நான் கடவுள் - சென்சார்போர்டு, இளையராஜா விமர்சனம்


சென்சார்போர்டு

படத்தை பார்த்து பிரமித்து போயிருக்கும் சென்சார் போர்டு உறுப்பினர் ஒருவரிடம் பேசினோம். "எங்க ஆர் ஓ வுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்" என்ற அச்சத்தோடு பேச ஆரம்பித்தார் அவர். "நாங்க எல்லாருமே இந்த படத்தை பார்க்க ரொம்ப ஆர்வமாக இருந்தோம். இத்தனை நாட்கள் ஆன பிறகும், படம் பார்த்த பிரமிப்பு எங்களை விட்டு போகவே இல்லை. சண்டைக்காட்சிகள் மிகவும் அச்சமூட்டும் படியாக இருந்ததால் யு/ஏ சர்டிபிகேட் கொடுத்தோம். மற்றபடி எந்த காட்சிகளையும் வெட்டும்படி நிர்பந்திக்கவில்லை" என்றவர், படத்தின் கதையையும் சுருக்கமாக சொல்லி முடித்தார்.

"காஞ்சிபுரம் அருகில் குடியிருக்கும் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. இந்த குழந்தை உங்களிடம் வளர்ந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று ஜோதிடர் சொல்ல, குழந்தையை காசியில் விட்டு விட்டு வருகிறார்கள். அவன் அங்குள்ள சாமியார்களிடம் வளர ஆரம்பிக்கிறான். பாஷையிலிருந்து அனைத்து பழக்க வழக்கங்களையும் சாமியார்களிடம் கற்றுக் கொள்கிறான் சிறுவன். அவனை வாலிப வயதில் மீண்டும் சந்திக்கிறார் அவனது அப்பா. பிள்ளை இப்படி இருக்கிறானே என்ற அதிர்ச்சியில் மறுபடியும் சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். இங்கு வருபவன், குழந்தைகளை கடத்தி முடமாக்கி பிச்சையெடுக்க வைக்கிற வில்லன்களுக்கு தானே கடவுளாகி தண்டனை கொடுக்கிறான். இதில் பூஜாவும் குழந்தை பருவத்தில் கடத்தி வரப்பட்டு வில்லன்களால் கண்கள் குருடாக்கப்பட்ட பெண். அவளையும் அந்த கூட்டத்திலிருந்து மீட்கிறான் என்று முடிகிறது கதை. இதில் வருகிற க்ளைமாக்சை நான் சொல்வது தர்மமில்லை" என்று முடித்துக் கொண்டார் அந்த சென்சார் போர்டு உறுப்பினர்.

இளையராஜா

இளையராஜாவின் இசைக்கூடம். திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது நான் கடவுள். படத்தை ராஜா பார்க்க, ராஜாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார் பாலா. டென்ஷன்...டென்ஷன்... ஒவ்வொரு விரல் நகமாக கடித்துத் துப்பிக் கொண்டிருக்கிறார் பாலா! படம் முடிந்ததும் விருட்டென்று எழுந்து தனது அறைக்குள் போய்விடுகிறார் இசைஞானி. அவ்வளவுதான், பல மணி நேரங்கள் யாரையுமே அவர் சந்திக்கவில்லை பாலா உட்பட!

மீண்டும் இசைஞானியை சந்திக்கிற வரை ஒரு பதற்றம் இருந்ததே பாலாவிடம், அதே பதற்றத்தை ரிலீஸ் நேரத்திலும் இவருக்கு கொடுக்க திட்டமிட்டிருக்கின்றன சில இந்துத்வா அமைப்புகள்.

இளையராஜா பாலாவிடம் என்னதான் சொன்னார்? ஒரு முழு நாள் அமைதிக்கு பிறகு அவர் சொன்னது இதுதான். "என்னாலே பேசவே முடியலே. இந்த படத்தை உலகமே கொண்டாட போவுது பாரு...!"

இந்துத்வா அமைப்புகள் நான் கடவுள் படத்துக்கு கொடுக்கும் தலைவலியையும், முழுக்கட்டுரையும் படிக்க கிறுக்குப்பையன்நான் தளத்திற்கு செல்லவும்.

**********

10 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

நானும் படத்திற்கு ஆவலாக இருக்கிறேன்...

சரவணகுமரன் said...

தொடர்ந்து நான் கடவுளை கவர் செய்து கொண்டு இருக்கீங்க... :-)

வடுவூர் குமார் said...

துபாய்க்கு வரப்போகும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கேன்.

கணேஷ் said...

//VIKNESHWARAN said...
நானும் படத்திற்கு ஆவலாக இருக்கிறேன்...

