ஊரில் இருந்த பத்து நாட்களில், என்னுடன் புளூ டவுசர், வெள்ளை சட்டையுடன் 10ஆவது வரை பள்ளியில் படித்த மூன்று நண்பர்களை சந்தித்தேன். ஒவ்வொன்றும் வித்தியாசமான அனுபவம். முதல் அனுபவம் மட்டும் இங்கே.
திருமங்கலத்தில் ஒரு ஹோட்டலில் என்னுடன் படித்தவன் சர்வராக வேலை பார்க்கிறான். அவனை எப்போதாவது பார்ப்பேன். பெரும்பாலும் என்னை பார்ப்பதை அவன் தவிர்த்து விடுவான். அவனிடம் கடைசியாக பேசிய போது "பன்னிரெண்டாவது பப்ளிக் எக்ஸாமில் ஃபெயிலாகி விட்டேன். அதனால் வீட்டில் ரொம்ப திட்டி, மேலும் படிக்க விடாமல் வேலைக்கு அனுப்பி விட்டார்கள்" என்று சொன்னான். அவனை பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டது. என்னதான் ஹோட்டலில் வேலை பார்த்தாலும் ஆள் குச்சியாக கொஞ்சமும் சதை போடாமல் இருப்பான்.
அந்த சமயத்தில் தான் திருமங்கலத்தில் இடைத்தேர்தல் நடந்து முடிந்து இருந்தது. இந்த சமயம் ஊருக்கு போன போது அவன் டி.வி.எஸ் 50யில் வலம் வந்து கொண்டிருந்தான். வெள்ளை வேட்டி, சட்டை, கழுத்தில் செயின் என ஒரு கெட்டப்பில் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தான். நான் மதுரைக்கு செல்ல பஸ் ஸ்டாண்ட் வந்து வெயிட் பண்ணிக் கொண்டிருந்தேன். நானே அவனைக் கவனிக்கவில்லை. அவன் என்னைக் கவனித்து நேராக வந்து, "டே, கணேஷ், எப்படி இருக்க? எப்ப வந்த? பொங்கலுக்கு வந்தீயா? எத்தன நாள் இருப்ப?" என என்னைப் பேச விடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.
அவன் கெட்டப்பைப் பார்த்து ஒரு நிமிஷம் ஆடிப்போய், "நான் நல்லா இருக்கேன். நீ கலக்குறீயே? என்ன மேட்டர்? வீட்டுல எதுவும் கல்யாணம் பண்ணி வச்சீட்டாங்களா?" என்று கேட்டேன். அதற்கு அவன், "அதெல்லாம் ஒண்ணும் இல்லடா. இன்னும் பெர்மனென்ட்டா ஒரு வேலையும் செட்டாகல. அப்புறம் என்னத்த கல்யாணம் பண்றது?" என்று மறுபடியும் ஃபீல் பண்ணி பேச ஆரம்பித்தான்.
"சரி, சரி. அப்புறம் எப்படி மைனர் மாதிரி ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருக்க?" என்று கேட்டேன். அவன், "ஓ! இதுவா, நான் பாட்டுக்க சிவனேன்னு வேலை பாத்துக்கிட்டு இருந்தேன். ஒருநாள் சாயங்காலம் கட்சிக்காரங்க வந்து, "எங்க கூட வந்து தேர்தல் வேலை பாக்குறியா, ஒரு நாளைக்கி 5 ஆயிரம் ரூபா தர்றோம்" அப்படின்னாங்க. நான் இது வேலைக்கு ஆகாது. எனக்கு ஒண்ணும் பேசத் தெரியாதுன்னு சொல்லியும் பாத்தேன். அவங்க விடல. அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை. பூத் ஸ்லிப் எழுதணும், அத ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுக்கணும். அப்புறம் ஓட்டு கேட்க போகும் போது கூட வந்து நோட்டீஸ் கொடுக்கணும்ன்னு சொன்னாங்க. நானும் சரின்னு சொல்லிட்டேன். அப்ப இருந்து இப்படி தான் இந்த ட்ரெஸ்ல தான் சுத்தணும்னு சொல்லி அதையும் வாங்கிக் கொடுத்துட்டாங்க" என்று சர்வர் டூ மைனர் கதையை சொன்னான்.
