வேட்டைக்கார‌ன்!

வில்லு படம் ரிலீஸ் ஆகி பத்து மாதங்கள் கழித்து வந்த படம். நடுவே ராகுல் காந்தியுடன் அசிங்கப்பட்ட அவமானப்பட்ட சந்திப்பு(அரசியல் ஆசை யாரை விட்டது?), அதற்கு மேல் தமிழக அரசிடம் கிடைத்து வந்த ஸாஃப்ட் கார்னர், ஒன் ஃபைன் டே நிறுத்தப்பட்டு காமன் மேனாகி எதிர்கொண்ட நில பிரச்சினை, சுய விருப்பமில்லாமலே ஏ.வி.எம்மினால் சன் டிவிக்கு கை மாறப்பட்ட வேட்டைக்காரன் படம், அதன் தொடர்ச்சியாக சன் பிக்சர்ஸ் ஏற்படுத்திய அவமானங்கள்(ரீ ஷூட், ப்ரிவீயூ ஷோ தகராறு) என ஏகப்பட்ட பிரச்சினைகள் நடிகர் விஜய்க்கு இந்த வருடத்தில். இது எல்லாவற்றிறுகும் மேல் அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு என வரிசையாக மூன்று தோல்வி படங்களுக்கு பின், கட்டாயமாக ஒரு வெற்றிப் படம் கொடுக்கப்பட வேண்டும் என்ற நிர்பந்தம். இப்படியான‌ ஏகப்பட்ட ஸ்ட்ரெஸ் நடுவினில் முழுவீச்சினில் தயாரான படம், நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

எப்போது விஜ‌ய் ப‌ட‌ம் ரிலீஸ் ஆனாலும், என‌க்குள் அள‌வில்லாத‌ ஆர்வ‌ம் ஏற்ப‌டும். பெரும்பாலும் முத‌ல் நாளிலேயே பார்த்துவிடுவேன். இந்த‌ முறை இர‌ண்டாவ‌து நாளில் பார்த்தேன். என்னை மிக‌வும் ஆர்வ‌ப்ப‌டுத்திய‌ விஷ‌ய‌ம், விஜ‌ய்யின் ம‌க‌ன் டான்ஸ் ஆடிய‌து. க‌ண்டிப்பாக‌ ர‌சிக‌ சிகாம‌ணிக‌ள் அவ‌ருக்கும் ஃப்ளெக்ஸ் பேன‌ர், மாலை போட்ட க‌ட் அவுட் என‌ பிர‌மாத‌ப்ப‌டுத்தியிருப்பார்க‌ள் என‌ நினைத்திருந்தேன், கூட‌வே ஓர் அடைமொழியும் எதிர்பார்த்திருந்தேன். யெஸ், நான் நினைத்த‌து ச‌ரி தான். "ஜூனிய‌ர் த‌ள‌ப‌தி" என‌ பொருத்த‌மான‌ டைட்டிலுட‌ன் சிரித்துக் கொண்டிருந்தார் ஜூனிய‌ர் த‌ள‌ப‌தி விஜ‌ய். "ஜுனிய‌ர் த‌ள‌ப‌தி" டைட்டில் ரிச‌ர்வ்டு. ஆந்திராவின் "ஜூனியர்" டைட்டில் கல்ச்சர், தமிழ்நாட்டில "ஜூனியர் சிவாஜி" என மொக்கையான ஒருவரால் பயன்படுத்தப்பட்டு மொக்கையானாலும், இன்னும் 15 ஆண்டுக‌ளில் மீண்டும் விஸ்வ‌ரூப‌ம் எடுக்க‌லாம். எடுக்கும்.

