2010 - ஒரு சாதனையும் ஒரு வேதனையும்

சாதனை
எனக்கு திருமணம் ஆகிவிட்டது. :)

வேதனை

எனக்கு திருமணம் ஆகிவிட்டது. :(

********

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ராவணன்-ராமாயணம் Touchpoints, Trivia, Extra

ராவணன் - ராமாயணம் Touchpoints

1. கதாபாத்திரங்கள் ஒற்றுமை.

2. அன்று தசரதனின் மூன்றாவது மனைவி செய்த சூழ்ச்சியால் 14 வருடங்கள் வனவாசம் போகிறான் ராமன். இன்று உடன் வேலை பார்க்கும் போலீஸ்காரர்கள் ஒரு பெண்ணுக்கு செய்த சூழ்ச்சியால், மனைவியைத் தேடி 14 நாட்கள் வனவாசம் போகிறான் நவீன ராமன்.

3. அன்று, அனுமார் இலங்கையில் சீதையை சந்தித்து பின் வாலில் தீப்பற்றி இலங்கை எரிந்தது. இன்று, கார்த்திக், விக்ரமை சந்தித்தபின் தம்பி சாகிறான். காட்டுக்குள் நடக்கும் நேரடி சண்டையில் தீப்பற்றி எரிகிறது.

4. சீதை அழகில் மயங்கி, அவளை கவர்ந்ததால் ராமர் எதிரியாகிறான். இன்று, ராமன் எதிரியானதால், சீதையைக் கவர்ந்து, பின் அவள் அழகில் மயங்குகிறான்.

5. 10 தலை ராவணனின், பத்து குணாதிசியங்களை அதாவது நல்லவன், மக்களுக்கு உதவுபவன், அடிக்கடி காமெடி செய்வான், பெண்கள் விரும்பும் அழகன் என இதே போல் பத்து பேர் வந்து சொல்கின்றனர். அதில் ஒருவன் மட்டும் கெட்டவன் என்கிறான்.

6. அனுமார் சீதையை ச‌ந்திப்ப‌து, சூர்ப்ப‌ந‌கை மூக்கை மோப்ப‌நாய் மாதிரி செய்வ‌து, கும்ப‌க‌ர்ண‌ன் சாப்ப‌ட்டு த‌ட்டுட‌ன் எப்போதும் திரிவது, தம்பி விபீஷ்ணன் என‌ ம‌ற்ற‌வ‌ற்றை அனைவ‌ரும் எழுதிவிட்ட‌ன‌ர்.


நகைமுரண்கள்:

1. கல்யாணத்தன்று ஓடிப் போன மாப்பிள்ளையை, கோழை பேடி எனக்காட்ட ஐஸ்வர்யாராயின் உடையுடன் கட்டித் தொங்கவிடப்பட்ட இடம்.

2. காட்டுக்குள் ஒரு நாள், ஷேவிங் நுரையுட‌ன் இருக்கும்போது, வெளியே ஏற்ப‌ட்ட‌ த‌க‌ராறினால் ஷேவிங் நுரையைத் துடைத்துவிட்டு போய்விடுவார் ப்ரித்விராஜ். மீண்டும் ஐஸ்வ‌ர்யாராயை ச‌ந்தித்த‌போது, அவ‌ர் கேட்ட‌ கேள்வி, "இது தான் நீங்க‌ என்னைப் பிரிஞ்சி 14 நாள் வ‌ள‌ர்த்த‌ தாடியா?"

3. ராவ‌ண‌ன் மேல் ஆர‌ம்ப‌த்தில் நெருப்பாய் உமிழ்ந்த‌ வெறுப்பு க‌டைசியில் அன்பில் முடிகிற‌து. ராம‌ன் மேல் க‌ட‌வுளாக‌ இருந்த‌ அன்பு, க‌டைசியில் வெறுப்பாய் முடிகிற‌து.

4. மிஷ‌னின் ஆர‌ம்பத்தில், 14 ம‌ணி நேர‌த்தில் சீதையை பிடித்துவிடுவ‌தாக‌ சொல்லும் ராம‌ன் மொத்தத்தில் எடுத்துக் கொள்ளும் கால‌ம் 14 நாட்க‌ள்.

5. 10 தலை ராவணனின், பத்து குணாதிசியங்களை அதாவது நல்லவன், மக்களுக்கு உதவுபவன், அடிக்கடி காமெடி செய்வான், பெண்கள் விரும்பும் அழகன் என இதே போல் பத்து பேர் வந்து சொல்கின்றனர். அதில் ஒருவன் மட்டும் கெட்டவன் என்கிறான். அந்த கெட்டவ‌னை மட்டும் ராம‌ன் பார்க்கிறான். ம‌ற்ற‌வ‌ற்றை சீதை பார்க்கிறாள்.


எக்ஸ்ட்ரா மேட்டர்ஸ்:

1. ப‌ருத்திவீர‌னில் இருந்து அதே காட்சியை, அதே டோனில் "வலிக்குதுடாஆஆ" என புல‌ம்பும் ப்ரியாம‌ணி

2. ஐஸ்வ‌ர்யாராயின் ட்ரெஸ். முக‌த்தில் தெரியும் வ‌ய‌து, தலைக்கு கீழே தெரிய‌வில்லை. க‌டைசி சுரிதாரிலாவ‌து ஒழுங்காக தெரிவார் என்று பார்த்தால், அங்கேயும் ம‌ணிர‌த்ன‌ம் தெரிகிறார்.

3. இள‌ம்வ‌ய‌து பெண்க‌ளுக்கே ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் ப்ள‌ஸ் ஸாரி, ஆண்ட்டி லுக் கொடுக்கும் என‌ என்னைப் போன்ற‌ சினிமா பார்ப்ப‌வ‌னுக்கே தெரியும்போது, ஒரு காட்சியில் ஐஸ் ஆன்ட்டிக்கு அதே காஸ்ட்யூம் கொடுத்த‌ டிசைன‌ர் வாழ்க!

4. விக்ரம். என்ன புஜங்கள்? சாதாரணமாக கையை உள்வாங்கி மடக்கி இருக்கும் காட்சியிலேயே, ச்சும்மா திமிறிக் கொண்டிருக்கிறது.

5. லாஸ்ட் ப‌ட் நாட் லீஸ்ட், நாடோடி தென்ற‌லாக‌ ர‌ஞ்சிதா. அதே ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுட‌ன். ஆடு தான் மேய்க்க‌வில்லை. நித்தியை மேய்த்துக் கொண்டிருப்பார் போலும்.


ம‌த்த‌ப‌டி வேறெதும் நோட் ப‌ண்ண‌லீங்க‌....

**********************************

தேவதை கவிதைகள் - 2


வெற்றிடம் மாறி
வெற்றிடம் மட்டுமே
குடிபுகும் நாட்களில்
உனக்காகக் காத்திருக்கிறேன்
இதயத்தில் நீ
குடிவரும் நாளில்
உனக்கான பெயர்
தேவதை

அரைகுறை வேலைதான்
எப்போதும்
உன் நெருக்கத்தில்
உதடுகளின் ரேகைகளை
எண்ணும் வேலையிலும்
பாதி தாண்டும் முன்
மறந்துவிடுகின்றேன்
அழித்துவிடலாம் என
என் உதடுகளுக்கு
வேலைமாற்றம் கொடுத்தபோது
ரேகைகள் இடமாற்றம்
ஆகின்றன
கடிக்காதே
இறக்கைகள் மட்டுமல்ல
தேவதைகளுக்கு பற்களும் உண்டு!

எதிர்ப்படும் பெண்களை
எட்டிஎட்டி கண்டுகளிக்கும்போது
ரசிக்கிறவள் தோழியாகிறாள்
அவள்
எட்டிஎட்டி உதைக்கும்போது
தேவதையாகிறாள்!

அவசர தடுப்பு சட்டம்
பரவி வருகிறது
காவல்நிலையத்தில்
இரண்டு புகைப்படங்கள்
வதைத் தடுப்பு சட்டத்தில்
உன் அண்ணன்
தேவதைத் தடுப்பு சட்டத்தில்
உன் அப்பா

*******************

தேவதை கவிதைகள்-1



எனக்காக ரோஜாக்களை
ஏந்தி வரும் நாளில்
உன் பெயர்
தேவதை!

சிரிப்பைக் கேட்டால்
வெட்கப்படுகிறாள்
வெட்கத்தைக் கேட்டால்
முத்தமிடுகிறாள்
முத்தத்தைக் கேட்டால்
உதைக்கிறாள்
பிரச்சினை தேவதைகளின்
காதுகளிலா
காதலிலா?

தேவதைக்கும் எனக்கும்
பந்தயம்
அவள் சொன்னாள்
”என்னை வெட்கப்பட வைக்க முடியாது?”
நான் கேட்டேன்
”ஏன் முடியாது?”
சரி பார்க்கலாம் என
அவள் கோபத்தில் சிவக்க
ஆரம்பித்தது பந்தயம்
ஒரே ஒரு கேள்வியில்
தோல்வியை ஏற்றுக் கொண்டாள்
வெட்கப்பட்டுக் கொண்டே!!!!
நான் கேட்டதெல்லாம்
“நீ தேவதையான நாள் என்னைக்கு?”
மட்டுமே

(தேவதை கவிதைகள், தேவதை வரும்வரை தொடரும்)

*************************************

கணேஷ்-சியாமளா! சில நன்றிகள்


கணேஷ்‍-சியாமளா தொடர் எழுதுவேன் என்று நான் ஆரம்பத்தில் நினைக்கவில்லை. முதல் மூன்று எபிசோட்களை தனித்தனி சிறுகதைகளாகத் தான் நினைத்து வைத்திருந்தேன். மூன்றையும் கொஞ்சம் ஆர்டர் மாற்றி, கேரக்டர்களுக்கு பெயர் ஒன்றாக மெயின்டெயின் பண்ணியபோது, படிப்பவர்கள் இவ்வளவு துள்ளலுடன் படித்து, கமெண்ட் போடுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் முதன்முதலில் தொடர்ச்சியாக இவ்வளவு அதிகமான கமெண்ட்ஸ் வாங்குவது இது தான் முதல் தடவை. 21 எபிசோடும் தமிழீஷில் பாப்புலர். "ganesh shyamla" என்ற கூகிள் ஸர்ச் மூலம் வந்தவர்கள் 2000 பேருக்கும் மேல். இந்த தொடரை நான் ஆரம்பித்தபோது 48 பேருடன் தள்ளாடிக் கொண்டிருந்த என் ஃபாலோயர்ஸ் கேட்ஜட், இப்போது செஞ்சுரி தாண்டி 121 என ஓடிக் கொண்டிருக்கிறது. சின்ன அம்மிணி, நான் ஆதவன், புதுவை சிவா, பொற்கொடி, ஷங்கர், குட்டி, காம்ப்ளான் சூர்யா என நிறைய நல்ல மக்கள் ரெகுலர் ரீடர்ஸ்களாக‌ கிடைத்துவிட்டனர். அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி.

இதைத் த‌விர‌ மொத்த‌ 21 எபிசோட்க‌ளையும் சைல‌ண்ட் ரீட‌ராக‌ ப‌டித்து, க்ளைமேக்ஸ் போஸ்ட்டில் க‌மெண்ட் போட்ட‌வ‌ர்க‌ளும் உண்டு, த‌னி இமெயில் அனுப்பி என்னை உருக‌ வைத்த‌ வாச‌க‌ர்க‌ளும் உண்டு. "ச்சே, இந்த‌ உல‌க‌ம் என்கிட்ட‌ எவ்வ‌ள‌வு எதிர்பார்க்காது தெரியாம‌லே நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்னு தோணுச்சி"

கேபிள் ஷ‌ங்க‌ரிட‌ம் இர‌ண்டு முறை ப‌திவ‌ர் ச‌ந்திப்பில் பேசி இருக்கிறேன். என் ப்ளாக் யூஆர்எல் கூட அவருக்கு ச‌ரியாக‌ நியாப‌க‌ம் இருக்காது என நினைக்கிறேன். இந்த‌ தொட‌ர் ஆர‌ம்பித்த‌வுட‌ன் என்னை செல்ஃபோனில் அழைத்துப்பேசி, "ஸ்டோரி ரொம்ப‌ ந‌ல்லா போகுது க‌ணேஷ், அதை அப்ப‌டி ப‌ண்ணியிருக்க‌லாமோ?" என‌ ச்சின்ன‌ சின்ன‌ க‌ரெக்ச‌ன்ஸ் கொடுத்து என்னை ரொம்ப‌ உற்சாக‌ப்ப‌டுத்தினார். "என்ன‌ ச‌ட்டுன்னு முடிச்சீட்டீங்க‌.. இங்கே தானே ஆக்சுவ‌லா ஸ்டோரி ஆர‌ம்பிச்சி இருக்க‌ணும். மிஸ் ப‌ண்ணிட்டீங்க‌ க‌ணேஷ்?" என‌ நான் தொட‌ரை முடித்த‌வுட‌ன் அவ‌ர் அழைத்து சொன்ன‌போதுதான், அவ‌ர் சொன்ன‌ விஷ‌ய‌ங்க‌ள் என‌க்கு புரிய‌ ஆர‌ம்பித்த‌து. அவ‌ர் மீது ம‌ரியாதை இன்னும் அதிக‌மாகிய‌து. தேங்க் யூ ஸார் :)

அத‌ற்குபின் ஒரு விஷ‌ய‌ம்... மூன்று எபிசோடுக‌ளுக்கு பின் இந்த‌ தொட‌ரை எப்ப‌டி எடுத்துசெல்வ‌து என‌ ஏக‌க் குழ‌ப்ப‌ம். அப்போது தான் ப‌திவ‌ர் ராஜ‌ல‌ட்சுமி அவ‌ர்களுடன் "சாட்"டிக் கொண்டிருக்கும்போது என்னை சிறுகதை எழுதுவதற்கு சொன்ன‌ ஒன்லைன், "நமக்கு பிடித்தவர்களை விட, நம்மை பிடித்தவர்களால் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்". இந்த‌ ஒன்லைனை வ‌ச்சி நாம‌ ஏன் தொட‌ர்க‌தை எழுத‌க் கூடாது என‌ விட்ட‌த்தை பார்த்து யோசித்த‌போது தான் உள்ளே வ‌ந்தாள் திவ்யா. அந்த‌ knot உள்ளே வ‌ந்த‌வுட‌ன் ஆன்சைட், காலேஜ் ல‌வ், ஹைய‌ர் ஸ்ட‌டீஸ் என‌ நிறைய‌ விஷ‌ய‌ங்க‌ள் தானாக‌ உள்ளே வ‌ர‌ ஆர‌ம்பித்த‌ன‌. 21 எபிசோட் வ‌ரைக்கும் வ‌ந்தாச்சி. ஸோ, Thanks to Raji tooooooo :)

போனாபோகுதுன்னு ஹீரோவுக்கு கணேஷ்ன்னு என் பேரை வச்சேன். எல்லாரும் வார்த்தை மாறாம கேக்குற ஒரே கேள்வி.. "யாரு சியாமளா? யாரு திவ்யா?" தெரியாதவங்க, வாசகர்கள் கேக்குறாங்கன்னா, ஓ.கே பரவாயில்ல.. ஆனா ஆஃபிஸ்ல கூட வேலை பாக்குறவங்க, "யாரு சியாமளா?"ன்னு கேட்டா "நான் என்ன்ன்ன்ன்ன்ன்ன‌ பண்ணுவேன்?" சொல்லுங்க... அதே மாதிரி என் காலேஜ் ஃப்ரண்ட்ஸும் "யாருடா திவ்யா?"ன்னு வேற கேக்குறாய்ய்ங்க.. Grrrrrrrrrrrrrrrrrர் :(

தென்.. இந்த வேலன்டன்ஸ்டேக்கு எல்லாரும் கவிதை, கதைன்னு புரட்சி பண்ணிக்கிட்டு இருக்கும்போது எதுவும் ட்ரை பண்ணாம இருக்கியேடான்னு, கனவுல வேலன்டைன் கத்தி எடுத்துட்டு விரட்டுறாரு என்னங்க பண்ணுறது?

