சிலம்பாட்டம் - விமர்சனம்


சொத்துக்காக கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் பங்காளி சண்டை. பிரபு, சிம்பு குடும்பத்துக்கும் பொன்வண்ணன், ராகவ், கிஷோர் குடும்பத்துக்கும் இடையில் நடக்கும் அடுத்த தலைமுறை வரை நடக்கும் ரத்தக்களறியான சண்டை.

அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் சிம்பு. முதலாமவருக்கு ஜோடி சினேகா அடுத்தவருக்கு சனாகான். இவர்கள் தவிர நெடுமுடு வேணு, யுவராணி(விஜயுடன் கபடி விளையாடினாரே, அவரே தான்), நிரோஷா, சந்தானம், மயில்சாமி, கருணாஸ், கனல்கண்ணன், சிட்டி பாபு என ஒரு பெரும் கூட்டமே நடித்திருக்கிறார்கள்.

அய்யராக நடிச்சாலும் சரி, காலேஜ் ஸ்டூடண்டாக நடித்தாலும் சரி, இல்லை பொறுக்கியாக நடிச்சாலும் எல்லாரையும் அடிப்பதை மட்டுமே தொழிலாகக் கொண்டவர் சிம்பு. இந்த படத்திலேயும் அதே போல். நடுவில் சனாகானுடன் காதல் காட்சிகள் எல்லாம் ஆபாசத்தின் உச்சகட்டம். இரட்டை அர்த்த வசனம் எல்லாம் தேவை இல்லை. ஸ்ட்ரெய்ட்டா புரியும்படியான வசனங்கள். சந்தானம் வரும் சீன் எல்லாமே காமநெடியின் தோரணங்கள். இந்த கொடுமை பத்தாது என்று கிராமத்து பாட்டியையும் பேச வைத்து வேடிக்கை பார்த்து உள்ளனர். பாடல் காட்சிகளில் அரைகுறை ட்ரெஸ்ஸோட டான்ஸ் ஆடவும், முதல் பாதியில் சிம்புவுக்கு பஞ்சாமிர்த மசாஜ் செய்ய‌ மட்டும் சனாகான். பிரபு, நெடுமுடி வேணு, பொன்வண்ணனுகெல்லாம் படத்தில் வேலையே இல்லை.

20 வருஷத்து முந்தைய கிராமத்து கதையில், கல்யாணம் பண்ணிக்காமலே தினமும் இரவு லிவிங் டுகெதர் லைஃப் வாழும் ஆதர்ஷ ஜோடியாக சிம்பு‍-சினேகா மாமி. நல்ல வேளை படத்தில் முக்கியமான இடத்தில் அதை ஒரு Knot ஆக வைத்திருப்பது புத்திசாலித்தனம். அதே போல் அந்த மலைக்கு நடுவே உள்ள tunnelஐ வைத்து சென்டிமெண்ட் காட்சியாக மாற்றியது அருமையான் க்ளிஷே.

அய்யர் சிம்புவை பார்த்து "தமிழ்" என்று பஸ்ஸில் தப்பித்து ஓடுபவன் பார்த்து ஆச்சர்யப்படும்போது நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். அதை அப்படியே மெயின்டெய்ன் பண்ணி கொண்டு போகாமல் அடுத்த சீனிலேயே சுவாரஸ்யம் உடைந்து போவது மைனஸ். க்ளைமேக்ஸில் பில்லா காஸ்ட்யூம், தீம் மியூசிக்கோடு சிம்பு வருவதெல்லாம் கொடுமையின் உச்சகட்டம் என்றால் "நலந்தானா" பாடல் முடிந்தவுடன் ஒரு நிமிஷம் குத்து மியூசிக்கில் தனியாக ரப்பர் மாதிரி டான்ஸ் ஆடுவது கோமாளித்தனத்தின் உச்சகட்டம்.

ஒரு சின்னப்பையன் குடும்பத்தில் எல்லாரையும்(சிம்பு உள்பட) கத்தியில் குத்தி சாகடிப்பது ரொம்ப டூ மச். பாடல் காட்சிகள் மட்டும் படத்தில் ரிலீஃப். அடிதடி காட்சிகள், டபுள் மீனிங் வசனங்கள் எல்லாம் குறைத்து இருந்தால் ஒரு நல்ல மசாலா திரைப்படமாக வந்து இருக்க வேண்டிய படம். ம்ம்ம்.. பயந்தது போலவே காது செவிடானது தான் மிச்சம்.

சிலம்பாட்டம் - சிம்புவின் அலப்பரை ஆட்டம்.

15 comments:

VIKNESHWARAN said...

//இரட்டை அர்த்த வசனம் எல்லாம் தேவை இல்லை. ஸ்ட்ரெய்ட்டா புரியும்படியான வசனங்கள். //

ஐய்ய்ய் ஜாலி...

