வில்லுக்கு போக்கிரி டெம்ப்ளேட் மாதிரி, படிக்காதவனுக்கு பொல்லாதவன் டெம்ப்ளேட். வத வதவென்று இருக்கும் வில்லன்களை சுள்ளான் மாதிரி பார்ப்பவர்களை சுளுக்கெடுக்காமல், அவர்களுக்குள் அடிக்கவிட்டுக் கொண்டு, கடைசியில் ஒரே ஒருத்தனை மட்டும் க்ளைமேக்ஸில் நையப்புடைக்கும் கதை தான் படிக்காதவன்.
தனுஷின் பாடி லாங்குவேஜ் சான்ஸே இல்லை. அருமை. எச்சூஸ்மீ என்று ஹீரோயினுடன் காதல் செய்யும்போதும், அருக்காணி மகள் திருக்காணியை பொண்ணு பார்க்கப் போகும்போதும், கனவில் ஃபைட் பண்ணும்போதும் எக்ஸ்ப்ரஷனில் பின்னுகிறார். தமன்னா, பௌர்ணமி நிலவின் கலரில் அவருடைய ஸ்கின் மினுமினுக்கிறது. இவர் ஒல்லியா, தனுஷ் ஒல்லியா என பட்டிமன்றமே நடத்தலாம். மற்றபடி இவருக்கு படத்தில் உப்புக்கு சப்பாணி கதாபாத்திரம். அவர்களின் காதல் எபிசோடை அல்ரெடி நாம் சிங்காரவேலனில் பார்த்து விட்டோம். :(
தனுஷின் அப்பாவாக பிரதாப் போத்தன். நம்மூர் நார்த் இண்டியன் கலெக்டர் மாதிரி திக்கி திக்கி பேசுகிறார். இவரைத் தவிர அவருடைய பெரிய குடும்பம், சன் டி.வி சீரியல் ஆர்ட்டிஸ்ட்களால் நிரம்பி வழிகிறது. விவேக்கின் காமெடி அட்டகாசம். ஆனால் இது வடிவேலு நடித்திருந்தால் இன்னொரு வின்னர் மாதிரி இருந்து இருக்கும். அந்த எபிசோடின் மேனரிசங்கள் வடிவேலுவுக்கு அட்சரம் பிசகாமல் பொருந்தி இருக்கும். என்ன அரசியலோ??
நரிக்குறவர்கள் குருவி சுடுவதற்கு பயன்படுத்தும் துப்பாக்கி போல ரெண்டு வில்லன் க்ரூப், சர்வசாதாரணமாக பீச்சில் பலூன் சுடுவது போல சிட்டி சென்டரில் சுட்டுக் கொல்வது கெட்ட காமெடி. அதிலும் வில்லன் சுமன் ஹெலிகாப்டரில் வந்து ஷாயாஜியின் க்ரூப் வண்டிகளை வெடித்து பறக்க விடுவது வீடியோ கேம் பார்ப்பது போல் உள்ளது.
படத்தின் அட்டு பாடல்களையும், சன் டி.வியின் அட்வர்டைசிங் மூலம் ஹிட்டாக்கி விடுவார்கள். கொடுமை. அடியாட்களை காற்றில் பறக்கவிடும்போது, போச்சுடா சுள்ளான் திரும்ப வந்துட்டான் என்று நினைக்கும்போது அது கனவு என்று பில்டப் பண்ணுவது ஹியூமர் போனஸ்.
தனுஷை தான் ஃபாலோ பண்ணுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, அந்த க்ரூப் தமன்னாவை போட்டு தள்ள வந்திருக்கிறார்கள் என்று தெரியும்போது உள்ள ட்விஸ்ட், டைரக்டர் டச். அதேபோல் ரயில்வே ஸ்டேஷனில் அடிக்க வரும் க்ரூப், சுமனுடையது அல்ல அதுல் குல்கர்னியோட க்ரூப் என்று தெரியும்போது, திரைக்கதை ரெக்கைகட்டி பறக்கிறது. பட், க்ளைமேக்ஸ் பொல்லாதவன், ரன், சண்டக்கோழி ஜெராக்ஸ்.
