பதிவர் சந்திப்பு, SLUMDOG MILLIONAIRE பிடித்த காட்சிகள்


கடைசியில் நானும் SLUMDOG MILLIONAIRE பார்த்துவிட்டேன். கதையை அனைவரும் கொத்துபரோட்டா போட்டு விட்டதால், இப்பதிவில் எனக்கு பிடித்த காட்சிகள் மட்டும். ஏர்போர்ட் ரன்வேயில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்களை போலீஸ்காரர்கள் துரத்தும் அந்த காட்சியிலேயே படத்தின் எதிர்பார்ப்பைக் கூட்டிவிட்டார்கள். அப்போது வரும் பாடலின் பீட்ஸ் மற்றும் ஏ.ஆர். ரகுமான் வாய்ஸ், சத்யம் தியேட்டரின் சவுண்ட் சிஸ்டத்துடன் கேட்கும்போது அட்டகாசம். அமிதாப் பச்சனை பார்க்க அந்த சிறுவன் எடுக்கும் முயற்சிகளைப் பார்த்து பின் சீட்டில் இருந்த ஜீன்ஸ் போட்ட பாட்டி "உவ்வே" என்று வாமிட் எடுப்பதுபோல் செய்து கண்களை கையால் மூடிக் கொண்டார்.

ஹோட்டல் தண்ணீரை, வாட்டர்கேனில் ஊற்றி அதை கம் போட்டு ஒட்டி புது AQUAFINA பாட்டிலாக மாற்றுவது என போகிற போக்கில் பல உண்மைகளை பொளீர் என்று அறைகிறார்கள். அடுத்த தடவை AQUAFINA வாட்டர் பாட்டில் வாங்கும்போது கொஞ்சம் யோசிக்கணும். சேரியில் வாழும் சிறுவர்கள் கைக்கு துப்பாக்கி, ஒருவனை சுட்டுத் தள்ளும் சூழல் என அவர்கள் ரவுடிகளாக மாறும் transition ஐ துல்லியமாக பதிந்து இருக்கிறார்கள்.

தாஜ்மகாலில் கைடாக இருக்கும்போது, டூரிஸ்ட் கேட்கும் கேள்விக்கு அள்ளி விடுவதும், அதை அவர்கள் மறுத்து டவுட் கேட்கும்போது, "அது எல்லாம் பொய். பொழுதுபோகாமல் வீட்டில் இருக்கும் சோம்பேறிகள் எழுதியது" என்று சொல்லும்போது க்ரேட் அப்ளாஸ். ட்ரெயினில் சப்பாத்தி திருடுவது, சிறுவயது லதிகா முன்னால் பாடிக் கொண்டே டான்ஸ் ஆடுவது, சலீம் டவுசரில் மிளகாயை போட்டு ரசிக்கும் காட்சி, அந்த கும்பல் முன்னால், "நான் ஒரு புரோஃபஷனல், 50 ரூபா கொடு" என கேட்கும் இடம் என எனக்கு பிடித்த காட்சிகள் லிஸ்ட் கொஞ்சம் நீளம்.

இறுதியில் 2 கோடிக்கான, "What is the name of third Musketeer?" என்ற கேள்விக்கு, நிஜ வாழ்க்கையில் ஜமால் தேடிக் கொண்டிருக்கும் "third Musketeer"ஆன லதிகாவே போனில் பேசுவது கவிதையான காட்சி. கடைசியில் ரெயில்வே ஸ்டேஷனில் பாட்டுடன், எண்ட் கார்டு முடியும் வரையிலும் யாரும் எழுந்திருக்கவே இல்லை. ஏ.ஆர்.ரகுமான் பெயர் போடும்போது சரியான கைதட்டல்.

***********************

ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் 6 மணிக்கு ஒரு வழியாக கிழக்கு பதிப்பகத்தை தேடிக் கண்டுபிடித்து பதிவர் சந்திப்புக்கு சென்று விட்டேன். கீழேயே அதிஷா, கேபிள் சங்கர், விஜய் ஆனந்த் இருந்தனர். அதிஷா, ஒரு தம் கொடுத்து வரவேற்றார். அதிஷா, ரொம்ப ஃப்ரெண்ட்லியாக பழகினார். நடுநடுவில் என் பதிவை தொடர்ந்து படிப்பதாக சொல்லி காமெடி பண்ணிக் கொண்டு இருந்தார். சினிமாவில் நடித்தவர், டிஸ்டிரிப்யூட்டராக இருந்தவர் என பலமுகங்கள் இருந்தாலும் கேபிள் சங்கர் மிகவும் அடக்கமாக, என்னை மாதிரி புதிதாய் வந்தவனிடமும் நன்றாக பேசினார்.

