சாட் வித் கடவுள்!

நேற்று இரவு ஆன்லைனில் இருந்தேன். அப்போது புதிதாக ஒருவர் ஆன்லைனில் வந்து ping பண்ணினார்.

சாமி: கணேஷ், உங்கள் சியாமளா தொடர் கதை நன்றாக இருக்கிறது.

கணேஷ்: தேங்க்ஸ் :) நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?

சாமி: நான் கடவுள்

கணேஷ்: அது பாலா படம். ஹலோ, காமெடி பண்ணாதீங்க. உங்க பேர் என்ன?

சாமி: இல்லை மகனே! என் பெயர் சிவபெருமான் ஃப்ரம் கைலாயம்.

(மெயில் ID செக் பண்ணீனேன். siva.kailayam2009@gmail.com என இருந்தது. லைட்டாக மெர்சல் ஆனேன்.)

கணேஷ்: ஸாரி மிஸ்டர் சிவா. என்னால நீங்க கடவுள்ன்னு சொல்றத நம்ப முடியல. நான் நம்புற மாதிரி ஒண்ணு சொல்லுங்க பார்ப்போம்

சாமி: அப்படியா. நீ கறுப்புக்கலர் ஷார்ட்ஸூம், வொயிட் கலர் டீ ஷர்ட்டும் போட்டிருக்கிறாய். உள்ளே கூட..

கணேஷ்: போதும் போதும் நிறுத்துங்கள். நான் நம்புறேன். கொஞ்சம் விவகாரம் பிடித்த ஆளா இருப்பீங்க போல இருக்க‌. (சுற்றும்முற்றும் பார்த்தேன். ரூமிலும் யார் இல்ல. நான் வேற இப்ப தான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணேன். யாரும் கேமரால வாட்ச் பண்றாங்களோ?)

சாமி: விவகாரம் பிடித்த ஆள் இல்ல மகனே.. முக்காலமும் அறிந்த யோகி!

கணேஷ்: என்ன நீங்க வரிசையா படம் பேரா சொல்லிக்கிட்டு இருக்கீங்க. சாமி, நீங்க‌ வ‌ந்த‌ மேட்ட‌ர் என்ன‌?

சாமி: சரி..நான் வ‌ந்த‌து உங்க‌ளை பாராட்ட‌த் தான். க‌ணேஷ்‍ சியாம‌ளா க‌தை ந‌ன்றாக‌ உள்ள‌து. சொந்த‌க் க‌தையையும் ப‌ப்ளிக்காக‌ எழுதும் தைரிய‌த்தை நான் பாராட்டுகிறேன்

கணேஷ்: சாமி, நீங்க‌ளுமா.. நிஜ‌மாவே இது க‌ற்ப‌னைக் க‌தை தான் சாமி

சாமி: என்னை ஏமாற்ற‌ முடியாது ம‌க‌னே. ஆனாலும் என‌க்கு உன்மேல் பொறாமையாக‌ இருக்கிற‌து

கணேஷ்: ஏன்?

சாமி: இந்த‌ தொட‌ர் மூல‌ம், ஏக‌ப்ப‌ட்ட‌ பெண் ந‌ண்ப‌ர்க‌ள் உன‌க்கு கிடைத்துவிட்டார்க‌ள் போல. என்ஜாய் பண்ணுகிறாய். வாழ்க வளமுடன்.

கணேஷ்: அதெல்லாம் இல்லை சாமி. க‌மெண்ட்ஸ் ப‌டிச்சிட்டு நீங்க‌ளும் இப்ப‌டி சொல்லாதீங்க.

சாமி: நான் கமெண்ட்ஸ் வச்சி சொல்லவில்லை. இப்ப‌க் கூட‌ உங்க‌ள் தொட‌ரை ப‌டிக்க‌ சொல்லி, ர‌ம்பை தான் லிங்க் கொடுத்தாள். அதான் பொறாமை :(

கணேஷ்: நீங்க‌ள் ர‌ம்பை என்று சொன்ன‌து தொடைய‌ழ‌கி ர‌ம்பாவா?

சாமி: முட்டாள், அவ‌ள் இல்லை. இங்கே நாட்டியமாடும் அழ‌கிக‌ளில் முத‌ன்மை பெற்ற‌ பேர‌ழ‌கி!

கணேஷ்: ஹூம்ம். எல்லாம் கைக்கு எட்டாத‌ தொலைவில் தான் உள்ள‌து. ஒரு ஃபிக‌ர் கூட‌ கிடைக்காத‌ மொக்கை பையன் சாமி நான். என‌க்கு எப்ப‌ க‌ல்யாண‌ம் ஆகும்?

