சியாமளா-11: கொடுத்த ஷாக்?

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10 11

திவ்யாவின் நினைவுகளில், எப்போது கணேஷ் தூங்கினான் என்று தெரியவில்லை. காலை மணி 6.30 இருக்கும். காலிங் பெல் அடித்து அடித்துக் கொண்டிருந்தது. மூன்றாவது தடவை அடிக்கும்போது எழுந்துவிட்டான். நேற்று இரவின் நினைவுகளில் இருந்து இன்னும் வராமல் ஒரு வேளை திவ்யாவாக இருக்குமோ என்ற பயத்துடன் கதவைத் திறந்தான்.

நினைத்ததை விட பயந்தான். சியாமளா நின்றிருந்தாள்(பூரிக்கட்டையுடன் வரவில்லை :). தழைய தழைய மஞ்சள் நிற பட்டுப் புடவையில். அதில் ஆங்காங்கே பெரிய பெரிய மல்லிகைப் பூ டிசைனுடன் அரக்கு கலரில் பார்டர் வைக்கப்பட்டு இருந்தது. ஒரு கணம் சியாமளாவின் அழகில் மயங்கிவிட்டான் என்பது உண்மை, "She is stunning beauty". திடீரென ஆறாவது அறிவு அலர்ட்டாக,

"ஹேய், நீ ஏன் இங்க நிக்குற‌, அதுவும் இந்த நேரத்துல? பை தி வே, You are looking great" வாயில் இருந்த வழிந்த ஜொள்ளை துடைத்துக் கொண்டே சொன்னான்.

"தேங்க்ஸ், Today is my Birthday! இந்தா ஸ்வீட்ஸ் எடுத்துக் கோ?" A2B ஸ்வீட் பாக்ஸை நீட்டினாள்.

உடனே கையை நீட்டி, "ஓ.. Happy Birthday! Many more happyyyyy.." திடீரென கையை உள்ளே இழுத்துக் கொண்டான். அப்போது தான் கவனித்தான். ஷர்ட், டீ ஷர்ட் அட்லீஸ்ட் ஒரு பனியன் கூட இல்லை. ஷார்ட்ஸ் மட்டுமே உடலில். ரொம்பவே எம்பாரஸிங் ஆனான். உள்ளே ஓடி ஒரு டவலை எடுத்து மேலே போர்த்திக் கொண்டு, மீண்டும் வாழ்த்தினான்.

"தேங்க்ஸ்" என பதிலுக்கு கையை நீட்டினாள். அவளின் உள்ளங்கை, ச்சில்லென ஐஸ்கட்டி போல இருந்தது. கொஞ்சம் என்ன நெறையவே ஸாஃப்ட்னெஸ். கணேஷுக்கு கை உதறியது. அப்போது தான் நினைவு வந்தது, "தூங்கி எழுந்ததவுடன் முகம் கூட கழுவாமல் பேசிக் கொண்டிருக்கிறோம்" என்று. இருந்தாலும் சமாளித்தான்,

"Then?"

"என்ன தென்? கெளம்பு, நாம கோவிலுக்கு போறோம்"

"கோவிலுக்கா? நான் இப்ப தான் எந்திரிச்சேன். நான் கெளம்பணும். அட்லீஸ்ட் 15 மினிட்ஸாவது ஆகும்? என் ஃபோன் நம்பர் தான் உன்கிட்ட இருக்குல்ல. ஒரு கால் பண்ணிட்டு வந்திருக்கலாம்ல"

"கொஞ்சம் ஷாக் கொடுக்கலாமேன்னு தான். நோ ப்ராப்ளம். அதுவரைக்கும் நான் வெயிட் பண்றேன்"

"எங்க?" லைட்டாக ஜெர்க் ஆனான்

"மாடியில இருக்க மாமி வீட்ல?

"ஓ.கே. நான் கெளம்பிட்டு கால் பண்றேன்"

மாமி வீட்டுக்கு போய்விட்டாள். கணேஷ் கெளம்புவதற்கு 20 நிமிடம் மேல் ஆனது. அவளும் கீழே வந்தாள். அவள் ட்ரெஸ்ஸுக்கு மேட்சிங்காக, ஸான்டல் கலர் பீட்டர் இங்க்லாண்ட் ஷர்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டான்.

"இன்னைக்கு ஏன் பல்ஸரில் வரல?" என்ற கேள்வியை தொண்டை வரைக் கொண்டு வந்து, அவளின் அம்சமான புடவை லுக்கை பார்த்துவிட்டு, "உன் வண்டிய என்ன ப‌ண்றது?"

