வினா 100 கனாவும் 100 விடை சொல்லடி IV

காட்சி 1 
பெரியவருக்கு 54 வயது. முதன் முறையாக மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்து மதுரை பெரிய‌ ஹாஸ்பிட்டலில் நேற்றிரவு அட்மிட் செய்யப்பட்டார். பெரியவரின் மனைவி சென்னையில் இருக்கும் தனது மகளுக்கு ஃபோன் போட்டு உடனே வரச்சொல்லியிருந்தார்.  

மறுநாள் காலை தாயும் மகளும், சீஃப் டாக்டரைப் பார்த்தார்கள். மகள், "சார், அப்பாவுக்கு இப்ப எப்படி இருக்கு?" என்றாள். அதற்கு டாக்டர், "ஏற்கெனவே அவருக்கு B.P, சுகர் எல்லாம் இருக்கு. இப்ப அட்டாக் வேற. மைனர் தான். இனிமே அவருக்கு அதிர்ச்சி தர்ற மாதிரி எந்த விஷயத்தையும் சொல்லாதீங்க. அவர ஒரு குழந்தை மாதிரி ட்ரீட் பண்ண வேண்டிய டைம் இது." என்றார்.  

இருவரும் ரொம்ப அமைதியாக கேட்டுக் கொண்டு பெரியவரின் வார்டுக்கு வந்து அவரை பார்த்தனர். பெரியவர், "சீக்கிரம் குட்டிக்கு கல்யாணம் பண்ணி முடிச்சிட்டேனா, எனக்கு எந்த கவலையும் இல்ல. நானும் நாலு அஞ்சு இடம் பாத்திருக்கேன். ஒண்ணு முடியுற மாதிரி இருக்கு. குட்டி, உனக்கு எதுவும் ஆட்சேபணை இல்லையே? அப்பா உனக்கு என்ன பண்ணாலும் நல்லது தான் பண்ணுவேன். சரியா?" என்றார். அதற்கு மகள், "எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லப்பா. நீங்க பாத்து முடிவு பண்ணிட்டா போதும்" என்றாள் கண்களில் முட்டும் நீர்த்துளியை மறைத்துக் கொண்டு.

*********************************

காட்சி 2 
சாயந்திரம் 6 மணி. வீட்டிற்கு வெளியே சாய்வு நாற்காலியில் பெரியவர் கம்பராமாயணம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது 25 வயதுள்ள இளைஞன் கேட்டைத் திறந்து உள்ளே வந்தான். நேராக பெரியவரிடம் போய், "சார், நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான் விஷயம் பேசுறதுக்காக வந்துருக்கேன்" என்றான். பெரியவர் ஆழமாக ஒரு பார்வை பார்த்து, "சரி, சொல்லுங்க. எதைப் பத்தி பேசணும்" என்றார். அவன், "சார், நான் ஸ்ட்ரெய்ட்டாவே மேட்டருக்கு வர்றேன். நான் உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஆசைப்படுறேன். நான் சென்னையில் ஒரு கார்ப்பரேட் ல மாசம் 25,000 ருபாய் சம்பளத்துல வேல பாக்குறேன். இன்னும் உங்க பொண்ணுகிட்ட கூட இதப்பத்தி பேசவே இல்ல. நேரா உங்ககிட்ட பேசலாம்னு வந்திருக்கேன்" என்று தேங்காயை உடைச்சதுபோல நச்சுனு சொல்லிவிட்டான்.  

பெரியவர் சில நிமிட யோசனைக்குப் பிறகு, "தம்பி, உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சுருக்கு. நானும் என் பொண்ணுக்கு வரன் தேடிக்கிட்டு இருக்கேன். என் பொண்ண அமெரிக்காவுல வேல பாக்குற பையனுக்கு கட்டிக் கொடுக்கணும் எனக்கு ஆசை. அதே மாதிரி ஒரு வரனும் வந்திருக்கு. எனக்கு நீங்க சொன்ன விஷயம் சரியாப்படும்னு தோணல. சாரி. நீங்க போகலாம்" என்று இவரும் சுற்றி வளைக்காமல் தெளிவாக சொல்லிவிட்டார். அவனுக்கு மேற்கொண்டு என்ன பேசணும் என்று தெரியவில்லை. மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டான்.