சாமி: ம‌க‌னே, ஒரு த‌த்துவ‌ம் சொல்கிறேன் கேள். மொக்கை பைய‌னுக்கு சூப்ப‌ர் ஃபிக‌ரும், சூப்ப‌ர் பைய‌னுக்கு மொக்கை ஃபிக‌ரும் வாழ்வில் அமையும். அத‌னால் க‌வ‌லைப்ப‌டாதே

கணேஷ்: சியாம‌ளா மாதிரி அமையுமா?

சாமி: க‌ண்டிப்பாக.. சியாமளாவே அமைவாள்

கணேஷ்: அவ‌ள் எப்ப‌டி இருப்பாள்?

சாமி: மேலே சொன்ன‌ த‌த்துவ‌த்தை ப‌டிக்க‌வும். சாமி வாயில இருந்து சூப்பர் ஃபிகர் என்று சொல்ல‌ வைக்காதே ம‌க‌னே

கணேஷ்: என் நேர‌ம். ச‌ரி சாமி. சாமியெல்லாம் சுத்த‌ த‌மிழ்ல‌ தானே பேசும். நிறைய தமிழ் படத்துல பார்த்து இருக்கேன். நீங்க‌ ம‌ட்டும் எப்ப‌டி லோக்க‌ல் இங்க்லீஷ்ல‌ க‌ல‌ந்து க‌ட்டி பேசுறீங்க‌

சாமி: மேலோக‌த்திற்கு வரும் மானிட‌ ஜ‌ந்துக‌ளிட‌ம் பேசி பேசி, நாக்கில் ஆங்கில‌ம் ஒட்டிக் கொண்ட‌து. நான் சுத்த‌ த‌மிழில் பேசினால் உன‌க்கு புரியாது.

கணேஷ்: ஓ.கே. சாமி. நீங்க‌ளும் ஹைடெக்கா மாறிட்டீங்க‌. லேப்டாப், சாட்டிங் என்று க‌ல‌க்குகிறீர்க‌ள். எப்ப‌டி இதெல்லாம்?

சாமி: போன‌ வார‌ம் பெங்க‌ளூரில் ஒரு சாஃப்ட்வேர் இளைஞ‌ன், ஓவ‌ராக‌ த‌ண்ணிய‌டித்து வ‌ண்டி ஓட்டிய‌தில் ஆக்சிடென்ட் ஆகி இற‌ந்து இங்கே வ‌ந்துவிட்டான். வ‌ரும்போது லேப்டாப்போடு மேலோக‌ம் வ‌ந்தான். அவ‌ன் தான் இந்த‌ வார‌ம் முழுவ‌து லேப்டாப் ப‌ய‌ன்பாடு ப‌ற்றி K.T கொடுத்தான்.

கணேஷ்: ம்ம். லேப்டாப், K.Tன்னு பின்றீங்க‌

சாமி: ம‌க‌னே, உன்னுடைய‌ ஃபோட்டோக்க‌ளை அனுப்பு.

கணேஷ்: இதோ.. அனுப்புகிறேன்

கணேஷ்: சாமி ஃபோட்டோ வ‌ந்திருச்சா? ஏன் கேட்டீர்க‌ள்?

சாமி: இல்லை. உன் Blog இளமை விளையாட்டெல்லாம், ரொம்ப‌ நாளாக‌ பொண்ணு தேடிக் கொண்டிருக்கும் என் ம‌க‌ன் விநாய‌க‌னின் திருவிளையாட‌லில் ஒன்றாக இருக்குமோ என‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்த‌து. உன் பேர் வேற கணேஷ். அதான் ஃபோட்டோ கேட்டேன். ஆனால் இப்போது நான் ந‌ம்புகிறேன், நீ விநாய‌க‌ர் இல்லை.

கணேஷ்: இப்போது ம‌ட்டும் நான் இல்லை என்று எப்ப‌டி உறுதியாக‌ ந‌ம்புகிறீர்க‌ள்?

சாமி: விநாய‌க‌ன் க‌றுப்பா ப‌ய‌ங்க‌ரமா இருப்பான். நீ ப‌ய‌ங்க‌ர‌ க‌றுப்பாய் இருக்கிறாய்.

கணேஷ்: :(( சாமி, இருந்தாலும் உங்களுக்கு ந‌க்க‌ல்,குசும்பு எல்லாம் ஜாஸ்தி.

