கண்ணாமூச்சி நேரங்கள்


சிறகுகள் தொலைந்த
பறவை பதறி இருப்பிடம்
தேடும்போது ஆடும்

இருப்பிடம் போல் இருக்கும்
ஒடுங்கிய கூடாரம்
பெருத்த குடிகாரன்
த‌வ‌ழ்ந்து த‌வ‌ழ்ந்து
தேடும் போது ஆடும்

கூடாரம் கூட தேடிக் காணாத‌
இடத்தில் எரிபொருள்
போக காத்திருக்கும்
வயது பெண்
அபலநிலையுடன்
கடிகாரம் த‌ட்டித்
தேடும் போது ஆடும்

என்னைப் போல்
காதலியைத் தொலைத்தவன்
வாழ்வைத் தொலைத்து
தேடும் போது ஆடும்

கண்ணாமூச்சி நேரங்கள்
என்றும் ஓய்வ‌தே இல்லை

********************************

2 comments:

♠புதுவை சிவா♠ said...

கவிதை நல்லா இருக்கு கணேஷ்

கணேஷ் said...

நன்றி புதுவை சிவா♠

கவிதை நல்லா இருக்கு கணேஷ்//

நீங்களாவது கமெண்ட் போட்டீங்களே.. :) தேங்க்ஸ் மறுபடியும்

Related Posts with Thumbnails