தமிழ்மணம், தமிளீஷ், இட்லிவடை, லக்கிலுக் மற்றும் பலர்


தமிழ் பதிவுலகின் கத்துக்குட்டியாக‌ இப்போது தான் அறிமுகம். 2006 டிசம்பரில் இருந்து பதிவுலகம் எனக்கு பரிச்சயம். இட்லிவடை தான் நான் தெரிந்து கொண்ட முதல் தமிழ் வலைப்பதிவு. உண்மையைச் சொல்லப் போனால் சினிமா செய்திகளுக்காக மட்டும் தான் இட்லிவடையைப் படிக்க ஆரம்பித்தேன். போக போக சுடச்சுட அரசியல் செய்திகளுக்கும், நாட்டுநடப்பு செய்திகளுக்காகவும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். அதன் பஞ்ச் கமெண்டை ரசித்து கொண்டிருக்கும் நான், தற்போது சுவாரஸ்யம் குறைந்து வருவது சின்ன வருத்தமே.

எனக்கு சரியாக நியாபகம் இருந்தால், 2007 மார்ச்சில் இருந்து லக்கிலுக்கின் பதிவுகளை தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். அவரின் அபார எழுத்து நடை, போகிற போக்கில் எல்லாரையும் நையாண்டி பண்ணும் குசும்புத்தனம், முக்கியமாக சினிமா விமர்சனம் போன்றவை நான் ரசிப்பவை. பின்ந‌வீனத்துவம்(அப்படினா என்ன என்று சத்தியமாக தெரியாது), காண்டு க‌ஜேந்திரன், பார்ப்பன பதிவுகள் சம்பந்தமாக இருந்தால் அந்த பக்கம் நிழலுக்குக் கூட ஒதுங்குவதில்லை. ஏனென்றால் தலைகீழாக படித்தாலும் ஒரு மண்ணும் எனக்கு புரிவதில்லை. 2007 ஜூன் சமயத்தில் பதிவுலகம் முழுவதும் பதிவுலகமே இரண்டு பிளவாக இருந்தது போல எனக்கு தோன்றியது. காரணம் தமிழச்சி பதிவுகள். அப்போது எல்லாம் கூகிள் ரீடரை ஓபன் பண்ணினாலே தலை கிர்ரென்று சுத்தும்.

அப்போது இருந்த பதிவுலக‌ அரசியலில் தான் வசந்தம் ரவி ஓரங்கட்டப்பட்டு விட்டார் என்று நினைக்கிறேன். இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. நான் ரெகுலராக செல்லும் இன்னொரு வலைப்பதிவு தேன்கிண்ணம். இது ஒரு தமிழ் சினிமா பாடல்களின் விக்கிப்பீடியா. சிறுகதை அதுவும் காதல் கதைகளுக்கு நான் விரும்பிப் படிப்பது மனசுக்குள் மத்தாப்பு. அழகான கவிதை போன்ற வலைத்தொகுப்பு. வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம், குசும்பு போன்ற வலைகளுக்குச் சென்றால் வாய்விட்டு சிரிக்கலாம்.

முரளிகண்ணண் அவர்களின் சினிமா சம்பந்தப்பட்ட செய்திகளை மிகவும் விரும்பிப் படிப்பேன். சுரேஷ்கண்ணன் அவர்கள் பதிவுகளும் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கின்றது. அதிஷாவின் பதிவுகளையும் ரெகுலராக படித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய எழுத்து நடையில் நாளுக்கு நாள் சுவாரஸ்யம் கூடிக் கொண்டே போகிறது. உண்மைத்தமிழன் பதிவுகளுக்குச் சென்றால் திரும்பி வர இரண்டு நாள் ஆகும். ஆனால் அவர் பதிவுகள் திருப்தியாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து. இந்த பதிவுகள் தவிர கார்க்கி, வெட்டிப்பயல், மனசாட்சி போன்றோரின் வலைகளுக்கு ரெகுலராக விசிட் அடிப்பது வழக்கம். புதிதாக வலையுலகத்துக்கு வந்துள்ள வானவில் வீதியில் எழுதும் கார்த்திக்கின் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது.

எல்லா பதிவர்களுக்கும் தன்னுடைய பதிவுகளுக்கு பின்னூட்டம் அதிகம் இருந்தால் தான் மதிப்பு என்ற எண்ணம் ஏன் தோன்றியது என்று எனக்கு புரியவில்லை. யாராவது ப்ளீஸ் விளக்கவும்.

இவர்களைப் பார்த்து நாமும் ஏதாவது கிறுக்கலாம் என்று போன வருடம் ஒரு வலைப்பதிவு ஆரம்பித்தேன். தமிழில் டைப் பண்ணுவதற்கு கூகிள் தமிழ் ட்ரான்ஸ்லேட்டர் தான் யூஸ் பண்ணினேன். தமிழ்மணத்தில் இணைக்க முயற்சி செய்த போது யூனிகோடு அடர்த்தி இல்லை என்று நிராகரித்தது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. அத்துடன் அந்த முயற்சியை அப்படியே விட்டுவிட்டேன்.

