ரேனிகுண்டா!

20 வயதுக்குள்ளான நான்கு இளைஞர்கள் OR சிறுவர்கள். இவர்கள் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் வழக்குகளில் அடிக்கடி ஜெயில் வந்து செல்லும் ரெகுலர் விசிட்டர்ஸ். காவலர்களையே மிரட்டி அதட்டும் அளவுக்கு தைரியசாலிகள். இந்த க்ரூப்பில் புதிதாக ஒருவன் வருகிறான். அப்பா, அம்மாவை நடுரோட்டில் சாகடித்தவனை, கத்தி எடுத்துபோய் கொல்லமுடியாமல் ஜெயில் வந்து சேர்ந்த அப்பாவி. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, அந்த நான்கு பேருடன் சேர்ந்து ஐந்தாவது ஆள் ஆகிறான்.

ஜெயிலில் இருந்து தப்பித்து மும்பை போக முயற்சி செய்து பாதி வழியிலேயே இறங்கி ரேணிகுன்டாவில் செட்டில் ஆகிறார்கள். அங்கு அப்பாவிக்கு மலரும் காதல். முடிவில் ரத்தக்களரியான க்ளைமாக்ஸ். கேட்பதற்கு சாதாரணமான கதை என்றாலும், அவர்கள் ப்ரெஸன்ட் பண்ணவிதம், அட்ட‌காசம்.

வழக்கமாக பார்த்த சலித்த நடிகர்கள் இல்லாமல் அனைவரும் புது முகம். அந்த ஐந்து பேரையும் எங்கே இருந்து பிடித்தார்கள் என்று தெரியவில்ல. 'அப்பாவி' மாதிரியான பையன் தான் ஹீரோ('நிக் ஆர்ட்ஸ்' எஸ்.எஸ்.சக்கரவர்த்தி மகன்?) என்று நினைக்கிறேன். அவனுக்கு மட்டும் தான் காதல், ஹீரோயின் என தனி எபிசொட் எல்லாம் இருக்கிறது. காதல் காட்சிகளிலும், முகத்தை ஒரு மாதிரி இறுக்கமாக வைத்திருப்பது ஏனோ? முதலில் அந்த பசங்களுடன் ஒட்ட முடியாமல் தவித்து, க்ளைமேக்ஸுக்கு முன்னால் இரண்டு பேரை கொல்லும் இடத்தில் முகத்தில் ரியல் ரௌத்திரம் தெறிக்கிறது.

கால்கள் X மாதிரி வளைந்த குள்ளமான 'டப்பா' கேரக்டரின் டயலாக் டெலிவரி, டைமிங் கமெண்ட்ஸ், சூப்பர். படத்தின் செமத்தியான என்டெர்டெயின்மென்ட் அவர். அதிலும் க்ளைமேக்ஸில் போலீஸிடம் மாட்டிய போது, அவர் முகத்தில் தெரியும் மரணபயம், அருமையான நடிப்பு.

கொஞ்சம் குண்டாக, வளர்ந்த 'பாண்டு' கேரக்டர், இந்த க்ரூப்பின் தலைவன் ரோலுக்கு நல்ல பொருத்தம். ஹீரோவின் காதலுக்காக, கடைசி அசைன்மென்டில் அவனை தள்ளி நிற்க சொல்வது, ஹீரோயின் அக்காவிடம் அவனுக்காக பேசுவது என நெஞ்சில் நிற்கிறார்.

ஹீரோயின் அக்காவின் பாத்திரப்படைப்பு, டைரக்டரின் அசாத்திய துணிச்சல். முதல் படத்திலேயே, இப்படி ஒரு கேரக்டரை உலவ விட்டதற்கு 'தில்' வேண்டும். ஆனால் அவர் ஹீரோயினை ஏன் வாய் பேச முடியாமல் வைத்தார் என தெரியவில்லை.

