பத்தே பத்து பந்துகள். என்ன ஒரு விறுவிறுப்பு, பரபரப்பு. தென் ஆப்ரிக்காவின் ஸ்மித் பத்து பந்துகளை மட்டும் ஃபேஸ் பண்ணியிருந்தால், எவ்வளவு அழகாக இருந்திருக்கும்? கடுமையான சுளுக்கு ஏற்பட்டு கையை தூக்க கூட முடியாமல் இருந்த ஸ்மித், அணிக்கு பிரச்சினை என்ற போது போராட்ட குணத்துடன், தளராமல் அவர் களத்தில் இறங்கிய போது ஒட்டு மொத்த சிட்னி மைதான ரசிகர்கள் எழுந்து நின்று கேப்டனுக்கு மரியாதை செலுத்தினார்கள். இவருக்கு மட்டும் காயம் ஏற்படாமல் இருந்து இருந்தால், ரிக்கி பாண்டிங் டிக்ளேர் செய்து இருப்பாரா என்பது சந்தேகமே. முதல் டெஸ்ட் மேட்ச்சில், மோசமான அடி வாங்கிய போதும் அதே அளவு டார்கெட்டுடன் துணிச்சலுடன் டிக்ளேர் செய்ததற்காக பாண்டிங்கை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். ஒருவேளை ஸ்மித் முதல் இன்னிங்ஸில் காயம் காரணமாக பாதியிலேயே ரிட்டையர்டு ஆகி வெளியேறியது கூட காரணமாக இருக்கலாம். பவுச்சருக்கு வழங்கிய எல்.பி.டபிள்யூ அவுட் பச்சை அயோக்கியத்தனம்.
20-20 என்ன, 10-10 மேட்ச் வந்தாலும் டெஸ்ட் போட்டி அதன் அழகை இழக்காது என்பதற்கு தற்போது நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா, இந்தியா-இங்கிலாந்து, ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டிகளே சாட்சி.
***************************
நேற்று விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, அருமையான பொழுதுபோக்கு கொண்டாட்டம். பாடகர் மனோவின் குசும்புத்தனங்கள் பார்வையாளர்களை நன்றாக சிரிக்க வைத்தது என்றால் மிகையில்லை. என்.டி.ராமாராவ் மாதிரி மோனோ ஆக்டிங் பண்ணியது, ரஜினியின் தெலுங்கு படையப்பா வசனத்தை ரஜினியின் டெம்போவிலேயே பேசிக் காட்டியது (ரஜினியின் எல்லா தெலுங்கு படத்திற்கும், இவர்தான் ரஜினிக்கு டப்பிங்காமே!!), எம்.எஸ்.வி போல ஆயிரத்தில் நான் ஒருவன் பாடலை பாடியது என மனிதன் பட்டையைக் கெளப்பினார்.
நல்ல வேளை, ராகினிஸ்ரீயை ஓரங்கட்டி சூப்பர் சிங்கரில் இருந்து துரத்தி விட்டார்கள். அவர் பண்ணிய அலிச்சாட்டியம் இருக்கிறதே, கொடுமையிலும் கொடுமை. இவர் இத்தனை ரவுண்ட் தாண்டி வந்ததே பெரிய விஷயம். இதை எல்லாவற்றையும் விட சின்மயி அழகாக புடவை கட்டிக் கொண்டு நிகழ்ச்சியை ஹோஸ்ட் பண்ணினார். ஹிஹி.. ஹிஹி.. (This is wishing you very all the Best, Godspeed, Shaba khair இதை முழுவதும் சின்மயி குரலில் ஃபாஸ்டாக படித்து பாருங்கள். She is wonderful!)
***********************
செவ்வாய்க்கிழமை 180 ரூபாயில் இருந்த சத்யம் கம்யூட்டர்ஸின் பங்கு விலை நேற்று 11.30 மணிக்கு 38 ரூபாய்க்கு குறைந்து அதல பாதாளத்தில் விழுந்தது. கிராமத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்று சொல்வார்கள். ஆனால் இவர் சுனாமியை போர்வையைக் கொண்டு மறைத்து இருக்கிறார். ஒருவர் இவ்வளவு ஃப்ராடு வேலைகளை (1800 கோடியாம், சிவாஜி படத்தில் வரும் ரஜினியை விட அதிகம்) செய்வது மேனேஜ்மென்ட் கமிட்டி, செபி க்ரூப்ஸ், இன்கம்டாக்ஸ் புண்ணியவான்கள் என யாருக்குமேவா தெரியாது. சரி விடுங்கள், அங்கு வேலை பார்க்கும் 53000 ஊழியர்களின் கதி? இந்தியாவின் வேலைவாய்ப்பு மத்திய மந்திரி கமல்நாத், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி என எல்லாரும் கை விரித்து விட்டனர்.
ஏற்கெனவே சிட்டி க்ரூப், ஜெட் ஏர்வேய்ஸ் என 2008 ல் தள்ளாடி தத்தளித்து வந்துள்ள இந்தியாவுக்கு 2009 ன் ஆரம்பமே பெரிய இடியாக விழுந்துள்ளது.
