உங்களுக்கு வயதாகிக் கொண்டே போகிறதா?? சிம்பிள் டெஸ்ட்

அமெரிக்காவில் இருக்கும் ரோஸ்மேரி, கண் பரிசோதனைக்காக கண் பரிசோகரைப் பார்க்க கிளினிக் சென்று வெயிட் பண்ணிக் கொண்டு இருக்கிறார். ரோஸ்மேரிக்கு கிட்டதட்ட ஒரு 45 வயது இருக்கலாம். முகமெல்லாம் சுருங்கி, கண் உள்ளே சென்று பார்ப்பதற்கு பரிதாபமாய் இருந்தாள். ஆன்ட்டியில் இருந்து பாட்டியாகும் ஸ்டேஜில் ஏறக்குறைய இருக்கிறார். அப்படியே சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு இருந்த அவர், தற்செயலாக டாக்டர் பெயரை பார்த்தார். சில விநாடிகளில் அவர் நினைவில் ஃப்ளாஷ் அடித்தது. இந்த பெயரை எங்கேயே கேள்விப்பட்டிருக்கிறோமே என்று ஆழ்ந்த யோசனையில் இறங்கினார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது.
டாக்டர் எட்வின் டக்ளஸ் வேறு யாரும் இல்லை. மேரியுடன் ஸ்கூலில் ஒன்றாக படித்தவர். நன்றாக வாட்டசாட்டமாக உடல்வாகுடன் அட்டகாசமான புன்னகையுடன் இருந்த எட்வின் முகம் மேரியின் மனதில் ஊஞ்சாலாடியது. அந்த காலத்தில் எட்வின் மீது க்ரஷ்ஷுடன் அவனுக்கு தெரியாமல் சைட் அடித்த ஜெகஜாலகுமாரி தான் இந்த மேரி. 25 வருஷத்துக்கு அப்புறம் மீண்டும் எட்வினை சந்திக்க ரொம்ப ஆவலாக அவள் வெயிட் பண்ணிக் கொண்டு இருந்தாள்.

அவள் முறையும் வந்தது. உள்ளே சென்று எட்வினை சந்தித்தாள். எட்வின், முன் தலையில் லேசான வழுக்கையுடன், உடல் சற்று பெருத்து, மூக்கு கண்ணாடி அணிந்து இருந்தான். பரவாயில்லை, இவனுடன் கம்பேர் பண்ணும்போது நான் கொஞ்சம் இளமையாகத் தான் இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டாள். சில நிமிட தயக்கத்திற்கு பிறது மேரி தான் ஆரம்பித்தாள்.

"எட்வின், என்னை நியாபகம் இருக்கா??? சின்ன வயதில் நீ என் க்ளாஸில் தான் இருந்தாய்" என்று கேட்டாள் மேரி. அதற்கு எட்வின் சொன்ன பதிலை அவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அவள் முகம் சுறுங்கி அவமானத்தால் தலையைக் குனிந்து கொண்டாள். அதற்கு அடுத்து அவள் எதுவும் பேசவில்லை.

எட்வின் சொன்ன பதில் இது தான், "அப்படியா!!! அப்ப நீங்க எனக்கு எந்த சப்ஜெக்ட் க்ளாஸ் எடுத்தீங்க".

Moral of the Story: தன் ஒத்த வயதுள்ள ஒருவரை பார்க்கும்போது "அவனை/ளை விட நான் தோற்றத்தில் மிகவும் இளமையாக இருக்கிறேன்" என்று நீங்கள் நினைத்தால் சந்தேகமே இல்லை, நீங்கள் தான் வயதான தோற்றத்துடன் இருக்கிறீர்கள்.

***********************************

அப்படி இப்படி என்று எழுத ஆரம்பித்து ஒரு மாதம் ஓடிவிட்டது. என்னுடைய blogger template ஐ மாற்றிவிட்டு புதிதாக ஒன்றை தேர்ந்தெடுத்து உள்ளேன். முன்னதை விட இது சிறப்பாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

5 comments:

அன்புடன் அருணா said...

அச்சச்சோ.....
அன்புடன் அருணா

SUREஷ் said...

//அப்படியா!!! அப்ப நீங்க எனக்கு எந்த சப்ஜெக்ட் க்ளாஸ் எடுத்தீங்க".//
அவுக ஏகன் நயந்தாரா மாதிரி இருப்பாங்களா

ராம்சுரேஷ் said...

@அன்புடன் அருணா

//அச்சச்சோ.....

இந்த expressionக்கு என்னங்க அர்த்தம்!!!!!! வருகைக்கு நன்றி.

@SUREஷ்

//ஏகன் நயந்தாரா மாதிரி இருப்பாங்களா

நயந்தாரா மாதிரி தான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன். வருகைக்கு நன்றி.

Pattaampoochi said...

பதிவை ரசித்தேன்.புது template நன்றாகவே உள்ளது.

ராம்சுரேஷ் said...

@Pattampoochi
//பதிவை ரசித்தேன்.புது template நன்றாகவே உள்ளது.//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி பட்டாம்பூச்சி

Related Posts with Thumbnails