பேக் டூ வேட்டைக்கார‌ன். விஜய். முதலில் பூ போட்ட வைலட், சிவப்பு, டார்க் பச்சை என ஜிங்குச்சா கலரில் சட்டை, சுரிதாரின் டாப்ஸ், பட்டுச்சேலையின் முந்தானை, ராமராஜன் கலர் பேண்ட் வகைகளையும் முதலில் கவனமாக தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் ராமராஜன் ஃபீல்ட் அவுட் ஆகி 20 வருடங்கள் ஆகியும் இன்னும் சொல்வதைப் போல், மோசமான உதாரணம் ஆகிவிடுவீர்கள். அஜீத்தை ஃபாலோ பண்ணி இவரும் ஆரம்பித்துவிட்டார். நிறைய இடங்களில் இளம்தொப்பை வெளியே தெரிய ஆரம்பித்து இருக்கிறது. அதே போல் காமெடி டிராக். காமெடியும், கதைக்களத்தின் வேகத்திற்கு ஏற்ப அதுவாக அமைய வேண்டும்(உ.தா: கில்லி), கட்டாய திணிப்பாக இருக்கக்கூடாது. சச்சினில், "அண்ணே நீங்க பேர்டா'ண்ணே" என நகத்தைக் கடித்துக் கொண்டே கேட்பார். அதுவே செயற்கையாக இருந்தாலும் ரசிக்கும்படி இருக்கும். இதில் செயற்கை + ரசிக்கமுடியவில்லை. போக்கிரியில் அலட்டலாக பிரகாஷ்ராஜை டீல் பண்ணுவது நன்றாக இருக்கும். இந்த படத்திலும் மதுரை ரவுடியை டீல் செய்யும் இடத்தில் அந்த ஸ்டைலை உபயோகிக்குறார். சமீபகாலமாக விஜய்யின் படங்களில் ஒரு மோசமான விஷயம் தொடரப்படுகிறது. ஒரு மாடியிலோ அல்லது ஏதாவது உயரமான இடத்திலோ சண்டை நடந்தால், கொஞ்சம் கூட யோசிக்காமல் அங்கே இருந்து விஜய் குதித்து விடுகிறார், ஒரு சின்ன கீறல் கூட இல்லாமல். அந்த ஒரு விஷயமே, குருவி படம் எல்லாரையும் தியேட்டரை விட்டு பறக்க வைத்தது. இந்த படத்திலும் 'பறக்கும் விஷயம்' இருந்தாலும், குருவி அளவு 2 கி.மீ தூரம் இல்லை.

அனுஷ்கா. சாதார‌ண‌மாக‌ அவ‌ரைப் பார்த்தாலே, ஒரு வைப்ரேஷ‌ன் உட‌ம்பெல்லாம் ப‌ர‌வும். இப்ப‌டி இருக்க, அவரை ஏதாவது ஒரு வைப்ரேஷ‌னில்(சின்ன தாமரை பாடல் பார்க்கவும்) பார்த்தால் சாதாரணமாக வரும் வைப்ரேஷனுடன் எக்ஸ்ட்ரா வைப்ரேஷன் சேர்ந்து ஜூர‌ம் வ‌ருகிற‌து. ப‌னை ம‌ர‌ உய‌ர‌த்தில், த‌ம்மாத்துண்டு ட்ரெஸ்ஸுட‌ன் அவ‌ர் ஆடுவ‌தைப் பார்க்கும்போது குளிர் ஜூர‌ம் ஹாட்டாக‌ அடிக்கிற‌து. படத்தில் வேஸ்ட் பண்ணிவிட்டார்கள். அழ‌கான‌ பொய‌ட்டிக்கான 7/g மாதிரியான ஒரு ல‌வ் ச‌ப்ஜெக்ட் ப‌ட‌த்தில் அவ‌ர் ந‌டிக்க‌ வேண்டும். அப்படி மட்டும் அவர் நடித்தால், அத்துட‌ன் "த‌மிழ்நாடு அனுஷ்கா ந‌டிக‌ர் ம‌ன்ற"த்தில் முழுநேர‌ செய‌லாளர் ஆகிவிடுவேன்.

க‌தை. விஜ‌ய் ப‌ட‌த்தில் இதெல்லாமா முக்கிய‌ம்?

பாட‌ல்க‌ள். அனுஷ்கா வ‌ரும் எல்லா பாட‌ல்க‌ளும் அட்ட‌காச‌ம். முத‌ல் பாதியில் வ‌ரும், 'க‌ரிகால‌ன் காலைப் போல்' அருமையான‌ ப்ளேஸ்மெண்ட். இர‌ண்டாம் பாதியில் வ‌ரும், 'சின்ன‌ தாம‌ரை', 'என் உச்சி ம‌ண்டைல‌' எதிர்பாராத‌ இட‌த்தில் திணிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அத‌ற்கான‌ லீட் காட்சிக‌ளும், அலுப்பு, சலிப்பு. பெண் வேஷம்(உவ்வே?), க‌ல‌ரிங் ஹேர் ‍என்ன‌ கொடுமை விஜ‌ய் இதெல்லாம்?

ப‌ஞ்ச் லைன்ஸ். ச‌ன் டிவி ட்ரைல‌ரில் எல்லாத்தையும் போட்டுவிட்டார்கள். இதில் ஒரு கொடுமை, ட்ரைல‌ரில் பிட்டு பிட்டாக‌ வ‌ரும் நாலைந்து ப‌ஞ்ச் டையலாக் வ‌ச‌ன‌ங்க‌ள், ஒரே ஒரு காட்சியில் கோர்வையாக வருபவை.