"ஈவ்னிங் வந்து எடுத்துக்கறேன்"

"ஈவ்னிங்கா?"

"கோவிலுக்கு போயிட்டு, நேரா நாம ஆஃபிஸ் போயிடலாம். எனக்கு 9.30க்கு ஒரு க்ளையண்ட் கால் இருக்கு."

"எல்லாம் ப்ளான் பண்ணி தான் வந்திருக்கியா? ம்ம் நடத்து நடத்து?" என மௌனமாக பேசிக் கொண்டான். "ஓ.கே. எந்த கோவில்?"

"மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்"

"கிண்டில இருந்து மயிலாப்பூர்க்கா...? போறதுக்கே ஹால்ஃப் அன் ஹவர் மேல ஆகும்? வடபழனி முருகன் கோவிலுக்..."

"இல்ல. இப்ப மணி 7.15 தான ஆகுது. ட்ராஃபிக்லாம் இருக்காது. 20 மினிட்ஸ்ல போயிடலாம்"

"இப்பவே நான் சொல்றத கேட்கமாட்டேங்குறா. இன்னும் எவ்வளவு இருக்கோ?" மறுபடியும் மைண்ட் வாய்ஸ்.

பக்கத்திலேயே சரவணபவனில் டிஃபன் முடித்துவிட்டு, திரும்ப‌வும் அவ‌ர்க‌ள் ஆஃபிஸ் வ‌ந்த‌போது ம‌ணி 9.15.

ம‌ணி 11 இருக்கும். பாப்க‌ட், சிறுவாணி, ம‌துரை எல்லாம் சுற்றி வ‌ளைத்துக் கொண்ட‌ன‌ர். "க‌ணேஷ், ட்ரீட்?" "எங்க‌ளுக்கு ட்ரீட் வேணும்?" "இப்ப‌வே ல‌ஞ்ச் போறோம்?"

"வெயிட், வெயிட். ஃபார் வாட்?"

"இன்னைக்கு சியாம‌ளாவுக்கு ப‌ர்தேடே. ஸோ, ப‌ர்த்டே ட்ரீட்?"

"ரைட். அவ‌ளுக்கு ப‌ர்த்டேன்னா, நீங்க‌ அவ‌கிட்ட‌ தானே கேட்க‌ணும்? எதுக்கு என்கிட்ட‌ கேட்குறீங்க?"

ஓரக்கண்ணால் சியாமளாவை தேடினான். அங்கே யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள்.

"சியாம‌ளாகிட்ட‌ கேட்டா, கேன்டீன்ல‌ ஒரு ஜூஸ் கூட‌ வாங்கித் த‌ர‌மாட்டா. போன மாசம் ப்ரோமோஷன் வாங்குனத்துக்கு, பீட்ஸா கூட வாங்கித் தரல. உன் வுட் பீ தான‌. நீ தான் கொடுக்க‌ணும்?"

"அப்ப‌ என் ப‌ர்த்டேன்னா, அவ‌கிட்ட‌ கேட்பீங்க‌ளா?"

"நோ, நோ. அப்ப‌வும் நீ தான் த‌ர‌ணும்" எல்லாரும் கோர‌ஸ் பாடினார்க‌ள்.

"இது எந்த ஊர் நியாயம்?"

அவ‌ஸ்தையாய் நெளிந்தான். சியாமளா நேராக‌ க‌ணேஷ் இட‌த்திற்கு வ‌ந்தாள்.

சியாமளா, "ஓ.கே கேர்ள்ஸ். எல்லாரும் ல‌ஞ்ச் அஞ்ச‌ப்ப‌ர் போக‌லாம்"

அவ‌ர்க‌ளால் ந‌ம்ப‌முடிய‌வில்லை. க‌ணேஷும்.

*********************************************

27 comments:

Shankar said...

Nalla than iruku. Onsite epo? ELAMAI THULLAL epo? Ennum 1 month pogum pola theriyuthe!!

லெமூரியன்... said...

:-) :-) nice..!

Cable Sankar said...

konjam irangikidhuchu

Raghav said...

ம்..என்னதிது பிறந்தநாள் அதுவுமா.. சியாமளா பற்றிய வர்ணனை குறைச்சலா இருக்கே.. அட்லீஸ்ட் ஒரு கவிதையாவது சொல்லிருக்கெ வேணாமா..