எல்லாருக்கும் ஒரு ரிக்வெஸ்ட். கொஞ்ச‌ நாள் வெயிட் ப‌ண்ணுங்க‌.. கொஞ்ச‌ம் பெர்ச‌ன‌ல் வேலைக‌ள் என்னை பாடாய்ப‌டுத்துவ‌தால், ஒரு ஷார்ட் ப்ரேக் எடுக்க‌லாம்ன்னு இருக்கேன். சீக்கிர‌ம் வ‌ந்துடுவேன். சீக்கிர‌ம் இன்னொரு தொட‌ர்கூட‌ ஆர‌ம்பிக்க‌லாம் :) So Stay tuned!!!!!

'காதல்'ல்ல இருக்குறவங்களுக்கும், என்னை மாதிரி 'காதல்'லை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும், HAPPY Valentine's Day!!!!!!!!!!!!!(சாமி சத்தியமா, அந்த ச்சின்னப்பையன் நான் இல்லைங்க)

****************************

சியாமளா-21: கணேஷ் யாருக்கு?(க்ளைமேக்ஸ்)

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21

காரில் போய்க் கொண்டிருந்தனர். திவ்யா அருகில் கணேஷ் அமர்ந்திருந்தான். கணேஷ் இப்போது கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருந்தான். ஆனால் திவ்யா நிலநடுக்கம் வந்துபோன இடம் போல் இருந்தாள். ரோட்டை பார்த்துக் கொண்டே திவ்யா சீரியஸாகக் கேட்டாள்.

“நீ கட்டிக்கப் போற பொண்ணு என்னை விட அழகா இருப்பாளா கணேஷ்?”

அழுவதா சிரிப்பதா? கணேஷ்க்கு தெரியவில்லை.

ஒரு நிமிடம் முழுவதும் போனபின்பு, பொறுமையில்லாமல் கேட்டாள் திவ்யா, “உண்மைலயேவா?”

“நான் எதுவுமே சொல்லலீயே?” என பதறிபோய் பதில் அளித்தான்.

“அப்ப நான் தான் அழகுன்னு சொல்ற..” என சொல்லிக் கொண்டே “ஹா ஹா ஹா” வென கார் அதிர சிரித்தாள்.

“என்ன பொண்ணு இவ” என மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவளை வெறித்து பார்த்தான். ஒரு லுக்ல பார்த்தா வில்லன்(வில்லி) சிரிப்பது மாதிரியும் இருந்தது.

“ஆனா ஒண்ணு கணேஷ்.. இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லாமலேயே நீ இந்தியா போய் இருக்கலாம். நீ இப்ப இவ்வளோ சொன்னதுனால தான், என்னால் ஈஸியா எடுத்துக்க முடியல” என லைட்டாக கண்கலங்க ஆரம்பித்தாள். பெண்களால் மட்டும் தான் ஃப்ராக்சன் ஆஃப் செகண்டில் மூட் மாற்றி பேசமுடியும்.

“இல்ல.. அது வந்து..” அவளை சமாதானப்படுத்தலாம் என ஆரம்பத்தான், ரிஸ்க் எடுக்க விரும்பாததால் நிறுத்திக் கொண்டான்.

“இட்ஸ் ஓ.கே. ஆனா என்னை கல்யாணத்துக்கு கூப்பிடுவீயா கணேஷ்” என யோசித்துவிட்டு கேட்டாள்.

“ “

“சரி.. ஓ.கே. பட் ஒன் கண்டிஷன்? நீ அதுக்கு ஒத்துக்கிட்டா நான் கல்யாணத்துக்கு வரமாட்டேன்” தூண்டிலில் மண்புழுவை வைத்துக் கொண்டு வீசினாள்.

கணேஷுக்கு அந்த கண்டிஷன் என்ன என தெரியாமல் ஒத்துக்கொள்ளக் கூடாது என நினைத்துக் கொண்டிருந்தாலும், இவளை கல்யாணத்திற்காக இந்தியா வரை வரவைத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை.”ஒரு வேளை கிஸ் கேப்பாளோ? 7/ஜி ரெயின்போ ஸ்டைல்ல… அப்படி இருக்குமோ, ஒருவேளை இப்படி இருக்குமோ?” என ஏடாகூடாமாக மண்டையக் குடைந்தான். “இவ கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா, இல்ல வில்லியா என இந்த செகண்ட் வரை புரியாமல் நடிகர் பாண்டியராஜன் போல திருதிருவென முழித்தான்.

”ஹெல்லோ… வாட்ட்? டீலா நோ டீலா?” என கான்ஃபிடண்டாக கேட்டாள்.

30 செகண்டுகள் கழித்து, “டீல். என்ன கண்டிஷன்?” என கேட்டுவிட்டு 20-20 மேட்ச்சின் கடைசி 2 ஓவர் போல இதயம் குதிரையின் ஒட்டம் போல துடித்தது.

ஃப்ரீவேயில் ஓட்டிக் கொண்டிருந்த காரை எக்ஸிட்-டில் வளைத்து ஹோட்டல் செல்லும் பாதையில் வேகத்தைக் குறைத்து ஓட்டினாள். “ரைட்.. நீ கட்டிக்கப் போற பொண்ணை நான் பார்க்கணும்.” என்றாள் பொறுமையாக.

”வாட்ட்ட்ட்ட்ட்… ஆர் யூ க்ரேஸி?”

“யெஸ்.. ஐ’யாம்.. நீ ஒண்ணும் டென்ஷன் ஆக வேணாம். அவகிட்ட நான் பேச மாட்டேன். நீ இண்ட்ரோ கூட கொடுக்கத் தேவை இல்ல.. தூரத்துல இருந்து பார்த்துட்டு, அப்படியே போயிடுறேன். ஒருவேளை நீ இதுக்கு ஒத்துக்கலைன்னா, நான் கல்யாணத்து அன்னைக்கு முன்னாடி வந்து……”

”வெயிட் வெயிட்.. நான் எதுவும் சொல்றதுக்கு முன்னாடியே ஏன் அடுத்த ஆப்ஷனை பத்தி யோசிக்கிற?”

“சரி சொல்லு.. உன்னோட முடிவு என்ன?” திவ்யா பரபரத்தாள். கார் ஹோட்டல் பார்க்கிங் ஏரியாவில் உள்ளே நுழைந்தது. வண்டியை நிறுத்திவிட்டு, லிஃப்ட் அருகில் காத்திருந்தனர். இன்னும் திவ்யா கணேஷ் முகத்தையே ஒரு சிறுகுழந்தை போல பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஓ.கே. நீ பேசலாம், பட், நம்ம விஷயத்தை பத்தி பேசக்கூடாது. ப்ராமிஸ்” என ஜெர்கினில் இருந்து கையை உருவி அவள் முன் நீட்டினான். உடனே குதூகலமாக அவளும் கையை க்ளோவ்ஸில் இருந்து கழற்றி செங்காந்தள் மலர் போல அடர் சிவப்பு ரத்தம் உள்ளங்கையில் ஓட கணேஷ் உள்ளங்கையில் வைத்து பற்றிக் கொள்ள… நான்கு வருடத்திற்கு பின் அதே டச். அதே குச்சி குச்சியான விரல்கள். கணேஷ் அவள் விரல்களுக்குள் தன் விரல்களை அழுத்தும் நேரத்தில், லிஃப்ட் திறக்க வெளியே வந்தாள் சியாமளா. உடனே கைகள் உதறப்பட்டன. பெண்ணுக்கு எதிரி பெண்.. ஆணுக்கும் எதிரி பெண்.

அங்கே இருந்த அசாதாரண சூழ்நிலையை சியாமளா சமாளித்துக் கொண்டு, திவ்யாவை ரூமுக்கு அழைத்து சென்றாள். இரண்டடி தூரத்தில் கணேஷ். உடனே உள்ளே ஒரு ஸ்பார்க் வெடித்தது. “இந்த நிமிடம் வரை திவ்யா எதற்கு ஹோட்டல் வந்திருக்கிறாள்?” என தெரியாததால், அதைப் பற்றி யோசிக்காமல் இருந்ததால் டென்ஷன் ஆனான். அவசரம் அவசரமாக அவர்களை ஃபாலோ பண்ணினான்.

சியாமளா ரூமில் அவர்கள் உள்ளே செல்ல, இவனும் உள்ளே நுழைந்தான். இவன் உள்ளே காலடி வைத்த நொடியில், அவன் கண்கள் குருடானது. உள்ளே இருந்த அணைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. கேண்டிலின் மெல்லிய வெளிச்சம் ஹாலின் நடுவே எரிய ஆரம்பிக்க, சுற்றியும் 8 பேர் சீராக கைதட்டிக் கொண்டிருக்க, லேப்டாப் ஸ்பீக்கரில், “ஹேப்பி பர்த்டே டூ யூ.. ஹேப்பி பர்த்டே டூ யூ.. “ என சின்னக் குழந்தை பாட அடுத்த வரியை, எல்லாரும் சேர்ந்து மொத்தமாக, “ஹேப்ப்பி பர்த்டே டூ கணேஷ்ஷ்ஷ்ஷ்ஷ்” என முடிக்க, கணேஷ் பர்த்டே கேக் அருகில் வர ஃபோம் ஸ்ப்ரே டப் என ரெண்டு பக்கம் இருந்து அடிக்கப்பட்டது, மேலே இருந்து ஜிகினா பேப்பர் கட்ஸ் கொட்டப்பட அனைத்து விளக்குகளும் எரிந்தன. காலேஜ் ஃபைனல் இயர் பர்த்டே செலிப்ரேஷனுக்கு அப்புறம், கணேஷ் இப்படி க்ராண்ட்டா கொண்டாடும் பர்த்டே இது. கணேஷ், எல்லாருக்கும் தேங்க்ஸ் சொல்லிவிட்டு கேக் கட் பண்ணினான். கட் பண்ணிய முதல் பீஸை சியாமளா முன்னே வந்து கணேஷுக்கு ஊட்ட, திரும்ப கணேஷ் சியாமளாவுக்கு ஊட்ட, திவ்யா காதுகளில் இருந்து புகை வர ஆரம்பித்தது.

கணேஷ் எல்லாருக்கும் கேக் கொடுத்துவிட்டு திவ்யா அருகில் வந்து நின்றான். “நீ கூட மறந்துட்ட. பாரு, சியாமளா எப்படி அரேஞ்ச் பண்ணி இருக்கான்னு?” என பெருமையாக சொன்னான். “இப்ப எதுக்கு தேவையில்லாம என்ன அவ கூட கம்பேர் பண்ற?” என கடித்தாள். அப்போது தான் ஆர்வமிகுதியில் கணேஷ் செய்த முட்டாள்தனம் உறைத்தது. நாக்கைக் கடித்துக் கொண்டான்.

“ஓ.கே ஃப்ரண்ட்ஸ். உங்க எல்லாரையும் நான் இன்வைட் பண்றதுக்கு கணேஷ் பர்த்டே மட்டும் காரணம் இல்ல” வேண்டுமென்றே கொஞ்சம் இடைவெளி விட்டாள். எல்லாரும் ஆச்சர்யமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கணேஷ்க்கு தலைக்குள் லைட்டாக மணி அடித்தது.

“ஆல்ரைட். என்னோட மேரேஜ் இன்விடேஷன் கொடுக்கறதுக்கும் தான்” என அவள் சொல்லி முடிக்க அங்கே இருந்த அனைவரும் திவ்யா உள்பட கைதட்டி “கங்கிராட்ஸ்” என கத்தினர். ”என்னோட வுட் பி-க்காக நான் ஒரு ரிங் கூட வாங்கி இருக்கேன்” என எடுத்துக் காட்டினாள். கூட்டம் ‘வாவ்’ என வாயை பிளந்தது.

“ஓ.கே. அவர் யாருன்னு உங்களுக்கு தெரியுமா?” கைதட்டல் அமைதியானது. இரண்டு ஸ்டெப்ஸ் முன்னால் நடந்து வந்தாள்.

திவ்யாவிற்கு அருகில் நின்றிருந்த கணேஷ் முன் மண்டியிட்டு, ”ஐ லவ் யூ பேபி” என கையை விரித்து சொல்லிவிட்டு, மோதிரத்திற்காக கணேஷின் வலதுகையைக் கேட்டாள். கணேஷ்க்கு உற்சாகம் பியர் பாட்டில் போல் பொத்துக் கொண்டு வந்தது. ஆனாலும் பொறுமையாக அவள் செய்வதை ரசித்துக் கொண்டே அவளுக்காக வலதுகையைக் கொடுக்க, அவள் மோதிரம் போட, கூட்டத்தினர் கைதட்டி கூச்சல் போட்டனர். அவள் முடித்ததும், கணேஷ் அவள் தோள்களைப் பற்றி தூக்கி சியாமளாவைக் கட்டி பிடித்து சுற்றினான். இன்னும் கூட்டம் ரசித்தது. “தேங்க்ஸ் ஹனீ” என சியாமளா முகத்தருகில் சொல்லிவிட்டு நிமிர்ந்தான். நிமிர்ந்தால் திவ்யாவின் கண்களில் கண்ணீர் தேங்கி இருந்தது. கணேஷ், “ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்” என கெஞ்சினான். எதுவும் தப்பாக நடந்துவிடக் கூடாது என வேண்டிக் கொண்டான்.

சியாமளா அவனை விட்டு விலகி, ஊரில் இருந்து வந்த இன்விடேஷனை எல்லாருக்கும் கொடுக்க ஆரம்பித்தாள். திவ்யாவிற்கு கொடுக்க அருகில் வந்த போது, திவ்யா சியாமளாவை கட்டிப்பிடித்தாள். “கங்கிராட்ஸ். க்ரேட் ச்சாய்ஸ்” என உடைந்த குரலில், உற்சாகம் போர்த்தி விஷ் பண்ணினாள். “கங்கிராட்ஸ் கணேஷ்” என கணேஷுக்கும் ஃபார்மலாக விஷ் பண்ணிவிட்டு பார்ட்டியை விட்டு விலகி ஓடினாள். யாரும் அதை கவனிக்கவில்லை, கணேஷைத் தவிர.

வெள்ளிக்கிழமை. 10.45AM. லண்டன் ஏர்போர்ட்.