வில்லன். சாய்குமார், ஜூவல்லரி ஷாப்பில் ஒரு பெண்ணை அப்ரோச் பண்ணும் இடத்திலேயே முழுக்கதையையும் யூகித்துவிட்டேன். ஆனால் நான் யோசித்தது, அனுஷ்காவை. ஆனால் அவர் கேட்பது, இதற்காகவே திணிக்கப்பட்ட ஒரு கண்ணாடி பெண். இடைவெளிக்கு பிறகு, அவர் எங்கே போனார் என தெரியவில்லை. அதுசரி, இதையெல்லாம் விஜய் படத்தில் தேடிக் கொண்டிருக்க முடியுமா? அடியாளாக வரும் ஒருவன், தாடியை எல்லாம் கலரிங் பண்ணி இருக்கிறான். அது யார் மெயின் வில்லன் வேதநாயகம்? செம காமெடி பீஸ். அடகுக்கடை வாசலில் உட்கார்ந்திருக்கும் சேட் மாதிரி வருகிறார் போகிறார். சத்யனைக் கொல்லும் இடத்தில் மட்டும் நிமிர்ந்து உட்கார வைக்கிறார். மற்றபடி க்ளைமேக்ஸில் மினிஸ்டர் ஆவதற்கு அவர் எடுக்கும் மூவ் எல்லாம், தேவையில்லாத ஜவ்வு.

Verdict: குருவி, வில்லு அள‌வுக்கு மோச‌ம் இல்லை. அதே ச‌ம‌ய‌ம் கில்லி, போக்கிரி அள‌வில் பாதி கூட‌ இல்லை.

நான் விஜ‌யிட‌ம் மிக‌வும் விரும்பிய‌ விஷ‌ய்ம், க‌தை செல‌க்ச‌ன். அதை நான் உண‌ர்வுப்பூர்வ‌மாக யோசித்தது திரும‌லை, கில்லி, ம‌துர‌, திருப்பாச்சி என‌ ஒரு தொடர்ச்சியாக ஹிட் ப‌ட‌ங்க‌ள் கொடுத்த‌ போது. விக்ர‌ம், சூர்யா போல‌ ந‌டிப்பில் ப‌ல‌ ப‌ரிமாண‌ங்க‌ள் த‌ன்னால் காட்ட‌ முடியாது என‌ தெரிந்தும் தொட‌ர்ந்து வெற்றிப் ப‌ட‌ங்க‌ளைக் கொடுப்ப‌து சாதார‌ண‌ காரிய‌மில்லை. அதற்கு காரணம் க‌தை செல்க்ச‌ன் என‌ நினைத்திருந்தேன். இந்த‌ 'நினைத்திருந்தேன்'னில் என் எண்ண‌ம் த‌வ‌று என‌ நீங்க‌ள் நினைக்கலாம். இதை மாற்ற‌ வேண்டிய‌ பொறுப்பு, விஜ‌ய்யிடம் ம‌ட்டும் தான் உள்ள‌து. அது தான் என்னை போன்ற‌ ர‌சிக‌ர்க‌ள் அவ‌ரிட‌ம் எதிர்பார்ப்ப‌து.

***********************************************

8 comments:

ஜெட்லி... said...

என்ன பாஸ் விஜய் எப்போ நல்ல கதை செலக்ட்
பண்ணாரு?? திரைக்கதையில் தான் அவர் ஜெயித்தது...
நல்ல அலசல் பாஸ்...

தமிழ் உதயம் said...

மெதுவா அழிந்து கொண்டிருக்கும் சினிமாவை, இவர்களின் படங்களும், பேராசைகளும் விரைவா அழிச்சிடும்

SenthilMohan K Appaji said...

//*அது யார் மெயின் வில்லன் வேதநாயகம்? செம காமெடி பீஸ்.**/

அவர இதுக்கு முன்னாடி நீங்க பாத்தது இல்லையா..?
அவர் ஒரு Ex-வில்லன். திருடா திருடா விழும் இவர் தான் வில்லன். அவருக்கு ஒரு famous டயலாக் இருக்கு.
StephenRaaa...aj. ராஜ்-ஐ கொஞ்சம் இழுத்து சொல்லிப்பாருங்க.

கணேஷ் said...

நன்றி ☀நான் ஆதவன்☀

:) // டிட் ஃபார் டாட்? :)

நன்றி ஜெட்லி!

என்ன பாஸ் விஜய் எப்போ நல்ல கதை செலக்ட்
பண்ணாரு?? திரைக்கதையில் தான் அவர் ஜெயித்தது... //

இது உண்மையான‌ கூற்று.திரைக்க‌தையில் தான் முக்கிய‌மாக‌ க‌வ‌ன‌ம் செலுத்த‌வேண்டும்.

*****************************

நன்றி tamiluthayam!

