என்னை வீட்டுக்கு அனுப்ப மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும் சில சமயங்களின் அடிவயிறு கலங்கத்தான் செய்கிறது.

எல்லாருடைய தலைக்கு மேலே கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. இதே நிலைமை தொடர்ந்தால், என்னை போன்ற ஆட்கள் எல்லாரும் கீழே உள்ள வேலைக்குத் தான் செல்ல வேண்டும்.
தசாவதாரத்தில் கமல் மாஞ்சு மாஞ்சு சொன்ன கேயாஸ் தியரி படம் பாக்கும் போது ஒண்ணும் விளங்கவில்லை. இப்போது தான் புரிய ஆரம்பித்து இருக்கின்றது. அமெரிக்காவில் ஏதோ ஒரு மூலையில் விழும் அடி சென்னையில் ஒரு ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் என்னை போன்ற ஆட்களுக்கு வலிக்க ஆரம்பித்து இருக்கிறது.

அப்பாவிடம் சொல்லி ஏதாவது ஒரு இன்ஜினியரிங் காலேஜில் லெக்சரராக போய் சேரவேண்டும். அது தான் என் FUTURE Plan.

14 comments:

துளசி கோபால் said...

எல்லாம் ஒரு சைக்கிள்தான். இதுவும் கடந்து போகும்.

பதிவுலகில் வந்தமைக்கு வாழ்த்து(க்)கள்.

ராம்சுரேஷ் said...

//எல்லாம் ஒரு சைக்கிள்தான். இதுவும் கடந்து போகும்.
பதிவுலகில் வந்தமைக்கு வாழ்த்து(க்)கள்.//

மிக்க நன்றி துளசி கோபால். தங்கள் வருகைக்கும், அறிவுரைக்கும்..

Balaji said...

உங்க அப்பாவிற்கு சொந்தமாக பல இன்ஜினியரிங் காலேஜ் இருக்கிறது போலிருக்க ?

இராகவன், நைஜிரியா said...

வாழ்க்கையில் ஏற்றமும், இறக்கமும் சகஜம். இட்ப்போது ஏற்பட்டுள்ள நிலைமை விரைவில் சீரடையும்.. நல்லதே நடக்கும் என நம்புவுமாக.. நல்லதே நடக்கும்..

ராம்சுரேஷ் said...

//வாழ்க்கையில் ஏற்றமும், இறக்கமும் சகஜம். இட்ப்போது ஏற்பட்டுள்ள நிலைமை விரைவில் சீரடையும்.. நல்லதே நடக்கும் என நம்புவுமாக.. நல்லதே நடக்கும்..//

மிக்க நன்றி ராகவன். நல்லதே நடக்கும். இந்த நிலைமையும் கடந்து போகும் என்று நம்பி வாழ்க்கையை
ஓட்ட வேண்டியது தான்...

//உங்க அப்பாவிற்கு சொந்தமாக பல இன்ஜினியரிங் காலேஜ் இருக்கிறது போலிருக்க ?//

பாலாஜி, நீங்க வேற ஏன் வெந்த புண்ணுல வேல பாய்ச்சுறீங்க.... என்னுடைய அப்பாவிற்கு தெரிந்தவர் மூலமாக சிபாரிசு வாங்கி கல்லூரியில் லெக்சரராக வேண்டும் என்று தான் நான் சொன்னேன். வருகைக்கு நன்றி சார்..

Balaji said...

துன்பம் வரும் பொது சிரிக்க பழுகுங்க அதை எதிர்த்து போராடனும். சார். இங்கயும் same blood.

ராம்சுரேஷ் said...

//துன்பம் வரும் பொது சிரிக்க பழுகுங்க அதை எதிர்த்து போராடனும். சார். இங்கயும் same blood.//

சரியா சொன்னீங்க.. Same blood ah?? join to our club Sir!!!!

SUREஷ் said...

என்னுடைய காலேஜ் தோழி ரொம்ப நாள் கழித்து கால் பண்ணியதால் ஃபோனில் சுமார் 20 நிமிடம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன்.//


உங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்று நினைக்கிறேன்

SUREஷ் said...

நான் ஓரளவுக்கு நல்ல ரேட்டிங் + இன்னும் எனக்கு இரண்டு வருடம் அமெரிக்கா சென்று வர L1B விசா இருக்கின்றது.//


நமது தகுதிகளை அதிகரித்துக் கொண்டே இருந்தால்தான் தப்ப முடியும் போல

ராம்சுரேஷ் said...

உங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்று நினைக்கிறேன்//

நீங்கள் நினைத்தது சரி தான் SUREஷ்.

நமது தகுதிகளை அதிகரித்துக் கொண்டே இருந்தால்தான் தப்ப முடியும் போல//

மிகச் சரியாக சொன்னீர்கள் SUREஷ்.. Survival of the FITTEST

ஸ்ரீதர்கண்ணன் said...

என்னை போன்ற ஆட்கள் எல்லாரும் கீழே உள்ள வேலைக்குத் தான் செல்ல வேண்டும்.


எங்க வீட்ல 20 ஆடுகள் இருக்கு பாஸ்.. என்னோட வருங்கால திட்டம் அதுதான்.

ராம்சுரேஷ் said...

//எங்க வீட்ல 20 ஆடுகள் இருக்கு பாஸ்.. என்னோட வருங்கால திட்டம் அதுதான்.//

வருகைக்கு நன்றி ஸ்ரீதர்கண்ணன். என்னோட எதிர்கால திட்டம் ஏதாவது ஒரு இன்ஜினியரிங் காலேஜில் லெக்சரராக போய் சேரவேண்டும் என்பது தான். ஏன்னா எங்க வீட்ல ஆட்டுக்குட்டி இல்லை. :)

கால்கரி சிவா said...

//என்னோட எதிர்கால திட்டம் ஏதாவது ஒரு இன்ஜினியரிங் காலேஜில் லெக்சரராக போய் சேரவேண்டும் என்பது தான்.//

வெளியே சத்தமா சொல்லாதீங்க. சம்பளம் கம்மி பண்ணிடுவான்.:)

ராம்சுரேஷ் said...

//வெளியே சத்தமா சொல்லாதீங்க. சம்பளம் கம்மி பண்ணிடுவான்.:)//

:))

சரிங்க.. இன்னும் உள்ளூற பயம் இருந்துகிட்டு தான் இருக்கு.. பார்க்கலாம்.
முதல்முறை தங்களின் வருகைக்கு நன்றி கல்காரி சிவா.

Related Posts with Thumbnails