எல்லா ஃபார்மலிட்டிகளையும் முடித்துவிட்டு, ஃப்ளைட்டில் உள்ளே சென்றனர். சீட்டில் உட்கார்ந்து கொண்டனர். “எப்பவும் நான் கெளம்பும்போது க்ளையண்ட் ஆஃபிஸிலிருந்து வருவாங்க. இந்தவாட்டி யாரையும் காணோம்?” என ப்ச் கொட்டினாள் சியாமளா.

“ஓ.. அப்படியா.. யாரு யூஷுவலா வருவா?” கணேஷ்

“திவ்யா. நேத்து பார்ட்டில கூட ரொம்ப மூட் ஆஃப்பா இருந்தா. ரைட், அவளைப் பத்தி பேசி என்ன ப்ரயோஜனம்?” கல்யாணம் ச்சும்மா அதிரணும் கணேஷ். என்னோட ரொம்ப நாள் கனவு. நல்லா க்ராண்ட்டா பண்ணனும்ன்னு” என ஆசைகளை விரித்தாள் சியாமளா.

“ம்ம்ம்.. பர்த்டே பார்ட்டிலயே இப்படி க்ராண்ட்டா announce பண்ணுவேன்னும் நான் எதிர்பார்க்கல.” என்றான்.

“ம்ம். ஆமா அது தான் என் ஸ்பெஷல். ஹேய்.. அங்க உனக்கு ஒரு கிஃப்ட் வந்திச்சி.. இந்தா” என ஒரு பார்ஸலை நீட்டினாள் சியாமளா.

என்ன என யோசித்துக் கொண்டே பிரித்தான். உள்ளே திவ்யா ப்ரசண்ட் பண்ண கணேஷ்-திவ்யா காலேஜ் ஃபோட்டோ. ஒரே செகண்டில் மொத்த சந்தோஷமும் ஃபில்டர் ஆகி சியாமளா முகத்தைப் பார்த்தான்.

“எல்லாம் தெரியும்….” கொஞ்சம் இடைவெளி விட்டு, “இதுவும் என் ஸ்பெஷல்” என 0.0001% கூட குறையாத அதே காதலின் கிறக்கத்துடன் கண்ணடித்தாள் சியாமளா. கணேஷ் அவள் தோள்களை பிடித்து வாஞ்சையாக அணைத்துக் கொள்ள

காதல் ஃப்ளைட் சேஃபாக டேக் ஆஃப் ஆனது.

(முற்றும்)

*************************************

சியாமளா-20: திவ்யாவின் கிஃப்ட்

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

நைட் படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டு நெளிந்தான். திடீரென அவனுக்கு திவ்யா சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்தன. “உனக்கு நியாபகம் இருக்கா கணேஷ்… கல்ச்சுரல்ஸ்டே அன்னிக்கு….” தலைக்குள் நெறைய்ய்ய கொசுவர்த்திகள் சுழல ஆரம்பித்தது. கல்ச்சுரல்ஸ்டே அன்னைக்கு நடந்தை யோசிக்க ஆரம்பித்தான்.

தேர்டு இயர், ஐந்தாவது செமஸ்டர். கல்ச்சுரல்ஸ் டேக்கு முதல் நாள் இரவு ஹாஸ்டல் ரூமில், ’எதையோ பறிகொடுத்தவன்’ போல் சோகமாக படுத்திருந்தான் கணேஷ். அவன் நண்பன், ரூம்மேட் ஷங்கர், கணேஷ் தோளை தட்டி எழுப்பி, “டேய், நாங்க பர்கூர் போறோம். நாளைக்கு போடுறதுக்கு ஷெர்வானி, குர்தா, ப்ளேசர்ன்னு ஏதாவது பார்த்து நல்லதா வாடகைக்கு எடுத்திட்டு வரப்போறோம். நீ வரல?”

“ம்ம்ஹூம். இல்லடா.. நான் கல்ச்சுரல்டே ஃபங்ஷனுக்கே வரல.. மூட் அவுட்டா இருக்கேன்?”

“ஏண்டா? நாளைக்கு உன் ஆளுகூட கூட ஏதோ டான்ஸ் ஆடப்போறதா பேசிக்கிட்டாங்க? அவள்கிட்ட சண்டையா?”

“இனிமே அவளை என் ஆளுன்னு சொன்ன கொன்னே போட்ருவேன்? அவளே என்னை நாய் மாதிரி ட்ரீட் பண்றா.. இதுல அவ டான்ஸ் ஆடுனா என்ன? ஆடலைன்னா எனக்கென்ன?”

“ஓகே கூல்.. பை..”

கட்டிலில் படுத்துக் கொண்டு விட்டத்தை வெறித்து பார்த்தான். ”அவகிட்ட எத்தனை தடவ தான் ப்ரோப்பஸ் பண்றது. பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லணும் அப்புறம் பேசக்கூடாது? ஆனா இவ ஃப்ரெண்ட்ன்னு சொல்லி குழப்புறா? சிலசமயம் கேவலமா திட்டுறா. இனிமே அவளை பார்க்கக்கூடாது, பேசக்கூடாது” என தீர்மானம் பண்ணினான். ஷங்கர் பர்கூர் போய்விட்டு திரும்ப வந்துவிட்டான். கல்யாண மாப்பிள்ளைக்கு போடும் புத்தம் புதிய பட்டு வேஷ்டி, பட்டு சட்டை, அங்கவஸ்திரம் எல்லாம் எடுத்து காட்டிக் கொண்டிருந்தான். அப்போது கணேஷ்க்கு ஹாஸ்டல் ஃபோனில் கால் வந்தது.

“ஹேய் கணேஷ். நான் திவ்யா. நாளைக்கு என்ன ஸ்பெஷல்? எந்த ட்ரெஸ்ல வரப்போற?”

”இன்னும் டிசைட் பண்ணல” இன்னும் அதே கடுப்பில் பேசினான்

“ஓகே. நாளைக்கு நான் “அழகுமலர் ஆட..அபிநயங்கள் கூட” பாட்டுக்கு பரதநாட்டியம் ஆடப் போறேன்? நீ பட்டு வேஷ்டி, ஷர்ட்ல வாயேன்? ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் கணேஷ். நல்லா இருக்கும்”

“ஷ்யூர் கண்டிப்பாக” என்று அவள் சொன்ன ப்ளீஸ்ஸில் கரைந்தான் கணேஷ். இந்த பசங்களே இப்படித் தான். வீராப்பு பெண்களிடம் செல்லாது. அதுவும் அவள் அழகாக இருந்தால், கேட்கவே வேணாம்.

ஷங்கர் காலில் விழுந்து அவன் வாங்கினதை கணேஷ் போட்டுக் கொண்டு கல்ச்சுரல்ஸ்டே ஃபங்ஷனுக்கு முதல் ஆளாக போனான். அங்கே இங்கே என சுற்றியதில் டான்ஸ் ஆடும் பெண்கள் மேக்கப் அறைக்கு அருகில் நின்று கொண்டிருந்தான். ஏதோ ஒரு வீணாப் போன கமிட்டியில் இருந்ததால், அந்த சைட் சுற்றும் ஜூனியர் பசங்களை விரட்டிக் கொண்டிருந்தான். ஒரு ரூமில் இருந்து இன்னொரு ரூமிற்கு மேக்கப் ஜூவல்ஸ் போடுவதற்காக திவ்யா போய்க் கொண்டிருந்த போது, கணேஷ் கவனித்தான். இத்தனை நாள் சல்வார் கமீஸ், சுரிதாரில் பார்த்து கொண்டிருந்தவளை முதன்முறையாக அம்சமான பட்டுசேலையில் அழகாக பார்த்த போது கணேஷ் ”வாவ்வ்வ்வ்” என வாயைப் பிளந்து ரசிக்க ஆரம்பித்தான். ஆனால் திவ்யா கணேஷ் காதலை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தபோது “அய்யோ” எனவும் இருந்தது. கொஞ்ச நேரம் பேசினாள். அப்போது எல்லாரும் கணேஷை பொறாமையாக பார்ப்பதுபோல் இருந்தது அவனுக்கு பெருமையாக இருந்தது. திவ்யா நன்றாக ஆடினாள். அவள் ஆடியதற்கு கணேஷ் ஃப்ரண்ட்ஸ் அவனை விஷ் பண்ணினர்.

இதற்கு மேல் கணேஷ் எவ்வளவு யோசித்தும் ஃப்ளாஷ்பேக்கில் நடந்த விஷயங்கள் நினைவில் இல்லை. ”பின் அவ என்ன கல்ச்சுரல்ஸ்டே அன்னிக்கு நடந்ததை பத்தி சொல்ல வந்தா?” இந்த குழப்பத்தில் கணேஷ் தூங்கிப் போனான்.

அதிகாலை.. வியாழக்கிழமை. ஒரே ஒரு நாள். இதைத் தாண்டி விட்டால் வெள்ளிக்கிழமை காலை 11.30க்கு சென்னை ஃப்ளைட். (க்ளைமேக்ஸ்??)

சியாமளா மனதில் வேற ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. க்ளையண்ட் ஆஃபிஸில் இருந்த எல்லாரையும் பர்ஸனலாக ஈவ்னிங் பார்ட்டிக்கு அவள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு இன்வைட் செய்தாள் சியாமளா. திவ்யாவையும் இன்வைட் பண்ணினாள். திவ்யா என்ன என கேட்டதற்கு, சியாமளா “சஸ்பென்ஸ்” என்றாள். ஆனால் இவ்வளவு தூரம் சியாமளா பண்ணிக் கொண்டிருக்கும் அரேஞ்ச்மெண்ட்ஸ் கணேஷ்க்கு தெரியாது.

கணேஷின் தற்போதைய லட்சியம் எல்லாம் திவ்யாவிடம் இன்றைய பொழுதைக் கழிப்பது தான். அதனால் சியாமளாவின் சைலண்ட் மூவ்மென்ட்ஸை வாட்ச் பண்ணவில்லை. லஞ்ச் முடிச்சதும் சியாமளா ஹோட்டலில் மீதமிருக்கும் வேலைகளை செய்யக் கெளம்பிவிட்டாள். கணேஷ் கேட்டதற்கு, “எல்லார்கிட்டயும் இன்ஃபார்ம் பண்ணிட்டேன். நாட் ஃபீலிங் வெல். வரும்போது ஏர் டிக்கெட்ஸ் ப்ரிண்ட் அவுட் எடுத்திட்டு வந்திரு” என சப்பையான காரணங்களுடன் சமாளித்து கெளம்பிவிட்டாள்.

கணேஷ் 3 மணியை நெருங்கிக் கொண்டிருந்தபோது, கெளம்பத் தயாரானான். அப்போது திவ்யா அங்கு வந்தாள். “என்ன கணேஷ், நேத்து நான் பேசலாம்ன்னு சொன்னேன்.. அது என்னன்னு கேட்கவே மாட்டியா?”

கணேஷின் நாக்கு வறண்டது, “இல்ல. கொஞ்சம் வேலை இருந்தது, இப்ப சொல்லு. என்ன?”

“வேலை முடிஞ்சதுல்ல. வா நாம டெர்ரஸ் போகலாம்” என திவ்யா சொல்லிக் கொண்டு லிஃப்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். கணேஷ் பின்னாலேயே.

2 நிமிடங்கள் கழித்து.. “என்ன பேசுவது?” என தெரியாமல் கணேஷ் வானத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த போது, திவ்யா ஆரம்பித்தாள்..

“உனக்கு ஒரு கிஃப்ட். கணேஷ். ஓபன் பண்ணு” என கணேஷ் கையினில் திணித்துக் கொண்டே சொன்னாள் திவ்யா.

ஓபன் பண்ணினான். கல்ச்சுரல்ஸ்டே அன்று பட்டுவேஷ்டியில் கணேஷ் நிற்க, பட்டுச்சேலையில் திவ்யா உடன் இருவர் மட்டும் நிற்கும் அழகான ஃபோட்டோ லேமினேட் செய்யப்பட்டு இருந்தது. அதைப் பார்த்த கணேஷ்க்கு என்ன சொல்வதென தெரியாமல் பரவச நிலையில் கலங்கினான்.

“நாட்கள் தான் எவ்வளோ ஃபாஸ்ட்டா போகுதுல்ல கணேஷ்.. நேத்து தான் காலேஜ் ஃபேர்வெல் டே முடிஞ்சி போனது மாதிரி இருந்துச்சி?”

”ம்ம்ம்” என ஆர்வமில்லாமல் ம்ம் கொட்டினான்.

“ஆனா அந்த நாட்கள் எல்லாம் மறக்கவே முடியாது கணேஷ். அப்ப நான் தான் உன்னை ரொம்பவே ஹர்ட் பண்ணேன். அதான் இப்ப மொத்தமா ஸாரி சொல்லிட்டு…?”

“ஸாரி சொல்லிட்டு.. தென்?” அதுவாக இருக்கக்கூடாது என பரபரத்தான்.

“ஸாரி சொல்லிட்டு என்ன நீ ஆசைப்பட்ட மாதிரியே கல்யாணம் பண்ணிக்கலாம்” என வெட்கத்துடன் சொன்னாள்.

“Bull Shit“ என மனதிற்குள் கத்தினான்.

“என்ன கணேஷ்.. நான் சொன்னதை கேட்டு என்னை ஓடி வந்து கட்டிபிடிச்சுக்குவேன்னு நெனைச்சேன்?” என முகத்திற்கு நேராக வந்து கேட்டாள்.

“That’s IMPOSSIBLE” என முகத்தை திருப்பிக் கொண்டு சொன்னான்.

“WHY????” என கலவரமான முகத்துடன் கத்தினாள்.

“நாலுவருஷமா நாய் மாதிரி உன் பின்னாடியே சுத்திட்டு இருந்தேன்ல, அப்பவே இத சொல்லி இருக்கலாம்ல?” என பதிலுக்கு கத்த ஆரம்பித்தான்.

“காலேஜ் நாலு வருஷத்துல ஒரு நாள் கூட நான் உன்னை லவ் பண்றேன்னு உனக்கு புரியவே இல்லையா???? அதான் ஆட்டோகிராப் நோட்ல கூட அப்படி எழுதி கொடுத்தேன்ல?” கண்களில் நீர் தேங்க ஆரம்பித்தது.

“எனக்கு புரியலைன்னே வச்சிக்கோ.. ஒரே ஒரு வாட்டி நீயும் என்ன லவ் பண்றேன்னு சொல்லி இருந்தேன்னா, நாலு வருஷம் இல்ல நாப்பது வருஷம் ஆனாலும் உனக்காக நான் காத்திட்டு இருந்திருப்பேன். ஆனா நீ பண்ணது எல்லாமே கண்ணாமூச்சி விளையாட்டு. நீ எழுதிக் கொடுத்ததை ஒவ்வொருவாட்டி படிக்கும்போதும் ஒவ்வொரு மீனிங். அவ்வளோ எழுதுன நீ “ஐ லவ் யூ டூ டா”ன்னு முடிச்சி இருந்தேன்னா, இந்நேரம் எப்படி இருந்திருக்கும்?” கணேஷும் ரொம்ப எமோஷனல் ஆகிவிட்டான்

“இப்ப மட்டும் என்ன கணேஷ்.. காலேஜ் முடிஞ்ச இந்த நாலு வருஷத்துல என்னை மறந்துட்டீயா?”