சாமி: ச‌ரி விடு, உன்னோடு பேசிய‌தில் ச‌ந்தோஷ‌ம். உன‌க்கு ஏதாவ‌து வேண்டுமா?

கணேஷ்: ஆம்

சாமி: என்ன‌ ம‌க‌னே?

கணேஷ்: ர‌ம்பையின் இ-மெயில் ID. அவ‌ளுட‌ன் சாட் ப‌ண்ண‌ வேண்டும். அவ‌ளுட‌ன் சேர்ந்து ஊர் சுற்ற‌ வேண்டும்

சாமி: எனக்கு அந்தப்புர‌த்தில் இருந்து கால். அப்புற‌மாக‌ பேச‌லாம். பை

siva.kailayam2009@gmail.com is offline and can't receive messages right now because chat is off the record.

************************************

22 comments:

Cable Sankar said...

ha..ha..ha

Parandhaman - D I G of Police said...

Bullshit! நான் சொல்றத நம்புங்க! இது சாமி இல்ல. இது ஒரு ஆசாமி தான்!!

Shalini said...

கணேஷ், உங்களுக்கு ஷ்யாமளா மேல ஆசை இருந்தா அவளையே கல்யாணம் பண்ணிக்கோங்க... சாமி சொல்லிச்சி, பூதம் சொல்லிச்சிங்கர கதை எல்லாம் வேண்டாம்!!

ஜெட்லி said...

அடுத்த வாட்டி கடவள் ஆன்லைன்னில் வந்தா நமக்கும் லிங்க் கொடுங்க....
நீங்க ரம்பை நம்பர் கேட்டிங்க,,,
நான் அடுத்த மேனகை நம்பர் கேட்டு
பார்க்கிறேன்...

Shankar said...

Sami-um naan-um quarter adichom-nu kooda solva pola!!

கணேஷ்: சியாம‌ளா மாதிரி அமையுமா?
சாமி: க‌ண்டிப்பாக.. சியாமளாவே அமைவாள்

-Konjam yosika vendiya vishayam!

Raghav said...

ஹாஹா... காலங்கார்த்தால, சிவபெருமானிடமே கலாய்த்தலா..

☀நான் ஆதவன்☀ said...

கலக்குறியேப்பா :)))

Anonymous said...

//சாமி: விநாய‌க‌ன் க‌றுப்பா ப‌ய‌ங்க‌ரமா இருப்பான். நீ ப‌ய‌ங்க‌ர‌ க‌றுப்பாய் இருக்கிறாய்.

கணேஷ்: :(( சாமி, இருந்தாலும் உங்களுக்கு ந‌க்க‌ல்,குசும்பு எல்லாம் ஜாஸ்தி.

சாமி: ச‌ரி விடு, உன்னோடு பேசிய‌தில் ச‌ந்தோஷ‌ம். உன‌க்கு ஏதாவ‌து வேண்டுமா?

கணேஷ்: ஆம்

சாமி: என்ன‌ ம‌க‌னே?

கணேஷ்: ர‌ம்பையின் இ-மெயில் ID. அவ‌ளுட‌ன் சாட் ப‌ண்ண‌ வேண்டும். அவ‌ளுட‌ன் சேர்ந்து ஊர் சுற்ற‌ வேண்டும்//

நடத்துங்க நடத்துங்க. இந்த கடைசி பகுதிக்கு குபீர் சிரிப்பு.

இதுக்கு கூட ஷாலினி வந்துட்டாங்க போலிருக்கு. :)

Saran-DBA said...

ishappaaaaaaaaaaa..... ippove kanna kattudhe. Mudiyalappa. Yaravadhu love pannidungapa illaina idhai vida bayangara bayangaramana kodumai ellam padichaganum nama...

Saran-DBA said...

Saran: samy indha ganesh thollai thangaliye neengaluma chat paneenga?

Samy: Thappu panniten thappu panniten. adhaium eludhi vilambaram theduvanu theriyama poche..

Saran: Indha kadhaiya seekiram mudichi veinga thollai thangala..

Samy: Appane adhai mudika dhanae avan kitta overa buildup kuduthu chat pannen..

Saran: !!!

Saran-DBA said...

Saran: Appo bin laden id la vandhu kalaichi vidunga..

Samy: Yen indha kolai veri?

Saran: Shyamala pathi padikalamnu jollu vittutu vandha suya puranam thangala samy.

Samy: You too Saran?

Saran: !!!