**********************************

காட்சி 3 
இரவு 10.30 மணி இருக்கும். நியூயார்க் DownTown ல் உள்ள ஃபேமஸான பாரில் வினோத், மூணு ரவுண்ட் ப்யூர் டகீலாவும், ரெண்டு ரவுண்ட் மார்கரீட்டாவும் அடித்துவிட்டு காட்டமான போதையுடன் கண்கள் சொருக‌ புலம்ப ஆரம்பித்தான். "என் வாழ்க்கைய நான் நெனச்ச மாதிரி அமைக்க முடியாம இவ்வளவு சம்பாரிச்சு, அமெரிக்காவுல மூணு வருஷம் இருந்து என்ன புண்ணியம். அவ என்கூட இல்லயே. அவ எப்படியும் எனக்கு கெடைப்பான்னு நான் நெனச்சதெல்லாம் என்னோட பைத்தியக்காரத்தனம். அவ அப்பன் மட்டும் கையில கெடச்சான். மவனே, தொலஞ்சான். இன்னிக்கோட எல்லாம் முடிஞ்சது. நாளைக்கு இந்தியாவுக்கு ஃப்ளைட். அடுத்த வாரம் கல்யாணம். எல்லாம் முடிஞ்சி போச்சி. காதலால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் எல்லாம் கடவுளின் செல்லக் குழந்தைகள். காதல் கைகூடாதவர்கள் எல்லாம் தேவதாஸின் கொ.ப.செக்கள்." என்று காட்டுத்தன‌மாக புலம்ப ஆரம்பித்து முன்னால் இருக்கும் பெஞ்சில் தலை கவிழ்ந்து கிடந்தான்.  

15 நிமிடத்திற்கு பிறகு அவனுக்கு செல்போனில் கால் வந்தவுடன் தலையை நிமிர்த்தி, பேரரிடம், "One more pomegranate Margarita please " என்று சொல்லிவிட்டு செல்போனை எடுத்து "ஹலோ" என்றான்.

*******************************

காட்சி 4  
சாயங்காலம் 5.30 மணி. கீர்த்தியும் அவள் நெடு நாள் தோழனும் பேசுவதற்கு எதுவும் இல்லாமல் பீச்சை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கீர்த்தி, தான் பேச்சை ஆரம்பித்தாள் "நீ இப்படி பண்ணுவே என்று எதிர்பார்க்கவில்லை. நான் உன்கூட நல்ல ஃப்ரெண்ட் என்கிற முறையில் தான் பழகினேன். நீ ப்ரோப்பஸ் பண்ணவுடன் உன்னை பிடிக்கவில்லையென்று உன் முகத்தைப் பார்த்து சொல்லி உன்னை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. உனக்கே தெரியும் எங்க ஃபேமில் பேக்ரவுண்ட் பத்தி. அப்பா, ரிட்டையர்டு ஹெச்.எம். சுகர், B.P வேற‌. எங்க அப்பாவை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது. எனக்காக அவர் அமெரிக்காவில் இருந்தெல்லாம் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார். நாம எப்பவுமே நல்ல ஃப்ரெண்ட்ஸாவே இருப்போம். சரியா" என்றாள்.  

அதற்கு அவன், "சரி, ஓ.கே. நானும் இன்னும் ரெண்டு வருஷத்துக்குள்ள‌ அமெரிக்கா போயிடுவேன். இத வச்சு உங்க அப்பாகிட்ட பேசுனா என்ன?" என்றான். "அதெல்லாம் முடியாதுடா. எங்க அப்பாகிட்ட கல்யாண விஷயத்துக்காக நான் argue பண்றத நான் விரும்பல." என்று சோகத்துடன் சொல்லி முடிக்க, அவள் வீட்டில் இருந்து அம்மா கால் பண்ணி பேசினார்.  