Anonymous said...

//சியாமளா நின்றிருந்தாள்(பூரிக்கட்டையுடன் வரவில்லை :). //

நாங்க என்ன நேர்லயா பாத்தோம். சொல்லறீங்க நம்பவேண்டியதுதான்.

Sangkavi said...

லஞ்ச் அஞ்சப்பரா இல்ல........

பக்கத்தில் இருக்குற ............... பவனா?

Abiramy said...

Gnaesh thaaan bill pay pannanumo??

Nisha said...

//தழைய தழைய மஞ்சள் நிற பட்டுப் புடவையில். அதில் ஆங்காங்கே பெரிய பெரிய மல்லிகைப் பூ டிசைனுடன் அரக்கு கலரில் பார்டர் வைக்கப்பட்டு இருந்தது.//

ayyo, enna ganesh, ungalukkulla ipdi oru rasanai thanmaiya? aahaaa?

//"தேங்க்ஸ்" என பதிலுக்கு கையை நீட்டினாள். அவளின் உள்ளங்கை, ச்சில்லென ஐஸ்கட்டி போல இருந்தது. கொஞ்சம் என்ன நெறையவே ஸாஃப்ட்னெஸ். கணேஷுக்கு கை உதறியது.//

enna ganesh, manusan ipdi aagitteenga?

ilamai thullalin aarambamaa ithu? :P

Nisha said...

\\"கொஞ்சம் ஷாக் கொடுக்கலாமேன்னு தான். நோ ப்ராப்ளம். அதுவரைக்கும் நான்

=====================
வெயிட் பண்றேன்"
=======================

"எங்க?" லைட்டாக ஜெர்க் ஆனான்\\

enakkum athae jerk thaan.. :)
nalla velai maami veedukku poyitta

க‌ரிச‌ல்கார‌ன் said...

//தழைய தழைய மஞ்சள் நிற பட்டுப் புடவையில். அதில் ஆங்காங்கே பெரிய பெரிய மல்லிகைப் பூ டிசைனுடன் அரக்கு கலரில் பார்டர் வைக்கப்பட்டு இருந்தது//

நம்ம‌ ஊர் மாரி "அம்ம‌ன்" மாதிரியா?
வ‌ஞ்ச‌ப் புக‌ழ்ச்சி?

Sasikumar said...

VERY NICE.......

☀நான் ஆதவன்☀ said...

என்ன கொடுமை இது? இதுவரைக்கும் ஹாலினி, சியாமளா, ஹரிணி பின்னூட்டமே வரல :(

♠புதுவை சிவா♠ said...

"ம்..என்னதிது பிறந்தநாள் அதுவுமா.. சியாமளா பற்றிய வர்ணனை குறைச்சலா இருக்கே.. அட்லீஸ்ட் ஒரு கவிதையாவது சொல்லிருக்கெ வேணாமா.."


அரக்கு கலர் பார்டரில் வந்த தேவதையே

எனது வாழ்வின் ஐமாஸ்சே - நான் உனக்கு

அஞ்ச‌ப்ப‌ரில் வாங்கி தறுவேன் பொடிமாசேநீ எந்தன் வாழ்வின் "ஜீவஜோதி"

சரவணபவனில் கிடைக்குமா? சூவிட் பாசந்தி

காலையில் நீ வந்ததோ ஆரரை(6.30)
நீ கோவப்பட்டால் எதிரிக்கு தறுவாய் ஏழரை(7 1/2)

Shalini said...

கணேஷ், இப்படி சொன்ன பிறகு என்னை என்ன செய்ய சொல்றீங்க ஆதவன்???
(இரண்டு தொடர்க்கு முன்னால் போகவும்)

**************************
நன்றீ Shalini!

Hello Mr.ஆதவன்!
என்னோட கணேஷ் எனக்கு கிடைக்கலைன்னு என் குமுறல்களை கொட்டிக்கிட்டிருக்கேன்! உங்களுக்கு கிண்டலா இருக்கா???//

இந்த‌ மாதிரியெல்லாம் நீங்க ஏன் ப‌ண்ணுறீங்க‌? உங்க‌ விளையாட்டுக்கும் ஒரு லிமிட் இருக்கு.

****************************

Rajalakshmi Pakkirisamy said...

//என்ன கொடுமை இது? இதுவரைக்கும் ஹாலினி, சியாமளா, ஹரிணி பின்னூட்டமே வரல :(//

enakku ennavo ganesh ye ivanga perla ellam comment potukiraronu oru doubt...