“இந்த நாலுவருஷம் அட்லீஸ்ட் ஒரு இமெயில், ஒரு ஃபோன் கால். நீ ஹையர் ஸடடீஸ் பண்ணப் போயிருக்கன்னு எவனோ ஒருத்தன் சொல்ற அளவுக்கு நான் யாரோ ஒருத்தன் ஆயிட்டேன். நீ இதெல்லாம் ஏதோ ஒண்ணு பண்ணியிருந்தாக் கூட உன்மேல இருந்த லவ் அப்படியே இருந்திருக்கும்”

“இப்ப அந்த லவ் அப்படியே இல்லையா கணேஷ். நான் ஏன் அப்படி பண்ணேன், என்னோட ஃபேமிலி ப்ராப்ளம்ஸ் இதெல்லாம் உனக்கு தெரியுமா?”

“என்ன உண்மையிலேயே நீயும் லவ் பண்ணியிருந்தேன்னா, என்னையும் உன் ஃபேமிலில ஒருத்தனா நெனச்சி எல்லாம் சொல்லி இருந்திருப்ப? எவனோ ஒருத்தனுக்கு இமெயில் அனுப்புற நீ, எனக்கு அனுப்பியிருக்கலாம்ல..”

“ஓ.கே. லீவ் இட்.. நெக்ஸ்ட் மன்த், நேர்ல வந்து உன்கிட்ட இது பத்தி பேசலாம்ன்னு இருந்தேன். லக்கிலி…”

“டூ லேட்?”

“வாட் டூ யூ மீன்?”

“எனக்கு மேரேஜ் ஆயிடுச்சி” கணேஷ் பெரிய பொய்யை சொன்னான்.

“சியாமளா உனக்கு இன்னும் ஆகலைன்னு சொன்னா” அதிர்ச்சியின் உச்சியில் பொறுமையிழந்தாள்.

“ஆமா.. மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சி.. இன்னும் டூ வீக்ஸ்ல கல்யாணம். உன்னால ஒரு பொண்ணு வாழ்க்கையைக் கெடுக்க விரும்பல?”

”நீ ஆசைப்பட்ட பொண்ணு நான்.. வேணாமா கணேஷ்?” கண்களில் காதலை தேக்கிவைத்து கேட்டாள் திவ்யா.
“நான் ஆசைப்பட்ட பொண்ணை விட, என்னை ஆசைப்பட்ட பொண்ணு தான் எனக்கு முக்கியம்” அவள் முகத்தை பார்க்க திராணியில்லாமல் வானத்தைப் பார்த்து சொன்னான்.

”ஆல்ரைட்.. இதுக்கு மேல உன்னை ஃபோர்ஸ் பண்ண விரும்பலை கணேஷ். பை” என சொல்லிவிட்டு விருவிருவென போய்விட்டாள்.

கணேஷ் திரும்ப அவன் இடத்திற்கு வந்து எல்லாவற்றையும் பேக் பண்ணிவிட்டு கெளம்பினான். லிஃப்டிற்கு அருகில் சென்றபோது திவ்யாவும் நின்றிருந்தாள். “ஹோட்டல் தானே போற. நான் ட்ராப் பண்றேன்.. வா கணேஷ்” என்றாள் திவ்யா.

காரில் போய்க் கொண்டிருந்தனர். திவ்யா அருகில் கணேஷ் அமர்ந்திருந்தான். கணேஷ் இப்போது கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருந்தான். ஆனால் திவ்யா நிலநடுக்கம் வந்துபோன இடம் போல் இருந்தாள். ரோட்டை பார்த்துக் கொண்டே திவ்யா சீரியஸாகக் கேட்டாள்.

“நீ கட்டிக்கப் போற பொண்ணு என்னை விட அழகா இருப்பாளா கணேஷ்?”

அழுவதா சிரிப்பதா? கணேஷ்க்கு தெரியவில்லை.

********************************************

சியாமளா-19: திவ்யா ஆரம்பித்த ஃப்ளாஷ்பேக்

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19

கணேஷ் நகத்தைக் கடித்துக் கொண்டே உச்சபட்ச டென்ஷனில் வீக் எண்டைக் கழித்தான். சியாமளா ரொம்ப சீரியஸாக எல்லா பர்ச்சேஸையும் ஓடியாடி பண்ணிக் கொண்டிருந்தாள். “அடுத்த ஐந்து நாட்களை மட்டும் தாண்டிவிட்டால், அடுத்த வீக் எண்ட் இந்தியாவில் தான். திவ்யாவிடம் இருந்து எஸ்கேப் ஆகவேண்டும்” என திவ்யாவை சமாளிப்பதற்கு வித்தியாசமாக ப்ளான் பண்ணிக் கொண்டிருந்தான்.

அடுத்த நாள் திங்கள்கிழமை. ஆஃபிஸ்க்கு வந்த நேரத்தில் இருந்து கணேஷ் ரெஸ்ட்லெஸ்ஸாக பரபரவென இருந்தான். “நீயும் ரெண்டு மூணு நாளா ஒரு ரேஞ்சா தான் இருக்க. ஸம்திங் ராங்” என கீபோர்டைத் தட்டிக் கொண்டு மானிட்டரைப் பார்த்துக் கொண்டே அசுவாரஸ்யமாக சியாமளா சொன்னாள். “நோ, ஐயாம் ஆல்ரைட்” என அந்தநேரத்தில் சமாளித்தான்.

“தேங்க் காட்” என கடவுளுக்கு நன்றி சொன்னான் கணேஷ். அன்று முழுவதும் திவ்யா வரவில்லை. 5 மணிக்கே ஆஃபிஸில் இருந்து கெளம்பி ரூம் வந்துவிட்டனர். “இன்னும் நாலே நாலு நாள். ஹவர்ஸ்படி பார்த்தா 32 ஹவர்ஸ். எப்படியாவது இந்த சைத்தானின் நகரம் லண்டனில் இருந்து கெளம்பிவிட்டால் சைத்தானிடம் இருந்தும் தப்பிவிடலாம்” என மல்லாக்கப் படுத்துக் கொண்டே மனக்கோட்டைக் கட்டி கொண்டிருந்தான் கணேஷ். ஆனால் அந்த கோட்டை ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்கவில்லை. மறுநாள் காலை பேண்ட்ரியில் இருவரும் காஃபி ப்ரிப்பேர் பண்ணிக் கொண்டிருந்த போது, “ஹலோ, என்ன நான் வர்ற வரைக்கும் வெயிட் பண்ண முடியாதா? அதுக்குள்ள கெளம்பறதுக்கு ரெடி ஆகிட்டீங்க?” என கணேஷை பார்த்து கேட்க வேண்டியதை சியாமளாவை நோக்கி அதிகார தோரணையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள் திவ்யா.

“நோ நோ.. நாங்க இத இனிஷியேட் பண்ணவே இல்ல.. மேனேஜ்மென்ட் ப்ரஸ்ஸர்” என சியாமளா இழுத்தாள்.

“ஓ.கே. எனிவே, இன்னும் ஒண்ணே ஒன்னு தான் பாக்கி இருக்கு. என்னோட ப்ரோப்பஸல், ப்ளஸ் அதோட ஸ்டேட்டஸ், ஸ்பான்ஸர்ஸ்கிட்ட டீலிங் ஓடிட்டு இருக்கு. இன்னும் டூ த்ரி டேய்ஸ்ல முடிஞ்சிடும்ன்னு நெனைக்கிறேன்” இந்த முறை கணேஷிடம் ஃபேஸ் டூ ஃபேஸ் பார்த்து டபுள்மீனிங்கில் பேசினாள் திவ்யா. அது கணேஷுக்கு தெளிவாக புரிந்தது. ஐ காண்டாக்ட்டை தவிர்த்தான்.

“இன்கேஸ், டீல் ஓகே ஆயிடுச்சின்னா, நெறைய்ய வேலை இருக்கும்.. அஃப்கோர்ஸ், நீங்க இன்னும் டூ வீக்ஸ் ஸ்டே எக்ஸ்டெண்ட் பண்ற மாதிரி இருக்கும்.” என்று சொல்லிவிட்டு அவசரமவசரமாக அவள் மேனேஜரை நோக்கி ஓடினாள் திவ்யா.

“இவ பேசுறது எனக்கு மட்டும் டபுள்மீனிங்கா இருக்கா.. இல்ல அவ வேணும்னே அப்படி பேசுனாளா?” கணேஷ்க்க்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. சியாமளாவிடம், “சீக்கிரமா கெளம்புனா நல்லா இருக்கும்” என அங்கலாய்த்தான் கணேஷ். “நாம என்ன பண்ண?எல்லாம் அந்த ஸ்பான்ஸர் கையில தான் இருக்கு.” என்றாள் சியாமளா. “ஆஹா.. சியாமளா, யூ டூ?” என மனதுக்குள் அவளைத் திட்டிக் கொண்டான் கணேஷ்.

அன்று முழுவதும் திவ்யாவிடம் இருந்து அப்டேட்ஸ் வரவில்லை. ”இன்னும் த்ரீ டேய்ஸ். 24 வொர்க்கிங் ஹவர்ஸ்” என்ற கவுண்ட்டவுனை மனதுக்குள் செட் பண்ணிவிட்டு ரொம்ப நேரம் கழித்து தூங்கினான் கணேஷ்.

மறுநாள் லஞ்ச் ஹவர் தாண்டி 3 மணிக்கு, திவ்யா இடத்திற்கு வந்தாள். “உங்களுக்கு குட்நியூஸ். Guess what?” என்றாள்

”ஓ.. க்ரேட்.. நாங்க நாளைக்கு ஊருக்கு போறோம்? கரெக்ட்டா?” சியாமளா துள்ளினாள்.

“நோ” தலையை வேகமாக ஆட்டினாள்.

”அய்யோ” என அலறினான் கணேஷ்.

“இல்ல.. Friday தான் போறீங்க.. நியூ ப்ராஜெக்ட் கேன்சல்ட்” என சோகமாக சொன்னாள் திவ்யா.

இருவர் முகத்திலும் உற்சாக கரைபுரண்டு துள்ளிக் குதித்து ஓடியது. லேப்டாப்பை பேக் பண்ணிவிட்டு, ஆஃபிஸில் இருந்து கெளம்ப தயாரானார்கள். சியாமளா ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டாள். கணேஷ் அவளுடைய லேப்டாப் பேகையும் எடுத்துக் கொண்டு லிஃப்ட் அருகே வெயிட் பண்ணிக் கொண்டிருந்தான். அப்போது புயலாக அந்த இடத்திற்கு வந்தாள் திவ்யா.

“ஹாய் கணேஷ்” என்றாள் திவ்யா. லைட்டாக வெட்கம் கலந்த டோனில் அவள் அழைத்தபோது கல்லூரி நாட்களின் ஃபீல் இருந்தது.

“ஹாய்ய்ய்” என இழுத்தான். “போச்சு.. I’m cornerd. I am helpless” என சிவாஜி ரஜினி கணக்காக ரெஸ்ட்ரூம் நோக்கி பார்வையை வீசினான்.

“எப்படி இருக்க கணேஷ்? சரியாவே பேச மாட்டேங்குற, மறந்துட்டீயா?” என கணேஷின் கண்களை ஆழமாக பார்த்துக் கொண்டே கேட்டாள்.

”நோ.. நாட் லைக் தேட்.. டூ பி ஃப்ராங்க், உன்னை இந்த ஆஃபிஸ்ல நான் எதிர்பார்க்கவே இல்ல” என சமாளித்தான்.

“ம்ம்ம்.. யெஸ்.. நான்கூட உன்னை இங்க எதிர்பார்க்கல.. ப்ளசண்ட் ஷர்ப்ரைஸ். நான் உனக்கு இந்தியா வந்து ஷாக் கொடுக்கலாம்ன்னு நெனச்சி இருந்தேன்” என்றாள் மனதில் கட்டியிருந்த நான்கு வருட காதல்மாளிகையின் முதல் வாசலைத் திறந்தாள்.

“ஷாக்கா? எப்ப வரலாம்ன்னு இருந்த?” என சொல்லிக் கொண்டே ரெஸ்ட்ரூம் நோக்கி மறுபடியும் பார்த்தான். “இவ என்ன உள்ளே போய் ஒண்டே கிரிக்கெட் மேட்ச்சா பார்த்துட்டு இருக்கா? இன்னும் வரமாட்டேங்குறாளே?” என டென்ஷனில் நறநறத்தான்.

“உனக்கு நியாபகம் இருக்கா கணேஷ்… கல்ச்சுரல்ஸ்டே அன்னிக்கு…. “ என அவள் ஃப்ளாஷ்பேக்கை நீட்டி முழக்க ஆரம்பித்த நொடியில், சூப்பர்ஸ்டார் போல் வேகவேகமாக நடந்துவந்தாள் சியாமளா.

திவ்யா நிறுத்திவிட்டாள். “ஹப்பாடா” என மொத்தமாக சேமித்துவைத்திருந்த மூச்சை பெருமூச்சாக வெளியே விட்டான். கேஷுவலாக வந்து இருவரின் அருகே சியாமளா மையமாக நின்றுகொண்டாள். லிஃப்டினுள் நுழைந்து கொண்ட மூவரும் க்ரவுண்ட் ஃப்ளோர் வரும்வரை பேசிக் கொள்ளவில்லை.

“தென்.. பை சியாமளா.. நாம நாளைக்கி பேசலாம் கணேஷ். பை” என திவ்யா சொல்லிக் கொண்டே பார்க்கிங் நோக்கி நகர்ந்தாள். ரெஸ்பான்ஸ் வராமல் போகவே நின்றவள் திரும்பிபார்த்தபோது

“ஷ்யூர்” என தலையை அசைத்துக் கொண்டான் கணேஷ்.

“What is happening?” சியாமளா நார்மலாகக் கேட்டது கணேஷுக்கு மூளையில் தந்தி அடித்தது. “உண்மையை சொல்லிவிடலாமா இல்லை ரெண்டு நாள் தானே சமாளித்துவிடலாம்?” என யோசித்ததில் சமாளித்துவிடலாம் என முடிவெடுத்து ஏதோ சொல்லி சமாளித்தான்.

ஆனால் அதுதான் கணேஷ் பண்ணிய தவறு!