இப்போது ரொம்ப காலம் அநியாயத்துக்கு வெட்டியாக இருப்பதால், எப்படியே எழுதியே தீர வேண்டு என்று கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியதில் நானும் இப்போது so called வலைப்பதிவர். Thanks to TamilEditor.org and thagadoor எழுதி. ஒரு வழியாக என் வலைப்பூவை தமிழ்மணத்திலுன், தமிளீஷிலும் இணைத்து விட்டேன். போதாக்குறைக்கு என்னுடைய மூன்று பதிவுகள் தமிளீஷில் பாப்புலர் ஆகிவிட்டன. அதனால் வலைக்கு வரும் விசிட்டர்ஸ் ஹிட் மளமளவென்று கூடிக் கொண்டே போகிறது. ஆனால் இது ஒரு வகை போதையை உண்டு பண்ணுகிறது. வெட்டியாக உட்கார்ந்து இருக்கும்போது எழுதினால் அது ஓகே. ஆனால் ஹிட் கூடிக்கொண்டே போகும் போது ஒரு நாளைக்கு ஒரு பதிவு போட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

இந்த எண்ணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும், இந்த போதை தலைக்கு மேல் ஏறக்கூடாது என்று எல்லாம் வல்ல பாடிகாட் முனீஸ்வரனை..., இல்ல சே.. மகர நெடுங்குழைநாதனை.., இதுவும் இல்ல சே.. சிம்பிளா இறைவனை வேண்டிக் கொள்கிறேன். (இதுக்குதான் அதிகம் வலையில் மேயக்கூடாதுங்கிறது)

12 comments:

கார்க்கிபவா said...

ரொம்ப நன்றி சகா. வானவில் வீதி கார்த்திக் புதியவர் அல்ல.ஆனால் இளையவர். நீங்கள் சொன்னதிலே கடைசியாக எழுத வந்தவன் நான் தான். உங்களின் சில பதிவுகளை முன்னமே படித்திருக்கிறேன். ஒரு சின்ன வேண்டுகோள். பாடல்கள் தரவிறக்கம் செய்திகளை தவிர்க்கலாமா!!!. அது அனைவருக்கும் எளிதாய் கிடைக்க கூடிய தகவல். அதற்கு பதிலாய் சில அரிதான விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளலாம்.

/ஆனால் ஹிட் கூடிக்கொண்டே போகும் போது ஒரு நாளைக்கு ஒரு பதிவு போட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை//

உண்மைதான்.அதில் ஏதும் தவ‌று இருப்பதாக தெரியவில்லை.

கலக்கலாய் தொடருங்கள். என் ஆதரவு எப்போதும் உன்டு. முடிந்தால் Followers widget add செய்து கொள்ளுங்கள்.

கணேஷ் said...

மிக்க நன்றி கார்க்கி.. Followers widget add செய்து கொள்கிறேன்.

CA Venkatesh Krishnan said...

கேள்வின்னு வந்துட்டாலே ஞானம் வந்துடும். தொடர்ந்து கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க.

வேர்ட் வெரிஃபிகேஷனை எடுத்து விடலாமே.

கணேஷ் said...

எடுத்தாச்சு இளைய பல்லவன்.
வருகைக்கு மிக்க நன்றி.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//என்னுடைய மூன்று பதிவுகள் தமிளீஷில் பாப்புலர் ஆகிவிட்டன.//



எனக்கும்கூட தமிழீஷ் மூலமாகத்தான் ஒரு என்றி கிடைப்பதாகத் தோன்றுகிறது

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஹிட் கூடிக்கொண்டே போகும் போது ஒரு நாளைக்கு ஒரு பதிவு போட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.//


எனக்கும்கூட அப்படித்தான் தோன்றுகிறது

Anonymous said...

very good
www.kts-news.blogspot.com

கணேஷ் said...

//எனக்கும்கூட தமிழீஷ் மூலமாகத்தான் ஒரு என்றி கிடைப்பதாகத் தோன்றுகிறது //
நீங்கள் சொல்வது உண்மை தான் SUREஷ்,... நம்மைப் போன்றவர்களுக்கு தமிளீஷ் மூலம் நல்ல entry கிடைக்கிறது...

//எனக்கும்கூட அப்படித்தான் தோன்றுகிறது //
நீங்கள் தினம் ஒரு பதிவு போடுங்கள் SUREஷ்,.. படிப்பதற்கு நாங்கள் இருக்கிறோம்.

வருகைக்கு மிக்க நன்றி Sarangan

Karthik said...

//புதிதாக வலையுலகத்துக்கு வந்துள்ள வானவில் வீதியில் எழுதும் கார்த்திக்கின் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது.

ரொம்ப நன்றி.
:)

கணேஷ் said...

வருகைக்கு நன்றி கார்த்திக்

கிரி said...

//ஆனால் இது ஒரு வகை போதையை உண்டு பண்ணுகிறது. வெட்டியாக உட்கார்ந்து இருக்கும்போது எழுதினால் அது ஓகே. ஆனால் ஹிட் கூடிக்கொண்டே போகும் போது ஒரு நாளைக்கு ஒரு பதிவு போட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.//

உண்மை தான். பெரும்பாலானோர் இதற்க்கு அடிமை தான்.

முதலில் நான் பதிவு எழுத வந்த பொழுது இப்படி தான் உணர்ந்தேன், 100 வது இடுகை எழுதிய பிறகு இனி இதை போல எழுத கூடாது, எண்ணிக்கையை குறைத்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி தற்போது எழுதி வருகிறேன்.

//இந்த எண்ணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும், இந்த போதை தலைக்கு மேல் ஏறக்கூடாது என்று எல்லாம் வல்ல பாடிகாட் முனீஸ்வரனை..., இல்ல சே.. மகர நெடுங்குழைநாதனை.., இதுவும் இல்ல சே.. சிம்பிளா இறைவனை வேண்டிக் கொள்கிறேன்//

இது உங்கள் "கையில்" தான் உள்ளது :-)


ஹிட்ஸ் போதையை விட்டு விலகுவதே உங்களுக்கு நல்லது

கணேஷ் said...

வருகைக்கு நன்றி கிரி. கண்டிப்பாக இந்த போதை தலையில் ஏறுவதற்கு முன் சுதாரித்து விடுவேன்.

Related Posts with Thumbnails