ராகுல் டிராவிட், இந்திய கிரிக்கெட் வரலாற்றின் ஒரு சகாப்தம். கிரவுண்டில் இறங்கினால் மேட்ச்சை காப்பாற்றாமல் திரும்ப மாட்டார் என்று இந்தியாவின் கடைக்கோடி ரசிகனும் மட்டுமில்லாமல் எதிரணி வீரர்களும் பயம்கலந்த நம்பிக்கை வைத்துள்ள ஒரு வீரர். பல ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் மேட்ச்களை நமக்கு சாதகமாக மாற்றிய சிறந்த வீரர். தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் செஞ்சுரிகள் மற்றும் ஐந்து இரட்டை சதங்கள், அதுவும் மிகக் குறைந்த டெஸ்ட் மேட்ச் இடைவெளியில். இந்த இரட்டை சதங்களால் வெளிநாட்டில் (ராவல்பிண்டியிலும், அடிலெய்டிலும்) வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகள் நமக்கு சாத்தியமாயின.
தற்போது சென்னையில் நடந்து கொண்டிருக்கும் இங்கிலாந்து மேட்சிலும் உங்களால் மட்டுமே மேட்சை காப்பாற்ற முடியும் என்று ஸ்ட்ராஸ்(இரண்டு இன்னிங்ஸிலும் செஞ்சுரி அடித்தவர்) சொல்லுமளவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கக் கூடிய ஒரு வீரர்.
ஆனால் கொஞ்ச நாளா உங்களுக்கு என்ன ஆச்சு டிராவிட்????? உங்களின் ஆல் டைம் ஃபேவரைட்டான டெஸ்டிலும் ஏன் இந்த அளவிற்கு சொதப்பிக் கொண்டிருக்கீங்க??? எங்க போச்சு உங்க அபரிதமான கிரிக்கெட் ஃபார்ம்??? லக்ஷ்மணுடன் நீங்கள் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 350 ரன் (கொல்கத்தா, 2001) பார்ட்னர்ஷிப், மீண்டும் திரும்ப வருமா??? ஃபாலோஆன் மேட்சையும் நமக்கு சாதகமாக மாற்றிய போர்க்குணம் எங்கே டிராவிட்?? "The WALL" இன்னும் உங்களுக்கு பொருத்தம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?
இங்கிலாந்து மேட்சைக் காப்பாற்றி கொடுப்பீர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த கோடிக்கணக்கான ரசிகர்களின் நானும் ஒருவன். வழக்கம் போல் இப்போதும் ஏமாற்றிவிட்டீர்கள். ஷேவாக் அமைத்துக் கொடுத்த பாதைக்கு நீங்கள் ஒரு 100 ரன் பார்ட்னர்ஷிப்க்கு கைகொடுத்து இருந்தால் வெற்றிக்கனி நமக்கு மட்டும் தான். ஒரு வேளை இந்த போட்டியில் இந்தியா தோற்றால் அதற்கு நீங்கள் தான் முழுமுதல் பொறுப்பு. ஏனென்றால் இங்கிலாந்து 11 பேருடன் விளையாடுகிறது, ஆனால் நாம் 10 பேருடன் தான் விளையாடுகிறோம், உங்களைத்தவிர. (இரண்டு இன்னிங்ஸிலும் மொத்தமாக 7 ரன் மட்டுமே)
ஏற்கெனவே ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் உங்கள் இடம், ரெய்னாவால் நிரப்பப்பட்டது. டெஸ்ட் போட்டிகளிலும் உங்கள் இடத்திற்கு பத்ரிநாத், ரெய்னா, உத்தப்பா, ரோஹித் சர்மா, முரளி விஜய் என்று பல பேர் இலவு காத்த கிளி போல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களை கங்குலி போல் தேர்வுக்குழு பந்தாடாமல் சீக்கிரம் பழைய ஃஃபார்முக்கு வந்து இங்கிலாந்து மூக்கை உடைக்க வேண்டும் (அடுத்த மேட்சிலாவது) இல்லையென்றால் சீக்கிரம் ரிட்டையர்டு ஆகி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று சராசரி கிரிக்கெட் ரசிகனாக ஆசைப்படுகிறேன்.
இந்தியா இந்த மேட்சில் வெற்றி பெற்று விட்டது. அது தொடர்பான எனது பதிவின் சுட்டி
வெற்றி வேட்கையில் இந்தியா!!! சச்சின், யுவராஜ் அதிரடி.
என்ன ஆச்சு டிராவிட் ?????
Labels:
கிரிக்கெட்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
டிராவிட், காவஸ்கருக்குப் பின் கிடைத்த ஒரு மாணிக்கம்.
சிவாஜிக்கு இருப்பது போல் அவருக்கும் ஒரு ரசிகர் கூட்டம் உண்டு....
அவரது வழி தனி வழி
நான் உங்கள் பாயிண்டை ஏற்றுக் கொள்கிறேன் SUREஷ்
வருகைக்கு நன்றி சார்.
Dravid is one of the fine crickter. No doubt about this. Now he is in the grip of bad luck. Dravid, we are waiting for you, till the time admits.
ராவிட்டுக்கு என்ன நடந்தது? அடுத்த மேட்ச் வரை தேர்வுக்குழு வைத்திருக்குமா என்பது சந்தேகம்.
எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர்.
வருகைக்கும் மிக்க நன்றி வந்தியத்தேவன், anbu..
Post a Comment