***************************************

சிவப்பில் வளர்ந்த‌ சிவப்பு


வெள்ளிபுகையின் நடுவே
அதிகாலைப் பனியில்
வெட்கத்தில் சிவப்பவளும்
கோபத்தில் சிவப்பவனும்
முட்டிக் கொண்டபோது
பார்வைகளில் பாஸ்பரஸ்
பற்றிக் கொள்ள‌
வார்த்தைகள் வளர‌
வெள்ளைக் கொடி பறந்தது
சிவப்பவளும் சிவந்தவனும்
சிவப்பதை சிறிதுநேரம்
மறந்துவிட்டனர்
கடுப்பில் சிவந்த சிவப்பு
இடமாற்றமடைந்து
அவஸ்தையாக ஆட்டோகாரனின்
வாயில் வளர‌
'ஓரமா நின்னு ரொமான்ஸ் பண்ணுப்பா'
என முடித்துக் கொண்டு
அவன் விலகி ஓட
சமாதானத்துடன் திரும்பவும்
அவர்களிடம் ஒட்டிக் கொண்டது
சிவப்பில் வளர்ந்த‌
சிவப்பு

***********************

2 States - Chetan Bhagat - Book Review


நான் கணேஷ்-சியாமளா தொடர் ஆரம்பித்தபோது ஒரு நண்பர் ஆன்லைனில் வந்து ”சேத்தன் பகத்தின் 2 States படித்திருக்கிறீர்களா, அந்த புத்தகமும் உங்கள் தொடர் போல The Story of My Marriage தான்” என்று கூறினார். உடனே அவரிடம் ”இந்த தொடர் ஒன்றும் என் கல்யாணத்தின்(இன்னும் எனக்கு கல்யாணமே ஆகலைய்யா ) கதை இல்ல, ஜஸ்ட் கற்பனை கதை தான்” என அந்த நிமிடத்தில் அவரிடம் சொன்னேன். இருந்தாலும் ஆர்வம் பொத்துக் கொண்டு உடனே அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என ஆசை தொற்றிக் கொண்டது.

ஆரம்பத்தில் கொடுக்கபட்ட பில்டப் படி பார்த்தால் ஹீரோயின், தமிழ்நாட்டு ஐயர் பெண் அனன்யா ஒரு பேரழகி. சிம்பிளா சொன்னால் 14 பேர் ப்ரோப்பஸ் பண்ணும் அளவுக்கு அழகுன்னா அழகு. தமிழ்சினிமா மாஸ் ஹீரோ ஓபனிங் சீனில் சண்டை போட்டு ஆரம்பிப்பது போல், இவருக்கு இண்ட்ரோ கொடுக்கும்போதே IIMA ஹாஸ்டல் சமையற்காரரிடம் சாம்பாரில் உப்பு இல்ல என சண்டையுடன் தெனாவட்டுடன் ஆரம்பிக்கிறார் சேத்தன். இதெல்லாம் விட பீர், மாக்டெயில், சிக்கன்பிரியாணி என மானாவாரியாக பொளந்துகட்டும் மாடர்ன் அய்யர் பெண்ணாக வலம் வருகிறார்.

அந்த எழுத்தாளரின் சொந்தக் கதை ப்ளஸ் கொஞ்சம் ஃபிச்ஷனுடன் என்று டிஸ்கி போட்டு தான் ஆரம்பிக்கிறார்.. அதனால் அவர் தான் ஹீரோ க்ரிஷ் ஃப்ரம் பஞ்சாப். முதல் எபிசோடிலேயே ஹீரோயினுடன் பிக்கப் ஆகி ரெண்டு பேரும் ஒன்றாக வெளியில் போய் சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். அடுத்த எபிசோடில் எகானமிக்ஸ் புரோஃபசர் கேள்வி கேட்டு அழவைத்து அனன்யாவை, அழுகாச்சி அனன்யாவாக ஆக்க, ஹீரோ கன்வின்ஸ் பண்ண முடிவில் ரெண்டு பேரும் கம்பைன் ஸ்டடி (Not Exactly Like மன்மதன், But Somewhat like on LATER) பண்ண முடிவெடுக்கிறார்கள். அழகு பெண்ணுடன் கம்பைன் ஸ்டடி பண்ணும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும், ஹூம்ம்ம்ம்.

ஆரம்பத்தில் அவன் அனன்யாவின் ஹாஸ்டல் ரூமில் போய் படிக்க ஆரம்பிக்க, அங்கே அவன் ரொம்ம்ம்ப நல்ல பையனாக நடந்து கொள்கிறான். சில நேரங்களில் அனன்யாவிற்கு தெரியாமல் அவளை இன்ச் பை இன்ச் ஆக சைட் அடிக்கிறான்,. ஒன் ஃபைன் டே, அனன்யாவை அவாய்ட் பண்ண ஆரம்பிக்கிறார் ஹீரோ. ஏனென்றால் ஹீரோவுக்கு ஹீரோயின் மேல் லவ், பொஸஸிவ்னெஸ். ஹீரோயின் கண்டுபிடித்து ஏன் என விசாரிக்க ஹீரோ ரூம் வர, கிஸ்ஸடிக்கிறார் ஹீரோ. அதாவது அவர்கள் ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிக்கிறார்கள். அதற்கப்புறம் ஏதேதோ பண்ணுகிறார்கள் நடுநடுவே படிக்கிறார்கள், கேம்பஸ் இண்டர்வியூவில் ப்ளேஸ் ஆகிறார்கள். ரெண்டு பேரும் ‘ஜோடி’ படம் ஸ்டைலில் ரெண்டு குடும்பத்தை கன்வின்ஸ் பண்ண ஆரம்பிக்க, குடும்பங்கள் முட்டிக் கொள்ள, பின்னர் ஜோடி முட்டிக் கொள்ள, முடிவில் கல்யாணத்துடன் சுபம். முடிவில் இலவச இணைப்பாக அந்த ஜோடிக்கு, ட்வின்ஸ் பிறந்ததுடன் முடிக்கிறார் எழுத்தாளர்.

ஆனால் இந்த கதையை நகர்த்திக் கொண்டு போனதில் ஒவ்வொரு எபிசோடிலும் சுவாரஸ்யம் மின்னுகிறது. ஆங்காங்கே பளிச் நக்கல்கள். ரெண்டு மாநிலத்தையும் கன்னாபின்னாவென ஓட்டியிருக்கிறார். ஆரம்பத்தில் அப்பாவைச் சுற்றி டெவலப் பண்ண முடிச்சுகள், கொஞ்சம் கொஞ்சம் அவிழ்க்கப்பட்டு, க்ளைமேக்ஸில் ஆச்சர்ய அதிர்ச்சியாக முடிந்திருக்கிறது.

ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ், நோ IIT ப்ரதர் என பல உடன்பாடுகள் ஆரம்பத்தில் போடப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் புரிந்து கொண்டபின் வரும் பொஸஸிவ்னெஸ், பிரிவு என இளமை ரூட்டில் கலாட்டாவாக பயணிக்கிறது, அதுவும் ஹீரோயின் மைக்ரோ ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டு கேம்பஸ் வெளியே போக வேண்டும், என அடம்பிடிக்கும்போது, ஹீரோவிற்கு கோபம் ப்ளஸ் பொஸஸிவ்னெஸ் பொங்கி வருகிறது. பேசாமல் ஒரு வாரம் இருக்கிறார். இந்த இடத்தில் பசங்க ரொம்ப கேர்ஃபுல்லாக மூவ் பண்ணவேண்டும். பேசாமல் இருந்தால், பொண்ணுங்க தேடி வரவேண்டும். அதாவது அந்த அளவுக்கு டீஸண்டாக பழகி நல்ல இம்ப்ரெஷ்ஷன் டெவலப் பண்ணி இருக்க வேண்டும். இல்லையென்றால் ‘நல்ல வேளை, அந்த மொக்கை தொல்லை இனிமே இல்லை’ என ரைமிங்காக பாடிவிட்டு பொண்ணுங்க கழன்று விடுவார்கள். அந்த மாதிரியான சிச்சுவேஷனை நல்ல முறையில் யூஸ் பண்ணி இருக்கிறார் சேத்தன்.

அதே போல் காதலில் தான் கன்னா பின்னாவென இன்ஸ்டின்க்ட்ஸ்(Instincts) தோன்றும், வொர்க் அவுட் கூட ஆகும். அதையும் செம கலாட்டாவாகக் காட்டியிருக்கிறார். எல்ல்ல்லாம் முடிந்த பிறகு அனன்யாவிடம் கல்யாணம் பண்ணுவது குறித்து உறுதியான ப்ளான் சொல்லாமல், அவளை ஹர்ட் பண்ணி சொதப்பிக் கொண்டிருக்கிறார் ஹீரோ. அந்த நேரத்தில் சிட்டி பேங்க் இண்டர்வியூவில் ரிசல்ட்டுக்காக பல்லைக் கடித்துக் கொண்டு காத்திருக்க, மனசாட்சி ”அனன்யாவிற்கு ப்ராமிஸ் பண்ணலைன்னா மகனே இண்டர்வியூ ஊத்திக்கும்” என எச்சரிக்கை மணி அடிக்கிறது. பயந்துகொண்டு ஓடிபோய் HLL (ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட்) இண்டர்வியூ பேனலில் உட்கார்ந்திருக்கும் அனன்யாவை இழுத்து ‘ஐ லவ் யூ. கல்யாணம் பண்ணிக்கலாம்’ என சொல்வது ரொமாண்டிக்கான எபிசோட்.

அதன்பின் ஹீரோ சென்னை சிட்டிபேங்க் வேலைக்கு சென்னை வருகிறார். அனன்யா அப்பாவுடன் ஒட்டுவதற்கு ஏகப்பட்ட பிரயத்தனம் பண்ணி பின்னர் ஒரு நாள் ஒன்றாக தண்ணி அடிக்கிறார். மாமனாருடன் தண்ணி அடிக்கும் அனுபவம் நெறைய்ய மாப்பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. அனன்யாவின் அம்மாவுக்கு, பாட்டு பாட சான்ஸ் வாங்கிக் கொடுத்து பேர் வாங்குவது எல்லாம் விக்ரமன் நெறைய்ய படங்களில் காட்டிவிட்டார். இந்த காதல் ஜோடி, காலையில் 5 மணிக்கு மெரீனா பீச், நுங்கம்பாக்கம் தாபா ஹோட்டல் என சாப்பிடும் இடங்களில் எல்லாம் காதலிக்கிறார்கள். எல்லா இடத்திலும் அனன்யாவுக்கு ஹீரோவின் சாப்பாடு ஒட்டிக் கொண்ட வாயை துடைப்பதிலேயே நேரம் போகிறது. அப்பாவின் அழுக்கு லுங்கியை கட்டிக் கொண்டதற்கெல்லாம், முத்தமா? அதுவும் பப்ளிக்கா ரத்னா ஸ்டோர்ஸில்? என்னக் கொடுமை அனன்யா இது?

பஞ்சாபி குடும்பங்களை Big BOSOM லேடீஸ், Hyundai ACCENT க்கு ஆசைப்படும் மாமனார், எல்லாவற்றிற்கும் மேல் dry fruits, பெட்ரோல் பம்ப், மார்பிள் ஃப்ளோர்ஸ்க்கு ஆசைப்படும் அம்மா என எக்கசக்கமாக ஓட்டியிருக்கிறார்.. அங்கு அனன்யா, ஹீரோவின் குடும்பத்தை கன்வின்ஸ் பண்ணும் இடமும் அக்மார்க் தமிழ்சினிமாவின் வாடை. இந்த கேப்பில், தென்னிந்திய பெண்கள் ஹேமமாலினி, ஸ்ரீதேவி போல், வட இந்திய ஆண்களை வலைவீசி வீழ்த்துவதாக சொல்வது, எக்ஸ்ட்ரா காமெடி செக்மெண்ட்ஸ். கோவாவில் ரெண்டு குடும்பத்துக்கும் சுமூகமான உறவில் விரிசல் விழ அதுவே காரணமாக இருப்பது சோக செக்மெண்ட்ஸ். இதில் ஜோடி பிரிவது எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா சோகம்.

இதில் ஹீரோவுக்கு மெண்டல் ஸ்ட்ரெஸ் வந்து, தாடி வைத்து தேவதாஸாக மாறி அனன்யாவை சந்திக்க சென்னை வர, அங்கே அனன்யா அலட்சியமாக தூக்கி எறிய ஹீரோ சைக்கியாட்ரிஸ்ட்டிடம் ட்ரீட்மெண்ட் போகிறார். இங்கே ஹீரோவுக்கு தமிழ்பெண்களை டீல் செய்யும் வித்தை தெரியவில்லை. இப்படி மிரண்டு பிடிக்கும் அவளிடம், நேராக ஒரு ஃபிகருடன் போய் நின்று ‘இவளைத் தான் கட்டிக்கப் போறேன். நெக்ஸ்ட் வீக் கல்யாணம்” என ஒரு ஜாலியாக ‘பாய்ஸ்’ டைப் பிட்டை போட்டிருந்தால் அங்கேயே நாவல் முடிந்து இருக்கும். வேஸ்ட் ஃபெல்லோ.

தமிழின் பச்சைபச்சையான கெட்ட வார்த்தைகள் சென்னை ஆட்டோ டிரைவரிடமும் சமையற்காரரிடம் இருந்து சரளமாக விழுவது ஆச்சர்யமில்லை. அதை மெனக்கெட்டு ரெண்டு எபிசோடில் அப்படியே போட்டிருக்கிறார் சேத்தன். இதே போல் இன்னும் நாலைந்து எபிசோடில் தெளித்து இருந்தால் இலக்கிய வாடை கிடைத்திருக்கும். இலக்கியங்கள் இப்படிதான் உருவாகின்றன. மிஸ் பண்ணிட்டீங்க பாஸ். (இதெல்லாம் பொண்ணுங்களுக்கு தெரியாது என இத்தனை நாள் நினைத்து இருந்தேன்)

சாம்பார் வாசம் வீசும் சிட்டி, ரஜினிகாந்த் பவர், WAX பண்ணாத பெண்கள், கலர் கலர் சட்னி, வாழை இலை, ‘THE HINDU’ மேனியா, லஞ்சம் வாங்கும் போலீஸ்காரர் என தமிழ்நாட்டின் பாரம்பரியமான பல விஷயங்களை பாரபட்சம் பார்க்காமல் ஓட்டியிருக்கிறார். ஆனால் எல்லாம் சுவாரஸ்யமான எள்ளல். அதிலும் க்ளைமேக்ஸில் நடக்கும் மிக்கி மவுஸ் underwear கூத்து, அட்டகாசமான ROTFL வகை. அனன்யாவிற்கு பிடித்திருக்கிறது என்பதற்காக மிக்கி மவுஸ் படம் போட்ட ஆறு செட், அதை மாமனாருடன் மாத்திக் கொள்ளும் ப்ளான், மெல்லிய வேட்டி வழி வெளியே தெரிய சிறுவர்கள் ‘மிக்கி மவுஸ், மிக்கி மவுஸ்’ என கத்த, படிக்கும்போது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

நேரம் கிடைத்தால் படிக்க ஆரம்பிக்கலாம். படிக்க ஆரம்பித்தால் முடிக்காமல் கீழே வைக்க மனம் வராது. படித்து முடித்தவுடன் அனன்யா போல் ஒரு ஃபிகர் கிடைக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

**************************

சியாமளா-18: இந்தியா திரும்பும் முன்?

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

கணேஷ் சியாமளாவிடம் இந்த மாதிரியான ரெஸ்பான்ஸை எதிர்பார்க்கவில்லை. அதே சமயம் கல்யாணத்திற்கு முன் ரொம்ப ஓவராக அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் முடிவு செய்துகொண்டான். சியாமளா அன்று நடந்த சம்பவத்திற்கு பின் கணேஷிடம் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவன் ரூமிற்கும் வருவதில்லை. ரொம்ப நார்மலாக, “வாட் இஸ் வாட்?” என்ற அளவில் மட்டும் பழக ஆரம்பித்தாள். சியாமளாவின் இந்த திடீர் மாற்றம் கணேஷை ரொம்ப கஷ்டப்படுத்தியது. ரெண்டு நாட்களுக்கு மேல் அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஆஃபிஸ் விட்டு கெளம்பும்போது, நேராக அவளிடம் கேட்டுவிட்டான். ”ஹேய், ஐயாம் ஸாரி”

“தட்ஸ் ஓ.கே” என்றாள் பட்டும்படாமல்.

