வெட்டியாக உட்கார்ந்திருக்கும் கஷ்டம் உனக்கு தெரியுமா???



வழக்கம் போல் இன்னைக்கு காலைப் பொழுதும் ரொம்ப சாதாரணமாகவே ஆரம்பித்தது.
ஆபிஸில் ஒரு வேலையும் இல்லாமல் ரொம்ப கடியாகவே போகும் என்று நினைத்ததனால் தான் என்னவோ எழுந்திரிக்கவே மனதே இல்லை. எத்தனை நாள் தான் வெட்டியாக இருப்பது. சரி போனா போகுது என்று கண் விழித்து பார்த்தால் மணி 10. எல்லா வேலையும் முடித்து வீட்டை விட்டு வெளியே வந்தால் எந்த ஹோட்டலிலும் டிபன் இல்லை. ஏன்னா அப்போ மணி 11. அப்படியே பேக்கரியில் ரெண்டு வெஜ் சாண்ட்விச் சாப்பிட்டு ஆபிஸ்க்கு நடையைக் கட்டினேன்.

My God, இன்னும் என் வேலையைப் பற்றி சொல்லவே இல்லையே! சென்னையில் ஒரு சாஃப்ட்வேர் கார்ப்பரேட்டில் வேலை செய்து கொண்டு இருக்கிறேன். இன்றைய தேதியோடு நான் வேலைக்கு சேர்ந்து 30 மாதங்கள் ஓடி விட்டது. நடுவில் 6 மாதம் அமெரிக்காவில் ஆன்சைட் வேலைக்காக அட்லான்டா நகரத்தில் இருந்தேன். Toughest & evergreen period in my job tenure. ஏதாவது ஒரு அசாதாரண நேரத்தில் என் ஆன்சைட் அனுபவத்தை எழுதுகிறேன்.


மீண்டும் விட்ட இடத்தில் இருந்து. Outlook ஐ ஓபன் பண்ணி பார்த்தால், நண்பர்கள் அனுப்பும் forward இ-மெயில்ஸ் தவிர கல் உடைக்க சொல்லி எந்த மெயிலும் வரவில்லை. கடந்த இரண்டு வாரமாக இதே கொடுமை தான். ப்ராஜெக்ட் மேனேஜர் கிட்ட கேட்டால் new year வரைக்கும் இதே நிலைமை தான் இருக்கும் என்றார். Thanks to the American Economy. ஆறுதலாக வேறு ஏதாவது ப்ராஜெக்ட்டில் requirement இருந்தால் அனுப்புகிறேன் என்று சொன்னார் மேனேஜர்.

சரி ஆன்லைனில் எவன் கூடவாவது மொக்கை போடலாம் என்று போனால் busy ஆக இருக்கிறேன் என்று துரத்துகிறான் உயிர்த்தோழன். பல்லைக் கடித்துக் கொண்டு, வேறு வழியில்லாமல், பக்கத்து சீட்டில் இருக்கும் north indian பெண்ணுடன் பேசலாம் என்று போனால் அவள் ஆளுயரத்திற்கு காஃபி mug எடுத்துக் கொண்டு Pantry ஓடுகிறாள்.




எவ்வளோ நேரம் தான் வாரணம் ஆயிரம், சிலம்பாட்டம் பாடல்கள் கேட்டுக் கொண்டிருப்பது. ஹாரிஸ் ஜெயராஜ் கூட நான் கேட்ட அளவு வாரணம் ஆயிரம் பாடல்க‌ளை கேட்டிருக்க மாட்டார்.

கடவுளே, அயர்ன் பண்ண சர்ட், பேண்ட் போட்டுக் கொண்டு அதை இன் வேறு பண்ணி
பாலீஷ் பண்ண ஷூ போட்டுக் கொண்டு விறைப்பாக வெட்டியாக உட்கார்ந்திருக்கும் கஷ்டம் உனக்கு தெரியுமா??

Note: வெட்டியாக இருக்கும் இந்த நேரத்தில் தான் இந்த blog எழுத ஆரம்பித்தேன். என்னை blog எழுத தூண்டிய காரணங்களை இன்னொரு பதிவில் சொல்கிறேன்.

9 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கண் விழித்து பார்த்தால் மணி 10.////





விடிய விடிய ப்ளாக்கர் போட்டா இப்படித்தான்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

Thanks to the American Economy



அட்ரா சக்கை.........

அட்ரா சக்கை...........

SUREஷ்(பழனியிலிருந்து) said...

என்னை blog எழுத தூண்டிய காரணங்களை




அதுதான் பிரச்சனையே................

கணேஷ் said...

கண் விழித்து பார்த்தால் மணி 10.////

விடிய விடிய ப்ளாக்கர் போட்டா இப்படித்தான் //

என்னங்க பண்றது.. ஆனா நீங்க நினைக்கற மாதிரி விடிய விடிய எல்லாம் கெடையாது..


//Thanks to the American Economy

அட்ரா சக்கை.........
அட்ரா சக்கை........... //
நம்மள மாதிரி ஆளுங்க பொழப்புல மண்ணு விழறதுக்கு காரணமே அது தானா??!!

//என்னை blog எழுத தூண்டிய காரணங்களை

அதுதான் பிரச்சனையே................ //

இன்னும் ஆரம்பிக்கவே இல்ல.. அதுக்குள்ளேயேவா... இன்னும் நெறய இருக்குங்க..
wait பண்ணுங்க..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லவேளை ப்ளாக் எழுத வந்த காரணம் வேற ன்னு சொல்லிட்டீங்க :))

கணேஷ் said...

//நல்லவேளை ப்ளாக் எழுத வந்த காரணம் வேற ன்னு சொல்லிட்டீங்க :)) //

என்ன எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி இதுக்கே ஷாக் ஆயிட்டிங்க..
இதுக்கு மேல தான் என் ஒரிஜினல் மொக்கையவே ஸ்டார்ட் பண்ணப் போறேன்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி முத்துலெட்சுமி

ஆளவந்தான் said...

Join the club buddy

கணேஷ் said...

//Join the club buddy//

Sure, it is my pleasure dude.

ஆட்காட்டி said...

சேட்டை வெளியில விட்டுட்டு இருக்கலாம்..

Related Posts with Thumbnails