☀நான் ஆதவன்☀ said...

// Shalini said...

கணேஷ், இப்படி சொன்ன பிறகு என்னை என்ன செய்ய சொல்றீங்க ஆதவன்???
(இரண்டு தொடர்க்கு முன்னால் போகவும்)//

என்ன ஹாலினி இது? இதுக்கெல்லாம் மனசு ஒடிஞ்சிரலாமா?

அப்ப நானும் சின்ன அம்மணியும் எதுக்கு இருக்கோம்?

பதிவை விட உங்க பின்னூட்டத்தை ரசிக்கிறதுக்குன்னே நாங்க வரோம். நீங்க கொஞ்சம் கன்ஸிடர் பண்ணுங்களேன் ப்ளீஸ்...


யோவ் கணேசு இனி அவங்கள ஏதாவது சொன்ன...... அப்புறம் ஊருக்கு வந்து அடிப்பேன் ஆமா :)

kasbaby said...

very good....

Premnath said...

Boss intha episode palasu mathiri illa .. சுவாரஸியம் கம்மியா இருக்கு .. Good narration ..

Prem

கணேஷ் said...

நன்றி Shankar!
Nalla than iruku. Onsite epo? ELAMAI THULLAL epo? Ennum 1 month pogum pola theriyuthe!!//

டேய் நீ ஏன்டா இப்ப‌டி ப‌ற‌க்குற‌? அதெல்லாம் காத‌ல். க‌ன்னாபின்னான்னு சொல்ல‌க்கூடாது, டீஸ‌ன்டா சொல்ல‌னும் :)

***********************

நன்றி லெமூரியன்!

நன்றி Cable Sankar!

konjam irangikidhuchu// நான் எப்ப‌வும் சொல்ற‌ அதே டைய‌லாக் தான் த‌லைவா. நீங்க‌ எதிர்பார்க்குற‌ அள‌வுக்கு நான் வொர்த் இல்ல‌ :(

***********************

நன்றீ Raghav!

ம்..என்னதிது பிறந்தநாள் அதுவுமா.. சியாமளா பற்றிய வர்ணனை குறைச்சலா இருக்கே.. அட்லீஸ்ட் ஒரு கவிதையாவது சொல்லிருக்கெ வேணாமா..//

ஒரு பொண்ண‌ நேர்ல‌ பாக்கும்போது க‌விதை சொன்னா, ரொம்ப‌ டிராமாட்டிக்கா இருக்கும். அதெல்லாம் எழுதி, கிஃப்ட்டா ப்ர‌ஸ‌ண்ட் ப‌ண்ண‌னும். சூது வாது தெரியாத‌ ப‌ச்ச‌ புள்ளையாவே இருக்கீங்க‌ :)

***********************

நன்றீ சின்ன அம்மிணி!

நாங்க என்ன நேர்லயா பாத்தோம். சொல்லறீங்க நம்பவேண்டியதுதான்.//

அவ்வ்வ்வ்.. சொல்றேன்னா? இது க‌ற்ப‌னைக் க‌தை மேட‌ம். போன‌ போஸ்ட்ல‌ பூரிக்க‌ட்டையோட‌ வ‌ர்றேன்னு க‌மெண்ட் வ‌ந்திருச்சி, அதுக்கு ரிப்ளை தான் அது? நீங்க‌ போய்?

***********************

நன்றி Sangkavi!

லஞ்ச் அஞ்சப்பரா இல்ல.பக்கத்தில் இருக்குற ............... பவனா?//

எந்த‌ அஞ்ச‌ப்ப‌ர் ப‌க்க‌த்துல‌ நீங்க‌ சொல்ற‌ ப‌வ‌ன் இருக்கு? நீங்க‌ என்ன‌ மீன் ப‌ண்றீங்க‌?

***********************

நன்றி Abiramy!

Gnaesh thaaan bill pay pannanumo??// இதெல்லாம் ஒரு கேள்வியா? சாதார‌ண‌மா பொண்ணுங்க‌ கூட‌ போகும்போதே ப‌ச‌ங்க‌ தான் PAY ப‌ண்ண‌னும். இதுல‌ க‌ட்டிக்க‌ போற‌வ‌ கூட‌ போனா?

