முத்த யாசகன், சொன்னவன் கடவுள்

முத்த யாசகன்!

உன் இதழ்களில்
மூச்சு வாங்கும்
முத்த மிச்சங்களையும்
மிச்ச முத்தங்களையும்
மொத்தமாக யாசகம் பெற
முடியாமல்
முடியாமலே இருக்க கூடாதென்ற‌
முடிவில் உனக்காக‌ இந்த
முத்தக் கவிதை என்
முத்தங்களுடன்!

......................

ரகசியங்களின் ரகசிய உரையாடல்!


இதயம் எகிறி துடித்து
மின்சாரம் காதுகளில் பரவ‌
பரவசத்தில் லேசாக
வேர்வை வெளிறி
கண்களில் அவசர அலைபாய
நாக்கு வறண்டது
நல்ல வேளை இரண்டு
நிமிடத்தில் முடித்துவிட்டாள்
ரகசியங்கள் காதருகில்
சொல்லப்பட வேண்டுமென
சொன்னவன் கடவுள்

தினந்தந்தியின்
தலைப்பு செய்திகளை உன்
தலையின் கற்றை முடிகள்
தாண்டி நான் சொல்ல
நினைத்த‌போது
நாக்கு தந்தி அடித்தது
யார்ட்லியோ லாவண்டரோ என‌
மூக்கு வியர்த்தது
ரகசியங்கள் காதருகில்
சொல்லப்பட வேண்டுமென
சொன்னவன் கடவுள்

**************************************

9 comments:

☀நான் ஆதவன்☀ said...

ம்ம்ம்ம்ம் :)

Anonymous said...

ரெண்டாவது கவிதைல நாக்கு தந்தியடிக்குதுன்னு என்னேன்னமோ சொல்லியிருக்கீங்க. சியாமளா, ஹரிணி, ஷாலினி எல்லார்கிட்டயும் கேட்டா தெரிஞ்சுரும் கணேஷ் எவ்வளோ நல்ல பையன்னு :)

Shankar said...

Hey, unakulla evlo thiramaya! Evlo sollitu ragasiyam yarta sonna illana yaru soonanga nu oru vartha kooda sollalaye!!

லெமூரியன்... said...

கணேசு, கவித கவித.........
சூப்பரப்பு.......! :-)

cheena (சீனா) said...

அன்பின் கணேஷ்

அருமை அருமை - முத்ததினை யாசிப்பதும் - கடவுள் சொன்னதை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதும்

நல்ல கவிதைகள்

நல்வாழ்த்துகள்

♠புதுவை சிவா♠ said...

//உன்
தலையின் கற்றை முடிகள்
தாண்டி நான் சொல்ல
நினைத்த‌போது//

கணேஷ் அதோடா அப்பிட் ஆயிக்கோ
அதுக்கு மேல போன பிகரு சவுரி முடி கையோட வந்துடும்

:)


கணேஷ் உண்மையை சொல்லு இந்த கவிதையை காபாலீஸ்வர் கோயில் மண்டபத்தில ஒருத்தர் கிட்ட இருந்து தானே? வாங்கிட்டு வந்திங்க? போன வாரமே அவரு இந்த கவிதைக்கு ரூ 20 தரதா சொன்னாரு ! நான் வேணாணும் சொன்னேபா
இப்ப பீல்ங்க இருக்கு .....


:)

கணேஷ் said...

நன்றி ☀நான் ஆதவன்☀,

ம்ம்ம்ம்ம் :)// :) :) :)

************************

நன்றி சின்ன அம்மிணி!

ரெண்டாவது கவிதைல நாக்கு தந்தியடிக்குதுன்னு என்னேன்னமோ சொல்லியிருக்கீங்க.//

இது கவிதை! அனுபவம் அல்ல. ஆராயக்கூடாது :)

சியாமளா, ஹரிணி, ஷாலினி எல்லார்கிட்டயும் கேட்டா தெரிஞ்சுரும் கணேஷ் எவ்வளோ நல்ல பையன்னு :)//

ஏன்? ஏதாவ‌து ஒரு பொண்ணு பேராவ‌து சொல்லி இருக்க‌லாம்? இத்த‌ன‌ பேர் சொல்லி என்ன கெட்ட‌ பைய‌ன் ஆக்கிட்டீங்க‌. மேட‌ம், உங்க‌ளுக்கு என் மேல‌ கோவ‌ம் இருந்தா சொல்லுங்க‌, பேசி தீர்த்துக்க‌லாம். :( :(

****************************

நன்றி Shankar!

Hey, unakulla evlo thiramaya! // ஹி ஹி ஹி :) Born Genius, you know :)


Evlo sollitu ragasiyam yarta sonna illana yaru soonanga nu oru vartha kooda sollalaye!!//

அதான் ர‌க‌சிய‌ம்ன்னு சொன்னேன்ல‌, அப்புற‌ம் நீ கேட்டா என்ன‌ அர்த்த‌ம்?

*****************************

நன்றி லெமூரியன்!

கணேசு, கவித கவித..சூப்பரப்பு.......! :-)//

:) :) :)

*****************************

நன்றி cheena (சீனா)!

அன்பின் கணேஷ்
அருமை அருமை - முத்ததினை யாசிப்பதும் - கடவுள் சொன்னதை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதும்
நல்ல கவிதைகள்
நல்வாழ்த்துகள்//

த‌ங்க‌ளின் வாழ்த்துக்கு என் ந‌ன்றிக‌ள் ப‌ல‌! :)

*****************************

நன்றி ♠புதுவை சிவா♠

கணேஷ் அதோடா அப்பிட் ஆயிக்கோ
அதுக்கு மேல போன பிகரு சவுரி முடி கையோட வந்துடும்//

:)


கணேஷ் உண்மையை சொல்லு இந்த கவிதையை காபாலீஸ்வர் கோயில் மண்டபத்தில ஒருத்தர் கிட்ட இருந்து தானே? வாங்கிட்டு வந்திங்க? போன வாரமே அவரு இந்த கவிதைக்கு ரூ 20 தரதா சொன்னாரு ! நான் வேணாணும் சொன்னேபா.. இப்ப பீல்ங்க இருக்கு .....//

:)

நீங்க‌ க‌மெண்டும் போட்டுட்டு, நான் போட‌ வேண்டிய ரிப்ளை க‌மெண்டும் போட்டுட்டீங்க‌ன்னா, என்ன‌ அர்த்த‌ம்? நான் என்ன‌ தான் ப‌ண்ற‌து :) :)

***************************

அனுஜன்யா said...

நல்லா இருக்கு கணேஷ் :)

அனுஜன்யா

கணேஷ் said...

நன்றி அனுஜன்யா! :)

Related Posts with Thumbnails