நண்பன், சிலம்பாட்டம், டெஸ்ட் மேட்ச்

என்னுடன் கல்லூரியில் படித்த ஒரு நண்பனுக்கு சென்ற ஜூன் மாதம் கல்யாணம் நடந்தது. போன வாரம் ஒரு இ-மெயில் அனுப்பி சொன்னான் அவனுக்கு குழந்தை பிறந்திருப்பதாக. கூட்டிக் கழித்து பார்த்தாலும் 6 மாதத்தைத் தாண்டி சொல்ல‌ மறுக்கிறது என்னுடைய கணித அறிவு. நான் படித்த கல்லூரியிலே படித்த ஜுனியர் பொண்ணை ரொம்ப சின்சியரா லவ் பண்ணி திருமணம் செய்து கொண்டான். இப்போது தான் தெரிகிறது எவ்வளவு சின்சியரா லவ் பண்ணி இருக்கிறான் என்று. இந்த கல்யாணத்தை அவன் விருப்பப்பட்டு பெற்றோர்களை கன்வின்ஸ் பண்ணி செய்தானா இல்லை பெற்றோர்களை சம்மதிக்க வைக்க இப்படியெல்லாம் செய்தானா அதுவும் இல்லை அந்த பெண்ணின் பெற்றோர் இவன் கழுத்தில் கத்தி வைத்ததனால் அவசரமாக அவசரமாக இந்த கல்யாணம் நடந்தேறியதா என்று தெரியவில்லை. ஆண்டவனுக்கே வெளிச்சம். இது பற்றி அவனிடம் கேட்க என் மனது இடம் கொடுக்கவில்லை. சிம்பிளாக கங்கிராட்ஸ் மட்டும் சொல்லி ஒதுங்கிக் கொண்டேன்.

நன்றாக படித்து முடித்து நல்ல வேலையில் இருக்கும் இவர்களே இப்படியெல்லாம் செய்தால் மற்றவர்களைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது.

**************************

ஞாயிற்றுக்கிழமை சத்யம் தியேட்டரில் சிம்புவின் சிலம்பாட்டம் பார்க்க டிக்கெட் புக் பண்ணிவிட்டான் என் ரூம்மேட். சிம்பு படம் என்றாலே ஒரு வித பயம் வல்லவன் படம் பார்த்ததில் இருந்து. நல்ல கதையம்சம் உள்ள‌ படத்தில் ஓவர் பில்டப் கொடுத்தால் பொறுத்துக் கொள்ளலாம். காளை என்ற மொக்கை படத்தில் அநியாயத்திற்கு ஓவர் பில்டப் கொடுத்து காதை செவிடாக்கி விட்டார்கள். அந்த படம் பார்த்த எஃபெக்ட்டில் ஒரு மாதம் நான் தியேட்டர் பக்கமே போகவில்லை. இவர் பண்ணும் ஓவர் பில்டப் எல்லாம் பத்து வருடம் சினிமா ஃபீல்டில் இருந்து விட்டு நல்லா establish ஆனபின் தான் செட் ஆகும்.

சிலம்பாட்டம் படத்தில் ஏற்கெனவே பாடல்கள் எல்லாம் சூப்பர்ஹிட்டாகி விட்டதால் ஒரு அரைமணி நேரம் கியாரண்டி. அதையும் ஒழுங்காக எடுக்காமல் சொதப்பிவிட்டிருந்தால் கண்ணை மூடி பாட்டு தான் கேட்க வேண்டும்.

***************************

அது எப்படி இருந்தாலும் அன்னைக்கு மேட்ச் பார்க்க முடியாது. நாளைக்கு இந்தியா‍-இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் மேட்ச் மொஹாலியில் ஆரம்பிக்கிறது. டிராவிட்டுக்கு வழங்கப்படவுள்ள கடைசி சான்ஸ். ஏற்கெனவே ஸ்ரீகாந்த் பத்திரிக்கைகளுக்கு "டிராவிட் ஃபார்ம் கவலை அளிக்கிறது. அவர் கொஞ்ச காலம் ஓய்வு எடுத்துவிட்டு வந்தால் நன்றாக இருக்கும்" என்று பேட்டி கொடுக்க ஆரம்பித்துவிட்டார். All the Best Dravid. Pieterson, better luck this time!

இங்கிலாந்தால் 200% கடுமையாக போராடினால் மட்டுமே வெற்றி பெற முடியும். அவர்க‌ளின் கெட்ட நேரம், ஷேவாக், சச்சின், கம்பீர், யுவராஜ், தோனி என டீம் முழுவதும் சூப்பர் ஃபார்மில் உள்ளனர். இதில் ஒரு வேளை டிராவிட்டும் ஃபார்முக்கு திரும்பிவிட்டால் வெற்றியை கனவில் கூட அவர்களால் காணமுடியாது.

2 comments:

SUREஷ் said...

//அதே சமயம் பாலியல் கல்வியை பள்ளிக்கூடத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டும் என்ற கருத்து எனக்கு உடன்பாடாகப் படவில்லை. அது ஒழுங்காக எரிந்து கொண்டிருக்கும் விளக்கை தூண்டி விடுவது போல் ஆகிவிடும்.//


ஐயா.. பாலியல் கல்வி என்பதை தவறாகப் புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். நன்மை, தீமைகளை முழுமையாகச் சொல்லி தர வேண்டும். அதாவது எரிந்து கொண்டிருக்கும் தீயை தீபமாக மாற்றுவதற்குச் சமம்.

நீங்கள் சொன்ன விஷயம்.. அவர்களின் தனிப் பட்ட விருப்பம்.

அதே வழியில் அந்த குழந்தை செல்லும்போது பொதுப் பிரச்சனையாகிறது.

ராம்சுரேஷ் said...

@SUREஷ்,
//பாலியல் கல்வி என்பதை தவறாகப் புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். நன்மை, தீமைகளை முழுமையாகச் சொல்லி தர வேண்டும். //

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். ஸ்கூல் படிக்கும்போது பாலியல் தூய்மை போன்ற கருத்துகளை சொல்லிக் கொடுக்கலாம். தவறில்லை. அந்தந்த வயதுக்கேற்றார் போல் விஷயங்களை மனதில் திணிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது தவறான வழிக்கு விட்டு விடும்.

இன்னும் எத்தனை வீட்டில் இதைப் பற்றி குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் சொல்லுவார்கள் என்பது சந்தேகமே!

Related Posts with Thumbnails