தண்ணீரைக் காதலிக்கும்...

வாழத் தான்
வேண்டியிருக்கிறது

எந்நேரமும் போதையில்
தண்ணீரில்
தூக்கமிழந்து துடுப்புகளை
சிறு உணவுதுண்டுக்காக‌
இந்த பொல்லாத வாழ்க்கையில்
அசைத்து அப்படியும்
வாழத் தான்
வேண்டியிருக்கிறது

எதிரிகளின் நயவஞ்சக‌
தூண்டிலில் சிக்காமல்
எப்படித் தான் வாழ்ந்தாலும்
ஒரு நல்ல நாளில்
சிக்குகிறேன்
எதிரி எமனாகிறான்
வேறொரு கெட்ட நாளில்
எமன் எதிரியாகிறான்
அதுவ‌ரையிலும்
வாழத் தான்
வேண்டியிருக்கிறது

நாலுபக்கமும் தண்ணீர்
தீவுக்குள் இருந்தாலும்
க‌வ‌லையில்லை
தண்ணீரில் மிதக்கும்வரை
இருக்கும்வ‌ரை
இற‌க்கும்வ‌ரை
அதுவ‌ரையிலும்
வாழத் தான்
வேண்டியிருக்கிறது

அறிவுகளின் கூட்டல்
கழித்தலில் எத்தனை
மிஞ்சியிருந்தாலும்
வித்தியாசமில்லா வாழ்க்கையில்
கண்ணாடி கூண்டில் நீ
நீந்திக் கொண்டு
கண்ணாடி கூண்டில் நான்
கம்ப்யூட்டர் முன் செத்துக் கொண்டு
இருந்தாலும், God damn
வாழத் தானே
வேண்டியிருக்கிற‌து!

டிஸ்கி: "யோவ் என்னய்யா இது? சுத்தமா புரியல" என சொல்லுபவர்களுக்கு நான் இந்த கவிதையை(?) டெடிகேட் செய்கிறேன்.
**************************************

7 comments:

Cable Sankar said...

அப்ப எனக்குத்தான் ...

க‌ரிச‌ல்கார‌ன் said...

ந‌ல்லாத்தானே போய் கிட்டு இருந்த‌து

Sangkavi said...

ஏ...ஏன் இப்படி...............

க.பாலாசி said...

//வித்தியாசமில்லா வாழ்க்கையில்
கண்ணாடி கூண்டில் நீ
நீந்திக் கொண்டு
கண்ணாடி கூண்டில் நான்
கம்ப்யூட்டர் முன் செத்துக் கொண்டு
இருந்தாலும்
வாழத் தானே
வேண்டியிருக்கிற‌து//

வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறோம்.

நல்ல கவிதை...(புரியுதான்னுல்லாம் கேட்கக்கூடாது)

♠புதுவை சிவா♠ said...

நாலுபக்கமும் காக்டையில்
பார்ருக்குள் இருந்தாலும்
க‌வ‌லையில்லை
போதையில் மிதக்கும்வரை
சைடிஸ் இருக்கும்வ‌ரை
பார்ரை சாத்தும்வ‌ரை
அதுவ‌ரையிலும்
மப்பில் வாழத் தான்
வேண்டியிருக்கிறது

லெமூரியன்... said...

ஹேய்.....நல்லா இருக்கு கணேசு.... Team Lead kitta திட்டு வாங்கிணீங்கள ???(office'la)

கணேஷ் said...

நன்றி Cable Sankar!

அப்ப எனக்குத்தான் ...//

ஐயோ உங்களுக்கு புரியலையா? :‍(

************************************

நன்றி க‌ரிச‌ல்காரன்!

ந‌ல்லாத்தானே போய் கிட்டு இருந்தது//

இப்பவும் நல்லாத் தானே போய்கிட்டு இருக்கு :)

************************************

நன்றி Sangkavi!

ஏ...ஏன் இப்படி//

ஜஸ்ட் ஃபார் ஃபன் :

************************************

நன்றீ க.பாலாசி

வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறோம்.// அதானே :)
(புரியுதான்னுல்லாம் கேட்கக்கூடாது)// :) அது எப்படி கவிதைன்னா மட்டும் அட்டென்டன்ஸ் போடுறீங்க :)

************************************

நன்றி ♠புதுவை சிவா♠

எதிர்கவிதை சூப்பர் பாஸ் :)

************************************

நன்றீ லெமூரியன்!

ஹேய்.....நல்லா இருக்கு கணேசு.... // :)

Team Lead kitta திட்டு வாங்கிணீங்கள ???(office'ல)//

அதெல்லாம் இல்லீங்க.. புதுசா வீட்ல மீன் வாங்கி டேங்க்ல வளர்க்கிறோம். இன்ஸ்டன்டா தோணுனது :)

************************************

Related Posts with Thumbnails