மொபைல் போன் ஆசை அடங்காமல்..



நான் வைத்திருக்கும் மொபைலுக்கு வயது 3 வருஷம் 6 மாதங்கள். என்னுடைய தம்பி இன்ஜினியரிங் காலேஜில் ஃபைனல் இயர், முடிக்கப் போகிறான். அவன் ஆசைப்பட்டபடி, இரண்டாம் வருடம் படிக்கும் போது mp3 player, FM உடன் கூடிய LG Dynamite set வாங்கிக் கொடுத்தேன். நான் வாங்கிக் கொடுத்தும் இரண்டு வருடம் ஓடிவிட்டது.

நான் வைத்திருக்கும் மாடல் Nokia 3120. நான் வாங்கும் போது அப்போது அது தான் லேட்டஸ்ட் ஃபோன். இதை நான் வாங்குவதற்கு எங்க அப்பாவிடம் நான் போட்ட திட்டம், ஐடியா எல்லாம் அவ்வளவு சீக்கிரம் வேலைக்கு ஆகவில்லை. அவருடைய எண்ணம் "கல்லூரியில் செல்போன் வைத்து இருந்தால் பசங்க கெட்டுப் போயிடுவாங்களோ" என்று இருந்து இருக்கலாம். 3 மாதம் கழித்து என்னுடைய கடைசி செமஸ்டரில் வாங்கிக் கொடுத்தார்.

அப்போது நான் அவரிடம் கேட்டது என்னமோ Nokia 1100 தான். At that time i was so crazy about Nokia 1100.(think, still so). அப்பா அதெல்லாம் விட்டு விட்டு கலர் மொபைல் 3120 வாங்கிக் கொடுத்ததும் கொஞ்ச நேரம் சோகம் ஆகிவிட்டேன். 1100 மாதிரி இதில் torch இல்லையே என்று வேற ஃபீலிங்.

அந்த சமயத்தில் காலேஜில் நண்பர்களிடம் எல்லாம் ஒரு தாழ்வு உணர்வுடன் தான் மொபைலைக் காட்டினேன். அதில் என் நண்பன் ஒருவன், "டேய், நம்ம செட்டில் நீ தான்டா காஸ்ட்லி மொபைல் வச்சி இருக்க, அதுவும் கலர் மொபைல் வேற, கலக்குற மச்சான்" என்றான். அப்போதில் இருந்து எல்லாரிடமும் பெருமிதம் கலந்த கெத்துடன் மொபைலைக் காட்டிக் கொண்டே இருந்தேன் இன்ஜினியரிங் முடிக்கும் வரை.

நான் சொல்ல வந்ததில் இருந்து வேற எங்கோ போய் விட்டேன். என் தம்பியைப் பற்றி சொல்லிக் கொண்டு இருந்தேன். என் தம்பிக்கோ இப்போ வேறு ஒரு மொபைல் மீது கண். ஆனால் நானோ பழைய செட்டையே மாற்றாமல் வைத்துக் கொண்டு இருக்கிறேன். அவனும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம் "டே, உன் செல்போன மாத்தலையா, ரொம்ப பழசாயிடுச்சு" என்பான். நானும் "மாத்தணும்டா" என்று கடந்த ஒரு வருடமாக சொல்லிக் கொண்டு இருக்கிறேன். தம்பியும் விடாமல் "அப்பா வாங்கித் தந்தார்னு செண்டிமென்ட்டா???, வேலை கிடைத்த போது வைத்திருந்தது என்று செண்டிமென்ட்டா???" தொல்லை பண்ணிக் கொண்டு இருந்தான்.

ஆனா எனக்கு பொதுவாக செல்போன் மீது பெரிய ஈர்ப்பு எல்லாம் கிடையாது. அதிலும் மொபைல் ஸ்டோரில் பார்க்கும்போது "இதை விட அது நல்லா இருக்கே, அதை விட இது நல்லா இருக்கே, இன்னும் 500 ரூபாய் செல்வழித்தால் advanced features செட் கெடைக்குமே, அந்த பணத்தில் இன்னும் 500 ரூபாய் போட்டால் கேமராவுடன் கெடைக்குமே" என்று குழப்பத்தில் தலை சுற்றி எதுவுமே வாங்காமல் திரும்பிவிடுவேன். அதன் பிறகு தம்பி என்னிடம் மொபைல் மாத்துவது பற்றி தப்பித் தவறி கூட வாய் திறப்பது இல்லை.

பொதுவாக மத்த விஷயத்தில் நான் ரொம்ப self content person என்றாலும், இந்த மொபைல் ஃபோன், துணி விஷயத்தில் அவ்வளவு ஈஸியாக நான் satisfy ஆக மாட்டேன். ஏன் என்று எனக்கு தெரியவில்லை.

நானாவது அவனுக்கு NewYear ஒட்டி அவன் ஆசைப்பட்டபடி புது மொபைல் வாங்கித் தர வேண்டும்.

4 comments:

ராஜ நடராஜன் said...

//இந்த மொபைல் ஃபோன், துணி விஷயத்தில் அவ்வளவு ஈஸியாக நான் satisfy ஆக மாட்டேன்//

நம்ம விசயமே நேர் எதிர்:)

கணேஷ் said...

//இந்த மொபைல் ஃபோன், துணி விஷயத்தில் அவ்வளவு ஈஸியாக நான் satisfy ஆக மாட்டேன்//

நம்ம விசயமே நேர் எதிர்:) //

இந்த விஷயங்களில் satisfy ஆவது ரொம்ப நல்ல பழக்கம்... You are great sir!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மொபைல் ஃபோன் வாங்கறதும், கல்யாணம் பண்ணிக்கிறதும் ஒண்ணு.


கொஞ்சம் பொறுமையா இருந்தால் நல்ல மாடல் கம்மி செலவுல கிடைக்கும்

கணேஷ் said...

//கொஞ்சம் பொறுமையா இருந்தால் நல்ல மாடல் கம்மி செலவுல கிடைக்கும்//

Well said SUREஷ்..

Related Posts with Thumbnails