பெற்றோரைக் கொன்றவனை நடுரோட்டில் கத்தியை எடுத்து நெஞ்சில் குத்தும்போதும், ரேணிகுன்டா அரசியல்வாதியைக் கொன்றதை, ஒருவனிடம் 'டெமோ' காட்டியபோதும் என்னையும் அறியாமல் கைதட்டினேன், ரசித்தேன். என் ரத்தத்திலும் வன்முறை அதிகமாக இருக்கிறது என நினைக்கிறேன்.

ஹீரோவின் பாய்ண்ட் ஆஃப் வியூவில் தான் கதை நகர்கிறது. அவரின் மோசமான, சந்தோஷமான‌ சம்பவங்களின் போது, மழையையும் கையோடு கூட்டி சென்றது, கவிதை.

காதல் காட்சிகளின்போது, லைட்டாக போர் அடித்தது. அதே போல் பாடல்களும். முதலில் வரும் சிம்பு பாடிய 'மாட்டுத்தாவணி' பாடல் மட்டும் ஓ.கே.

க்ளைமேக்ஸ், வழக்கமான ரவுடியிஸ படங்களில் வரும் ஒன்று தான்.

மொத்ததில் இந்த படம், எனக்கு பிடித்து இருந்தது. 'ஈரம்' படத்திற்கு அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்த உருப்படியான ஒரு திரைப்படம்

*****************************************************

10 comments:

ஜெட்லி... said...

நல்ல அலசல் நண்பரே...

Anonymous said...

படம் வந்த அன்னைக்கே பாத்தாச்சா!!

நல்ல விமர்சனம்

puduvaisiva said...

நல்ல விமர்சனம் கணேஷ்

வீட்ல பழைய பித்தளை அண்டா ஒன்னு இருக்கு அதை கடையில போட்டுதான் நாளைக்கு ரேணிகுன்டா பார்க்கலாம் இருக்கிறேன்.

உண்மையை சொல்லு சியமளா கூட தானே படத்துக்கு போன

amalan said...

really superb movie.

Arun said...

ஹீரோ வின் தந்தை தாயை கொள்ளும் கதா பாத்திரம் எப்படி செய்திருக்கிறார்

கணேஷ் said...

நன்றி ஜெட்லி!

நன்றி சின்ன அம்மிணி!

படம் வந்த அன்னைக்கே பாத்தாச்சா!!// ஆமா. இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தது, ட்ரைலர் பார்த்த நாள் முதல்.

*********************

நன்றி ♠புதுவை சிவா♠

வீட்ல பழைய பித்தளை அண்டா ஒன்னு இருக்கு அதை கடையில போட்டுதான் நாளைக்கு ரேணிகுன்டா பார்க்கலாம் இருக்கிறேன்.// :) :) :)

உண்மையை சொல்லு சியமளா கூட தானே படத்துக்கு போன//

அவ்வ்வ்.. இந்த கொஸ்டின், பாஸ் :(

*********************

நன்றி amalan!

நன்றீ Arun!

ஹீரோ வின் தந்தை தாயை கொள்ளும் கதா பாத்திரம் எப்படி செய்திருக்கிறார்//

முதல் வசனத்திலேயே 'புரியலயா அவனுக்கு?' அவ‌ரிட‌ம் ந‌ல்ல‌ எக்ஸ்பிர‌ஷ‌ன் தெரிந்த‌து. உங்க‌ளுக்கு தெரிந்த‌வ‌ரா? :)

********************

ramasamy kannan said...

மொத்ததில் இந்த படம், எனக்கு பிடித்து இருந்தது. 'ஈரம்' படத்திற்கு அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்த உருப்படியான ஒரு திரைப்படம்
--

While looking at this comment ..i thing you are watching too much movies .. i hope ஈரம் got released couple of months back...

கணேஷ் said...

Thanks ramasamy kannan!

While looking at this comment ..i thing you are watching too much movies .. i hope ஈரம் got released couple of months back...//

Yes, certainly. I used to see all the tamil movies once got released. I mean to say this movie has impressed me after ஈரம்.

Om Santhosh said...

really supper

Om Santhosh said...

really supper film

Related Posts with Thumbnails