”நீ ஏன் இப்படி இருக்க? முன்ன மாதிரி ஃப்ரீயா பேச மாட்டேங்குற..கோவமா இருந்தா திட்டிடு. இப்படியெல்லாம் பண்ணாத”

“” அமைதியாக வந்தாள்.

“இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?”

“வேணாம்.. கொஞ்ச நாள் நாம இப்படியே இருந்திடலாம். அதான் நாம ரெண்டு பேருக்கும் நல்லது. இன்னும் 3 வீக்ஸ் தான?”

“அதான் ஏன்?”

“ஏன்னா, நம்ம ரெண்டு பேருக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை”

“ம்ம். ஸோ??”

“இதுக்கப்புறம் நான் எதையும் என்கரேஜ் பண்ண விரும்பலை”

“ம்ம்ம்”

“உன்ன ஹர்ட் பண்றதுக்காக நான் இதை சொல்லலை?”

“யா.. நாட் அ ப்ராப்ளம். I understand.” கணேஷ் மனதில் கோபம் துளிகூட இல்லாமல், அவள் பாய்ண்ட் ஆஃப் வியூவில் இருந்து சொல்லப்படும் காரணங்களை புரிந்து கொண்டான்.

“தேங்க்ஸ். You are TOO good” என்றாள் மீண்டும் பழக்கமான உற்சாகம் நிறைந்த குரலில்.

இப்படி நல்ல புரிதலுடன் இருவரின் வாழ்க்கையும் ஒன்றாக சென்று கொண்டிருந்த போது, அந்த அதிர்ச்சி இமெயில் வந்தது.

“உங்களின் வந்த வேலை முடிந்துவிட்டதால், நீங்கள் சீக்கிரம் இந்தியா வர வேண்டி இருக்கும். அடுத்த வாரம் கூட இருக்கலாம்” என்பது தான் அந்த இமெயில் செய்தி.

லைட்டாக ஷாக் ஆகி, “நம்ம பி.எம் இந்த இமெயில்ல என்ன சொல்ல வர்றாரு? டவுட்டா இருக்கே?” என கிண்டலாகக் கேட்டான்.

”ஓ.. அதுவா.. லாஸ்ட் வீக் ப்ரிப்பேர் பண்ண ப்ரோப்பஸல்ல டேவிட் நேத்து சைன் பண்ணிட்டான். அதை சொல்றாரு” என்றாள் சியாமளா நறநறவென, கண்ணடித்துக் கொண்டே.

“ஓ.. ஐ ஸீ.. ரொம்ப நல்லதா போச்சி. ஷாப்பிங் ஆரம்பிச்சிடலாம். இங்க சம்பாதிச்ச ஒரு பைசாவக் கூட நாம எடுத்திட்டு போகக் கூடாது. ஓ.கேவா?” என்றான்.

“ஓ.கே டீல்”

கணேஷ்க்கு திவ்யாவிடம் இருந்து எஸ்கேப் ஆகியாகிடலாம் என்ற சந்தோஷம் அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் ஆயிரக்கணக்கில் பறக்க வைத்தது. நாட்களை மிகக் கொடுமையாக ஆஃபிஸில் தள்ளிக் கொண்டிருந்தனர். ரெண்டு நாள் ஆனபிறகும். மேனேஜரிடம் இருந்து கெளம்புவது சம்மந்தமாக எதுவும் வரவில்லை. மீண்டும் இமெயில் அனுப்பினான்.

“நீ ஏன் அவசரப்படுறே? க்ளையண்ட்க்கு இன்ஃபார்ம் பண்ணனும். லாஜிஸ்டிக்ஸ் டிக்கெட் அரேஞ்ச் பண்ண வேணாமா? நாம வேற ஷாப்பிங் முடிக்கல?” என சியாமளா கணேஷின் அவசரம் புரியாமல் எகிறினாள்.

“இல்ல.. அவர் மறந்திருப்பார்ல.. ஜஸ்ட் ரிமைண்டர் இமெயில் அனுப்புறதுல என்ன தப்பு?” என சமாளித்தான்.

“ஓ.கே. அதுவும் கரெக்ட் தான்” என லேப்டாப்பில் மூழ்கினாள்.

அந்த நாள் மேனேஜரிடம் இருந்து எதுவும் ரிப்ளை வரவில்லை. கணேஷும் மறந்துவிட்டான். ஈவ்னிங் ஷாப்பிங் போய் பேர்ல்ஸ், எல்லாருக்கும் வாட்ச், நிறைய ட்ரெஸ் எல்லாம் வாங்கினார்கள். இரவு வர லேட்டாகிவிட, சப்வேயில் ஸாண்ட்விச் முடித்துவிட்டு, பட்டர்ஸ்காட்ச் மில்க் ஷேக்குடன் ஹோட்டல் ரூம் வந்தனர். மறுநாள் காலையில், மேனேஜரிடம் இருந்து இமெயில்.

“உங்களை ரிலீஸ் பண்ணுவதற்கு க்ளையண்ட் மேனேஜரின் அப்ரூவல் தேவை. அவர் இன்றுக்குள் அனுப்பிவிடுவார். அதன்பின் உங்களுக்கு தெரியவரும்” இது தான் அதன் செய்தி.

சியாமளா கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருந்தாள். இமெயிலை பார்த்தவுடன், அவள் பார்த்த பார்வையில், “அதான் அப்பவே சொன்னேன்ல” என்பது போல் இருந்தது கணேஷ்க்கு.
பாஸிட்டிவ்வாக வர வேண்டும் வேண்டிக் கொண்டான் கணேஷ். இருந்தாலும் உள்ளூர பயம் கவ்விக் கொண்டிருந்து இருந்தது.

ஆஃபிஸில் ரெண்டு மணிநேரம் தாண்டி பசிக்கும் நேரம் வந்தது. மீட்டிங் போன சியாமளாவுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தான் கணேஷ். துள்ளிக் குதித்துக் கொண்டு வந்தாள் சியாமளா.

”கணேஷ், டேட் கன்ஃபார்ம் ஆயிடுச்சி”

“ஓ.. ரியல்லீ… எப்போ?”

“நெக்ஸ்ட் வீக் எண்ட் தான் இந்தியா போறோம்.. இன்னும் ஒரு ப்ரோப்பஸல் பாக்கி இருக்காம்?”

“ஓ மை காட்? அப்படி என்ன ப்ரோப்பஸல்? அதான் எல்லாம் முடிச்சிட்டோமே? யார் சொன்னா?”

“டேவிட். நம்ம நேரம். அந்த ப்ரோப்பஸல் யார்கிட்ட இருந்து தெரியுமா?”

“யாரு?”

“திவ்யா. நாளைக்கே வர்றாளாம்”

”மை குட்னெஸ்.. Why the HELL……..” என கணேஷ் frustration ல் கத்திக் கொண்டிருந்தான்

*****************************************

அவளுடன் காணும் பொங்கல்

செங்கரும்பின் சாறு
செவ்விதழ்களை தாண்டி
வழிந்தோட நீ அடிக்கரும்பை
சுவைக்க ஆரம்பிக்கும்போது
அதை நான் ரசிக்க
ஆரம்பிக்கும்போது
என்ன என என்னைப் பார்க்க
பொங்கல் வாழ்த்துக்கள்
என்றேன் சத்தமாக
துள்ளிக் குதித்து புள்ளிமான்
போல் நீ ஓட
எனக்கான புன்னைகைகள்
வாழ்த்துக்களாக கிடைக்காமல்
திரும்பிக் கொண்டிருக்கின்றேன்

ஆச்சர்யாமாக அடுத்தநாள்
இன்று தானே உனக்கு ஸ்பெஷல்
என நீ எனக்கான புன்னகையில்
எதிர்பார்த்த வாழ்த்துக்கள் கூற
பூம்பூம் மாட்டின் தலையாட்டல்
புதிதாக ஆரம்பிக்கின்றன என்னுள்
காணும் பொங்கலுக்காக
காத்திருக்கிறேன்
கொண்டாட வழிகள் என்ன
நீ சொல்வாய் என?

*****************************

ஆயிரத்தில் ஒருவன்!

சில படங்களை முதல் நாள் பார்க்கும்போது கொடுக்கும் பிரமிப்பு உன்னதமானது. இந்த படமும் அப்படியே. மிகவும் கஷ்டமான கதை. அதை பார்வையாளர்களுக்கு விஷுவலாக கொண்டு செல்வதற்கு எக்கசக்கமாக மெனக்கெட்டிருக்கிறார்கள். முக்கியமான மூன்று கேரக்டர்கள் தவிர 1000 க்கும் மேற்பட்ட துணைநடிகர்கள். படம் முழுவதும் ஏகப்பட்ட காட்சிகளில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் குறைந்தது 200 முதல் 500 பேர் இருக்கிறார்கள். ஏறத்தாழ இரண்டு வருடத்திற்கும் மேலான அயராத உழைப்பு. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

முதல் காட்சியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாண்டிய நாட்டில் இருந்து முக்கியமான சிலையை, பார்த்திபன் தலைமையிலான சோழ ராஜ்ய படைகள் கடத்திக் கொண்டு போகிறார்கள். சோழ ராஜ்யம் பாண்டிய படைகளால் சுற்றி வளைக்கப்பட்ட பின், சோழ ராஜ்யத்தின் ராஜா, இளவரசன் மற்றும் மக்களுடன் தஞ்சையை விட்டு கடல்வழி மார்க்கமாக வெளியூர் செல்கிறார்கள். சோழ மக்களின் புகலிடத்தை தேடி சென்ற அகழ்வாராய்ச்சியாளர் பிரதாப் போத்தன் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார் என செய்திகள் வருகின்றன. இதைத் தொடர்ந்து சி.ஐ.டி ஆஃபிசர் ரீமா சென், பிரதாப் போத்தனின் மகள் ஆண்ட்ரியா, செக்யூரிட்டி கமாண்டர் அழகம்பெருமாள் க்ருப்புடன் அந்த ஆராய்ச்சியை தொடர ஆரம்பிக்கிறார். இவர்கள் கார்த்தி தலைமையிலான லோக்கல் ஆட்களையும் அழைத்துக் கொண்டு வியட்நாம் அருகில் உள்ள தீவுக்கு கப்பலில் செல்கின்றனர். அங்கு தான் நம்மை இதுவரை காணாத உலகத்திற்கு கைபிடித்து அழைத்து செல்கின்றனர். அந்த காட்சிகள் இதுவரை நாம் ஹாலிவுட் சினிமாக்களில் மட்டும் கண்டது.

வழியில் ஆறு கடுமையான தடங்கல்களை சோழ அரசு ஏற்படுத்தி சென்றுள்ளனர் என ஒரு காட்சியில் அகழ்வாராய்ச்சியாளர் ஆண்ட்ரியா சொல்கிறார். தண்ணீர், காட்டுவாசிகள், சர்ப்பம், பசி, புதைகுழி, கிராமம். ஒவ்வொரு தடங்கலும் இன்னொன்றுக்கு சற்றும் சளைக்காதது. தண்ணீரில் அந்த தீவுக்கு செல்லும்போது பாதிவழியில் படகு தரைதட்டி நின்று விட, எல்லாரும் நடந்து செல்கின்றனர். அப்போது வித்தியாசமான மீன் மாதிரியான ஜந்து, நாலைந்து ஒன்று சேர்ந்து ஒரு மனிதனையே சாகடித்துவிடுகின்றது. காட்டுவாசிகள், பார்ப்பதற்கே மிரட்டலாக உள்ளனர். அவர்கள் அனைவரையும் ஆர்மி கொத்தாக கொத்தாக சாகடித்துவிட்டு, எரித்துவிட்டு செல்கின்றனர். பாம்பு, பாலைவனம் தாண்டி செல்கின்றனர்.

புதைகுழி தடங்கல் சம்பந்தப்பட்ட யோசனை, அட்டகாசம். தூண் தூணாக திசைக்கு ஒன்றாக நிற்கும் 10 கற்கள். சாதாரணமாக சென்றால் மண் விழுங்கி விடும் அபாயம். ஆனால் சூரிய உதயம், அஸ்தமனத்தின் போது கற்களின் நிழலில் தோன்றும் நடராஜர் உருவம், அந்த ஐடியா ஹேட்ஸ் ஆஃப் டூ செல்வராகவன். அப்போது அந்த நிழலில் நடந்து சென்றால் மட்டும் மண் விழுங்காது. மொத்தமாக அந்த ஏரியாவை தாண்ட முடியாமல், மறுநாள் காலை வரை வெயிட் பண்ணுவது நல்ல காட்சியமைப்பு.

அபரிதமான சத்ததில் காது, மூக்கில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட, மனம் பிறழ்ந்து அவர்கள் கிராமத்தில்(கடைசி தடங்கல்) பண்ணும் லூட்டி நம்மை டெர்ராக்குறது. இப்படி அனைத்து கண்டங்களையும் தாண்டி விட்டபின், ஒரு வழியாக இடைவேளை.

இரண்டாம் பாதி, முழுவதும் அதிர்ச்சிகள். ஆயிரம் பேருக்கு மேல் ஒரு பெரிய மலைக்குள் 1000 சோழர்களுடன் வசிக்கிறார் ராஜா பார்த்திபன். அந்த சூழலில் புதிதாக வந்த மூவரை விசாரிக்கும் காட்சிகளில், ரீமா சென் சம்பந்தபட்ட ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று. தொடர்ந்து வரும் ஏமாற்றங்கள், போர் கடைசி வரை சோழ நகரம் சேர்வோமா சாவோமா என ஏக்கத்துடன் இருக்கும் மக்களின் துயரம் என கண்கலங்க வைக்கின்றனர்.

என்ன தான் இது வரலாற்றுப் படமாக இருந்தாலும், ‘துள்ளுவதோ இளமை’, ‘7/g' செல்வராகவன் டச் இல்லாமல் இருக்குமா? எக்கச்சக்க இடங்கள். ரீமா சென், ஆண்ட்ரியா இருவரையும் கார்த்தி எட்டி எட்டி பார்க்கும் காட்சிகள், குளிரில் இருவரையும் கட்டிப் பிடித்துக் கொள்வது, பாம்பு துரத்தும்போது இருவரையும் இடுப்பில் தூக்கிக் கொண்டு ஓடுவது, கிராமத்தில் ஆண்ட்ரியாவை ஏடாகூடாமாக அடிப்பது என பல காட்சிகள். வசனங்களிலும்.

