இடம்: மதுரை, திருமங்கலம்.
நேரம்: மாலை 5 மணி, ஒரு நாள்
"அப்பா, ஒரு முக்கியமான விஷயம்"
காலையில் வந்த தினமணியின் கட்டுரையில் மூழ்கியிருந்தவர், மூக்குக் கண்ணாடியை சரிசெய்து கொண்டே தலையை நிமிர்த்தினார்
"என்னப்பா?"
"நான் ஒரு பொண்ணை காதலிக்குறேன்"
"ம்ம்ம், எத்தனை நாளா?"
"மூணு வருஷமா"
"மூணு வருஷமா பண்ணிக்கிட்டு இருக்குறத இப்ப மட்டும் சொல்றதுக்கு என்ன காரணம்?"
"அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு ஆசைப்படுறேன்"
"ம்ம்ம், அந்த பொண்ணு எந்த ஊரு, எப்படிப்பட்ட குடும்பம்"
"கோயம்புத்தூர். அப்பா, ஆர்.டி.ஓ. அவங்க ஃபேமிலில மொத்தமே மூணு பேர் தான்"
"ம்ம்ம்.. பெரிய இடம் மாதிரி தெரியுது"
தினமணியை மடித்துவைத்து விட்டு, கண்ணாடியையும் கழற்றினார். 25 வருடங்களுக்கும் மேலாக ஓடிக் கொண்டிருக்கும் ஆசிரியர் பணியில், ரிட்டையர்டு ஆகும் நாளை நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறார். ஒரு வித அயர்ச்சி, ஆயாசம் முகத்தில் இழையோடியது
"இந்த செந்தில்குமார் வாத்தியாருக்கு உங்களையும் தவிர, ஒரு பொண்ணு இருக்கா. அவளுக்கு ஒரு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுக்காம, குடும்பத்துல மூத்த வாரிசு நீ இப்படி பேசுறது......"
"இல்லப்பா. நான் தங்கச்சி கல்யாணத்தை பத்தி பேசுறதுக்கும் தான் வந்திருக்கேன்"
" " நரைத்த புருவ முடிகளை ஆச்சர்யக்குறிகளாக்கி அவனை ஏறெடுத்து பார்த்தார்.
"ஆமாப்பா........"
இடம்: தேனி, சின்னமனூர்
நேரம்: மாலை 6 மணி, அதே நாள்
களத்துமேட்டில் ஒரு சேரில் உட்கார்ந்து மேற்பார்வையிடும் அப்பாவிடம், பையன்
"அய்யா, நைட் ட்ரெயினுக்கு நான் ஊருக்கு கெளம்புறேன்"
"நல்லது தம்பி. இனிமே மீசைய மழிச்சிட்டு ஊருப்பக்கம் வராதீங்க. இந்த பிரசிடென்ட் சின்னச்சாமிக்கு ஊரு மக்க கொடுக்கிற மரியாதைய உங்களுக்கும் கொடுக்கணும்"
"ஆகட்டும்யா.. அய்யா.. வந்து.. அய்யா... நம்ம கற்பகம் கல்யாணம் விசயமா?"
"இப்பயே அந்த சின்ன கழுதை கல்யாணத்துக்கு என்ன அவசரம்?"
"இல்லைய்யா. அவ ஒரு பையன விரும்புறா.. விசாரிச்சி பார்த்தேன்.. தஞ்சாவூர்ல பெரிய அரிசி மண்டியும், 50 ஏக்கர் வயக்காடும் இருக்கு. பையனும் சென்னையில ஆட்டோமொபைல் கம்பெனில வேல பாக்குறான்"
"ம்ம்ம்.. இவ்வளவு விசாரிப்புகளை பண்ணிப்புட்டு வந்து தான் நிக்குறீங்களாக்கும். நல்லது. இப்பவே திடீர்ன்னு தங்கச்சி கல்யாணத்தை பத்தி நீ அக்கறப்படுறது சந்தோஷமத்தான் இருக்கு"
"இல்லைய்யா....அது வந்து.."