***********************

நன்றி Nisha!

ayyo, enna ganesh, ungalukkulla ipdi oru rasanai thanmaiya? aahaaa?//

கான்ட்ராஸ்ட்டான‌ க‌ல‌ர்ல‌ ஏதோ உள‌றியிருக்கேன்னு சொல்ல‌ வ‌ர்ற‌துக்கு, ஏன் இத்த‌னை பில்ட் அப்?

enna ganesh, manusan ipdi aagitteenga?//

ஹெல்லோ.. இது ப‌திவ‌ர் க‌ணேஷ் எழுதும் ஒரு தொட‌ர் க‌தையில் வ‌ரும் ஹீரோவின் பெய‌ர் க‌ணேஷ். ம‌ற்ற‌ப‌டி நீங்க‌ள் ஷாக் ஆகும் அள‌வுக்கு ஒண்ணும் ந‌ட‌க்க‌வில்லை :)

ilamai thullalin aarambamaa ithu? :P//

இதுவே இள‌மைத் துள்ள‌லா? எ.கொ.நி.இது?

enakkum athae jerk thaan.. :)
nalla velai maami veedukku poyitta//

அது தான் நான் அங்க‌ சொல்ல‌வ‌ந்த‌து. எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும். இதுல‌ எக்ப்ளிஸிட்டா இப்ப‌டி க‌மெண்ட் போட்டு, ஏன் வாயை பிடுங்குறீங்க‌? :)

***********************

நன்றீ க‌ரிச‌ல்கார‌ன்!

நம்ம‌ ஊர் மாரி "அம்ம‌ன்" மாதிரியா? வ‌ஞ்ச‌ப் புக‌ழ்ச்சி?//

மாரி அம்ம‌ன் இல்லீங்க‌.. காளிய‌ம்ம‌ன். ப‌த்ர‌காளிய‌ம்ம‌ன். :)

***********************

நன்றி Sasikumar!

ந‌ன்றீ ☀நான் ஆதவன்☀

என்ன கொடுமை இது? இதுவரைக்கும் ஹாலினி, சியாமளா, ஹரிணி பின்னூட்டமே வரல :(//

ப‌த்த‌ வ‌ச்சிட்டீயே ப‌ர‌ட்டை? :)

***********************

நன்றி ♠புதுவை சிவா♠

என்ன‌ங்க‌ க‌விதை எழுத‌ சொன்னா, பேர‌ர‌சு எழுதுற‌ குத்துப்பாட்டு மாதிரி எழுதி வ‌ச்சிருக்கீங்க‌? :) ஒவ்வொருவாட்டியும் நீங்க‌ என‌க்கு க‌மெண்ட் போடுற‌துக்கு எடுக்கும் efforts க்கு ஸ்பெஷல் நன்றி :)

***********************

நன்றி Shalini!

கணேஷ், இப்படி சொன்ன பிறகு என்னை என்ன செய்ய சொல்றீங்க ஆதவன்??? (இரண்டு தொடர்க்கு முன்னால் போகவும்)//

ஐயாம் ஸாரி. நார்ம‌லா க‌மெண்ட்ஸ் போட‌லாம். அப்ப‌டி ம‌ட்டும் வேணாம்(த‌னியா இமெயில்க்கு ம‌ட்டும் அனுப்புங்க‌, ப‌ப்ளிக்ல‌ வேணாம்) :)

***********************

கணேஷ் said...

நன்றி Rajalakshmi Pakkirisamy!

enakku ennavo ganesh ye ivanga perla ellam comment potukiraronu oru doubt.//

டூ லேட். இதெல்லாம் 4 போஸ்ட் முன்னாடியே யாரோ ஒருத்த‌ர் கேட்டுட்டாரு. அதுக்கு அவ‌ர‌ ஷாலினி வேற‌ திட்டுனாங்க‌. நீங்க‌ளே வால‌ன்டிய‌ரா வ‌ந்து மாட்டுறீங்க‌ளே மேட‌ம்? :)

***************************************

நன்றி ☀நான் ஆதவன்☀

என்ன ஹாலினி இது? இதுக்கெல்லாம் மனசு ஒடிஞ்சிரலாமா?
அப்ப நானும் சின்ன அம்மணியும் எதுக்கு இருக்கோம்?
பதிவை விட உங்க பின்னூட்டத்தை ரசிக்கிறதுக்குன்னே நாங்க வரோம். நீங்க கொஞ்சம் கன்ஸிடர் பண்ணுங்களேன் ப்ளீஸ்...//

இதுக்கெல்லாம் நான் என்ன‌ ப‌தில் சொல்ல? என் ப்ளாக்ல‌ என்ன காலி பண்றதுக்கே ஒரு க்ரூப் கொலைவெறியோட‌ அலையுது :(

யோவ் கணேசு இனி அவங்கள ஏதாவது சொன்ன...... அப்புறம் ஊருக்கு வந்து அடிப்பேன் ஆமா :)//

ப‌ப்ளிக்கா கொலை மிர‌ட்ட‌ல் விடுற‌தெல்லாம் டூ ம‌ச் :)

***************************************

நன்றீ kasbaby!