நல்ல வேளை, போன வாரம் முழுவதும் சத்யமில் இன்வெஸ்ட் பண்ணியிருந்த என் பங்குகளை இந்த திங்கள்கிழமை தான் மாற்றி Suzlon ல் போட்டேன். தலை தப்புனது தம்புரான் புண்ணியம் என்று நினைத்துக் கொண்டேன்.
************************
மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் பாகிஸ்தானை சேர்ந்தவர் தான் என்று சொன்ன பாகிஸ்தான் பாதுகாப்பு துறை ஆலோசகரை, அந்நாட்டு அரசு டிஸ்மிஸ் செய்துள்ளது. பாகிஸ்தானின் இரட்டைவேடம் இன்னும் கொஞ்ச நாளில் உலகத்துக்கே தெரியப் போகிறது. தன் மனைவியையே கொன்ற தீவிரவாததிற்கு பிரதமர் சர்தாரி எண்ணெய் ஊற்றி வளர வைப்பது, கிளையின் நுனியில் உட்கார்ந்து மரத்தை வெட்டுவதற்கு சமம் என்று கூடிய விரைவில் உணர்வார்.
************************
வில்லு பட ட்ரையிலர் எண்டில், விஜய் பாரதியார் கெட்டப்பில் தோன்றுவார். பார்த்தீர்களா? க்ரேட் காமெடி ஆஃப் தி இயர் 2009. அஜீத்தை வைத்து மற்றவர்கள் காமெடி பண்ணுவது போல விஜயை மற்றவர்கள் காமெடி பண்ண அவசியம் இல்லை. அவரே பண்ணிக் கொள்வார். யானை தன் தலையில் தானே மண்ணைக் கொட்டிக் கொள்வது போல. மீண்டும் பப்ளி நயந்தாரா இஸ் பேக். பதிவின் இரண்டாவது ஹிஹி.. ஹிஹி..
நியூஸ் ட்ராஃபிக் ஜாம்
Labels:
ட்ராஃபிக் ஜாம்
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
//20-20 என்ன, 10-10 மேட்ச் வந்தாலும் டெஸ்ட் போட்டி அதன் அழகை இழக்காது என்பதற்கு //
டென்னிசுக்கும் டேபிள் டென்னிசும் ஒன்று என்றால் டெஸ்ட்டும் 20 20ம் ஒன்று என்பதை நாங்களும் ஒத்துக் கொள்வோம்
சின்மயி "GO back to your seat" என்று சொல்வதைக்கேளுங்கள். ஏரிச்சல் வரும்!
//விஜய் பாரதியார் கெட்டப்பில் தோன்றுவார். //
உற்சாகப் படுத்துங்க சார். இவர பார்த்தாலாவது நாலு பேர் பாரதிய நினைச்சா சந்தோஷம்தானே...
நாமதானே விஜய் கெட்டப்பை மாத்த மாட்டேங்கிறார்ன்னு சொல்லுறோம். இனி எவனாவது சொல்லுவான்? :-)
@SUREஷ்
//டென்னிசுக்கும் டேபிள் டென்னிசும் ஒன்று என்றால் டெஸ்ட்டும் 20 20ம் ஒன்று என்பதை நாங்களும் ஒத்துக் கொள்வோம்//
நான் ஒண்ணும் டெஸ்ட் மேட்ச்சும் 2020 யும் ஒன்று என்று சொல்லவில்லையே?
//இவர பார்த்தாலாவது நாலு பேர் பாரதிய நினைச்சா சந்தோஷம்தானே.//
ஹா ஹா.. GOOD JOKE! வருகைக்கு நன்றி SUREஷ்
buginsoup,
//சின்மயி "GO back to your seat" என்று சொல்வதைக்கேளுங்கள். ஏரிச்சல் வரும்!//
அப்படியா? நான் இதை நோட் பண்ணியது இல்லியே!
வருகைக்கு நன்றி buginsoup,! (உங்க பேருக்கு என்ன அர்த்தம்!)
சரவணகுமரன்,
//நாமதானே விஜய் கெட்டப்பை மாத்த மாட்டேங்கிறார்ன்னு சொல்லுறோம். இனி எவனாவது சொல்லுவான்? //
அதான! இனி எவனாவது சொல்லுவான்? :)
வருகைக்கு நன்றி சரவணகுமரன்!
//சின்மயி அழகாக புடவை கட்டிக் கொண்டு நிகழ்ச்சியை ஹோஸ்ட் பண்ணினார். ஹிஹி.. ஹிஹி.. (This is wishing you very all the Best, Godspeed, Shaba khair இதை முழுவதும் சின்மயி குரலில் ஃபாஸ்டாக படித்து பாருங்கள். She is wonderful!)
மீண்டும் பப்ளி நயந்தாரா இஸ் பேக். பதிவின் இரண்டாவது ஹிஹி.. ஹிஹி..//
ஜொள்ளு ஜாஸ்தியா இருக்கே.
Raj,
//ஜொள்ளு ஜாஸ்தியா இருக்கே.
சின்னப் பையனை மன்னிச்சு விட்டுடுங்க சார்..
Post a Comment