"என்ன இன்னும் இழுக்கிறீங்க"
"நானும் ஒரு பொண்ண விரும்புறேன்"
"அப்படிப் போடு அருவாளை"
"நல்ல இடம் தான். என்கூட தான் வேலை பாக்குறா. மதுரை திருமங்கலம் வாத்தியார்.......... "
"சந்தோசம். எனக்கு வேலையே இல்லாம பண்ணிப்புட்டீங்க ரெண்டு பேரும். ரொம்ப சந்தோசம்"
இடம் 3: தஞ்சாவூர் பெரிய தெரு.
நேரம்:இரவு 7 மணி, அதே நாள்
தன் ஒரே மகனின் கல்யாணத்துக்காக ப்ரோக்கரிடம் வாங்கிய ஃபோட்டோக்களை, பையனிடம் நீட்டினார் அம்மா.
ஃபோட்டோக்கள் கவரை பிரித்துக் கூட பார்க்காமல், "அம்மா, நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன். பொண்ணோட அப்பா தேனி, சின்னமனூர்ல ப்ரசிடெண்டா இருக்கார்"
"அப்பாடா, வேலை மிச்சம். அடுத்த வாரமே, பொண்ணு பார்க்க கெளம்பிடலாம்"
"வேணாம்மா"
"ஏன்?"
"நாளைக்கே கெளம்பலாம்"
************************************
காதல் டூ கல்யாணம் - பட்டர்ஃப்ளை எஃபெக்ட்!
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
superu ippadi ellorum iruntha paravaalaye
ஆகா ஆகா இவ்வளவு எளிதா கல்யாணங்கள் முடிஞ்சா எவ்வளவு ந்லலா இருக்கும்
நல்ல கதை நல்வாழ்த்துகள்
ரெண்டு மூணு தடவை படிச்சு பாத்து புரிஞ்சிக்கிட்டேன்..! :-) நல்லா இருக்கு! .....இப்டிலாம் கல்யாணம் நடந்தா நல்லாத்தான் இருக்கும்....!
ஓஓஓஓஓஓஓ இதுக்கு பேரு தான் கியாஸ் தியரமா? இருக்கட்டும் இருக்கட்டும்.... :)
எனிவே இப்படி ஜாதி பார்க்காத கல்யாணம் வந்தா நல்லது தான்.
அட்டகாசம்..
ரசிக்க முடிந்தது....
எல்லா அப்பாவும், அம்மாவும்
இப்படியே இருந்தா
மகனுக்கும், மகளுக்கும் இதுதான் சந்தோஷம்............
//எல்லா அப்பாவும், அம்மாவும்
இப்படியே இருந்தா
மகனுக்கும், மகளுக்கும் இதுதான் சந்தோஷம்............
//
ரிப்பீட்டூ..........
ஒரு தலகாதல் - - - கம்பிளி பூச்சிஎஃபெக்ட்!
இடம்: மதுரை, திருமங்கலம்.
நேரம்: மாலை 8 மணி, ஒரு சாதா நாள்
தினமணி பேப்பர் போடர ஆள்: நாளைக்கு என் காதலை அவ கிட்ட சொல்ல்லாம் இருக்கீறேன்
தினதந்தி பேப்பர் போடர ஆள்: மாப்பளை பாத்துட அவ வாத்தியார் பொண்னு அவ அப்பனுக்கு தெரிந்த பிரச்சனை ஆகிடும்
தினமணி பேப்பர் போடர ஆள் : கவலைப்படாதே போன வாரம் காலையிலே மின்சாரம் இல்ல அப்பதான் அவ கண்ணுல காதலை பார்த்தேன்.
தினதந்தி பேப்பர் போடர ஆள் : பாத்துடா அது அவ ஆயா கண்ணா இருக்க போவுது.
இடம்: தேனி, சின்னமனூர்
நேரம்: மாலை 9 மணி, அதே சாதா நாள்
மொக்க சாமி ஆயா : ஏலே முகத்தை மறைக்கார போல இம்புட்டு பெரிய மீசை எதுக்களே வளக்கர? இப்ப பாரு சாப்படரத்துக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு?
