கண்ணில் பார்வை - ஷ்ரேயா கோஷல்
கண்ணில் பார்வை போனபின்பும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணிலாத பேதை கண்டால்
கனாக்கள் கூட ஒதுங்கும் ஒதுங்கும்
கண் தெரியாத ஒரு பெண்ணின் பார்வையில் பதியப்பட்டுள்ள பாடல். அழுதுகொண்டே பாடுவது போல் ஸ்ரேயாவின் குரல், வெண்ணெய் போல் அப்படியே உருகி பாடல் முழுவதும் வழிந்தோடுகிறது. கர்னாட்டிக் மியூசிக் சாயலிலும் உள்ளது.
அம்மா உன் பிள்ளை - சாதனா சர்கம்
ஒரு அற்புதமான மெலடி. தாயைப் பற்றி பாசத்துடன் உருகிப் பாடல். சாதனாவின் குரலில் இளையராஜா தாலாட்டியிருக்கிறார். இளையராஜா சரணங்களுக்கு நடுவே இசை ராஜாங்கமே நடத்தியிருக்கிறார். வாலியின் பாடல் வரிகள் பாசத்தின் வீரியத்தை ரொம்ப காட்டமாக எடுத்து உரைக்கிறது. எனக்கு பிடித்த வரிகள்
ஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே,
பந்தங்கள் என்று சொன்னால் துன்பங்களே!
பெண்களை சிலையிலே தொழுகின்ற உலகமே ஏன் சொல்??
மாதா உன் கோவிலில் - மதுமிதா
இது "அம்மா உன் பிள்ளை" பாடலின் அதே ராகத்தோடு மதுமிதாவின் குரல்களில் ஒரே ஒரு நிமிடம் மட்டும் ஒலிக்கும் பாடல்.
பிச்சைப்பாத்திரம் - மதுபாலகிருஷ்ணன்
ஒரு அநாதை, நான் ஏன் பிறந்தேன், என்னை ஏன் பிச்சையெடுக்க வைக்கிறாய் என்று சிவபெருமானை நோக்கி ஆதங்கத்துடன் பதிவு செய்யப்பட்ட பாடல். தெளிவான நீரோடை போல சீராக மிருதங்கத்தின் சிறிய அடிகளில் மதுபாலகிருஷ்ணனின் குரல் பிச்சைக்காரர்களின் உண்மைகளை சாட்டையடி அடிக்கிறது.
பல்லவி,
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே... எம் ஐயனே!
பிண்டம் என்னும் எலும்பொடு சதை
நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே... எம் ஐயனே!
ஒரு காற்றில் - இளையராஜா
ஹீரோவுக்கு யாரோ ஆறுதல் சொல்வது போல் இளையராஜாவின் குரலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இளையராஜாவின் குரலைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது. தி எவர்கிரீன் வாய்ஸ்.
யாருக்கும் போல ஒரு அன்னை
தந்தை உனக்கும் இருந்தது உண்டு
யாருக்குபோல் ஒரு தேகம் தாகம்
உனக்கும் வளர்ந்தது இங்கு
யாருக்கும் போலே விழிகள்
இருந்தும் உலகமோ இருளில்
ஓம் சிவ ஓம் - விஜய் ப்ரகாஷ்
அகோரிகளின்(நர மாமிசம் உண்ணும் துறவிகள். நரமாமிசம் உண்ணுவது தான் சிவபெருமானை அடைய துறவிகள் செய்யும் கடைசிகட்ட யாகம்.) ருத்ரதாண்டவம். உடுக்கை ஒலியின் ஆக்ரோஷ அதிர்வுகளோடு பதிவு செய்யப்பட்ட பாடல். பாடலைக் கேட்கும்போது நரம்புகள் அதிர்கின்றன். இதுவரை பேய் படங்களில் கொடுக்கப்பட்ட சவுண்ட் எஃபெக்ட் முழுவதும் இந்த ஒரு பாடலில் உள்ளது. இது தான் இந்த ஆல்பத்திலேயே டாப்.
பாடலின் சில வரிகள்.
ஷட்சித் ப்ரமாணம் ஓம் ஓம்
மூலப் ப்ரமேயம் ஓம் ஓம்
அயம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
அஹம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்!