Samy: Me too hehehehe

Saran: (manasukulla) idhuku andha kodumaiye thevalai

Saran-DBA said...

Saran: Samy oru doubt...

Samy: Yes maganae..

Saran: Ganesh eppadi black shorts dhan pottu irukanu kandu pidicheenga? I mean aalum karupu shortsum karupu romba talented samy neenga...

Samy: Avanai vechi comedy pannen. Ellathaium thappu thappa purinjikkaran padupavi paiya..

Samy: oops nammalaiye thitta veikkaranae. Siva siva siva siva....

Rajalakshmi Pakkirisamy said...

ithu enga poi mudiya potho

♠புதுவை சிவா♠ said...

"சாமி: ம‌க‌னே, ஒரு த‌த்துவ‌ம் சொல்கிறேன் கேள்.
மொக்கை பைய‌னுக்கு சூப்ப‌ர் ஃபிக‌ரும், சூப்ப‌ர் பைய‌னுக்கு மொக்கை ஃபிக‌ரும் வாழ்வில் அமையும். அத‌னால் க‌வ‌லைப்ப‌டாதே"

:-))))))))))))))

super Ganesh

கோவி.கண்ணன் said...

//சாமி: எனக்கு அந்தப்புர‌த்தில் இருந்து கால். அப்புற‌மாக‌ பேச‌லாம். பை
//

:)

இங்கே 'Chat with Jesus, SMS to Jesus' என்று விளம்பரமே செய்கிறார்கள்

Nisha said...

ithukku antha saamiye paravaalla polirukke?

கணேஷ் said...

நன்றி Cable Sankar!

ந‌ன்றி ஜெட்லி!

நீங்க ரம்பை நம்பர் கேட்டிங்க,,, நான் அடுத்த மேனகை நம்பர் கேட்டு
பார்க்கிறேன்...//

இது ந‌ல்லா இருக்கு பாஸ் :)

***************************

ந‌ன்றி Shalini!

கணேஷ், உங்களுக்கு ஷ்யாமளா மேல ஆசை இருந்தா அவளையே கல்யாணம் பண்ணிக்கோங்க... சாமி சொல்லிச்சி, பூதம் சொல்லிச்சிங்கர கதை எல்லாம் வேண்டாம்!!//

ஷாலினி நான் ப‌ண்ணிய‌ த‌வ‌று தான் என்ன‌? எத‌ற்காக என் மேல் இப்ப‌டி ஒரு கொலைவெறி? அடுத்த‌ த‌ட‌வை, சாமியிட‌ம் சொல்லி உங்க‌ளை நாடு க‌ட‌த்திட‌ வேண்டிய‌து தான்?

***************************

ந‌ன்றி Shankar!

Sami-um naan-um quarter adichom-nu kooda solva pola!!//

டேய், ஏன்டா ஏன்? இப்ப‌டி எல்லாம் யோசிக்குற‌?

கணேஷ்: சியாம‌ளா மாதிரி அமையுமா?
சாமி: க‌ண்டிப்பாக.. சியாமளாவே அமைவாள்
-Konjam yosika vendiya vishayam!//

நீ ப‌ண்ற‌ கூத்துக்கு, அந்த‌ ஷாலினியே பர‌வாயில்ல‌ :(

***************************

நன்றி Raghav!

ஹாஹா... காலங்கார்த்தால, சிவபெருமானிடமே கலாய்த்தலா..//

க‌லாய்த்த‌ல் என்று வ‌ந்துவிட்டால் காலை என்ன‌ மாலை என்ன‌? :) :) :)

நன்றி Parandhaman - D I G of Police!

Bullshit! நான் சொல்றத நம்புங்க! இது சாமி இல்ல. இது ஒரு ஆசாமி தான்!!//

ஹ‌லோ பாஸ்! நீங்க‌ என்ன‌ திட்டுறீங்க‌ளா? எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்க‌லாம்?

*********************

நன்றி ☀நான் ஆதவன்☀

நன்றி சின்ன அம்மிணி!

இதுக்கு கூட ஷாலினி வந்துட்டாங்க போலிருக்கு. :)//

நீங்க‌ என் போஸ்ட் ப‌டிக்க‌ வ‌ர்றீங்க‌ளா இல்ல‌ ஷாலினி க‌மெண்ட் ப‌டிக்க‌ வ‌ர்றீங்க‌ளா?

**********************

கணேஷ் said...

ந‌ன்றி Saran-DBA!

