மகேஷ், சரண்யா மற்றும் பலர் - திரை விமர்சனம்.ப‌‌ட‌த்துக்கு நீங்க‌ள் 20 நிமிட‌ம் லேட்டா போனாலும் பிர‌ச்சினை எல்லாம் இல்லை, கொடுத்து வைத்த‌வ‌ர் நீங்க‌ள். முத‌ல் பாதி அதி ப‌ய‌ங்க‌ர‌ மொக்கை. இரண்டாம் பாதி ஏமாற்றம் அளிக்கவில்லை.

ஷ‌க்தி, விஜ‌ய்க்கு அடுத்து 3 நாள் தாடி எப்பொதும் முக‌த்தில். சிரிக்கும் போது அழ‌காக‌ இருக்கிறார். ஆனால் எப்பொதும் ஒரே reaction. Climaxல் ம‌ட்டும் ந‌டிப்ப‌த‌ற்கு கொஞ்ச‌ம் வாய்ப்பு. ச‌ந்தியா ஏன் இவ்ளோ கொடுமையாக‌ இருக்கிறார் என்று தெரிய‌வில்லை. கேவ‌ல‌மான மேக்க‌ப் ம‌ற்றும் ந‌டிப்ப‌த‌ற்கு கொஞ்ச‌ம் கூட‌ வாய்ப்பு இல்லாத‌ role. ச‌ந்தியாவை விட‌ கூட‌ இருக்கும் தோழி பார்ப்ப‌த‌ற்கு அழ‌காக‌ இருக்கிறார் சில‌ இட‌ங்களில். பல இடங்களில் ஒவர் ஆக்டிங் வேறு. ஷ‌க்தியின் த‌ங்கையாக‌ ச‌ர‌ண்யா, கொஞ்சம் wieght ஆன ரோல். முத‌ல் பாதி முழுவ‌தும் இவ‌ரை சுற்றியே க‌தை, இவ‌ரும் ஓர‌ள‌வுக்கு ச‌மாளிக்கிறார். இவ‌ர்க‌ளை த‌விர‌ ப‌ட‌ம் முழுவ‌தும் ஏக‌ப்ப‌ட்ட‌ கதாபாத்திர‌ங்க‌ள், கண்ணை க‌ட்டுது. மொக்கையாய் செல்லும் படத்தில் இடைவேளையில் ஒரு knot. அதுவும் வழக்கம் போல மொக்கையாகவே முடிகிறது.

ஷக்தி, த‌ன‌து காத‌ல் க‌தையை ஒவ்வொருவ‌ருக்கும் சொல்லும் flow ந‌ன்றாக‌ இருக்கிறது. ஆனா தேவையே இல்லாத பாட‌ல்க‌ள் ம‌ற்றும் நீள‌மான காட்சி அமைப்புக‌ள். ஆவ் கொடடாவி தான் வ‌ருகிற‌து.

சென்னையில் காமெடிக்கு ச‌ந்தான‌ம், கும்ப‌கோண‌த்தில் ஸ்ரீநாத். காட்சிக‌ள் ஒரு கோர்வையாய், இர‌ண்டாவ‌து பாதியில் காட்சிக‌ள் repeat ஆவ‌து டைர‌க்ட‌ர் ட‌ச். க‌ல்யாண‌ மேடையில் லெட்ட‌ர் எழுதிவைத்து விட்டு ஓடிப் போவ‌து போல, மண்டபத்தில் ஓடிப் போன மாப்பிள்ளைக்கு பதிலாக அவசர மாப்பிள்ளையை தேடுவது போன்ற காட்சிகள் இன்னும் எத்த‌னை த‌மிழ் சினிமாவில் காட்டுவார்க‌ளோ??? கீர்த்தி சாவ்லா ஊறுகாய் போல‌ இப்ப‌ட‌த்திலும் வ‌ழ‌க்க‌ம் போல.

அடுத்து அடுத்து 4 பாட‌ல்க‌ள். பாட‌ல்க‌ள் அனைத்தும் சுமார் ர‌க‌ம். பாடல் வரும் போது, தியேட்டரில் அப்படியே கொத்து கொத்தாக மக்கள் வெளியே போய் விடுகிறார்கள். இதில் Climax ல் TITANIC தீம் மியூசிக்கை அப்படியே சுட்டு போட்டுவிட்டார்கள். வித்யாசாகர் ரொம்ப கொடுமைப்படுத்தி விட்டார்.

கடைசி 15 நிமிட படத்துக்கு 3 மணி நேரம் மொக்கையை தாங்க முடியும் என்றால் நீங்கள் தாராளமாக இந்த படத்தை பார்க்கலாம். மற்றவர்களுக்கு DVD தான் BEST.

3 comments:

ஜுர்கேன் க்ருகேர் said...

:)

DHANS said...

என்னை காப்பாற்றியதற்கு நன்றி
டி வி டி எதுக்கு வரும் புத்தாண்டில் ஏதாவது ஒரு தொல்லைக்காட்சியில் போடுவார்கள் பார்க்கலாம்

மங்களூர் சிவா said...

நேத்துதான் இந்த கொடுமைய பாத்தேன். மெகா சீரியல் :(

Related Posts with Thumbnails