மொக்க சாமி : போ அப்பத்தா என் மனசுல இருக்கர ஆசையை வெளியில சொல்ல மாட்டேன் நான் கூடிய சீக்கரம் ஒரு களத்துமேட்டுக்கு சொந்தகாரனா ஆகப்போரேன்.
மொக்க சாமி ஆயா : எலேய் எருமை மாடு ரேஸ்சுக்கு போவது
கழுதை கான பாடாது
இடம் 3: தஞ்சாவூர் சின்ன தெரு.
நேரம்:இரவு 10 மணி, அதே சாதா நாள்
பையன் அம்மா : எங்க நம்ப பையனுக்கு ரொம்ப நாளா சின்னமனூர்ல ப்ரசிடெண்ட் பொண்ணு மேலே ஒரு கண்ணா இருக்காரன்.
பையன் அப்பா : நமக்கு அவரு மாமா வழி சொந்தம்தான் கேட்டுப்பார்களாம் ஆன நம்ப பையன் வார்டு மெம்பாராதானே இருக்கான்.
பையன் அம்மா : எல்லாம் கல்யாணத்துக்கு பிறகு சரி ஆகிடும் அவரு மாப்பிளையை கள்ள ஓட்டு போட்டாவது கவுன்சிலரா ஆக்கிடுவாரு
நல்ல கதை நல்வாழ்த்துகள்
எல்லா வீடுகளிலும் இப்படியே நடந்தா அம்மா அப்பாக்களுக்குகவலையே இல்லிங்க. ஐடியா நல்ல இருக்குங்க.
என்னத்த சொல்ல, கேட்க படிக்க நல்லா தான் இருக்கு...
நன்றி DHANS!
superu ippadi ellorum iruntha paravaalaye//
ரொம்ப நாள் கழிச்சி வந்து இருக்கீங்க போல இருக்கு. வெல்கம் பேக் :)
****************************
நன்றி cheena (சீனா)!
ஆகா ஆகா இவ்வளவு எளிதா கல்யாணங்கள் முடிஞ்சா எவ்வளவு ந்லலா இருக்கும்//
ஆமா ஸார்! எவ்வளவு நல்லா இருக்கும் :)
**************************
நன்றி லெமூரியன்!
ரெண்டு மூணு தடவை படிச்சு பாத்து புரிஞ்சிக்கிட்டேன்..! //
அவ்வளவு குழப்பமாவா இருக்கு :(
***************************
நன்றி ☀நான் ஆதவன்☀
ஓஓஓஓஓஓஓ இதுக்கு பேரு தான் கியாஸ் தியரமா? இருக்கட்டும் இருக்கட்டும்.... :) //
:)
எனிவே இப்படி ஜாதி பார்க்காத கல்யாணம் வந்தா நல்லது தான்.//
ரொம்ப நல்லா இருக்கும். ஆனால்....?
*****************************
நன்றி பிரியமுடன்...வசந்த்!
அட்டகாசம்.. ரசிக்க முடிந்தது....//
:) :) :)
*****************************
நன்றி Sangkavi said...
எல்லா அப்பாவும், அம்மாவும் இப்படியே இருந்தா
மகனுக்கும், மகளுக்கும் இதுதான் சந்தோஷம்.//
ஆமா :)
****************************
நன்றி மணி! :) :)
நன்றி ♠புதுவை சிவா♠
என் பதிவை விட, உங்கள் கமெண்ட் தான் செம கலாட்டாவாக இருக்கிறது. :)
நன்றி Mrs.Menagasathia! :)
நன்றி நிலாமதி!
எல்லா வீடுகளிலும் இப்படியே நடந்தா அம்மா அப்பாக்களுக்குகவலையே இல்லிங்க.//
அப்படியா சொல்றீங்க? :)
************************************
நன்றி Aahaa fm!
என்னத்த சொல்ல, கேட்க படிக்க நல்லா தான் இருக்கு...//
ரொம்ப அலுத்துக் கொள்ளவேண்டாம். இதுவும் நடக்கும். FMல் இருந்தெல்லாம் கூட ப்ளாக் பக்கம் வந்துவிட்டார்களா? ஆஹா!
***********************************
Post a Comment