நானும் தான். :)

//சரவணகுமரன் said...
தொடர்ந்து நான் கடவுளை கவர் செய்து கொண்டு இருக்கீங்க... :-)

நல்ல விஷயம் ஷேர் பண்ணிக்கலாம்னு தோணுச்சு. மத்தபடி நான் பாலாவோட ஃபேன் என்று தப்பா நெனச்சிக்காதீங்க. :))

//வடுவூர் குமார் said...
துபாய்க்கு வரப்போகும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கேன்.

சீக்கிரமே! வர்ற 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போகுதுன்னு பேசிக்குறாங்க. இன்னும் பேப்பர்ல ad கொடுக்கல.

வருகை புரிந்த மூவருக்கும் நன்றி.

ரமேஷ் வைத்யா said...

அவன் பூஜாவை ....று ..றுவிடுவான்!

கணேஷ் said...

//ரமேஷ் வைத்யா said...
அவன் பூஜாவை ....று ..றுவிடுவான்!

கொன்று தின்று விடுவானா? இல்லை தின்று கொன்று விடுவானா?
வருகைக்கு நன்றி ரமேஷ் வைத்யா!

SurveySan said...

அடடா இப்படி சூட்டக் களப்பறீங்களே.. எப்பங்க ரிலீஸ்?


யாராவது ப்ரிவ்யூ டிக்கீட்டு இருந்தா சொல்லுங்கப்பா :)

கணேஷ் said...

//SurveySan said...
எப்பங்க ரிலீஸ்?

அடுத்த வாரம் 29 ஆம் தேதின்னு சொல்லிக்கிறாங்க. இன்னும் பேப்பர்ல ad கொடுக்கல.

//யாராவது ப்ரிவ்யூ டிக்கீட்டு இருந்தா சொல்லுங்கப்பா :)

நானும் சபைல கேட்டுக்கறேன். யாராவது ப்ரிவ்யூ டிக்கெட் இருந்தா கொடுங்கப்பா..

Suresh said...

//ரொம்ப சீரியஸ், ரொம்ப மொக்கை எல்லாம் பிடிக்காது. மானே, தேனே என்று இலக்கிய நடையோடு பேசுவதும் சுத்தமா பிடிக்காது. ஸோ, அதெல்லாம் இங்கே கிடையாது. ஒன் & ஒன்லி டைம்பாஸ். மதுரைக்காரன்.//

enakku ithu romba pidichi irukku nengalum nalla mathiri than kalakuringa ... apprum time iruntha vanga namma kadaikku athanga blog kku vanthu padichittu ponga...

apprum //சென்னையில ரொம்ப சீரியஸா வேலை பாத்துக்கிட்டு இருக்கேன்.//
romba serious a velaiya comedy thane panringa :-)

SENTHILKUMARAN said...

ர்ச்சைக்கும் இளையராஜாவுக்கும் அதிக தூரம் என்றும் இருந்ததில்லை, சில உதாரணங்கள்:


ABCL இன் மிஸ் இந்தியா பிரம்மாண்டக் கொண்டாட்டங்களுக்கு இசையமைக்கச் சென்ற போது ஞாநி கூறியது:

"இளையராஜா போன்றவர்கள் இந்த அவமான நிகழ்ச்சிக்கு இசை அமைக்கச் செல்வது கொள்கை சார்ந்த முடிவல்ல. பெண்ணியம் பற்றிய அவர் கொள்கைகள் இருவேறு எல்லைகளில் இருக்கிறது. ஒன்று "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" அல்லது "வாடி என் கப்பக்கிழங்கே".

(நினைவிலிருந்து எழுதுகிறேன். புத்தகத்தைத் தேடி ஒரிஜினல் வார்த்தைகளைப் போட முடியுமென்றாலும், உள் கருத்து இதுவே)

1980-90களில் திரை உலகத்தைச் சார்ந்த எல்லாரையும் கிழித்துக் கொண்டிருந்த பாமரன் இளையராஜாவிடம் மட்டும் தழைந்துபோய் சொல்கிறார் -"என் ராசா.. சினிமாப்பாட்ட விட்டு இங்கே கஷ்டப்படுற மக்கள் அவலத்தைப் போக்க பாட்டு பாட மாட்டியா" (இதுவும் நினைவிலிருந்துதான்).

திருவாசகம் (Symphony-யா Cultural Crossover-ஆ, யாராச்சும் சொல்லுங்கப்பா) வெளியானபோது மீண்டும் ஞாநி அதன் பின்புல அரசியலையும், மேற்கத்திய பிரபல பாடகர்களின் பாடுபொருளை எடுத்துக்கொள்ளாமல், ஆன்மீகத்தில் நுழைந்த இளையராஜாவின் புனித பிம்பத்துவத்தை அலசினார். ஆன்மீகவாதிகளோ, "சர்ச்சில் பாடுவது போலிருக்கிறது" என்றும், விட்டுப்போன வரிகளைச் சுட்டிக்காட்டியும் விமர்சித்தனர். "ஏன் திருவாசகம்? ஏன் காஸ்பர்? ஏன் சிம்பனி ஆர்க்கெஸ்ட்ரா" என்றெல்லாமும் ஆயிரம் கேள்விகள்.
இப்போது, பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுப்பு என்பதை போற்றிப்பாடடி பெண்ணேவுக்கு இசையமைத்தவர் சொல்வதால் அவருக்குள் அடிமைப்புத்தி ஊறி யிருக்கிறது என்பது ரோஸாவின் வாதம்.இத்தனை சர்ச்சைகள் இருந்தாலும், மற்ற எல்லாரையும் தாக்குவது போல இளையராஜாவை யாரும் தாக்குவதில்லை. அதற்கு முக்கிய காரணம் என நான் நினைப்பது இளையராஜாவின் ஆளுமை - இசையில். எதிர்ப்பவரும் மறுக்க இயலாத value addtion அவர் இசை செய்யும் மாயம்.

