அப்ரைச‌ல், டெலிமார்க்கெட்டிங், க‌ல்யாண‌ம்.


அப்ரைசல் எல்லாம் முடிந்து எதிர்பார்த்தது போலவே incentives ல் கை வைத்து விட்டார்கள். கம்பெனி வழக்கம் போல் லாபகரமாக ஓடவில்லை என்று CEO எங்கேயோ இருந்து Video Conference ல் பேசினார். Pink slip கொடுக்காமல் குறைந்தபட்சம் வேலையிலாவது வைத்திருக்க வேண்டும் என்று எண்ணத்தை எல்லா employees சிடம் கொண்டு வந்தது அந்த வீடியோ கான்ஃபரன்சில் பேசிய முதலாளி போன்றோரின் சாதனை.

***********************************

பிஸியாக கம்பயூட்டரில் தலையை விட்டு இருக்கும் போது, ப‌ஸ்ஸில் standing ல் நிற்கும் போது, செமினார் எடுத்துக் கொண்டிருக்கும் போது, காலையில் எதுவும் சாப்பிடாம‌ல் ம‌தியம் அர‌க்க‌ ப‌ர‌க்க‌ சாப்பிடும்போது ம‌ட்டும் எப்ப‌டி பேங்க் டெலி மார்க்கெட்டிங் ஆளுங்க‌ளுக்கு தெரியும் என்று தெரியாது. அந்த‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் ம‌ட்டும் எப்பொதும் இனிமையான குர‌லில் ஒரு பெண் பேசுவார். அரை ம‌ன‌துடன் Sorry என்று க‌ட் ப‌ண்ணுவேன்.

வெட்டியாக‌ இருக்கும் ச‌ம‌யங்க‌ளில் 40 வ‌ய‌து ஆள் பண்ணி உயிரை எடுப்பார். கொடுமையின் உச்ச‌க‌ட்ட‌ம்.

***********************************

நேற்று மாலை ச‌க‌ ஆபிஸ் தோழியின் திரும‌ண வ‌ர‌வேற்பு, அவ்வை ச‌ண்முக‌ம் சாலை கீதாப‌வ‌னில் ந‌டைபெற்ற‌து. ச‌ரியான‌ விருந்து. 20 வ‌கையையும் டேஸ்ட் ப‌ண்ணி முடித்த‌தில் வ‌யிறு நிறைந்து இருந்த‌து. UK முர‌ளியின் இசைக் க‌ச்சேரி. அந்த‌ குழுவில் கோட் சூட் போட்ட‌வ‌ரை இனி மேல் பாட‌ சொல்லாம‌ல் இருந்தால் ந‌ல்ல‌து. ப‌க்க‌த்தில் இருந்த‌ குழ‌ந்தை ச‌ரியாக‌ அவ‌ர் ஒவ்வொரு முறை பாடும்போதும் வீல் என்று அழ ஆர‌ம்பித்த‌து.

இருவரும் காத‌ல் திரும‌ண‌ம், இரு வீட்டார் ச‌ம்ம‌த‌த்துட‌ன். இப்போது எல்லாம் பைய‌னும் பொண்ணும் நல்ல‌ வேலையில் இருக்கும்போது பெற்றோர் எந்த‌ எதிர்ப்பும் எல்லாம‌ல் ச‌ம்ம‌திக்கின்ற‌ன‌ர்.

பார்க்க‌லாம், என‌க்கு எப்படி வாய்க்க‌ப்போகிற‌து என்று. தீபாவளிக்கு அப்புறம் இன்று இரவு ஊருக்கு கெளம்புறேன். புதன்கிழமை காலை மறுபடியும் சென்னை. ஆக வருவதற்கு 5 நாள் ஆகும். இந்த முறையாவது அம்மா பார்க்கும் பொண்ணிற்கு ஓகே சொல்லிவிட்டு அடுத்த வேலைகளை பார்க்க ஆரம்பிக்க வேண்டும்.

**********************************

7 comments:

DHANS said...

//நமக்கு எப்படி வாய்க்கபோகுதுன்னு //

இதைத்தான் நானும் எல்லா கல்யாணதப்பவும் நினைப்பேன் ஆனால் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் காலத்தை வீணடித்துவிட்டேன், இப்போது முயற்சிக்கலாம் என்றால் நண்பர்கள் இனி முயற்சிப்பது வீணானது, பேசாமல் வீட்டில் பார்க்க சொல்லி செய்துகொள் என்று சொல்லுகின்றனர்

ராம்சுரேஷ் said...

Wish you all the very best. எனக்குன்னு நெறைய கனவுகள் இருக்கு DHANS, பார்க்கலாம்..

DHANS said...

கனவுகள் யாருக்குத்தான் இல்லை, எல்லோருக்கும் இருக்கும் ஆனாலும் காலாகாலத்தில் முடித்து விடவும்

இதைத்தான் எல்லோருக்கும் சொல்கிறேன், ஆனா நான் பண்ணிக்கொள்ள இன்னும் நாள் ஆகும்

ராம்சுரேஷ் said...

//கனவுகள் யாருக்குத்தான் இல்லை, எல்லோருக்கும் இருக்கும் ஆனாலும் காலாகாலத்தில் முடித்து விடவும்
//
நீங்கள் சொல்வது சரி தான் DHANS. எல்லாவற்றையும் காலாகாலத்தில் முடித்தால் தான் சிறப்பு.

By the Way, இப்போது தான் உங்கள் பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்தேன். மிக நல்ல எழுத்து நடை உங்களுக்கு.

சந்தனமுல்லை said...

:-)

ராம்சுரேஷ் said...

வருகைக்கு மிக்க நன்றி சந்தனமுல்லை. :)

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள்

Related Posts with Thumbnails