நீங்க‌ எந்த‌ க‌ம்பெனில DBA? உங்க‌ளுக்கு ஏன் என் மேல் இம்புட்டு ஒரு கொலைவெறி! பாஸ், ஆன்லைன்ல‌ வாங்க‌.. எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துப்போம்.

ishappaaaaaaaaaaa..... ippove kanna kattudhe. Mudiyalappa. Yaravadhu love pannidungapa illaina idhai vida bayangara bayangaramana kodumai ellam padichaganum nama...//

பாஸ், இப்ப‌ நீங்க‌ சொன்ன‌ பாயிண்ட் சூப்ப‌ர். உங்க‌ளுக்கு கோவில் க‌ட்டி கும்பிட‌லாம். ப்ளீஸ் யாராவ‌து நோட் ப‌ண்ணுங்க‌ப்பா? :)

*******************************

நன்றீ ♠புதுவை சிவா♠

super Ganesh//

இந்த‌ மொக்கை த‌த்துவ‌த்தையும் சூப்ப‌ர்ன்னு சொல்றீங்க‌ளே! அவ்வ்வ்வ்!

*******************************

ந‌ன்றி கோவி.கண்ணன்!

இங்கே 'Chat with Jesus, SMS to Jesus' என்று விளம்பரமே செய்கிறார்கள்//

:) :) :)

********************************

ந‌ன்றீ Nisha!

ithukku antha saamiye paravaalla polirukke?//

:)

*********************************

friend said...

Nalla iruku unga blogs ellam. Keep it up.

லெமூரியன்... said...

\\இந்த‌ தொட‌ர் மூல‌ம், ஏக‌ப்ப‌ட்ட‌ பெண் ந‌ண்ப‌ர்க‌ள் உன‌க்கு கிடைத்துவிட்டார்க‌ள் போல. என்ஜாய் பண்ணுகிறாய். வாழ்க வளமுடன்....//

எப்பிடியோ ஒரு பக்கம் உண்மை வெளில வந்துருச்சு.................கலக்குங்க கணேசு.......ஆனாலும் எங்கள மாதிரி மொக்கை பிகர் கூட கிடைக்காம அல்லாடற எத்தனையோ யூத் கிட்ட ,காதுல புகை வர்ற அளவுக்கு சாபம் வாங்கறது நல்லவா இருக்கு கணேசு.......முடியலப்பா முடியலை. :-) :-)

Parandhaman - D I G of Police said...

நன்றி Parandhaman - D I G of Police!

ஹ‌லோ பாஸ்! நீங்க‌ என்ன‌ திட்டுறீங்க‌ளா? எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்க‌லாம்?
//
பாஸ்! உங்கள திட்டலை.
இது புரியலைனா கந்தசாமி படத்துல பிரபு வருகிற character-அ கொஞ்சம் யோசிச்சிப்பாருங்க!

கணேஷ் said...

நன்றி friend!

:):)

************************

நன்றி லெமூரியன்!

எப்பிடியோ ஒரு பக்கம் உண்மை வெளில வந்துருச்சு.................//

ஆஹா உளறிட்டேனா? :) :)

ஆனாலும் எங்கள மாதிரி மொக்கை பிகர் கூட கிடைக்காம அல்லாடற எத்தனையோ யூத் கிட்ட ,காதுல புகை வர்ற அளவுக்கு சாபம் வாங்கறது நல்லவா இருக்கு கணேசு.......//

அப்படி நான் என்ன சாபம் வாங்குனேன்?! ஓ.. சூப்பர் ஃபிகரோடு கல்யாணாம் ஆகும்ன்னு சொன்னதா? இதுல என்ன சாபம் இருக்கு? :) :) :)

முடியலப்பா முடியலை. :-) :-)//

:) :) :)

********************

நன்றி Rajalakshmi Pakkirisamy!

ithu enga poi mudiya potho//

ஹி ஹி ஹி.. இப்போதைக்கு முடியாது. இப்ப‌ தான் நாலு பேர் பாக்க‌ ஆர‌ம்பிச்சி இருக்காங்க‌.. அதுக்குள்ளே முடிக்கிற‌தா?

********************

நன்றி Parandhaman - D I G of Police!

பாஸ்! உங்கள திட்டலை.//

:)

இது புரியலைனா கந்தசாமி படத்துல பிரபு வருகிற character-அ கொஞ்சம் யோசிச்சிப்பாருங்க!//

ஓ.. ஆமால்ல‌. குட் திங்கிங் பாஸ் :)

***********************

Related Posts with Thumbnails