ந‌ன்றி Premnath!

Boss intha episode palasu mathiri illa .. சுவாரஸியம் கம்மியா இருக்கு .. Good narration ..//

உங்க‌ளின் நேர்மையான‌ க‌மெண்ட்க்கு ந‌ன்றி த‌லைவா. தொட‌ர்ந்து வாங்க‌ :)

********************************

ஊர்சுற்றி said...

//நினைத்ததை விட பயந்தான். சியாமளா நின்றிருந்தாள்(பூரிக்கட்டையுடன் வரவில்லை :). // :)

ஊர்சுற்றி said...

// Raghav said...
ம்..என்னதிது பிறந்தநாள் அதுவுமா.. சியாமளா பற்றிய வர்ணனை குறைச்சலா இருக்கே.. அட்லீஸ்ட் ஒரு கவிதையாவது சொல்லிருக்கெ வேணாமா..
// அதானே!

நிர்மலா said...

கணேஷ் என்னோட intro எப்போ ?

Anonymous said...

ஷாலினி கவலைப்படாதீங்க. திவ்யாங்கற கணேஷோட முன்னாள் லவ்வரை ஞாபகப்படுத்த ஆள் அனுப்பிச்சதே நாந்தான். :)

ஏதோ என்னால முடிஞ்சது கணேஷ்:)

Shalini said...

ஆதவன் & சின்ன அம்மிணி, உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி :)
//
ஐயாம் ஸாரி. நார்ம‌லா க‌மெண்ட்ஸ் போட‌லாம். அப்ப‌டி ம‌ட்டும் வேணாம்(த‌னியா இமெயில்க்கு ம‌ட்டும் அனுப்புங்க‌, ப‌ப்ளிக்ல‌ வேணாம்) :)
//
கணேஷ்,
எப்படி மட்டும் வேணாம்? நான் ஏதோ உங்கள சொல்ற மாதிரி உங்க மனசு ஏன் குறுகுறுக்குது??? எதாவது தப்பு பண்றீங்களா? :)
ஷ்யாமளா எப்படி இருந்தாலும் ஏத்துக்கிற கணேஷ்க்கு, என்ன மட்டும் ஏன் பிடிக்கலன்னு தெரியல? :(

கணேஷ் said...

நன்றி ஊர்சுற்றி!

அதானே!//

:) நீங்க‌ளுமா?

**************************************

நன்றி நிர்மலா!

கணேஷ் என்னோட intro எப்போ ?//

நீங்க‌ யாரு? அது என்ன‌ சைட் பேரு? என‌க்கு ஒப‌ன் ஆக‌ மாட்டேங்குது?

**************************************

நன்றி சின்ன அம்மிணி!

ஷாலினி கவலைப்படாதீங்க. திவ்யாங்கற கணேஷோட முன்னாள் லவ்வரை ஞாபகப்படுத்த ஆள் அனுப்பிச்சதே நாந்தான். :)//

:(

ஏதோ என்னால முடிஞ்சது கணேஷ்:)//

இப்போ சந்தோஷமா? ஒரு க்ரூப்பா தான் அலையுறீங்க‌ :(

**************************************

நன்றி Shalini!

கணேஷ்,
எப்படி மட்டும் வேணாம்? நான் ஏதோ உங்கள சொல்ற மாதிரி உங்க மனசு ஏன் குறுகுறுக்குது??? எதாவது தப்பு பண்றீங்களா? :)//

ஸ்டார்ட்டிங் எல்லாம் ந‌ல்லா தான் இருக்கு...

ஷ்யாமளா எப்படி இருந்தாலும் ஏத்துக்கிற கணேஷ்க்கு, என்ன மட்டும் ஏன் பிடிக்கலன்னு தெரியல? :( //

ஆனா ஃபினிஷிங் ச‌ரியில்லையேய‌ப்பா.....

**************************************

karthick said...

Superb. Summa Pinreenga ...! By the way How is Shyamala today ?

Read my blog and command me.

Related Posts with Thumbnails