வினா 100 கனாவும் 100, விடை சொல்லடி - I


வினோத்திற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கீர்த்தி என்ன சொல்வாள், எப்படி ரியாக்ட் பண்ணப் போகிறாள் என்பதை நினைக்கும் போது பகீர் என்றது. உலகத்தில் இருக்கும் எல்லா கடவுளையும் வேண்டிக் கொண்டான்.

அதற்கு முன் குட்டி ஃப்ளாஷ்பேக். வினோத்தும் கீர்த்தியும் சிறந்த காதலர்கள். கல்லூர்யின் மூன்றாம் ஆண்டின் இறுதியில் தன் காதலை கீர்த்தியிடம் ப்ரோப்பஸ் பண்ணினான் வினோத். நீண்ட இடைவேளைக்குப் பின் காதலை ஏற்றுக் கொண்டாள் கீர்த்தி ஒரு பெரும் நிபந்தனையுடன். கல்லூரி முடியும் வரை இன்னும் ஒரு வருடம் யாருக்கும் தெரியக்கூடாது, நாம் செட்டில் ஆகும் வரை இது ஒரு தடைக்க்ல்லாக இருக்ககூடாது. வினோத் மிகவும் சந்தோசமாக ஏற்றுக் கொண்டான்.

ஆனால் இன்று கடைசி செமஸ்டர் ப்ராஜெக்ட் செமினார் முடிந்து க்ளாஸ் ரூம் வரும் போது கொட்டை எழுத்தில் Vinodh loves Keerthi என்று போர்டு வெண்மையில் மின்னியது. வினோத் பார்த்து பேயறைந்த‌து போல் ஆனான். கீர்த்தி செமினார் முடிந்ததும் நேராக‌ ஹாஸ்டல் சென்று விட்டாள். அதற்க்குள் விஷயம் காலேஜ் முழுவதும் பரவியது. எல்லாரும் துக்கம் விசாரிக்க ஆரம்பித்து விட்டர்கள். அவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் வினோத் நகத்தை கடித்துக் கொண்டிருந்தான். நேராக telephone பூத் சென்று லேடிஸ் ஹாஸ்டல்க்கு ஃபோன் பண்ணி 5 மணிக்கு கேண்டீன் வருமாறு சொல்லி அவளை எதுவும் பேச விடாமல் ஃபோனை வைத்து விட்டான் வினோத்.

வினோத் 4.30 லிருந்து கேண்டீனில் வெயிட் பண்ண ஆரம்பித்தான்."இது gossip என்று சொல்லி விடலாமா இல்லை உண்மையை எல்லாரிடமும் சொல்லி விடலாமா?" என்று பலவாறு யோசித்து கையில் எதுவும் மிச்சமில்லாமல் எல்லா நகத்தையும் கடித்து விட்டிருந்தான். சரியாக 5.10க்கு அவள் வந்தான். கொஞ்சம் கூட டென்சன் ஏதும் இல்லாமல் சாந்தமாக வந்த அவளைப் பார்த்து ஓரளவு சந்தோஷப்பட்டான்.

அவள் ரெண்டு வெஜ் சாண்ட்விச்சும், காஃபி ஆர்டர் பண்ணி விட்டு அவன் அருகில் வந்து அமர்ந்தாள். எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் அவள் கண்களைத் தவிர கேண்டீனில் உள்ள மத்த எல்லாத்தையும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். 5 நிமிட pin drop silenceக்கு அப்புறம் கீர்த்தி ஆரம்பித்தாள் "இனிமேல் வித்யாவிடம் அதிகம் பேசாதே. Placement interview papers எதுவும் அவளுக்குக் கொடுக்காதே, Infosys ல் வேலை கெடைத்த கெத்துடன் பசங்ளுடன் சேர்ந்து ஊர் சுற்று. வித்யா உன்னைக் காதலிப்பதாக ஹாஸ்டல் முழுவதும் சொல்லிக் கொண்டு திரிகிறாள். பிப்ரவரி 14 உன்னிடம் ப்ரோபஸ் பண்ணுவதற்காக greetings card ரெடி பண்ண ஆரம்பித்து விட்டாள். அதனால் வரும் வீக் எண்ட் நாம் ஊருக்குப் போய்விடலாம். சரியா?" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்து விட்டு கிளம்பத் தயாரானாள்.

நான், "சரி, ஓ.கே..ஆனால் க்ளாஸில் யார் அப்படி எழுதுனது, யாராவது கேட்டால் நான் என்ன சொல்லுவது" என்று கேள்விக்குறியுடன் அவளை நிறுத்தினேன். அதற்கு அவள், "அதை எழுதியதே நான் தான், இனிமேல் எவளாவது உன் பின்னால் சுற்றுவாள்??!!!" என்று சொல்லி விட்டு ஒரு பார்வை, என்னிடம் வெட்கத்துடன் என் காதலுக்கு ஓகே சொன்னபோது பார்த்த அதே பார்வையுடன் சிரித்து விட்டு ஓடி விட்டாள்.

நான் ஆனந்த அவஸ்தையுடன் வைரமுத்து எழுதிய "வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே உருவமில்லாத உருண்டையுடன்" யாருக்கும் தெரியாமல் சிரித்துக் கொண்டு உலகத்துக்கே சொன்னேன் "I love Keerthi, she loves me"

கீர்த்தி - நீ வினாவும் நூறு, என் கனாவும் நூறு

0 comments:

Related Posts with Thumbnails