மேலே போனால் எல்லாரும் ரொம்ப சீரியஸாக நாடகம், சுனாமி, சங்கமம், இசைக் கச்சேரி, புத்தகக் கண்காட்சி நோக்கியா‍-சைனா மொபைல் என பேசிக் கொண்டு இருந்தனர். எல்லாத்தையும், அமைதியாக‌ கேட்டுக் கொண்டு இருந்தேன். இஸ்ரேல் பாலஸ்தீனம் பற்றி பேசிக் கொண்டு இருக்கும்போது, பாதி பேர் வெளியே போய்விட்டனர். யாரோ வெளியில் வந்துவிட்டார்; அவரை வரவேற்க தான் எல்லாரும் சென்று இருக்கிறார்கள் என்ற‌ என் நினைப்புக்கு இடி விழுந்தது. அந்த இஸ்ரேல் பேச்சின் சூடு தாங்காமல் தான் எல்லாரும் சென்று விட்டார்கள் என்பது பின்னர் தான் தெரிய வந்தது. ஏம்ப்பா, இந்த மாதிரி ஏதாவது ஒண்ணுன்னா எனக்கு சிக்னல் கொடுக்க மாட்டீங்களா?? புதுசா வந்தவன இப்படி நடுவுல மாட்டிவிட்டு போயிட்டீங்களே? அப்படியே எஸ்ஸாகிவிடலாம் என்று நினைத்த என்னை டீக்கடைக்கு கூப்பிட்ட முரளிகண்ணன் அவர்களுக்கு நன்றி.

பிரபல பதிவர்களான முரளிகண்ணன், நர்சிம், வெண்பூ, கேபிள் சங்கர், டோண்டு சார், பத்ரி சார், லக்கிலுக், அதிஷா, கோவி கண்ணன் என பலரை சந்தித்தில் மிகுந்த சந்தோஷம். நர்சிம், பாதியிலே போய்விட்டதால் அவரிடம் பேச முடியாதது வருத்தமே. லக்கிலுக்கிடம் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேச வாய்ப்பு கிடைத்ததது மகிழ்ச்சி. வெண்பூ ரொம்ப ஃப்ரெண்ட்லியாக பழகினார்.

கடைசியில் அந்த தேநீர் சந்திப்பு மட்டும் இல்லையென்றால் நான் பதிவர் சந்திப்பு என்றால் டெர்ரர் என்று ஃபீல் பண்ண வேண்டி இருந்திருக்கும். மொத்தத்தில் இந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டது, நல்ல அனுபவம்.

*******************

10 comments:

Athisha said...

:-)

நம்புங்க பாஸ் உங்க பதிவ நானும் படிக்கறேன்

மீத பர்ஸ்ட்டு

Anbu said...

அதிஷா அண்ணா!! பின்னூட்டம் போட்டிருக்கீங்க!!!நல்ல பதிவு

முரளிகண்ணன் said...

nice coverage.

good one

கணேஷ் said...

//அதிஷா said...
:-)
நம்புங்க பாஸ் உங்க பதிவ நானும் படிக்கறேன்
மீத பர்ஸ்ட்டு//

பாஸ், ஆளே இல்லாத கடைக்கு நான் டீ ஆத்திக்கிட்டு இருக்கேன். இதுல‌ மீத பர்ஸ்ட்டு போட்டு ஏன் என்ன வச்சி காமெடி பண்றீங்க.

//Anbu said...
அதிஷா அண்ணா!! பின்னூட்டம் போட்டிருக்கீங்க!!!நல்ல பதிவு//

அதிஷா பின்னூட்டம் போட்டு இருக்கிறதுனால நல்ல பதிவுன்னு சொல்றீங்களா.. வேணாம் நான் அழுதுடுவேன்.

//முரளிகண்ணன் said...
nice coverage.
good ஒனெ//

Thanks முரளிகண்ணன்.

வருகைபுரிந்த மூவருக்கும் நன்றி!

Karthik said...

Nice.
:))

narsim said...

நம்மூராயாய்யா நிய்யி.. பேசுவோம்

கணேஷ் said...

//narsim said...
நம்மூராயாய்யா நிய்யி.. பேசுவோம்//

நீங்களும் மதுரை தானா? ரொம்ப சந்தோஷம். உங்களுடன் பேசுவதற்கு ஆவலாய் உள்ளேன்.

கணேஷ் said...

//Karthik said...
Nice.
:))//

Thanks Karthik. :)

எம்.எம்.அப்துல்லா said...

அன்னைக்கு நான் வராததால உங்களிப் பார்க்க முடியாமப் போச்சு. வருத்தமா இருக்கு. பிரிதொரு சந்தர்பத்தில் பார்ப்போம் :)

கணேஷ் said...

//எம்.எம்.அப்துல்லா said...
அன்னைக்கு நான் வராததால உங்களிப் பார்க்க முடியாமப் போச்சு. வருத்தமா இருக்கு. பிரிதொரு சந்தர்பத்தில் பார்ப்போம் :)//

உங்களை சந்திக்க நானும் ஆவலாய் இருக்கிறேன்.

Related Posts with Thumbnails