ரீமா சென் - சூப்பர் ரோல். முதல்பாதியில் இவருக்கு டப்பிங், குஷ்பு(?)என நினைக்கிறேன். அந்தப்புரத்தில், பார்த்திபனுடன் நேருக்கு நேர் சுத்த தமிழில் பேசும் காட்சியில் நல்ல நடிப்பு. எக்கச்சக்க கவர்ச்சி. சாதாரணமாக க்ளீவேஜ் மட்டும் காட்டும் கதாநாயகிகள் மத்தியில், ‘ஓ.. ஈசா’ மற்றூம் ‘தாய் தின்ற மண்ணே’ பாடல், அதைத் தொடர்ந்து வரும் சண்டை காட்சிகளில் அவரின் மேலாடை அவிழ்ந்து விடும் தொலைவில் தொக்கி நிற்கிறது. சோழப் பேரரசை எதிர்க்கும், சிலையை கைப்பற்ற நினைக்கும் பாண்டிய மன்னரின் கடைசி வம்சமாக இவர் அவதாரம் எடுக்கும்போதும், அதைத் தொடர்ந்து பார்த்திபனை நம்ப வைத்து ஏமாற்றும்போதும் உதறுகிறது.

கார்த்தி - கப்பலில் எம்.ஜி.ஆர் பாட்டுக்கு ஆடிபாடும் காட்சியில் இருந்தே அவர் ரகளையை ஆரம்பித்து விடுகிறார். ரெண்டு ஹீரோயின்களையும் சமாளிக்க முடியாமல் தவிக்கும் எக்ஸ்பிரஷன்களை கண்களிலேயே காட்டி விடுகிறார். அடிக்கடி ரீமா சென்னிடம் அறை வாங்குகிறார். இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் அதிக வேலை இல்லாமல், க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க அவரின் இருப்பை ப்ரூவ் பண்ணுகிறார். அதுவும் அந்த ’க்ளாடியேட்டர்‘ சண்டைக் காட்சி போல் இருக்கும் திறந்தவெளி மைதான காட்சியில் கொந்தளிக்கிறார்.

பார்த்திபன் - அட்டகாசமான ரோல். இரண்டாவது பாதியில், முகக்கவசம் அணிந்து ராஜநடையுடன் நடந்து வரும் ஸ்டைலே அழகு. ‘தாய் தின்ற மண்ணே’ பாடலில் அவர் ஆடும் நடன மூவ்மெண்ட்ஸ் அழகு. சொந்த நாடு திரும்ப முடியாத சோகம், எல்லா காட்சிகளிலும் அவர் கண்களில் தேங்கி நிற்கிறது. அதே போல் கடைசிகாட்சியில், அவர் வீழும்போது கலங்க வைக்கிறார்.

ஆண்ட்ரியாவுக்கு அதிக வேலை இல்லை. எந்நேரமும் உம்மென இருக்கிறார். அந்த கிராமத்தில் நடக்கும் அடாவடி காட்சிகளில், இவரின் ட்ரெஸ் கன்னாபின்னாவென கொடுமையாக இருக்கிறது. பிண்ணனி இசையில் ஜி.வி.பிரகாஷ் மிரட்டுகிறார். ‘மாலை நேரம்’, ‘பெம்மானே’ பாடல்கள் படத்தில் இல்லை. ‘பெம்மானே’ பாட்டின் பி.ஜி.எம் மட்டும் க்ளைமேக்ஸில் கலங்க வைக்கிறது.

கடைசி காட்சிகளில், பாண்டிய பேரரசின் படைகளான இந்திய ராணுவப்படை, சோழப் பெண்களின் மீது ஏவிவிடும் வன்முறை சகிக்க முடியவில்லை. அதுவும் கில்லி ‘அப்படி போடு’ பாடலுக்கு நிர்வாணமாக பார்த்திபன் மனைவியை நடனமாடச் சொல்லும்போது.

படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். இவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வருவதற்கு ஹெலிகாப்டரால் வரமுடியாதா? அப்புறம் ஏன் ஆறு தடங்கல்கள்? அவ்வளவு கஷ்டமான தடங்கல்கள் செட் பண்ணியவர்கள், ஏன் எதிரிகளுடன் புத்திசாலித்தனமாக சண்டை போடாமல் வேல்கம்பு, வில்லுடன் சண்டை போடுகின்றனர்? ரீமா சென்னுடன் சண்டை போடும்போது, அவரது நிழலை வைத்தே பார்த்திபன் அடக்குகிறார். அந்த சக்தியைக் கொண்டு, ஏன் எதிரிகளுடன் போரிடவில்லை? ஆனால் இவையெல்லாம் படம் பார்க்கும்போது உறுத்தவில்லை.

இந்த படத்தின் க்ளைமேக்ஸ், எனக்கு புரிந்தது. ஆனால் எத்தனை பேருக்கு புரியும் என்பது தவுசன்ட் டாலர் கொஸ்டின். என்னுடன் பார்த்தவர்களுக்கே புரியவில்லை.

ஒரே ஒரு கேள்வி. இந்த படத்தில் யார் ஆயிரத்தில் ஒருவன்? செல்வராகவன்.

*******************************

அன்புமனைவியின் மொழிபெயர்ப்புகள்!

வேலையில்லா திண்டாட்டத்தில்
காட்டின் நடுவே
சாவுமேளம் அடிப்பவன்
உச்சஸ்தாயியில்
தனிமையை சங்கடங்களை வலிகளை
அடித்துக் கொண்டிருக்க‌ என‌
தொடரும் சோகக்
கவிதையின் அடர்த்தியை
காதுகளின் வழியே
என் மனைவிக்கு
மொழிபெயர்த்துக் கொண்டிருந்தபோது
முழுமையாக பத்துநிமிடங்கள்
பொறுமையாகக இருந்தவள்
கைகளின் வழியே என்மீது
மொழிபெயர்க்க ஆரம்பித்தாள்
பதினோராவது நிமிடத்தில்

அந்த இடத்தில் ஆரம்பிக்கிறது
உச்சஸ்தாயியில்
சங்கடங்கள் வலிகள்
தொடரும் இன்னொரு
சோகக் கவிதை
அதன் பாடுபொருளாக‌
கணவர்கள்

******************

'உரையாடல் சமூக கலை அமைப்பின்' சார்பில் பதிவர்களுக்காக நடத்தப்பட்ட கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது!

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

*******************

சியாமளா-17: காதல் சடுகுடு

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

“வெரி சிம்பிள் பாலிசி.. த்ரிஷா கிடைக்கலைன்னா ஒரு திவ்யா”

“வாட்?” திவ்யா, பிரகாசமான முகத்துடன்

“வாட்?” சியாமளா, கொஞ்சம் லேட்டாக

அவசரத்தில் வாயிலிருந்து விழுந்துவிட்ட வார்த்தைகளுக்காக நாக்கைக் கடித்துக் கொண்டான். அடுத்த செகண்டே..

“இல்ல.. த்ரிஷா இல்லைன்னா ஒரு திவ்யா or நித்யா may be வித்யா.. whoever.. வடிவேலு ஜோக் மாதிரி ட்ரை பண்ணேன். பட், இடம், பொருள், கொஞ்சம் மிஸ் ஆகிடுச்சி” என சப்பைக்கட்டு கட்ட முயன்று அசடு வழிந்தான்.

திவ்யா சிரித்துக் கொண்டே அதிக ஆர்வம் காட்டாததுபோல் சாப்பிடுவதைத் தொடர்ந்தாள். சியாமளா மட்டும் எரித்துவிடுவதை போல் பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென திவ்யாவிற்கு செல்ஃபோனில் கால் வந்தது. ஏதோ முக்கியமான கால் என நினைத்துக் கொண்டு வெளியே ஓடுவதற்கு அவசரமாக எழுந்தாள். பாதி தூரம் ஓடியவள் திரும்ப டேபிளுக்கு தண்ணீர் குடிக்க ஓடிவந்தாள். குடிப்பதற்கு பாட்டிலை எடுக்கும்போது, கணேஷ் காதருகில், “தேங்க்ஸ் கணேஷ்” என கிசுகிசுத்துவிட்டு திரும்ப வெளியே போய்விட்டாள். கணேஷ்க்கு உள்ளுக்குள் படபடவென அடித்தது. சியாமளா முகத்தை திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருந்தது கணேஷ்க்கு வசதியாய் இருந்தது. கவனித்தது போல் தெரியவில்லை. “இன்னும் இது மாதிரி எத்தனை தடவை செத்து செத்து பிழைக்கிறதோ, கடவுளே. சீக்கிரம் ஒரு மாசம் முடியட்டும் ஆடுவெட்டி பொங்கல் வைக்கிறேன்” என நொந்துகொண்டான் கணேஷ்.

சாப்பிட்டு முடிக்கும்வரை கணேஷும், சியாமளாவும் பேசிக் கொள்ளவில்லை. இடத்திற்கு போய்விட்டனர். மாலை 6 மணிக்கு கெளம்பும்வரை இருவரும் அமைதியாக இருந்தனர். கணேஷ்க்கு இருந்த மனநிலையில் இது நிம்மதியளித்தாலும், சியாமளாவை மிஸ் பண்ணுவதுபோல் உணர்ந்தான். ஆஃபிஸிலிருந்து கெளம்பும்போது கணேஷ் ஆரம்பித்தான்.

“ஹேய் என்ன ஆச்சி?”

“நத்திங்..”

“அப்படின்னா ஏதோ ஒண்ணு இருக்குன்னு அர்த்தம்?”

“ஓ.கே. த்ரிஷா இல்லைன்னா திவ்யாவா?” முகத்தை கடுப்பாக வைத்துக் கொண்டே கேட்டாள்

“இன்னுமா அத யோசிச்சிட்டு இருக்க?”

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”

“ஆல்ரைட்... நான் ச்சும்மா ஜெனரலா சொன்னேன். ரெண்டு பேரும் பசங்களை டீஸ் பண்ணிக்கிட்டு இருந்தீங்க.. அதான் நானும் என் பங்குக்கு கேர்ள்ஸை டீஸ் பண்ணேன். தட்ஸ் ஆல்”

“அதுல திவ்யா எங்க இருந்து வந்திச்சி?”

”அப்படி தான வடிவேலு படத்துல சொல்வாரு.. ஸீ.. நான் எதுவும் மீன் பண்ணல..” கொஞ்சம் டென்ஷன் ஆக ஆரம்பித்தான்.

“எனக்கு என்னமோ அப்படி தெரியல..” முகத்தை எங்கேயே வைத்துக் கொண்டு சொன்னாள்.

கோபம் உச்சி மண்டையில் ஏறியது, “நீ கூடத் தான் ஆண்கள் மேலேயே நம்பிக்கை இல்லைன்னு சொன்ன, அதுக்காக நீ என்னையுமா சொல்றன்னு கேட்டேன்னா? நான் புரிஞ்சிகிட்ட மாதிரி நீயும் புரிஞ்சிக்க வேண்டியது தான?”

சியாமளா இந்த அளவு விவாதம் சண்டையாக மாறும் அளவுக்கு போகும் என எதிர்பார்க்கவில்லை. அதை ஆரம்பிப்பததற்கும், கணேஷை முதன்முறையாக எரிச்சல்படும்படி செய்ததற்கும் ரொம்பவே வருத்தப்பட்டாள். கணேஷ் ஹோட்டல் வரும்வரை பேசவே இல்லை. அது சியாமளாவை ரொம்ப கஷ்டப்படுத்தியது. ஆனால் கணேஷ் மனதில் ஓடியது வேற “திவ்யா காதல் விஷயம் தெரியாமலேயே, அவளால சியாமளா கூட இந்த எக்ஸ்ட்ரீம் சண்டை வருது. ஒரு வேளை தெரிஞ்சா?” இதே போல் ஏகப்பட்ட விஷயங்கள். ரொம்ப குழம்பிப் போய் இருந்தான்.

இரவு 7 மணி இருக்கும். சியாமளா கணேஷ் ரூம்க்கு அவசரம் அவசரமாக ஓடி வந்தாள். அவளிடம் இருந்த கீயை வைத்து திறந்து உள்ளே வந்தாள். கணேஷ் உள்ளே இல்லை. “கணேஷ் கணேஷ்” என கத்தினாள்.

“பாத்ரூம்ல இருக்கேன். 5 மினிட்ஸ்” என்றான் உள்ளேயிருந்து.

7 நிமிடம் கழித்து வெளியே வந்தான் இடுப்பில் டவலுடன். சோப் வாசனையுடன் மார்பில் படர்ந்த முடிகளுடன், கழுத்தில் அவன் போட்டிருந்த கோல்டு செயின் சகிதம் பேர் பாடியுடன் வெளியே எக்ஸ்ட்ரா ஃப்ரெஷ்னஸ்ஸுடன் வந்தான். முதல் முறை சியாமளாவை சென்னை ரூமில் பார்த்த போது இருந்த சங்கோஜம் இப்போது இல்லை. சியாமளா முகத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.

“கெஸ் வாட்?” சியாமளா கண்ணடித்துக் கொண்டே ஆரம்பித்தாள்.

“வாட்?” எனி குட் நியூஸ்?”

“யெஸ்.. யூ ஆர் கரெக்ட்..வெரி குட் நியூஸ்”

“அப்படி என்ன?”

“திவ்யா அவசரமா நெதர்லேண்ட்ஸ் போயிட்டா.. வர்றதுக்கு டூ வீக்ஸ் ஆகுமாம்.. ஹேய்ய்ய்ய்” குதித்தாள்

“ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ஹேய்ய்ய்ய்” என அவளை விட பல மடங்கு சத்தத்தில் சந்தோஷக் கூச்சல் போட்டான். திடீரென அதை pause பண்ணி, “அவ போனதுக்கு நான் சந்தோஷப்படுறேன். ஓ.கே.. சியாமளா ஏன் குதிக்கிறா?” என யோசித்து கலவரமானான். அவளிடமே கேட்டான்.

”ஆமா அவ போனதுக்கு நீ ஏன் சந்தோஷப்படுற?”

”ஆமா.. பொண்ணா அவ.. அன்னைக்கு லஞ்ச்ல நீ வெளில போனப்ப என்ன சொன்னா தெரியுமா?”

“என்ன சொன்னா?” கலவர ரேகைகள் அதிகமாகியது.

“கணேஷ் ரொம்ப ஹேண்ட்ஸம்மா இருக்கான்ல அப்படின்னு என்கிட்டயே கேட்குறா? எனக்கு கடுப்பாயிடுச்சி.. அப்ப இருந்து அவளைக் கண்டாலே பிடிக்கல”

அழுவதா சிரிப்பதா தெரியவில்லை கணேஷ்க்கு. “வேற என்ன சொன்னா?” இன்னும் பீதியுடன்

“அவ்ளோதான்.. இதுல நீ வேற திவ்யா திவ்யான்னு ஜொள்ளு ஊத்திக்கிட்டு இருந்தியா.. பயமா இருந்திச்சி.. இப்ப ஓ.கே. அப்படியே அவ திரும்பி வந்தாலும், ஒரு வாரம் தான். சமாளிச்சிக்கலாம்”

”அப்படியே என் மனசுல இருக்குறத டையலாக் மாறாம சொல்றால்லே” என சந்தோஷப்பட்டான் கணேஷ். “சூப்பர்” என சொல்லிக் கொண்டு சியாமளா முன்னால் தலையை சிலுப்பிக் கொண்டு தண்ணீர்த்துளிகளை அவள் மேல் தெளித்தான்.