ஃபோனை வைத்து விட்டு இடிந்து போனாள். "அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். நான் உடனே மதுரை போகணும்." என்று சொல்லி முடித்துவிட்டு ஓடினாள்.

*********************************

காட்சி 5  
காலை 9 மணி. வீட்டிலிருந்து எல்லாரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நிச்சயதார்த்ததிற்கு வந்துவிட்டார்கள். இரு வீட்டாரும் தாம்பூலம் மாற்றிக் கொண்டார்கள். கூட்டத்தில் ஒருவர், "என்னப்பா, அமெரிக்காவுல இருக்குற தம்பி எப்போ வரும்? நிச்சயதார்த்தமும் முடிஞ்சிருச்சி" என்றார். அதற்கு கல்யாண வீட்டாரிடம் இருந்து, "தம்பிக்கு இன்னைக்கு நைட் ஃப்ளைட். நாளைக்கு சாயந்தரம் வந்துருவாப்ப்புல" என்று பதில் வந்தது. 

மனைவியை அருகில் அழைத்து, "வினோத்துக்கு கால் பண்ணு. அவன் எப்போ கெளம்புறான். எல்லாம் பேக் பண்ணிட்டானா? இங்க இவிங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியல" என்றார். "வினோத்து, நான் அப்பா பேசுறேண்டா. எப்படி இருக்கா. என்ன ஆச்சு? கொரலு ஒரு மாதிரி இருக்கு? ரொம்ப பனியா?" என்றார் அப்பா. "அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா. ரூம்ல சிக்னல் இல்ல. எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சா" என்றான் வினோத்.  

"அதெல்லாம் நல்லா முடிஞ்சிருச்சுப்பா. அப்படியே வரும்போது கல்யாண பொண்ணுக்கு எதுனாச்சும் தங்கத்துல நல்ல பொருளா பாத்து வாங்கிட்டு வாப்பா" என்றார் அப்பா. "சரிப்பா. கண்டிப்பா வாங்கிட்டு வரேன். நாளைக்கு ஃப்ளைட்ல ஏறுறதுக்கு முன்னாடி நான் கால் பண்றேன். வச்சிடுறேன்" என்று சொல்லி போனை வைத்தான் வினோத்.

*****************************************

காட்சி 6 (க்ளைமேக்ஸ்)

திருமண மண்டபம். "கெட்டி மேளம், கெட்டி மேளம்" என்று ஐயர் முழங்க "டும் டும் டும்" என்று மேள சப்தத்துடன் மாப்பிள்ளை தாலி கட்டினான். "மெட்டி போடணும், பொண்ணோட அண்ணன் இல்ல தம்பிய வர சொல்லுங்கோ" என்றார் ஐயர். அம்மாவிடம் மெட்டியை வாங்கி கீர்த்தியின் காதல் கணவனின் காலில் மெட்டி அணிவித்தான் வினோத்.  

சொந்த பந்தங்களிடம் பூரிப்புடன் "பாப்பாவுக்கு முடிச்சாச்சு. அடுத்த முகூர்த்ததுலயே பையனுக்கும் கல்யாணம். எல்லாரும் கண்டிப்பா வந்துடனும்" என்று அன்பு கட்டளை போட்டுக் கொண்டிருந்தார் பெரியவர்.

*****************************************

8 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

என்னமோ நினைச்சோம்..........

கணேஷ் said...

//என்னமோ நினைச்சோம்...

என்ன நெனச்சீங்கன்னு சொல்லிட்டு போங்க SUREஷ்.

Raj said...

கொஞ்சம் குழப்புது ராம்.....!

கணேஷ் said...

//கொஞ்சம் குழப்புது ராம்.....!

உங்களுக்கு என்னங்க குழப்புது Raj?

காட்சி 2-ல், பெரியவருடன் வந்து சம்பந்தம் பேசுபவர் காட்சி 4-ல் கீர்த்தியுடன் பீச்சில் அமர்ந்து பேசுபவர்.

மற்றபடி அமெரிக்க இளைஞன் வினோத் பார்ட் சும்மா கொஞ்சம் தேவையில்லாத டென்ஷன் ஏற்படுத்த.