Anonymous said...

Simbu nadikalennu yaru kavalapadradhu??????? Appaavum, pullayum eppavumaey overu thaan.

ராம்சுரேஷ் said...

VIKENESHWARAN,

//ஐய்ய்ய் ஜாலி...//
உங்க பாடு கொண்டாட்டம் தான் என்று நினைக்கிறேன். உங்களை சிம்பு ஏமாத்தமாட்டார்.

ராம்சுரேஷ் said...

Ananymous,

//Simbu nadikalennu yaru kavalapadradhu??????? Appaavum, pullayum eppavumaey overu thaan.//

Well said...

VIKNESHWARAN said...

//Appaavum, pullayum //

அண்ணே கொஞ்சம் தமிழ எழுதுறது ரெண்டாவது வார்த்தையை நான் ஸ்ரேட்டா கெட்ட வார்த்தையில் படிச்சிட்டேன் :(

ராம்சுரேஷ் said...

VIKNESHWARAN,
//அண்ணே கொஞ்சம் தமிழ எழுதுறது ரெண்டாவது வார்த்தையை நான் ஸ்ரேட்டா கெட்ட வார்த்தையில் படிச்சிட்டேன் :(//


ஹலோ அது எழுதுனது அனானிங்க.. அதுக்கு நான் என்ன பண்றது... இருந்தாலும் உங்க டைமிங் ஜோக்க நெனச்சு ரசித்தேன்..

Anonymous said...

15 ONLINE...

புது பதிவரா இருந்தாலும் கலக்குறீங்க!!!

ராம்சுரேஷ் said...

//புது பதிவரா இருந்தாலும் கலக்குறீங்க!!!

நன்றி அனானி..

ஊர் சுற்றி said...

இன்னொரு விமர்சனம் படிச்சேன்.
முதல் வரியே 'போயிடாதீங்க' னு இருந்தது.

உங்கள் விமர்சனமும் அதையே உறுதிப்படுத்துது. நன்றி. :)

ராம்சுரேஷ் said...

//உங்கள் விமர்சனமும் அதையே உறுதிப்படுத்துது. நன்றி. :)//

ஆமாம் ஊர்சுற்றி.. சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள வேண்டாம்..
வருகைக்கு நன்றி

ravitha said...

கமர்சியல் என்ற பெயரில் காமகலியாட்டம் நடத்தியிருக்கிறார் சிம்பு, அதே போல் நிறைய ரீமிக்ஸ் பாடல்களை அவரது அடுத்தடுத்த படங்களில் திணிக்கிறார் இதிலிருந்து அவருக்கு தணித்திறமை இல்லை என்பது நன்றாகவே தெரிகின்றது,சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் சிம்பு அடுத்தவரின் குழந்தைக்கு தனது இனிசியலை போட்டுக்கொண்டு பெருமை பட்டுக்கொள்ளும் மாமனிதர்.

ராம்சுரேஷ் said...

ravitha,

//கமர்சியல் என்ற பெயரில் காமகலியாட்டம் நடத்தியிருக்கிறார் சிம்பு, அதே போல் நிறைய ரீமிக்ஸ் பாடல்களை அவரது அடுத்தடுத்த படங்களில் திணிக்கிறார் இதிலிருந்து அவருக்கு தணித்திறமை இல்லை என்பது நன்றாகவே தெரிகின்றது,சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் சிம்பு அடுத்தவரின் குழந்தைக்கு தனது இனிசியலை போட்டுக்கொண்டு பெருமை பட்டுக்கொள்ளும் மாமனிதர்//

ரொம்ப கோவப்படாதீங்க...

A N A N T H E N said...

புதிய பதிவரா இருந்தாலும் கலக்குறீங்க

ஹிஹிஹி இப்படி சொல்றதுனல நான் மழைய பதிவர்ன்னு நீங்க தப்பா நினைக்கலாம் அவ்வ்வ்வ்

A N A N T H E N said...

//....//இரட்டை அர்த்த வசனம் எல்லாம் தேவை இல்லை. ஸ்ட்ரெய்ட்டா புரியும்படியான வசனங்கள். //

ஐய்ய்ய் ஜாலி...//

மேலே உள்ளதை இப்படி சொல்லி நிரூபிச்சிட்டீர்... நீர் வாழீ!!!

//அண்ணே கொஞ்சம் தமிழ எழுதுறது ரெண்டாவது வார்த்தையை நான் ஸ்ரேட்டா கெட்ட வார்த்தையில் படிச்சிட்டேன் //

sweet said...

ajith, vijay, surya - vai vida simbu better... i love simbu by madhumidha

Related Posts with Thumbnails