அவள், “டேய்” என கத்திக் கொண்டு கையால் தடுத்துக் கொண்டு கணேஷை அடிக்க வந்தாள். கணேஷ் இன்னும் வேகமாக அவள் முன் வந்து சிலுப்பிக் கொண்டிருக்க, சியாமளா கையில் காற்றை படபடவென அடித்துக் கொண்டு தடுத்தாள். கணேஷ் அவள் கைகளை பற்றிக் கொண்டு முகத்தின் அருகே வந்து பண்ணினான். அவள் திமிறிக் கொண்டு இருந்தாள். இருவரின் ஸ்பரிசமும் மிக…. மிக மிக அருகில். கணேஷ் திடீரென நிறுத்திக் கொள்ள, அவளும் திமிறிக் கொண்டிருந்ததை உடனே நிறுத்திக் கொள்ள இருவரின் கண்களும் நேர்கோட்டில் காதல் பாஷைகளை பரிமாறிக் கொண்டிருந்தன.
“நோ கணேஷ்.. ப்ளீஸ்ஸ்ஸ்” என ஹஸ்கி வாய்ஸில் கிசுகிசுக்க..

“யூ மீன், யெஸ்..”

”நோ..” என திறந்த இதழ்களை அவள் மூடவில்லை. கணேஷ் செய்தான். முழுதாக ரெண்டு நிமிடம் தாண்டிக் கொண்டிருந்தது. காது வழியே மூச்சு அனல் காற்றாக துடிதுடித்து வெளியே போய்க் கொண்டிருக்க, உச்சந்தலையின் மையப்புள்ளியில் ஏதோ ஒன்று திரண்டு இருந்தது. மூன்று நிமிடம் தாண்டி முத்தத்தை முடித்துக் கொள்ள, மூக்கு மீண்டும் நார்மலாக மூச்சு விட முயற்சி செய்து கொண்டிருந்தது. இருவரின் உதடுகளும் இன்னும் துடித்துக் கொண்டிருந்தன. இன்னும் சியாமளா கணேஷ் பிடியில் இருந்தாள்.

“இன்னும் ஒரு குட் நியூஸ் இருக்கு” சியாமளா நடுநடுங்கும் உதடுகளை பிரித்து காற்றில் சொன்னாள்.

“வாட்?” ஆர்வமே இல்லாமல் அதை உற்று நோக்கிக் கொண்டே சொன்னான்.

“மேரேஜ் டேட் ஃபிக்ஸ் ஆயிடுச்சி. நெக்ஸ்ட் மன்த் 25”

“இப்ப இதுக்கு இத சொல்ற.. யூ மீன்ன்ன்ன்ன்..?” என இழுத்துக் கொண்டே அவளை இன்னும் இறுக்கினான்.

“மீனும் இல்ல.. சிக்கனும் இல்ல.. “ என கத்திக் கொண்டே அவனை கட்டிலில் மொத்தமாக தள்ளிவிட்டு கதவைத் திறந்து ஒரே பாய்ச்சலில் அவள் ரூமிற்க்கு ஓடிவிட்டாள்.

வேற்றுகிரகவாசியாக மனைவி!

வீட்டு வேலை
*******************

சகோதரிகள் இல்லா வீட்டில்
அம்மாவின் சத்தம்
விரட்டும் முன்னர்
பரபரவென‌ செய்யும்
தேங்காய்நார் சபீனா
வேளைகளில் விழிக்காமல்
மனைவியின் கொஞ்சல் கெஞ்சல்
அதட்டல்களில் சட்டென‌
வீராப்புடன் கைகோர்த்து
விழிக்கிறது ஆண்மையின் கோபம்
கையில் 'விம்' கொடுக்கும்போது!
இளம் மனைவி
*******************

உள்ளுக்குள் புதைத்த
காதலையும் காதலியையும்
தாங்கி அந்நியமாகத்
திரியும்போதெல்லாம்
வேற்றுகிரகவாசியாக தெரிகிறாள்
இளம் மனைவி
காதல் தாங்கிய
வெட்கப் புன்னகையில்
என்னை பார்க்கும்போது!

*************************************************

சியாமளா-16: த்ரிஷா இல்லைன்னா திவ்யா!

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

“அப்படியா?” ஷாக்கில் இருந்து வெளிவராமல் சியாமளாவை நோக்கினான்

கண் அடித்தாள் சியாமளா. திவ்யா சியாமளா நோக்கி திரும்பும் இரண்டு செகண்ட் இடைவெளியில் நார்மல் ஆனாள்.

”அவன் அவன் வயித்துல புளியை கரைச்சிட்டு இருக்கு. இதுல இவ வேற, நேரம் காலம் தெரியாம லவ் பண்றா..வெட்கப்படுறா.” என அலுத்துக் கொண்டான்

“என்கிட்ட சொன்னத சொல்லுங்க சியாமளா.. கம் ஆன்” திவ்யா அவசரப்படுத்தினாள்.

“அதான் வீட்ல அலையன்ஸ் பார்த்திட்டு இருக்காங்க.. ஐ கெஸ் ஒருஃபேமிலி என் பேரண்ட்ஸ்க்கு ரொம்ப பிடிச்சி இருந்தது. அல்மோஸ்ட், கன்பார்ம் ஆன மாதிரி தான். அத தான் சொன்னேன்” என சொல்லிவிட்டு, “மவனே, நீயா ஏதாவது உளறுனே, கொன்னே போட்ருவேன்” என்பது போல் கணேஷை சைகையில் மிரட்டினாள்.

“பார்த்தீயா கணேஷ். லாஸ்ட் டைம் வரும்போது கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தவங்க, இப்ப என்னடான்னா ஃபிக்ஸ் ஆச்சின்னு சொல்றாங்க. க்ரேட் இம்ப்ரூவ்மெண்ட்” என ஆச்சர்யத்தில் பொங்கினாள் திவ்யா

ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தாலும், திவ்யா தன்னை ஒருமையில் விளித்தது கணேஷ்க்கு மறுபடியும் டென்ஷனைக் கெளப்பியது. இருந்தாலும் சியாமளா நோட் பண்ணாமல் விட்டதால் சகஜமாக சியாமளாவை நோக்கி, “ஓ.. அப்படியா.. க்ரேட். ஆனா நீங்க ஏன் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்னீங்க..” என போலியாக கேட்டான்.

”அவங்களுக்கு அட்ராக்சன், லவ் மேலேயே நம்பிக்கை இல்லையாம். அதுக்கும் மேல ஆண்கள் மேல சுத்தமா நம்பிக்கை இல்லையாம். ஆண்கள் யாரும் லவ் பண்ற பொண்ணை கட்டிக்க மாட்டாங்க. சீரியஸ்னெஸ் இல்லாதவங்க. விளையாட்டுத்தனமா இருப்பாங்க. கடைசில அல்டிமேட் லாஸ், பெண்களுக்கு தான்.. அப்பிடி இப்பிடின்னு ஏகப்பட்ட கம்ப்ளையிண்ட்ஸ். ஐ திங், இவங்கள கட்டிக்கப் போறவன் ரொம்ப லக்கி. வெரி குட் கேர்ள்.” என திவ்யா பில்டப் கொடுத்தாள்.

சியாமளா வெட்கத்தில் சிவந்தாள். சிவந்து கொண்டே கணேஷை நோக்கினாள். கணேஷ்
“இஸ் இட் ஸோ? க்ரேட்” ஒரு பக்கம் லக்கி என சந்தோஷப்பட்டாலும் நெருப்பில் நிற்பது போல தவித்தான்.

“என்ன கணேஷ்? உங்க பசங்களை பத்தி அபாண்டமா குத்தம் சொல்றாங்க. நீங்க எதுவும் சொல்ல மாட்டீங்களா?” திவ்யா விடவில்லை.

கையில் ஏதாவது கிடைத்தால், இவள் தலையில் நச்சென்று போட வேண்டும் போல கணேஷின் கை பரபரத்தது. பல்லைக் கடித்துக் கொண்டே, “நான் சொல்ல என்ன இருக்கு? அது அவங்களோட பெர்சனல் ஒப்பீனியன். அவங்க இஷ்டம்” என ஏதோ உளறினான்.

“நைஸ். நீங்க சொல்றதும் கரெக்ட்” என தலையை ஆட்டிக் கொண்டே ஒரு வழியாக அமைதியானாள் திவ்யா. அடுத்த செகண்டே, சியாமளா ஆரம்பித்தாள், “கணேஷ், உனக்கு இவங்க ஸ்டோரி தெரியாதே? ரொம்ப பெரிய்ய்ய்ய.. ரொமாண்டிக் லவ் ஸ்டோரி”

கணேஷ்க்கு ஏழரை நாட்டு சனி இரண்டு பெண் ரூபத்தில் முன்னே நின்று கொண்டு, ‘ஜிங்குச்சா ஜிங்குச்சா’ என ஆடுவது போல் இருந்தது. நெற்றியில் வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு அமைதியாக நின்றான்.

“என்னன்னு கேட்க மாட்டியா கணேஷ்” எப்படியாவது திவ்யாவை பழிக்கு பழி வாங்கவேண்டும் என துடியாய் துடித்தாள் சியாமளா. திவ்யா கணேஷின் ரியாக்சனை ரொம்ப ஆழமாக நோட் பண்ணிக் கொண்டிருந்தாள்.

”கேட்காம இருந்தா விடவா போற. அதுவுமில்லாம அதுலயும் நான் தான்டி ஹீரோ” என மனதுக்குள் நினைத்துக் கொண்டு, “என்ன ஸ்டோரி?” என திவ்யாவின் பார்வையை அவாய்ட் பண்ணிக் கொண்டே சியாமளாவிடம் கேட்டான்.

“காலேஜ்ல ஒருத்தன் கூட நாலுவருஷமா நல்லஃப்ரெண்டா இருந்தாங்களாம். ஆனாலும் ஃபேர்வெல் டே அன்னிக்கு தான் அவன்மேல ஃப்ரெண்ட்ஷிப் தாண்டி லவ் இருந்திச்சின்னு ஃபீல் பண்ணாங்களாம்.”

“ஓ ஐ ஸீ..”

“அன்னைக்கு இவங்களால அந்த பையன்கிட்ட நார்மலாவே பேச முடியலையாம்… எப்படியோ மனசுல இருந்ததை அவன் A.G நோட்ல கவிதை மாதிரி கிறுக்கிட்டு வந்துட்டாங்களாம். இதுல ஒரு sad பார்ட் என்னன்னா, அதுக்கு அப்புறம் இன்னிக்கு வரைக்கும் அவன்கிட்ட பேசவே இல்லையாம்”

“ம்ம்ம்” என தலையசைத்தான். அங்கே திவ்யா தலையைக் கீழே குனிந்து கொண்டு ஃபீல் பண்ணிக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்துக் கொண்டிருந்தது.

“அவன் என்ன டியூப்லைட்டா? ஒரு பொண்ணா வெட்கத்தை விட்டு திரும்ப போய் ப்ரோப்பஸ் பண்ணிட்டு இருப்பா. This is the reason I hate guys.”

“ஹேய் சியாமளா, கூல் டவுன் கூல் டவுன்” என அவளை அமைதி படுத்தினாள் திவ்யா.

”ஆனா இவங்க மேலயும் தப்பு இருக்குன்னு சொன்னாங்க. காலேஜ் முடிஞ்ச உடனே ஹையர் ஸடடீஸ் படிக்க அப்ராட் போயிட்டதா சொன்னாங்க. அவன மீட் பண்ண, இன்னும் டூ மன்த்ஸ்ல சென்னை வரப் போறாங்களாம்”

“ம்ம்ம்” என சொல்லிவிட்டு அங்கிருக்கும் சூடான சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் “எக்ஸ்கியூஸ் மீ” என சொல்லிவிட்டு ரெஸ்ட் ரூம் சென்றான். ”நான் என்ன தப்பு பண்ணேன்” என வாய் விட்டு கத்த வேண்டும் போல் இருந்தது. ஃபேஸ் வாஷ் பண்ணிவிட்டு திரும்ப வந்தான்.

“நாங்க எங்க கதைய சொல்லி போர் அடிக்கிறோம். உனக்கு எப்ப கல்யாணம் கணேஷ்?” என நேஷனல் அவார்டுக்கான நடிப்புடன், ரொம்ப கேஷுவலாகக் கேட்டாள் சியாமளா.

“தெரியல. லேட் ஆகும்ன்னு நெனைக்கிறேன்” என அவனும் நார்மலாக சொன்னான்.

“ஆனா பசங்களால எப்படி ஈசியா எடுத்துக்க முடியுது. இன்னிக்கு ஒரு பொண்ணை லவ் பண்றாங்க.. நாளைக்கே இன்னொரு பொண்ண லவ் பண்றாங்க” சியாமளாவே தொடர்ந்தாள்.

“அதுக்காக விட்டுட்டு போன பொண்ணுக்காக தாடி வச்சிட்டு அழவா முடியும்” என சாப்பிட்டுக் கொண்டே சொன்னான். திவ்யா மட்டும் கணேஷை முறைத்துக் கொண்டிருந்தாள். இதை கணேஷ் கவனிக்கவில்லை.

“இல்ல.. ஒரு கர்டசி வேணாமா? அவனே ப்ரோப்பஸ் பண்ணிட்டு, அதை ஏத்துக்காத பொண்ணுக்காக கொஞ்ச நாள் கூட வெயிட் பண்ண மாட்டாங்களா? என்ன பாய்ஸ்?” சியாமளா ஏன் இப்படி பேசுகிறாள் என்று அவளுக்கே தெரியாமல் அனத்திக் கொண்டிருந்தாள்.

“ஏத்துக்கிட்டா மட்டும் வந்திடவா போறாங்க? பொண்ணுங்களுக்கு பிடிச்சிருந்தா, ப்ரோப்பஸ் பண்ண அன்னைக்கே ஒத்துக்குவாங்க.. இல்லைன்னா லைஃப்லாங் வெயிட் பண்ணாலும் மதிக்க மாட்டாங்க” கணேஷும் பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தான்.

“அப்படின்னா?” திவ்யா கேட்டாள் காட்டமாக.

“வெரி சிம்பிள் பாலிசி.. த்ரிஷா கிடைக்கலைன்னா ஒரு திவ்யா”

“வாட்?” திவ்யா, பிரகாசமான முகத்துடன்

“வாட்?” சியாமளா, கொஞ்சம் லேட்டாக

****************************************

இவள மாதிரி பொண்ணு பாரும்மா?

கொஞ்சும் அழகியின்
கொடி விடும்
மெல்லிய இடை அதனுடன்
ஆண்பிள்ளை திமிரும் உயரமும்
அசரடிக்கும் அழகுடன்
தினமும் சொப்பனத்தில்
வந்து போகிறாள்
அவள் முகரேகைகள் மனதில்
பதியும்முன் கலைகின்றன
அம்மா உடன் திரைப்படம்
சென்றபோது சடாரென
மின்னல்கீற்றின் ஒளியில்
முக, உடல் ரேகைகளில்
முழுதாக அழகாக தெரிந்தாள்
உடனே அம்மாவிடம்
இவள மாதிரி பொண்ணு பாரும்மா?
“டேய் இவ நவி’டா
வால் வேற இருக்கு”

*****************

ஸோ, நானும் ’அவதார்’ பார்த்துவிட்டேன். அதன் பாதிப்பு தான் மேலே.

*****************

Related Posts with Thumbnails