Raj said...

யோவ்..எழுதுற உங்களுக்கு விளங்கினா போதாது...படிக்கற எங்களுக்கும் விளங்கணும்...ஆமா கீர்த்திய கண்ணாலம் கட்ன காதலன் யாரு.....வினோத் பார்ல பொலம்பிட்ருந்தானே ஒரு பொண்ண பத்தி அது இன்ன மேட்டரு.....நீங்க கொஞ்சம் புதுசா ஏதோ ட்ரை பண்ணிருக்கீங்கன்னு புரியுது அது இன்னும் கொஞ்சம் தெளிவா இருந்திருக்கலாமேன்னுதான்....இல்ல நீங்க வித்தியாசமா ட்ரை பண்ணிருக்கறதை புரிஞ்சிக்கற லெவலுக்கு நாங்க வளரலையோ என்னமோ.

கணேஷ் said...

//யோவ்..எழுதுற உங்களுக்கு விளங்கினா போதாது...படிக்கற எங்களுக்கும் விளங்கணும்...ஆமா கீர்த்திய கண்ணாலம் கட்ன காதலன் யாரு.....வினோத் பார்ல பொலம்பிட்ருந்தானே ஒரு பொண்ண பத்தி அது இன்ன மேட்டரு.....நீங்க கொஞ்சம் புதுசா ஏதோ ட்ரை பண்ணிருக்கீங்கன்னு புரியுது அது இன்னும் கொஞ்சம் தெளிவா இருந்திருக்கலாமேன்னுதான்....இல்ல நீங்க வித்தியாசமா ட்ரை பண்ணிருக்கறதை புரிஞ்சிக்கற லெவலுக்கு நாங்க வளரலையோ என்னமோ.//

Raj, ஏன் நீங்க இவ்வளோ டென்ஷன் ஆகுறீங்க..

கீர்த்தியிடம் ப்ரோப்பஸ் பண்ணி விட்டு, அவளுடன் பீச்சில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தானே, அவன் தான் மாப்பிள்ளை. கீர்த்திக்கும் அவனை பிடித்திருந்தது. ஆனாலும் அவள் அப்பாவுக்காக தனது முடிவை மாற்றிக் கொண்டு அவனிடம் பீச்சில் பேசினாள். அதனோட தொடர்ச்சி தான் காட்சி 2. கீர்த்தியிடம் ப்ரோப்பஸ் பண்ணியவன் அவள் தந்தையிடம் காட்சி 2 ல் நேரில் சந்தித்து சம்பந்தம் பேசியிருக்கிறான். பெரியவரும் கொஞ்சம் லேட்டாக அதற்கு ஒத்துக் கொண்டு க்ளைமேக்ஸில் அவர்கள் இருவருக்கும் கல்யாணம் நடந்தேறியது.

கீர்த்தியும் வினோத்தும் பெரியவரின் குழந்தைகள். வினோத்துக்கு தனது தங்கை கீர்த்தி கல்யாணம் முடிந்த அடுந்த முகூர்த்ததில் கல்யாணம். அதனால் அவன் காதல் கைகூடாததை நினைத்து பாரில் உட்கார்ந்து தண்ணிய போட்டு புலம்பிக் கொண்டிருந்தான். மற்றபடி அவனுக்கு கீர்த்தியின் காதல், கல்யாணம் சம்பந்தம் இல்லை.

என் பதிவை இவ்வளோ சீரியஸாக படித்ததற்கு மிக்க நன்றி.

Raj said...

அய்ய...டென்ஷன்லாம் இல்லபா...கத பிரியலியேன்னு கேட்டேன்...அதான் விளக்கம் சொல்லிகினல்ல வுடு.

கணேஷ் said...

//அய்ய...டென்ஷன்லாம் இல்லபா...கத பிரியலியேன்னு கேட்டேன்...அதான் விளக்கம் சொல்லிகினல்ல வுடு//

வருகைக்கும் புரிந்துணர்வோடு தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி Raj!

Related Posts with Thumbnails