ஆயிரத்தில் ஒருவன் ட்ரைலர் விமர்சனம்!




அட்டகாசம்..

முதலில் ரீமா, ஆன்ட்ரியா பேசும் பீட்டரில் வரிசையாக வரிசையாக டிங் டிங் என கேட்கிறது. இருந்தாலும் என்ன பேசுகிறார்கள் என புரிய முடிகிறது. Fs & Bs :)

படம் ஃபுல்லா இப்படி தான் பீட்டராக இருக்குமோ? அதில் எத்தனை இடத்தில் சென்சார் கத்திரியோ?

பருத்திவீரனைத் தொடர்ந்து இந்த படத்திலும், கார்த்தி சட்டை இல்லாமல் டவுசருடன் இறங்கியுள்ளார். "மம்மி" படத்தில் ஜெயிலில் இருந்து ஹீரோவைக் கூப்பிட்டுக் கொண்டு செல்வது போல், இந்த படத்தில் கார்த்தி??

ரெண்டு பேரிடமும் ப்ரோப்பஸ் பண்ணும் கார்த்தி, ரெண்டு பேருக்கும் நடுவில் படுத்திருக்கும் கார்த்தி, அவர் மேல் கால் தூக்கிப் போடும் ரீமாசென் வழக்கமான‌ செல்வராகவன் 'டச்' தெரிகிறது. படத்தில் நெறைய இடங்களில் அந்த டச் இருக்குமோ? டூ சென்சார் ஆஃபிஸர்ஸ்: அதில் எல்லாம் கத்திரி வேணாம் ப்ளீஸ் :)

படத்தின் சர்டிபிகேட் 'யூ'. எதுவுமே இருக்காதோ? :(

நிழலில் தெரியும் நடராஜர் நாட்டியமாடுகிறார். ஒருவேளை அது தான் படத்தின் ஹிண்ட்???

கடைசியில் சுட்டெரிக்கும் விழிகளுடன் வரும் சிவபெருமானில் தெரிவது பார்த்திபன் தானே?

அபோகாலிப்டோ, பைரேட்ஸ் ஆஃப் கரீபியன், 300 என ஹாலிவுட் பட லுக் :)

ஆர்வத்தை தூண்டி விடுகிறார்கள். பொங்கலுக்கு கண்டிப்பா ரிலீஸ் தான? சீக்கிரம் படத்தை ரிலீஸ் பண்ணுங்கப்பா...

************************

10 comments:

Anonymous said...

படம் 'வந்தா' பாக்கலாம்.

VISA said...

டிரெயிலருக்கே விமர்சனமா...அப்போ படம் வந்தா விட மாட்டீங்க போல...

Unknown said...

இதுக்கு முன்னால ரெண்டு சந்தர்ப்பம் கிடைச்சிருந்தும் அதை உபயோக படுத்தாம இருந்திட்டீரே.அதான் முதல் சுவரொட்டி வெளியீட்டிற்கும்,இரண்டாவது பாடல் வெளியீட்டிற்கும் விமர்சனம் போட்டிருக்கலாம்.

ஜெட்லி... said...

முதல் நாள் பார்க்கிறோம்....

Muthu Pandi said...

Thanks for your review.

U.P.Tharsan said...

டிரெயிலருக்கே விமர்சனம் எழுதி கலக்கிறிங்களே..... :-))

puduvaisiva said...

"படத்தின் சர்டிபிகேட் 'யூ'. எதுவுமே இருக்காதோ? :("

கவலை படதே கணேஷ்
இடவேளை முடிந்த உடன் 2 பிட்டை சேர்க செல்வராகவன்
முடிவு செய்து இருக்கிறார்.

:-))))))

கிரி said...

தாறுமாறா படத்தை எதிர்பார்க்கிறேன் :-)

☀நான் ஆதவன்☀ said...

// கிரி said...

தாறுமாறா படத்தை எதிர்பார்க்கிறேன் :-)//

அதே அதே!

கணேஷ் said...

நன்றி சின்ன அம்மிணி!

படம் 'வந்தா' பாக்கலாம்.// வ‌ரும், க‌ண்டிப்பா :)

******************

நன்றி VISA!

டிரெயிலருக்கே விமர்சனமா...அப்போ படம் வந்தா விட மாட்டீங்க போல..//

டிரெயில‌ர் பார்த்த‌ ஆர்வ‌ம். ப‌ட‌ம் வ‌ந்தா, க‌ண்டிப்பா விம‌ர்ச‌ன‌ம் உண்டு :)

******************

ந‌ன்றி Siva!

இதுக்கு முன்னால ரெண்டு சந்தர்ப்பம் கிடைச்சிருந்தும் அதை உபயோக படுத்தாம இருந்திட்டீரே.அதான் முதல் சுவரொட்டி வெளியீட்டிற்கும்,இரண்டாவது பாடல் வெளியீட்டிற்கும் விமர்சனம் போட்டிருக்கலாம்.//

உங்க‌ள் ந‌க்க‌லை ர‌சித்தேன். :)

******************

நன்றி ஜெட்லி!

முதல் நாள் பார்க்கிறோம்....// ஆமா பாஸ். பாக்குறோம் :)

******************

நன்றி Muthu Pandi!

ந‌ன்றீ U.P.Tharsan!

டிரெயிலருக்கே விமர்சனம் எழுதி கலக்கிறிங்களே..... :-))// :)

******************

நன்றி ♠புதுவை சிவா♠

கவலை படதே கணேஷ்
இடவேளை முடிந்த உடன் 2 பிட்டை சேர்க செல்வராகவன்
முடிவு செய்து இருக்கிறார்.//

:-))))))

******************

நன்றி கிரி!

தாறுமாறா படத்தை எதிர்பார்க்கிறேன் :-)// நானும் :)

நன்றி ☀நான் ஆதவன்☀

அதே அதே!// நானும் :)

******************

Related Posts with Thumbnails