படத்தின் டைட்டிலில் கேப்ஷனாக போட்டுள்ள அஹம் ப்ரம்மாஸ்மி என்றால் நான் கடவுள் என்று அர்த்தம். பணம் ,வெற்றி, பதவி, அதிகாரம் என்பவை துச்சமாக மதிக்கப்பட்டு இவைகளை தேடுபவர்களை பைத்தியகாரர்களாக தான் அன்றைய உலகம் பார்த்தது. ஒவ்வொருவடைய முழு மூச்சும் இந்த பிரபஞ்சத்தின் இரகசியத்தை தேடுவதில் இருந்தது. அந்த இரகசியம் என்பது "அஹம் ப்ரம்மாஸ்மி" அதாவது "நான் கடவுள்" என்பதே. நன்றி கல்காரி சிவாவின் வலைப்பூ. சுட்டி இதோ.
ஒட்டு மொத்தமாக இந்த ஆல்பத்தில் மிகப்பெரிய சிறப்பம்சம் இளையராஜாவின் இசையும், வாலியின் பாடல் வரிகளும். நான் கடவுள் என்ற பாலாவின் மூன்று வருட தவத்தின் இசை ஆல்பத்தை இளையராஜா, வாலி என்ற இரு தூண்கள் தூக்கி நிறுத்துகின்றார்கள்.
DISCLAIMER: பாடல்களை குத்துப்பாட்டு, காதல் டூயட், ஹீரோ அறிமுகப்பாட்டு என்றெல்லாம் வகைப்படுத்த கன்ஃப்யூஸ் பண்ணத் தேவையில்லை. அந்த கடைசி பாடல் தவிர, அனைத்து பாடல்களும் சோகத்தில் கசக்கி பிழிந்து உயிரை உருக்கும் இசையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஸ்டைல் பிடிப்பவர்கள் மட்டும் கேட்கலாம். மற்றவர்கள் கேட்டால் அன்னைக்கு நாள் டோட்டலி அவுட், என்னை மாதிரி.
நான் கடவுள் - பாடல் விமர்சனம்
Labels:
சினிமா,
திரை விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
மிக்க நன்றி ராம்!
வணக்கம் ராம் ,
நானும் பாடல்கள் அனைத்தும் கேட்டேன் , ஒரு அதிர்வு இருக்கிறது , நீண்ட நாட்கள் ஆனாலும் பாலா சாதித்து விட்டார் ,
இளையராஜா பற்றி சொல்லத்தேவையில்லை....
வாலியும் ராஜாவும் சேர்ந்து நம்மை இன்னொரு அலைவரிசைக்கு இட்டுசென்றுவிட்டர்கள்....
நன்றி
நன்றி
ராம் சுரேஷ்,
நான் ராஜா ரசிகன்.பாடல்களை கேட்டேன்.நன்றி. மசாலா படத்திற்கு இசை அமைத்து அலுத்துப் போய் ராஜாவுக்கு இது ஒரு வித்தியாசமான இசையமைப்பு அனுபவம்.இது அவரோட பேவரைட் “கடவுள்” பற்றியது. விடுவாரா?
/கண்ணில் பார்வை/
இது சுப பந்துவராளி ராகம்.சோகம்.
(வைகறையில் வைகை)
/அம்மா உன் பிள்ளை/மாதா உன் கோவிலில்/
சிந்து பைரவி ராகம்.மணியோசைக் கேட்டு நெஞ்சில் (ப.முடிவதில்லை)பாட்டை பாலிஷ் பண்ணி போட்டிருக்கிறார். ஏன்?
//பிச்சைப்பாத்திரம்//
மாயா மாளவ கெளள ராகம்.
எனக்குப் பிடித்தப் பாட்டு.
அற்புதமாகப் பாடியுள்ளார்.என்னை கவர்ந்து விட்டது.
//ஓம் சிவ ஓம்//
சிவன் ருத்ரதாண்டவம் போல் உள்ளது.ராஜாவும்இசையில் ருத்ரதாண்டவம் .
மீண்டும் நன்றி.நன்றி.நன்றி.
மிக மிக நன்றி...
பாடல்களுக்கு நல்ல அறிமுகம்.
thank you for the songs....!!!
//நான் கடவுள் என்ற பாலாவின் மூன்று வருட தவத்தின் இசை ஆல்பத்தை இளையராஜா, வாலி என்ற இரு தூண்கள் தூக்கி நிறுத்துகின்றார்கள்.