"கலக்குற போ, அப்போ அந்த ஹோட்டல் வேலை என்ன ஆச்சி" என்று கேட்டேன். "இந்த எலெக்சன் முடிஞ்சு எல்லாம் ஓய்ஞ்ச பிறகு, கடைக்காரன் கால்ல விழுந்து சேத்துக்க சொல்லணும்" என்றான். "ஓ.கே.டா. அப்புறம் வேற என்ன கவனிச்சாங்க" என்று நானும் விடாமல் தூண்டில் போட்டேன். "தெனமும் பிரியாணியும், நைட்டு சரக்கும் வாங்கித் தர்றாங்க. வீட்டுக்கு பணம் கொடுக்க போகும்போது, ஒரு கட்டு எடுத்து நான் சுருட்டுனாலும் ஒருத்தன் கூட கண்டுக்க மாட்டேங்குறான். எலெக்சன் முடியுற வரைக்கும் நல்லா வாழ்ந்துக்க வேண்டியது தான்" என்று கண்கள் விரிய அவன் சாகசக் கதையை சொன்னான்.
அந்த நேரத்தில் நான் செல்ல வேண்டிய பஸ் வந்ததால், நான் கெளம்பி விட்டேன். பஸ்ஸில் போகும்போது யோசித்துக் கொண்டே சென்றேன், "இவ்வளவு இன்வெஸ்ட் பண்ணி ஜெயிக்கணும்னு நெனைக்கிறவன், நாளைக்கி ஜெயிச்ச பிறகு, மக்களுக்கு நலத்திட்ட உதவி செய்வானா? இல்லை இன்வெஸ்ட் பண்ண காச வட்டியும் முதலுமாக சுருட்டுவானா?".
எந்த தேர்தலிலும் ஓட்டு போடாமல் சைலண்ட்டாக நடப்பதை மட்டும் பார்க்கும் மேல்தட்டு கூட்டம் கூட, "வாங்குன காசுக்கு இதை பண்ணிடுவோம்" என்று மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் ஓட்டு போட வந்தது ஆச்சர்யமாகத் தான் இருந்தது. எது எப்படியோ திருமங்கலத்து மக்களுக்கு மட்டும் இந்த பொங்கல் அட்டகாசமான பொங்கல்.
************
நேற்று இரவு 12 மணி வரை CNN தொலைக்காட்சியில் ஒபாமா பதவியேற்கும் நிகழ்ச்சியை லைவ்வாக பார்த்தேன். அட்டகாசமாக இருந்தது. பதவியேற்கும் போது சீஃப் ஜஸ்டிஸ் சொன்னதை திரும்ப சொல்ல முடியாமல் ஆரம்பத்தில் தடுமாற்றம், முடித்தவுடன் அந்த சீஃப், "Thank you President" என்று சொன்னபோது வெள்ளை மாளிகையே கரவொலியில் குலுங்கியது. புஷ் ஹெலிகாப்டரில் கெளம்பிபோகும் போது அவரை பார்க்க பாவமாக இருந்தது.
இதெல்லாம் முடிந்த பிறகு அவர் பேச்சில் பட்டாசு பறந்தது. அவர் பேச்சின் ஒரு பகுதி, "To those who cling to power through corruption and deceit and the silencing of dissent, know that you are on the wrong side of history" இது நம்மூர் அரசியல்வாதிகளுக்கு பொருந்தும். இதற்கும் மேலே உள்ள திருமங்கலம் மேட்டருக்கும் சம்பந்தம் இல்லை.
"We will begin to responsibly leave Iraq to its people, and forge a hard-earned peace in Afghanistan" இந்த பேச்சில் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறார்.
"for those who seek to advance their aims by inducing terror and slaughtering innocents, we say to you now that our spirit is stronger and cannot be broken; you cannot outlast us, and we will defeat you." இதை சொல்லி முடிக்கும்போது 20 லட்சம் மக்களும் ஆக்ரோஷமாக கைதட்டினார்கள்.