மெதுவா அழிந்து கொண்டிருக்கும் சினிமாவை, இவர்களின் படங்களும், பேராசைகளும் விரைவா அழிச்சிடும்//

ஏன் இப்ப‌டி ஒரு கொலைவெறி? :)

*****************************
நன்றி SenthilMohan K Appaji!

அவர இதுக்கு முன்னாடி நீங்க பாத்தது இல்லையா..?
அவர் ஒரு Ex-வில்லன். திருடா திருடா விழும் இவர் தான் வில்லன். அவருக்கு ஒரு famous டயலாக் இருக்கு.
StephenRaaa...aj. ராஜ்-ஐ கொஞ்சம் இழுத்து சொல்லிப்பாருங்க.//

லைட்டாக‌ நியாப‌க‌ம் வ‌ருகிற‌து பாஸ்.. :)

*****************************

Nat Sriram said...

வேட்டைக்காரன் படம் மொக்கையா என்பது இருக்கட்டும். வேட்டைக்காரன் விமரிசனங்களில் பாதிக்கும் மேல் மொக்கையாக இருக்க, உங்கள் ரிவ்யு பிரெஷ்-ஆக இருக்கிறது. நல்ல நடை பாஸ் உங்களுக்கு (எழுதற நடைய சொன்னேன்)
கதை செலெக்ஷன் விஷயம் ஒத்துக்கொள்கிறேன். திருமலை, திருப்பாச்சி எல்லாம் புது டைரெக்டர் என்றாலும் கொஞ்சம் தைரியமா ஒத்துக்கொண்டு நடித்தார். வெற்றியும் கண்டார்.
விஜய் பெரிய காமெடி நடிகர்களை ரொம்ப சேர்த்துக்கறது இல்லை கவனிச்சீங்களா? case in point - திருப்பாச்சி, சிவகாசி, கில்லி, வேட்டைக்காரன். insecured ஆக பீல் பண்றார் போலருக்கு.
என்ன பாஸ் ஜிந்தாவ மறந்துட்டீங்க? அவ்ளோ சின்ன பையனா நீங்க?

Anonymous said...

கில்லி மாதிரி படம் இருந்தா பாக்கலாம்.

கணேஷ் said...

நன்றி Nataraj!

வேட்டைக்காரன் படம் மொக்கையா என்பது இருக்கட்டும். வேட்டைக்காரன் விமரிசனங்களில் பாதிக்கும் மேல் மொக்கையாக இருக்க, உங்கள் ரிவ்யு பிரெஷ்-ஆக இருக்கிறது. நல்ல நடை பாஸ் உங்களுக்கு (எழுதற நடைய சொன்னேன்)//

எதுவும் உள்குத்து இல்லையே? :)

கதை செலெக்ஷன் விஷயம் ஒத்துக்கொள்கிறேன். திருமலை, திருப்பாச்சி எல்லாம் புது டைரெக்டர் என்றாலும் கொஞ்சம் தைரியமா ஒத்துக்கொண்டு நடித்தார். வெற்றியும் கண்டார். //

ஆமாம், அதுவே இப்ப‌ கொஞ்ச‌ம் பிர‌ச்சினை ஆன‌ மாதிரி தெரியுது என‌க்கு? உ.தா. அழ‌கிய‌ த‌மிழ்ம‌க‌ன், வேட்டைக்கார‌ன்

விஜய் பெரிய காமெடி நடிகர்களை ரொம்ப சேர்த்துக்கறது இல்லை கவனிச்சீங்களா? case in point - திருப்பாச்சி, சிவகாசி, கில்லி, வேட்டைக்காரன். insecured ஆக பீல் பண்றார் போலருக்கு. //

ம்ம். ஒரு வேளை இருக்க‌லாம். நீங்க‌ திங் ப‌ண்ண‌ பாயிண்ட் ஆஃப் வியூவில் இருந்து நான் யோசிக்க‌வில்லை :)

என்ன பாஸ் ஜிந்தாவ மறந்துட்டீங்க? அவ்ளோ சின்ன பையனா நீங்க?//

ஆமா பாஸ்.. நான் ரொம்ப‌ சின்ன‌ப்பைய‌ன் :)

*********************

நன்றி சின்ன அம்மிணி!

கில்லி மாதிரி படம் இருந்தா பாக்கலாம்.//

அப்ப‌ பாக்காதீங்க‌ :)

*********************

puduvaisiva said...

"த‌மிழ்நாடு அனுஷ்கா ந‌டிக‌ர் ம‌ன்ற"த்தில் முழுநேர‌ செய‌லாளர் ஆகிவிடுவேன்."

இதய தெய்வம் "பீப்பா நமீதா" தலமை ரசிகர் மன்றம் சார்பாக உங்களை எதிர்ப்போம்.

Related Posts with Thumbnails