//
Great to read this.
////(பாடல் தலைப்பை right click பண்ணி 'Save Target As' கொடுத்து download பண்ணிக் கொள்ளலாம்)
/////
very sad to read this. :(
//பாடல்களை குத்துப்பாட்டு, காதல் டூயட், ஹீரோ அறிமுகப்பாட்டு என்றெல்லாம் வகைப்படுத்த கன்ஃப்யூஸ் பண்ணத் தேவையில்லை. அந்த கடைசி பாடல் தவிர, அனைத்து பாடல்களும் சோகத்தில் கசக்கி பிழிந்து உயிரை உருக்கும் இசையில் பதிவு செய்யப்பட்டுள்ளது//
வழிமொழிகிறேன்
ராம் சுரேஷ்,
ஒன்று விட்டுப் போய் விட்டது.
//பிச்சைப்பாத்திரம்//
இது புதுசு அல்ல.
இந்த பாடல் ராஜாவின் “ரமண மாலை” யில் உள்ள்து.அவரே எழுதியது.
தோழரே நான் கடவுள் பாடல் வரிகள் வேண்டும் கிடைக்குமா
இராம்,
மிகவும் நன்றி!
பாலா, ரொம்பவே பொறுமையை சோதிக்கிறார் சீக்கிரமா படத்தை வெளியில விடச் சொல்லுங்கப்பா... :-) நேற்றுதான் யுட்யூப்ல அகோரிங்க பத்தி டாகுமெண்டரிஸ் பார்த்தேன், விழி பிதுங்கிடுச்சு. படத்தை பார்க்க தைரியம் வேண்டும் போலவே!
வருகைக்கு நன்றி Raj
//வாலியும் ராஜாவும் சேர்ந்து நம்மை இன்னொரு அலைவரிசைக்கு
இட்டுசென்றுவிட்டர்கள்
உண்மை தான் krpsentthil. வருகைக்கு நன்றி!
வருகைக்கு நன்றி Boston Bala!
//சிந்து பைரவி ராகம்.மணியோசைக் கேட்டு நெஞ்சில் (ப.முடிவதில்லை)பாட்டை பாலிஷ் பண்ணி போட்டிருக்கிறார். ஏன்?
ஆமாம் சார். நானும் அந்த பழைய பாடலைக் கேட்டேன். கண்டிப்பாக இதற்கு ஏதாவது Justice வைத்திருப்பார்கள் பாலாவும், இளையராஜாவும்.
மிக நீண்ட விமர்சன கமெண்டிற்கும், ராகங்கள் பற்றிய எடுத்துரைப்புக்கும் நன்றி கே.ரவிஷங்கர்.
வருகைக்கு நன்றி தருமி!
வருகைக்கு நன்றி சரவணகுமரன்!
வருகைக்கு நன்றி Ananymous!
/பாடல் தலைப்பை right click பண்ணி 'Save Target As' கொடுத்து download பண்ணிக் கொள்ளலாம்)
/////
very sad to read this. :(//
I'm sorry SurveySan :(
வருகைக்கு மிக்க நன்றி SurveySan.
கருத்துரைக்கு நன்றி கிரி.
//தோழரே நான் கடவுள் பாடல் வரிகள் வேண்டும் கிடைக்குமா
வேலையெல்லாம் குறைந்து வெட்டியாக இருந்தால் அதை ஒரு தனிப்பதிவாக இடுகிறேன் Anonymous!
வருகைக்கு நன்றி!
@Thekkittaan|தெகா,
//நேற்றுதான் யுட்யூப்ல அகோரிங்க பத்தி டாகுமெண்டரிஸ் பார்த்தேன், விழி பிதுங்கிடுச்சு. படத்தை பார்க்க தைரியம் வேண்டும் போலவே
க்ளைமேக்ஸ் ல ஆர்யா அகோரிங்க மாதிரி இறந்த பூஜாவ சாப்பிடுறார்னு எங்கேயோ scoop news படிச்சதா நியாபகம்! சரியாகத் தெரியவில்லை. ஆனால் அகோரிகளைப் பற்றியும் பாலா ஏதாவது சொல்லுவார் என்பது என்னுடைய நம்பிக்கை.
வருகைக்கு நன்றி தெகா!
Post a Comment