இந்த பேச்சையெல்லாம் வைத்து பார்க்கும்போது அவர் புஷ்ஷில் இருந்து மிகவும் வேறுபட்டு தெரிகிறார். அவருடைய ஆட்சியை பொறுத்திருந்து பார்க்கலாம். அவர் மற்ற அமெரிக்க அதிபர்களை விட தோல் நிறத்தில் மட்டும் வித்தியாசமனவரா இல்லை செயலிலுமா என்று.
***********
டெண்டுல்கரைப் பற்றி உயர்வாக ஷேவாக் மிகவும் அடக்கமாக சொல்லியிருப்பது பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டுக்காக வாழ்வில் 20 வருடங்களை ஒதுக்கி, இன்னும் தொடர்ந்தும் ஆடிக் கொண்டிருப்பவரை ஐ.சி.சி எப்படி லிஸ்டில் விட்டது என்று புரியவே இல்லை.
டெண்டுல்கரைப் பற்றி கிரவுண்டில் அக்தரிடம் சொன்னது பற்றி ஷேவாக் சொன்னது, simply awesome!
(டெண்டுல்கர் Non-Striker endல் இருக்கிறார்.ஷேவாக்கிடம் பேட்டிங் பண்ணும்போது)
அக்தர்: உனக்கு தைரியம் இருந்தால் இந்த பௌன்ஸரை அடித்துப் பாரு! உன்னால் THIRD MAN சைடில் மட்டும் தான் அடிக்க முடியும்
ஷேவாக்: உன்னால் முடிந்தால் இதை Non-striker endல் இருக்கும் ஆளிடம் சொல்லி பார்!
என்றாராம். ஹாஹா!! ஹாஹா!! தொடர்புடைய லிங்க்.
**************
சர்வர் டூ மைனர், ஒபாமா, டெண்டுல்கர்
Labels:
அரசியல்,
அனுபவம்,
கிரிக்கெட்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
me the firstuu?
informative post
senthil, bahrain
Senthil said...
me the firstuu?
informative post//
me the firstuu? ன்னு போடுற அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்லீங்க. நீங்க மாத்தி வந்துட்டீங்க.
Anyhow thanks for your compliment!
The Sehwag one was really good. All the people of India Damn care about ICC. Tendulkar is always No. in each and every single of the cricket fans around the world.
Remember, one single organization cannot write off such a big player.
Thanks for the post.
Vijayasarathy R
Note: Visit my blog and post your comments too :-)
http://marinabeach.wordpress.com
நல்ல Collective inforamation.
ஆனா நேத்து ஒபாமா பதவி ஏற்கும் போது மக்கள் எல்லாம் பயங்கர உணர்ச்சிமயமாக காணப்ட்டர்கள்.. அவர்களூடைய உணர்ச்சியின் பிரதிபலிப்பில் தான் ஒரு அமெரிக்கன் என்று பறை சாற்றுவது போல இருந்தது..
இந்த Superiority complex தான் அவங்களக்கு எங்க இருந்து வருதனு தெரியுல..
@Sarathguru Vijayananda,
Thanks for visiting and your comment.
//Visit my blog and post your comments too :-)
http://marinabeach.wordpress.com
Will do :)
@vinoth gowtham,
//இந்த Superiority complex தான் அவங்களக்கு எங்க இருந்து வருதனு தெரியுல..
சேம் ஃபீலிங் ஃபார் மீ Also :(
//
"டே, கணேஷ், எப்படி இருக்க? எப்ப வந்த? பொங்கலுக்கு வந்தீயா? எத்தன நாள் இருப்ப?"
//
உங்க பேரு ராம்சுரேஷ் இல்ல?
//ஆளவந்தான் said...
உங்க பேரு ராம்சுரேஷ் இல்ல?
அடடா, கவனிக்கவே இல்லீயே! :((
என்னோட உண்மையான பெயரே கணேஷ் தாங்க. Blogging காக என்னோட ஃப்ரெண்ட் பேருல எழுதிக்கிட்டு இருக்கேன்.
Post a Comment