பாரதியாருக்கு யார் வேண்டுமானாலும் இசை அமைத்திருக்கலாம் - அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் பாட்டின் கருத்தை ரிதம் மற்றும் இசைக்கருவிகளால் மட்டும் மொழி அறியாதவருக்கும் உணர்த்தியிருக்க முடியுமா என்பது கேள்விக்குறி.http://penathal.blogspot.com/2006/11/11nov-06.html

ரகுபதி ராகவ ராஜாராம் பாட்டுக்கு பாங்கு சொல்லும் (தொழுகைக்கு அழைக்கும்) மெட்டில் போட்டு, படத்தின் கருத்தை ஒரு வரியில் விளக்கியதை வேறெந்த இசையமைப்பாளரும் யோசித்திருப்பாரா என்பது சந்தேகமே.

இந்தப் போர்வாளை வெங்காயம் மட்டுமே வெட்ட பல இயக்குநர்கள் உபயோகித்திருந்தாலும், (நேத்து ராத்திரி யம்மா), திறன் உள்ள இயக்குநர்கள் சரியாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இளையராஜாவின் திறமை மேல் அதீதக் காதல் கொண்டதால் அவர் மீது அதீத எதிர்பார்ப்புகளையும் வளர்த்துக்கொள்கிறார்கள். இளையராஜா ஒரு கலைஞன், சமூகப் போராளியல்ல என்பதை சொல்லில் அல்லாமல் செயலில் பலமுறை காட்டி வந்தவர்தான் - இருந்தாலும் பாமரன் அவரிடம் மக்கள் அவலத்தைப் போக்கும் பாட்டை எதிர்பார்க்கிறார், ஞாநி பெண்ணிய சிந்தனையை எதிர்பார்க்கிறார், ரோஸாவசந்த் அடிமைப்படுத்தியவர்களைப் போற்றிப்பாடியதை சுட்டிக்காட்டுகிறார். எனக்குத் தெரிந்தவரை ரோஸா இளையராஜாவின் டை-ஹார்டு விசிறி. மற்றவர்களும் அப்படியே இருப்பார்கள் என்பது ஊகம்.

தற்போதைய சர்ச்சை - பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்தது என்ற ஒரு வரித் தகவல் -

"I have a great respect for Periyar. Certain ideas of Periyar still holds relevant. However he was a known atheist. But my life is total contrast to the ideas and thoughts of Periyar. Hence I thought it would not be appropriate for me to work in the movie and more over I though I cannot do justice to my job' என்று இந்தியா க்ளிட்சில் வந்துள்ள தகவல்.

இதில் என்ன தவறு இருக்க முடியும் என எனக்குத் தெரியவில்லை. தேவர் மகன் என்ற திரைப்படத்துக்கு இசையமைக்கும் மனப்பான்மைக்கும், பெரியார் படத்துக்கு இசையமைக்கும் மனப்பானமைக்கும் உள்ள வித்தியாசம் - "நான் பொல்லாதவன்" எனப் பாடல் போடும் மனப்பான்மைக்கும், "நாடு பார்த்ததுண்டா" என்று காமராஜரைப் பற்றிப் பாடல் போடும் மனப்பான்மைக்கும் உள்ள வித்தியாசம். பின்னதில் வேலை செய்பவர் முழுதாக ஊன்றிச்செய்யவேண்டும் என்பது இளையராஜாவின் கருத்து - அந்த Conviction தனக்கு வராது என்பதால் விலகுகிறேன் என்கிறார்.

அவருடைய கடவுள் கொள்கை, பெரியார் கொள்கை, ஜாதீயத்தைப் பற்றிய பார்வை எதையும் உள்ளே கொண்டுவராமல், இசைத்தொழிலுக்கும், பெரியார் படத்துக்கு இசையமைப்பவர் கொள்ளவேண்டிய ஆத்மார்த்தமான ஈடுபாடு பற்றிய அவர் கருத்தாகவும் இதைப்பார்த்தால் எந்தத் தவறும் தெரியாது.

நான் அப்படித்தான் பார்க்கிறேன்.

Related Posts with Thumbnails