முதல் பாதியில் இருந்த வேகத்தை, இரண்டாவது பாதியில் மெயின்டெயின் கூட பண்ணாமல் விவேக்கையும், பாடல்களையும் வைத்து ஓட்டி, கடைசி 20 நிமிடங்களை மட்டும் நம்பி இருப்பது திரைக்கதையின் பெரிய ஓட்டை.
படிக்காதவன் - கொங்குரா சட்னி தடவப்பட்ட பொல்லாதவன்.
********
படிக்காதவன் - விமர்சனம்
Labels:
சினிமா,
திரை விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
இதையும் பாத்தாச்சா? நல்ல விமர்சனம். படம் ஒருதடவை பாக்கலாம்னு சொல்றீங்க.. சரியா?
அப்பிடிண்ண கட்டாயம் படத்தை பாக்கச்சொல்லுறிங்கள்
எந்தவித ரிசல்டும் கேட்டு விட்டு போகாமல், தமிழ் படங்கள் பார்க்கும் உங்களை எப்படி பாராட்டுவது என்பதே தெரியவில்லை!
பார்த்துவிட்டு எச்சரிப்பது போல, விமர்சனமும் எழுதுகிறீர்கள்.
அதற்காக நன்றி.
@வெண்பூ
//இதையும் பாத்தாச்சா? நல்ல விமர்சனம். படம் ஒருதடவை பாக்கலாம்னு சொல்றீங்க.. சரியா?//
ஒரு வார லீவுல இது தான் வேலை வெண்பூ. ஆம்., ஒரு தடவை பார்க்கலாம்.
@kajan's
//அப்பிடிண்ண கட்டாயம் படத்தை பாக்கச்சொல்லுறிங்கள்
பார்க்கலாம்ங்க.. ரொம்ப மொக்கையில்ல..
@நொந்தகுமரன்,
//எந்தவித ரிசல்டும் கேட்டு விட்டு போகாமல், தமிழ் படங்கள் பார்க்கும் உங்களை எப்படி பாராட்டுவது என்பதே தெரியவில்லை!//
நான் பொதுவா எந்த படமும் அப்படிதாங்க பார்ப்பேன். படம் நல்லா இருந்தா அந்த த்ரில்லுக்கு அளவே இல்ல. ஆனா மொக்கையா இருந்தா படம் எடுத்தவங்கள அசிங்கம் அசிங்கமா மனசுக்குள்ள திட்டிட்டு அடுத்த வேலைய பாக்க ஆரம்பிச்சிடுவேன்.
//பார்த்துவிட்டு எச்சரிப்பது போல, விமர்சனமும் எழுதுகிறீர்கள்.
நல்லா இருந்தா பப்ளிசிட்டி பண்றதும், மோசமா இருந்தா என் ஃப்ரெண்ட்ஸை எச்சரிப்பதும் என் வழக்கம். இப்ப ப்ளாக்கும் இருக்குறதுனால தமிழ்கூறும் நல்லுலகிற்கு சொல்ல முடிகிறது.
வருகை தந்தவர்களுக்கு நன்றி!!!
comment arumai :)
@சுபாஷினி,
//comment arumai :)
Thanks for visiting and comment.
vivek charecterlil first vadivelu than nadithar pinnar directorukkum vadivelukkum sandayal avar nadikkavilla atha padhippu than vivekkirku
//shabi said...
vivek charecterlil first vadivelu than nadithar pinnar directorukkum vadivelukkum sandayal avar nadikkavilla atha padhippu than vivekkirku.
Yes. Naanum kelvippatten. Vadivelu nadichu irundha nalla irundhu irukkum. :(
Post a Comment